Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்-22

நிலவோடு கதை பேசும் தென்றல்-22

 💖22

கவியரசனுக்கு நம்பிக்கை இல்லை கமிஷனர் அலுவலகத்தில் நேராக பார்த்து கொண்டு இருக்கின்றான்.

வந்து இருபது நிமிடம் நேரம் தான் விரயமாகிறது. துரும்பு கூட எடுத்து வைத்தது போல தோன்றவில்லை.

மகேஷ் ஒன்றும் நல்லவன் அல்ல நேரம் பார்த்து இருப்பவன் தன்னவள் நிலை என்னவோ என்ற கவலையில் தானாக அந்த இடத்தை விட்டு வெளி வந்தவன்.

அசிஸ்டண்ட் கமிஷனர் என்ற பெயரை பார்த்தவன் கமிஷனர் விட அசிஸ்டண்ட் கமிஷனர் எளிதில் கண்டறிய முடியுமா என்று எல்லாம் யோசித்தாலும் கால்கள் அவன் காரை நோக்கி சென்று நின்றது.

கூகுளில் லோகேஷன் போட்டு அந்த இடம் வந்து நின்றான்.

இதற்கே நேரம் விரைந்தால் அவளை எப்படி காப்பாற்ற.? முதலில் அவளை எங்கே தேட என்று தான் தட்டு தடுமாறி நின்றான். 

“யாரை பார்க்கனும் சார்?” என்றார் வெளியில் இருந்தவர் கேட்க

“என் ஒய்ப் கிட்னப் பண்ணிட்டாங்க. யாரு செய்தா என்று தெரியும் ஆனா எங்க இருக்காங்க என்று தெரியாது. அசிஸ்டண்ட் கமிஷனர்… த..ர்..ஷன்” என்று கார்டை நீட்டினான்.

“உள்ள தான் இருக்கார் போன் பேசிட்டு இருக்கார். நீங்க போங்க…” என்று சொல்ல அந்த கவியரசன் கண்கள் கலங்கியவாறு வந்ததும், திரும்பி நின்றவனோ கவினை அமர கூறி செய்கை  செய்து, நொடியில் வாட்டர் பாட்டில் எடுத்து கொடுத்தான். 

  கண்களால் அருந்த சொல்லிவிட்டு போனில்.

“அவனுக்கு எவன் சப்போர்ட் பண்ணி வந்தாலும் இங்க அனுப்பு. பிடித்து வைத்தவனை பற்றி கேட்டா எனக்கு தெரியாது ஒரு வார்த்தையில் முடிச்சிடு” என்றான் அந்த தர்ஷன். 

“….”

“கமிஷனர் போனா… அதெல்லாம் ஒன்னும் கிழிக்க முடியாது. அதே பதில சொல்லு வை” என்று திரும்பியவன் கைகள் முறுக்கேறியிருந்தது. 

 பரந்த தோள்கள் எதற்கும் அடங்காதவனாக உன் பிரச்சினையை என்னிடம் சொல், அதை நிவர்த்தி செய்யும் திடம் என்னிடம் உண்டு என்ற தோற்றம் கவியரசனுக்கு தெம்பு தந்தது.

“உங்க ஒய்ப் பேர்.? யார் கிட்னாப் பண்ணியது? எதுக்காக இருக்கும்? என்று டீடெயில் சொல்லுங்க” என்று இருக்கையில் அமர்ந்தவன் நிமிர்ந்து கேட்க தான் வெளியே இருந்தவரிடம் தானே சொன்னோம் என்று விழித்து நின்றான்.

“வாட் ஹெப்பன்?” என்றது அசிடண்ட் கமிஷனர் தர்ஷன் குரல். (நம்ம காதலாழி நாவலின் நாயகன் தர்ஷன் ஜஸ்ட் கெஸ்ட் ரோல்.)

“அது கேஸ்… எங்க ஊரு சரண் கமிஷனருக்கு பேக்ஸ் அனுப்பி இருந்தார். இங்க…

“ஒன்செகண்ட்..” என்றவன் போனில் கமிஷனருக்கு வந்த பேக்ஸ் “சரண் அனுப்பிய கேஸ் பேக்ஸ் எனக்கு அனுப்புங்க” என்றவன் அடுத்த சில நிமிடத்தில் வந்து சேர அதை எடுத்து பார்த்தான். அதற்குள் கவின் மூலமாகவும் சிலதை கேட்டு அறிந்தான். 

“இப்ப உங்க மனைவி எத்தனை மணியில் இருந்து காணோம்? அந்த ராஸ்கல் எத்தனை மணிக்கு கால் பண்ணான்? உங்க முதல் மனைவி அவந்திகா இப்ப எங்க இருக்கா? தன்ஷிகா எப்படிப்பட்ட பொண்ணு… ஐ மீன் பயந்த சுபாவமா? இல்லை போல்டா?” என்றான் கேள்வியை அம்பு போல வைத்தான் தர்ஷன்.

“சுமார் 6:15குஅவள் எங்க வீட்ல இல்லை என்பது தெரிந்தது. 7:00 மணிக்கு கம்பிளைன் கொடுக்க எங்க ஊர் ஸ்டேஷன் போனேன் ஆனா அங்க சரண் சார் இல்லை கம்பிளைன் மட்டும் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தேன். 

அவந்திகா தான் முகத்தில் தெரிந்தது தன்ஷிகா காணாமல் போனதுக்கு அவ தான் சந்தோஷமா இருந்தா… அடிச்சதும் ஆமா என்று ஒப்புக்கொண்டா அதே நேரம் சரண் வந்துட்டார். அதே ஊர் என்று கூட்டிட்டு வந்துட்டார் ஏட்டு அண்ணா.

அப்போ எட்டு டூ ஒன்பது இருக்கும் மகேஷ் போன் பண்ணி தன்ஷி கடத்தியதை எண்ணிடம் சொன்னான்.

தன்ஷி ரொம்ப சுட்டி, தைரியமான பொண்ணு. கராத்தே எல்லாம் கற்று இருக்கா. யாருக்கும் பயப்பட மாட்டா. தெளிவானவ.. நான் பிரச்சனை பற்றி முன்ன சொல்லி இருந்தா ஒரு வேளை இது நடந்து இருக்காது” என்று குலுங்கி அழுதான். 

“நீங்க இங்க எப்போ வந்தீங்க” என்றான் அதிசயமாக. 

“பதினொன்று… கமிஷனர் ஆபிஸ்ல அரை மணி நேரம் வேஸ்டா போச்சு… சார் அவன் எங்க இருக்கான் என்று எல்லாம் எனக்கு தெரியாது. வேகமா சரண் சொன்னதால கார் எடுத்துட்டு வந்துட்டேன்.” என்று கவின் உடைந்து  போனான். 

“லுக் நெக்ஸ்ட் என்ன பண்ண யோசிங்க.. இப்படி கலங்கி வருத்தத்திலேயே இருக்காதிங்க..

 உங்களை அறியாம நீங்க செய்தது. நீங்க இப்ப இங்க வந்தது. ஐ மீன் சென்னைக்கு… 

   அந்த கல்பெர்ட்டுக்கு நீங்க இவ்வளோ விரைவில் வருவீங்க என்று எண்ணி இருக்க மாட்டான். நீங்க இங்க வந்த நேரமும் அவன் சென்னை வந்த நேரமும் சரியா தான் இருக்கும். சோ பீ போல்ட்… உங்க ஊரில் உங்க வீட்ல இருந்து போற எந்த இடத்திலாவது சிசிடிவி இருக்கா?” என்றான் தர்ஷன்.

“சார் அது கிராமம்… அங்கெல்லாம் வீட்டுக்கு வீடு இருக்க வாய்ப்பு இல்லை” என்றான் கவியரசன்.

“கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. அங்கிருந்தோ இல்லை கொஞ்சம் தள்ளி ஏதாவது மெயின் கடை.. ” கவியரசன் யோசிக்க அதே நேரம் அனுமதியின்றி உள்ளே நுழைந்தார் கமிஷனர் நெல்சன்.

“தர்ஷன் அந்த கஞ்சா கேஸ்ல பிடித்தவர்களை எங்க வைச்சிருக்க?” என்றார். 

“உங்களுக்கு எதுக்கு சார்” என்றான் நக்கலாக.

“ஒரு உயர் அதிகாரி நான். என்கிட்ட சொல்ல முடியாதா… அவனுங்க எங்க?” என்று கேட்டார். 

“அக்யூஸ்ட் தேடி அமைச்சர் போன் கால், அவனுக்கு ஒரு மண்ணும் சொல்லலை என்றதும் உங்களையே அனுப்பிச்சுட்டாங்களா? வெல்… சார் நீங்க கமிஷனர் தானே… இல்லை கஞ்சா விற்பனை செய்தவருக்கு ஒன் ஆப் த வொர்க்கரா…” என்றதும் அவருக்கு வேர்வை பூத்தது.

“கவின் யோசிச்சிட்டீங்களா… ஷாப்பிங் பால் ஜெவ்லரி ஷாப் டிரஸ் இப்படி ஏதாவது..” என்றான் கமிஷனரை பொருட்படுத்தாது.

“சார்… ஒரு ஜெவல்லரி கடை இருக்கு.. சிசிடிவி வெளிய இருக்கும். ஆனா.. “

“பைன் நாம நெக்ஸ்ட் வேலையை பார்ப்போம். கமிஷனர் சார் கொஞ்ச நேரத்தில் டீ வரும் நிம்மதியா டீ குடிச்சுட்டு கிளம்புங்க. நான் இன்வலா இருக்கற கேஸ்ல அக்யூஸ்ட் என் கஸ்டடி தான் யாருக்கும் சொல்ற ஐடியா எனக்கு இல்லை… லீகலா எப்ப கோர்ட்ல நிறுத்தணுமோ அங்க நிறுத்திப்பேன்” என்றவன் கவின் வாங்க என்று அழைத்தான்.

எங்க என்று அறியாது கவின் தர்ஷனோடு இடம் பெயர்ந்தார்கள்.

தர்ஷன் அவன் வண்டியில் பயணித்து உங்க கார்ல போகலாம். என்றவன்

‘அங்கே இருந்தேன் அடிச்சிடுவேன் இடியட்…’ என்று கமிஷனரை பற்றி கடுப்பில் இருந்தவன் போனில் சரணுக்கு அழைத்து கவின் குறிப்பிட்ட மேகலை ஜெவல்லரி சென்று அங்கே காலை 5.45 முதல் 6.30 குள் ஏதேனும் வண்டி கிராஸ் செய்து உள்ளதா என்று பார்க்க, கொஞ்ச நேரத்திலே மகேஷ் கார் அகப்பட்டு கொண்டது.

” சார் நீங்க சொன்ன மாதிரி அந்த டைம்ல ஒரு கார் ஸ்பீடா கிராஸ் ஆகி இருக்கு சென்னை ரிஜிஸ்டரேஷன் கார் நம்பர் **** **** என்று சொன்னதும் நன்றி கூறி அணைக்க தர்ஷன் சென்னை சிட்டி சிக்னல் கண்ட்ரோல் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான்.

“தம்பி வாங்க வாங்க… என்ன தம்பி கேஸ்ஸா” என்று வரவேற்றார் கணேசன் அண்ணா.

” ஆமா அண்ணா… அண்ணா வந்தவாசி டூ சென்னை மெயின் எண்ட்ரி எங்க எங்க சிக்னல் இருக்கோ அங்க எல்லாம் இந்த நம்பர் கிராஸ் ஆகி இருக்கா பார்க்கனும்.

“இன்னிக்கு காலையில் இருந்தா தம்பி” என்றார் கணேசன். கவியரசன் ஏதோ புரிந்தவனாக தர்ஷனை கண்டபடி நின்றான். முகம் மட்டும் கலக்கம் போகவே இல்லை.

 கவியரசன் இதயம் தன்ஷிகா பார்க்கும் வரை அப்படி தான் இருக்குமோ என்னவோ

” அண்ணா சுமார் பத்துல இருந்து பதினொன்று வரை பாருங்க முதலில்…” என்றதும் அங்கிருந்த குழு தனி தனியாக அந்த வெள்ளை நிற காரை தேடியது.

“சார் பீக் ஹவர்ஸ் எங்க தேட லன்ச் டைம் வந்துடுச்சு சார்.. சாப்பிட்டு வந்து பார்க்கலாமா” என்ற ஒருவரின் பேச்சில் கடுப்பான தர்ஷன் அவ்விடம் அதிர

“ரெஸ்பான்ஸ் கொடுத்து ஒர்க் பண்ணுங்க. இதே உங்க ஒய்ப் ஒரு கல்பெர்ட்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கற நேரம் இப்படி தான் சாப்பாட்டை பற்றி யோசிப்பீங்களா மிஸ்டர் விமல்… 

அங்க அந்த பொண்ணு எந்த நிலையில் இருக்கும் என்று ஒரு நிமிஷம் யோசிச்சிங்க இப்படி பேச மாட்டீங்க. லுக் எவர்படி பசி, தாகம், தூக்கம் இத தவிர்க்கறவங்க இந்த கேஸ்ல என்னோட வேலை பார்க்கலாம் இல்லையா இந்த கணம் வெளிய போகலாம். ஐ டோண்ட் கேர். இருக்கறவங்க எனக்கு கோஆப்ரேட் பண்ணினா போதும். குற்றம் நடந்து குறிப்பிட்ட நேரத்துல மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமிரா மூலமாக எத்தனை குற்றவாளியை பிடிச்சிருக்கும்னு உங்களுக்கு தெரியும் தானே.” என்று கூறினான்.

“கணேசன் அண்ணா… மெயின் எண்ட்ரி இந்த ஆறு பிளேஸ் தானே” என்று இருக்கை எடுத்து வீடியோ பார்த்தான்.

“சாரி சார்…” என்று விமல் குரல் தோய்ந்து கேட்க செய்தது.

 கைகளால் அவன் புறம் பாராமல் வேலை ஆரம்பிக்க சொன்னான்.

நான்கு பக்கமும் அந்த வாகன எண் வந்ததா என்று ஆராய நேரம் ஒடியது.

கவியரசன் ஊரில் உள்ள தெய்வங்களுக்கு வேண்டுதல் வைத்தான். 

தன்ஷிகாவின் உயிருக்கும் மானத்திற்கும் எந்த கேடும் நேர்ந்திட கூடாது என்று.

“சார் சார்… இந்த ஏரியாவுல கிராஸ் ஆகி இருக்கு சார்” என்ற விமலின் குரலில் எல்லோரும் ஒன்று சேர்ந்தன்ர்.

“சார் மாமல்லபுரம் ரூட் பக்கம் போய் இருக்கு சார்” என்றதும்

“சில்… இனி அடிக்கடி சிசிடிவி சிக்னல் புட் ஏஜ் இருக்கும் கார் எங்க கண்டினியூ ஆகுது என்று பார்த்து சொல்லுங்க. கணேசன் அண்ணா புட் ஆர்டர் அதுக்குள்ள வர வையுங்க. சாப்பிட்டு கிளம்பனும். ஆபரேஷன் ஸ்டார்ட்” என்றதும் அதே போல கண்காணிப்பு கேமிரா மூலம் தேட சென்றனர். குற்றம் நடந்து, சிசிடிவி மூலமாக உடனடியாக விசாரணை நடத்தப்பட்டால் உடனே கண்டறியும் சாத்தியம் அதிகமே. 

அதே நேரம் உணவு வர மற்றவர்கள் சாப்பிட சொன்னான். விமல் இருந்த இடத்தில் தான் சென்று அமர்ந்து கடைசியாக இருந்த இடம் சென்றதும் அங்கிருந்த சர்க்களில் ஒரு போலீஸ் மப்டியில் சென்று பார்க்க சொன்னான்.

அதற்கிடையே கட்டாயப்படுத்தி கவியரசன் உண்ண வைத்தான்.

அதே போல அந்த போலீஸ் சென்று பார்த்து வந்தான்.

“சார் அது கால் கேர்ள்ஸ் ஏலம் விடற இடம் சார்” என்று தயக்கமாக சொல்ல, உணவு உண்ண செய்த கவியரசன் தலையில் அடித்து அமர்ந்து விட்டான். கையிலிருந்த சாப்பாட்டு பார்சல் கீழே சரிந்தது. 

 தர்ஷன் அருகே வந்து. “லுக் கவின் இப்ப தானே வந்து இருப்பான். அதுகுள்ள எந்த அசம்பாவிதமும் நடக்காது. என் பேச்சை கேளுங்க. நிச்சயம் உங்க மனைவிய கண்டு புடிச்சிடலாம்” என்றதும்

“அந்த இடம் எதுனு சொல்லுங்க சார் இப்பவே போறேன் என் தன்ஷி பார்க்கனும் சார்” என்றான் கலங்கி அழுதான். 

ஆண்மகன் தனக்கானவளுக்கு ஒன்று என்றால் அழாமல் இருக்க முடியுமா? அதை வாழ்விலும் உணர்ந்தவன் தானே தர்ஷன். அவருக்கும் இது போல நிகழ்வு நடந்து உள்ளதே.

“கவின் கண்டிப்பா பார்க்கலாம்” என்று கிளம்ப அங்கிருந்தவர்கள் பாதி சிக்னல் வேலைபாடு தெரிந்தவராக இருக்க தனக்கு தெரிந்தவரை போனில் அழைத்து கிளம்பினான்.

கவியரசன் தானும் வருவதாக அடம் பிடித்து அவனும் சேர்ந்தான்.

தன்ஷிகா இடம் அறிந்து தான் செல்வதாக மட்டும் சௌமியிடம் சொல்லி அவந்திகாவை கண்காணித்து கொள்ள சொன்னான். 

அவந்திகா சௌமியோடு எல்லாம் கேட்டு கொண்டு இருந்தாள்.

தர்ஷன் கவியரசன் இருவரும் அந்த பகுதிக்கு விரைந்தார்கள். இம்முறை விமல் பைக் எடுத்து கிளம்பினார்கள்.

5 thoughts on “நிலவோடு கதை பேசும் தென்றல்-22”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *