💖20
அவந்திகா இல்லாத இடம் என்றதில் நிம்மதி பரவ, “கவின் நாம இங்கேயே இருந்திடலாமா?” என்றாள் ஷிகா.
“இது உன் பிரண்ட் வீடு… நாம நாலு நாள் இருந்திட்டோம். இனி கிளம்பனும் மா…” என்றான் மென்மையாக.
“கவின்.. நான் இங்க ஒரு ஏரியால வீடு பார்த்துடலாமானு கேட்டேன்… ” என்றாள். சொல்லி விட்டு தலை குனிந்தாள்.
அவனோ யோசனையோடு அவள் தாடை பற்றி நிமிர்த்தினான்.
“நீ இங்கேயே இருக்க எதுக்கு ஆசைப்படற என்று தெரியுது. அங்க போன அவளை பார்க்கனும் அதானே…” என்றதும் கவின் தன்ஷி மடியில் தலை வைத்து உரிமையாக படுத்தான்.
” இங்க பாரு ஷிகா… அங்க போனதும் அவளை உங்க வீட்ல விட்டுடுவேன். அவள் பாடு உங்க அப்பா அம்மா பாடு… நாம ஜாலியா ஹ…” உலர வந்தவன் வாயை மூடினான்.
“பச்…. கவின் எனக்குள்ள உறுத்தலா இருக்கு டா… உனக்கு புரியலையா?” என்றதும் அவன் அவள் கழுத்தில் கை வைத்து முகத்தை தன் முகம் அருகே கொண்டு வந்தவன் இதழில் பட்டும் படாமலும் ஒற்றி எடுத்து “உறுத்துச்சா?” என்றான்.
இல்லை என்பதாய் தலை ஆட்டியவள் “கவின் ஆனாலும்… கவலையா இருக்கே… பேசாம அக்கா விரும்பியவனிடம் பேசி அவளை அவனோட சேர்த்து வைக்கலாமா? ” என்ற நேரம் சௌமி வர அவசரமாக கவின் அவள் மடியில் இருந்து எழுந்தான்.
தன்ஷிகா சொன்ன வார்த்தைகளை சரி வர கேட்காது போனான்.
“சாரி அண்ணா நந்தி மாதிரி வந்துட்டேன். அப்பா உங்களுக்கும் தன்ஷிக்கும் கிப்ட் தர கூப்பிட்டார்” என்றதும் கீழே வந்தார்கள்.
வந்த அனைவருக்கும் தாம்பல பையில் சில இனிப்பு மற்றும் சின்ன சின்ன ஸ்டேசனரி ஐட்டம் இருக்க மகிழ்ந்தார்கள்.
அதே நேரம் கவின் சின்னதாக ஐந்து காமாட்சி அம்மன் விளக்கு எடுத்து கொடுத்தான்.
“எங்க அப்பத்தா சொல்லும் எப்பவும் பொண்ணுங்களுக்கு ஒளி தருகின்ற பொருளை பரிசா தரனும் அது அவங்க வாழ்வில் இன்னும் அதிகமா வாழ்வை ஒளிமயமாக்கும் என்பார்கள் அதான் நான் இப்படி விளக்கு பரிசா எடுத்தேன்.” என்று ஹேமா ப்ரியா மது சௌமிக்கு தன்ஷி கையால் கொடுக்க செய்தான்.
“குத்து விளக்காட்டம் ஜொலிக்கும் அழகு மட்டுமில்லை அதை போலவே உறுதியா இருக்கனும்” என்றதும் கவினை ஆச்சரியமாக பார்த்தனர். இவனுக்கு இப்படி பரிசு தர எப்படி எண்ணம் வந்தது என்றே…
ஹேமா தான் “ஏன் தன்ஷி உங்க மாமாவை நான் இரண்டாதாரமா இருந்தாலும் ஓகே என்று கல்யாணம் கட்டிக்கிடட்டுமா” என்றதும் சௌமி சிரிக்க, தன்ஷி சௌமியாவை முறைத்தாள். விஷயம் தெரிந்தவள் அவள் ஒருவள் தானே.
” ரொம்ப முறைக்காதடி அவ இப்படி பேசறது புதுசா என்ன” என்றதும் தன்ஷி இயல்பானாள். மற்றவங்களும் கேலியாக சிரித்து கடத்தினார்கள்.
மீண்டும் எல்லோரும் கிளம்ப கவின் தன்ஷியும் ஊருக்கு கிளம்பினார்கள்.
ஒரே இருக்கையில் அவன் மீது உரிமையாக சாய்ந்து வந்தவளை எண்ணி மன மகிழ்ச்சியோடு வீட்டுக்கு போனதும் அவளை அவங்க வீட்டுல விட்டுட்டு ஷிகாவோட என் வாழ்க்கை பயணத்துக்கு தயாராகனும். ஷிகா எப்பவும் இதே சந்தோஷம் குறும்பு விளையாட்டு சுதந்திரத்தை எல்லாம் கொடுக்கனும்’ என்றவன் உறங்க சில பல நேரம் கடக்க ஊர் வந்து சேர்ந்தார்கள்.
வீட்டுக்கு மாலை நேரம் வந்து சேர, அப்பத்தாவோடு போனில் பேசி, பார்த்து உணவு முடித்து உறங்கினான்.
ஏதோ வீடு கொஞ்சம் அலங்கோலமாக தான் கிடப்பதாக தோன்றியது.
அதை எல்லாம் கவனிக்க கவின் விரும்பவில்லை. திலகா அக்கா போன அவசரம் என்று எண்ணி கொண்டான்.
அவந்திகா எல்லாம் அவன் பொருட்டாக எண்ணவில்லை. வந்த பொழுது கதவை திறந்தவள் தான் அறைக்கு சென்றாள் அவ்வளவே.
தன்ஷி தான் அக்காவிடம் அவள் விரும்பியவன் யார் என்ன என்று அறிய ஆவல் கொண்டாள்.
கவின் அறிய பேசினால் நிச்சயம் திட்டு விழும் என்பதால் அமைதி காத்தாள்.
அறையில் அவந்திகா ஒரு நீலாம்பரி போல ஆவேசத்தில் கிடந்தாள்.
தன்ஷியின் சந்தோஷ முகம் அவளுக்கு பற்றி எரிய செய்தது. இதில் அங்கு அவள் எடுத்த புகைப்படம் அனைத்தும் ஸ்டேடஸ் மூலமாக திலகா செல் வழியே கண்டவள் தன்ஷிகா செயினிலும் கண் இருந்தது.
கேக் ஊட்டிய புகைப்படம் எல்லாம் எண்ணெய் ஊற்றிய நிலை தான்.
அடுத்த நாள் காலை எழுந்து வயல் வேலை பார்க்க செல்ல வேண்டிய நிர்பந்தம் அமைய கவின் பல முறை அறைக்குள் இரு அவளிடம் பேசாதே வந்து அவளை உங்க வீட்ல விடுவேன் சொல்லியே சென்றான்.
அறைக்குள் இருந்தால் பரவாயில்லையே…. கவின் போன கொஞ்ச நேரத்தில் தன்ஷிகாவே அவந்திகாவை தேடி வந்தாள்.
“உனக்கும் மாமாவுக்கும் விவாகரத்து வந்துடுச்சு… மாமா உன்னை கட்டி கொண்டு கஸ்டப்படுது.. அவந்திகா… நீ விரும்பிய பையன் எங்க இருக்கான் சொல்லு அவனுக்கு கல்யாணம் ஆகலை என்றால் மாமாவை விட்டு பேச சொல்றேன்.
சே மாமா எப்படி பேசுவார்… என்ன இருந்தாலும் நீ பொண்டாட்டி… நான் பேசறேன்.” என்று பேசிய தன்ஷியை கண்டு மனதில் கனக்கு
போட்டவள்
“நீ மகேஷிடம் பேசறியா. ஆனா அரசனுக்கு தெரிந்தா திட்டு தான் விழும்” என்றாள்.
“அக்கா அவர் அட்ரஸ் சொல்லு நான் பேசறேன் மாமாவுக்கு கடைசியில் சொல்லிக்கறேன். என்னைனா திட்ட மாட்டார்” என்றவள் ஆடு தானாக வெட்ட சொல்வதை போல நின்றாள்.
அவந்திகாவோ ‘வெயிட் பண்ணு நான் வர்றேன்’ என்றவள் அறைக்கு வந்து மகேஷிடம் சொல்ல மகேஷோ “கவியரசன் எங்கே?” என்று கேட்டான்.
“பக்கத்தில் தான் வயலில் நிலத்தை நாலு நாள் காணததால் காண சென்றதாக சொன்னாள்.
“அவன் எப்படியும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவான் அதனால் அவன் ஒரு மணி நேரத்திற்கு வர முடியாத அப்போ தூக்கனும்… அதுக்குள்ள இவளுக்கு உண்மை தெரிய கூடாது.” என்றபடி யோசனை வழங்கி போனை அணைத்தான்.
அவந்திகா வெளியே வர கவியரசன் கதவை தட்ட சரியாக இருந்தது.
“காலையில் கதவை அடைத்து என்ன பண்ற?” என்றான்.
“அது… அது.. பீரோ… டிரஸ்… கீழே விழுந்தது. லாக்..” என்று திணற
“உன் முழு லக்கேஜ் எடுத்து வை. நீ உங்க வீட்டுக்கு போற… இனி இங்கே இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.” என்றவன் பதிலில் இது எப்பொழுதோ நடக்க வேண்டிய விஷயமாக இருப்பினும் அவந்திகா மனதில் இக்கணம் தீயாக காய்ந்தது.
கவியரசனை தன்ஷிகாவிற்கு விட்டு கொடுக்க முன்வரவில்லை. ஆனால் சட்டபடி எல்லாம் சரி செய்து முடித்து அனுப்பி வைப்பவனிடம் என்ன செய்ய? அழகில் மயக்குவது எல்லாம் கவியரசனிடம் நடக்காதா ஒன்று.
அதற்கு கல்லில் முட்டி கொள்வது போல என்பதை அறியாதவளா…?!
அறைக்கு வந்து மகேஷிடம் சொல்ல மகேஷோ மீண்டும் யோசித்தவன்.
பிளான் அப்படியே இருக்கட்டும் எப்படியும் உன்னை விட போக தன்ஷிகாவை கூட கூட்டிட்டு வர நினைக்க மாட்டான்.
அவன் உன்னை கூட்டிட்டு போகிற நேரத்தில் தன்ஷிகாவை நாங்க கடத்திடுவோம். கடத்திய பிறகு நீ எங்களை தொடர்பு செய்யாதே… சரியா..” என்றான்.
“மகேஷ் என்னோட வாழ்க்கை? கவியரசன் என்னை ஏற்றுக்க மாட்டான். நான் அங்க இருந்தாலாவது அவ இல்ல என்று கொஞ்ச நாள் அப்பறம் அவர் வாழ்வில் நுழைய முடியும். நான் இங்க இருந்து அவர் வாழ்வில் மறுபடியும் இணைய முடியாது.”
“முதலில் அவளை கடத்தறேன் மீதி அப்பறம் பார்க்கலாம்” என்றவன் கட் செய்து ‘இவ தலைகீழ் நின்றாலும் அவன் வாழ்க்கையில் இவளுக்கு பங்கு இல்லை.. லூசு… எனிவே எனக்கு அது பிரச்சனை இல்லை இவளை ஆட்டி வைக்க இந்த குணம் தான் எனக்கு பலம்’ என்று அவன் நண்பனுக்கு அழைப்பு தொடுத்தான்.
கவியரசன் அவந்திகாவை அழைத்து காரில் பின் பக்கமாக அமர சொல்லி வண்டி எடுத்தான்.
ஏற்கனவே அவந்திகா “மகேஷ் போன் பண்ணி இருக்கேன் இங்க வருகிறான். அவனிடம் பேசி பாரு… மாமா இல்லை அதனால வீட்டுக்கு வர சொல்லிட்டேன். இப்ப நான் இல்லை… பரவாயில்லை யா?” என்று கேட்டாள்.
தன்ஷிகாவோ “நான் பார்த்து கொள்கிறேன். நீ போ பேசி அவரை கல்யாணத்திற்கு சம்மதித்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்” என்று அக்கா வாழ்வில் மாற்றம் ஏற்பட தான் முயற்சி செய்வதை எண்ணி தன்ஷிகா மனம் நிறைவோடு பேசினாள்.
அவந்திகா மனமோ அடுத்து என்னவாக போகின்றதோ என்ற பயத்தில் தான் கிளம்பினாள்.
கவியரசன் அவந்திகாவை அழைத்து சென்றவன் அவந்திகா வீட்டில் வந்தான். கனகவேல் கற்பகத்திற்கு கண்ணீர் வரவில்லை மாறாக இனி இந்த அவந்திகாவை என்ன செய்வதோ என்ற கவலை ஆழ்த்தியது.
அவந்திகா அவளின் தந்தை வீட்டுக்கு வந்தவள் அறையில் முடங்கினாள். மகேஷிடம் இருந்து தன்ஷிகா கடத்திவிட்டதாக போன் வரும் என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“என்ன போன் பண்ணலை அவளை கடத்தியாச்சா கவியரசன் என்ன பண்றான்” என்று கேட்க மகேஷ் கோவத்தில் கத்தி முடித்தான்.
கவியரசன் கேடி உரமூட்டை வீட்டுக்கு வரும் என்று அந்த நாராயணன் என்று யாரையோ விட்டுவிட்டு போக, உரமூட்டை அடுக்க என்று ஆட்கள் வந்தமையால் தன்னால் எதுவும் செய்ய முடியலை என்று கத்தி முடித்தான்.
அரை மணி நேரம் கழித்து அதை தான் தன்ஷிகா சொல்லி மன்னிப்பு கேட்டாள்.
அவந்திகா இனி எதுவும் நடக்காது… இனி தன் வாழ்வு இங்கே இப்படி தான். தன்ஷி சந்தோஷமாக இருப்பாள் என்று வெறுப்பில் சுழன்றாள்.
கவியரசன் அவந்திகா யோசனையோடு இருக்க அவள் காணாத கணம் பெட்டியில் ஹனிமூன் செல்ல அவளுக்கு ஆடை எடுத்து வைத்தான்.
நாளை மறுநாள் செல்ல உடை அடுக்கி வந்து அவளிடம் சொல்லாமல், கட்டில் கீழ் வைத்தவன் இன்னும் தன்ஷிகா அறைக்கு வராதாது கண்டு எட்டி பார்த்தான். அவள் வந்ததும் காலையில் சர்ப்பிரைஸாக கூறி கிளம்ப சொல்வோமென மனக்கோட்டை கட்டினான்.
Super super super super super super super
Interesting