💖25
கவின் தர்ஷன் சொன்ன மருத்துவமனை பெயரை சொல்ல தன்ஷி சரியாக அங்கே நிறுத்தினாள்.
“இதான் நீ சொன்ன ஹாஸ்பிடல்” என்றதும் கவின் இங்க எப்படி கேட்க? என்று தயங்கினான்.
தன்ஷி அவனை இழுத்து கொண்டு ரிசப்ஷன் அருகே போக, அங்கே ரூபனை கண்ட கவின் அவரிடம் வந்து பேச நிமிர்ந்தான்.
“உங்களை அனுப்பிட்டானா?” என்ற ரூபன் கேள்விக்கு
“ஆமா சார் அந்த பாப்பா எப்படி இருக்கு?”என கேட்டான்.
“உட்காருங்க… ட்ரிட்மெண்ட் போகுது” என்றவன் கவின் அந்த பெண்ணின் ஐடி கார்டு எடுத்து நீட்ட வாங்கியவன் யோசனையோடு “இது தர்ஷன் கேஸ்… அவன் வரட்டும் இதை எப்படி அவங்க பேரண்ட்ஸ்கிட்ட சொல்ல என்று அவன் தீர்மாணிக்கட்டோம்.” என்றான் ரூபன்.
“சொல்லறது சொல்லாதது அவர் வந்து முடிவு பண்ணட்டும்… ஆனா பொண்ணு காணோம் தேடுவாங்களே… சார்” என்றதும் ரூபனுக்கும் அதே யோசனை எழ நர்ஸ் நிலா முகமூடி அணிந்து வெளியே வந்தாள்.
“நிலா…” என்றான் கையை ‘பொறு’ என்று பதிலளித்து சில உபகரணங்களை கொண்டு செல்ல மீண்டும் வர காத்திருந்தார்கள். ரூபனின் மனைவி தான் இந்த நிலா. அதோடு தர்ஷனுக்கு உறவு முறையில் பெரிம்மா என்றவரிடம் சிகிச்சை பார்க்க இந்த மருத்துவமனைக்கு வந்தது.
அவந்திகா இறப்பு அவளை அப்படியே விட்டு வந்ததை தன்ஷி மனம் எண்ணி வாடியது. என்ன இருந்தாலும் அவளின் அக்கா ஆயிற்றே…
அங்கே அமர்ந்த நிலையில் இருக்கும் பொழுது தானாக கண்ணீர் துளிர்க்க கவின் மேலே சாய்ந்தாள்.
“கஷ்டமா இருக்கு கவின். அவ அக்கா என்னோட எப்பவும் சண்டை போடுவா… என் திங்கஸ் எடுத்துப்பா… ஆனாலும் நான் அதை மீறி எதிர்த்து கேட்டா தூக்கி ஏறிஞ்சிடுவா, அதுக்கு பிறகு என்கிட்ட பத்து நாளுக்கு மேல பேச மாட்டா, நானா அகைன் பேச வைக்க முயற்சி பண்ணுவேன். அதிக பாசம் காட்டி ஐஸ் வைச்ச உருகிடுவா… அது உண்மை என்று நம்பிடுவா… கொஞ்சம் எதையும் வெளிப்படையா பேசாம உள்ளுக்குள் புழுங்குவா… பேசறது நல்லதா கெட்டதா யோசிக்க மாட்டா. எடுப்பார் கை பிள்ளை மாதிரி தான். அவ கேரக்டர் அந்த மகேஷ் நல்லா யூஸ் பண்ணிக்கிட்டான். அவளும் வன்மம் வளர்த்துக்கிட்டா தான். ஆனா என்ன செய்ய கூட பிறந்தவளா போயிட்டா மனசு அவளையே சுத்திட்டு இருக்கு” என்று தன்ஷி சொன்னாள்.
“முடிஞ்சது முடிஞ்சதா போகட்டும் ஷிகா அவளை பற்றி பேசாதே பிடிக்கலை. அந்த குழந்தைக்கு என்ன ஆச்சுனு பார்ப்போம்” என்று கவின் முடிவாக கூறினான்.
அதே நேரம் டாக்டர் நிஷாந்தினி அவர்கள் பின் நர்ஸ் நிலா வந்து நிற்க தர்ஷனும் வந்தான்.
“பெரிம்மா அந்த குழந்தை?” என்று கேட்க கவின் ரூபன் தர்ஷனை கண்டு நிஷாந்தினியை பார்த்தனர்.
தர்ஷனின் பெரிம்மா மருத்துவமனையில் ரூபனை அனுப்பியிருந்தான். அந்த குழந்தைக்கு சகிச்சை அளித்திட.
“ட்ரக்ஸ் இஞ்செக்ட் பண்ணி இருக்காங்க. மயக்கத்தில் இருந்திருப்பா… அதனால அவளுக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் உடலில் வலி இருக்கும். 2 டேஸ் ஐசியூல வைப்போம். பேரண்ட்ஸ்கிட்ட என்ன சொல்ல போற” என்றார் அவர்.
“லாரி ஆக்சிடெண்ட், 2 டேஸ் ஐசியூல இருப்பதாக சொல்வோம். அந்த பிள்ளையை கடத்த முயற்சி பண்ணி அந்த கார் லாரில மோதிடுச்சு தட்ஸ் இட். வேற என்ன சொல்லணும் பெரிம்மா. கொஞ்சம் உடலை கவனிக்க மருந்து மாத்திரை கொடுத்து கேர்புல்லா பார்த்துக்க சொல்லுங்க. ” என்றான்.
“ரூபன் பேரண்ட்ஸ் கால் பண்ணி இதே தான் எல்லோரும் ஒரே மாதிரி சொல்லனும்” என்று கட்டளை பிறப்பிக்க அதே போல சொல்லி அவர்களுக்காக காத்திருக்க செய்தனர். பெற்றவர்களுக்கு பிள்ளையின் நிலையை பற்றி கூறினால் மனவருத்தம் என்றதால் இதை அப்படியே கிட்நாப் கேஸ் லாரி விபத்து என்றே கூறினார்கள்.
வருத்தம் கொஞ்சம் இருந்தாலும் அங்கே இதே போல பல பெண்கள் காப்பாற்றி சொந்த ஊருக்கு அனுப்பி இருந்தார்கள்.
சிலர் போக மறுக்க ‘நேச இல்லம்’ என்ற ஆசிரமத்தின் முகவரி கொடுத்து அங்கே போய் தங்கிக்க சொன்னான்.
அதற்கான தீவிர பணியில் நேரம் கூட அந்த பள்ளி சிறுமி பெற்றோர் வந்து சேர கதறியபடி வந்தார்கள்.
லாரி மோதியது என்றதற்கே இப்படி துடிக்கும் பெற்றோர் மகள் வாழ்வை சொன்னால்… வேண்டவே வேண்டாம். சில இடத்தில் உண்மை மறைப்பது கூட நல்லதே என்று தீவிரமாக இருந்தார்கள்.
கடத்த முயன்று லாரியில் அடிப்பட்டு இப்படி விபத்து என்று சொல்லிவிட்டு மற்றவைகளை அவர்கள் பொறுப்பில் விட்டு விட்டு இடம் பெயர்ந்தார்கள்.
கவின் தர்ஷனுக்கும் ரூபனுக்கும் மனதார நன்றி கூறினான்.
தர்ஷனோ தன்ஷிகாவிடம் “உங்களுக்கு என்னை தெரியுமா? நல்லா பைக் ஸ்டார்ட் பண்ணீங்க. அப்பறம் மகேஷை கூட அடிச்சீங்க போல குட்” என்றான்.
” சார் உங்களை தெரியாம இருக்குமா? நீங்க எங்க காலேஜிக்கு சீப் கெஸ்ட்டா வந்திங்க. அப்போ சொன்னிங்களே, பொண்ணுங்க கராத்தே கத்துக்கிட்டா மட்டும் போதாது. அதை எப்போ ஆபத்து என்றாலும் பயமில்லாம எதிரியிடம் அடிச்சு காட்டனும் என்று, அதான் நான் மகேஷ் வந்தப்ப பயப்படலை. சார் எங்க காலேஜ்ல உங்களுக்கு ஏகப்பட்ட பேன்.” என்று கூறினாள்.
தர்ஷன் யூகித்தவை போல அவன் சென்ற கல்லூரியில் ஒருத்தி தன்ஷிகா. “அன் டைம் ஆகிடுச்சே இப்பவே ஊருக்கு கிளம்பறிங்க?” என்றான் கேள்வியோடு.
“இல்லை சார் ஷிகா பிரெண்ட் வீட்ல இருப்போம். நாளைக்கு தான் கிளம்பனும். அவந்திகா பாடி வேற நாளுக்கு இங்க எரியூட்டனும். அவங்க அப்பா அம்மாவுக்கு சொல்லிட்டோம். அவங்க வந்துட்டு இருக்காங்க. இனி மேலாவது எங்க வாழ்க்கையை வாழனும்” என்று கவின் சொன்னான்.
கண்களை துடைத்து கொண்டு “தர்ஷன் சார் நிஜமா நான் ஷிகாவை ஒரே நாளில் கண்டு பிடிச்சிடுவோம் என்று நம்பிக்கை வரலை. உங்க வேகம் தான் ஷிகா கிடைத்ததுக்கு காரணம்” என்றான் உணர்வு பூர்வமாய்.
“கடத்தப்பட்ட கொஞ்ச நேரத்தில் போலீஸ் அதிகமா கவனம் எடுத்து, மூன்றாம் கண் ஆனா சிசிடிவி மூலமா வேகம் எடுத்தா எப்பேற்பட்ட கேஸ் கூட விரைவில் முடியும். என்ன எல்லா வேலையும் கொஞ்சம் ஈஸியா தான். ஆனா நாம தான் ஸ்டெப் எடுக்க யோசிக்கறோம். இங்க உங்க வேகம், என் வேகம் இரண்டும் தான் தன்ஷிகா கிடைச்சது. வெல்… இரண்டு பேரும் சந்தோஷமா வாழுங்க வாழ்த்துகள்.” என்று கூறி விடைப்பெற, கவினும் தன்ஷியும், சௌமி வீட்டுக்கு கிளம்பினார்கள்.
சௌமியிடம் தன்ஷி எல்லா விவரமும் கூற கவின் கேட்டு நின்றான்.
தன்ஷி சாப்பிட மறுத்து அவன் அருகே வர அவன் வாழ்க்கையில் என்ன இருந்தாலும் ஐந்து வருடம் அவன் மனைவி என்ற போர்வையில் வாழ்ந்தவளின் இறப்பு கண் முன் கண்டது என்னவோ போல இருந்தது.
தன்ஷி அந்த கத்தி குத்து வாங்கி இருக்க வேண்டியவள், அவந்திகா இறப்பை தேடி வந்து பாய்ந்து மாய்ந்து போனாள்.
ஒரு வேளை தன்ஷிகா விரும்பியது ஒதுக்கி வைத்து, வீட்டுக்கு வந்த காலத்திலே அவளோடு வாழ்ந்து இருந்தால், அவள் தனக்கான நல்ல மனைவியாக மாறி இருப்பாளோ என்று வண்டாய் குடைந்து.
மறுபுறம் அவள் ஒருத்தியின் வாழ்வு மாறினாலும் இன்று எத்தனை பெண்கள் காப்பாற்ற கருவியாக அவள் தானே காரணம் என்று யோசிக்க செய்தது மனம்.
இதில் சரியோ தவறோ விதிக்கே வெளிச்சம்.
தன்ஷியும் எதுவும் கலந்து கொள்ளாது உறங்க போனாள்.
அதிகாலை கவியரசன் தன்ஷி இருவருமே நடந்தவைகளை மறந்து வாழ பழகிட முயன்றார்கள்.
கனகவேல் கற்பகம் வந்து அவந்திகாவிற்கு அதிகாலையிலேயே எரியூட்டி முடித்தார்கள்.
கவின் அவளின் அஸ்தி கூட கரைக்க மறுத்துவிட்டான். கனகவேல் கற்பகம் தம்பதி தான் கரைத்தனர்.
கவியரசனை கட்டாயப்படுத்தவில்லை. கனகவேல் கற்பகம் ஷிகாவை கவினோடு நல்லபடியாக வாழ கூறி, அவந்திகா அஸ்தியை கரைக்க ராமேஸ்வரம் புறப்பட தயாரானர்கள்.
வீட்டுக்கு போக மனமின்றி திலகவதி ஊருக்கு சென்றார்கள் கவின் தன்ஷி. அப்பத்தாவை அப்படியே அழைத்து வர எண்ணி தான் அங்கே சென்று இறங்கினார்கள்.
ஊரே அவந்திகாவை தான் கேட்டது. அவளின் இறப்பு பற்றி துக்கம் அனுசரிக்க கவினுக்கு இதே உணர்வோடு தன்ஷிகாவை நெருங்க முடியாது. அவனுக்கும் நெருங்கும் எண்ணம் சற்று மாறியது. தான் ஆசை ஆசையாக ஏற்காடு செல்ல பஸ் டிக்கெட் பதிவு செய்ததை கிழித்து எறிந்தான்.
என்றும் போல நிலவை ஏக்கமாக பார்த்தவன் உறங்க செல்ல ஷிகாவோ அப்பத்தா திலகவதியோடு உறங்க உறக்கம் வர மறுத்தது.
இந்த அமைதி அவளுக்குமே பிடிக்கவில்லை. அவன் கிழித்து எறிந்த டிக்கெட் பதிவுகள் எடுத்து கையில் பார்த்தவள். மனதில் தோன்றிய முடிவோடு உறங்க செய்தாள்.
அதிகாலை விழிப்பில் எழுந்து போனில் இவளாக இன்று இரவு பயணம் செய்ய டிக்கெட் பதிவு செய்து முடித்தாள்.
“லெமன் ரைஸ் நீ நினைக்கிறது நடக்கும் டா. நாம சந்தோஷமா வாழ்வோம். நீ எனக்கு ஆனந்த அதிர்ச்சி தர டிக்கெட் புக் பண்ணி அது தோல்வி தழுவினா என்ன? நான் டிக்கெட் புக் பண்ணி உனக்கு சர்பிரைஸ் பண்றேன் டா” என்று எண்ணினாள்.
Inimelavathu happy ah avan life erukkattum…
💕💕💕💕💕💕💕💕
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