காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்த கார்த்திகேயன் அவளை சந்திப்பதற்காக வடபழனி கோயிலுக்கு சென்றான். கோயிலில் முருகனை பிரார்த்தனை செய்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்தவன் அவளது எண்ணிற்கு ஃபோன் செய்தான். வந்துட்டேங்க ஒரு அஞ்சு நிமிஷம் என்ற மகாலட்சுமி போனை கட் செய்தாள்.
கார்த்திகேயனும் அவளது வருகைக்காக காத்திருந்தான் . கோயிலுக்குள் வந்தவள் அவளும் சாமி கும்பிட்டு அவனுக்கு போன் செய்ய அவன் இருக்கும் இடத்தை கூறவும் அங்கு சென்று பார்க்க அதிர்ந்து போனாள் .
அன்று தான் கீழே விழுந்த பொழுது தன்னை காப்பாற்றியவன் தான் தன் தந்தை தனக்கு பார்த்த மாப்பிள்ளை என்று அவள் நினைத்தாள். அவனும் அதிர்ந்து தான் போனான். நீங்க என்றவளிடம் கார்த்திகேயன் என்றான் கார்த்திக் .
சரிங்க நான் தான் மகாலட்சுமி என்றவள் அப்பா சொன்னாங்க நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு விருப்பப்படுறதா என்றாள். எங்க அப்பாவும் சொன்னாங்க என்ற கார்த்திகேயனிடம் எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் மகாலட்சுமி .
என்ன பேச போறீங்க என்றவனிடம் எனக்கு ஆல்ரெடி லவ் ஃபெயிலியர் அதை அப்பா உங்ககிட்ட சொன்னாங்களா என்றாள் மகாலட்சுமி. எனக்கும் தாங்க லவ் ஃபெயிலியர் அவளை ரொம்பவே லவ் பண்ணினேன் . உயிருக்கு உயிரா காதலிச்சேன். அவள் இல்லனா நான் இல்லை அந்த அளவுக்கு நான் நினைச்சேன் ஆனால் அவளோட மனசுல என் மேல அந்த அளவுக்கு காதல் இல்லை நான் சம்பாதிக்கும் போது என் மேல இருந்த காதல் எனக்கு வேலை போனதுக்கப்புறம் இல்லாமல் போயிருச்சு.
அதுக்கப்புறம் வேலை தேடி தெருத் தெருவா சுத்துனேன். எனக்காக காத்திரு ரஞ்சனின்னு எவ்வளவோ கெஞ்சிப் பார்க்க முடியாது போடான்னு சொல்லிட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டாள். சத்தியமா சொல்கிறேன் அவளை நினைச்சுட்டு உங்களோட வாழ மாட்டேன் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படின்னா எவ்வளவு சீக்கிரம் அதை மறக்க முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நான் மறக்க முயற்சி பண்ணுகிறேன் என்றான் கார்த்திகேயன்.
மறக்கணும்னு அவசியம் இல்ல அவங்க உங்களுக்கானவங்க இல்லை என்று புரிஞ்சுக்கிட்டாலே போதும் என்ற மகாலட்சுமி நான் கூட ஒருத்தரை விரும்புனேன். அவரும் ரொம்ப நல்லவரு என்னுடைய கல்யாணம் நடக்காமல் போனதுக்கு காரணமும் பணம் தான் அவரோட அம்மா கேட்ட வரதட்சணை என் அப்பா அம்மாவால கொடுக்க முடியலைன்னு அவங்க அம்மா எங்க கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல வில்லை.
ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று அவரும் சொன்னாரு எனக்கு விருப்பமில்லை அப்பா, அம்மா சம்மதத்தோடு நடக்கிற கல்யாணம் மட்டும் தான் கல்யாணம் ஓடிப்போய் யாருடைய சாபத்தையும் வாங்கிட்டு வாழ கூடாது என்பது என்னுடைய விருப்பம்.
இப்போ அவர் என்னோட மனசுல இல்லை என்னை பொறுத்த அளவில் அவர் ஒரு காலத்தில் நான் நேசித்த மனிதன் அவ்வளவுதான் என்றாள் மகாலட்சுமி.
பரவாயில்லங்க அது ஒன்னும் தப்பு இல்லையே என்ற கார்த்திகேயன் இதை சொல்ல தான் வரச் சொன்னீங்களா என்றான் கார்த்திக். இல்லைங்க இதை பேச வர சொல்ல வில்லை என் தங்கச்சிக்கு இந்த வருஷம் படிப்பு முடியப் போகுது .
என் அப்பா பாவம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் . அதுவும் அவர் சம்பாத்தியம் அவருடைய மெடிக்கல் செல்லவுக்கே பத்தாது . அவர் உடம்பு சரியில்லாத மனுஷன் அதனால என் தங்கச்சிக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் நம்ம கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமும் என்னோட சம்பளத்தை நான் என் அப்பா அம்மாவுக்கு கொடுக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்றாள் மகாலட்சுமி.
உங்க தங்கச்சிக்கு வேலை கிடைக்கும் வரைக்கும் உங்க சம்பளத்தை உங்க வீட்டுக்கு கொடுக்க போகிறிங்க இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்றான் கார்த்திக். அப்போ நம்ம கல்யாணமும் வேண்டாங்க என்றாள் மகாலட்சுமி. நான் இன்னும் பேசி முடிக்க வில்லை கொஞ்சம் பொறுமையா இருங்க என்ற கார்த்திக் உங்க தங்கச்சி வேலைக்கு போனால் உங்க குடும்ப பாரம் குறையும் அதுவரை உங்களுடைய சம்பளம் உங்க வீட்டுக்கு கொடுக்கனும் அது தான் உங்க ஆசை ஆனால் நான் யோசிக்கிறது வேற. உங்க தங்கச்சி கல்யாணம் ஆகி போய் விட்டாள் அப்பறம் உங்க அப்பா அம்மாவை யாரு பார்த்துக் கொள்வது அதனால் உங்க தங்கச்சி வேலைக்கு போகும் வரை இல்லை உங்க அப்பா அம்மா வாழும் காலம் வரை உங்க சம்பளத்தை அவங்க கிட்ட நீங்கள் தாராளமா கொடுக்கலாம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இப்போதும் இந்த கல்யாணம் வேண்டாம் என்று நீங்க நினைத்தால் சொல்லுங்க நானே என் அப்பா கிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன் என்றான் கார்த்திகேயன். அவனை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் மகாலட்சுமி.
ஹலோ என்னங்க என்று அவன் சொடுக்கவும் நினைவுக்கு வந்தவள் எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் என்றே அப்பாகிட்ட நான் சொல்லிடுறேன். நீங்களும் உங்க அப்பா கிட்ட உங்க முடிவு சொல்லுங்க என்றாள் மகாலட்சுமி.
சரிங்க நான் கிளம்பட்டுமா என்றவனிடம் ஒரு காபி சாப்பிட்டு போலாமே என்றாள் மகாலட்சுமி .சரி ஓகே என்றவன் அவளுடன் ஒரு காபி ஷாப்பிற்கு சென்றான் .
இருவரும் காபி குடித்துக் கொண்டிருக்கையில் அங்கு சித்தார்த் வந்தான். மகா என்று வந்தவனை பார்த்து மகாலட்சுமி அதிர்ந்து போனாள் .
என்ன மகா இப்போ எல்லாம் என்கிட்ட பேசுறதே இல்லை என்ற சித்தார்த்திடம் பதில் ஏதும் பேசாமல் அமர்ந்து இருந்தாள் மகாலட்சுமி. அவள் என் லைஃப் விட்டு போயிட்டாள் மகா நீ வா மகா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான் சித்தார்த்.
முட்டாள் மாதிரி பேசாதீங்க மிஸ்டர் சித்தார்த் என்ற மகாலட்சுமி நம்ம போகலாமா என்று கார்த்திகேயனிடம் கேட்டாள் . இது யாரு மகா என்ற சித்தார்த்திடம் நான் கல்யாணம் பண்ணிக்க போற என்னோட வருங்கால கணவர் என்றாள் மகாலட்சுமி.
கல்யாணம் பண்ணிக்க போறியா ஏன் மகா இப்போ உங்க அப்பாவுக்கு காசு பணம் எல்லாம் நிறைய இருக்கா சீர்வரிசை எல்லாம் செய்றதுக்கு என்ற சித்தார்த்திடம் மிஸ்டர் அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என்றான் கார்த்திகேயன்.
எதுடா தேவையில்லாத விஷயம் நான் காதலிச்ச பொண்ணுடா என் மகாலட்சுமி டா கேவலம் வரதட்சனை அந்த ஒரு விஷயத்துக்காக நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம். அவளை எவ்வளவு நேசிச்சேன் தெரியுமா உன்னை கெஞ்சி கேட்கிறேன் என் மகாவை என்கிட்ட கொடுத்துடுடா என்றான் சித்தார்த்.
முட்டாள் மாதிரி பேசாதீங்க மிஸ்டர் சித்தார்த் நீங்க இன்னொருத்தியோட கணவர் அதை மறந்துடாதீங்க இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்டிட்டு இப்ப என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு என் பின்னாடி வர்றீங்க வெட்கமா இல்லை உங்களுக்கு என்றாள் மகாலட்சுமி.
சத்தியமா இல்ல மகா உன்கிட்ட வெட்கம் எல்லாம் என்னால பட முடியாது மகா அவள் என்னை வேணாம்னு போயிட்டாள் மகா என்னை புரிஞ்சுக்க மகா என்று கெஞ்சினான் சித்தார்த்.
பிரதர் இப்போ நீங்க நிதானமா இல்லை நம்ம இன்னொரு நாள் இதை பத்தி பேசலாம் என்ற கார்த்திகேயன் நம்ம போகலாம் என்று அவளை அழைத்துக்கொண்டு செல்ல எத்தனிக்க மகாலட்சுமியின் கையைப் பிடித்து இழுத்தான் சித்தார்த் .எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ மஹா என்று அவளது கையை பிடித்தவனிடம் தயவு செய்து என் கையை விடுங்க என்றாள் மகாலட்சுமி.
இல்லங எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும் எனக்கு நீ வேணும் நீ என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நீ இவன் கிட்ட சொல்லு என்றான் சித்தார்த் அவளது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு.
அவளும் அவனிடமிருந்து தன் கையை பிரிக்க போராடினாள். ஒரு கட்டத்திற்கு மேல் அவளை அவன் விடமாட்டான் என்று தெரிந்தவள் பளார் என்று அவனது கன்னத்தில் அறைந்தால் அந்த நேரம் அவன் அவளது ஒரு கையை விட தன் கையை பிடித்துக் கொண்டு வெக்கமா இல்லை உனக்கு உன் அம்மாவை சம்மதம் சொல்ல வச்சு என்னை கல்யாணம் பண்ணிக்க துப்பில்லாமல் தானே அவங்க பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணின. இன்னைக்கும் என்னால வரதட்சனை கொடுக்க முடியாது இப்ப உங்க அம்மா அப்பா நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டாங்களா எவளோ ஒருத்தி சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் இல்ல சாப்பிட நான் ஒன்னும் கேடுகெட்ட ஜென்மம் இல்லை .உனக்கு அவ்ளோ தான் மரியாதை இன்னொரு முறை என் பின்னாடி சுத்துன செருப்பால அடிப்பேன்.
இவரை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் இவரை தான் நான் லவ் பண்ணுறேன். இவர் மட்டும்தான் எனக்கு புருஷனா வர தகுதி உள்ளவர் போதுமா என்று கூறிய மகாலட்சுமி மிஸ்டர் கார்த்திக் ஐ லவ் யூ நான் உங்களை லவ் பண்றேன் என்று கூறிவிட்டு அவனை இழுத்துச் சென்றாள் மகாலட்சுமி.
சித்தார்த் அவள் கொடுத்த அறையை வாங்கிக்கொண்டு கண்ணீர் வடித்தபடி அங்கு இருந்த சேரில் அமர்ந்து விட்டான்.
…. தொடரும்…
Very interesting
Intresting
crt tha ava ketatum mma kitta pesi samthika vaika mudila avanga blackmail pani mrg pana vachitanga neeum panita nee kudichitu vantha ava eppadi unoda irupa atha poita ava poitanu nee maha va vanthu torture panra ipo mattum unga amma samathipangala
Nice epi😍😍