Skip to content
Home » நினைவில் ஒரு வானவில் டீசர்

நினைவில் ஒரு வானவில் டீசர்

“ஒரு ஐசியூ செட்டப் இப்படிதான் இருக்குமா… ஒழுங்கா இத பண்ணுனது யாருனு சொல்லுங்க… இல்ல என் ட்ரீட்மெண்ட ஸ்டார்ட் பண்ணுனேன் உங்க சோலிய முடிச்சு உப்புகண்டம் போட்டுடுவேன்… ”

“அடியே பூக்குட்டி… சார் கண்டுபிடிச்சுடுவாரோ… என்ன ஏற்கனவே உர்ருனு பாப்பாரு… இதுமட்டும் தெரிஞ்சுது… இதுதான் உன் லட்சணமானு கழுவி கழுவி ஊத்துவாரே…” என்ற நறுமுகையின் முகத்தில் வியர்வைததுளிகளின் ஏராள முத்தங்கள்.

“என்ற ஏக இஸ்ட சேச்சியல்லே… என்ற பிராணனே வாங்க்யாதே போடே… அய்யாளு கண்டிபிடிச்சில்லேங்ஙிலும் நிங்ஙளு காணிச்சு கொடுக்கோ… என்றே ஏஷூவா… என்ன காத்துக்கொள்ளணே…” என்று புலம்பினாள் மலர்மதி.

“மிஸஸ்‌.மலர்மதி, நின்ற வாயினு ஒரு பூட்டு இடான் பற்றோ…” வார்த்தைகள் வந்த திசையிலோ நின்றிருந்தார் தமிழ்வேந்தன்.

யாரிடம் சிக்கிக்கொள்ள கூடாதென நினைத்தனரோ அவரிடமே சிக்கிய கொடுமையை என்னவென்று சொல்வது..‌ ‘ஐயோ இயேசப்பா எந்த ஆளுகிட்ட சிக்க கூடாதுனு நினைக்கிறேனோ அங்கேயே வந்து கோத்துவிடுறீங்களே’ என்ற வார்த்தைகள் யாவும் நறுமுகையின் மனதோடு உலாவின…

“எந்தா கொல்லத்து சேச்சி…, டிரீட்மென்ட் ஸ்டார்ட் செய்யாமோ… என்ன குமரிப்புலவரே… நீங்க மட்டும் ஏன் தனியா போறீங்க… வந்து சேச்சியோட ஜோதியில் ஐக்கியம் ஆகிக்கோங்க” என்றதான தமிழின் வார்த்தைகளில், ஒழிந்துகொள்ள ரெடியான நறுமுகை சிக்கிக்கொண்டதை நினைத்து விதிர்விதிர்த்திருந்தாள்.

****

‘தனிமரமாக நான் விழுந்தேனே நம்பிக்கையே இழந்து நான் விழுந்தேனே…’

அலைபேசி தன் உயிர்ப்பை பாடல் வரிகளில் காண்பிக்க, ஓடிவந்து எடுத்துக்கொண்டாள் நறுமுகை.

பல நாட்களுக்குப் பின்பாக ஒரு பதைபதைப்பு… இன்னும் வாழ்க்கை தந்த ஒரு அடியிலிருந்தே எழாதபோது அடுத்த அடி விழுந்துவிடுமோ என்ற பயம்… வேதனை… தாங்கி வருவேனா… என்ற ஏக்கம். இழந்த காதலின் சொல்லொண்ணா வலி ஒருபுறம்.

” இஸ் திஸ் நறுமுகை…” அலைபேசியின் மறுபுறமிருந்து கேள்வி கேட்கப்பட,

” எஸ்…” என்று பதிலை வழங்கிய நறுமுகை , எதிர்பதிலிற்காகக் காத்திருக்க,

” Your daughter is confirmed as Tuberculosis ”

ஒருநொடி தலையே சுற்றி விட்டது. இந்த நொடி தன் உயிர் பிரிந்துவிடாதா என்ற ஏக்கம்… தலை விண்விண்ணென்று வலித்தது. எதிர்முனையில் இருந்தவர் வேறு எதோ சொன்னார் தான்… ஆனால் எதுவும் அவளுக்கு கேட்கவில்லை… தலை சுற்றுவது போன்று ஒரு மாயை. பொத்தென விழுந்தே விட்டாள். ஒரு மயான அமைதி தன்னிலே வியாப்பதை உணர்ந்தவள் சில நொடிகளில் தன் உணர்வுகள் எவையும் மொத்தமாய் உணராமல் போனாள்.

****

நான் தான் mark-16. எல்லாரையும் என்னுடைய கதைக்கு அன்புடன் வரவேற்கிறேன் 🤗. அப்புறம் கதை வர கொஞ்சம் லேட் ஆகும் 😁. மார்ச் மாதம் மேல கதை சுடச்சுட வந்திடும்‌‌. அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க 😍

அன்புடன்Mark-16

12 thoughts on “நினைவில் ஒரு வானவில் டீசர்”

  1. Avatar

    Teaser nalla iruku indha Malayalam language sudden padikumbodhu vaaila varala😂 sry…thirumba adha crct ah padichen… Waiting for this story…. Narumugai and malarmathi name nalla iruku….

    1. Narumugai

      😅😅😅
      உங்களுக்கு அதனுடைய பொருள் புரிந்துச்சா மா…

      முடிந்தமட்டும் எளிதான புரியும்படியான மலையாள சொற்கள்தான் பயன்படுத்துவேன். புரியவில்லை என்றால் கேளுங்க சொல்லித்தரேன் 🤗

      நன்றி மா 🤗

  2. CRVS 2797

    டீஸரே கலக்குறிங்க. ஆனா, பாருங்க இந்த மலையாளம் யான் அறியிலேன். ஸோ…. எங்களுக்கு புரியற மாதிரியே கொஞ்சம் எழுதலாமே.

      1. Praveena Thangaraj

        மலையாளம் எழுதிட்டு பிராக்கெட்ல தமிழ் போடலாம். 🫣அப்ப ரீடர் கேட்ச் பண்ணிப்பாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *