Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்-23

நிலவோடு கதை பேசும் தென்றல்-23

💖23

தர்ஷன் அங்கிருந்தவர்களில் “இங்க கன் பயர் யாருக்கு தெரியும் என்றான்.

“சார் வீ ஆர் சிக்னல் பிராசஸ் வோர்க்கர்ஸ்… கன் எப்படி ஹாண்டல் பண்றது கூட தெரியாது” என்றதும் யோசித்தவன்

“இட்ஸ் ஓகே. இதுவரை கோஆப்ரேட் செய்ததே ரொம்ப நன்றி. கவின் நீங்க இங்க இருங்க நான் ஸ்பார்ட் போறேன் சக்ஸஸ் ஆனதும் இன்பார்ம் பண்றேன்” என்றவன் கிளம்ப கவியரசன்

“சார் நானும் வர்றேன். இங்க என்னால எப்படி இருக்க முடியும் சொல்லுங்க. சரியோ தவறோ நான் தன்ஷி இருக்கற இடம் வர்றேன்.” என்றதும் தர்ஷன்  “வாங்க” என்றவன் விமலிடம் பைக் எடுத்து கொண்டு கவின் காரை அங்கே விட்டு விட்டு கிளம்பினார்கள்.

பைக்கில் செல்லும் பொழுதே ப்ளூ டூத் வழியாக போன் செய்தான்.

“மச்சி எனக்கு கன் பயர் பண்ண இல்லீகல் கன் வேணும்” என்றான் தர்ஷன்.

“என்கவுண்டரா எந்த கேஸ்……” என்றது எதிரே இருந்த குரல் 

“புது கேஸ்… பட் ஐ நீட்.” தர்ஷன் முடிவாக சொல்ல

“எவனுக்கு சங்கு. சரி எங்க எடுத்துட்டு வர?”

“நீலாங்கரை ரூட் அரை மணி நேரத்தில் ரீச் ஆவேன் அங்க கொண்டு வா… அப்பறம் இரண்டு செட் டிரஸ், ஷு, வேணும். ஆன் தி வே வாங்கிக்க” என்று அடுக்கினான். 

“அடேய்… நான் டூட்டில தான் டா இருக்கேன்” என்றான் அவனின் சக நண்பன் ரூபன் பிரகாஷ். அவனுமே போலீஸ் அதிகாரி என்பதால் இவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. 

“வாங்கிட்டு வாடா” என்று உரிமையாக பேசி துண்டித்தான்.

சொன்னதை போலவே  கிளம்பிய கொஞ்ச நேரத்தில் தன்ஷி இருக்கும் இடமருகே வந்து சேர, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ரூபன் வந்தான். 

 தர்ஷன் ஆடை மாற்றி வந்தான்.

” கவின் நீங்க வேஷ்டி சட்டைக்கு பதில் இதை போட்டுட்டு வாங்க… நாம அங்க போனா இந்த டிரஸ் நம்மை காட்டி கொடுத்துவிடும். சோ நீங்க வேஷ்டி சட்டை பதில் இத மாற்றிக்கொண்டு வாங்க, நானும் காக்கில இதுக்கு மேல போட்டுட்டு போனா அலார்ட்டு ஆகிடுவாங்க” என்றதும் கவின் என்னவோ புரிந்தும் புரியாமலும் உடை மாற்ற சென்றான்.

“மச்சி நீ ப்ரியா?” என்றான் கன் லோட் செய்தபடி

“இல்லை டா… இரட்டை கொலை செய்த மணியை ஸ்பார்ட் பண்ணிட்டேன் கைது செய்யனும்” என்று சொல்லி “ஏன் டா குருப் இல்லையா” என்று கேட்டான். 

“தனியா தான் வந்திருக்கேன் மச்சி. கிட்னாப் கேஸ் பெருசா பயப்பட ஒன்றுமில்லை. அவன் அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லை. ஆனா பொண்ணோ கால் கேர்ள் பிளேஸ் தேடி வந்து தங்கி விற்க இருக்கான். அதான் கன் கேட்டேன். எப்படியும் கஞ்ச கேஸ்க்கு என் கன் யூஸ் ஆகும். அதான் வெத்து வேட்டுக்கு எதுக்கு கவர்மெண்ட் கன்” என்று பொருத்தியவன் கன்னை காலில் வைத்து ஷாக்ஸில் திணித்தான். பேண்ட் கொண்டு மறைக்க கவின் வெளியே வரவும் ரூபனிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினார்கள்.

