💖 11
கவியரசன் மருத்துவமனையில் இருக்க அவந்திகாவோ கவியரசன் தான் ஒரு வேளை வந்து நிற்கின்றானோ என்று கோவத்தோடு கதவை திறக்க அங்கிருந்த அவளின் காதலன் மகேஷ் பார்த்து அரண்டு தான் போனாள்.
இவன் எங்க எங்க? புராஜக்ட் முடிய இன்னும் இரண்டு மாதம் என்று சொன்னான். இங்க திடுதிப்பென்று அதுவும் இங்க வந்து இருக்கான்.
“ஹாய்… உள்ள கூப்பிட மாட்டியா? வெளிய காக்க வைக்கிற?” என்று கண்ணாடியை கழற்றி பேசினான்.
“ம..மகேஷ்.. இது என் கணவர் வீடு… உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.
“உன்னை தெரியும் உன் வாழ்க்கை எப்படி போகுது என்றும் தெரியும்… வீடு நல்லா தான் இருக்கு. கிராமம் தான் ஆனா செமயா இருக்கு” என்று வீட்டில் வந்து அமர்ந்தான்.
“பேன் போடு அவந்திகா… பாரு வேர்க்குது” என்றான் அசட்டையாய்.
“மகேஷ் அவர் எப்ப வேணுமென்றாலும் வரலாம்” என்றாள் பதட்டமாய்.
“வரட்டும் அதுக்கு தான் காத்திருக்கேன். ஏன் டா ஒரு பொண்ணு உன்னை பிடிக்கலை என்று போட்டோ கூட பார்க்கவேயில்லை… அவ பிடிக்கலை சொல்ல வேற செய்தும் தாலி கட்டி இருக்க, நீ எல்லாம் மனுஷனா அப்படினு கேட்கறேன்” என்று அவந்திகா முகத்தினை ஆராய்ந்தபடி அவன் பேச அவந்திகாவோ கைகளை பிசைந்தபடி நின்றாள்.
அவளோ “மகேஷ் என்ன இருந்தாலும் அவன் தாலி கட்டிட்டான் அவனோடு தான் வாழனும்”
“என்ன சொன்ன? தாலியா… அவன் தாலி கட்டுவதற்கும் முன்ன உன்னை தொட்டவன் நான்.
பொண்ணு பார்க்கறாங்க மகேஷ் வீட்ல வந்து பேசு அப்படி சொன்ன சரி நானும் புராஜக்ட் முடிஞ்சதும் வந்து பேசறேன்னு சொன்னேன். ஆனா இப்படி நடுவில் பூ வைத்து இரண்டு மாதத்தில் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்கற…
உங்க வீட்டில் என்னை நீ விரும்பற என்று சொன்னது போல தெரியலை… கல்யாண போட்டோ எல்லாம் பார்த்தேன் ஜாலியா தான் போஸ் கொடுத்து இருக்க” என்றதும்
“மேக்… மேக்கப்…ல அப்படி இருக்கும் மகேஷ்” என்றாள்.
உள்ளுக்குள் மகேஷ் விரும்பி தான் கவியரசன் புகைப்படம் கூட பார்க்காது இருந்தாள். ஆனால் அவனை கண்ட பின் மகேஷ் எல்லாம் ஒரு அழகனே இல்லை என்றது மனம். அதுவும் தன்ஷிகா கவியரசனை பார்த்து ‘அடங்காத முடி யாருக்கும் வணங்காது போல அவரை மாதிரியே… அய்யோ சிரிச்சா மீசை துடிக்குது’ அப்படி இப்படி என்று வர்ணித்து சொல்ல பெரிய அழகனாக்கும் இவன் என்று தான் நிமிர்ந்தாள்.
ஆனால் கவியரசனை பார்த்த பின் மகேஷ் எல்லாம் இவனின் முன் தூசி என்றது மனம். அதனால் தன் காதலை பற்றி கவியரசன் போனதும் சொல்ல எண்ணி இருந்தவள் அதனை மறைத்து விட்டாள். மகேஷ் புராஜக்ட் என்று ஆறு மாதம் ஆகும் என்று செல்லியதால் அவன் வருவதற்குள் திருமணமே முடிந்திடும் தான் மாற்றான் மனைவி என்று சொல்ல மகேஷ் விலகிடுவான். அதன் பின் அவன் தாடி வைத்து திரிந்தாலும் தனக்கு என்ன என்று தான் விடுத்தாள்.
ஆனால் கவியரசன் தன்னை தன் அழகில் பொருட்படுத்தாது விலகி செல்வதை கண்டவளுக்கு பற்றி கொண்டது. அவன் சூழ்நிலை இவளை விட்டு விலகி இருக்க வைக்க, மகேஷ் கூட இருந்த நாட்கள் அவன் இவளை தேவதை அது இது என்று பிதற்றிய பேச்சுக்கள் எல்லாம் இம்சை செய்ய மகேஷ் போன் செய்து தனக்கு வேண்டா வெறுப்பாக திருமணம் ஏற்பட்டது என்று சொல்லி அவனோடு பேச செய்தாள்.
இன்று இங்கு வருவான் என்று எண்ணவில்லை அவள். கவியரசன் விலகிய கணம் இவனோடு பேச ஒரு துடுப்பாக உபயோகித்தாள்.
“என்ன அவந்திகா… நீயும் நானும் விரும்பற விஷயம் உன் கணவருக்கு சொல்லலாமா?” என்றான்.
“வேண்டாம்… அவருக்கு சொல்லாத வீட்டில் சொல்லிட்டா என்னை ஒதுக்கிடுவாங்க. நான் நான் அவர் கூட சேர்ந்து கூட வாழலை…” என்று அழுதாள்.
மகேஷ் யோசித்து இருந்தான்.
“சரி நான் கிளம்புறேன். நாளைக்கு திரும்ப கிளம்பனும். உன்னை பார்க்க தான் வந்தேன்” என்றவன் சென்றிட ஆனா இந்த நேரம் பஸ் இருக்காது என்று யோசித்து அவளை பார்க்க அவனின் எண்ணம் திகைத்து பயந்தாள்.
“இந்த இடத்துல இருப்பேன் ஆனா வேணாம் எப்படியாவது வர பஸ் லாரி பிடித்து போயிடுவேன் ” என்று கிளம்பிட அவந்திகா இதயம் சீரானது.
ஏற்கனவே இவனிடம் பெண்மை இழந்தவள் இன்றும் எங்கே அப்படி பங்கம் வந்திடுமோ என்றும் அதுவும் கவியரசன் எப்பொழுது வேண்டுமென்றாலும் வர நேரும் என்று பதறிய அவள் இதயம் மகேஷ் சென்றதை எண்ணி அவன் உண்மையாக விரும்பி இருப்பதாக எண்ணியது.
ஆனால் அவனோ தான் கொண்டு வந்த புல்லட் எடுத்து விரைந்தான். இன்றே அவந்திகாவை நெருங்கினால் தவறாக போயிடும் என்று காத்திருந்தான். அவன் அவந்திகா திருமணம் அறிந்து தான் இருந்தான்.
பெண்ணை விரும்பி அவள் தன்னை மறந்த வேளை வீடியோ எடுத்து கொண்டு திருமணம் என்ற முறையில் எங்கேனும் சென்று விட்டு அப்பெண் பணம் முடிந்த பிறகு அவளிடம் பேசி பணம் பறிப்பது தான் மகேஷ் வேலை. ஆனால் மகேஷின் போதாத நேரம் நிஜமாகவே புராஜக்ட் இருக்க அவனால் போக வேண்டிய கட்டாயம் ஆனது. அவனிடம் வீடியோவும் இல்லை. தான் அவள் சேர்ந்த அன்று அதனை எடுக்காதது அவந்திகாவின் நல்ல நேரம்.
தற்பொழுது ஒரு வாரமாக கவியரசனை நன்றாக மற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டான்.
அதனால் அவந்திகா கனிந்து பேசி சேர்ந்து புகைப்படம் எடுத்த பின் தன் சுய உருவத்தை காட்ட எண்ணினான்.
அவந்திகா கல்யாணம் ஆன பின் உண்மை காதலனாக வேடமிட்டு வந்து சென்றாயிற்று. இனி இவர்கள் உறவை சிக்கலாக்கி அவந்திகாவை தன்னோடு மீண்டும் பழக்கப்படுத்தி அவளை மிரட்டி பணம் பறிக்க எண்ணி நேரம் பார்த்தான் ஏற்கனவே அவந்திகா கவியரசன் உறவு சிக்கலாக இருப்பதை அறிந்து கொண்டான்.
அடுத்த நாள் ஆப்ரேஷன் முடிந்த பின் அவந்திகாவிற்கு போன் செய்து சரோஜா பாட்டியின் நிலவரம் சொன்னான்.
நான்கு நாள் மருத்துவமனை தான் இருக்க வேண்டி இருக்கும் என்று அவளை வர சொன்னான்.
மருத்துவமனை வந்த அவந்திகா பாட்டியை எல்லாம் பார்க்கவில்லை. கவியரசன் மேலே கோவமா திரிந்தாள்.
கவியரசன் தனியாக அவந்திகா இருப்பதை எண்ணி அவளின் தாய் மற்றும் தன்ஷிகாவோடு அனுப்பி வைத்தான். ஆம் அவர்கள் வந்து பார்க்க அவந்திகாவை அழைத்து போக சொன்னான்.
திரும்ப நான்கு நாட்கள் கழித்து கவியரசன் சரோஜா பாட்டியினை காண வரவும் தன்ஷி அவந்திகா விட்டு விட்டு வர கூடவே வந்தாள்.
தன்ஷி சரோஜா பாட்டியை அமர வைத்து குளிப்பாட்டி சேலை மாற்றி விட்டாள். அவந்திகா சேலை எடுத்து கொடுத்தோடு சரி… சரோஜா மனதில் பெரியவளுக்கு பதில் சின்னவள் தான் கவியரசன் குணத்துக்கு பொருத்தம்… என்பதை எண்ணி தன்ஷிகாவை பார்த்து அந்நொடி என்ன நினைத்தாரோ கவியரசனை அழைத்து சரோஜா சொல்ல சொல்ல ஒரு மெல்லிய கழுத்து சங்கிலியை எடுத்து கொடுக்க அவனும் தன் கழுத்திலிருந்தவையை எடுத்து கொடுத்தான்.
அதனை தன்ஷிகாவிடம் கொடுத்து “பொம்பளை பிள்ளை அடுத்து காலேஜிக்கு எல்லாம் போக போற இந்தா இத போட்டுக்கோ” என்று கொடுக்க தன்ஷிகா மறுக்க “கவியரசன் நீ போட்டு விடுப்பா” என்று சரோஜா அப்பத்தா சொல்ல மறுக்க முடியாது அவள் அருகே சென்றவன் கழுத்து வரை கொண்டு போனவன்… அவளின் கையில் வைத்து
“அப்பத்தா அன்பா தருது வாங்கிக்கோ” என்று நகர்ந்தான்.
தன்ஷிகா அப்பத்தா வலுக்கட்டாயமாக சொல்ல கழுத்தில் அணிந்தாள்.
வெளியே அவந்திகா ‘கிழவி நான் வந்து ஒன்றை மாதமாக போகுது ஒரு குண்டு மணி தங்கம் கொடுத்து இருக்கா… இவள் வந்து இரண்டு தடவை இருக்குமா தூக்கி கொடுக்குது’ என்று மனதில் திட்டி கொண்டு இருந்தாள்.
“தன்ஷி கிளம்பு என்னை விட்டுட்டுல போ” என்று அவந்திகா விரட்டி தான் அனுப்பினாள்.
இதில் பற்றாத குறைக்கு கவியரசன் தான் கொண்டு போய் விட செல்ல, அப்பத்தா சிறுநீர் பை நிரம்பி வெளிய செல்ல அவந்திகா உதவியை நாடி அவளை அழைக்க முனைந்தார்.
அவளோ காதில் ஹெட் செட் வேண்டுமென்றே மாட்டி கொண்டு வராது தவிர்த்தார்.
கவியரசன் வந்த பிறகு அப்பத்தாவின் நிலையை கண்டு செவிலியரிடம் கூறினான்.
அப்பத்தா அவந்திகா அழைத்து இருக்கலாமே என்றதற்கு அவள் கவனிக்க வில்லை என்பதை மட்டும் சொல்லிட அவன் அறியாததா… அவள் தான் கூப்பிட்டும் வர மறுத்து இருப்பா’ என்று யூகித்தான்
Very nice sister
Spr going 👌
Sadist avanthi😤😤
Story super super super super super super