கார்த்திக் என்ற சங்கரனிடம் சொல்லுங்கப்பா என்றான் கார்த்திகேயன். புது வேலை உனக்கு என்று தயங்கிய சங்கரனிடம் பாக்குறதுக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு அப்பா அதுவே சந்தோஷம் என்ற கார்த்திகேயன் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தான்.
அவனது கண்கள் எதேச்சையாக காலண்டரை பார்த்தது. இன்றைய தேதி தான் அவனுக்கும், ரஞ்சனிக்கும் திருமணம் நடக்க பெரியோர்களால் குறிக்கப்பட்ட தேதி அதைக் கண்டவன் கண்கள் லேசாக கலங்கினாலும் அதை கட்டுப்படுத்திக் கொண்டு கசந்து புன்னகையுடன் காலண்டரை பார்த்து விட்டு வேலைக்கு கிளம்பினான்.
என்ன சித்தார்த் முகத்தை தூக்கி வெச்சிட்டு இருக்க நீ கல்யாண மாப்பிள்ளை என்றார் அன்பரசி. எனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பண்ணுறீங்க அதுல நான் எப்படி நான் சந்தோஷமா இருக்க முடியும் என்ற சித்தார்த்திடம் நாட்டில் பாதிக்கு மேல பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. ஆனால் அதுக்கப்புறம் அந்த வாழ்க்கையை அவங்க எல்லாம் சந்தோஷமா தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அதுபோலதான் நீயும் சந்தோஷமா தான் வாழ்வாய்.
ரஞ்சனி ரொம்ப நல்ல பொண்ணு நீயும், அவளும் சந்தோஷமா வாழ தான் போறீங்க என்றார் அன்பரசி. கடைசி நேரத்தில் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று எதுனாலும் வம்பு பண்ணினன்னு வை அந்த மகாவையும், அவளோட குடும்பத்தையும் தான் அசிங்கப்படுத்துவேன். அவளை அவள் வீட்டுக்கு முன்னாடி போய் நீங்க சிரிக்க அடிச்சிடுவேன் அப்புறம் இந்த ஜென்மத்துக்கும் அவளுக்கும் எந்த மாப்பிள்ளையும் வராது அவள் குடும்பத்தோடு தூக்குல தொங்கணும்.
நான் செத்துருவேன்னு சொல்லி உன்னை மிரட்டுனா நானும் செத்துருவேன் நீ பதிலுக்கு சொல்லுவ ஆனால் அவளை ஏதாவது பண்ணிடுவேன்னு சொன்னா நீ அமைதியா நாங்க சொல்றபடி கேட்டு நடப்ப சரியா என்ற அன்பரசியை ஆற்றாமையுடன் பார்த்த சித்தார்த் அமைதியாக தயாராகினான்.
என்ன பொண்ணு இவள் கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல் இப்படி கல்யாணத்துக்கு தயாராகிட்டு இருக்கிறாள் என்று நினைத்த சங்கீதாவை அமைதியாக பார்த்தாள் ரஞ்சனி. என்னம்மா கார்த்தி கூட நிச்சயம் பண்ணின அதே நாளில் இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்ட போகிறேன்னு கோவமா இருக்கியா என்றாள் ரஞ்சனி.
நான் ஏன்மா உன் மேல கோவப்பட போகிறேன். நீயும் , உங்க அப்பாவும் எடுக்கிற முடிவு தானே எப்பவுமே நடக்கும் ஏழை சொல் அம்பலம் ஏறுமா அந்த மாதிரி தானே என்னோட முடிவும் என்ற சங்கீதா ஆனால் ஒரு விஷயம் ரஞ்சனி கண்டிப்பா நீ ஒரு நாள் வருத்தப்படுவ கேவலம் பணம் ,காசுக்காக உன்னை உண்மையாக நேசித்த ஒருத்தனை தூக்கி போட்டுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க போறே. நீ என் பொண்ணு நீ நல்லா இருக்கணும்னு தான் ஒரு அம்மாவா நான் நினைப்பேன் ஆனால் நீ பண்ணுன தப்பை நீ உணர வேண்டும் அப்படி தான் எனக்கு நினைக்க தோணுது என்ற சங்கீதா சீக்கிரம் ரெடி ஆகு என்று கூறினார்.
அக்கா என்ற அர்ச்சனாவிடம் என்னடி என்றால் மகாலட்சுமி. எங்க போயிட்டிருக்க காலேஜ் தாண்டி இரண்டு ஸ்டாப் வரப்போகுது என்றாள் அர்ச்சனா. சாரி டி இரண்டு ஸ்டாப் வர வரைக்கும் நீ ஏன்டி சொல்லாமல் இருந்த என்ற மகாலட்சுமியிடம் நீ என்ன பண்ணுறன்னு பார்க்க தான் என்ற அர்ச்சனா அவர் சொன்ன அப்பவே அவர் கூட ஓடிப்போயிருந்தால் நீ இன்றைக்கு கவலை இல்லாமல் இருந்திக்கலாம் இல்ல அக்கா. இப்ப பாரு உன்னால அவரை மறக்க முடியாமல் நீ தவிக்கிற அது எனக்கு தெரியுது என்றாள் அர்ச்சனா.
சும்மா தேவையில்லாமல் ஏதாவது பேசாதே அர்ச்சனா வா காலேஜ்ல டிராப் பண்ணிட்டு நான் ஆபீஸ் போகிறேன் என்றாள் மகாலட்சுமி. பரவாயில்லை அக்கா நான் பஸ் புடிச்சு போயிக்கிறேன் நீ ஆபீஸ் போ என்றாள் அர்ச்சனா.
இல்லடி நீ உட்காரு என்ற மகாலட்சுமி திரும்ப தங்கையை கொண்டு சென்று அவளது கல்லூரியில் இறக்கி விட்டாள். சரி அர்ச்சனா நான் கிளம்புறேன் என்ற மகாவிடம் இப்ப கூட ஒன்றும் கெட்டு போக வில்லை அக்கா அவருக்கு போன் பண்ணுங்க என்றாள் அர்ச்சனா.
உனக்கு அறிவு இருக்கா கல்யாணம் பண்ண ஒரு பொண்ணை மனமேடையில வச்சுட்டு இவரை நான் கூட்டிட்டு போலாமா அது தப்பு எனக்கும் , சித்தார்த்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் அவங்க அம்மா ஆசைப்பட்டபடி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழட்டும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாள் மகாலட்சுமி. பொய் சொல்லாத அக்கா என்ற அர்ச்சனாவிடம் நான் எந்த பொய்யும் சொல்ல வில்லை நீ கண்டதையும் யோசிக்காமல் படிக்கிற வேலைய பாரு என்றாள் மகாலட்சுமி.
ஐயர் மந்திரங்கள் ஓதி கெட்டிமேளம் கொட்டிட அய்யர் கொடுத்த திருமாங்கல்யத்தை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அவனது அன்னை அன்பரசி அவனது தோளில் இருக்க வேண்டா வெறுப்பாக அதை ரஞ்சனியின் கழுத்தில் கட்டினான். எத்தனை ஆசையாக அவளை காதலித்தான் அவளுக்காக ஆசை ஆசையாக அவன் வாங்கிய திருமாங்கல்யத்தை இன்று எவளோ ஒருத்தி கழுத்தில் கட்ட அவனது மனம் இடம் கொடுக்கவில்லை ஆனால் வேறு வழி இல்லையே தன் தாயைப் பற்றி நன்கு அறிவான். அவரால் மகாவுக்கு எந்த தொந்தரவும் இருக்க வேண்டாம் என்று நினைத்துதான் அவன் ரஞ்சனியை திருமணம் செய்து கொண்டான் .ரஞ்சனியின் மனநிலையும் வேறொன்றாக இருந்தது அவளுக்கும் சித்தார்த் மீது பெரிதாக எந்த ஈடுபாடும் கிடையாது. அவளது அப்பா பார்த்த மாப்பிள்ளை அவ்வளவுதான் அதனால் பெரிய எதிர்பார்ப்புகளோ கனவுகளோ அவள் மனதிலும் இல்லை.
என்ன சந்திரா யோசனையா இருக்க என்ற சங்கரனிடம் நான் சொன்னேன் இல்ல என் பொண்ணு ஒரு பையனை காதலிச்சு அந்த பையனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது சங்கரா என்றார் சந்திரன்.
அதே ஆபீஸ்ல அவர் கூட வேலை பார்க்கிறது அவளுக்கு கஷ்டம் தான் ஆனாலும் அந்த வேலையை விட முடியாத ஒரு சூழ்நிலையில் என் குடும்பம் இருக்கு என்ற சந்திரன் தன் மனதில் இருந்த பாரத்தை நண்பனின் தோளில் இறக்கினார் . மகாலட்சுமியை பார்க்க பார்க்க மனசு வேதனையா இருக்கு அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி கொடுத்து அவளை சந்தோஷமா வாழ வைக்க கூட துப்பில்லாத ஒரு அப்பனா இருக்கிறதை நினைச்சு என் மேல எனக்கே வெறுப்பா வருதுடா என்றார் சந்திரன். நீ தப்பா எடுத்துக்கலைன்னா நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா சந்திரா என்ற சங்கரனிடம் கேளு சங்கரா நீ கேட்டு நான் ஏன் தப்பா எடுத்துக்க போறேன் என்றார் சந்திரன்.
பேசாமல் என் பையனுக்கும் ,உன் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுருவோமா என்றார் சங்கரன்.
என் பையன் இப்போ பாத்துட்டு இருக்குற வேலை வேண்டும் என்றால் அவனோட படிப்புக்கும் ,தகுதிக்கும் கம்மியா இருக்கலாம் ஆனால் ஒரு காலத்துல நிறைய சம்பாதிச்சு நல்ல ஒரு நிலைமையில் தான் இருந்தான் என்ற சங்கரனிடம் வேலை என்ன வேலை கார்த்திக் தம்பி மாதிரி ஒரு நல்லவனுக்கு என் பொண்ண கட்டி கொடுக்குறதுல எனக்கு முழு சம்மதம் தான் .ஆனால் என் மகள் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன் என்றார் சந்திரன் .சரிப்பா வாழப் போறது என்னமோ பசங்க தானே. நானும் கார்த்தி கிட்ட பேசிட்டு சொல்கிறேன் .நீயும் மகாலட்சுமி கிட்ட பேசிட்டு நல்ல முடிவா சொல்லு என்றார் சங்கரன்.
மகா ப்ளீஸ் என்ற சித்தார்த்தின் கையை உதறியவள் உனக்கு அறிவு இல்லையா இதுக்கு முன்னாடி என் பின்னாடி நீங்க சுத்துனது வேற இப்பயும் உங்களுக்கு நான் தான் வேணும்னு நீங்க சொல்றது ரொம்ப பெரிய தப்பு உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சு உங்களை நம்பி வீட்ல ஒரு பொண்ணு இருக்காள் என்றாள் மகாலட்சுமி. எனக்கு அவளை சுத்தமா பிடிக்க வில்லை மகா என்னால முடியல மகா. அவள் பக்கத்துல நெருங்க கூட என்னால முடியல என் மனசு முழுக்க நீ தான் இருக்க என்ற சித்தார்த்தின் கன்னத்தில் பளார் என்று அறைந்தவள் இதே மாதிரி உன் பொண்டாட்டி நீ நெருங்கி போகும்போது என் மனசு முழுக்க இன்னொருத்தன் இருக்கான்னு சொன்னால் நீ என்னடா பண்ணுவ பொறுக்கி உன் மேல எனக்கு இருந்த மரியாதை எல்லாமே போயிருச்சு என்று அவனை திட்டி விட்டு சென்று விட்டாள் மகாலட்சுமி.
… தொடரும்…
Interesting sis😍😍
oruthara virumbitu inoruthara kalayanam panna eppadi santhosama iruka mudium ore mudivoda irutnhu irukanum siddharth ipo kalayanam panituvanthu ivala tholla pannitu iruka athu thappu .
ranjani ammave unaranum sollitanga super kandipa theriyanum panathukaga ippadi love pannavana vitutu vera kalayanam panna mudivu pannita
Athuku ni avala kalyanam panama irunthu irukkanum😤 spr going waiting for nxt epi💕💕💕
சரியான அடி…