“சார் துப்பாக்கி எல்லாம் வேணுமா?” என்றான் கவின் பயத்தோடு.

“சார் எல்லாம் சொல்ல வேணாம் பேர் சொல்லுங்க கவின். உங்க வயது தான் இருக்கும்” என்றான் தர்ஷன்.

  “தர்ஷன் என் தன்ஷிகா கிடைச்சுடுவாளா? அவளுக்கு எதுவும் ஆகாதுல. ஏ \தாவது அசம்பாவிதம் நடந்தா செத்துடுவா தர்ஷன். நானே மறக்க சொன்னா கூட மறப்பாளா… பயமா இருக்கு. எனக்கு உயிரோடு வந்தா போதும்” என்று உடைந்த குரலில் பேசினான்.

“எதுவும் ஆகாது கவின். மோஸ்ட்டா இந்த மாதிரி டீலீங் நைட் தான் நடக்கும். அதுவும் அவங்களுக்கு பக்குவம் ஆகாத பெண்கள் நைட் தான் கை மாத்தி மூவ் பண்ணுவாங்க. சோ காப்பாற்றிடலாம்” என்றான். இதுபோல எத்தனை கேஸ் பார்த்ததால் அவன் சர்வீஸ் வைத்து சரியாக கூறினான்.  

“மகேஷ் ஏற்கனவே தன்ஷியை மயக்கப்படுத்தி நெருங்க பார்த்தான் தர்ஷன். என்னோட பயமே அவன் அப்படி செய்திட ஷிகா எதாவது உயிரை மாய்த்து கொள்வாளோ என்று தான்” என தெரிவித்தான். 

“இந்த மாதிரி நேரத்தில் அப்படி பயம் வரும் கவின் ஆனா அதை யோசிச்சு உடைந்து விட கூடாது. எல்லாமே நல்லதா நடக்கும் என்று நினையுங்க. அவங்க இருக்கற பிளேஸ் நமக்கு தெரிந்ததே காட் கிரேஸ்” என்றவன் வண்டியை சீறி பாய கிளம்பினான்.

கவினுக்கு தர்ஷன் வேகமே இந்த இடம் வர உறுதுனை என்று எண்ணினான்.

கார் இருக்கும் இடம் கண்டு வந்து சேர்ந்தனர். நம்பர் பிளேட் சரி பார்த்த பின் ஹோட்டல் அறை எது என்று யோசிக்க தர்ஷனுக்கு அந்த இடமே அப்படி தான் என்று ஊகித்தான்.

சற்று நேரம் மறைந்து நின்றான். அடிக்கடி உள்ளே வெளியே சென்றவனை கண்டு அருகே பேச முயன்றான்.

“ஹலோ பாஸ் டீலீங் இருக்கா… எப்ப ஆரம்பிக்கும்” என்று வர 

“யார் தம்பி நீங்க என்ன டீலிங் நீங்க பேசறதே புரியலையே” என்றான் மழுப்பினான்.

“யோவ்… காலையில் மப்ல இருந்தப்ப பக்கத்துல பேசிட்டு இருந்தாங்க. இங்க தான் கிராமத்து பொண்ணு டீல் பேசபோறதா… எத்தனை லேக்ஸ் வேணும் என்று கற்றை நோட்டை வைத்தவன். வீ நீட் வில்லேஜ் கேர்ள், அண்ட் பிரஸ் பீஸ்” என்றான் தர்ஷன். 

தர்ஷன் பேசியதை கேட்ட கவினுக்கு காதை மூடி கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் தர்ஷன் தொடுகையிலே ‘இதுக்கு ரியாக்ட் பண்ணாதே’ என்பது போல ஒரு அழுத்தம் கொடுத்து தெரிய வைத்தான்.

பேசியவன் இருவர் முகத்தை உற்று நோக்கி “பையன் என்ன ஒரு மாதிரி தெரியுறான்” என்றான் பணத்தை எடுத்தபடி

“அவனுக்கு பர்ஸ்ட் டைம் அதான் ஒரு மாதிரி தெரியுறான். என்ன பொண்ணை பார்க்கலாமா?” என்றான் தர்ஷன்.

“இந்த ரூம்ல போங்க… பேரம் எவ்வளவுனு கேட்டுண்டு வர்றேன். இது என்னோட கமிஷன்” என்றான்.

” ஏன் சார் பொண்ணு இங்க இல்லையா” என்று பின்னால் சொருகிய கன் எடுக்க தயாரானான்

“புதுசுலாம் இங்க இல்லை. பக்கத்தில் ஒரு இடத்தில் வைச்சி, பேரம் பேசி எல்லாம் ஓவர் என்றால் ஸ்பெஷல் ரூமுக்கு போகும்” என்று கட்டு பணமும். தனக்குள் எடுத்து வைத்தவன். டீலிங் தோராயமா எவ்வளவு கேட்ட?” என்றான்.

“எவ்வளவு என்றாலும் கொடுக்க நாங்க ரெடி பேசி முடிங்க” என்று சொல்ல அந்த ஆசாமி தனியாக போனில் பேசிவிட்டு, “உங்களை வர சொல்லறாப்ல..” என்று வந்தான்.

“நீ இங்க இரு. நான் பேசிட்டு வர்றேன்” என்றவன் ரூம் சாவி கொடுக்க தர்ஷன் ஆசாமி அறியாது “லுக் கவின் உன்னை அவனுக்கு தெரியும் சோ நீ இங்கேயே இரு ப்ளூ டூத் கால் கனெக்ட் இருக்கு.. உன் நம்பர் ஆட் பண்ணி இருக்கேன் நான் பேசறது கேட்கும் நீ ரிப்ளை பண்ணாதே. அவங்க சோதனை பண்ணினா கூட கால் ஆக்டிவ்ல காட்டாது. எமோஷனல் மட்டும் ஆகிடதே.. பீ கேர்புல்” என்று கூறி “அறையில் இரு” என்று செல்ல தர்ஷன் ஆசாமியை பின் தொடர்ந்தான்.

கவின் அந்த அறையில் வந்து கதவை தாழிட்டு கட்டில் மேலே அமர முடியாமல் அறையிலே நடை பயின்றான். கைகள் மெல்ல நடுங்கியது. நீரை எடுத்து குடித்தவன் இரு முறைக்கு மேலாக சிகை அழுத்தம் கோதி மனதை சமன் செய்ய முயன்றான்.

தர்ஷன் நுழையும் பொழுதே அங்கிருந்த இடத்தையும் நபர்களையும் ஆராய்ந்து கொண்டே வந்தான்.

‘நெட் வொர்க் கொஞ்சம் பெரிது தான் போல… மகனே பொண்ணு மட்டும் கண்ணுல பார்த்தேன் அப்பறம் இருக்கு டா உங்களுக்கு….’ என்று பொறுமியபடி வந்தான்.

“மகேஷ் இவர் தான். பொருள் உந்து ரேட் நீயே பேசிக்கோ. என் கமிஷன் வங்கிட்டேன்” என்று அங்கிருந்த சரக்கை எடுத்து பருக துவங்கினான் அழைத்து வந்த ஆசாமி.

“அமௌண்ட் எவ்ளோ தருவ…” என்று மகேஷ் கேட்க

“2 lak” என்றான் ஜூவிங்கம் மென்றபடி தர்ஷன்.

“இங்க பாரு நான் கை வைச்ச பிறகு பொண்ணு வரும்” என்றான் மகேஷ்.

இந்நொடி வரை தன்ஷிகா சேப் என்று தர்ஷன் எண்ண, கவினும் அந்த பக்கம் நிம்மதி அடைந்தான்.

“எனக்கு செட் ஆகாது. நான் வேற பார்த்து கொள்ளறேன். வில்லேஜ் டைப் ஃபிரெஷ் பீஸ் புதுசு என்று தான் ஒரு நைட்ku2 lak இல்லைனா நாங்க எதுக்கு வர்றோம். லவ் பண்ணா ஆயிரம் பொண்ணுங்க பின்னால் வருவாங்க” என்று தர்ஷன் அசால்டாக கிளம்பினான்.

“ஒரு நிமிஷம்… கொஞ்சம் யோசிக்கனும். புதுசு தான் வேணும்னு சொல்லற ரேட் ஏறும்” என்றான் மகேஷ். தர்ஷனோ “பணம் எல்லாம் பெருசு இல்லை கிராமத்து பைங்கிளி வேணும்” என்று கறாராக இருந்தான். 

அவன் வயிற்றை பிடித்தபடி அடிக்கடி பேச, தன்ஷி அடித்த அடியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழ, உள்ளுக்குள் சந்தோஷம் கொண்டான்.

தர்ஷன் வந்த வழி திரும்ப ” சனியன் கராத்தே கத்துக்கிட்டு என் உசுரை வாங்கிடுச்சு… இல்லை இந்த நிமிஷம் அவள் அழுதுட்டு இருக்கும். கட்டி போடவும் முடியலை… கிட்ட போனாளே உதைக்கறா கழுதை ஜென்மம்” என்று மகேஷ் புலம்ப ஆனந்தமாக காதில் வாங்கி கொண்டு போனான் தர்ஷன்.

தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு செல்ல, அங்கே கவின் இல்லாமல் போகவும்

“கவின் எங்க இருக்க?” என்ற தர்ஷன் குரலில் பக்கத்து ரூம்ல… கொஞ்சம் வர்றீங்களா” என்றான்.

தர்ஷன் அவ்விடம் போகவும், கவின் அங்கே கண்ணீர் வழிய ஒரு சிறுமிக்கு நீரை புகட்டி கொண்டு இருந்தான்.

கவின் உடை அந்த பெண் மீது போர்வையாக தழுவி கிடந்தது.

பள்ளி சிறுமியாக இருக்கும் 11லிருந்து13 வயதுக்குள் இருக்கலாம்.

தொடையில் காய்ந்த இரத்த திட்டுக்கள் மனதில் வலியை கொடுக்க கட்டில் மீது இருந்த போர்வை எடுத்து அவள் கால் விரல் கூட தெரியாத வகையில் மூடி விட்டான்.

“என்ன தர்ஷன் இது… பார்க்கவே கஷ்டமா இருக்கு… எப்படி இப்படி மனசாட்சி இல்லாம பண்றாங்க. பச்ச குழந்தை தர்ஷன்” என்று கவின் நீரை புகட்ட தர்ஷன் அவள் கண்கள் வட்டம் விரித்து பார்த்தான் “வெறி பிடித்த ஒநாய்கள்… ட்ரக்ஸ் ஊசி போட்டு இருக்காங்க. மயக்கத்துல இருக்கா” என்றான்

“நம்ம ரூம் தூக்கிட்டு வா” என்றவன் தங்கள் அறைக்குள் வந்து படுக்க வைத்து கவின் அவளின் சிகை கோதி விடுத்தான்.

அந்த அமைதி கிழித்த படி “என்ன சார் ரூம் மாறி வந்துட்டியா இல்லை ஸ்கூல் பொண்ணு என்றதும் அலேகக்கா தூக்கிட்டு வந்துட்டிங்களா?” வந்த பொழுது பேசிய ஆசாமி கேட்டதும் அடுத்த நொடி அவன் கைகளை உடைத்து மடக்கி முட்டி போட்டு கன் எடுத்து நெஞ்சில் வைத்தான் தர்ஷன். 

“எங்க டா அந்த புது பொண்ணு தன்ஷிகா? எதுக்கு டா குழந்தையை சிதைச்சி வைச்சி இருக்கீங்க” என்று கழுத்து நரம்புகள் புடைக்க கேட்டான். 

“ஏய்… எ…ன்ன கன் வைத்திருக்க?” என்றான் பயந்து.

“போலீஸ்காரன் கன் வைச்சி இல்லாம பன் வைச்சி இருப்பான்… எங்க அந்த பொண்ணு…? இங்கே எத்தனை பொண்ணு இருக்காங்க?” என்றான்.

அவனின் முகம் கோவத்தில் கண்டு நிச்சயம் இவன் சுட செய்தாலும் செய்வான் என்பதை புரிந்து போனான் ஆசாமி. 

“சார்… எனக்கு எதுவும் தெரியாது சார்… ஸ்கூல் பொண்ணு கடத்திட்டு வந்து இருக்காங்க, மத்தது லவ்னு வந்து ஏமாந்த பொண்ணுங்க. சிலர் தான் தனக்கு மசியாத பொண்ணை கரம் வச்சி தூக்கி இப்படி வித்து காசு பார்பாங்க, நீங்க கேட்கற பொண்ணு மகேஷ் தூக்கிட்டு வந்தது. நான் புரோக்கர் மாதிரி அவ்ளோ தான்” என்றதும் கன் சைலண்ட் பொருந்தி,, நெஞ்சில் துளைத்து இறங்கினான்.

“தர்ஷன் இங்க இருந்து தன்ஷிகா மட்டும் இல்லை எல்லாரையும் காப்பாத்தணும்” என்று கவின் சொல்லி முடிக்க, தர்ஷன் ஆம் என்பதை போல தலை அசைத்தான்.

தன்ஷி அங்கே, அறையில் எந்த வழி வெளியே செல்ல என்று ஆராய்ந்து சுவரை தட்டி தட்டி பார்த்தாள். 

  ஒரு சுவர் ஒற்றை செங்கலாக கட்டி இருப்பதாய் தோன்ற கராத்தே வகுப்பில் செங்கல் உடைப்பது போல உடைக்க எண்ணிணாள். 

கை நிச்சயம் பலவீனம் ஆகும் மகேஷ் வந்தால் அவனை வேற தாக்க, தெம்பு வேண்டும் என்று யோசித்தவள். பொருளை எடுத்து போடலாம் என்றாலும் எல்லாம் அழகுக்கு இருந்ததே தவிர பலமான பொருள் இல்லை என்பதையும் உணர்ந்தாள்.

அவளுக்கு காலையில் அவந்திகா சுயரூபம் அறிந்து அவளை கொல்லும் வெறியில் இருந்தாள்.

காலையில்…..

மகேஷ்-தன்ஷிகா.

கவின் வீட்டில் தன்ஷி கோலம் போட வாசல் பக்கம் வந்து நின்றாள். 

அவந்திகா இல்லை, பணி செய்யும் திலகவதி, அப்பத்தா யாரும் இல்லை கிராமத்தில் அதிகாலை வாசல் தெளிக்க வருவாள் என்று காத்திருந்து கடத்த நினைத்தான் மகேஷ். 

 தன்ஷி முதலில் வழி கேட்டு வந்தவர் என்று வழி சொல்ல கண நேரத்தில் காரில் ஏற்றி வாயில் கட்டி திருப்பி கையை கட்டி இழுத்தவன் யார் என புரியாது திமிர, அடித்ததும் லேசான மயக்கத்தில் கிடந்தாள். 

 இங்கே வந்ததும் தன்னை தீண்ட வந்தவன் தான் அவந்திகா காதலன் என்றும் அவனின் மொத்த சுயரூபமும், அவந்திகா சுயரூபமும் அறிந்து, தன் கூட பிறந்தவளா இப்படி என்று அதிர, மகேஷ் நெருங்க மொத்த கோவமும் சேர்ந்து காலால், அவன் அடிவயிற்றில் எட்டி உதைக்க சுருண்டவன் தான். 

வலியின் கூடுதலில் நெருங்காமல், சக ஆண்களை பிடிக்க சொல்ல, வந்தவர்களை எல்லாம் தன்ஷி அடிக்க, மற்றவர்கள் நெருங்க அஞ்சினர்.

முகத்தில் பயமும் இல்லை கோவம் மட்டும் இருக்க, கதவை பூட்டி வெளியே காவல் காக்க வைத்தான் மகேஷ்.

தன்ஷிகாவோ, ‘கவின் நம்மிடம் சொன்னால் கூட இதை எல்லாம் நம்பி இருப்பது சந்தேகமே ஆனால் கண்கூடாக காட்சி தரும் நிகழ்வில் கவின் தன்னை ஏற்று கொண்டதே பெரிய விஷயம். அக்கா போல தன்னை எண்ணவில்லை.

அதே சமயம் அவன் தன் வீட்டின் குடும்ப மானம் கூட கருத்தில் வைத்து தன்னை பாதுகாத்தது கவின் மேலே அளவற்ற மரியாதை காதல் அன்பு சுரந்தன.

கவின் இங்க இருந்து தப்பிக்கனும் உன்னை பார்க்கனும்… ஐ லவ் யூ’ என்று அழ ஆரம்பித்தாள்.

தன்னை தேடி தன்னவன் வந்து விட்டான் என்பதை அறியாது அவள் தப்பிக்க முயற்சித்தாள்.

அவந்திகா கவின் இருக்கும் இடம் நீலாங்கரை என்றதும், முன்பு மகேஷ் தன்ஷிகாவை விற்க முடிவெடுத்த இடத்தை நினைவுப்படுத்தி கொண்டு, சௌமி குளிக்க சென்ற சமயம், அங்கிருந்து டாக்ஸி பிடித்து ஏறி கிளம்பினாள். 

2 thoughts on “நிலவோடு கதை பேசும் தென்றல்-23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *