Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்-19

நிலவோடு கதை பேசும் தென்றல்-19

19

அடுத்த நாள் காலையில் சௌமியா போன் செய்ய காதில் வைத்து பேச ஆரம்பித்தாள் தன்ஷிகா.

    “சொல்லு சௌமி….”

    “ஏய் லாஸ்ட் மந்த் அத்தை பையன் வரன் கேட்டு இருந்தாங்களே அது பிக்ஸ் ஆகிடுச்சு… அடுத்த வாரம் ஞாயிறு நிச்சயதார்த்தம் தன்ஷி… அப்பா அம்மாகிட்ட உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்று சொன்னேன். விருந்துக்கு கூப்பபிடறாங்க” என்று மடமடவென உற்சாகமாக கூறினாள்.

    “என்னனு சொல்லி வச்ச?” என்றாள் பயத்துடன். முன்பென்றால் கவினை யார் என்ன பேசினாலும் பேச விட்டு இருப்பாள். இன்று உள்ளம் விரும்பும் மன்னன் ஆயிற்றே.

    “உங்க அக்காவை எல்லாம் இழுக்கலை டி. உனக்கு தெரியாம ஊருக்கு போனதும் கல்யாணம் பண்ணிட்டாங்க மட்டும் தான் சொன்னேன். அம்மா தான் நம்ம வீட்ல பயங்கற சேட்டை பண்ணினாளே தன்ஷி அவளானு கேட்டு, இப்ப உன்னை நிச்சயம் வர சொல்றாங்க… வாயேன்… நம்ம பிரண்ட்ஸ் ஞாயிறு வருவாங்க. உன்னை அப்பா அம்மா முன்ன வர சொல்றாங்க. எனக்கும் ஒரு செட் கிடைக்கும்… ப்ளீஸ் டி.” என்று கெஞ்சினாள்.

    “அது இல்லை அவரும் வரனுமே” என்றாள் யோசனையாக.

    “அண்ணாகிட்ட நான் கேட்கறேன் போனை கொடு” என்றதும்

    “கவின்… மாம்ஸ்… இந்தாங்க…சௌமி பேசனுமாம்” என்றதும் யோசனையோடு வாங்கியவன் காதில் வைத்தான்.

    “அண்ணா அவள்கிட்ட இருந்து தள்ளி வாங்க… அண்ணா வர்ற ஞாயிறு எனக்கு நிச்சயம்.. அதுக்கு இன்வெட் பண்ண தான் அண்ணா.. நீங்களும் தன்ஷி கண்டிப்பாக வரனும்..”

  “அது வருகிறோம் மா சனி கிளம்பி வர்றோமே” என்றான். நேரத்திருக்கு சென்று திரும்பும் முடிவில்.

    “அண்ணா அம்மா அப்பா உங்களுக்கு விருந்து கொடுக்க கூப்பிட்டாங்கள்… அதுவும் இல்லாம அவளுக்கு வர்ற வெள்ளி பிறந்த நாள்… பிரண்ட்ஸ் எல்லாம் அவளுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்க விரும்பறோம் நீங்க நாளைக்கு இங்க வர்ற மாதிரி கிளம்ப முடியுமா ப்ளிஸ் அண்ணா… அடுத்த வருஷம் எல்லாரும் எங்க இருப்போமோ” என்று சோகமாக கேட்க

    “சரி மா வர்றோம்.. அவளுக்கு உங்க வீட்டுக்கு வழி தெரியுமா?” என்றான். இங்கே இருந்தால் அவள் பிறந்த நாளுக்கு என்ன ஆச்சரியம் கொடுக்க முடியும் என்ற

    “அதெல்லாம் சென்னை அத்துபடி அவளுக்கு… “

     “சரி மா” என்று போனை “ஷிகா இந்தா” என கொடுக்க

    “என்ன மாமா போக முடியாது தானே இப்ப தான் பயிர் கருகிச்சு.. நெல் விதைத்து இருக்க.. திலகவதி அக்கா அப்பத்தா வேற ஊரில் இல்லை” என்று முகம் வருத்தத்தில் சொன்னாள்.

    “அதெல்லாம் நாராயணன் அண்ணாவை பார்க்க சொல்லி போனை போட்டுடறேன்… நீ துணி மணி எடுத்து வை”

     “நாளைக்கே போகலாமா மாமா?” என்றாள் ஆச்சரியமாக. இங்கே அக்கா அவந்திகா முன் நடமாட கொஞ்சம் தனக்கு புது இடம் தேவைபட்டது. அதனால் கவின் போகலாம் என்றதும் சந்தோஷம் உண்டானது.

    “ம்….போலாம்” என்றவன் அவளுக்கு சந்தோஷம் கொடுக்கும் யாவையும் செய்யவே காத்திருந்தான். இதில் பிறந்த நாள் என்றதும் புது விதமாக பரிசை கொடுக்க யோசிக்க வேறு ஆரம்பித்து இருந்தான்.

     தன்ஷி கிளம்பும் குஷியில் பிறந்த நாளினை மறந்திருந்தாள். 

     அவந்திகா இதோ இன்று வந்து விடுவார்கள் இப்ப வருவார்கள் என்று தன்ஷிகா மகேஷ் சொல்லியபடி பழிவாங்க கடத்துவதற்கு நாள் பார்த்து காத்திருக்க தன்ஷி கவி இருவரும் சென்னை பஸ்ஸில் அருகருகே அமர்ந்து இருந்தார்கள்.

    ஜன்னல் காற்றின் உதவியால் தன்ஷி முடி கற்றைகள் நெற்றியில் தீண்டி முத்தமிட கவியரசன் மனதுக்குள் ‘என்னை தவிர எல்லாம் வெறுப்பேத்துங்க கம்பள் அவள் கன்னத்தை உரசி வெறுப்பேற்றுது, முடி நெற்றியில் முத்தமிட்டு வெறுப்பேற்றி உயிரை வாங்குது… இதுல இவ வேற செயினை பல்லால கடிச்சு… என் அவஸ்தை இருக்கே…’ என்று ஷிகாவையே பார்க்க, ஷிகாவோ கற்பகத்தின் திட்டால் அணிந்த சேலையும் அவனை இம்சித்தது.

     “ஷிகா நீ இந்த பக்கம் உட்காந்துக்கோ” என்றதற்கு

    “போ மாமா எனக்கு எப்பவும் ஜன்னல் சீட் தான்…” என்றவள் வேடிக்கை பார்க்க கவியரசன் தலை சாய்த்து அவளை காண அவளோ செல்பி எடுத்து சௌமிக்கு அனுப்பினாள். அதில் மிக அழகாக வந்த ஒன்றை எடுத்து ஸ்டேடஸ் வைத்தாள்.

     திலகவதி அவசரமாக விட்டு சென்ற போன் வீட்டில் இருக்க அதில் நோண்டி கொண்டிருந்த அவந்திகா கண்ணில் இந்த புகைப்படம் பட பைத்தியம் பிடித்தவள் போல மாறினாள்.

     அவள் இங்கு வருவாள் அதற்கு காத்திருக்க அவளோ எங்கோ புறப்படும் விதம் அறிந்து நொந்து போனாள்.

    அவள் வீட்டுக்கு வந்த அடுத்த கணம் கவியரசன் இருந்தாலும் தூக்க வேண்டும் என்று மகேஷிடம் கத்தி கொதித்து கொண்டு இருந்தாள். மகேஷ் அப்போ இன்னிக்கும் அவர்கள் வர மாட்டார்கள் என்று அறிந்து கொண்டான். அவந்திகாவிடம் அவள் இங்க வந்தா கடத்த எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு நீ வந்தா எனக்கு அறிவித்து விடு என்றான்.

     இங்கு தன்ஷி கவியரசன் தோளில் சாய்ந்து இமை மூடி உறங்கினாள்.

    தன்னவள் தன் தோளில் உறங்க பட்டும் படாமலும் நெற்றியில் ஒரு முத்தம் வைக்க

    “என்ன பண்ற நீ… தூக்கிட்டேன் நினைச்சு கிஸ் பண்ற…  அப்போ இத்தனை நாளும் கிஸ் பண்ணினியா?” போலியாய்  மிரட்டினாள் ஷிகா.

    “அம்மா தாயே.. கத்தாதே… இது பஸ்.. ஏதோ பர்ஸ்ட் டைம் கொடுத்துட்டேன். இதுக்கு முன்ன எல்லாம் தூங்கிட்டு இருக்கச்ச இரசிச்சு இருக்கேன் கிஸ் எல்லாம் பண்ணலை… அப்பத்தா பிராமிஸ்… வயல்ல கொடுத்தது தான் முதல் கிஸ்” என்று விடாமல் பேசினான்.

    “உஸ்ஸ்… என்னை கத்தாதே சொல்லிட்டு நீ கத்தற… விடு நான் எதுவும் கேட்கலை” என்றவள் திரும்பினாள்.

   ” ஷிகா மேல சாய்ந்து தூங்கு அதுல எனக்கு ஒரு நிம்மதி கிடைக்குதடி” என்றான். அவனின் பேச்சில் ஆமோதிப்பாய் தலை சாய்ந்தாள்.

     மாலை வர சென்னை இறங்கி ஆட்டோ பிடித்து தோழி வீட்டை சொல்லி அரை மணி நேரத்தில் அடைந்தார்கள்.

    கவின் வேஷ்டி சட்டை அணிந்து தன்ஷி சேலையில் வர சௌமி வாயை பிளந்து பார்த்தாள்.

     “அம்மா… இங்க வந்து பார்றேன் அதிசயத்தை” சௌமி கூப்பாடு செய்ய சண்முகம் சந்திரிகா வெளியே எட்டி பார்த்தார்கள்.

     “வா மா… வாங்க தம்பி.. எதுக்கு டி அதிசயம் அது இதுன்று கத்தற?”

     “அம்மா பாரு ஒருத்தி சேலை கட்டி இருக்கா?”

     “வீட்டுக்கு வந்தவர்களை அழைக்காம ஆரம்பிச்சிட்டிங்களா?” என்றதும் தன்ஷி

     “ஆன்ட்டி நான் இங்க இருந்த வரை ஜீன் குர்தா சுடி போட்டேன் பேரவல் கூட சேலை கட்டலை  மேடம் என்னை கலாய்க்கிறாங்களாம்.” என்று தன்ஷி  சொல்ல

     “அண்ணா கல்யாணத்துக்கு சேலை கட்டினாளா?” என்றே விசாரிக்க

    “கல்யாணம் என்பதே தெரியாது… இதுல… அவ” என்று கவின் ஏதோ சொல்ல

     ” மாமா அவர்களுக்கு எதுவும் தெரியாது சும்மா இரு” என்று தன்ஷி மெல்ல கிசுகிசுத்து சொன்னதும் கவியரசன் கடவுளே என்றது மனம்.

     முதலில் நலம் விசாரித்து குளிக்க அனுப்ப தன்ஷி தான் திருமணம் என்று மட்டும் சொல்லி இருக்கேன் இந்த அவந்திகா மற்ற விவகாரம் எதுவும் இங்க யாருக்கும் தெரியாது. சோ நார்மல் கணவன் மனைவியா இருப்போம் பயந்து கொண்டு இல்லாம… ஓகே வா” என்றதும் தலை அசைத்தான்.

   “எல்லாத்துக்குமே தலையாட்டலா?” என்று குளித்து உணவருந்த வர கவியரசன் சண்முகத்திடம் நல்ல நட்பில் கதைக்க ஆரம்பித்தார்கள்.

     கவின் வேஷ்டி சட்டை ஆடையே முதலில் ஈர்த்தது. படித்தவன் எவன் இப்படி தினசரி உடையாக உடுத்துகின்றான்.

    பெண்களை சேலை கட்டி கலாச்சாரம் அது இது என்று ஆயிரம் குறை சொல்லும் எந்த ஆடவனும் அதே கலாச்சார ஆடை வேஷ்டி அணிவதில்லை. பெண்ணாவது திருமணம் நல்ல நாள் நாள் கிழமை என்று வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்காக அணிந்திட ஆண்கள் அணிவது வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ முறை எண்ணி விடலாம்.

   சிலரோ திருமணத்திற்கு மட்டும் அணிந்து இருப்பார்கள் அவ்வளவே.

சண்முகம் இதனை மனம் விட்டு பாராட்ட கவியரசன் புன்னகையுடன் பதில் தர சௌமியா தன்ஷிகா இருவரும் அறைக்குள் இருந்தவாறு

   “இந்த அண்ணாவோடு வாழ உங்க அக்காவுக்கு கசக்குதா… தன்ஷி.. நிஜமாவே எனக்கு உங்க மேல செம கோவம் வருது டி. இதுல நீ அவளுக்கு என்று உன் வாழ்வை அழிச்சுக்காதே. அண்ணா காத்திருக்க வைச்சி ஏமாற்றத்தை… இங்க இருந்து கிளம்பியது நேரா ஹனிமூன் போங்க.. அதான் பெஸ்ட் டி” என பொரிய தன்ஷி யோசிக்க துவங்கினாள்.

     கவினுக்கு அக்காவை பிடிக்கவில்லை என்ற பட்சத்தில் இனியும் கவினை காக்க வைப்பதும் முட்டாள் தனமானது என்று புரிந்தது. ஆனால் அவந்திகா? அவந்திகா காதலித்தவனை தேடி பேசி பார்த்தால் என்ன?

   வீட்டுக்கு போனதும் அவந்திகாவிடம் கேட்டு அவள் காதலனிடம் பேசி பார்க்க வேண்டும் என்று பாசமிகு தங்கையாக எண்ணி கொண்டாள்.

    அங்கே சென்றால் இவளின் வாழ்வு மாற்ற அவந்திகா எடுத்த முடிவை அறிந்து இருந்தால் இப்படி தனக்கு ஆபத்தை தன்ஷிகா யோசித்து இருக்க மாட்டாள்.

தொடரும்

4 thoughts on “நிலவோடு கதை பேசும் தென்றல்-19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *