உனக்கு சொந்தமா இருந்த ஒரு வைரத்தை எப்படி தொலைச்சிட்டியே ரஞ்சனி என்ற காவியாவிடம் பதில் ஏதும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள் ரஞ்சனி.
என்னடி எதையோ பறிகொடுத்தது மாதிரி இருக்க என்ற சங்கீதாவிடம் ஒன்னும் இல்லம்மா என்ற ரஞ்சனி கார்த்திகேயனின் திருமண அழைப்பிதழை காட்டினாள் .அந்த பையனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா இந்த முறையாவது கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் என்றார் சங்கீதா .
உனக்கு வருத்தமா இல்லையா அம்மா என்ற ரஞ்சனி இடம் நான் எதுக்குமா வருத்தப்படணும் அந்த பையனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கிறது பார்த்து உனக்கு ஏதும் வருத்தமா இருக்கா நம்ம வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைச்சிட்டோம் என்று கேட்ட சங்கீதா என்ன வலிக்குதா ரஞ்சனி தப்பு பண்ணுனா வலிக்கனும் கார்த்திக் அவரோட வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போக தயாராகிட்டான் நீ முன்னமே உன் வாழ்க்கையில அவனைத் தூக்கிப் போட்டுட்டு வேற ஒருத்தனை சூஸ் பண்ணிட்ட. ஒரு விஷயம் சொல்றேன் கேளு. இனிமேல் உனக்கும் கார்த்திக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது நீ உன் வாழ்க்கையை சித்தார்த் கூட சேர்ந்து வாழ முயற்சி பண்ணு அப்பா உன்னை அத்தை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றாரு கிளம்பு என்றார் சங்கீதா.
என்னால முடியாது என்ற ரஞ்சனியிடம் முடியாது என்றால் என்ன என்று அர்த்தம் எத்தனை நாளைக்கு நானும் ,அப்பாவும் உனக்கு துணையாக இருக்கப் போகிறோம்.
எங்களுக்கு அப்புறம் உன் வாழ்க்கை என்ன ஆகிறது அந்த கவலை எனக்கும் ,அப்பாவுக்கும் நிறையவே இருக்கு தயவு செஞ்சு சொல்லுறதை புரிஞ்சு நடந்துக்கோ என்று மகளுக்கு புத்திமதி கூறினார் சங்கீதா.
அவளுக்கும் அவரது அறிவுரையை கேட்பதை தவிர வேறு உபாயம் இருப்பதாக தோன்றவில்லை அமைதியாக தன் தந்தையுடன் தன் கணவனின் வீட்டிற்கு சென்றாள்.
சித்தார்த் நாங்க பண்ணினது தப்பு தாண்டா நீ ஆசைப்பட்ட பொண்ணை உனக்கு கட்டி வைக்காதது தப்புதான் அதுக்காக உன்னை நம்பி கழுத்தை நீட்டி நீ கட்டின தாலியை வாங்கி வாழ வந்த ஒரு பொண்ணை விரட்டறது ரொம்ப பெரிய தப்பு என்றார் அன்பரசி.
இதோ பாருங்க சரியா தப்போ என்னோட வாழ்க்கையில ஒரே ஒரு காதல் மட்டும் தான் அது என் மகா மட்டும்தான் அவளை ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டி தானே இவள் கழுத்துல என்னை தாலி கட்ட வச்சீங்க நான் மனசார விரும்பி அவள் கழுத்துல தாலி கட்ட வில்லை அப்போ அவளை என்னால ஏத்துக்க முடியாது அவளை தானே வீட்டை விட்டு போனாள் அவளா வந்தால் வந்துட்டு போகிறாள் வரலையா சந்தோஷம் தயவு செஞ்சு என்னை தொந்தரவு பண்ணாதீங்க போய் அவளை கூட்டிட்டு வா. அவகூட சேர்ந்து வாழு அப்படி எல்லாம் சொல்லாதீங்க என்னால முடியாது இதுக்கும் மேல நீங்க தொந்தரவு பண்ணிட்டே இருந்தீங்க அப்படின்னா நான் இந்த வீட்டை விட்டு போறது தவிர எனக்கு வேற வழியே இல்லை என்றான் சித்தார்த் .
