Skip to content
Home » நன்விழி-4

நன்விழி-4

🤰-4

  “அம்மா….” என்ற அலறலில் நித்திஷ் கையை பற்றி முடித்தாள். 

     நித்திஷ் இம்முறை பயந்து லேபர் பெயினா என்பது போல பார்வை பார்க்க, ஆம்  என்பதாக தலையை அசைத்தாள். 

    “சார்… இவங்களை முதல்ல அனுப்புங்க சார். லேபேர் பெயின் வருது.” என்று நித்திஷ் மன்றாட, அங்கிருந்தவர்களோ பாவமாக பார்க்க செய்தனர்.

  முகமது மற்றும் மதன் ஸ்டீபன் மறுப்பாய் தலையசைக்க, “டேய் என்னடா வேண்டும் உங்களுக்கு… சின்ன ஈவு இரக்கம் இல்லையா… உலகத்திலயே பெரிய வலி பிரசவவலி தான் அதனை போராடி ஜெயிக்கறதே பெண்களுக்கு சாதனை தான். அதுல இந்த மாதிரி வேற வலியை தருவது நியாயமா டா. பாஸ்டட்” என்று நித்திஷ் கத்தவும் மதன் எட்டி உதைக்க, காலி இருக்கைகள் மீது விழுந்தவன் சற்று தூரமாக தள்ளியது. 

    “நித்திஷ்…  யாரிடமும் கெஞ்சாதேனு சொன்னேன். புரியலையா உனக்கு. அதுவும் குழந்தை முதியவர்கள் பெண்கள் என்று பிடிச்சி வைத்து ஜம்பம் பேசறவனிடம் கெஞ்சற… 

   மனிதாபிமானம் கெஞ்சி பெறுவதில்லை நித்திஷ்” என்றாள் அந்த நிலையிலும். 

   முகமத் அருகே வந்து, இராணுவ வீரனோட மனைவில… பேசுவடி” என்று ஒர் அறையை பரிசாக அளித்தான்.

     “முகமத்… இங்க நின்று பேசற நிலையில் நாம இல்லை. நாம போகணும். சுத்தி என்ன நிலைமை இருக்குனு பாரு.” என்றான். 

   துப்பாக்கி ஏந்திய மூவரிடம், தியாகு, சல்மான், கேசவன் நீங்க மூன்று பேரும் வண்டியை சுற்றி எப்பவும் துணைக்கு நில்லுங்க. நாங்க ஏறிட்டதும் உடனே ஏறிடணும். ஒரு கார்ல ஆறு பேர் உட்கார…” என்றதற்குள் ஒலிப்பெருக்கி முழங்கியது. 

    “இப்ப நீங்க கேட்டது போல கார் இருக்கு. மற்றவர்களை விடுவித்துட்டு நீங்க போகலாம் இங்க யாரையும் தடுக்கலை. எங்களுக்கு மக்களோட உயிர் முக்கியம்.” என்று கத்தியது. 

     “சரி எங்களுக்கும் எந்த கோரிக்கையும் இல்லை. எங்களை விட்டா போதும்” என்றதோடு மறறவர்களையும் அனுப்ப திட்டமிட்டனர். 

    இம்முறையாவது நன்விழி அனுப்ப படுவாளென நித்திஷ் எண்ணியிருக்க, மாறாக அவளை தவிர யாவரும் அனுப்ப ஏவிக்கொண்டிருந்தனர். 

     “சார் இப்பவாது நன்விழியை  அனுப்புங்களேன்.” என்று வந்து கெஞ்சினான். 

     “எல்லாரையும் அனுப்பிட்டு நாங்க என்ன செய்ய? எங்களுக்கு வேல்யூவான ஒரு பெர்ஷன் வேண்டும் தப்பிக்க. இந்த போலிஸ் என்ன காரை கொடுத்து வழியனுப்புமா. ஏதாவது தகிடுதத்தம் செய்தா எங்களுக்கு ஒர் துருப்பு சீடடு வேண்டுமே. அதுக்கு இந்த பொண்ணு தான் சரியா வருவா. 

    இவளால தப்பிக்கவோ ஓடவோ முடியாது. எங்க இழுப்புக்கு இவ சரியா வருவா. அதோட போலிஸை விட மிலிட்ரி மேன் மனைவி அதிகமா  அக்கறை படுவாங்க. நீ வேண்டுமென்றால் போ” என்றதும் நித்திஷ் போக மறுக்க அடித்து வெளியே அனுப்பப்பட்டான். 

    “நித்திஷ் நீ போ..” என்றவளின் உறுதியை இத்தனை நேரம் வசவு பேசி வருந்தியவர்கள் கூட நன்விழி பாவமாக கடந்து சென்றார்கள். 

    கடைசியாக ஆறுபேர் இருக்க, நன்விழி தனியாக நின்றாள். 

    இருவரின் துப்பாக்கி முனையில் நன்விழி அடியெடுத்து வர, பனிக்குடம் உடைந்து அந்நீரானது வழிய நடக்க இயலாது கடினப்பட்டு நடந்தாள். 

     அந்த நேரம் எங்கிருந்தோ இரண்டு தோட்டா… வந்து நன்விழியின் அருகே இருந்தவர்களின் நெற்றியை பதம் பார்த்து உள்ளிறங்கியது. 

    நொடியில் ஸ்டீபன் மதன் முகமத் மற்றும் கேசவன் ஜிம்மில் இருந்த கதவு திறந்து நன்விழியை இழுத்து கதவை சாற்றி முடித்தனர். 

     முகமத் வைத்திருந்த ஒலிப்பெருக்கியால் “ஏன் இப்படி பண்ணறிங்க.” என்று கத்தியதில் செல்வனோ, “நீங்க பிளாக்மூன் இயக்கம் என்று எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. நீங்க சமூகவிரோதி என்றப்பின் மத்திய அரசாங்கம் உங்களை சுட்டு பிடிக்க தான் எங்களுக்கு ஆர்டர் தந்திருக்காங்க.” என்று பேசவும்

    “இங்க ஒர் கர்பிணிப்பெண் எங்களோட இருக்கா. ஏதாவது பண்ணினா அவளையும் அவ கருவையும் அழிச்சிடுவோம். இப்பவும் ஒன்றும் இல்லை எங்க நால்வரை செல்ல விடுங்க. இல்லை… இருக்கற இந்த பொண்ணை சாகடிச்சிடுவோம்”  என்று மிரட்ட, நித்திஷ் பயந்தே போனான். 

     “சார் அந்த பொண்ணு பிரசவவலி வருது. காப்பாற்றுங்க சார். அவங்க தான் இரக்கமே இல்லாம அனுப்பலை. நீங்க அவளை காப்பாற்ற மெனக்கெடுங்க ப்ளிஸ்.” என்றான். 

    அவனின் கதறல் அங்கிருந்த விமல் ஆறுதல் படுத்தினானே தவிர மற்றவர்கள் பார்வைக்கு படவில்லை. 

    செல்வனோ, “தர்ஷன் ஸ்பாட்ல அகைன் அந்த பொண்ணு இருக்கா. எப்படி காப்பாற்றுவது… அந்த பொண்ணு உயிரை காப்பாற்றி மற்றவர்களை டார்கட் பண்ணுங்க.” என்று கட்டளை வழங்கினார். 

    “சார் இட்ஸ் ரிஸ்க். சாதாரண பெண் என்றால் காப்பாற்றுவது ஈஸி சார். பட் அந்த பொண்ணு பிரகனட் தப்பிக்க மனபலம் வேண்டும். அது இருக்கானு தெரியலை.” என்று குறி வைத்தவன் கேசவனுக்கு குறி வைத்திருந்தான். 

    ஏற்கனவே ரூபன் சல்மானையும், தர்ஷன் தியாகுவையும் சுட்டி முடித்திருக்க, கேசவனை குறி வைத்து சுட்டி முடிக்க, சப்தமில்லாமல் அவன் இதயத்தை துளைத்து புல்லட் பாய்ந்தது. 

  ரூபன் மதனுக்கு குறிப்பார்க்க அது கண்ணாடியில் பட்டு தெரித்தே தவிர அவனை ஒன்றும் செய்யவில்லை. 

     “ரூபன் என்னடா பண்ணிட்ட.?” என்று தர்ஷன் கத்த, 

     “மச்சான்… ஜிம் டா.. கண்ணாடில வியு பார்த்யுட்டேன் போல. குழம்பிட்டேன்.” என்று முடிக்க அங்கே மதன் பின் நகர, முகமத் தர்ஷன் பார்வைக்கு பட இம்முறை முகமத் தொண்டை குழியில் துளைத்து உயிரை மாய்த்தான். 

      ஸ்டீபன் மற்றும் மதன் இருவரும் சுதாரித்து நன்விழியின் நெற்றிக்கு வயிற்றுக்கும் குறி வைத்து நின்றனர்.  

     மதன் இனியும் தாமதிச்சா நம்மை கொன்று பிடிப்பாங்க. அடுத்த வாரம் நடக்குற சயின்டிஸ்ட் மீட்டிங் பிளான் அப்படியே கேன்சல் ஆகிடும். இனிமே புதுசா ஆட்கள் இங்க ரீச் ஆகி செயல்படுத்த முடியாது.” என்று பேச, நன்விழிக்கு அந்த வலியிலும் அவர்கள் பேச்சில் இவர்கள் பற்றி அறிந்துக்கொண்டாள். 

    பிளாக்மூன் இயக்கம் ஏற்கனவே நன்விழி அறிந்து இருந்தமையால் எத்தகைய ஆட்கள் இவர்கள் என்ற கணிப்பில் நன்விழி புரிந்துக் கொண்டாள். 

     நன்விழியின் சிகையை பிடித்து இழுத்து அவளின் வயிற்றில் துப்பாக்கி வைத்து ஸ்டீபன் வெளியே வந்தான். 

   “கன் பயர் பண்ணியவங்க எல்லாரும் முன்ன வாங்க. இல்லை இவளை கொன்றுடுவேன்.” என்று மிரட்ட தர்ஷன், ரூபன் வர மறுத்தனர்கள். 

     “மூன்று என்றதற்குள் வரலை… இவளை சுடுவேன்.” என்று சொல்லி எண்ண ஆரமபித்தான்.

    இருவரும் தங்களை வெளிப்படுத்தாமல் இருக்க, ஸ்டீபன் துப்பாக்கி சுட்டு முடித்தான். 

   நன்வழி அலறல் அந்த இடத்தையே உலுக்க அங்கே வெளியே பாதுகாப்பாக உள்ளிருந்து வேடிக்கை பார்த்தவனரோ, “அச்சச்சோ அந்த பொண்ணை சுட்டுட்டாங்க” என்ற செய்தியை பரப்பினாள். 

4 thoughts on “நன்விழி-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *