💟13
தன்ஷிகா எதுவும் புரிந்தும் புரியாத வயதில் கவியரசனிடம் கேள்வி கேட்கவில்லை ஆனால் குழந்தை கரு கலைந்ததற்கு கவியரசன் கவலை கொண்டதாக தெரியவில்லை என்பதை நன்றாக உணர்ந்தாள்.
தன்ஷிகா அதே நேரத்தில் மதிப்பெண் பெற்ற பள்ளியில் சென்ற சமயம் அவந்திகா மருத்துவமனை இருந்து வந்திருந்தாள்.
மகேஷ் அவந்திகாவிடம் போன் செய்து எங்க வீட்ல கல்யாணம் ஆனவளை எப்படிடா கட்டி வைக்க அதெல்லாம் முடியாது என்று பிடிவாதமாக சொல்றாங்க அவந்திகா. குழந்தை தான் கலைந்து விட்டதே நீ.. நீ அவன் கூடவே வாழு… எங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க. அந்த பொண்ணு 2மாதத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தா நீ வர்ற வரை நாங்க பார்த்து இருப்போமே சொல்றாங்க.. சாரி அவந்திகா…” என்றதும் அவந்திகா மயங்கி சரிந்தாள்.
கவியரசன் வந்து அவளை பார்க்க கனகவேல் தான் மகளை தூக்கி எழுபபி மகேஷ் சொன்னதை சொல்லி அழுதாள்.
கவியரசன் மீண்டும் மகேஷ் எண்ணிற்கு அழைக்க அதுவே சுவிட்ச் ஆப் என்று வந்தது.
அவந்திகா எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
‘குழந்தை தான் இல்லையே இனி என்ன செய்ய நீ அவனோடு வாழு. நான் உன் வாழ்வில் தலையிட மாட்டேன். நீயும் என்னை தேடாதே’ என்று இருக்க கவியரசனுக்கு குழந்தை இல்லைனு இவனுக்கு எப்படி தெரியும் வேண்டுமென்றே இந்த மெஸஜ் தனக்கு அனுப்பியது போல உணர்ந்தான். ஆனால் இந்நிலையில் அவந்திகா வற்புறுத்தி கேட்கவும் மனமில்லை அவனுக்கு.
கனகவேல் கற்பகம் காலில் விழுந்து மகளை ஏற்று வாழ கெஞ்ச அவந்திகா மனம் மாறுவதாக சொல்ல, கவியரசன் ஒரு மாதம் போகட்டும் வந்து கூட்டிட்டு போறேன் என்று சென்றான்.
“அப்பறம் கொஞ்ச நாள் யோசிச்சேன் தன்ஷிகா. காதலிக்காத ஆண்கள் இருக்காங்களா? இல்லை பெண்கள் இருக்காங்களா..?. சரி கெட்டது இதோட முடிந்தது என்று அன்றைக்கு அவந்திகா கூப்பிட வந்தேன். ஆனா எனக்கு உங்க அக்கா மேல முழு வெறுப்பும் வந்தது அன்றைக்கு தான். அன்னிக்கு அன்னிக்கு என்ன ஆச்சுனா…” என்றவனின் பேச்சில் கேட் சவுன்ட் கேட்க நிறுத்தினான். அங்கே சென்று பார்த்திட கேஸ் வாசம் வீச கீழே ஓடினான்.
“என்னாச்சு திலகவதி அக்கா கேஸ் ஆப் பண்ணாலையா பாருங்க… எப்படி வீசுது” என்றபடி வீட்டின் ஜன்னலை திறந்து வைத்தான். கதவு திறந்து காற்று வீச அதன் பின் உணர்ந்தவனாக அவந்திகாவை தேட அவளோ சுவாதினமாக அறையில் இருப்பது புரிந்தது.
தன்ஷிகா கவியரசன் தங்கள் அறைக்குள் வந்தார்கள்.
“அப்போ அக்கா காதலித்து அதனால கர்ப்பம் ஆனா என்று உங்களுக்கும் அக்காவுக்கு இந்த விலகல் அப்படி தானே. எங்க அப்பா அம்மாவிற்காக அவளை கஷ்டப்பட்டு வாழ எண்ணி அது முடியாம என்னை பார்த்ததும் பிடித்தது அதனால என்னையே கட்டிக்க நினைச்சிட்டீங்க அப்படி தானே?” என்று தன்ஷிகா கேட்க
தன்னவளுக்கு தான் சொல்லியதே போதும் இதற்கு மேல் என்றால் அவளும் தாங்கி கொள்வாளா? என்று கவியரசன் சொல்லாது விடுத்தான்.
“உன்னை பிடிக்கும் தன்ஷிகா அதுக்காக இந்த நிகழ்வை எனக்கு சாதகமாக நான் எடுத்துக்கலை… அதுக்காக அடுத்து என்ன நடந்தது என்று சொல்லவும் என்னால முடியலை.
நீ எங்க உன் அக்காவை இங்கிருந்து அனுப்பினா என் கூட சுத்தமா பேச மாட்ட அதான் இங்க இருக்க வைத்தேன். இனி நம்ப வாழ்வில் அவ தேவையில்லை அவளை உங்க அப்பா அம்மா கூட அனுப்பிடவா?” என்று கேட்டான்.
” ஏன் மாமா ஏற்கனவே அக்கா வாழ்வை தட்டி பறித்து விட்டேன்னு இருக்கேன் இதுல வந்த ஒரு வாரம் கூட இல்லை அக்கா இந்த வீட்டில் இருந்து துரத்திட்டேனு சொல்ல வைக்க பார்க்கிறியா? நீ ராமனா இரு ஆனா ஊருக்கு நீ முருகன் தான். என்னால் அக்காவை அனுப்ப முடியாது அவ வாழ்வை பாழாக்க முடியாது” என்று அறைக்கதவை திறந்து மாடிக்கு சென்றாள்.
அவன் சொல்லாமல் விட்ட சில இன்னும் இருக்க நின்று கேட்டிருக்கலாம். ஆனால் விதி அவள் கேட்காமல் செய்து விட்டது.
இங்கு கவியரசன் போகும் அவளையே பார்த்து ‘நீ வார்த்தைக்கு வார்த்தை உங்க அக்கா வாழ்க்கை பாழாக்க கூடாது’ என்று நினைக்கிற ஆனா அவ அப்படி நினைக்கலையே ஷிகா…. என்று அன்று நடந்தவையை நினைத்து பார்த்தான்.
தான் ஒரு மாதம் அப்பத்தாவுடன் உடல்நிலை பாதிக்கப்பட்டதை சாக்காக சொல்லி அவள் அம்மா வீட்டில் இருக்கட்டும் என்று கவியரசன் அவந்திகாவை விட்டு விட்டு வந்தவன் ஒரு மாதம் யோசித்து அவந்திகாவோடு வாழ முடிவுடன் வந்தான்.
அவந்திகாவிற்கு ஒரு வாய்ப்பு வழங்க செய்தான்.
சொல்லாமல் கொள்ளாமல் அன்று வந்தான். அவந்திகா வீட்டை நெருங்க கனகவேலிற்கு போன் செய்து தான் வருவதாகவும் அவந்திகா அழைத்து செல்வதாகவும் சொல்ல ஒரு திருமணத்திற்கு கிளப்பினார்கள் மகளை வழியனுப்ப என்று திருமணம் செல்லாமல் திரும்ப கவியரசன் வீட்டுக்கு வரும் நேரமும் ஒன்றாக போனது.
“மாப்பிள்ளை கொஞ்சம் வீட்டில் அவந்திகா தன்ஷிகா இருக்காங்க பேசிட்டு இருங்க வந்திடுவோம்” சொல்ல கவியரசன் வீட்டில் நுழைந்தான்.
தான் வந்தது கூட அறியாது தன்ஷிகா அறையை பார்த்தபடி நகம் கடித்து கலவரத்தோடு இருந்தாள் அவந்திகா.
“அவந்திகா….” என்றதும் அதிர்ந்து திரும்ப கவியரசனை கண்டதும் பயத்தின் விளிம்பிற்கே சென்றாள்.
உடல் உதற வேர்த்து கொட்ட கண்கள் திருட்டு தனத்தின் உச்சத்தில் இருக்க அவந்திகா தன்னை வரவேற்க கூட செய்யாது அறையை தன்னை மாறி மாறி பார்க்க கண்டு
“என்னாச்சு” என்றவனுக்கு பதில் தர யோசித்தாள். கவியரசன் ஏதோ உள்ளுக்குள் சத்தம் கேட்க சட்டென நேரம் விரையம் செய்யாது கதவை திறந்தான்.
அங்கே தன்ஷிகா தாவணி ஒரு ஆடவன் கையில் வைத்தப்படி நெருங்க கண்டான்.
கவியரசனை கண்டு பயந்து ஒட பார்க்க கவியரசன் கைகள் அந்த ஆடவனை அடித்து வெளுத்தான்.
ஒரு கட்டத்தில் அகப்படாமல் அவன் ஒட தாவணி எடுத்து தன்ஷிகாவிற்கு போர்த்தி விட்டு கன்னம் தட்ட அங்கிருந்த பாலில் மீதி மாத்திரை கரைசல் கண்டு மயக்கம் கொண்டதை அறிந்து வெளியேறினான்.
தங்கள் வீட்டில் இருந்து ஒரு ஆடவன் ஒடுவதை கனகவேல் கற்பகம் கண்டு உள்ளே பதறி வர அவந்திகாவை அறைந்து நின்றான் கவியரசன்.
“யார் அவன்? எதுக்கு தன்ஷிகாவை நெருங்கினான் சொல்லு” என்ற கர்ஜனையில் அவந்திகா உண்மை சொன்னாள்.
“அது அது தான் மகேஷ். நான் நினைச்ச மாதிரி மகேஷ் நல்லவன் இல்லை. எனக்கு கர்ப்பம் கலைய மாத்திரை கொடுத்தான்” என்று அன்று நடந்தவையை சொல்லி பிறகு கொஞ்ச நாள் தொடர்ச்சியாக மகேஷ் போன் செய்தேன் என்னை ஏற்றுக்க சொல்லி கெஞ்சினேன். முதலில் அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்க என்று சொல்லி என்னை கட் பண்ண நினைத்தான். நான் தினமும் போன் செய்யவும். அன்னிக்கு வீடியோ கால் செய்தேன்.
அப்ப தான் அவன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தினான்.
அவன் அழகா இருக்க என்று தான் என்னிடம் பழகினானாம். அவனுக்கு நான் கிடைத்ததும் என்னை கை கழுவ பார்த்து இருக்கான். அதுக்கு ஏற்றார் போல எனக்கு கல்யாணம் என்றதும் நிம்மதியாக தான் இருந்தேன் என்று சொன்னான்.
எனக்கு அதை கேட்டு கோவம் வந்துச்சு. அதனால போலீஸ் கம்ப்ளெண்ட் கொடுப்பேன் டா என்று மிரட்டி திட்டினேன். அதுக்கு அவன்…. அவன்… நானும் அவனும் சேர்ந்து இருந்ததை வீடியோ எடுத்து வைச்சிருக்கேன். நீ போலீஸ் போ நான் நெட்ல போடறேன். போலீஸ் பிடிக்கறதுக்குள்ள உன் வீடியோ உலகம் முழுக்க பார்க்கும் என்று மிரட்டினான். நான் அதுக்கு பயந்து அப்படி செய்யாதே என்று கெஞ்சி நான் போலீஸ் போக மாட்டேன் சொன்னேன். அந்த நேரம் தான் தன்ஷிகா குளிச்சிட்டு முடி உலர்த்திட்டு இருந்தா.. அவன் தன்ஷிகாவை பார்த்து அவ யாரு உன் தங்கைனு சொல்வியே அவளா சம்மந்தமே இல்லாம கேட்டான்.
நான் ஆமா சொல்ல அதுக்கு மகேஷ் ‘உன்னை விட்டுடறேன். உன் வீடியோ டெலீட் பண்ணறேன் ஆனா எனக்கு அதுக்கு பதில் உன் தங்கை வேணும் கேட்டான். அப்பா அம்மா சேர்ந்து ஊர் திருமணத்திற்கு போகவும் அவன் தான் தன்ஷிகா மாத்திரை கலந்து கொடு உன் தங்கைக்கு எதுவும் தெரியாது நான் விரும்பியதும் நடக்கும் உனக்கும் வீடியோ அழிஞ்சா போதும் உன் தங்கைக்கு எதுவும் தெரியாது என்று சொன்னான்” என்றதும் கவியரசன் கைகள் அவந்திகாவை கண் மண் தெரியாமல் அடிக்க கனகவேல் கற்பகம் பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாது இருந்தார்கள்.
தங்கள் இரத்தத்தில் உதிர்த்தவளா இவள் என்று ஏற்க மனமின்றி நிற்க
“அவனிடம் என் வீடியோ இருக்க தான் பயந்து…”
“சீ… வாய மூடு… உன்னை கூட்டிட்டு போக வந்தேன் பாரு… நீ எல்லாம் மனிஷியே இல்லை… எந்தளவு சுயநலம் பிடிச்சு இருக்க..” என்று சொல்ல கற்பகம் கனகவேல் அவந்திகாவை அடித்தனர்.
