Skip to content
Home » தொடுவானமாய் உனை பார்க்கிறேன் -3

தொடுவானமாய் உனை பார்க்கிறேன் -3

தொடுவானமாய் உனை பார்க்கிறேன் 3

” கண்ணா கேசவா அந்த காலத்துல  நம்ப ஆத்துல மட்டுமே மொத்தம் 15,16 குடித்தனம் இருந்தது.

    தாத்தா, பாட்டி, அண்ணா, மன்னி அத்தை, அத்தங்கா  இப்படி எல்லார் குடுத்தனமும் ஒண்ணா தான் இருந்தா
  5 இல்லைன்னா 3 நாள் கல்யாணம்  ஜகஜோதியா இருக்கும்.

   இப்ப யாருடா அது எல்லாம் பண்றா. கோவில்ல கல்யாணம் மண்டபத்துல ரிஷப்ஷன் வைச்சு முடிச்சுடறா.” என்று சலிப்பாய் கூறினார்.  

     அதற்கு அவனோ கதை கேட்கும் ஆர்வத்தில் “சரியத்த நீ சொல்லு அது என்னென்ன தெரிஞ்சுக்கறேன்” என்று மனதில் குறித்து கொள்ள கேட்டான். அவனும் திருமண கனவுகளில் வாழ்பவன். இதெல்லாம் அறிந்திடும் ஆசை.

   தங்கள் இல்ல திருமண விழாவின் சிறப்பை கூறும் ஆவலில் மாமியும் “சொல்றேன் நன்னா கேட்டுக்கோ…  முதல்ல மங்கலி பொண்டு பண்ணுவா.

  7 இல்லைன்னா 9 சுமங்கலிகள்  வைச்சு ஒரு கன்யா பொண்ணு வைச்சு பண்ணுவா.!!! வெத்தலை , பாக்கு, மஞ்சள், குங்குமம்னு அவா, அவா சௌரியத்துக்கு ஏத்த மாதிரி துணிமணி வாங்கி குடுத்து வயறு நெறக்க  போஜம் போட்டு சுமங்கலிகள் ஆத்துக்கு அனுப்புவா.

     இரண்டாவது பந்தகால் முகூர்த்தம் பண்ணுவா.
  கல்யாணத்துக்கு 3  நாள் இல்ல 5 நாள் முன்னாடி செய்வா. அது தான் நோக்கு தெரியுமே.” என்றதும் தலையை தலையை ஆட்டினான். ஆனாலும் கேட்கும் ஆர்வம் இம்மியும் குறையவில்லை.

  மாமியோ ” அந்த மூங்கில் கம்பு  காத்து, மழை வந்தாலும் தாங்கிண்டு  நிக்கற மாதிரி எந்த நிலையில் தைரியமா இருக்கணும்னு செய்வா.

மூணாவது பாலிகை  விதைக்கறது  சொல்லுவா.
9 கல்யாணம் ஆன பெண்களா கூப்டு  நவதானியத்த மண்ல, பரப்பி விதைக்க சொல்லுவா. இது தம்பதிகள் ஒத்துமையா இருக்கவும், சந்ததி ஆரோக்கியத்துக்கு செய்வா.” சந்ததி என்றதும் செவிகள் கூர்மை பெற்றது.

   “நாலாவது மணமகனை  வரவேற்கறது.
   கல்யாணத்துக்கு முந்தின நாளே சத்தரம் போய்டுவா  பொண் ஆத்துவா.
   அங்க போய்டு மாப்பிள்ளை வரச்சே  வெத்தலை, பாக்கு, பூ, பழம், குங்குமம், சந்தனம் எல்லாம் தாம்பாளத்துல வைச்சு குடுத்து வரவேற்பா!! இதுல தெரட்டிப்பால் செஞ்சு பொண்ணாத்துவா மாப்பிள்ளை ஆத்து மனுஷாலுக்கு  குடுப்பா

ஐஞ்சாவது விரதம். இது மாப்பிள்ளை பிள்ளையாண்டான் பண்றது.
பிரம்பசாரியா இருந்து வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு அடி எடுத்து வைக்க பொண்ணு மாப்ள தனிதனியா  செய்வா.. பொண்ணு கைல காப்பு கட்டுவா” என்றவனுக்குள் கனவுகள் மின்னியது.

” ஆறாவது நாந்தினனு சொல்லுவா!! கல்யாணம் பண்ணி வைக்கற  வாத்யாரோட(கல்யாணம் செய்து வைக்கற அய்யர அப்படி சொல்லுவாங்க) 9 பேர் வர சொல்லி அவாளுக்கு வேஷ்டி அப்றம் தட்சணை குடுப்பா

ஏழாவது ஜான் வாசம்  இது மாப்பிள்ளை வேறொரு எடத்துல இருந்து கார்ல  மண்டபத்துக்கு அழச்சிண்டு வரது

எட்டாவது  நிஸ்தார்த்தம் இது கல்யாணத்த அதிகார பூர்வமாக நம்ம ஜனத்துக்கு அறிவிக்கறது.

பொண்ண மனைல ஒக்கார வைச்சு மாப்பிள்ளை ஆத்துல புடவை குடுத்து அவளோட புடவை தலப்புல (முந்தானை) தேங்காய், வெத்தலை, பாக்கு, பழம், மஞ்சள் குங்குமம் வைச்சு இடுப்போட கட்டிடுவா.

ஒன்பதாவது லக்ன பத்திரிகை இரண்டு பக்கமும் மூன்று தலைமுறை பெரியவாள உட்கார வைச்சு இன்னார் குடும்பத்துல பொண்ணு குடுக்கறோம். பொண்ணு  எடுக்கறோம்ன்னு பத்திரிகை வாசிப்பா” என்றதும் எனக்குன்னு இருக்கறவ எங்கயிருக்காளோ என்று பெருமூச்சு விட்டான் நாயகன்.

“பத்தாவது  நல்ல ஸ்தானம் இது  கல்யாணத் தன்னைக்கு கார்த்தால  செய்யறது. இது எல்லாரும் பண்ண மாட்டா சில பேர் மட்டும் தான் செய்வா” என்றதும் ஓஹோ என்பதாய் கேட்டான்.‌

“அடுத்தது கணபதி பூஜை, நவகிரக பூஜை இது எல்லாரும் செய்வா

அடுத்து  காசி யாத்திரை  விரதம் ஆரம்பிச்ச தொடர்ச்சியாக இத பண்ணுவா.” என்றதும் இடைப்புகுந்து ‘படத்துல கூட காட்டுவா” என்று கூறினான்.

“ஆஹ் அது போல தான். மாப்பிள்ளைக்கு ரெண்டு வழி ஒண்ணு காசி யாத்திரை , ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது.

   மாப்பிள்ளை காசி யாத்திரை போறேன் சொல்லி ஒரு கொட (குடை) செருப்பு, விசிறி மட்ட எல்லாம் எடுத்துண்டு போவார்…. பொண்ணோட அப்பா போய் சமாதானம் செஞ்சு கூட்டுண்டு  வருவார் ” என்று வரிசையாக கூறியவருக்கு நாவறண்டது. ஜலமிருந்தால் சற்று தொண்டையை நனைத்திருப்பார்.‌ அதோடு நாழியும் கடந்தது.

   ” டேய் கேசவா வந்து நாழியாயிடுத்து கார்ல போச்சே மீதி சொல்றேன் வாடா” என்று சோர்வுற்று கூறினார்.

“சரி வா அத்த ஆத்துக்கு போலாம்”. என்று அத்தையின் உடல்நலத்திலும் அக்கறை கொண்டவனாக உரைத்தான்.

தொடரும்

மற்றவை நாளை….

3 thoughts on “தொடுவானமாய் உனை பார்க்கிறேன் -3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *