💟-17
தன்னவளையும் நிலவையும் மாறி மாறி பார்த்தான்.
இன்னும் சில நொடியில் பிறந்த நாள் காணும் இவளையும் நிலவையும் பார்த்தவன் மணி பார்க்க 11.45 ஆனது.
தன்ஷி நட்பு பட்டாளம் வரும் அரவம் கண்டு எழுந்தான்.
சௌமி கையில் கேக் எடுத்து வர அவளுக்கு பின்னால் சௌமியின் தாய் தந்தையர் நின்றார்கள்.
” நான் எழப்பவா?” என்று கேட்டு மெல்ல அவளை தட்டினான்.
“அய்யோ அண்ணா அவ கும்பகர்ணனுக்கு தங்கச்சி இப்படி எல்லாம் தட்டினா எழுந்துக்க எல்லாம் மாட்டா… அதுக்கு வேற ஜடியா இருக்கு எடுத்துட்டு வந்துட்டேன்” என்று சொன்னாள் அவள் தோழி.
“அய்யோ தண்ணீர் இப்ப வேணாமே நைட் டைம் சளி பிடிக்கும்” என்றான்.
ஹேமாவோ ”அதெல்லாம் ஈரம்மாக்கலை இது வேற…” என்று ஒரு இறகு வைத்து தன்ஷி காலில் கூச செய்ய விதிர்த்தாள்.
“கவின் சும்மா இருக்க மாட்டீயா” என்று வாரி சுருட்டி எழுந்தாள்.
மற்றவர்களை கண்டு அசட்டு சிரிப்பை உதிர்த்து தன்னவனை பார்த்து கண்ணில் மன்னிப்பு வேண்டினாள்.
அவனோ மனதில் ‘அடிப்பாவி ஏதோ உன்னை தினமும் இப்படி சில்மிஷம் சேட்டை செய்ற மாதிரி என் பேரை சொல்லறா..’ என்று முறைக்க அவளின் மன்னிப்பில் அமைதியானான்.
“Happy birthday thanshi…” என்ற குரலில் இன்று தன் பிறந்த நாள் என்று நினைவு வந்தவள் அடுத்து விழி விரித்து
“டயர்டுல மறந்து போயிட்டான் கேள்ஸ்” என்றவள் கட்டி தழுவ மற்றவர்கள் மாறி மாறி வாழ்த்தினார்கள்.
கேக் நடுவில் வைக்க லைட் அணைத்து மெழுகு ஏற்றி வீடியோ எடுத்து கவியரசனுக்கு தான் முதலில் ஊட்டினாள்.
கவியரசன் மனம் சந்தோஷத்தில் நிறைந்தது. அதோடு அவன் கையில் இருந்த செயின் எடுத்து கொடுத்தான்.
“அண்ணா நீங்க போட்டு விடுங்க” என்று ப்ரியா சொல்ல கவியரசன் அதை தான் எதிர்பார்த்ததாக எடுத்து அவள் கழுத்தில் அணிய நெருங்கினான்.
அவளோ அவன் அணிவிக்க வருவதை இமைக்காமல் பார்த்தாள்.
அருகே வந்தவன் மெல்ல காதில் “தாலி கட்டும் பொழுது உனக்கு தெரிந்து இருக்காது… இப்ப இதை தாலி ஸ்தானத்தில் கட்டறேன் உனக்கு இஷ்டம் தானே…” என்றான் கவியரசன்.
“ம்.. ” என்று தலை அசைக்க அவனோ “லவ் யூ ஷிகா…” என்றான். அணிவித்து அதே மெல்லிய குரலில் காதலோடு.
தன்ஷி அதை உணர்ந்து பேச முடியாது அவனை காண நட்பு வட்டமோ கேக் பாதி வெட்டி எடுத்து தன்ஷி முகத்தில் அப்பி விட்டார்கள்.
கொஞ்ச நேரம் கேக் பூசி எல்லா ரகளையும் முடிந்திட ஆளுக்கு ஒரு கிப்ட் தர பெற்றாள்.
சௌமி அப்பா அம்மாவும் கிப்ட் தர கவியரசன் தன்ஷி சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். திருமணம் ஆன பொழுது தன்ஷிகா இருந்த கோவத்தில் யாரிடமும் ஆசீர்வாதம் வாங்கவில்லை.
இன்று தான் தம்பதியராக ஆசி பெற கவியரசன் உள்ளம் நிறைந்தது.
அடுத்து வாழ்த்தி முத்தமிட்டு நிற்க கவியரசன் மீண்டும் ஒரு கிப்ட் கையில் இருக்க ஹேமா பார்த்து அதை காட்டி கொடுக்க,
“அதையும் கொடுங்க அண்ணா” என்றாள் மது.
தயங்கி தயங்கி கொடுத்தான்.
சௌமி தாய் தந்தை கீழே இறங்கி செல்ல அடுத்து இவர்களையும் சௌமி போக சொல்ல… வானரங்களோ “அது என்ன கிப்ட் பிரிச்சா தான் போவோம்” என்றதும் ஷிகா பிரித்தாள்.
உள்ளங்கை அளவு கொண்ட வெள்ளை நிற காபி கப் அது… அதில் “I melt in ur hands” என்ற ஆங்கில வாசகம் இருந்தது.
“நாம இங்க அதிகப்படி கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்” என்று எல்லா வால்களும் கீழே இறங்கினார்கள்.
ஷிகா அதனை கண்டு பேச்சிழந்து நின்றாள்.
ராட்டினங்களில் எல்லாம் தான் அவனை பிடித்த கணம் அவன் இருந்த நிலை இப்பொழுது தான் எண்ணி அமைதியானாள்.
கையில் காபி கப்… கழுத்தில் அவன் சற்று முன் அணிவித்து செயின் என்று இருக்க இன்றே அவனிடம் தன்னை தொலைக்க கூட எண்ணி நிமிர அவனோ வெளியே வந்து பார்வை பதித்து அமைதியானான்.
“பதில் தெரிய வேணாமா? இங்க வந்து நின்னுட்டீங்க” என்றாள்.
“நீ என்னை விரும்பற ஷிகா. அது எனக்கு புரிஞ்சிடுச்சு… உன் மனதில் நான் இருக்கேன்… அதுக்கு பிறகு எதுக்கு பதில்.?” என்றான்.
” நான் பதிலுக்கு லவ் யூ சொல்லலையே…”
“சொல்லு…” என்றான் கையை கட்டி கொண்டு அங்கிருந்த விளிம்பில் அமர்ந்தபடி அவனை முறைத்து பார்த்தாள்.
“லெமன் ரைஸ் இப்படி கேட்டா எப்படி சொல்ல… நீ அன்எக்ஸ்பெக்டா சொன்ன நானும் அன்எக்ஸ்பெக்டா தான் சொல்வேன். போ இப்ப சொன்னா நல்லாவா இருக்கும்” என்று சொல்ல அவளை கண்டு சிரித்தான்.
“போடா சிரிக்குற… நான் போய் தூங்கறேன்” என்றவள் அறைக்கு செல்ல அவனோ மெல்ல சிரித்தான் போனில் அடுத்த வாரம் ஏற்காட்டில் தங்கள் வாழ்வினை ஆரம்பிக்க பயண டிக்கெட் முன்பதிவு செய்தான்.
தன் வீட்டிற்கு சென்ற பின் அன்றே அவந்திகாவை அவள் வீட்டுக்கு திட்டவட்டமாக சட்டத்தின் சாட்சியான விவாகரத்து பேப்பரை கையில் கொடுத்து அனுப்பி அதற்கடுத்த நாள் ஷிகாவோடு வாழ்வை பிணைக்க ஆசை கொண்டான்.
ஷிகா மனம் அறியாமையால் பயம் இன்றி பயண பதிவு செய்தான்.
தன்னில் பாதியானவளுக்கு ஆனந்த அதிர்ச்சி தர எண்ணி சந்தோஷம் கொண்டு இந்த நிமிடங்களை தியாகம் செய்து கொண்டு இருந்தான்.
அடுத்த நாள் அழகாக பொழுது விடிய அவள் கையில் ஒரு பட்டு சேலையை வைத்தான்.
“இது பெர்த் டே டிரஸ்… ” என்றதும் வாங்கி கொண்டவள் குளிக்க போனாள். கவியரசன் ஏற்கனவே கிளம்பி இருந்தான்.
உணவு முடித்து மயிலாபூர் கோவிலுக்கு அழைத்து செல்ல…
ஷிகா குளித்து முடித்து வந்தவள் தலைவாற அவளை இமைக்க மறந்து கண்டான்.
பொட்டு வைத்து திரும்பிய கணம் கவின் அவளின் இடை பற்றி தன் பக்கம் இழுத்து கீழ் உதட்டினை சுவைத்து இருந்தான்.
இதழ் சுவை கூட அது தொடர கூடாது என்ற வேகத்தில் எட்டி நின்றவன்
“ஹாப்பி பெர்த் டே… நைட் என்னால் முதலில் சொல்ல முடியலை… அதான் காலையில் முதல் ஆளா சொல்லிட்டேன்..
அப்பறம் இந்த கிப்ட் பிடிக்கும் என்று நம்பறேன்” என்றவன் வெற்றிடையில் முத்தமிட்டு தொட்டு தடவி, நமுட்டு புன்னகையில் வேகமாக வெளியேற ஷிகா தான் மந்திரித்து விட்டாள் போல நின்றாள்.
ஹேமா வந்து உலுக்கி “சாப்பிட கூப்படிட்ட என்ன மேடம் கனவுல இருக்க?” என்று இழுத்து சென்றாள்.
தன் அருகே அப்பாவியின் மொத்தமும் குத்தகை எடுத்தவன் போல அமர்ந்து இருந்தான்.
கேலியும் கிண்டலும் வழிய சாப்பிட்டு விளையாடி மகிழ்ந்தனர்.
கார்ட்ஸ் கண்ணாமூச்சி என்று… கவியரசன் எட்ட இருந்து வேடிக்கை பார்ப்பதை மட்டும் செவ்வன செய்தான்.
இடையே சண்முகம் சௌமியின் தந்தை “கல்யாணம் ஆனபின்ன இப்படி ஓடியாடி இருப்பாளா” என்று பெருமூச்சாக சொல்லி நகர்ந்தார்.
கவியரசன் அதை கேட்டு இவர்களை பார்த்தவனின் மனமோ,
திருமணமாகாத பெண்கள் எப்படி பட்டாம் பூச்சியாக திரிகின்றனர். இதில் திருமண பந்தத்தில் நுழைந்தவுடன் பெண்களின் குறும்பு, விளையாட்டு, சுதந்திரம் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டில் ‘திருமதி’ என்ற பதவியில் பெரியவளாக மாற்றி அவளின் விருப்பங்கள் முடக்கப்படுகின்றன என்பதை கண் கூடாக கண்டான்.
அதுவும் பேச்சு சுதந்திரம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கூட மாறி விடுகின்றது.
தன்னவளுக்கு இப்படி எந்த கட்டுபாடும் போட கூடாது அவள் என்றும் அவளாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவனுள் வந்தது.
அதற்கு முதல் கட்டமாக தான் இதோ இன்று அவளுக்கு ஷாப்பிங் அழைத்து வந்தவன் அவள் அதிகமாக உபயோகப்படுத்தும் குர்தா ஜீன் என்று எடுத்து கொடுத்தான்.
அவளுக்கே ஆச்சரியம் கிராமத்தில் படித்து வளர்ந்தவன் சுடிதார் அணிவதையே தவிர்த்து சேலை எடுக்க செய்வான் என்று சேலை பகுதிக்கு வர அவனின் தேர்வு தனக்கு பிடித்தவையில் இருந்ததும் கண்கள் விரித்தாள்.
“மாமா என்ன நீ வித்தியாசமா இருக்க” என்றதும் அவன் நினைத்த எண்ணத்தை எடுத்துரைக்க..
“கிரேட் மாமா நீ.. ஆனா மாமா ஜீன் குர்தி நான் இங்க தனியா ஹாஸ்டலில் இருக்கேன் என்றதால் அந்த மாதிரி உடை போல்டா இருக்க உதவும். இன்னொன்னு பைக் ஓட்ட கற்றுக்க வசதி அதான் அப்படி. எனக்கு சுடிதார் சேலை ஓகே தான்” என்று சொல்ல அதையும் வாங்கினான்.
அடுத்த நாள் நிச்சயதார்த்த நிகழ்வில் சௌமி அலங்கார தேவைதையாக மாற ஷிகா சேலை அணிந்து வந்து கவின் அருகே நின்றாள்.
“உனக்கு இந்த மாதிரி சந்தோஷமா தருணமா, அரட்டை, தோழிகளோட கேலி, அலங்காரம் இதெல்லாம் கிடைக்காம பண்ணிட்டேன் ஷிகா.
சாரி… கோவிலுக்கு சாமி கும்பிட வந்த உன்னை கண் மூடி சாமிகிட்ட வேண்டிட்டுயிருந்த உன்னை தாலி கட்டி எனக்கு சொந்தமாக்கிட்டேன்…” என்று வருந்தினான்.
“இப்ப எதுக்கு மாமா அதெல்லாம் நான் இப்ப சந்தோஷமா இருக்கேன்” என்று கூறினாள்.
” உன் விருப்பம் கூட கேட்க எனக்கு பயமா இருந்துச்சு…” என்று அருகருகே பேசினார்கள்.
“உண்மை தான் மாமா எனக்கு அவ்ளோ கோவம் இருந்தது. ஆனா இப்ப என்னவோ அப்படி தோனலை..
முன்ன அக்கா வாழ்க்கை பாழாக்கிட்டேன் என்று ஒவ்வொரு நிமிடமும் கஷ்டமா இருக்கும். இப்ப அப்படி இல்லை எனக்கான வாழ்வில் தான் நான் பொருந்திருக்கேன் என்று ஒரு நிம்மதி வருது.” என்றதும் அவள் கைகளை நிம்மதியோடு அழுத்த பற்றினான்.
அவனின் நிம்மதி நிலைக்குமா?!
👌👌👌👌💕💕💕💕💕💕💕