💖14
தன்ஷிகா உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க கவியரசனோ தான் அவளோடு ஒரே மெத்தையில் படுத்து இருக்க அதனால் உறக்கமின்றி தன்ஷிகா இருக்கின்றாளோ என்று எண்ணினான்.
“ஷிகா நான் வேணுமின்னா கீழே படுத்துக்கவா… உனக்கு அன்கம்பர்ட்டபிளா இருக்கா?” என்றான் கவியரசன்.
” ஏன் மாமா அக்காவே அபார்ஷன் மாத்திரை எப்படி மனசார சாப்பிட்டுச்சு எனக்கு கேட்கவே கஷ்டமா இருக்கு. அவ எப்படி செய்தா?” என்று கேட்டாள்.
“அந்த பையன் அப்படி பிரைன் வாஷ் பண்ணிருக்கலாம்…”
“முட்டாள் தனமா இருக்கு… காதலன் சொன்னானாம் காதலி கேட்டுட்டாலாம் சே… என்னவொரு மண்ணாங்கட்டி காதல்” என்று எழுந்து அமர்ந்தாள்.
“அப்போ காதல்னா என்ன ஷிகா” என்றான் கவியரசன். தான் ஒருவன் 5 வருடமாக இவளை பாதுகாத்து மனதில் இவள் ஒருவளை பூஜித்தவனாக கேட்டான்.
“அடப்போ மாமா எனக்கும் காதலுக்கும் எட்டாத தூரம். காதல் பற்றி என்கிட்ட கேட்டா… நான் அதுல தயிர் சாதம் மாமா” என்றவள் மனம் குரலும் மாறியது.
அவளாகவே “லெமன் ரைஸ் அவந்திகா ஒருமுறை நீ என்னை தான் கல்யாண பொண்ணு நினைச்சதா சொன்னா… நீ வந்தா உன் கண்ணு முன்ன நிற்க வேணாம் சொன்னா… அவளுக்கு அப்போ உன் மேல எப்படி பொஸசிவ்னஸ் வந்துச்சு…” என்று புரியாது கேட்டாள்.
‘எப்படி சொல்றது என் காதல் உன் மேல என்றதும் அவளுக்கு உன் மேல பொறாமை அதனால மகேஷ் விட்டுட்டு என் மேல அவளுக்கு காதல் கன்றாவி வந்து இருக்கோம்’ என்றவன் எதையும் சொல்லவில்லை.
தன்ஷிகா கவியரசனை பார்க்க அவனோ எதையோ யோசித்திவனாக மெய்மறந்து நின்றான். ‘டேய் மாமா உனக்கு லெமன் ரைஸ் என்று எதுக்கு பெயர் வைத்தேன் தெரியுமா டா’ என்று அவன் முகம் பார்த்து மனதில் எண்ண
“எதாவது சொன்னியா?” என்றான் கவியரசன்.
“இல்.. இல்லையே… என்றவள் உதட்டை பல்லால் கடித்தாள்.
“அத விட்டுடு… பாவம் என்ன மாதிரியே உன்கிட்ட சிக்கி தவிக்கும்.” என்றான் உதட்டை பார்த்தபடி.
“நீங்க ஏன் அங்க எல்லாம் பார்க்கறிங்க போய் தூங்குங்க” என்று படுத்து போர்த்தி கொண்டு சத்தமில்லாது சிரிக்க போர்வைக்குள் அவள் சிரிப்பது அறியாது கவியரசன் புரண்டு புரண்டு படுத்து தூங்காம இப்ப என்னையும் தூங்க முடியாம பண்ணிட்டு போர்வை முழுசா போர்த்திட்டு திட்டறதை பாரு’ என்று படுத்து கொண்டான்.
தன்ஷிகா தன் பன்னிரெண்டாம் வகுப்பு சேர்ந்த புதிதில் ஒரு நாள் கற்பகம் உணவு சமைக்காது இருக்க போகும் பாதையில் ஒரு உணவு கடையில் வாங்கிட சொன்னார்.
பாதி தூரம் சென்றதும் சைக்கிள் நிறுத்தி தயிர் சாதம் கேட்க அங்கே கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. தன் தோழியோடு காத்திருந்தாள் தன்ஷிகா.
அந்நேரம் தன் வண்டியில் உரமூட்டை வாங்க சென்ற கவியரசன் மதிய உணவை இங்கே வாங்கிடலாம். உரமூட்டை கொடுக்கும் இடம் நேரமாகும் என்று வாங்க வந்தான். இரண்டு பொட்டலம் தனக்கும் அவன் நண்பன் சேர்த்து வாங்க தன்ஷிகா கவியரசனை கண்டவள் அங்கிருந்த பாதையில் பார்த்து போனில் பேசியபடி வாங்கி கிளம்பினான்.
தன்ஷிகாவோ தனக்கு பின்னால் வந்து அவன் வாங்கி கிளம்ப கண்டு கடைக்காரரிடம்
“அண்ணா ஸ்கூலுக்கு லேட் ஆகும் கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க” என்றதும் கட்டி கொடுக்க கவியரசன் வண்டி நிறுத்தி கடைக்காரரிடம்
“நான் லெமன் ரைஸ் கேட்கலை பிரியாணி தான் கேட்டேன்” என்று பொட்டலத்தை திருப்பி கொடுத்தான்.
கடைக்காரனோ “யோவ் வெஜ் கடை போட்டு தானே இருக்கு எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் எழுதி தானே இருக்கு படித்து பார்க்க வேண்டியது தானே திருப்பி எல்லாம் வாங்க முடியாது போப்பா” என்று கடைக்காரர் பணத்தை திருப்பி தர முடியாது என்றும் பார்சலையும் வாங்க மறுத்தார்.
“பார்த்து இருந்தா வாங்கி இருப்பேனா… யோசிக்க மாட்டியா பா” என்று கவியரசன் மெல்ல சொன்னான்
தன்ஷியோ குறும்பு தனம் மேலெழம்ப “ஆளு லெமன் கலர் இருந்துகிட்டு லெமன் ரைஸ் வேணாம் சொல்லுறிங்களே மாமோய்… ஒரு நாள் லெமன் சாதம் சாப்பிடுங்க. குறைஞ்சு போக மாட்டிங்க” என்று சொல்லிவிட்டு குனிந்திட கவியரசன் திரும்பி பார்க்க அங்கிருந்தவர்களும் யார் பேசுனது என்று தலை திருப்ப கவியரசன் கண்டவர்கள் விழ்ந்து சிரித்தனர்.
கவியரசன் மற்ற பெண்களை பார்க்க வெட்கப்பட்டு கூச்சப்பட்டு ஒரு முறுவல் செய்தபடி கிளம்பினான்.
“ஒரு ஆம்பளை பிள்ளையை வெட்கப்பட வச்சிட்டியே யாருல அந்த சிறுக்கி அந்த பிள்ளையை கட்டிக்கிறியா.. ராசா கணக்கா இருக்கான்” என்று ஒரு தாத்தா குரலில் தன்ஷிகா நிமிராது சென்றாள்.
வாயை திறக்க அந்த வயதில் பயம் இருந்தது. தன்ஷிக்கு கவியரசன் முகம் அன்றே மனதில் பதிந்தது.
அக்காவை பார்க்க வந்தவன் தன்னையே பார்க்க தான் அன்று வாயாடியது அறிந்து பார்க்கின்றானோ? என்று தான் பார்க்க பயந்து பார்த்தாள். ஆனால் அவனுக்கு அந்த முகம் தெரியாத விதமாக அவன் நடப்பது என்று புரிய அவந்திகாவும் பார்க்காமல் போக கேலி செய்து வைத்தாள்.
அவந்திகா கவியரசன் பற்றி சொல்லி மாமாகிட்ட எல்லாம் எட்டியே நில்லு’ என்ற அக்கா சொல்லிற்கு சரி என்று பேசுவதை தவிர்த்து இருக்கின்றாள்.
ஆனால் அந்த தாத்தாவின் குரலில் “அந்த பிள்ளையை கட்டிக்கிறியா” என்றதற்கு அவளையும் அறியாது ‘கட்டிக்கற வயசுல கட்டிக்கிறேன்’ என்ற மனம் அக்கா கணவனாக வராத காலத்தில் சொல்லியதை எண்ணி சிரித்து இருக்கின்றாள்.
கல்லூரியில் காதல் என்று வந்த குப்பை எல்லாம் அவளை அறியாது லெமன் ரைஸ்ஸை பீட் பண்ணட்டும் காதல் செய்வோம் என்றே எண்ணும்.
5 வருட படிப்புக்கு பெற்றோர்கள் ஒரு காரணம் சொல்லாது படிக்க வைக்க சந்தோஷம் கொண்டாள்.
அதிகாலை கவியரசன் கிளம்பி கொண்டிருக்க
“இவ்ளோ குயிக்கா எங்க போற?” என்றதற்கு
“நெல் விதைக்க மா. நல்ல நேரத்தில் விதைக்க அப்பத்தா சொல்லும்” என்றதும்
“எப்ப நல்ல நேரம்?”
“9 மணி ? ஏன் கூட வருவியா? ” விளையாட்டு போக்கில் கேட்டான்.
“பத்து நிமிஷம் இருங்க வந்துடறேன்” என்று கைக்கு கிடைத்த சுடிதார் எடுத்து கொண்டு அணிய கிளம்பினாள்.
அவந்திகா கதவு திறக்காது இருக்க நிம்மதியாக இருவருமே கிளம்பினார்கள்.
தன்ஷி தான் ” அப்பத்தா நான் வயலுக்கு போயிட்டு வர்றேன்” என்றிட “ஒரு நிமிஷம் தாயி” என்று “திலகா செத்த அந்த பூவை கொண்டா தாயி” என்றதும் அப்பத்தா கையால் கட்டிய ஜாதி மல்லிசரத்தினை கவியரசன் கையால் சூட சொல்ல அவனும் ஆசைதீர சூடினான்.
தன்ஷி நிலை தான் தவித்தது. இதனை எப்படி ஏற்க என்று கிளம்ப கவியரசன் இதில் கேட்க வேண்டியதே இல்லை சிறகேயின்றி பறந்தான்.
பைக் எடுத்து பின்னே அமர சொல்ல தன்ஷி ஏறிட கிளம்பினான்.
அவந்திகா அறையில் எதையோ உடைக்கும் சத்தம் கேட்டது. திலகவதி வெளியே செல்லாது காவலிட அங்கே அவந்திகா போனில்
” மகேஷ் நீ என்ன பண்ணுவியோ தெரியாது. எனக்கு என்னோட வாழ்க்கை வேணும். தன்ஷி எங்க போறா எது என்று சொல்றேன் நீ அவளை கொன்னாலும் சரி அவ கவியரசன் லைப்ல வர கூடாது.
கவியரசன் எனக்கு வேணும்” என்று மகேஷிடம் பேசினாள்.
“இங்க பாரு அவளால் தான் நான் 2 வருஷம் ஜெயிலில் இருந்தேன். நீ அவ எங்க தனியா போவா சொல் உடனே தூக்கிடறேன். அது வரை கவியரசன் நம்ம பழகுறது தெரிந்தா பிளான் எல்லாம் வேஸ்ட்” என்றதற்கு
“அதெல்லாம் பார்த்து கொள்கிறேன்” என்று வைத்தாள்.
பைக் கரும்பு காடு எறிந்த இடம் வர அன்று கருகிய நிலையில் கொஞ்சம் பார்த்தால் தெரிந்தது.
நெல் விதைக்க வேஷ்டி மடித்து விட்டவன் அங்கிருந்த மரத்தின் அடியினை காட்டி “அங்க உட்காரு” என்று அமர வைத்து நெல் விதைத்தான்.
நேரம் போக பசி வயிற்றை கிள்ள துவங்கியது.
“கவின் எனக்கு பசிங்குது” என்று கவியரசன் வந்ததும் சொல்ல திலகவதி அக்கா கொடுத்த ராகி கூழ் டம்பளரில் எடுத்து நீட்ட வாங்கி குடித்தவள்.
“அம்மாடி இப்ப தான் பசி அடங்கிச்சு” என்று திரும்ப அவள் குடித்த அதே டம்பளரில் கூழ் ஊற்றி கவியரசன் குடிக்க தன்ஷிகா கவினை தான் அசராமல் பார்த்தாள்.
அவந்திகா கவியரசன் பற்றி சொல்லியதில் பாதிக்கு மேல் பொய் என்பதை இந்த இரண்டே நாளில் உணர்ந்திட, ஏன் தற்பொழுது அவளுக்கு பிடிக்காத கவின் மாமாவை ஏன் நான் கட்டிக் கொண்ட பிறகு அன்று அவள் கண்ணில் பொறாமை எதற்கு? என்றவள் யோசித்தபடியே கவின் பாதையில் நடந்தவள் அவன் திரும்ப அதை எதிர்பாராது சட்டென விழ போனாள்.
தன்ஷிகா பிடிமானத்திற்கு அவனையே பிடிக்க அவள் மீதே விழுந்தான்.
தன்ஷிகா மீது இடைவெளியின்றி விழுந்தவன் அவள் கண்கள் அதிகபடியாக விழி விரிவதை கண்டு அதில் முழ்கினான்.
“மாமா… மாமா எழுந்துங்கோ… அடேய் தனியா எங்கிட்டாவது போயி டூயட் பாடு முதலில் என் மேல இருந்து எழுந்துடு. அடேய் லெமன் ரைஸ்…” பல்லை கடித்து சொல்ல சுதாரித்து எழுந்தான்.
“கொஞ்ச நேரம் வானத்தில் பறந்தேன் பொறுக்காதே உனக்கு… ஆமா எதுக்கு என்ன எப்ப பாரு லெமன் ரைஸ் சொல்லற…?” என்று தன் மேல் இருந்த மண்ணை உதறினான்.
“அ.. அது.. அது”சொல்ல தினறினாள்.
“என்னமோ இந்த நேம் எங்கயோ கேட்டு இருக்கேன். சொல்ல வந்ததே மறந்துட்டேன் பாரு வந்ததும் வந்தாச்சு தோட்டத்து வீடு பார்த்துட்டு போகலாம்” என்று பக்கத்தில் இருக்கும் சின்ன ஒட்டு வீடு சென்றான்.
சுற்றி தென்னை மரம். நடுவில் ஓட்டு வீடு. பக்கத்தில் கிணறு பம்பு செட் முல்லை செடி ஊசி கணகாம்பரம் பூ செடி என்று நேற்று பூத்து பறிக்காத மலர் இருக்க மொட்டுக்களும் இருந்தன.
அவள் இடங்களை சுற்றி பார்க்க கவியரசன் அங்கே இருந்த வெண்டைக்காய் பீர்க்கங்காய் தன் தோட்டத்தில் இருந்தவையை பறித்து வீட்டுக்கு எடுத்து வைத்தான்.
“செம பீல்ல…” என்று தன்ஷி சொல்ல
” ஆமா இதுக்கு முன்ன இந்தளவு ஹார்மோன் இரத்த ஓட்டம் பாய்ந்து அப்படியே வானத்தில் பறந்த மாதிரி சேன்ஸே இல்லை.. சம்திங் மேஜிக் இருக்கு…”
“டேய்… நான் காய்கறி நம்ம தோட்டத்தில் பறித்து ப்ரஸ்ஸா சமைத்து சாப்பிடறதை சொன்னேன். உன் மூளை எங்க டா போகுது” என்று சொன்னாலும் அவளுக்குள்ளும் அவன் சொல்லியது போல உடலெங்கும் என்னவோ கூடியது. அதை மறைக்க தானே அவனை திட்டி எழ செய்தாள்.
“உண்மையா உனக்கு வேற எதுவும் தோனலையா?” என்றதும் யோசிக்காது தள்ளி விட கிணற்றில் விழுந்தான்.
தன்ஷிகா பயந்து எட்டி பார்க்க அவனோ சிரித்தபடி நீச்சல் அடித்து கொண்டு “எனக்கு என்னவோ நான் உனக்குள் என்னவோ பண்ணறேன் அதான் நீ நழுவற” என்றான்.
“கல்லை தூக்கி போட்டுடுவேன்.. மேல வா பயந்துட்டேன்.” என்றவளின் பேச்சில் நிஜமாகவே அச்சம் இருந்தது. கல்லில் அடிபட்டு இருந்தாள். இனி அக்கம் பக்கம் பார்த்து நடக்கனும் என்று எண்ணி கொண்டாள்.
நனைந்த கேசத்தை கைகளால் உதறி தள்ள தன்ஷிகா கண்கள் அவன் கேசம் வருடி அவள் கைகள் அவன் தலையை கோத கவியரசனிடம் மனம் இழந்தது.
அவன் ஈர உதட்டில் அவளின் இதழை பற்றி கொண்டான்.
தன்ஷிகா எதிர்க்க செய்யாதது அவனுக்குள் இருக்கும் காதல் மனம் இத்தனை நாளின் ஏக்கம் எல்லாம் தீர்க்காது அதில் கரைந்தது.
Lovely ♥️
Semmaaa 🧡🧡🧡🧡🧡
Super super super super super 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