ரஞ்சனிக்கு தான் அவமானமாக இருந்தது கணவன் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளை நெருப்பில் நிற்க வைத்தது போல் இருந்தது. காசுக்காக தானே நீ அவனை தூக்கி போட்ட என்று அவன் கேட்கும் பொழுது அவளை யாரோ செருப்பால் அடித்தது போல் இருந்தது.
அவள் மனதில் கேவலம் காசுக்காக என்னையே நேசித்த ஒருத்தனை தூக்கி போட்டுட்டு இவனை போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோமே என்ற எண்ணம் உருவாகாமல் இல்லை ஆனாலும் தனது பிடிவாதத்தினால் அந்த எண்ணத்தை அழிக்கத்தான் அவள் முயன்றாள்.
ஹலோ வண்டியை நிப்பாட்டுங்க சைடு ஸ்டாண்ட் எடுத்து விடாமல் இருக்கு என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ஸ்கூட்டரில் இருந்த பெண் கீழே விழுந்து விட்டாள்.
என்னங்க நீங்க சைடு ஸ்டாண்ட் எடுத்துவிடாமல் பைக் ஓட்டிட்டு வந்திருக்கீங்க என்றவன் கீழே விழுந்து கிடந்த அவளை தூக்க ஹெல்மெட் அணிந்திருந்ததனாலும், பைக்கும் மிதமான வேகத்தில் சென்றதனாலும் அவளுக்கு பெரிதாக அடி பட வில்லை.
கைகளில் சிராய்ப்புகளோடு எழுந்தாள் மகாலட்சுமி . பார்த்து வரக்கூடாதா என்ற கார்த்திகேயன் வாங்க பக்கத்துல தான் ஹாஸ்பிடல் இருக்கு போயிட்டு வரலாம் என்றான் . இல்லைங்க பரவாயில்ல என்ற மகாவிடம் பாருங்கள் ரத்தம் வருது என்று பதறினான் கார்த்திகேயன். அவளுடன் மருத்துவமனைக்கு சென்று அவளுக்கு உதவியாக இருந்தான். ரொம்ப தேங்க்ஸ்ங்க என்ற மகாவிடம் இனிமேலாவது கொஞ்சம் பார்த்து கேர்ஃபுல்லா போங்க என்று கூறிவிட்டு சென்றுவிட்டான் கார்த்திகேயன்.
லட்சுமி என்னாச்சும்மா என்று பதறிய சந்திரனிடம் ஒன்றும் இல்லைப்பா வரும் வழியில சின்ன ஆக்சிடென்ட் என்றாள் மகாலட்சுமி. உனக்கு ஒன்றும் பெருசா அடி இல்லையே லட்சுமி என்ற சந்தியாவிடம் ஒன்றும் பெருசா அடி இல்லைம்மா என்றவள் தன் அறையில் சென்று ஓய்வெடுத்தாள்.
எக்ஸாம் எப்படிப்பா எழுதியிருக்க என்ற சங்கரனிடம் நல்லா தப்பா எழுதி இருக்கேன் பாஸ் பண்ணி வேலை கிடைச்சிட்டா சந்தோஷம்தான் என்றான் கார்த்திகேயன். என்னப்பா உன் சட்டையில் ரத்தம் என்று பதறிய உமையாளிடம் ஒன்றும் இல்லை அம்மா எக்ஸாம் முடிஞ்சுட்டு வரும்போது என்கூட எக்ஸாம் எழுத வந்த ஒரு பொண்ணு பாவம் சைடு ஸ்டாண்ட் எடுக்காமல் பைக் ஓட்டிட்டு போய் ஆக்சிடன்ட் ஆயிட்டாங்க அதான் அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வந்தேன் . அவங்களோட ரத்தம் தான். என்றான் கார்த்திகேயன்.
அந்த பொண்ணுக்கு அடி பலமாப்பா என்ற உமையாளிடம் இல்லம்மா அடி எல்லாம் பலமா இல்லை ஹெல்மெட் போட்டு இருந்தாங்க கையில தான் சிராய்ப்பு வேற ஒன்றும் இல்லை என்ற கார்த்திகேயனிடம் சரி இந்தா மோர் குடி அம்மா சாப்பாடு ரெடி பண்ணிடுறேன் சாப்பிடலாம் என்றார் உமையாள்.
என்னடா எப்ப பார்த்தாலும் எதையோ பறி கொடுத்தது மாதிரியே இருக்க என்ற கார்த்திகேயனிடம் இல்லை அண்ணா என்னால சித்ராவை மறக்க முடியல என்றான் தமிழரசன். மறந்து தான் ஆகணும் தமிழ் அந்த பொண்ணுக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இன்னமும் நீ அவளை நினைச்சிட்டு இருந்தால் எப்படி என்றான் கார்த்தி.
நான் கட்டின தாலிய அறுத்து எறிஞ்சுட்டாங்களே அண்ணா என்ற தமிழரசனிடம் நீ கொடுத்த பிள்ளையை கூட தான் கலைச்சிட்டாங்க என்ன பண்ண சொல்லுற வீடு அதை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை நீ உண்மையிலேயே சித்ராவை நேசித்து இருந்தால் அவள் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்னு நினைச்சுட்டு அடுத்த வேலைய பாரு. ஏற்கனவே அப்பா உன் மேல கோவத்துல இருக்காரு நீ ஒழுங்கா படிக்காமல் காலேஜ் போகாமல் இப்படி சுத்திட்டு இருந்தேனா அவருடைய கோபம் இன்னும் தான் அதிகமாகும்.
அதனால ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு படிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதி அதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது. என்று தம்பிக்கு அறிவுரை கூறினான் கார்த்திகேயன்.
என்ன ரஞ்சனி இது கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள அவன் வேண்டாம்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தால் என்ன அர்த்தம் என்றார் சங்கீதா. வேண்டாம் என்று தான் அர்த்தம்.என்னால கூட வாழ முடியாது என்ற ரஞ்சனியிடம் என்ன பேச்சு இது முதல்ல ஒருத்தனை காதலிக்கிறேன்னு சொன்ன. அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன. சரின்னு சொல்லி நிச்சயதார்த்தம் வரைக்கும் போச்சு அதுக்கப்புறம் அவனுக்கு வேலை போச்சு இவன் கூட வாழ்ந்தா என் வாழ்க்கை நல்லா இருக்காது அதனால அவன் வேணாம்னு சொல்லிட்டு வந்துட்ட அதற்கும் சம்மதிச்சோம் .
அப்புறம் உங்க அப்பா அவரோட அக்கா மகனுக்கு உன்னை கட்டி வைக்கணும்னு ஆசைப்பட்டு உன் கிட்ட சம்மதம் கேட்டப்ப நீ சம்மதித்து தான் அவனை கல்யாணம் பண்ணின. இப்போ என்ன கட்டிக்கிட்டவனையும் உனக்கு பிடிக்கலையா அவன் உனக்கு வேண்டாமா? ஏன் அவனுக்கும் வேலை எதுவும் போயிருச்சா என்றார் சங்கீதா.
அம்மா ப்ளீஸ் வார்த்தையால என்னை வதைக்காதே எனக்கு அவன் வேண்டாம் அவ்வளவுதான் என்றாள் ரஞ்சனி கோபமாக.
என்ன பேச்சு இது கல்யாணங்கறது என்ன விளையாட்டா இப்படித்தான் முதல்ல நிச்சயதார்த்த வரைக்கும் போயி கல்யாணத்தை நிப்பாட்டுன இப்ப கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் புருஷன் வேணாங்குற என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல நீ என்ன சொன்னாலும் அதற்கு ஏத்தாப்புல ஆடுவோம்னு நினைச்சிட்டு இருக்கியா என்றார் சங்கீதா.
நீங்க ஒன்னும் ஆட வேண்டாம் என்னால அவ கூட சேர்ந்து வாழ முடியாது ஒரு குடிகாரனோட நீ குடும்ப நடத்துவியா அம்மா என்றாள் ரஞ்சனி .நான் ஒன்னும் என்னையவே உருகி உருகி காதலிச்ச ஒருத்தன தூக்கி போட்டு குடிகாரனா இருந்தாலும் பரவால்லன்னு சொல்லி கழுத்தை நீட்யலையே. நீ தானே ரஞ்சனி போய் அவனுக்கு கழுதை நீட்டின கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் குடிப்பான்னு உனக்கு தெரியாதா என்ன.
அவனுக்கு காதல் தோல்வி அப்போ அவன் கண்டிப்பா குடிகாரனா தான் இருப்பான். நீதான் அவனை திருத்தணும் அதை விட்டுவிட்டு எனக்கு அவன் வேண்டாம்னு சொன்னால் என்ன அர்த்தம் என்றார் சங்கீதா.
அவனை திருத்துவதற்கு ஒன்னும் நான் பிறக்க வில்லை என்றாள் ரஞ்சனி. அவளை பார்த்து சிரித்தார் சங்கீதா.
என்னமா சிரிச்சிட்டு இருக்க என்ற ரஞ்சனி இடம் வேற என்னடி பண்ண சொல்ற உன்னை நினைச்சா ஆத்திரம் ஆத்திரமா வருது அந்த ஆத்திரத்துல உன்னை எதுவும் அடிச்சிடுவேனோன்னு தான் சிரிக்கிறேன் என்ற சங்கீதா பொண்ணாடி நீ உனக்கு என்னடி குறை வச்சோம் .ஆரம்பத்துல ஒருத்தன புடிச்சி இருக்குன்னு சொன்ன அப்பறம் அவன் வேண்டாம் அவனுக்கு வேலை போச்சு என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தினியே. படிச்சு படிச்சு சொன்னேன் டி கார்த்தி ஒருத்தனால மட்டும்தான் உன்னை சந்தோஷமா பாத்துக்க முடியும் என்று நீ தான் கேட்கவே இல்லையே அவன் எவ்வளவு பொறுமையான ஒரு பையன் அவனை விட்டுபுட்டு இப்ப அனுபவி என்றார் சங்கீதா.
அம்மா போதும் நீ என்ன நேரம் பார்த்து என்ன குத்தி காட்டுறியா இவன் வேண்டாம்ன்னு சொன்னால் உடனே அந்த கார்த்தியை மனசுல நினைச்சுட்டு இருக்கேன்னு அர்த்தமா அவனும் எனக்கு வேண்டாம் தான் சும்மா தேவை இல்லாமல் பேசாத என்று கூறிவிட்டு தன் அறைக்குள் அடைந்து கொண்டாள் ரஞ்சனி.
… தொடரும்….
Super👌interesting 😍
Nice going waiting for nxt epi👌👌👌👌
crt ah kekuranga amma interesting
கதை நகர்வு அருமை. … ரஞ்சனிக்கு இதை விட மோசமான தண்டனை வேனும்….