💟-10
அவந்திகா வேண்டுமென்றே கெஞ்ச விட ஒரு கட்டத்தில் கவியரசன் மனம் நொந்து விட்டான்.
திருமணம் இத்தனை வலி கொண்டதா… சின்ன புரிதல் கூட இவளிடம் இல்லை என்பதை எண்ணினாலும் அதனை பெரிதுப்படுத்த அவன் மனம் விரும்பவில்லை.
ஹனிமூன் சென்றால் மனமாற்றம் கிடைக்கும் என்று டிக்கெட் புக் செய்து காட்ட அவந்திகா எந்த ஊர் என்ற ஆவல் பொங்க கேட்டதால் நிம்மதி அடைந்தான்.
அதற்கு தேவையான உடைகளை எடுத்து வைக்க மீண்டும் பழைய அவந்திகா போல அவனின் மேலே கிளி போல தொத்தி கொண்டாள்.
இனி பிரச்சினை சரியாகிடும் என்ற நோக்கில் நாளை மாலைக்கு ஊட்டிக்கு டிக்கெட் ஏற்பாடகி இருக்க ஆர்வத்தோடு கிளம்பினாள்.
விதியின் விளையாட்டு அல்லது அவந்திகாவின் அசட்டுதனமோ செக்கு எண்ணெய் சிந்தி இருக்க இத வேற நான் சுத்தம் செய்யனுமா? என்று கடந்து சென்று ஹனிமூன் செல்ல உடைகளை அடுக்கி அதற்கு உண்டான அணிகலங்களை தேடி பிடித்து வைத்தாள்.
கவியரசனின் அப்பத்தா சரோஜாவின் குரல் ”முருகா..” என்று அலற ‘கிழவி இப்போ எதுக்கு இப்படி கத்தி கூப்பாடு போடுதோ…’ என்று கண்ணிற்கு ஐ லைனர் தீட்டி கொஞ்சம் நேரம் அது அழியாமல் இருக்க இமையை மூடினாள்.
இங்கு கவியரசன் அப்பத்தா அலறல் கேட்டு ஓடி வந்து பார்த்தவனின் கண்கள் தன்னை வளர்த்து ஆளாக்கிய உள்ளம் விழுந்து கிடக்க தன்னையே நம்பி வந்தவளோ இமைகளை திறக்காமல் இருக்க கண்டான்.
அப்பத்தா தூக்கி கட்டில் படுக்க வைத்து பார்க்க அவரோ
”முடிலை டா… உசிறு போற மாதிரி இருக்கு… வலி தாங்கலை…. முருகா ஆண்டவா..” என்று துடிப்பதை கண்டான்.
‘அவந்திகா.. கொஞ்சம் அப்பத்தா வந்து பாரு நான் ஹாஸ்பிடல் போக வண்டி எடுத்து வைக்கிறேன்” என்றான் பதட்ட குரலில்.
”என்னது ஹாஸ்பிடலா? அப்போ ஊட்டிக்கு எப்போ போக.. சரி சரி சீக்கிரம் கூட்டிட்டு போயி கூட்டிட்டு வாங்க” என்று சொல்லிட இந்நிலையில் இவளிடம் எதையும் பேச தோன்றாமல் கிளம்பினான்.
பக்கத்து ஊரில் சரோஜாவை பார்த்து இவங்களை உடனடியா டவுன் கொண்டு போங்க… உடனடியா பாருங்க இல்லைனா எழுந்து நடமாடுறது கஷ்டமா போகிடும். இங்கு அற்கான மருத்துவ வசதி இல்லை என்று சொல்லி அந்த சின்ன கிளினிக் மருத்துவர் சொன்னார்.
அப்பத்தாவிற்கு வலி அழுகை முனங்கள் எல்லாம் இவனுக்கு கஷ்டமாக நேராக பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
இங்கோ அவந்திக்கா நேரம் பார்த்து பார்த்து வாசலில் நடந்தாள்.
அவளுக்கு ஊட்டி செல்லும் நேரம் கடக்க தான் போனில் கவியரசனுக்கு கால் செய்தாள்.
”எவ்ளோ நேரம் பஸ் போயிடும் இன்னும் என்ன பண்றிங்க?” என்று கேட்க போனில் அப்பத்தா அழைத்து கொண்டு டவுன் சென்றதை கூற வந்தவன் இவளின் பேச்சில் போனை ஆப் செய்தான்.
அடுத்து அடுத்து விடாது போன் செய்ய கவியரசன் கடுப்பில் அதனை அணைத்து விட்டான்.
மனமோ இந்த நிலையில் எப்படி இவளுக்கு அப்பத்தவை கூட யோசிக்காமல் அவளின் ஹனிமூன் போகும் ஆசையில் இருக்கின்றாள். வீட்டில் பெரியவர் உடல் நிலை பாதிப்பில் கொண்டு சென்று இருக்கின்றேன் அவருக்கு என்ன ஏது என்று ஒரு வார்த்தை கேட்காமல் இப்படி ஊட்டி போகும் கனவை பற்றி கேட்டு எப்போ வருவேனே கேட்கின்றாளே…. என்று வலித்தது.
இன்னொரு மனம் தான் பெரும் தவறு செய்து விட்டோம். பெண் கொடுக்க நினைப்பவர்கள் எப்படி மாப்பிள்ளையை தெரியாத இடத்தில் வந்து அவருக்கே தெரியாமல் பார்த்து புரிந்து கொடுக்கின்றார்களோ அப்படி தானும் அவந்திக்காவை ஒரு முறை பார்த்திருக்க வேண்டுமோ அப்படி பார்த்திருந்தால் அவளை வேண்டாம் என்றெண்ணி இருப்போம்.
காலம் கடந்து தன்ஷிகவை மணந்து இருக்கலாம் என்றது. அவனுக்கு அக்கணம் எதற்கு தன்ஷிகா தோன்றினால் என்று அவனுக்கே தெரியவில்லை.
ஆனால் அவன் எண்ணிய தேவதை நேரிலே வந்து கொண்டு இருந்தாள்.
”ஐ மாமா.. நீங்க.. எங்க இங்க” என்று இடம் அறிந்து பேச்சை மெதுவாக பேசினாள்.
”அப்பத்தா வழுக்கி விழுந்து விட்டாங்க பக்கத்தூர் போனேன். அங்க தான் டவுன்ல கூட்டிட்டு போக சொன்னாங்க. இல்லைனா நடக்கவே முடியாம போயிடுமாம். அதனால தான் இங்க வந்தேன்” என்று தோய்ந்த குரலில் கூறினான்.
”கவலைப்படாதீங்க மாமா அப்பத்தாவுக்கு ஒன்னும் ஆகாது. பாருங்க இங்க வந்தாச்சுல போகும் பொழுது பேரண்டி வாடா அப்படினு உங்க கை புடிச்சு கூட்டிட்டு போவாங்க கண்ணை துடைங்க” என்றாள் தன்ஷிகா.
தான் அழ செய்யவில்லையே என்று எண்ண ”ஐயோ மாமா நீங்க ஒரு மாதிரி கலங்கி போயி இருக்கறது கண்ணில் தெரியுது அதான் அப்படி துடைங்க சொன்னேன். சரி அக்கா எங்க மாமா?” என்றாள்
”அவ வரலை.. நான் இங்க வருவது அவளுக்கு தெரியாது” என்று அவந்திகாவை அந்த நேரமும் விட்டு கொடுக்கவில்லை.
”சரி விடுங்க நான் கூட இருக்கேன். இருங்க என் ஃபிரண்ட்கிட்ட சொல்லிடறேன் ” நகர்ந்து அவர்களிடம் சொல்லி வர அதே நேரம் டாக்டர் வந்தார்.
”தேங்க் காட்… நீங்க சரியான நேரதுக்கு கூட்டிட்டு வந்திங்க இல்லை காலம் பூரா படுக்கையில் இருந்து இருப்பாங்க ஆனா இப்ப பரவாயில்லை… பாருங்க ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ணனும் அது முடிஞ்ச சரியாகிடுவாங்க” என்றார் அவர்.
”எப்போ டாக்டர் ஆப்ரேஷன்? பண்ணலாம்” என்று கவியரசன் கேட்டான்.
”உங்க சௌகரியம் சொல்லிடுங்க அப்ப பண்ணிடுவோம்” என்று நகர நர்ஸ் வந்து ”அந்த பாட்டி வலிக்காம இருக்க வலிநிவாரணி ஊசி போட்டு இருக்கோம் தூங்காறாங்க சார் நீங்க அப்படி உட்காருங்க” என்றதும் கவியரசன் அமர்ந்தான்.
”என்ன மாமா பாட்டி என்றால் அவ்ளோ பிரியமா உங்களுக்கு?” என்று கேட்க ஆம் என்பதாய் தலை அசைத்தான்.
”இந்தாங்க இதை குடிங்க” என்று மாசா ஜூஸ் பாட்டில் நீட்ட அவன் யோசனையோடு பார்த்தான்.
”ஒரே டென்ஷனா இருக்கு பசிக்கும்ல அதன் முதலில் குடிங்க. ஜஸ்ட் ரிலாக்ஸ்” என்று அவன் தோளில் தொட அதில் ஒரு வித நட்பை உணர வாங்கி பருகினான்.
அவந்திக்காவையும் தன்ஷிகாவையும் ஒப்பிட்டு பார்த்தது. அவள் தான் வந்தாலும் உணவு கூட எடுத்து வைக்காமல் டிவியில் தான் கண்கள் இருக்கும் சாதம்வை என்ற பின்னும் டிவி பெட்டியில் கண்பதித்தே வைப்பாள். ஆனால் தன்ஷிகா என் முகம் பார்த்து ஜூஸ் எடுத்து நீட்டுகின்றாள்.
மனதை அடக்கு கவி அவந்திகாவிற்கு தாலி கட்டி இருக்க என்று அவளை தவிர்க்க “சரி நீ கிளம்பு” என்றான்.
” மாமா தனியா என்ன பண்ண போறிங்க நான் கூட இருக்கேன்” என்றாள் சட்டமாக.
“அத்தை மாமா தேடுவாங்க போ” என்றான்.
“அதெல்லாம் போன்ல சொல்லிடறேன் ” என்று போன் செய்து சொல்ல கவியரசன் துணையாக அங்க இருக்க தன்ஷிகா விழித்து கொண்டு இருந்தாள். நடுவில் அப்பத்தா இயற்கை உபாதை போக நர்ஸ் கூப்பிடாமல் தன்ஷிகாவே உதவி புரிய கவியரசன் மனமோ ஏதோ இழந்த வலியில் தவித்தது.
“தன்ஷி நீ கிளம்பி போ” என்று வலுக்கட்டாயமாக ஏழு மணியளவில் அனுப்பினான்.
அடுத்த நாள் ஆப்ரேஷன் என்றதும் கவியரசன் அங்கேயே இருக்க தன்ஷி போனதும் போன் செய்ய கவியரசன் போனோ ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.
மருத்துவமனையினை தொடர்பு கொண்டு அவனிடம் பேச சொல்ல அவனோ போனை எடுத்து காதில் வைத்தான்.
”மன்னிசுடுங்க மாமா உங்க போனுக்கு தான் ட்ரை பண்னினேன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துடுச்சு அதான். நான் தனியா இங்க வீட்டுக்கு வந்து இருப்பேனா என்று யோசிச்சு இருப்பிங்க அதான் நான் பாதுகாப்பா வந்துட்டேன் மாமா. அம்மா பேசனுமாம்” என்று கொடுத்தாள்.
”மாப்பிள்ளை காலையில் ஆப்ரேஷன் தன்ஷி சொல்றாரா?” மாமா வேணுமின்னா வர சொல்லவா? தனியா வேற இருக்கிங்க” என்றதும்
”அதெல்லாம் வேணாம் அத்தை” என இன்னும் கொஞ்சம் நேரம் பேசி வைத்து பெருமூச்சை விடுத்தான்.
போனை ஆன் செய்ததும் அவந்திக்கா போன் அழைப்பு இருக்கும் என்று யோசிக்க அவளோ அப்படி எல்லாம் ஒரு காலும் பண்ணவில்லை.
அவனாகவே போன் செய்து பேச அவந்திக்கா எடுக்கவில்லை. தான் வராமல் அங்கு இவள் தனியாக இருக்க நேருமே இதில் ஹனிமூன் வேறு செல்ல இருந்தவளின் மனம் என்ன ஆசையில் இருக்கும் சே இந்த சூழ்நிலை ஏன் இப்படி அமைக்கின்றாதோ என்று வருந்தினான்.
அதே நேரம் இங்கு அவந்திகா வீட்டில் காலிங் பெல் அடிக்க வந்து திறந்தாள்.
அங்கே நின்றவனை கண்டு பேயறைந்தது போல விழித்து நின்றாள்.
Interesting