Skip to content
Home » நன்விழி-5

நன்விழி-5

🤰-5

      “நன்விழி…” என்று நித்திஷ் கத்தி, ஸ்டீபன் அருகே வர முயல, துப்பாக்கியை நித்திஷ் முன் நிறுத்தி, “அங்கயே நில்லு… இல்லை இப்ப அவ கையில் சுட்டதை நெற்றியில சுட்டுடுவேன்.” என்று மிரட்டினான். 

     “நீங்க இரண்டு பேர் தானா? இல்லை எவனாது இன்னமும் மறைந்து இருக்கிங்களா?” என்று ஸ்டீபன் நன்விழியை துப்பாக்கி முனையில் மிரட்டியபடி கேட்டு முடித்தான். 

     “நான் யாரையும் கூட்டு சேர்க்க மாட்டேன். அவன் ஒருத்தன் தான்” என்று ரூபனை கைகாட்டி தர்ஷன் பேசினான். 

     “டேய்.. அவனை செக் பண்ணு. கன் எல்லாம் இருந்தா எடுத்து முன்ன வை. இல்லை.. இவளை” என்று கூறுவதற்குள் தர்ஷனை செக் செய்து கன் எடுத்து வைத்தான். முதுகில் ஒன்று காலில் ஒன்று வைத்திருந்தான். மற்றொரு காலில் சின்ன கத்தி வைத்திருந்தான். அனைத்தும் முன் வைத்திட, அடுத்து ரூபனின் பக்கமும் முதுகில் ஒர் கன்னை எடுத்து ஸ்டீபன் முன் வைத்து விட்டு “அவளை விடுடா.” என்றான். 

       துப்பாக்கியை மதன் எடுத்து கொண்டு முடிச்சிட, கத்தி கீழே விழுந்தது. 

     நன்விழி இரத்தம் சொட்ட, எழ சொல்லவும் போராடி எழுந்தாள். எழுந்தவள் கையில் அந்த சின்ன கத்தி மிளிர்ந்தது. 

     ”என்ன மா… அந்த சின்ன கத்தி வைத்து மிரட்ட போறியா… அதெல்லாம் உடலில் கீறினா அந்த வலியெல்லாம் கண்டுக்கவே மாட்டோம். கொடு அதை.” என்று கையை நீட்டினான். 

     “சின்ன கத்தி தான். உன்னை ஒன்றும் பண்ணாது தான். உங்க இரண்டு பேரை இதை வைத்து மிரட்ட முடியுமா? சயின்டிஸ்ட் மீட்டிங்ல கொல்ல வந்த உங்களுக்கு இதெல்லாம் பொருட்டா இருக்காது. 

       ஆனா என்னை நானே குத்திக்கிட்டா உங்களால தப்பிக்கவே முடியாது. தப்பிக்க விடவும் மாட்டார்.” என்றவள் பார்வை தர்ஷனை தழுவி மீண்டது. 

     “நீ சொன்னியே கர்ப்பவதி மிலிட்ரி மேன் மனைவி அதனால வேலிட் பெர்சன் என்று. ஆமா டா. நான் பொண்ணா பிறந்ததாலே தகுதியானவள் தான்.

அதோட வெற்றியோட வாழ்ந்துயிருக்கேன். அவர் போய் சேர்ந்தாலும் என் மனசுல விதைத்தது. தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தான். அதை எப்பவும் கைவிட்டதில்லை. கூடவே இருக்கு. உன்னை மாதிரி ஆட்களுக்கு பயந்தா வெற்றி என்னை மன்னிக்க மாட்டார். 

     பிளாக்மூன் இயக்கத்துல ஆறு பேரை தமிழக போலிஸ் சுட்டு பிடிச்சிருக்கு. அந்த கிரிடிகல் சூழ்நிலையில் ஒரு கர்ப்பிணி பெண் இறந்துட்டா. இதான் நாளைக்கான செய்தி.” என்று கூறினாள். 

    “நன்விழி அவசரப்படாதே… எதுவும் தப்பா முடிவெடுக்காதே.” என்று நித்திஷ் பதறினான். 

    “இல்லை நித்திஷ்… என்னால இவனுங்க தப்பிக்க கூடாது. எத்தனை இலகுவா கர்ப்பிணி பெண்ணை பிணையகைதியா வைத்தா தப்பிக்கலாம்னு முடிவு பண்ணிட்டானுங்க. இங்க யாராயிருந்தாலும் தன் உயிரை துச்சமா எண்ணிட்டா எந்த துப்பாக்கிக்கும் பயப்பட மாட்டாங்கனு புரியறதில்லை. 

  உயிர் பயம் காட்டினா பயந்து போயிடுவோம் இவனுங்க தப்பிக்கலாம்னு நினைச்சிடறாங்க. ஒவ்வொருத்தரும் உயிர் பயம் இல்லாம வாழ ஆரம்பிச்சிட்டா இவனுங்களால் என்ன பண்ண முடியும்.” என்று நன்விழி சற்றே அசதியாகவே பேதி முடித்தாள். 

    “ஏ..ஏய்… பொண்ணு… உனக்காக இல்லைனாலும் உன் குழந்தை வயிற்றுல இருக்கு. அதுக்காவது யோசி. எதுவும் பண்ணிடாதே.” என்று மாற்ற முயன்றான். அப்படியாவது நன்விழி குழந்தைக்காக யோசித்து தயங்க தப்பிக்க வழிக்கிடைக்குமென்று. 

     “ஆமால்ல… ஆனா பாரு…. இந்த குழந்தை பிறந்து வளர்ந்து ஆளாகி,  என் வெற்றி மாதிரி இராணுவத்தில சேர்ந்து உன்னை மாதரி ஒர் ஆளை சாகடிக்க செத்து போனா… என்ன பண்ணறது. அது வீரமரணம் தானே. அப்போ என் குழந்தை இறந்தா கர்வமா தானே எண்ணுவேன். இப்ப அப்படியே நினைச்சிக்கறேன். 

      ஏற்கனவே நான் செத்துட்டு தான் இருக்கேன். என் மேல குண்டு பாய்ந்து இருபது நிமிடம் ஆகுது. பிளட் லாஸ். நிச்சயம் பிரசவத்துல என்னால உயிர் பிழைக்க முடியாது. அதை என்னால உணர முடியுது. சாகறப்ப என் வெற்றி மாதிரி நானும் நல்லது பண்ணிட்டு போறேனென்ற திருப்தியாவது கிடைக்கட்டும். நான் இந்த நந்தவனத்துல அதுக்காவது உபயோகமாகறேன்.” என்ற பேசி தன் கழுத்தில் கீறி முடித்தாள்.

   தங்களின் பணயகைதியாக அழைத்து வந்த நன்விழி இப்படி ஒரு முடிவில் தங்களை மாட்டி விட்டு செல்வாளென அறியாத ஸ்டீபன் மதன் ஸ்தம்பித்தனர். 

    இத்தனை தூரம் பொறுமையாக இருந்த தர்ஷனும் அவளின் முடிவில் அதிர்ந்தான்.

    ஸ்டீபனிடம் இருக்கும் துப்பாக்கியை பொருட்படுத்தாது அவனை தாக்கினான். 

    ஒரு புல்லட் அவனருகே உரசி சென்றதே தவிர எதுவும் ஆகவில்லை. ஆனால் மதன் வைத்த கத்தி மற்றொரு கத்தியால் கையை கீறி முடித்தான். 

    நன்விழி கழுத்தில் இரத்தம் சொட்டிய ரிலையை கண்டவன், தன் கைகளில் வழிவதை கண்டுக்காது ஸ்டீபனிடம் இருந்த துப்பாக்கியை லாவகமாக பிடுங்கி மதனை சுட்டு முடித்தான். 

    அடுத்து ஸ்டீபனை கூறிவைத்து நின்றான். 

    “நோ… நோ.. நான் சரண்டர் ஆகறேன்” என்று மண்டியிட்டவனை கண்டு “அப்ப இந்த உயிர் போனதுக்கு என்னடா மதிப்பு.” என்று ஸ்டீபனை சுட்டு முடித்தான்.  

     நித்திஷ் நன்விழியை தாங்கி கொண்டு, “என்னமா பண்ணிட்ட… என்னை விபத்துல இருந்து காப்பாற்றி இரத்தம் தந்தவன் மா வெற்றி. அவனோட வாழ்க்கை தான் முடிஞ்சுது. உன்னோட வாழ்வில் சின்னதா உதவி செய்து நன்றி கடனா இருந்தேன். இப்ப அதுவும் வேண்டாம்னு போயிட்டியே…” என்று கதறினான். 

   “தர்ஷன் உனக்கு…?” என்று ரூபன் விசாரிக்க, “ஒன்றும் ஆகலை” என்றவன் உயிர் போனாலும் கர்வமாக இருந்தவளை கண்டு வியந்தான். 

    ‘தான் கூட கர்ப்பிணி பெண் பலகீனமானவள் என்று கூறினோமே… இல்லை இவள் பலகீனமானவள் அல்ல. இந்த மாதிரி பெண் தான் நம்ம நாட்டோட பலமோ’ என்றது அவன் உள்ளம். 

     “என்னவெல்லாம் பேசினிங்க. இது மாதிரி நீங்க உயிரை துச்சமா கொடுப்பிங்களா… மாட்டிங்க. அடுத்த வீட்ல என்ன நடக்குது. உங்களுக்கு யாரை எப்ப நோகடிக்க பேசறது இப்படி தான் நடந்துக்க தெரியும். 

   செத்தப்பிறகு அச்சச்சோ… அந்த பொண்ணு பற்றி இப்படி பேசிட்டோமேனு வருந்துவிங்க. ஆனா உயிரோட இருக்கறப்ப, வார்த்தையால கொல்லுவிங்க.

   போங்க இதே ஆண்டுவிழா நடந்த இடத்துல ஆன்மாவுக்கு சாந்தி அடையணும்னு வேண்டுவிங்க. உங்களால் அதை தான் பண்ண முடியும்.” என்று பொரிந்து தள்ளினான்.  

      “நித்திஷ்…. உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.. வயிற்றில் இருக்கற சிசுவை காப்பாற்ற வாய்ப்பு இருக்கு.” என்றதும் அடுத்த நொடி  ஆம்புலன்சில் நன்விழியின் உடலை ஏற்றினார்கள். 

   ரூபன் தர்ஷன் இருவரும் அந்த நன்விழி உடலுக்கு ஒர் ராயல் சல்யூட் அடித்து நிற்க, மற்ற போலிஸார் அதே போல செய்து முடித்தனர். நன்விழி உடல் மருத்துவமனை நோக்கி சென்றது. 

    சில மணித்துளிகள் கடந்திட….

     “பிளாக்மூன் இயக்கத்தை சேர்ந்த ஆறு பேர் எதிர்பாரா விதமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பொழுது, சந்தேகத்திற்கு இடம் அளிக்க ரமேஷ் என்ற போலிஸ் பின் தொடரவும், அவ்வியக்கத்தின் ஆட்கள் நந்தவனம் குடியிருப்பு வளாகத்தில் சென்று அங்கிருந்தவர்களை பிணை கைதியாக மாற்றி தப்பிக்க முயன்றனர். 

   ஆனால் எதிர்பாராத விதமாக முன்னாள் இராணுவ வீரன் மனைவி நன்விழிவெற்றி என்ற கர்ப்பிணிப்பெண்ணின் உதவியால் அந்த ஆறுபேரினை சுட்டு பிடிக்க முயன்றது. அதில் வீர மரணமாக நன்விழி மரணம் நேர்ந்தாலும் அதற்கு அவள் கர்வமே கொள்வாள் என்று அப்பெண்ணின் குழந்தையை கையில் ஏந்தி அப்பெண்ணின் தோழன் நித்திஷ் செய்தியாளரிடம் பெருமையாக கூறி முடித்தார். 

 நன்விழி இறந்தப் பின்னும் அவள் வயிற்றில் இருந்த பெண்சிசு உயிரோடு மீட்கப்பட்டது.” என்ற செய்திகள் எல்லா தொலைக்காட்சியிலும் மாறி மாறி அதே செய்தியை ஒளிப்பரப்பி முடித்தார்கள். 

      நந்தவனம் குடியிருப்பில் நித்திஷ் கூறியது போலவே நன்விழிக்காக அங்கே இரங்கல் கூட்டம் நடைப்பெற்றது. ஆனால் இம்முறை நித்திஷ் அங்கே செல்லவில்லை. 

      கையில் பிறந்த குழந்தையை வைத்து எப்படி வளர்க்க என்று புரியாது தவிக்க, குழந்தை வீல்லென்று கத்த துவங்கியது. மருத்துவமனையில் நர்ஸ் சொல்லிக் கொடுத்த வகையில் நீரில் பால் பவுடரை கலக்கி கொண்டிருந்தான். வாசலில் நிழலாட, அங்கே வினோதினி நின்றாள். 

      “சாரி டா… குழந்தையை கொடு. நான் பார்த்துக்கறேன்.” என்று அவளாக வாங்கிக் கொண்டாள். 

   நண்பன் மகளை தன் முதல் குழந்தையாக வளர்க்க திட்டமிட்டுயிருந்தான் நித்திஷ். வினோதினி நன்விழியின் தியாகத்துக்கு முன் சின்ன உதவியாக நித்திஷோடு அக்குழந்தையை வளர்க்க எண்ணினாள். 

  – முற்றும்.

பிரவீணா தங்கராஜ்

10 thoughts on “நன்விழி-5”

    1. Praveena Thangaraj

      🫂🫂🫂🫂🫂 இப்படியும் பெண் இருக்கட்டும் கதை பிடித்திருக்கு அல்லவா. நன்றி சிஸ்டர்.

      1. Avatar

        கதை சிறப்பு! நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய வித்தியாசயான நாவல். வாழ்த்துகள் பிரவீணா. தொடர்ந்து எழுதுங்க. 😊

  1. Avatar

    இதுல வர நம்ம அஷ்வின் பயன் தர்ஷன் தானே சிஸ்டர் …. நித்திஷ் கதையாசிரியர் தானே இந்த பெண் குழந்தை பிற்காலத்தில் தர்ஷன் மாதிரி போலிஸாக வருவா … ஓரு ஹீரோ கல்யாணம் பண்ணுவா கரெக்டா வீணா அக்கா

      1. Fellik

        நீங்க இருக்கீங்களே கண்ட்ரோல் பண்ண முடில கண்ல கண்ணீர் வந்துட்டே இருக்கு உங்கள் பேச்சு கா

  2. Kalidevi

    Kandipa pengal ippadi thairiyama irukanum tha athuvum karpini ah pinaikaithiya vachi thapika ninaikira thiviravathigala na sethalum ivangala natukulla vidama shoot panunga solli sagarathukum thairiyam venum la. Royal salute to nanvizhi. Congrats sisy for your superb writing of story novels I like so much sisy👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *