Skip to content
Home » நன்விழி-3

நன்விழி-3

  🤰-3

  மூவரும் சாப்பிட்டு எழுந்து துப்பாக்கியை ஏந்தி காவலுக்கு ஆள் மாற்றி நின்றனர். 

    செல்வன் வந்துவிட்டதாக ஒலிப்பெருக்கி வழியாக அறிவித்து முடித்தனர். 

    ஸ்டீபனோ “கமிஷனரை யார் வரச்சொன்னது. எங்களுக்கு ஒர் வண்டி தானே கேட்டேன். அதை அரேஜ் பண்ணி எங்களை போக விடுங்க.” என்று பதிலாக அனுப்பினான். 

     “லுக்… எங்களுக்கு அங்க இருக்கற மக்களில் பாதி பேர் வெளியே வரணும். அப்போ தான் நீங்க சொல்வது போல வண்டியை அரேஜ் பண்ண முடியும். திஸ் இஸ் பைனல். பாதி பேரை வைச்சிட்டு மீதி பேரை அனுப்புங்க.” என்று கட்டளையிட்டான். 

     “முடியாது.” என்ற மதனின் குரலுக்கு, “அப்போ இங்கயே இரு. பட் வெளியேவும் போக முடியாது. நீங்க சொல்லறதை நான் கேட்டா. நான் சொல்லறதையும் நீங்க கொஞ்சம் யோசிங்க.” என்றவன் பேச்சில் எரிச்சலானான் ஸ்டீபன். 

    “யார் டா நீ கமிஷனரை பேச சொல்லு. நீ என்ன இடையில்” என்று குரலை வைத்து அது வயதான செல்வன் அல்ல யாரோ இளைஞன் என்று கேட்டு முடிக்க செல்வன் “தம்பி நீங்க யாரு என்ன என்று தெரியலை அட்லிஸ்ட் பாதி பேரை விடுங்க. குழந்தை பெரியவர்களாவது விட்டுவிடலாமே. நீங்க கேட்ட  கார் ரெடியா இருக்கு.” என்று பேச, 

     “அங்கிருந்து எல்லாரும் போங்க. நாங்க சொல்லற டைம்கு விடறோம்.” என்று ஒலிப்பெருக்கியை கத்தரித்தான்.

     தர்ஷன் என்னவோ போங்க என்று அவன் எதிர் பக்கம் சென்றனர். ரூபனோ பின்னாடியே போனவன்.

     “நன்விழி உனக்கு என்னாச்சு… வேர்குது.” என்றதும் 

   “ஒன்றும் இல்லை நித்திஷ் ஒரு மாதிரி இருக்கு என்னனு தெரியலை.” என்று கூற, நித்திஷ் எழுந்தவன் கூட்டத்தில் இருந்தவனிடம் “சார் இவங்க பிரகனட் லேடி தயவு செய்து இவங்களை மட்டும் அனுப்புங்களேன். சம்திங் அன்கம்பர்டபிளா பீல் பண்ணறாங்க.” என்று கெஞ்சினான். 

     “டேய் நாங்க விடணும்னா அந்த போலிஸிடம் கேளு. எங்களை சுத்தி போலிஸ்… எங்க ஆறு பேர் உயிர் அந்த பொண்ணோட உயிருக்கு நிகரா. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி அவஸ்தைபடுங்க.” என்று எரிந்து விழுந்தான். 

    “சார் அவங்க கணவர் இராணுவத்துல உயிர் இழந்தவர். இப்ப இந்த பொண்ணுக்கு அந்த குழந்தை தவிர வேற யாரும் துணையில்லை. தயவு செய்து இவங்களை மட்டும் அனுப்புங்க” என்று மீண்டும் கெஞ்சினான். 

     “இராணுவ வீரனோட மனைவியா? உபயோகப்படுத்திக்கறோம் உட்காரு டா” என்று எட்டி உதைக்க, நித்திஷ் வலியோடு நன்விழி அருகே அமர்ந்தான்.

     “பார்த்தியா… அவ மட்டும் உசுரோட வெளியே போகணுமாம். என்ன பேச்சு சுயநலம் பிடிச்சவன். இங்க எத்தனை குழந்தை இருக்கு, பெரியவா இருக்காங்க.” என்று இம்முறையும் எங்கோ குரல் மட்டும் நன்விழியை வைத்து நித்திஷை தூற்றியது. 

      “நித்திஷ் எதுக்கு கெஞ்சிட்டு இருக்க. என்னால தாங்கிக்க முடியும். யாரிடமும் கெஞ்சாதே… எனக்கு கெஞ்சறதே பிடிக்காது. வெற்றிக்கும்…” என்று கூறுவதில் புன்னகை துளிர்த்தது. 

   நன்விழியின் பலம் வெற்றி என்ற பெயரில் அதிகமானது. புன்னகையிக்க வைத்தது. 

     நன்விழி காதல் திருமணம். வெற்றி இராணுவம் சென்றால் தனித்து இருக்கும் வாழ்வு அமையும் என்றதாலும், வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் நன்விழி பெற்றோர் வெற்றியை மணக்க மறுத்திட, நன்விழி பெற்றோரை எதிர்த்து வெற்றியின் கரம் பற்றினாள். நித்திஷ் தலைமையில்… நித்திஷ் கல்லூரி நண்பன். இங்கே நந்தனம் குடியிருப்பில் கூட வீடு வாங்கியது இருவருமே. ஆனால் இன்று வெற்றி அவ்விடத்தில் இல்லை. அவன் இல்லை என்பதால் அவன் மனைவியிடம் ஒதுங்கி சிறு உதவியும் செய்யாமல் கடக்க இயலுமா? 

   அதுவும் தன்னையும் அவளையும் இணைத்து பேசுவதால் பயந்து. சமூகம் இன்னமும் ஆண் பெண் பழகினால் அவர்களை சேர்த்து வைத்து கிசுகிசுத்து தோற்றுவிப்பதால் கசப்பை  வரவழைத்தது. 

    வெற்றி இருக்கும் பொழுதே நன்விழியை பெயரிட்டு அழைத்து இருக்க, சிஸ்டர் என்றோ தங்கை என்றோ விளிக்கவும் மனமில்லை. அப்படி அழைத்து தான் புரிய வைக்கவும் நித்திஷ் விரும்பவில்லை. 

   ஏன் ஆணும் பெண்ணும் தங்கை என்றோ அண்ணா என்றோ அழைத்தால் உறவு புனிதம் என்று புகழப்பட்டால் சரியா? நித்திஷ் இந்த நிலையிலும் எப்படி தான் சாடி பேசுகின்றனர் என்ற வலி தாங்கியது. 

   அதிலும் கர்ப்பமாக தனி ஆளாக யாரிடமும் கெஞ்சி பேசி பிடிக்காத இவளிடம். இவள் கெஞ்சி புரிய வைக்க வேண்டுமென்றால் தாய் தந்தையர் கூறிய கணமே வெற்றியை மறுத்து சென்றிருப்பாளே. உண்மை காதலுக்கு வழிமொழிந்து வந்தவளுக்கு கிட்டிய அவப்பெயர் எத்தனை சே… 

    காலையில் எதிர்ல வந்தால் திட்டு, ஏதேனும் தன்னிடம் பேசினால் கிசுகிசுப்பு, மனதை வலிப்பது போன்ற மறைமுக குத்தல், பெற்றோரிடம் சென்று வாழ்ந்திடு என்று அறிவுரை கூட நன்விழிக்கு சொல்லியாயிற்று. வெற்றியோடு வாழ்ந்த இடம் நித்திஷ். இதான் எனக்கு ஆறுதல் என்பவளை என்ன செய்ய? 

    வெளியே கிடைத்த தகவலோ ஸ்டீபன் என்பவன் பிளாக்மூன் இயக்கத்தின் முக்கிய ஆட்கள் என்று அறிய நேரிட இதுவரை துப்பாக்கி வைத்து இருப்பதை மட்டும் கொண்டு துரத்திய போலிஸுக்கு சர்வமும் ஒடுங்கியது. 

    இவர்களை பிடிக்க டெல்லி மும்பை இடத்தில் அத்தனை கெடுபிடி. இங்கே சென்னையில் எளிதாக கிடைத்திருக்க, அவர்களை வழியனுப்பி விடவா முடியும். இல்லை… நாற்பத்தி ஒன்பது பெயரை பிடித்து வைத்திருக்க அந்த உயிருக்கு என்ன பதில். 

     தமிழக போலிஸ் தலையை பிய்த்து கொண்டு விழி பிதுங்கி நின்றது. செல்வன் என்ன செய்யலாம் என்று மற்ற மேலிடத்தில் பேசி முடிவெடுக்க போனிலே கான்பிரன்ஸ் பேசிக் கொண்டிருந்தார்.

     செய்தியாளர்களுக்கு தெரிந்தால் இன்னமும் செய்தியை திரித்து கதை கட்ட வாய்ப்புண்டு என்று தங்களுக்குள்ளே எவ்வாறு இப்பிரச்சனையை கையாள என்று குழுமிக் குழம்பிக் கொண்டிருந்தனர். 

     “என்னடா… வரவர லேட் ஆகுது. நாம பிளாக்மூன் இயக்கம் என்று தெரிந்தா சும்மா விடமாட்டாங்க. அதனால அவங்க சொன்ன மாதிரி பாதி பேரை விடுவிக்கலாமா?” என்று மதன் கேட்டான்.

     “ஆமா… நமக்கு வேற வழியில்லை. நம்ம ஏர்போர்ட்ல இருந்து வந்த போட்டோ வைத்து நாம யாருனு தெரிந்தா நம்மை விட மாட்டாங்க. அதனால பாதி பெயரை அனுப்பி நாம யாருனு தெரிவதற்குள் தப்பிக்க பார்ப்போம்.” என்று ஸ்டீபன் அங்கிருப்பவர்களில் முதியவர்கள் மற்றும் சில பெண்களை குழந்தையை விடுவிக்க எழுப்பினார்கள். 

    ஆனாலும் சில பெண்களை முடக்கினார்கள். நித்திஷ் கெஞ்சியும் நன்விழியை விட மறுத்து விட்டனர்.

   இறந்தாலும் இராணுவ விரன் வெற்றியின் மனைவி என்ற பெயர் இருக்க, நன்விழியை விடாமல் இருந்தனர். அவள் நிறை மாத  கர்ப்பமாக இருப்பதால் தப்பிக்கவும் வழி தேட மாட்டாள் என்பது இவர்களின் எண்ணம். 

   ஒலிப்பெருக்கி வாயிலாக, “இப்ப கொஞ்சம் பேர் அனுப்பறோம். அடுத்த கட்டத்தில் மற்றவரை அனுப்ப முயற்சிக்கறோம். நாங்க போகிற காரில் புத்திசாலியா யாரும் ஜிபிஆர்எஸ்ஸோ, பிர் தொடரவோ கூடாது. அப்படி பண்ணினீங்க… எங்களோட கூட கூட்டிட்டு போற உயிருக்கு உத்திரவாதம் இல்லை.” என்று பாதி பேரை அனுப்பினான்.

   நன்விழிக்கோ இது நிறை மாதம் எந்த நேரத்திலும் சொல்லப்பட்ட தேதிக்கு முன்னவே குழந்தை பிறக்க வாய்ப்புண்டு என்று எண்ணியிருக்க, அவளின் உடலில் சிற்சில மாற்றம் அவளுக்கு சிசுவின் வருகையை பறைச்சாற்றியது. 

4 thoughts on “நன்விழி-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *