💖21
நீண்ட நாள்களாக உறங்காத விழிகள் கவியரசன் கண்கள். அவந்திகாவை அவள் வீட்டில் விட்டு விட்டு வந்தவன் தன்ஷிகா கூட நிம்மதியாக உறங்கினான்.
கண் விழித்து எழுந்தவன் அருகே ஷிகா சுவடு தெரியாது போக கிணற்று அருகே இருந்த நீரில் முகம் அலம்பி பிரஷ் செய்தவன். அந்த கிணற்று வாளியில் உள்ள நீரில் கொப்பளித்து
“தன்ஷி… தன்ஷி… எங்கடி போன… என்னை நாய்குட்டி மாதிரி தேட வைக்கிறாளே…” என்றவன் வாசலின் நிலபடியில் நிற்க, கேட் பாதி திறந்தும் பாதி மூடியும் ஒழுங்கில்லாத முறையில் திறந்து இருந்தன.
சற்று மெல்ல நடந்தவன் வாசலில் கோலமாவுகள் சிதறி கிடந்ததை கண்டான்.
ஒன்றும் புரியாமல் அருகே வந்தவன் பார்வை சிதறிய கோலமாவில் கொஞ்சம் அதிர்ந்து நின்றான்.
தன்ஷி… என்றவன் அருகே இருந்த பெண்மணியிடம்
“அக்கா தன்ஷிகாவை பார்த்தீர்களா? கோலம் போட்டு இருந்து இருப்பா?” என்றான்.
அவர்களோ “அரசு நாங்க வந்தப்பவே இப்படி தான் மாவு சிதறி கிடந்தது” என்றனர்.
“எப்ப அக்கா இருக்கும்?” என்றான் லேசான பதட்டம் கொண்டு.
“நான் 5.45 பார்த்து இருப்பேன் தம்பி” என்றதும் தன் வீட்டிற்கு தடுமாறி நடந்து சென்றவனின் தலை நிலபடியில் ‘ஙங்கென’ இடித்தது.
நெற்றி லேசாக இரத்தம் வர அதை எல்லாம் யோசிக்கும் நிலையில் கவியரசன் இல்லாமல் போனான்.
அவந்திகா தான் அவ வீட்ல விட்டுட்டுடோமே தன்ஷிகா எங்க போயிருப்பா?
அவளுக்கு இருக்கற ஒரே எதிரி மகேஷ் தான். மகேஷை நான் அடித்து போலீஸ் கம்பிளன்ட் கொடுத்து இருக்கேன் அதுல அவன் இரண்டு வருஷம் ஜெயிலில் களி தின்ன வைச்ச கோவமா இருக்கணும். ஆனா மகேஷ் இப்ப எப்படி? அப்படி பார்த்தா மூனு வருஷம் முன்னவே பிரச்சினை பண்ண ஆரம்பித்து இருக்கனும்… அதுவும் இல்லாம அதிகாலையில் தன்ஷி காணோம் என்றால் தன்ஷியை கண்காணிச்சுட்டு இருந்து இருக்கனுமே…
அவந்திகா இங்க இருந்தப்ப மகேஷிடம் பேசி இருப்பாளா? இல்லை மகேஷ் இன்னும் என்னை பழிவாங்க துடிச்சுட்டு இருக்கானா? ஆனா அவன் பழி வாங்கனும் என்றால் இவ்ளோ நாள் காத்திருக்கனுமா?
ஒரு வேளை அவந்திகா இதில் கூட்டா… அது எப்படி கருவை அழிச்சவனோட கூட்டு சேருவா? அவந்திகா வாழ்க்கை அவனால் தானே போனது.’ என்றவனின் குழப்பம் மீறி எதற்கும் ஒரு புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றான்.
அங்கிருந்த போலீஸிடம் புகார் கொடுக்க, ஏட்டு தான் இருந்தார். பணிக்கு இன்னும் அங்கே இருக்கும் அதிகாரி வராமல் போக புகார் மட்டும் பதிவு செய்து வீட்டுக்கு வந்தான்.
போனில் கனகவேலிடம் தன்ஷி காலையிலிருந்து காணோம் என்ற தகவலை சொல்லி இருந்தான். அதனால் போலீஸ் சென்று வந்த அதே கணம் கனகவேல் கற்பகம் அவந்திகா மூவரும் வந்து சேர்ந்தனர்.
வீட்டில் கோலமாவில் சிதறிய அதே கோலம் இருக்க அவந்திகா மனதில் சந்தோஷம் கொண்டாள்.
அதனை மறைத்து வாடிய வருந்திய முகத்தினை வாடகைக்கு கொண்டு வந்தாள்.
“என்னாச்சு மாப்பிள்ளை அவளை யார் கடத்தி இருப்பா?” என்றார் கனகவேல்.
“எதாவது விளையாட்டா செய்வா.. யார் வம்புக்கும் போக மாட்டாளே…?” என்று கற்பகம் கணணீர் திரையிட
‘எல்லாரும் அழுங்க… என் வாழ்க்கை பற்றி கூட யோசிக்காம என் இடத்துல அவளை வச்சிங்க இப்ப நல்லா அனுபவிங்க… என்னை இவ்ளோ உதாசீனப்படுத்தி ஏளனம் செய்தீங்க’ என்று மனதில் ஆக்ரோஷமான எண்ணங்களில் அள்ளி தன்ஷி இல்லாதது போக சந்தோஷம் கொண்டாள் அவந்திககா.
கவியரசனை கண்டவளோ இனி அவ திரும்ப மாட்டா… எப்படியும் ஒரு கட்டத்தில் உன் மனதில் இடம் பிடிப்பேன். எனக்கு நீ கண்டிப்பாக கிடைப்ப… என்ன உன் மனசுல தன்ஷிகாவை நினைச்சதுக்கு இப்ப நல்லா அழு’ என்று அவந்திகா திரும்பி இருக்கின்றான் என்று அவன் முதுகில் வெறித்த பார்வையில் எண்ணி இருக்க கண்ணாடி வழியே அவந்திகா குரூர எண்ணம் கண்ணாடி போலவே பிரதிபலித்தது.
“அவளை என்ன பண்ண? என்ன சொல்லி விரட்டின? தன்ஷி காணாம போனதுக்கு உனக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?” என்றான் கவியரசன் எரிமலை வெடிக்கும் நிலையில்.
“உங்களுக்கு எப்பவும் என் மேல தான் சந்தேகம்… அவளுக்கு குண்டூசி குத்தினா கூட அதுக்கும் நான் தான் பொறுப்பு.. உங்களுக்கு என்ன பார்க்க வந்ததுக்கு முன்னவே அவளை பிடித்து விட்டது. அவள் மனதில் வைத்து தள்ளி வைத்திங்க அந்த நேரத்தில் மகேஷ் அன்பா பேசி காரியம் சாதிச்சுகிட்டான். சரி தப்பு தான் கருகலைந்தது நீங்க கொடுத்த மாத்திரை சாப்பிட்டதால தான். நீங்க மட்டும் மாத்திரை கொடுத்து இல்லாமல் இருந்தா குழந்தையை வைத்து மகேஷ் கல்யாணம் செய்திருப்பேன், அவனோட என் வாழ்க்கை அமைந்து இருக்கோம்.
மகேஷ் தான் என் அங்கத்தை வியாபாரம் செய்ய தன்ஷிகாவை கேட்டது. என் மானம் போகாமல் இருக்க வேண்டும் என்று செய்த தப்பு… இப்ப என்னை நம்ப மாற்றறீங்க… இந்த நிமிஷம் என் வாழ்க்கையே கேள்விக்குறி இதுல அவ வாழ்க்கையை சீரழித்திடும் எண்ணம் எனக்கு எங்க வரும்….” என்றவள் தன்ஷி அறையில் அவள் காலேஜில் இருந்து கொண்டு வந்த பையில் இருந்து கத்தை கத்தையாக காதல் கடிதம் எடுத்து வந்து கவியரசன் முன் காட்டினாள்.
“இது எல்லாம் அவளுக்கு வந்த லவ் லட்டர்… இதுல எவன் கூட ஓடினாளோ?” என்ற கணம் சுள்ளென்ற அறை விழுந்தது.
கவின் தான் அறைந்து இருந்தான்.
“மாப்பிள்ளை இவள் தான் அங்க இருந்தாளே இவளுக்கு என்ன தெரியும். அடிக்காதீங்க. ஏற்கனவே வாழ்க்கையை இழந்தவ” என்றார் .
அவர்கள் பேசியதை கண்டுக்காது “என் வாழ்க்கையை சூனியம் ஆக்கிய பொழுது கூட உன்னை அறைய யோசித்து இருந்தேன். ஆனா என் ஷிகாவை பற்றி பேசின கொன்று புதைத்திடுவேன்… அவ என்கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தா இந்த கடிதம் எல்லாம் கணவனோட தோளில் சாய்ந்து படித்து இரசித்து காட்டனும் என்று.
என்னிடம் ஏற்கனவே சொல்லிட்டா… உனக்கு தெரியாதுல ஷிகா என்னை விரும்பறா… உன்னை பத்தி சொல்லாமலே… அவ என்னை நேசிக்க ஆரம்பித்துட்டா… உன்னை பத்தி சொல்லி அவ கற்பை காப்பாற்றி உன்னை வெறுத்து அவ வாழ்க்கையை எனக்கு தர முடிவு பண்ணலை..
எனக்காக என் காதலுக்காக என்னை ஏற்று கொண்டவ என் ஷிகா…” என்றதும் அவந்திகாவிடம் ஏற்கனவே இருந்த கோவம் பண்மடங்காக மாறியது.
“என் ஷிகா என் ஷிகா என்று சொல்லறல, இந்நேரம் சென்னைக்கு போனவ உன் ஷிகாவா இருக்க மாட்டா ” என்று சொல்ல கவியரசன் மீண்டும் அறைய அவந்திகா வாசலில் போய் சுருண்டு விழுந்தாள்.
அங்கே போலீஸ் உடை அணிந்த சரண் நின்று இருந்தான்.
போலீஸை கண்டதும் அவந்திகா எழுந்து “சார் பாருங்க முதல் மனைவி நான். என்னை அடித்து உதைத்து விவகாரத்து பத்திரத்தில் இப்படி கையெழுத்து வாங்கி, என் தங்கையை கட்டி கொண்டார். இப்ப என் தங்கை எவன் கூடவோ ஓடி போனதுக்கு என்னை அடிக்கிறார்” என்றதும்
“ஏம்மா உன் பெர்பாமன்ஸ் சூப்பரா இருக்கு. என்ன செய்ய நாங்க முதலயே வந்துட்டோம். கவியரசன் போல நாங்களும் உன் முகபாவத்தை பார்த்திட்டோம்… கடைசியா பேசினியே அதையும் கேட்டுட்டோம். என்ன யாரை விட்டு கடத்தி வைத்திருக்க?” என்று அமர்ந்து கேட்டார்.
அவந்திகாவுக்கு போலீஸ் நமக்கு இனி கை கொடுக்காது என்று தாமதமாக உணர்ந்து முறைக்க அதே நேரம் போலீஸ் மிரட்டினார்கள்.
அவந்திகா மகேஷ் எண்ணிற்கு கால் பண்ணி கொடுக்க போலீஸ் கவின் சொல் படி பேசினாள்.
“எங்க இருக்க மகேஷ்? தன்ஷிகா கடத்திட்டீயா?” என்றாள்.
“ஆமா… உனக்கு எப்படி தெரியும்.. ஓ..ஓஹோ… கழுதை கேட்டா குட்டி சுவர்… தன்ஷிகா காணோம் என்றதும் உன்னை அடித்து நான் கடத்திட்டேனு கண்டுப்பிடிச்சுட்டானா அவன்… அவன்கிட்ட போனை கொடு” எள்ளி நகையாடினான் மகேஷ்.
கவினோ “டேய் என் தன்ஷி எங்க டா… ஒழுங்கு மரியாதையா தன்ஷிகாவை ஒப்படைச்சுடு.. அவந்திகா கட்டிக்கூட்டிக் கொண்டு போ… நானும் தன்ஷியும் உன் கண் முன்ன வராம வாழறோம்” என கெஞ்சினான்.
“டேய்… இரண்டு வருஷம் உன்னால் களி தின்ன ஜெயிலுக்கு போனேன். மறக்க சொல்லறியா? வெளிய வந்தா எவனும் வேலை தரலை… காசுக்கு எப்படி அலைஞ்சேன் தெரியுமா.? வெளிய வந்து இரண்டு வருஷம் உன்னை தன்ஷிகாவே நெருங்க முடியலை..
அவ எங்க என்று கூட தெரியலை. போன வருஷம் அவகிட்ட போயி கடத்த போனா கரத்தே கத்துக்கிட்டு கடத்தவங்களை அடிச்சு போட்டுட்டு செயின் திருட்டு கேஸ்ல என்னை மறுபடியும் உள்ள தள்ளிட்டா… ஆறு மாதம் மறுபடியும் ஜெயில்.. வெளிய வந்தவுடனே அவளை தூக்கனும் இருந்தேன் நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்கிற…
எனக்கு எப்படி இருக்கும்.. பரவாயில்லை இப்ப கடத்தி உனக்கு அந்த வலி புரிய வைச்சிடுவேன்… அப்பறம் என்ன சொன்ன அவந்திகா கட்டிக்கவா… அவ பச்சோந்தி மாதிரி ஆளை மாற்றுவா நான் என்னை அடைகாக்கனுமா… எனக்கு அவ தேவையே இல்லை… அவளை ஏற்கனவே கற்பமாக்கி எச்சி படுத்தியாச்சு.. இனி அவ குப்பை… எனக்கு இந்த தன்ஷிகா தான் வேனும்… அதுவும் உன்னை அழ வைத்து ரசிப்பேன்.
முடிஞ்சா கண்டுபிடி. சென்னை பெரிய நகரம் என்னை எங்க வந்து தேடுவ….? நான் இந்த போன் நம்பர் இரண்டையும் தூக்கி போட்டுடுவேன்.” என்று வில்லனாய் சிரித்தான்.
“என் ஷிகா தேடி வந்து காப்பாத்துவேன் டா…” என்று பதிலுக்கு பேசினான்.
“வா… நீ எப்படி வர, எவன் கூட வர்ற என்று நானும் பார்க்கறேன். அங்க இருக்கற போலீஸ் எல்லாம் இங்க வந்து பேசி புரிய வைக்கிறது குள்ள தன்ஷிகா என் கை பாவையா சிக்கி சின்னாபின்னமா போயிருப்பா. எவன் எவனோ நுகர்ந்து எச்சியிலையா இருப்பா.” என்று துண்டித்தான்.
கவியரசன் உடைந்தவனாய் மாற, அவந்திகாவை பெற்றவர்களோ இப்படி ஒரு மகளா என்று அவந்திகாவை கண்டு அதிர்ந்தார்கள்.
“மிஸ்டர் கவியரசன் இங்க அந்த பெண் இல்லை என்று இவங்க சொல்றாங்க… இனியும் தாமதிக்க கூடாது. நீங்க சென்னைக்கு போயி கமிஷனரிடம் நேரிடையா கம்பிளன் பண்ணுங்க. நான் கேஸ் டீடெயில் அவருக்கு பேக்ஸ் பண்ணறேன். எதுக்கோ இந்த மூதேவியை கூட்டிட்டு போங்க… நேரத்தை கடத்தாதீங்க… இங்க இருக்கற வேலை முடித்து நானும் வர்றேன் கிளம்புங்க” என்றதும் தமாதப்படுத்தாமல் கவினும் காரினை எடுத்து அவந்திகாவை தள்ளி சென்னைக்கு விரைந்தான்.
வரும் வழியில் எல்லாம் “அரசு… ப்ளீஸ் அவளை தேடாதே நான் இனி உன் சொல்படி கேட்பேன் எனக்கு மகேஷ் வேணாம். எனக்கு நீ தான் வேணும். என்னை ஏற்றுக்க…” என்றவள் புலம்ப எதையும் காதில் ஏற்றாமல் 4மணி நேர பயணம் இரண்டரை மணி பயணமாக அசுர வேகத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தான்.
பூனையை மடியில் கட்டி கொள்வது போல தான் இவளை அழைத்து வந்தது என்று சௌமி வீட்டில் விஷயம் சொல்லி கவியரசன் மட்டும் கமிஷனர் அலுவலகம் சென்றான்.
அங்கே ஏகப்பட்ட முட்டுக் கட்டைகள் இருக்க அதில் கமிஷனர் இன்னும் வரலை என்ற கணம் சோர்வாய் காத்திருந்தான்.
மணி தற்பொழுது பதினொன்று ஆக காலை ஆறு மணியில் இருந்து, தான் படும் அவஸ்தை இந்த கடவுளுக்கு புரியவில்லையா? என்று கணத்தது.
அங்கே இருந்த ஒருவரிடம் தனது புகார் பற்றி சொல்லி பேக்ஸ் வந்ததா என்று கேட்க “சரண் சார் அனுப்பியது வந்திடுச்சு சார்” என்றார்.
“உட்காருங்க இங்க கமிஷனர் வர நேரமாகும். ஒரு கஞ்சா கேஸ் போயிட்டு இருக்கு வந்து தான் பொறுமையா பார்ப்பார்” என்று சொல்ல கவியரசன் மனம் பதட்டமானது.
கவியரசன் ஒன்றும் சிறுபிள்ளை இல்லை. எந்த இடம் போனாலும் நேரமெடுக்க தான் செய்யும். தான் உயிருக்கு மேலானவள் அதனால் நான்கு மணி பயணம் கூட இரண்டரை மணி பயணமாக வேகமெடுத்து ஓட்டி வரலாம் அதே போல மற்றவர்கள் இருப்பார்களா?
எண்ணிய கணம் ஷிகா எந்த நிலையில் இருக்கின்றாளோ என்று எண்ணவே அச்சம் கொண்டான்.
ஏற்கனவே மயக்கத்தில் இருந்தாலும் அவளை அடைய நினைத்த மிருகம் தானே மகேஷ் என்று எண்ணுகையில் கண்ணீர் ஆறாக வழிந்தன.
ஆனால் தான் என்ன செய்ய? எங்கு போய் தேட என்று தடுமாறினான்.
அங்கே இருந்த ஒரு ஏட்டு கவியரசன் நிலை கேட்டு முடிக்க வருந்தினார்.
கமிஷனர் வந்து நேராக ஏசி ஆன் பண்ணி டீ ஆர்டர் செய்தார்.
“சார் சரண் ஒரு கேஸ் பைலை பேக்ஸ் பண்ணி இருக்கார். கொஞ்சம் அவசரம் என்று..” இழுக்க
“யோவ்.. நான் கமிஷனரா நீயா? வந்து ஒரு வாய் காபி இறங்கல அதுக்குள்ள உங்களுக்கு சேவை செய்யனுமா… பொறுயா…” என்றார்.
இந்த பதில் கேட்டு கவியரசன் நொந்து விட்டான். பெரிய இடம் என்று இங்கே வந்தால் இப்படி தான் நடக்குமா? இவர்களே தாமதப்படுத்தினால் எங்கே சென்று ஷிகாவை தேடுவேன் என்று கலங்கி அப்படியே செய்வதறியாது இடிந்து போனான்.
அங்கிருந்த போலீஸ் ஏட்டு மெல்ல கவியரசன் அருகே வந்து “இங்க காத்திருக்கறதுக்குள்ள நம்ம நிலை தான் டேன்ஞர் ஆகும். நான் சொல்றேன் அங்க போ… இந்தா…” என்று ஒரு விலாசம் தர அது அசிஸ்டண்ட் கமிஷனர் என்று பெயரிட்ட கார்டை தாங்கியிருந்தது.
ஏட்டை விநோதமாக காண, “கண்டிப்பாக போ… உனக்கு உன் மனைவி 24 மணி நேரத்தில் கண் முன்ன நிறுத்துவார் அவர். நம்பி போ நம்மளை மாதிரி அவசரத்துக்கு வர்ற கேஸ் என்றாலும் மதிப்பும் உணர்வும் புரிந்து, யாருக்காக என்றாலும் ரிஸ்க் எடுப்பார்.” என்று நம்பிக்கையாக பேசி சென்றார்.
கார்டையும் பேசி விட்டு போகும் ஏட்டையும் மாறி மாறி பார்த்தான் கவியரசன்.
Interesting
Ayyo sigavukku ethuvum aga koodathu sister
Interesting