அந்த பொண்ணுக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம் நடக்க போகுதுடா. இன்னும் நீ அவளை நினைச்சுக்கிட்டு உன் வாழ்க்கையை தொலைச்சிட்டு இருப்பியா என்றார் அன்பரசன். அவள் என்ன தூக்கி போட்டு போனதுக்கு காரணம் இருக்கு நான் உங்க பேச்சை மீற முடியாமல் அவளை வேண்டாம் என்று விட்டுட்டு வந்தவன் தானே என் மேல எப்படி அவளுக்கு காதல் இருக்கும் அதனால தான் என்னை அவளுக்கு பிடிக்காமல் போயிடுச்சு சந்தோஷம் எப்படியோ அவள் நல்லா இருந்தால் சரிதான் இப்ப அவளுக்கு வாச்சுருக்கிற மாப்பிள்ளையாவது அவளை சந்தோஷமா பாத்துக்கிட்டான் என்றால் போதும் அதுக்காக அவளை நான் நேசித்தது மாறாது இந்த வாழ்க்கை முழுக்க என் மனசுல என் மகா தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது அது உங்க கிட்ட தெளிவா சொல்லி தான் நான் கல்யாணம் பண்ணினேன். உங்க மருமகள் மட்டும் என்னை யோக்கிய சிகாமணியா கேவலம் காசுக்காக ஒருத்தனை வேண்டான்னு சொன்னவள் தானே.அப்படிப்பட்ட ஒருத்தி கிட்ட எனக்கு அந்த உண்மையான அன்பு கிடைக்கவே கிடைக்காது அதனால தயவு செஞ்சு என்னை விட்ருங்க அவளுக்கு நான் ஏற்கனவே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வச்சுட்டேன் என்றான் சித்தார்த்.
ரஞ்சனி கணவன் வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்த பொழுது அவளது கணவனோ அவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருந்தான் அதை கண்டவள் கசந்த புன்னகையுடன் தன் தாய் தந்தையிடம் அதை காட்டினாள் .
கல்யாணம் முடிந்து முழுசா ஆறு மாசம் கூட ஆக வில்லை அதுக்குள்ள உங்க மருமகன் என்கூட வாழ பிடிக்கலைன்னு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்திருக்கான். இப்போ என்னப்பா பண்ண போறீங்க நான் ஏதோ உங்க அக்காவை எதிர்த்து பேசி கோவிச்சுட்டு வந்ததுனால தான் இந்த கல்யாணம் முறிஞ்சதுன்னு சொல்லுவீங்களா என்றாள் ரஞ்சனி .
ரஞ்சனி இது நம்ம போய் பேசி பார்க்கலாம் என்றார் மோகன். வேண்டாம் அப்பா இருக்கட்டும் இது எனக்கு தேவையான ஒன்று தான் உண்மையா என்னை நேசித்த ஒருத்தனை தூக்கி போட்டேன் அதற்கான தண்டனையா நான் ஏத்துக்கிறேன் தயவு செஞ்சு இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் இதை பத்தி என்றாள் ரஞ்சனி.
பேச வேண்டாம்னா உன்னோட வாழ்க்கை என்ற சங்கீதாவிடம் கடைசி வரை உங்களுக்கு பொண்ணா நான் உங்க கூடவே இருந்துட்டு போகிறேன் அதுல உங்களுக்கு எதுவும் பிரச்சனை இருக்கா என்றாள் ரஞ்சனி. இல்லம்மா என்ற சங்கீதாவிடம் அப்புறம் என்ன விடுங்க என்ற ரஞ்சனி கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்று அமர்ந்து விட்டாள்.
என்னாச்சு தமிழ் நீங்க மட்டும் ஒதுங்கி ஒதுங்கி இருக்கீங்க உங்க அண்ணனுக்கும் என் அக்காவுக்கும் கல்யாணம் நடக்க போது விடிஞ்சா கல்யாணம் வீட்ல உள்ள எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க உங்க முகத்துல மட்டும் கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லையே என்றால்ங அர்ச்சனா.
உனக்கு தெரியும் இல்ல அர்ச்சனா நான் சித்ராவை எவ்வளவு லவ் பண்றேன்னு என்ற தமிழரசனிடம் லூசு மாதிரி பேசாதீங்க தமிழ் சித்ரா இப்போ இன்னொருத்தருக்கு சொந்தம் ஆயிட்டாள். அவளை நீ நினைக்கிறது கூட தப்புதான் என்றாள் அர்ச்சனா.
அவளோட கழுத்துல நான் தானே முதல்ல தாலி கட்டினேன் என் பொண்டாட்டியை தானே இன்னொருத்தனுக்கு கட்டி வச்சிருக்காங்க என்ற தமிழரசனின் கையைப் பிடித்தவள் இதோ பாரு தமிழ் சித்ராவோட லைஃப்ல இப்ப நீ சுத்தமா இல்லை. ஆமாம் உன்னை தான் கல்யாணம் பண்ணினாள் ஆனால் என்ன பண்ணுறது உங்க கல்யாண சட்டப்படி கூட செல்லாதே அவள் மைனர் பொண்ணாச்சே அதனால தயவு செஞ்சு அதையே நெனச்சு உன் வாழ்க்கையை தொலைச்சுராதே உனக்குன்னு ஒரு எதிர்காலம் இருக்கு எப்பவுமே நான் உனக்கு ஒரு நல்ல பிரண்டா உன் கூட சப்போட்டாவே இருப்பேன் என்றாள் அர்ச்சனா.
தெரியும் அர்ச்சனா நீ ,அண்ணன் ,கீர்த்தனா நீங்க எல்லாம் இல்லைனா கண்டிப்பா நான் என்னைக்கோ சூசைட் பண்ணி செத்து இருப்பேன் என்ற தமிழரசனிடம் முட்டாள் மாதிரி சாகுறத்தை பத்தி பேசாதே வாழ்வதை பற்றி யோசி இவ்வளவு நாள் பிரண்ட்ஸா இருந்தோம் . இப்போ நம்ம ரிலேஷன் எங்க அக்காவ தான் உங்க அண்ணன் கல்யாணம் பண்ண போறாரு அப்ப நீ ஏன் எனக்கு முறை பையன் அதனால நான் உன்னை கிண்டல் பண்ணுவேன் என்றாள் அர்ச்சனா. அவனோ அப்போ பதிலுக்கு நானும் கிண்டல் பண்ணி உன்னை அழ வைப்பேன் என்றான் தமிழரசன்.
உனக்கும், சித்ராவுக்கும் கல்யாணம் பிரச்சனை இதெல்லாம் வரதுக்கு முன்னாடி எவ்வளவு சந்தோஷமா இருந்தோமோ அதே மாதிரி இப்பவும் சந்தோஷமா இருக்கலாம் என்றாள் அர்ச்சனா. சரி அர்ச்சனா என்று சிரித்தான் தமிழரசன்.
லட்சுமி ரொம்ப அழகா இருக்கடா என்ற சந்தியாவிடம் சிறு புன்னகையை பதிலாக கொடுத்தாள் மகாலட்சுமி. என் மருமகளுக்கு திருஷ்டி பொட்டு வச்சு விடுங்க அண்ணி என்ற உமையாளை புன்னகையுடன் பார்த்தவள் நான் உங்க மருமகள் தானே அத்தை நீங்களே வச்சுவிடலாமே என் அம்மா தான் வைக்கணுமா என்ன என்றாள் மகாலட்சுமி .
அதுக்கு என்னடி தங்கம் நானே வச்சுவிடுறேன் என்று தன் மருமகளுக்கு திருஷ்டி பொட்டு வைத்து விட்டவர் அவளது வெற்றி வழித்து சொடுக்கிட்டார்.
என்ன அத்தை எங்க அக்காவை இப்பவே நல்லா ஐஸ் வைக்கிறீங்க போல என்றாள் அர்ச்சனா. ஆமாம் என் மருமகளை நான் ஐஸ் வச்சா தானே அவன் என்னை கொடுமை படுத்த மாட்டாள். என் மகனை என்கிட்ட இருந்து பிரிக்க மாட்டாள் என்று சிரித்த உமையாளிடம் கொடுமை எல்லாம் கொஞ்சம் படுத்துவேன் ஆனால் உங்க பையனை மட்டும் உங்களை விட்டு பிரிக்க மாட்டேன் என்றாள் மகாலட்சுமி.
வாயாடி என்னடி கொடுமைப் படுத்த போற என்ற சந்தியாவிடம் அதுவா என்ன கொடுமைப்படுத்தலாம் என்று யோசிப்பது போல் பாவனை செய்தவள் டெய்லி காலைல எனக்கு சமையல் அத்தை தான் பண்ணி கொடுக்கணும். அப்புறம் சாயந்திரம் ஆபீஸ் விட்டு வரும்போது எனக்கு டீ இல்லன்னா காபி இந்த மாதிரி ஏதாவது செஞ்சு கொடுக்கணும் நைட் டின்னர் வேண்டும் என்றால் நான் பார்த்துக்கிறேன் இந்த பிரேக்ஃபாஸ்ட் லஞ்ச் எல்லாம் உங்க டிபார்ட்மென்ட் ஓகேவா அத்தை என்று சிரித்தாள் மகாலட்சுமி .
இதுக்கு பேரு கொடுமை இல்லடி லூசு சிறுக்கி என்ற உமையாள் சரி சரி என் பையன் ரொம்ப நேரமா மணமேடையில் காத்துட்டு இருக்கான் வாடி ஐயர் உன்னை கூட்டிட்டு வர சொல்லி கால் மணி நேரமா கதை பேசிட்டு இருக்கோம் என்று கூறிவிட்டு மருமகளை அழைத்துச் சென்றார் உமையாள்.
மணவறையில் கார்த்திகேயனின் அருகில் அமர்ந்தாள் மகாலட்சுமி. கெட்டி மேளம் கொட்டிட அவன் அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் .அவனை புன்னகையோடு பார்த்தவள் அவன் கட்டிய திருமாங்கல்யத்தை தொட்டுப் பார்த்தாள் மனதில் சந்தோசத்துடன்.
சங்கரன் ,சந்திரன் இருவரும் நண்பர்களாக இருந்து சம்பந்தியாக மாறியதை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தனர்.
சொந்த பந்தங்கள் அனைவரும் அவர்களை அச்சதை தூவி வாழ்த்தினார்.
… முற்றும்….
காதல் தோல்வியோடு குடும்ப கஷ்டமும் விரட்டி கொண்டு இருக்க ஒதுங்க ஒரு நிழல் கிடைக்காதா என்று போராடிய இருவரும் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து ஒருவருக்கொருவர் நிழலாக காலம் முழுக்க சந்தோஷமாக வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.
…நன்றி…
அருமை. .. யதார்த்தமான கதை…
Nice story…. Happy ending…. Feeling good 👌👌👌👌👌
Super👍👍 Good ending👏👏👏👏👏
superb nice ending . kandipa thappu pana udane th punishment kedaikum athu tha ranjani ku , love pana kadaisivara athula strong ah irukanum athu illa siddharth ku . so maha and karthick rendu perum avanga life la tholachitu iruntha verumaiya ipo mrg pani sernthu atha poka poranga . nalla mudivu . congrats
Nice story ma.yathaarthamaana kathai.niraivaana mudivu.vazhthukkal👍👍👍