💜-18
சௌமியா வீட்டில் கவின் தன்ஷிக்கு மாடியில் இருக்கும் அறையை கொடுத்து இருக்க கீழே உணவுகள் உண்டு அறைக்கு வந்தார்கள்.
பின்னரும் தன்ஷி சௌமியா பேசி கொண்டு இருக்க, கவின் சௌமி அப்பாவிடம் பேசி முடித்து மேலே வந்தப்போதும், இன்னமும் தன்னவள் தோழியிடம் பேச அமைதியாக வந்து படிக்கட்டில் அமர்ந்து வெளியே பார்வை பதித்தான்.
தங்கள் ஊரில் ஒன்பது மணிக்கு ஊரே அடங்கி விடும் இங்கு மணி பத்து முப்பது ஆக இருப்பினும் சாலையில் போக்குவரத்து குறையாது போய் கொண்டிருந்தது.
தூரத்தில் வண்ண விளக்குகள் ஓடி செல்வதாய் எண்ணி பார்த்தான்.
சிறு பிள்ளை போல அங்கே கடக்கும் வண்டிகளை எண்ணி கொண்டு இருந்தான்.
சௌமி தான் “பாவம் டி அண்ணா… எனக்கு இந்த அண்ணாவை பார்த்தா இவர் மேல தப்பு இருக்கிறது போல தெரியலை. தேவையில்லாம உங்க அக்கா இந்த அண்ணா லைப்பை ஸ்பாயில் பண்ணி வைச்சிருக்காங்க. எவ்வளவு பொறுமை…
அம்மா நாளைக்கு நான்வெஜ் எடுக்க எது பிடிக்கும் கேட்டாாங்க உனக்காக சமையலில் கூட நான்வெஜ் வேணாம் தன்ஷி சாப்பிட மாட்டா… என்று அம்மாவிடம் சொன்னார்.
இது சின்ன விஷயம் தான் ஆனா எத்தனை பேர் பெண்களுக்காக இப்படி மாறறாங்க? பெண்கள் தான் ஆண்களுக்காக கறி சாப்பிட பழகுறாங்க.
வந்ததில் இருந்து உன்னை தொல்லைப்படுத்தலை புது இடம் வர மாட்டேன், தங்க மாட்டேன் என்று சொல்லாமல் தன்ஷிக்கு பிடிக்கும் மா சரி மா வர்றேன், என்று ரொம்ப பிகு பண்ணாம வந்து இருக்கார்.
யோசிச்சு பாரு… சிலர் அம்மா வீட்ல வந்து நம்மை விட ரொம்பா பந்தா பண்ணுவாங்க.
நம்ம மனைவி அவளுக்கு எப்படி கணவன் வீட்டில் புதுசா வந்து தங்குறா, கணவன் யாரு என்ன என்று கூட தெரியா வீட்டில் கூட மனைவி தன்னை அங்க பொருத்தி கொள்வது போல, கணவன் மனைவி வீட்டில் பொருந்தறது இல்லை.
ஆனா தன்ஷி அண்ணா உன் பிரண்ட் நான் இருந்தும் உனக்காக கூட்டிட்டு வந்து தங்க வேற செய்யறார்.
இப்ப கூட பாரு பேசறதை தடுக்காம அவர் பாட்டுக்கு இருக்கார். ஒட்டு கூட கேட்காமல்…
தன்ஷி அண்ணாவை உங்க அக்காவுக்கு அது இது என்று மிஸ் பண்ணாதே சரியா… நீ தான் லெமன்ரைஸ் மேல கிரஷ்
ஷா இருந்தியே. சரி சரி நீயும் அண்ணாவும் பேசு.. நான் வேற நந்தி மாதிரி காலையில் பார்க்கறேன். குட் நைட் டி… அப்பறம் அண்ணாவை ஏங்க வைக்காதே… வரட்டுமா” என்று சௌமி ஓட தன்ஷி கவியரசனை பற்றி தான் எண்ணியபடி வந்து நின்றாள்.
தான் ஆண் என்று தன்னிடம் உரிமை நிலை நாட்டவில்லை. அக்கா தவறு செய்த காரணத்தினால்… என்னை கல்யாணம் ஆனா கணம் பெண்மையை நாடிட வில்லை. தனக்கு நேரம் தருகின்றான். தான் கேளாமலே… கிராமத்தில் இருக்கும் இவனுக்கு எப்படி இந்த பண்பு.
இவனை அவந்திகா நிஜமாகவே தவறவிட்டு இருக்கின்றாள்.
இவள் வந்தது கூட அறியாது வண்டியினை எண்ணி கொண்டு இருக்க
“வர வர தென்றல் நிலவை பார்க்க மாட்டுது” என்றவள் அவன் திரும்பி பார்க்க பார்வை மாற்றி கொண்டாள்.
“ஷிகா எதாவது பேசனியா?” என்றான் கவியரசன்.
அவன் காதில் விழுந்தாலும்
“இல்லையே… ஏன் எதாவது கேட்டுச்சா என்ன?”
ஆம் என்றும் இல்லை என்றும் தலை அசைத்தான்.
அவனின் இந்த செய்கையால் மேலும் கவரப்பட்டு அவளை அறியாது “அய்யோ மாமா சோ ஸ்வீட்…” என்று கன்னத்தில் குழந்தைக்கு கொடுப்பது போல முத்தம் வைக்க கவியரசன் அவ்விடத்தில் இல்லை… எங்கோ ஒரு பெயர் தெரியாத நாட்டில் நின்றது போல முழித்தான்.
முத்தமிட்ட பிறகே தான் செய்த செயல் எண்ணியவள் நாணம் கொண்டு அறைக்கு சென்றிட கவியரசன் சாலையின் ஒரு கார் ஹாரனின் நடப்பவை எண்ணி சுதாரித்து பக்கம் பார்க்க தன்ஷிகா இல்லை.
அறையில் எட்டி பார்க்க அங்கே இருக்க சென்றான்.
எப்பொழுதும் போல அமைதியாகவே உறங்க செய்தனர்.
அடுத்த நாள் காலை கவின் ஷிகா எழந்து தேனீர் குடித்து மறுபடியும் அறைக்கு வந்து குளிக்க சென்றாள்.
சௌமியா அழைப்பால் மேலும் சில தோழிகள் வந்து சேர்ந்தனர்.
எல்லோருமே தன்ஷி திருமணம் அறிந்து அவளை காணவே ஓடி வந்தவர்கள். சௌமியா தடுத்தும் மாடிக்கு வந்தவர்கள் அங்கே வேஷ்டி சட்டை அணிந்து கம்பீரமாக (கவின்)ஒருவன் போனில் பேசி கொண்டு இருக்க கண்டார்கள்.
“தன்ஷி ஹஸ்பண்ட் சூப்பர் டி. நீ போன்ல பேசியது போல தான் இருக்கார்.” என்றாள் துளசி.
“பார்த்தாச்சுல வாங்க டி போலாம். அவங்களுக்கு பிரைவேசி கொடுங்க டி” என்று சௌமி விரட்டினாள்.
“போடி தன்ஷிகா அவ ஹஸ்பண்ட் பார்க்க தான் ஒரு நாள் முன்னதாக வந்ததே” என்றதும் சிரிப்பொலி கேட்டு கவியரசன் திரும்பினான்.
“பிரண்ட்ஸ் அண்ணா… நாங்க எல்லாம் ஒரே குரூப். இவ துளசி… இது மது… இவ ஹேமா… இவ ப்ரியா” என்றதும் எல்லோரும் ஹாய்… என்று கை அசைக்க இவனோ
“வணக்கம்… ரொம்ப சந்தோஷம். ஷிகா உள்ள இருக்கா…” என்று கும்பிட்டு பேசினான்.
” ஷிகா வா?” அது யாரு அண்ணா” என்று துளசி கேட்டாள்.
“ஏய் அவர் தன்ஷியை தான் சொல்றார் அப்படி தானே மாப்பிள்ளை சார்” என்றாள் ஹேமா. கவியரசன் சிறு குறுஞ்சிரிப்பில் கடத்திட ஹேமாவோ மற்றவர்களிடம்
” ஏய் அவ குளிச்சிட்டு வரட்டும் நம்மை எப்படி ஹாஸ்டலில் அவ எழுப்புவாளோ அப்படி பண்ணிடலாம்” என்றதும் எல்லோரும் தயாராக இருந்தார்கள்.
ஷிகா குளித்து முடித்து வெளியே வர துணி உலர்ந்த வந்தவளை பின்னால் பக்கேட் நீரால் மீண்டும் நனைத்திட ஷிகா எதிர்ப்பாராது திரும்பி பார்க்க தனது நட்பு சகாக்கள் என்றதும் ஆர்பரித்து மகிழ்ச்சி அடைந்தாள்.
பின்னர் நீரை ஊற்றியதற்கு வண்ணமையமாய் திட்டி தீர்த்தாள்.
“ஹாஸ்டல்ல இப்படி தானே பண்ணுவ அதான் பழிக்கு பழி” என்று சொல்ல எல்லரையும் மொத்தி விடுத்தாள்.
ஷிகா ஒரு அராஜக அழகியாக கண்ணில் பட இமைக்காமல் பார்த்து இரசித்தான்.
” ஷிகா மாப்பிள்ளை சூப்பர் டி கல்யாணத்துக்கு தான் கூப்பிடலை எப்ப எங்களுக்கு ட்ரீட்…” என்றார்கள்.
நாளைக்கு MGM தன் செலவில் அழைத்து செல்வதாக சொல்லி ட்ரீட் சொன்னாள்.
அன்று எல்லோரும் பரஸ்பர அறிமுகம் ஆகி கவியரசன் கூட நன்றாக பழகினார்கள்.
எல்லாரும் அண்ணா என்று விளிக்க ஹேமா மட்டும் “மாம்ஸ்” என்று ஷிகா போலவே அழைத்து ஷிகாவை வெறுப்பேற்றினாள்.
கவியரசன் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஷிகாவோ “டேய் லெமன் ரைஸ் உன் பார்வை தப்பா போச்சு கண்ணை நொண்டி விடுவேன் என்று மிரட்ட கவியரசன் பயந்தது போல நடித்து கண் சிமிட்ட அவளும் சிரித்திடுவாள்.
அன்றைய நாள் இப்படியே கழியந்தது.
அடுத்த நாள் காலை எட்டுக்கே கிளம்பினார்கள். ஒரு கேப் புக் செய்து வந்தார்கள்.
கவியரசன் டிக்கெட் வாங்கி தர துளசி, மது, ஹேமா, ப்ரியா, சௌமி, ஷிகா ஆறு பெண்ணின் ஒற்றை ஆடவனாக கவியரசன் நின்றான்.
அடிக்கடி மற்ற பெண்களுக்காக ஷிகாவோ விடுத்து தனித்து நின்றான்.
ஷிகாவோ இது நாள் வரை இருந்த நட்பை விட மன்னவனின் அணைப்பில் இருக்க ஆசைப்பட்டாள்.
ஷிகா ரைய்டு எல்லாம் இது வரை சென்றதில்லை. பயம் இருக்கும். அதனால் தோழிகள் கவியரசனிடம் விட்டு ஏறினார்கள்.
அவனோ “நீயும் போ ஷிகா”
“அய்யோ மாமா… எனக்கு ராட்டினம் எல்லாம் போனா தலை சுத்தும் வாந்தி வரும்.. சின்ன ரைய்டு மட்டும் போறேன்” என்று சொல்ல அவனோ வலுக்கட்டாயமாக அழைத்து ஏற்றினான்.
மேலே சுற்ற வானத்தின் மேலே சென்றவளுக்கு கைகள் தானாக கவியரசன் கைகளை கெட்டியாக பிடித்தது.
வானத்தில் இருந்தது போல கவியரசன் அவளின் தீண்டலில் லயிக்க உருகி போனான்.
அடுத்த சுற்றில்…. ஆமாம் அதே தான் வாந்தி போன்ற உணர்வில் ஷிகா நிற்க… பத்து சுற்றும் முடிந்து அவசரமாக இறங்கியவள் வாந்தி எடுத்தே விட்டாள்.
சாப்பிட்ட பொங்கல் அனைத்தும் எடுத்து முடிக்க தன் தலையில் தாங்கி இருக்கும் கையை பார்க்க கவியரசன் சட்டையில் கொஞ்சம் வாந்தியோடு நின்று பிடித்திருந்தான்.
ஷிகா தான் “சாரி மாமா அது எனக்கு ஒத்துக்கலை… நான் தான் சொன்னேனே” என்ற வருத்தம் இருக்க அவனோ லெமன் சோடா வாங்கி நீட்டினான்.
“குடி அப்போ தான் நெக்ஸ்ட் ரைய்டு போலாம்.”
” நெக்ஸ்ட்டா? ரெஸ்ட்டு போ என்னால முடியாது ஷிகா ரெஸ்ட்” என்று சொல்ல மற்ற தோழிகள்
“அண்ணா கடைசியாக இவளை ஏற்றி சாதிச்சிட்டிங்க எப்பவும் இப்படி தான் இந்த பக்கி இன்னிக்கு எல்லாத்திலும் இவளை ஏற்றி விடறிங்க” என்றதும்
“கண்டிப்பா” என்றான் கவியரசன்.
இங்கு தன்ஷி அவனை முறைக்க “அது எல்லாம் முறைச்சாலும் ஏற்று கொள்ளறேன் வா” என்று அடுத்த ரைய்டு அழைத்து சென்றான்.
அவனுக்கு அவளாக தன் கையை இறுக பற்றிடும் வாய்ப்பை இழக்க மனமில்லை. அதுவே காரணம். சில இடத்தில் வாந்தி என்ற பொழுதிலும் ஷிகாவும் அவனோடு வந்த முதல் அனுபவம் என்று சந்தோஷமாக இருந்தாள்.
ஹேமா வேறு ஷிகாவை வெறுப்பேற்ற கவியரசனை சைட் அடிக்க ஷிகாவோ
“டேய் ஏற்கனவே நான் போட்டியா வந்தாலும் ஒருத்தி உனக்காக மல்லுக்கு நிற்கறா என்று கவலைப்படறேன் இதுல உன்னை இன்னொருத்தி சைட் அடிக்கிற…
நீ முருகன் மாதிரி டூ மேரேஜ் பண்ணிட்டு ராமன் சொல்ற… இங்க கண்ணன் வேலை பார்த்த அவ்ளோ தான்.
ஏற்கனவே சொன்ன மாதிரி அம்மிக்கல்லை போட்டுடுவேன். மண்ட பத்திரம் என்றாள்” கவியரசன் அவளின் பொஸசீவ் எண்ணி மகிழ்ந்தார்.
நேரம் போக அங்கேயே உணவு பார்த்து கொண்டார்கள்.
இங்கு வந்தாலும் வேஷ்டி உடை அவன் மாற்றவில்லை. அதனால் தன்ஷி நட்பு அவனின் மீது மதிப்பு கூடியது.
பேச்சிலும் பழக்கம் வழக்கத்திலும் ‘நான் இது தான், யாருக்காகவும் மாற மாட்டேன் என்ற கோட்பாடு ஈர்த்தது.
மாலை வெளிவர அங்கிருந்த ஷாப்பிங் சென்றனர். ஷிகா பாராத போது கவியரசன் நாளை அவளுக்கு பிறந்த நாள் என்று சிலதை வாங்கினான் அவள் அறியாது.
இரவு உணவும் முடித்து வீட்டுக்கு வர மணி பதினொன்று ஆனது.
எல்லோரும் உறங்க சென்றனர்.
கவியரசனிடம் மட்டும் “அண்ணா கேக் அப்பா அம்மா ஆர்டர் பண்ணி இருக்காங்க பனிரெண்டுக்கு வந்து டிஸ்டர்ப் பண்ணுவோம் சாரி அண்ணா” என்று சென்றார்கள்.
கவியரசன் மணி பன்னிரெண்டை கடக்க காத்திருந்தான். தன் மனையாளுக்கு வாழ்த்து தெரிவிக்க…
Paaraaa…. Sir yenna surprise panna porarnu waiting
Kavin enna surprise kodukka poran
Kavin enna surprise kodukka poran super super super super super
Interesting😍
💕💕💕💕💕