“நீ முதல் தவறு செய்த பொழுதே உன்னை அடக்கி வைச்சிருக்கனும்… இப்ப என் தேவதையோட வாழ்வை நாசமாக்க பார்த்தல…” என்று கழுத்தை நெறித்து சொல்ல அவந்திகா கவியரசனை தன்ஷிகாவை ‘என் தேவைதை’ய என்றதும்
“என்ன சொன்னிங்க… தன்ஷி உங்க தேவதையா? பார்த்தியா மா என்னை குறை சொல்லிட்டு இருந்த உன் மாப்பிள்ளை தன்ஷிகாவை தேவதைனு சொல்றார். இதுல நான் செல்பிஷ் சொல்லறிங்க” என்று பேச்சை திசை திருப்ப
“இங்க பாருங்க சார் வீட்ல பொண்ணு போட்டோ பார்க்காம நேர்ல பார்க்கனும் என்ற ஆர்வத்தில் வந்தேன். எனக்கு தன்ஷி தான் பொண்ணு நினைத்தேன் 5 நிமிடத்தில் அவந்திகா தான் பொண்ணுனு தெரிந்திடுச்சு. அவந்திகா இப்படி ஒரு சீப் கேரக்டர் என்று தெரிந்து இருந்தா அன்னிக்கே உங்க சின்ன பொண்ணை கட்டி கொடுங்க என்று கேட்டு இருப்பேன்.
பொண்ணா சார் இது? இனி இவ எனக்கு மனைவி இல்லை நான் உங்களுக்கு மாப்பிள்ளையும் இல்லை. இந்த ஜென்மத்தில் தன்ஷிகாவை நினைத்து கொண்டு கூட வாழ்ந்துடுவேன் ஆனா இவ இனி செத்து போனதுக்கு சமம்” என்று பேச கனகவேல் கற்பகம் இருவருமே கலங்கினார்கள்.
” அய்யா நாங்க உங்க காலில் விழுந்து கேட்கறோம் இதெல்லாம் வெளிய தெரிந்தா சின்னவ வாழ்வும் நாசமா போயிடும். கொஞ்சம் கருணை காட்டுங்கள்… இந்த கழுதைக்கு எங்க கையாள விஷயம் வைத்து கொல்லறோம். சின்னவ இப்ப தான் காலேஜிக்கு சீட்டு வாங்கி போட்டு இருக்கா இந்த அசிங்கம் எல்லாம் தெரிந்தா ரோட்டில் போறவன் எல்லாம் கை இழுப்பான்” என்று கலங்கி பேச கவியரசன் மனம் மாறியது.
அடுத்த நாள் எதர்ச்சியமாக மாடத்தில் இருக்கும் பேப்பரை கண்டு கவியரசன் பார்க்க நேர அதில்’என்னைய ஓட வைச்சிட்டான் அவன். உன் தங்கையை அடைஞ்சி அவன் முகத்துல கரி பூசறேன்’ என்று மட்டும் இருக்க கவியரசன் அதனை கையில் எடுத்து கொண்டு கனகவேல் கற்பகம் நோக்கி சென்று பேசினான்.
“சார் உங்களுக்காக இல்லை என்றாலும் இந்த இடத்திலேயே இப்படி ஆனதை பார்த்து ஒரு முடிவு சொல்றேன். உங்க சின்ன பொண்ணை சென்னைல படிக்க வையுங்கள். இங்க தன்ஷிகாவிற்கு ஆபத்து தான். உங்க பெரிய பொண்ணு வீடியோ கிரைம் போலீஸிடம் கொடுத்து டெலீட் பண்ண ஏற்பாடு பண்ணறேன். அவந்திகா உங்க கண்காணிப்பில் வையுங்க” என்றதும் அதே போல இரு தினத்தில் தன்ஷிகா சென்னையில் ஒரு விடுதியில் கல்லூரியில் சேர்த்து விட்டான். அவந்திகா போன் தொடர்பே முற்றிலும் ஒழித்தான்.
மேலும் ஒரு நாள் மாடத்தில் ‘உன் தங்கை ஒளிந்து வைச்சிருக்கிங்க எப்ப வந்தாலும் நான் அவளை சீண்டாமல் விட மாட்டேன்’ என்று இருக்க கவியரசனுக்கு இங்கே அவந்திகா இருக்க தானே இப்படி கடிதம் போடுகிறான் என்று புரிய கனகவேல் அதே நேரம்
“அய்யா அவந்திகாவை உங்களோட கூட்டிட்டு போங்க இங்க இருந்தா அவன் தொந்தரவு இருக்கும். பொண்டாட்டியா கூட்டிட்டு போக வேணாம். அங்க வீட்டு வேலைக்கு ஒத்தாசையாகவாது கூட்டிட்டு போங்க” என்று கெஞ்ச
கவியரசன் இவள் அங்கு வந்தால் ஒத்தாசை அல்ல உபத்திரம் என்று எப்படி சொல்ல? இருந்தும் இவள் மூலமாக அவனுக்கு தன்ஷிகா இடம் கண்டறிய கூடும் என்று அவந்திகாவை இவனின் பார்வை வட்டத்தில் வைக்க எண்ணி வேறு வழியின்றி அழைத்து சென்றான்.
கவியரசன் இல்லாத நேரம் திலகவதி பார்வையில் இருப்பாள்.
இன்று வரை தன்ஷிகா இருந்த இடம் கூட அறியாது பார்த்து கொண்டான்.
தன்ஷிகா மேலே இருந்த காதல் அவன் அறியாது என் தேவதை என்றதும் கனகவேல் கற்பகம் பிற்காலத்தில் pg முடித்து வந்த பொழுது அவர்களாகவே தான் கவியரசனுக்கு தன்ஷிகாவை மணம் முடித்து கொள்ள கேட்க கவியரசன் யோசித்தான்.
எப்படியும் அவந்திகாவோடு வாழ அவன் எண்ணம் செல்லவில்லை. அதே சமயம் வேறு பெண்ணை நாடவும் மனமில்லை தன்ஷிகா என்றதும் அவன் தன்ஷிகா ஆசை அறிந்து அவ ug முடிக்கட்டும் பிறகு இதே எண்ணம் உங்களுக்கு இருந்து கட்டி தர உங்களுக்கு சம்மதம் என்றால் கல்யாணம் செய்து கொள்வேன் என்றான்.
தன்ஷி மேற்கொண்டு படிக்க இதோ 5வருடம் கடந்து காத்திருந்து கை பிடித்தான்.
அவந்திகா கவியரசன் விவாகரத்து 3 வருடத்திற்கு முன் என்றோ சட்டபிரகாரமாக முடிந்தது.
இங்கு அவந்திகா ஒரு பணிப்பெண்.
தன்ஷிகா தான் அக்காவை விரட்டினால் மனம் வாடும் என்று கொஞ்ச நாள் இருக்கட்டும் என்று இருந்தார்கள்.
கவியரசன் பாதி சொல்லி முடித்து விட மீதி கேட்காதது எண்ணி நல்லது என்று எண்ணி கொண்டான்.
முழுவதுமே சொல்லி இருக்கலாம்.
அக்கா மேல் வைத்த பாசம் அக்கா தன்னிடம் வைக்கவில்லை என்று தன்ஷிகா மனம் வாடும் என்று விட்டுவிட்டான்.
சொல்லியிருந்தால் தன்ஷிகா இன்றே தன் அக்காவை விரட்டி இருப்பாள்.
அவந்திகாவோ கடைசியாக திலகவதி ஊருக்கு சென்ற சமயம் பல் வலி என்று செல்ல நேர்ந்திட மகேஷ் அக்கணம் கண்டு அவனிடம் பேச போக
“அவனோ நான் வீடியோ என்று சும்மா மிரட்டினேன் அவந்திகா. உன் கூட தான் வாழ முடியலை அதான் உன் தங்கை உன்னை போல இருந்தா அதனால அவளையாவது கல்யாணம் செய்ய யோசிச்சேன் ஆனா என் மூளை நீ மிரட்ட அந்த கவியரசன் மிரட்ட என்று நானும் தப்பா நடக்க நினைச்சிடடேன். மன்னிச்சுடு” என்று கெஞ்ச அவந்திகா ஆள் சேர்ந்த பலத்தில் தான் வேலைக்காரி போல மாட்டிற்கு தொழுவம் கூட்டுவதில் இருந்து இப்படி கஷ்டபட கவியரசன் காரணம். அவன் விரும்பும் தன்ஷிகா பழி தீர்க்க மகேஷ் உதவ கேட்க அவனும் இசைந்தான்.
அன்றே ஒரு சின்ன அலைப்பேசி வாங்கி அவளிடம் கொடுத்து விட்டான்.
அவந்திகா மகேஷ் கூட்டு இன்றும் இருப்பதை அறியாது இருந்தான் கவியரசன்.
Omg 😲 interesting
Nllaaaa akka…..