Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்-12

நிலவோடு கதை பேசும் தென்றல்-12

💖 12

             அதிகாலை கவியரசன் எழுந்து பார்க்க இன்னமும் அவந்திகா அதே சோர்வில் இருக்க கவியரசன் காபி கலந்து எடுத்து வந்தான்.

திலகவதி கவனிப்பில் சரோஜா அப்பத்தா இருக்க கவியரசன் காலையில் எங்கும் செல்லாமல் அவந்திகாவை தன் தோளில் சாய வைத்து காபியை கொஞ்சம் கொஞ்சமாக புகட்ட அவந்திகா மெல்ல விழுங்கினாள். 


கவியரசனை கண்டவள் இவனின் அன்பிற்கு தான் தகுதியில்லை ஏன் தான் இந்த காதல் தனக்கு வந்ததோ… தற்பொழுது அதில் இருந்து மீள வழியறியாது இருக்கின்றேன்.

அவள் நினைத்து கொண்டு இருக்கும் வேளையில் குமட்டல் எடுக்க வேகமாக பாத் ரூம் சென்றாள்.

அவள் வாந்தி எடுத்த பின் வெளியே வந்து கட்டிலில் சரிய கவியரசன் “ஆஸ்பத்திரி கிளம்பு என்னாச்சுனு பார்ப்போம்” என்றதற்கு எதையும் யோசிக்காமல் கிளம்பி தான் நின்றாள். அவளுக்கு எதுவும் எண்ணிட்டு பார்க்க தோன்றாமல் கிளம்பி நின்றாள்.

   டாக்டர் பார்க்க டோக்கன் கொடுக்க காத்திருந்தார்கள்.
அவர்கள் டோக்கன் வர எழுந்து சென்றார்கள்.
உள்ளே தனக்கு ஒரு பூகம்பம் தரும் விஷயம் வருமென அறியாது கவியரசன் கூட சென்றான்.
டாக்டர் அவளை நார்மல் செக்கப் செய்து பரிசோதித்து அச்செய்தியை கூறினார்கள்.
“வாழ்த்துக்கள் அரசன் நீங்க அப்பாவாக போறிங்க… இனி இப்படி தான் அடிக்கடி வாந்தி வரும்… நான் டேப்லட் கொடுக்கறேன்” என்று டாக்டர் சொல்ல கவியரசனுக்கு பேரிடியாக தலையில் விழ அதிர்ந்தான்.

“அவங்க கொஞ்சம் வீக்கா இருக்காங்க கொஞ்சம் கேர் எடுத்து பார்த்துகோங்க டிராவல் தவிர்த்திடுங்க” என்றதற்கு கவியரசன் கண்கள் அதீத சினத்தில் அவந்திகாவை காண அவளுமே அதிர்ந்து தான் இருந்தாள்.

இப்படி தனக்கு கர்ப்பம் என்று சொல்வார்கள் என அவள் எண்ணி பார்க்கவில்லை. முதல் முறையிலே கர்ப்பமாக மாறும் என எதிர்ப்பார்க்கவில்லை அவள் உள்ளமோ கவியரசன் பார்வை வேறு தன்னை எரிக்க செய்வதை எண்ணி பயத்தில் ஒடுங்கி போனாள்.

காரில் அவளை ஏற்றி எதுவும் பேசாது ஓட்டினான்.
அவளும் எதையும் பேச பயந்து அமைதியானாள்.

தன் வீட்டிற்கு சென்றால் எதையும் பேச இயலாது என்று அவந்திகா தாய் வீட்டிற்கு வண்டியை செலுத்தினான்.

அவந்திகா மனம் அக்கணமே இனி தன் வாழ்வு கேள்விக்குறி தான். எப்படியும் கவியரசன் கூட இனி வாழ இயலாது என்று கண்ணீர் வடிந்தது.
மகேஷ் தன்னை ஏற்பானா? என்று பெரிய கேள்வி அவளுள் எழும்பியது.

தன் தாய் வீட்டில் நிறுத்தி இருவரும் உள்ளே வந்தார்கள். சேலை தலைப்பில் வாயில் வைத்து அழுதபடி அவந்திகா வர கவியரசன் மட்டுப்பட்ட கோவத்தில் இருந்தாலும் அவன் கோவம் தெரிந்தது.

“வாங்க மாப்பிள்ளை என்ன திடுதிடுப்புனு சொல்லாம….” என்றவரின் பார்வை அவந்திகா அழுத முகம் கண்டு
“என்னாச்சு….?” என்ற படி அவந்திகா தோளை தொட்டார்.

அவந்திகா அழுவதை நிறுத்தாமல் அப்படியே இருக்க கவியரசன் தான்
“உங்க பொண்ணு கர்ப்பமாக இருக்கா” என்றான் கட்டுப்படுத்திய கோபத்தோடு.

“அம்மாடி… அப்படியா சேதி… அதுக்கு எதுக்கு அழுவுற” என்று கற்பகம் கேட்டார்.

கனகவேலோ “உங்களுக்கு அதுல சந்தோஷம் இல்லையா? நீங்க கோவமா இருக்கிறது போல தெரியுது குழந்தை வேற கண்ணை கசக்குது” என்று கேட்டார்.

கவியரசனோ “உங்க பொண்ணுக்கும் எனக்கும் இன்னும் சாந்தி முகூர்த்தம் கூட நடக்கலை… அப்படின்ற பட்சத்தில் கர்ப்பமாக இருக்கா சந்தோஷ பட சொல்லறீங்களா? இல்லை எனக்கு கோவம் இருக்க கூடாதா? இதுல உங்க பொண்ணு குழந்தையா?” என்ற கேள்விகள் மெதுவாக தான் கேட்டான் ஆனால் அழுத்தப்பட்ட கோவத்தில் கேட்டு முடிக்க கனகவேல் கற்பகம் பேரதிர்ச்சியில் ஸ்தம்பித்தார்கள்.

கற்பகம் தான் மகளை முதுகில் சில பல அடிகளை வழங்கி “என்ன பண்ணி தொலைச்ச இதுக்கு யார் காரணம் சொல்லு… சொல்லு டி” என்று அடித்து துவைத்தார்.

“ம..மகேஷ்..னு காலேஜ் போனப்ப அடிக்கடி பழக்கம் மா. நானும் அவரும் விரும்பினோம். ஒரு முறை எல்லை மீறிட்டார். அவரும் நானும் உண்மையா விரும்பினோம். அவருக்கு ஏதோ வேலை விஷயமா வெளியூருக்கு போனார் அதுல என்னை பொண்ணு பார்க்க இவர் வந்தது சொல்ல முடியலை… அவர் வருவதுக்குள் கல்யாணம் ஆகிடுச்சு” என்று உண்மையை கூறினாள். ஆனாலும் தனக்கு கவியரசனால் சஞ்சலமாகி மகேஷை கைகழுவ எண்ணியதை மறைத்தாள்.

“நீ கர்ப்பமாக இருக்கிறது அவனுக்கு தெரியுமா? எதுக்கு நீ விரும்பியதை சொல்லி தொலைக்கலை?” என்று கற்பகம் கேட்டார்.

“நான் கர்ப்பமாக இருக்கிறது எனக்கு இப்ப தான் தெரியும். அவர் கடைசியா கல்யாணம் ஆகிடுச்சு என்றதும் கண்ணியமா ஒதுங்கிட்டார். நான் விரும்பியதை சொல்ல பயந்தேன் மா. நான் என்றைக்கும் இந்த வீட்டில் சத்தம் போட்டு பேசியது கூட இல்லை. மகேஷம் இல்லை என் காதலை எப்படி சொல்ல என்று பயந்து சொல்லலை மா” என்று சொல்லி அழுதாள்.

“பாவி மக முதலிலே சொல்லி தொலைக்க என்ன” என்று அடிகள் தான் அதிகமானது.

கனகவேல் மயங்கி சரிந்திட கவியரசன் நீரை தெளிக்க எழுந்த கனகவேல் கவியரசன் காலை பிடித்து, “அய்யா… மன்னிச்சுடுங்க… கல்யாணம் பண்ண இருந்தப்ப போட்டோ கொடுத்தேன் பாவி மக பார்க்கவே இல்லை.. எங்க எதிர்ல பார்க்க வெட்கப்படுது என்று தப்பா நினைச்சிட்டோம். ஆனா இவ ஒருத்தனை காதலித்து அவளை இழந்து இருப்பா என்று சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை சாமி… நீங்களே ஒரு முடிவு செய்யுங்க” என்று கை எடுத்து கும்பிட கவியரசன் நிலைமை தான் படு மோசமானது.

தந்தை போன்றோர் காலில் விழ தூக்கி நிறுத்தியவன் அவந்திகாவை பார்த்து

“அவன் நம்பர் இருக்கா?” என்றான்.

போனில் இருந்து எடுத்து கொடுத்தாள் அவந்திகா.
ரிங் போக “சொல்லு அவந்திகா… எப்படி இருக்க?” என்ற குரலில் ஏக கடுப்புடன் கவியரசன்
“அவந்திகா பற்றி பேசனும் அவ அப்பா வீட்டுக்கு வா” என்றான்.

“ஹலோ… நான்.. நீங்க யாரு என்றான்.

” அவளுக்கு தாலி கட்டியவன்” என்றதும் மகேஷிற்கு வேர்த்தே விட்டது.

“அவளை மறந்து நான் என் வேலையில் கவனம் செலுத்தறேன். எதுக்கு என்ன இழுக்கறீங்க” என்றான்.

“உன் குழந்தை அவ வயிற்றில் வளருது…” என்றான் கவியரசன்.

“லுக் அது என் குழந்தை என்றதற்கு என்ன ஆதாரம்? உங்க இஷ்டத்திற்கு பேசாதிங்க” என்றான் மகேஷ்.

“இந்த நிமிடம் வரை என் சுண்டுவிரல் அவ மேலை படலை… ” என்ற உண்மையை கூறினான். 

“என்ன இப்படி சொன்னா நம்பிடுவேனா… உங்களுக்கு கல்யாணமாகி ஒன்றை மாதம் ஆகுது” என்றான் திமிராக.

கவியரசன் கூலாக “அவ கர்ப்பமாக இருக்கிறது இரண்டு மாதம் அதை விட ஆதாரம் அவ குழந்தை பிறந்தா டிஎன்ஏ டெஸ்ட் பண்ணினா உன் குழந்தை என்று சட்டரீதியாக என்னால ஆதாரம் திரட்ட முடியும். எப்படி வசதி…?
 
  நேரா அவந்திகா வீட்டுக்கு வருவியா போலீஸ் ஸ்டேஷன் போகனுமா” என்றான்.

“சார் எதுக்கு போலீஸ் அது இதுனு மிரட்டறிங்க எனக்கு அவ கல்யாணம் ஆகறது தெரியாது.. தெரிந்தா வீட்டுக்கு வந்து பேசி இருப்பேன். சரி நேர்ல பேசறேன்… ஆனா நான் இன்னமும் வெளியூரில் இருக்கேன் வர கொஞ்சம் நாளாகும் அவந்திகாகிட்ட பேச முடியுமா?” என்று கனிவாக கேட்க கொடுத்து வெளியேறி நின்றான்.

அவந்திகா மகேஷ் இருவரும் அவர்களுக்குள் பேசி அணைத்தாள்.

கவியரசன் தான் “நான் ஊர் அறிய விவாகரத்து வாங்கிக்கறேன் நீங்க உங்க பெண்ணே அவனுக்கு கட்டி வையுங்க. இதுக்கு இது தான் முடிவு” என்றான்.

“எங்க மானம் போகுமே…. கல்யாணமாகி வயிற்றில் குழந்தைனா எல்லாரும் உங்களை தான் அப்பாவா எண்ணுவாங்க அப்படி இருக்க நாங்க இப்படி செய்தா…?”

“அதுக்காக என்னால அப்பாவா இருக்க சொல்லறிங்களா? அவன் இவளை விட்டுட்டு ஒடினா கூட பரவாயில்லை அவன் தான் வர்றேனு சொல்றான்” என்றதும் கனகவேல் பேசவே பயந்து விட்டார்.

    பெண் பிள்ளை பெற்று அவளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாது இப்படியாகி போன பின் அதுவும் பெரியவள் வாழ்வை வைத்து தானே சின்ன மகளின் வாழ்வு அமையும்.
தற்போது தன்ஷிகா இல்லாமல் இருந்தாள்.

  அதாவது தன்ஷிகா பக்கத்து ஊரில் இருக்கும் சில கல்லூரியில் அப்ளிக்கேஷன் கொடுக்க வாங்க சென்று இருந்தாள். அதனால் என்னவோ இந்த விஷயம் அறியாமலே போனாள்.

அவளிடம் பகிர்ந்து கொள்ள அவளுக்கு பக்குவம் இல்லை என்று பெரியவர்கள் எண்ணினார்கள்.
அவந்திகா அவள் தனி அறையில் போனை எடுத்து சென்றாள். அங்கே மகேஷ் சொல்லிய நேரத்தில் போன் செய்தாள்.

“மகேஷ் நான் கர்ப்பமாக இருக்கேன்… எங்கடா இருக்க…” என்றதற்கு

“வெளி ஊரு உனக்கு சொன்னா தெரியாது… ஆமா நீயும் அவனும் இப்ப வரை கணவன் மனைவியா நடந்துக்கலையா?” என்றான்.

“இல்லை முதலில் கொஞ்சம் புரிந்து கொண்டு வாழ ஆரம்பிக்க இருந்தார் நடுவுல சில இன்சிடெண்ட் அப்பறம் அவங்க அப்பத்தா உடம்பு முடிலை அதனால தவிர்த்து கொண்டே போயிடுச்சு. எனக்கே கர்ப்பம்னு தெரியாது. இப்ப அவரே நம்மை சேர்த்து வைக்கிறார். நமக்கு வேலை மிச்சம். தயவு செய்து சீக்கிரம் வா” என்று அவந்திகா கூறினாள்.

“அவந்திகா அதெல்லாம் சரி தான் ஆனா ஒரு கல்யாணம் ஆனா பொண்ணு அதுவும் கர்ப்பமாக இருக்கறவளை எங்க வீட்டில் எப்படி சேர்த்துப்பாங்க” என்றதும் அவந்திகா
“அப்போ என்னை ஏற்றுக்க மாட்டியா” என்று கேட்டு முடித்தாள்.

” ஏய் அப்படி சொல்ல வரலை குழந்தை தான் இடிக்கும். எங்க வீட்ல நான் இல்லாதப்ப உன்னை கட்டி கொடுத்துட்டாங்க என்று சொல்லிப்பேன் ஆனா குழந்தை தான் எங்க வீட்ல ஏற்றுக்க யோசிப்பாங்க. அவன் குழந்தையென்ற சந்தேகம் வரும்ல.”

“அதுக்கு நான் என்ன செய்ய… நீ தானே அன்றைக்கு என்னை என்னென்னவோ பேசி உடன்பட வைச்ச” என்று பேசினாள்.

“அது இப்ப பிரச்சினை இல்லை… குழந்தை வேணாம் அவ்ளோ தான்”
குழந்தை வேணாம்னா எப்படி ? எங்க வீட்ல அபார்ஷன் எல்லாம் பண்ண விடமாட்டாங்க. நான் இருக்கற நிலைமைக்கு ஹாஸ்பிடல் கூட தனியா போக முடியாது.” என்று வார்த்தையை விட்டுவிட்டாள்.

“இங்க பாரு அவந்திகா நான் ஒரு ஐடியா சொல்றேன் கேளு… என்னால உடனடியா அங்க வர முடியாது. அதனால் என் பிரெண்ட்கிட்ட சொல்லி கருகலைப்பு மாத்திரை வாங்கி உங்க வீட்டுக்கு வெளியே மாடத்துல வைச்சிடறேன். நீ யாருக்கும் தெரியாம எடுத்து சாப்பிடு. அதுக்கு பிறகு தானா கலைந்து விட்டது என்று சொல்லிடலாம்.

நான் வந்த பிறகு எங்க வீட்ல பேசி சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாம் சரியா” என்று நயவஞ்சகமாக பேசினான்.

“மகேஷ் ஏதாவது தப்பா ஆகிட்டா… பயமா இருக்கு” என்று ஒரு பாவமும் அறியாத குழந்தையை கொல்வதை எண்ணாமல் கேட்பாள்.

“ஒன்றும் பயம் இல்லை… நாம கல்யாணம் முடிஞ்சி எத்தனை குழந்தை வேணா பெற்றுக்கலாம்… நான் நாளைக்கு காலையில் மருந்து கொடுத்து உங்க வீட்டு மாடத்துல இருக்கும் படி சரியா வைக்க சொல்லறேன் செல்லம்” என்று அணைத்தான்.

   அவந்திகாவுக்கும் மகேஷ் கூறியதில் வேறெந்த சூழ்ச்சியும் அறியாது தலையட்டினாள்.

‘குழந்தை டிஎன்ஏ அது இதுனா டா மிரட்டுற… உன்னை விட அவந்திகா பத்தி எனக்கு தெரியும். அவ இன்னும் என்னை தான் நம்பறா…. முதலில் குழந்தை கலைச்சிட்டு அதுக்கு பிறகு உனக்கு பதில் தர்றேன் டா’ என்று மகேஷ் பக்கத்து ஊரிலிருந்து கணக்கிட்டு இருந்தான்.

இங்கு கவியரசன் ஒரு பொண்ணு காதலித்தது தப்பா? தாய் தந்தையிடம் கூட சொல்ல முடியாத அளவுக்கு தான் இன்னமும் சமூகம் இருக்கா? அதனால பாதிக்கப்படுவது அடுத்தவர் என்பது ஏன் அவர்கள் புரிந்து கொள்வது இல்லை என்று தன் வீட்டுக்கு வந்து யோசித்தவன் அவந்திகா கர்ப்பமாக இருக்க சாப்பிட வேண்டிய மாத்திரைகள் எல்லாம் பார்த்தவன் மனிதாபிமான அடிப்படையில் நாளை கொடுக்க எண்ணினான்.

அவந்திகா கர்ப்பமாக இருப்பதை மட்டும் தன்ஷிகாவிடம் சொல்ல தன் அக்கா குழந்தையை வரவேற்க ஆயத்தமானள்.
அவந்திகா முகம் சோகம் மட்டுமிருக்க தன்ஷிகாவிற்கு மனதில் நெருடியது.

அம்மா கற்பகமோ முதல் பிள்ளை உண்டாகி இருக்கா அதான் என்று சொல்லிட விட்டுவிட்டாள்.

அடுத்த நாட்கள் கவியரசன் மாத்திரை கொண்டு புறப்பட்டான்.
அவந்திகா அதிகாலை கோலமிட செல்வதாக சென்று மாடத்தில் இருந்த கருகலைப்பு மாத்திரை எடுத்து கொண்டாள்.

ஒன்பது மணிக்கு வந்த கவியரசன் மாத்திரை கொடுக்க வாங்கியது தன்ஷிகா தான். அதில் இருக்கும் காலை மதியம் இரவு என்று சாப்பிட்ட பின் போட வேண்டிய மாத்திரையை எடுத்து அவந்திகா அறைக்கு சென்றாள்.

அந்நேரம் தான் நீரின் உதவியோடு அவந்திகா கருகலைப்பு மாத்திரை விழுங்கியிருக்க, கவியரசன் கொடுத்த சத்து மாத்திரையை தன்ஷிகா கொடுக்க அதையும் விழுங்கினாள்.

உண்ட அரை மணி நேரத்தில் மகேஷ் எதிர்பார்த்த அந்த குரூரம் நடந்தது.
அவந்திகா கரு கலைந்தது.

தன்ஷிகா கவியரசன் கொடுத்த மாத்திரை தான் காரணமோ என்று அவன் மீது கோவம் கொண்டாள்.
தெரிந்தோ தெரியாததோ தன்ஷிகா கவியரசன் மீது கோவம் கொண்டாள்.

2 thoughts on “நிலவோடு கதை பேசும் தென்றல்-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *