என்ன கார்த்தி இப்படி சொல்லிட்ட என்ற சங்கரனிடம் வேற எப்படிப்பா சொல்ல முடியும் இப்போ தான் ரஞ்சனி ஏற்படுத்தின காயமே கொஞ்சம் கொஞ்சமா ஆறிக்கிட்டு இருக்கு அதுக்குள்ள இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொன்னா எப்படிப்பா என்னால அவளை மறக்க முடிய வில்லை . அவள் வேண்டும் என்றால் என்னை உண்மையா நேசிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் நான் அவளை உண்மையா உயிரா தானியப்பா நேசித்தேன் அவளை எப்படி என்னால மறக்க முடியும் கொஞ்ச நாள் ஆகட்டும் அது மட்டும் இல்லப்பா ரஞ்சனி என்ன காரணத்தை சொல்லி என்னை வேணாம்னு சொன்னாள். எனக்கு வேலை இல்லைன்னு தானே இப்ப நான் பார்க்கிற வேலைக்கு எந்த பொண்ணு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பாள். நான் கவர்மெண்ட் எக்ஸாம் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் பா இன்னும் ரெண்டு நாளில் எக்ஸாம் இரண்டு மாதத்தில் ரிசல்ட் ஒருவேளை கவர்மெண்ட் வேலை கிடைச்சா அதுக்கு அப்புறம் இந்த கல்யாண பேச்சு எடுங்க நீங்க எந்த பொண்ண காட்டினாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ற கார்த்திகேயன் வேலைக்கு கிளம்பி விட்டான் சோகத்துடன் நண்பனைக் காண சென்றார் சங்கரன்.
என்ன சங்கரா சோகமா இருக்க என்ற சந்திரனிடம் என் பையன் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டான் சந்திரா என்றார் சங்கரன்.
இப்போ பார்க்கிற வேலைக்கு எந்த பொண்ணும் அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டாளாம். அதனால கவர்மெண்ட் எக்ஸாம் எழுத போறானாம் ஒரு வேளை கவர்மெண்ட் வேலை கிடைச்சால் அதுக்கு அப்புறம் இந்த கல்யாண பேச்சை ஆரம்பிங்கப்பான்னு சொல்லிட்டான் சந்திரா என்றார் சங்கரன்.
சரி சங்கரா ஒன்னும் பிரச்சனை இல்ல என் மகளும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லி இருக்கிறாள் பார்ப்போம் தம்பிக்கு வேலை கிடைச்சுட்டா சந்தோஷமா என் பொண்ணை உன் வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைத்து விடுகிறேன் இப்போ என்ன கொஞ்ச நாள் காத்துட்டு இருந்தால் ஒன்றும் குடி முழுகி போகாது என்றார் சந்திரன். வீட்டில் தன் மனைவி பேசிய விஷயங்களை நண்பனிடம் கூற வேண்டாம் என்று நினைத்து.
என்ன ரஞ்சனி கல்யாணமாகி முழுசா ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வேலைக்கு வந்துட்ட என்ற தோழி ரம்யாவிடம் கிண்டல் பண்ணாதடீ பொல்லாத கல்யாணம் ஏண்டி நீ வேற கடுப்பேத்துற அவன் என்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேன் என்கிறான் எதுக்குடா இந்த கல்யாணம் பண்ணினோம்னு இருக்கு ஏதாச்சும் பேசுனா சண்டை தான் நடக்குது. எரிஞ்சி எரிஞ்சு விழுகிறான் என்று நொந்து கொண்டாள் ரஞ்சனி.
பேசாமல் கார்த்திகை கல்யாணம் பண்ணி இருந்திருலாம்னு உன் மனசு உறுத்துதா என்ற ரம்யாவிடம் நீயன ஏன் இப்படி யோசிக்கிற கார்த்திக் என்னோட எக்ஸ் அவ்வளவுதான் அவனைப் பத்தி இப்ப பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றாள் ரஞ்சனி.
ஒருவேளை நீ கார்த்திக்கை கல்யாணம் பண்ணி இருந்தால் இன்னைக்கு நீ ரொம்ப சந்தோஷமா இருந்திருப்ப என்ற ரம்யாவிடம் நீ ஏன் லூசு மாதிரி பேசிவிட்டு இருக்க அம்மா தான் இப்படி லூசு மாதிரி சொல்லிக்கிட்டே இருப்பாங்க .
கார்த்திகை கல்யாணம் பண்ணி இருந்தால் இதைவிட இன்னும் கடுகடுன்னு தான் இருந்திருப்பேன். இங்கேயாவது என் அத்தை ,மாமா மட்டும் தான் அவங்களால எனக்கு எந்த தொந்தரவும் இல்லை எதுவும் கண்டுக்கவே மாட்டாங்க ஆனால் கார்த்திக் வீட்ல மாமியார் ,மாமனார், கொழுந்தனாரு ,நாத்தனார் ஒரு கும்பல் இருக்கு. அங்க போய் எப்படி என்னால குப்பை கொட்ட முடியும் அது முடிஞ்சு போன விஷயம் என்றாள் ரஞ்சனி.
கார்த்திக் வீட்ல அவ்ளோ பேரு இருக்காங்கன்னு உனக்கு தெரிஞ்சு தானே நீ காதலிச்சே என்ற ரம்யாவிடம் ஆமா பொல்லாத காதல் பொறுப்பே இல்லாத ஒருத்தன் மேல வந்த காதல் என்றாள் ரஞ்சனி .
என்ன பொறுப்பு இல்லைன்னு நீ சொல்லுற கார்த்திக் மாதிரி ஒரு பொறுப்பான ஆளை நீ எங்கேயாவது பாத்துட்டு இருக்க முடியுமா அவனுக்கு வேலை போனது என்னவோ உண்மைதான் அதுக்கு காரணம் யாரோ ஒரு பொண்ண பத்தி அந்த மேனேஜர் தப்பா பேசினான்னும் அவன் சட்டையை புடிச்சு தானே அந்த யாரோ ஒரு பொண்ணு வேற யாரும் இல்ல நீ தான் உன்ன பத்தி தான் அந்த மேனேஜர் தப்பு தப்பா கமெண்ட் பண்ணிட்டு இருந்தான். அதே சமயம் சரியா அந்த ஸ்வேதா கொஞ்சம் மாட்டிக்கிட்டா உன்னை கிண்டல் பண்ணின கோபத்தினால் தான் அவனை அடிச்சானே தவிர ஸ்வேதாவுக்காக அடிக்க வில்லை அது புரிஞ்சுக்காமல் நீ அவசரப்பட்டு அவனை வேணான்னு சொல்லிட்ட. உன் லைஃப்ல நீ பண்ணின மிகப்பெரிய தப்பு என்னன்னு நான் சொல்லட்டுமா கார்த்திக்கை உன் வாழ்க்கையில் இருந்து தூக்கிப் போட்டது என்றாள் ரம்யா.
முடிஞ்சு போன விஷயத்தைப் பற்றி பேசி என்ன ஆகப்போகுது விடு ரம்யா கார்த்திக் என்னோட வாழ்க்கையில முடிஞ்சு போன அத்தியாயம் அவ்வளவுதான் என்றாள் ரஞ்சனி. சரி அவனை பத்தி இனி உன் கிட்ட நான் பேச மாட்டேன் நீ உன் வேலைய பாரு என்ற ரம்யா எழுந்து சென்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் . ரஞ்சனிக்கு தான் மனம் ரணமாக வலித்தது .எனக்காக தான் அவனோட வேலை போச்சா என்று யோசித்தவளுக்கு குற்ற உணர்வாக இருந்தது.
சோகமாக வீட்டிற்கு வந்தாள் ரஞ்சனி. அவளது கணவன் இன்றும் குடித்துவிட்டு தான் வந்திருந்தான். இவனுக்கு என்ன தான் பிரச்சனை என்று நொந்து போனவள் அவன் முன்பு நின்று என்ன உனக்கு பிரச்சனை ஏன் டெய்லி குடிச்சிட்டு வர என்று கேட்டாள் . அவன் அவளை முறைத்து விட்டு எழுந்து செல்ல பார்க்க அவனது கையை எட்டிப் பிடித்தாள் ரஞ்சனி.
சித்தார்த் நான் உங்களை தான் கேட்டுக்கிட்டு இருக்கேன் என்ன உங்க பிரச்சனை தினம் ஏன் குடிச்சிட்டு குடிச்சிட்டு வர்றீங்க என்றால் ரஞ்சனி கோபமாக. முதல்ல என் கையை விடுடி என்றான் சித்தார்த் .
விட முடியாது பதில் சொல்லுங்க என்ற ரஞ்சனியின் கையை உதவியவன் அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தான். என் கையை பிடிக்க உனக்கு என்னடி உரிமை இருக்கு என்றான் சித்தார்த் .
நான் நீங்க தாலி கட்டின பொண்டாட்டி என்ற ரஞ்சனியிடம் இந்த கயிறு உன் கழுத்துல கட்டுனதுனால எல்லாம் நீ என் பொண்டாட்டி ஆகிட முடியாது உன்னை எனக்கு சுத்தமா பிடிக்க வில்லை உன் மூஞ்சிய பாக்குறதுக்கு பிடிக்காமல் தான் டெய்லி குடிச்சிட்டு வருகிறேன் என்றான் சித்தார்த்.
என்ன பிரச்சனை என் மூஞ்சிய பார்க்க பிடிக்கலைன்னா என்ன அர்த்தம் என்ற ரஞ்சனி இடம் என்ன அர்த்தம்னா நீயெல்லாம் ஒரு பொண்ணாடி ஏற்கனவே ஒருத்தனை காதலிச்சு அவன் கூட நிச்சயம் வரை போயி அவனுக்கு வேலை போயிடுச்சுன்னு சொல்லிட்டு அவனை தூக்கி போட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணி இருக்க வெட்கமா இல்லையா உனக்கு என்றான் சித்தார்த்.
நீ மட்டும் என்ன ஒழுங்கா ஏற்கனவே ஒருத்தியை லவ் பண்ணிட்டு தானடா என்னை கல்யாணம் பண்ணினே என்றாள் ரஞ்சனி பதிலுக்கு. ஏண்டி உன்னை கல்யாணம் பண்ணினேன் .உன் அத்தையும், மாமாவும் செத்துப் போயிருவேன்னு மிரட்டி இருந்தால் கூட உன்னை நான் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன். நான் அவளை கல்யாணம் பண்ணிக் கொண்டால் அவளையும் ,அவள் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி அவளையும் அவள் குடும்பத்தையும் சாகடிச்சிடுவேன்னு மிரட்டுனாங்க அதுக்கு பயந்து தாண்டி உன்னை கல்யாணம் பண்ணினேன் உன்னை மாதிரி காசுக்காக அவளை தூக்கி போட வில்லை நான். அவள் நல்லா இருக்கணும்னு மட்டும் தான் அவளை விட்டுட்டு உன்னை கல்யாணம் பண்ணினேன் என்ற சித்தார்த் உன் அத்தை ,மாமாவால மிரட்டி என்னை உன் கழுத்துல தாலி மட்டும் தான கட்ட வைக்க முடியும். உன் கூட சேர்ந்து வாழ வைக்க முடியாதுல என் வாழ்க்கையில ஒரே ஒரு காதல் தான். அது என் மகா மட்டும்தான் அவளைத் தவிர இன்னொரு பொண்ணை இந்த ஜென்மத்துல நான் நினைக்கவே மாட்டேன். அவளை நினைச்சு இந்த மனசு என்னைக்குமே உன்னை மாதிரி ஒரு கேவலமான பிறவியையும் நினைக்கவே நினைக்காது என்று திட்டி விட்டு சென்று படுத்துக் கொண்டான்.
…தொடரும்…
Intresting spr going waiting for nxt epi👌👌👌👌
Interesting 😍😍
Interesting 😍🥰
செம….
Super siddharth nalla kelu avala panathukaga oruthana thuki potu vanthutu una kevalama pesura