Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்-15

நிலவோடு கதை பேசும் தென்றல்-15

💟-15

சட்டென கரண்ட் வந்ததும் இயங்கிய மோட்டார் சத்தத்தில் இடத்தினை அறிந்து கவினின் ஷிகா, கவினை தள்ளிட அவனோ அவளை இழுக்க தண்ணீர் தொட்டியில் விழுந்து ஷிகாவும் இம்முறை தண்ணீரில் நனைந்தாள்.

“ஷிகா நீ என்னை விரும்பற தானே? தாலி கட்டியதால் முத்தத்தை ஏற்றுக்கலை தானே?” என்றான் கவின். ஷிகா ஆம் என்று சொல்லிட மாட்டாளா என இறைஞ்சு பார்த்து கேட்டான்.

“மாமா ப்ளிஸ்… எனக்கு தெரியலை… என்னை விடு நான் வீட்டுக்கு போறேன் என்றாள்.

அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்து இருக்க விடுவித்தான்.

“சாரி ஷிகா…” என்றான். தலைகுனிந்தபடி அவனை விட ஷிகா தான் அவன் மனம் வாடி நின்றதை எண்ணி வருந்தினாள்.

“கிளம்பு வீட்டுக்கு போகனும்” என்றவள் பைக் அருகே வர அவனும் பைக் எடுத்தான்.

அவள் என்ன நிலையில் இருக்கா என்று அடிக்கடி கண்ணாடியை கண்டான். அவளோ வயலின் பச்சை பட்டாடை இரசித்து கொண்டு இருந்தாள்.

எதிரே வந்த ஆட்டின் கூட்டம் காணாது சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

பாவையவள் மெத்தென்று மோதி ஒரு காலை கீழே வைத்து இறங்கி நின்றாள்.

“உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா தெரியாதா? கீழ இறங்கு” என்று அவனை இறங்க வைத்தாள்.

அவனிடம் இருந்து சாவி பிடுங்கி இவள் ஸ்டார்ட் செய்ய கவின் அதிர்ச்சி கலந்து வாயை பிளந்தான்.

“ஷிகா உனக்கு இந்த வண்டி எல்லாம் ஓட்ட தெரியுமா?”

“தெரியாம தான் உட்கார சொன்னேனா உட்காரு” என்று சொல்ல திரும்பி யாராவது பார்பார்களா என்று பார்த்து யாரும் இல்லை என்று ஏறினான்.

“அது என்ன சுத்தி யாராச்சம் பார்ப்பார்களா என்று நோட்டம் விட்டு ஏறுற?”

“அது வந்து நம்ம ஊரில் பொம்பள பிள்ளைங்க பெரிய வண்டி ஓட்டியது இல்ல… அதுவும்…..”

” அதுவும் ஆம்பள பசங்க இப்படி பின்னாடி உட்கார்ந்து வர மாட்ட அப்படி தானே?” என்று கண்ணாடியில் பார்த்து கேட்டாள்.

“ஆமா” என்று பதில் தர “பட் நீ ஓட்டு நல்லா தான் ஓட்டற.. எங்க கற்று கொண்ட?” என்றான்.

“சீனியர் அக்கா கீதா.. அவங்க காலேஜிக்கு எல்லாம் போக வர பார்த்து ஒரு நாள் கற்று கொடுக்க கேட்டேன் கற்று தந்தாங்க. ஒன் மன்த் அதுக்குள்ள கற்றுக்கிட்டு அவங்களை உட்கார வைத்து ஓட்டினேன். என்னிடம் உன் கணவரை இப்படி வைச்சி ஓட்டுனு சொன்னாங்க” என்று இவள் கனவாய் சொல்ல கவின் கைகள் அவள் இடையை மீண்டும் பற்றியது.

அதில் மின்சாரம் ஏற்பட நிறுத்தி
“நீங்க ஓட்டுங்க” என்று பதறி இறங்க, குறும்பு செய்தவனோ உதடு மடித்து மீண்டும் அவளை பார்த்து ஓட்டினான்.

வீடு வர ஈரத்துடன் வந்தவளை அப்பத்தா மகிழ்வோடு கண்டார்.
ஆனால் அவந்திகாவுக்கு  இருப்பு கொள்ளவில்லை

கவியரசன் வேண்டாம் என்று தான் அவனை புகைப்படத்தில் கூட காணவில்லை ஆனால் மனமானது அவனை கண்டு மகேஷ் வேண்டாம் என்றது. ஆனால் கவியரசன் தன்னை தாங்கவில்லை என்றதும் மகேஷின் வழிசல் தேடியது. அவனிடம் பட்டும் கர்ப்பம் கலைந்த வேலை கவியரசன் தன் தங்கை தன்ஷிகா மேலே ஒரு ஈர்ப்பை சொன்னதும் அவளும் அவனை வர்ணித்த நேரம் மனதிரையில் ஓட போட்டிக்கு இருக்கும் பொருளில் தான் சில பெண்களுக்கு பிடித்ததாக மாறிவிடும் அதுவே அவந்திகா நிலையாக மாறியது.

இன்று மகேஷ் ஏற்றுக்க வந்தாலும் இவளின் மனம் கவியரசனை தான் சுற்றி நிற்கிறது.

அதுவும் தன்ஷிகா சுற்ற கொதிகலனிலாக மாறி போனாள். தான் செய்த தவறுகள் மறைந்து  போகிறது மனித மனதிடம்.
தன்ஷி கவியரசன் நனைந்து வந்த உடையில் ஆயிரம் வக்கிரம எண்ணங்களை எண்ணி பார்த்து எரிந்தது.

கையோடு மகேஷிற்கு அழைப்பை கொடுத்தாள்.
காத்திருந்த கழுகாக எடுத்தான் அவனும்.
“என்ன தான் பண்ணிட்டு இருக்க… இங்க அவளுக்கு நான் கர்ப்பம் கலைந்த அளவுக்கு சொல்லிட்டான். இனி அவளை அபகரிக்க நான் கூட்டு தெரிஞ்சது என்ன விளக்கமார்த்தால அடித்து அனுப்பிடுவா… அவளுக்கு தெரியாத வரை தான் நான் இங்க இருக்க முடியும். அவளுக்கு எல்லாம் தெரிந்தா என்னை மதிக்க மாட்டா, வீட்டை விட்டு துரத்துவா” என்றாள். 

“ஏய் அதான் தெரியாதுல..
அவன் மற்றது எல்லாம் சொல்ல மாட்டான். சொல்றதா இருந்தா இந்நேரம் சொல்லி இருக்கனும்”

“டேய் இரண்டு பேரும் பைக்ல போய் நனைத்து வந்து நிற்கறாங்க.. அவன் தான் சொல்றானே அவளை உரிமையாக எடுத்து கொண்டதா… இவளை எங்கேயாவது கூட்டிட்டு போயி வாழு இல்ல சாகடி. இங்க இருந்து அவளை கூட்டிட்டு போ” என்றாள்.

“நிச்சயமாக அவ தனியா போனா சொல்லு இதே ஊரில் தான் தங்கி இருக்கேன்” என்றான்.

“எங்க?”

“அது எதுக்கு உனக்கு? நம்ம டீல்.. உனக்கு கவியரசன் எனக்கு உன் தங்கை… அவ்வளவு தான் இனி நம்ம உறவு அது மட்டும் தான்” என்றான் கறாராக.

பேசி வைக்க ‘நான் உன் தங்கை தூக்கி என் கூட கை கால கட்டி கூட குடும்பம் நடத்துவேன் ஆனா நீ என்ன செய்தாலும் அவன் உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டான். லூசு… இது தெரியாம பேசிட்டு இருக்கு’ என்றவனின் மனம் தன்ஷிகாவை எண்ணியது.

தங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று எதுவும் அறியாமல் தன்ஷி இருந்தாள்.

கவியரசன் மட்டும் நேற்று கேஸ் லீக் ஆனது அவந்திகா வேலையாக இருக்கும் என்று எண்ணி கொண்டு இருந்தான்.

அவள் தானும் தன்ஷி பேசியதை கேட்டு இருக்குமோ என்றே எண்ண அவள் கேட்டால் தான் என்ன? விடு கழுதை அவ ஒரு வேலைக்காரி என இகழ்ந்து எண்ணினாலும் இனி வேலைக்காரி என்றாலும் அவள் இருப்பது மிகுதி அதனால் அவளை அவளின் பெற்றோரிடம் அனுப்ப எணணினான்.

தங்கள் அறையில் இருந்து பாய் தலையனை எடுத்து வெளியே வர நின்றால் தன்ஷிகா. கவின் எதிரே நிற்க அப்படியே நின்றாள்.

“எதுக்கு ஷிகா நமக்கு இந்த கேப்…. நமக்கான அறை உனக்கு புடிச்ச அறை ஆனா மாடி தான் போகனுமா?” என்றதும்

“கவின் எனக்கு தனியா உங்களோட… வேணாம் கவின் நான் மட்டும் போறேனே…”

“சரி போ அப்பத்தா நேற்றே நான் மாடியில் இருந்து வந்ததை பார்த்து யோசிச்சது. அது சந்தோஷமா நாம இருக்கோம் என்று நினைத்து இருக்கோம். இங்க யாரும் மற்றவர்கள் மனதை பார்க்க போறாங்க போ” என்று கையை கதவின் பக்கம் நீட்டினான்.

“என்ன என்னதான் பண்ண சொல்ற .. நீ நடந்துக்கற முறை நினைச்சா”

“அம்மா தாயே… நிம்மதியா தூங்கு உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன். என் கண் எதிர்ல இரு அது போதும்” என்றவன் படுக்க
தன்ஷிகா மறுபுறம் படுக்க ‘இரண்டு கல்யாணம் பண்ணி பிரம்மசாரியா இருக்கேன் டேய் கடவுளே உனக்கு என்ன பார்த்தா என்ன தான் தோனுது’ என்று வாய் விட்டு புலம்பினான்.

தன்ஷி கிலுக்கி சிரிக்க
“தலைகானி கட்டிக்கிட்டு தான் காலம் முழுக்க இருக்கனும்”

“யோவ் மாமோய் புலம்பாம தூங்கு யா…” என்றவள் சிரித்தபடி திரும்ப கவியரசன் இதை எங்கோ கேட்டு இருக்கேன் எங்க….? அய்யோ இந்த மாமோய்… நான் கேட்டு இருக்கேன் எங்க…” என்றவன் மனசாட்சி ஷிகாவின் குறும்பான கள்ளத்தனம் தோன்றி எங்கே என்று ஆராய அவளின் ஷிகாவோ அவன் அறியாது எட்டி பார்த்து ‘மாமோய் கண்டுபிடி பார்ப்போம் விருந்தே வைக்கிறேன்’ என்று மகிழ்ச்சியோடு உறங்க இவனும் உறங்கி போனான்.

உறங்கா இதயமாக அவந்திகா தான் இருந்தாள்.
ஒரு வாரம் மீண்டும் தன்ஷி கவியரசன் தன்ஷி வீட்டுக்கு போக நேர்ந்தது.

தன்னவளுக்கு பிறந்தகம் என்றதாலோ விருப்பம் இல்லை என்றாலும் வந்தான் கவின்.
தன்ஷி பாட்டு கேட்டு போனில் சௌமியாவிடம் அவந்திகா நடந்தவை சொல்லி கவின் மேலே தவறில்லை என்று எடுத்து உரைத்தாள்.

சௌமி தான் அவந்திகா உங்க அக்காவா டி? எப்படி இது ? சரி அதுகாக உங்க மாமா அவர் விரும்பினார் என்று உன்னை உன் விருப்பம் இல்லாம கட்டிக்கலாமா? என்றதும்

“இல்லை சௌமி மாமா அந்த காரணம் மட்டும் என்னை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டார். வேற ஏதோ பண்ணி இருக்கா… மாமா சொல்லலை… அம்மா அப்பாவிடம் கேட்டா ‘மாப்பிள்ளை தெய்வம் மாதிரி அதுவும் உனக்கு குலசாமி அது இது சொல்லி மாமாகிட்ட நல்லபடியாக நடக்க சொல்றாங்க… காரணம் சொல்லலை… மாமா சொல்ல கூடாது என்று சொல்லி வைச்சி இருக்கும் போல…”
“தன்ஷி உனக்கு என்ன இருந்தாலும் கட்டாய கல்யாணம் தானே?” என்று சௌமியா கேட்டாள்.

‘தான் ஏற்கனவே அவள் மாமாவை பார்த்து தனக்கு கிரஷ்ஷாக நுழைந்ததை சொன்னாள். சொல்லி முடித்து கணம் கவின் வந்து போனை வாங்கி ஸபீக்கரில் போட்டான்.

“அப்போ உன் லெமன் ரைஸ்ஸை ஏற்கனவே தெரியுமா…? அதானா மேடம் அமைதியா டீல் பண்றிங்க. அப்பவே நினைச்சேன். இவளோட கேரக்டருக்கு தாலியை மூஞ்சில விசிறிட்டு போலிஸ் கம்பிளைன் பண்ணுற ஆளாச்சே” என்றதும்

“மாமா போனை கொடு… திஸ் இஸ் நாட் பேர்” என்று சொன்னதும்
“அய்யோ கேட்டுட்டாரா நான் வைக்கிறேன் டி” என்று சௌமி போனை அணைத்தாள்.

“என்ன ஏற்கனவே தெரியுமா? அமைதியா டீல் பண்றனு சொல்றா உன் பிரெண்ட்… முதல்ல என்ன பேசற?” என்றான்.

“போனை போனை பறிக்காத மாமா கொடு” என்று எட்டி பிடிக்க அவன் உயரத்திற்கு குதித்து குதித்து வாங்க முயன்று தோற்றாள்.

“புருஷன் தானடி” என்றான் உரிமையாய்…

அவளோ “இன்னும் முழுமையாக மாறலை என்றாள் பிடுங்கியபடி.
அவந்திகா தன்ஷி போன் நம்பர் வாங்கி யாரிடமாவது பேசியோ இல்லை அவளோ தன்ஷிக்கு நடக்க இருந்த கொடுமை சொல்லிடுவார்களோ என்று தான் போனை பிடிங்கி பார்த்தது.

ஆனால் முழுமையான கணவன் தான் மாறலை என்ற தன்ஷி வாய் மொழியில் கொஞ்சம் கவலை கொள்ள அதன் முழு அர்த்தம் புரிந்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து இருப்பான்.

தன்ஷி கணவன் மனைவியாக மனதால் இணைந்தோம் உடலால் அல்ல என்ற நோக்கில் தான் சொன்னது.

டேய் கவின் நான் லெமன் ரைஸ் சொன்னதுக்கு ஏன்னு கண்டுபிடிடா நானே ஐ லவ் யூ சொல்றேன் மனதில் எண்ணியபடி ஓடினாள்.

தூரத்தில் மகேஷ் ஹெல்மெட் மாட்டி நல்லா தான் வளர்ந்து இருக்கா அப்ப விட அழகு கொட்டி தான் இருக்கு… சம்மதிச்சா கட்டிக்கிட்டு வாழலாம். ஆனா இவ அவந்திகா மாதிரி இல்லை நிச்சயம் என்னை கல்யாணம் செய்ய மாட்டா… உன்னை விடவும் மாட்டேன். அந்த அரசுக்கு உன் மேல ஏக லவ் இருக்க தான் செய்யுது. அதுக்காக உன்னை அடைந்து அவனை கதற வைக்கனும்.’ என்று திட்டம் தீட்டினான் மகேஷ். 

இரண்டு நாட்கள் ஏக கவனிப்பில் கவின் மிதந்தாலும் தன்ஷிகா தொந்தரவு செய்யவில்லை.

அன்று கவினுக்கு போன் வர எழுந்து தன்ஷி பார்க்க
“திலகா அக்கா காலிங்” என்றாள். அவனோ குளியலறையில் இருந்த படி, “எடுத்து பேசு ஷிகா” என்றான்.

எடுப்பதற்குள் கால் அணைந்து விட
“கட் ஆகிடுச்சு” என்றதும்
“அக்கா அவசியம் என்றால் தான் பேசுவாங்க நீ கால் பண்ணு ஷிகா” என்றான்.

அவள் போனை எடுத்து கால் செய்ய எடுக்க போன் பாஸ் வேர்டு கேட்டது.

“கவின் பாஸ்வேர்டு கேட்குது நீ வந்த பிறகு பேசு”

“பாஸ்வேர்டா… ‘ஷிகா கவி’ நேம் டைப் பண்ணு” என்று ஷவரை திறக்க தன்ஷியோ அவன் சொன்ன “ஷிகாகவி” என்ற சொல்லில் நின்றது.

தன் பெயரையும் அவன் பெயரையும் இணைத்து பாஸ்வேர்டு என்றதும் தன்ஷி மனதில் “ஏன் டா ஏன் அவந்திகா கட்டிக்கிட்டு இப்ப என்னிடம் வந்து சேர்ந்த… நம்மை எது பிரிக்குது…. உன்னை பார்த்து அன்றைக்கே நான் வாயாடி இருந்தா உனக்கும் எனக்கும் முதலில் திருமணம் ஆகி இருக்குமோ… என்று எண்ண கவின் தான்
“என்னாச்சு கால் பண்ணலையா” என்று வாங்கினான்.

அவன் மேல் எழுந்த வாசமும்… அவனின் காதல் அன்பு என்று ஒரு சேர அவனை தான் இமைக்காமல் பார்த்தாள்.

2 thoughts on “நிலவோடு கதை பேசும் தென்றல்-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *