தன்னை ஒருத்தி பார்ப்பதை அறியாதவன் போனில் திலகவதி அக்காவிற்கு அழைப்பை விடுத்தான்.
“ஆஹ் அக்கா ஏதும் பிரச்சனையா?” என்றான் மென்குரலில்.
“அதெல்லாம் இல்லைப்பா… ஊரில் எனக்குனு இருந்த ஆச்சி தவறிட்டாங்க.. அங்க போகனும்.” என்று துக்க செய்தியை தெரிவித்தார்.
“அக்கா கிளம்புங்க பணம் ஏதாவது தேவைனா அப்பத்தா..” என்று பேச குறுக்கிட்டார்.
“தம்பி தம்பி… பணம் அப்பத்தாகிட்ட வாங்கிகறேன். ஆனா அப்பத்தா எங்க ஆச்சி இழப்புக்கு வர்றேனு சொல்றாங்க. அவங்க சிநேகிதி அது இது… புலம்பறாங்க” என்றார்.
“அக்கா தாராளமா கூட்டிட்டு போங்க. ஆச்சி மேல அப்பத்தா பாசம் வைச்சி இருந்தது. என்ன இருந்தாலும் அவங்க சினேகிதி” என்றான்.
“தம்பி அந்த பொண்ணு” என்று திலகவதி நினைவுட்டிய பிறகே அங்கே ஒருத்தி இருப்பதை நினைவு கொண்டு வந்தான்.
‘சே இவ வேற இருக்காளே? ஆமா இனி அவளுக்கு எதுக்கு பாடிகார்ட் போட்டு பூட்டனும் எனக்கு தான் என் ஷிகா கிடைச்சுட்டா… அது போதும்’ என்று எண்ணியவன்
“அக்கா அவகிடக்கா நீங்க போங்க. 3டேஸ் நான் வர ஆகலாம் நீங்களும் போயிட்டு வாங்க” என்றான்.
அதன் பின் திலகவதியும் அப்பத்தாவும் புறப்பட்டு கிளம்ப ஆயத்தமானர்கள்.
“என்ன ஷிகா அப்படியே நிற்கற?” என்றான்.
அவளோ ஓடி வந்து அவனை அணைத்து கட்டி கொண்டாள்.
அவனுக்கு எதற்கு என்று புரியாவிட்டாலும் அவளின் அணைப்பில் விலக மனமில்லை. கண்ணீர் அவனின் நெஞ்சில் பட அவள் கன்னம் பற்றி நிமிர்த்தினான்.
“என்னம்மா?” என்றான்.
“ஒன்றுமில்லை” என்று வெளியேறிவிட்டாள்.
கவின் நீ எதையோ மனசுல வச்சி இருக்க நீ அதை இன்னும் சொல்லலை அப்போ என் காதல் உனக்கு சொல்ல எனக்கும் ஏதோ தடுக்குது.
தன்ஷி பாதி தெரிந்ததற்கே இந்த மாற்றம் என்று எண்ணி கனகவேல் கற்பகம் மனம் நிம்மதி அடைய கவியரசன் வீட்டில் கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்டுக்குட்டி இறந்தமையால் அன்று கவலை கொண்ட கற்பகம் அடுத்த நாளே ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி தங்கள் தோட்டத்தில் கட்டி வைத்தார்கள்.
இன்று இருவரையும் அழைத்து, நேர்ந்த கடனை முடித்து வாழ வேண்டி கொள்ள ஆயத்தமானர்கள்.
தன்ஷி பட்டு சேலை உடுத்த சொல்ல கோவில் என்பதால் அவளும் மறுக்கவில்லை.
இருவரும் ஊரில் வந்து கோவிலில் அர்ச்சனை செய்ய பலி கொடுக்கும் ஆட்டுக்குட்டியும் வந்து நிறுத்தினார்கள்.
ஆட்டுக்குட்டி மஞ்சள் நீரில் குளித்து மாலையிட்டு குங்குமம் அணிந்து நிறுத்த அதை கண்ட தன்ஷிகா அப்பொழுது தான் அது தங்களுக்காக என்றதும் கற்பகத்திடம் பலி எல்லாம் வேணாம் என்றிட கற்பகமோ சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாது. என்று கூறிட தந்தையிடமும் சொல்ல அவரும் ‘நேர்ந்துகிட்டா பலி கொடுக்கனும்மா’ என மற்ற ஏற்பாடுகளுக்கு செல்ல தன்ஷிகா கவின் முன் சென்று நின்றாள்.
” என்னாச்சு அந்த ஆட்டுக்குட்டி போல நான் வேணுமின்னா இன்னொன்று வாங்கி தர்றேன்” என்றான்.
“நமக்காக ஒரு ஆட்டுக்குட்டி சாகனுமா?” என்றாள் கலங்கிய கண்களோடு
“வேண்டினா செய்தாகனும் மா” என்றான்.
“நீ பிரியாணி தின்ன ஜடியா போடற போ” என்று முகம் தூக்கி கொள்ள
கொஞ்ச நேரம் அவள் முகத்தினை உற்று பார்த்தவன் அவளிடம் வந்து அமர அவள் விலகி அமர்ந்தாள்
“இப்ப நான் என்ன செய்ய அதையாவது சொல்லு ஷிகா” என்றான்.
“அந்த ஆட்டுக்குட்டி சாக கூடாது அவ்ளோ தான்” என்றாள் கறாராக.
கவியரசன் கொஞ்ச நேரம் யோசித்தவன் கற்பகம் கனகவேல் இருவரிடமும் என்னவோ பேச முதலில் தயங்கி பிறகு ஒப்பு கொண்டார்கள்.
சந்தோஷத்தோடு ஷிகா முன் வந்து “ஆட்டுக்குட்டி சாகாது போதுமா.. “
“என்ன சொன்ன?”
“கொஞ்ச நேரம் பொறு உனக்கு புரியும்”
என்றவன் அவளுக்கு குங்குமம் இட அதனை உணர்வாய் ஏற்றாள்.
பொங்கல் வைத்து முடித்து ஆட்டினை இறைவன் சந்நிதியில் அக்கிராமத்தில் இருக்கும் ஏழை ஒருத்தருக்கு அந்த ஆட்டுக்குட்டி தானமாக கொடுத்து வளர்க்க சொல்லிட அந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் மகிழ்ச்சியோடு வாங்கி கொண்டாள்.
அந்த ஆட்டுக்குட்டி அவர்கள் வளர்த்துக் கொள்ள தங்கள் வாழ்வில் ஒரு முதலீடாக எண்ணி கொண்டார்கள்.
ஆண்கிடாவிற்கு ஜோடியாக பெண் ஆட்டுக்குட்டியும் வாங்கி தர மகிழ்ந்து வாங்கி செல்ல
“சாக போன கிடா கூட ஜோடியாக போகுது.” என்று பெருமூச்சை விட்டான்
“அதெல்லாம் எல்லாமே ஜோடி சேரும்” என்றாள் கிலுக்கி சிரித்து.
தன்ஷிக்கும் அதில் பெருத்த நிம்மதி தந்தது.
தனக்காக யோசித்த கவினை எண்ணி பெருமிதம் கொண்டாள்.
கவின் தான் “பிரியாணி சாப்பிட வேண்டிய ஆளு இப்படி பொங்கல் புளியோதரை கொடுத்துட்டீயே டி” என்றான் கேலியாக.
அவளோ “லெமன் கலரில் இருந்துட்டு லெமன் சாதம் புளியோதரை எல்லாம் சாப்பிட்டு பழகனும் மாமோய்” என்று சொல்ல சிரித்தவன் சட்டென
“இதை இதை ஏற்கனவே கேட்டு இருக்கேன் இப்ப இல்லை பல வருஷம் முன்ன… அப்படின்னா? அது…? ஷிகா… அது நீயா?” என்று அவளை திருப்பினான்.
“பல வருஷம் தான்… நான் ப்ளஸ் டூ படிக்க ஆரம்பிச்சப்ப… இப்ப அந்த தாத்தா அன்னிக்கு சொன்ன மாதிரி கேட்டு இருந்தா அப்போ மனசுகுள்ள சொன்னதை இப்ப சொல்லி இருப்பேன்”என்றாள்.
“என்ன? அன்னிக்கு என்ன சொன்ன… சொல்லு.. அன்னிக்கு மனதுக்குள் என்ன சொன்ன?”என்று உலுக்கினான்.
“அந்த தாத்தா என்ன கேட்டார்?”
“அய்யோ முழுசா அப்படியே எல்லாம் நினைவு இல்லை… ஆனா நான் ஷை ஆனதுக்கு என்னை கட்டிக்கிறீயா என்று கேட்டார். அந்த குரல் கொடுத்த பெண்ணிடம். அந்த பொண்ணு நீ தானா? அப்போ பதில் சொல்லு”
“கட்டிக்கிற வயதுல கட்டிக்கிறேன் சொன்னேன்” என்றவள் ஓட கவியரசன் கைகள் அவளை ஓட விடாது தடுத்து நிறுத்தியது.
கண்கள் எல்லையில்லா ஆனந்தத்தில் அல்லாடி அவளை காண “எங்க உனக்கு சம்மதம் இல்லாமல் தான் இருக்குமோ என்று இப்போது வரை தவிச்சுட்டு இருக்கேன். ஏன் நீ இத சொல்லலை” என்றான் கலங்கிய விழிகளோடு.
“மாமா நான் அதை காதல் என்று சொல்லவே இல்லை. அந்த வயதுல வந்த குறும்பான வார்த்தை… நீ எனக்கு கிரஷ் மாமா. ஆனா உங்களையே எங்க வீட்ல பார்த்தப்ப சொல்ல துடிச்சேன் எங்க அதனால பிரச்சனை வருமோ என்று பயந்தேன்.
நான் பேசியதை நீங்க விளையாட்டா எடுத்துக்காம தங்கைச்சியே இவ்ளோ பேசுது அக்கா எப்படியோ நினைச்சிட்டு கல்யாணத்தை நிறுத்திட்டா அதான். ஆனா அக்கா அடிக்கடி உங்க கண் முன்ன வர வேணாம் என்று சொல்ல சுத்தமா ஒதுங்கிட்டேன்.
காலேஜில யாராவது காதல் என்று வந்து பேசினா என்னையும் அறியாமா இந்த ‘எங்கேயும் எப்போதும்’ ஒரு படம்ல கதாநாயகி அந்த ஹீரோ மாதிரி உயரம் இல்ல புருவம் இல்லை என்று வர்ற வரனை தவிர்ப்பா, சுவற்றில் ஹீரோ பார்த்து அவ மனசுல பதிந்ததை கிறுக்கி வைச்சி இருப்பா அது மாதிரி என்னை அறியாம உன்னை தான் மனதில் பதிய வைத்து இருப்பேன் போல காதலிக்கிறேன் வர்றவனை உனக்கு பிரியாணி பிடிக்குமா என்று கூட கேட்டு இருக்கேன்.
அதுல ஒருத்தன் ஜயர் போல
பகவானே.. அப்படினு ஓடியே போயிட்டான்.
உன் மேல காதல் என்று இல்லை கிரஷ் தான். ஆனா இப்ப அதை காதலா உணருறேன்
எதுக்கு இப்படி அவந்திகா கணவரா எனக்கு அறிமுகமாகி வந்து, இப்ப என் கணவரா நிற்கற? நீ ராமனா இருக்க எனக்கு மட்டும் தான் இந்த காதல் புரியுது
ஆனாலும் அவந்திகா வாழ்க்கை என்ன செய்ய மாமா… அவ முன்ன எப்படி என்று எனக்கு இன்னமும் புரியலை இப்ப அவ கண்ணில் உன்னை எனக்கு தர துளியும் விருப்பம் இல்லை என்று தெளிவா புரியுது. அதை மீறி நான் நம்ம வாழ்வை யோசிக்க சொல்லறீயா?” என்றாள் கண்ணீரோடு. அவளுக்காக பார்த்து பார்த்து பேசியவன், தன் மனதில் முதலில் இடம் பிடித்தவன் என்றதில் மனம் திறந்தாள்.
“உங்க அக்கா அதை விட பெரிய தப்பு செய்து இருந்தா….? இதே கருத்து சொல்லுவியா? புரியாம பேசாதே… அவளா அவ தலையில் மண்ணை அள்ளி போட்டுகிட்டா… இனி அவ லைப் எதையும் பண்ண முடியாது மாற்றவும் முடியாது”
“என்ன தப்பு செய்தா?” என்றதும்
“மாப்பிள்ளை கோவில் நட சாத்த போறாங்களாம்” என்று கனகவேல் நிற்க வீட்டில் போய் பேசிடலாம் என்று கிளம்பினார்கள்.
அறைக்கு வந்த கணம் எதுவும் பேசாது படுத்தவளை பார்க்க கவியரசன் மனம் கணத்தது.
அவளுக்கும் காதல் எப்படியோ வந்து விட்டது. எனக்கு காதல் அவள் மீது மட்டும் இருக்கு ஆனா நடுவில் அவந்திகா?
அவளை இனியும் ஒரே வீட்டில் வைப்பது தவறு. இங்கிருந்து போன அடுத்த கணம் அவளை இங்கு அனுப்பிட வேணும். அவந்திகா அங்கு இருந்தாலும் சரி இங்கிருந்தாலும் சரி தனக்கு அவந்திகா வாழ்வு பாதிப்பை எண்ணி தன்ஷி காரணம் உரைப்பாள் என்று அறியாது கவியரசன் எண்ணி இருந்தான்.
என்றும் வழமையாக அன்றும் மாடிக்கு வந்தான் நிலா பிறை நிலவாக இருக்க அதனையே மௌனமாக இரசித்தான்.
முன்பு நிலா தென்றல் வைத்து அவன் பேசியது இக்கணம் தன்ஷிகாவிற்கு வலித்தது.
உறங்க வந்த கவியரசன் மார்பில் அவளாகவே தலை சாய்ந்து படுத்து கொண்டாள். கவியரசனுக்கு அதுவே மற்றதை ஒதுக்கி நிம்மதி வர கண் அயர்ந்தான்.
அடுத்த நாள் விழிப்பு ஏற்பட்டாலும் அவனாக விழித்து எழும் நேரம் வரை எழ மாட்டேன் என்பது போல தன்ஷி இருக்க அவளாக எழும் வரை நானாக அசைய கூட மாட்டேன் என்று கவியரசன் சந்தோஷத்தில் இருந்தான்.
பத்து மணி வெயில் வந்து முகத்தில் அறைந்த போதும் இதே நிலை இருக்க இருவருமே ஒரு சேர ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து எழுந்தார்கள்.
இங்கு அவந்திகா தன்னை தனியே விடுத்து செல்ல தனியாக நிற்க வீட்டில் நிழலாட திரும்பி பார்க்க அங்கே மகேஷ் இருந்தான்.
“நீ எங்க இங்க யாராவது பார்க்க போறாங்க” என்று துரத்தினாள்.
“யாரும் இல்லை என்று தெரிந்து தான் வந்தேன் சில்லுனு ஐஸ் தண்ணீர் எடு” என்றான் அதிகாரமாக.
“அவர் எப்ப வேணுமென்றாலும் வரலாம் கிளம்பு. எது என்றாலும் போன்ல பேசு” என்று தண்ணீர் கொடுக்க
“அவன் அங்க உன் தங்கச்சியிடம் கொஞ்சி குலாவிட்டு இருக்கான். பாரு” என்று போனில் அன்று மாடியில் கோவிலிலும் கை பிடித்து பேசியதை காட்டினான்.
“எரியுது…. அவன் எனக்கு சொந்தம்… எல்லாம் என் தலை எழுத்து உன்னோட சேர்ந்து செய்ததுக்கு இப்ப அனுபவிக்கறேன். தன்ஷி என் வாழ்க்கையில் வந்து பாழாக்குறா…” என்று கோவத்தில் கத்தினாள்.
“இங்க பாரு அவந்திகா நான் இங்க வந்தது. இதை காட்ட மட்டுமில்லை அவன் அடுத்து உன்னை இங்கிருந்து அனுப்பவும் வாய்ப்பும் இருக்கு… எனக்கு உன் தங்கை வேணும். அவளை வைத்து தான் அவனுக்கு பாடம் புகட்டனும். என்னை இரண்டு வருஷம் ஜெயிலில் களி தின்ன வைச்சிட்டான். நான் பட்ட கஷ்டம் அவன் பதில் சொல்லியே ஆகனும்” என்றவன் பேச
“நான் என்ன செய்ய? அவளை அவன் தனியாகவே விட மாட்டான்”
“ம்… யோசிக்கறேன். என்னாலையும் இங்க ரொம்ப நாள் இருக்க முடியாது” என்றவன் கை அவளின் தோளை தொட அவந்திகா பயந்து தான் போனாள்.
” என்ன பயமா… நம்பற மாதிரி தெரிலையே” என்று அவன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தான்.
பேசும் தென்றல்.
– பிரவீணா தங்கராஜ்
“அவன் அங்க உன் தங்கச்சியிடம் கொஞ்சி குலாவிட்டு இருக்கான். பாரு” என்று போனில் அன்று மாடியில் கோவிலிலும் கை பிடித்து பேசியதை காட்டினான்.
“எரியுது…. அவன் எனக்கு சொந்தம்… எல்லாம் என் தலை எழுத்து உன்னோட சேர்ந்து செய்ததுக்கு இப்ப அனுபவிக்கறேன். தன்ஷி என் வாழ்க்கையில் வந்து பாழாக்குறா…” என்று கோவத்தில் கத்த செய்ய
“இங்க பாரு அவந்திகா நான் இங்க வந்தது. இதை காட்ட மட்டுமில்லை அவன் அடுத்து உன்னை இங்கிருந்து அனுப்பவும் வாய்ப்பும் இருக்கு… எனக்கு உன் தங்கை வேணும். அவளை வைத்து தான் அவனுக்கு பாடம் புகட்டனும். என்னை இரண்டு வருஷம் ஜெயிலில் களி தின்ன வைச்சிட்டான். நான் பட்ட கஷ்டம் அவன் பதில் சொல்லியே ஆகனும்” என்றவன் பேச
“நான் என்ன செய்ய? அவளை அவன் தனியாகவே விட மாட்டான்”
“ம்… யோசிக்கறேன். என்னாலையும் இங்க ரொம்ப நாள் இருக்க முடியாது” என்றவன் கை அவளின் தோளை தொட அவந்திகா பயந்து தான் போனாள்.
” என்ன பயமா… நம்பற மாதிரி தெரிலையே” என்று அவன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தான்.
பேசும் தென்றல்.
– பிரவீணா தங்கராஜ்
Spr going
Super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️