Skip to content
Home » நிழல் தேடும் நிலவே 16

நிழல் தேடும் நிலவே 16

சாரிங்க என்ற மகாலட்சுமியிடம் எனக்கு புரியுதுங்க அவரை நீங்க அவாய்ட் பண்றதுக்காக தான் என்கிட்ட லவ் பண்றேன்னு சொன்னீங்கன்னு என்ற கார்த்திகேயனின் கையைப் பிடித்தவள் அவரை அவாய்ட் பண்றதுக்காக இல்லை உங்களை கல்யாணம் பண்ணுறதுக்காக தான் உங்களை புடிச்சி இருக்குன்னு சொன்னேன். நிஜமாவே உங்களை புடிச்சிருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி என் தங்கச்சியை பத்தி என் குடும்பத்தை பத்தி இவ்ளோ யோசிக்கிற ஒருத்தரை என்னால மிஸ் பண்ண முடியாது ன்னு தான் உங்க கிட்ட ஐ லவ் யூ சொன்னேன். சித்தார்த் கூட என் கிட்ட இப்படித் தான் சொன்னாரு ஆனால் அவரால் செயலில் காட்ட முடிய வில்லை காரணம் அவரால் அவர் குடும்பத்தை மீறி வர முடிய வில்லை .

நீங்களும் ஏதோ ஒரு காரணத்தினால் காதல் தோல்வி அடைஞ்சிருக்கீங்க நானும் ஏதோ ஒரு காரணத்தினால் காதல் தோல்வி அடைந்திருக்கேன். என்னை பொறுத்த அளவில் சித்தார்த் என் வாழ்க்கையில் முடிந்து போன ஒரு அத்தியாயம் இனிமேல் நீங்க மட்டும் தான் என்னோட வாழ்க்கை அந்த முடிவு நான் எடுத்ததுனால தான் உங்ககிட்ட ஐ லவ் யூ ன்னு சொன்னேன் சித்தரத்துக்காக சொல்ல வில்லை உங்களுக்கு உங்க பழைய காதல் என்று தயங்கினாள் மகாலட்சுமி .

என்னை பொறுத்த அளவிலையும் ரஞ்சனியோட காதல் கடந்த காலம்தாங்க நீங்க மட்டும் தான் என்னுடைய எதிர்காலம் என்ற கார்த்திகேயன் எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு மகாலட்சுமி.  நம்ம சம்மதத்தை  பெத்தவங்க கிட்ட சொல்லலாம் என்றான் கார்த்திக். அவளும் புன்னகைத்து விட்டு வீட்டிற்கு சென்றாள்.

என்ன கார்த்தி உனக்கு சம்மதம் தானா என்ற சங்கரனிடம் சம்மதம் தான்‌ அப்பா அந்த பொண்ணுக்கும் சம்பந்தம் தான் நிச்சயதார்த்தம் எல்லாம் வேண்டாம் கல்யாண தேதியே குறிச்சிருங்க என்றான் கார்த்திகேயன் .

ஏன் அப்படி சொல்லுற கார்த்திக் என்ற சங்கரனிடம் ஒரு தடவை அசிங்கப்பட்டது போதும் இந்த முறை கல்யாண தேதியே குறிச்சிடுங்க திரும்ப எனக்கு நிச்சயம் என்று சொல்லி ஊரை கூப்பிட வேண்டாம் என்ற மகனின் உணர்வுகளை மதித்த அந்த தந்தை சரி என்று கூறினார்.

இப்போ கூட ஒன்றும் கெட்டு போக வில்லை ரஞ்சனி நீ போய் கார்த்தி கிட்ட பேசு என்றாள் அவளது தோழி காவியா.

இல்ல காவியா வேண்டாம் என்றாள் ரஞ்சனி.  அவன் உன்னை உண்மையா லவ் பண்ணினான் ரஞ்சனி என்ற காவியா விடம் இப்போ என் ஹஸ்பண்டை பிரிஞ்சதுனால நான் திரும்ப போய் கார்த்திக் காலில் விழுந்து அவனை எனக்கு வாழ்க்கை பிச்சை கொடுக்க சொல்லி கெஞ்சனும் என்று நீ நினைக்கிறியா என்றாள் ரஞ்சனி.

இப்போ கூட நீ தப்பா தான் யோசிக்கிற ரஞ்சனி நீ பண்ணின தப்புக்கு மன்னிப்பு கேளு அவன் உன்ன கண்டிப்பா ஏத்துக்குவான் இனிமேல் சித்தார்த் உன் வாழ்க்கையில் இல்லை அப்படிங்கிற பட்சத்துல நீ ஏன் கார்த்திக்கை ஏத்துக்க கூடாது அவன் ரொம்ப நல்லவன் அவன் மட்டும் இல்லை அவன் குடும்பம் கூட நல்லவங்க கண்டிப்பா உன்னை ஏத்துக்குவாங்க  ப்ளீஸ் எனக்காக பேசிப் பாரு என்றாள் காவியா? ரஞ்சனியும் யோசித்துக் கொண்டிருக்கையில் அவளது மொபைல் போன் ஒலித்தது.

என்ன இது கார்த்திக் ஓட நம்பர்ல இருந்து போன் வந்திருக்கு என்ற ரஞ்சனியிடம் அதை அட்டன் பண்ணு என்றாள் காவியா. ரஞ்சனியும் அட்டென்ட் செய்து ஹலோ என்றாள் . ஹலோ ரஞ்சனி என்றான் கார்த்திகேயன்.

கார்த்திக் என்றவளிடம் உங்களை கொஞ்சம் மீட் பண்ணனுமே என்றான். நாம் வழக்கமா சந்திக்கிற காபி ஷாப்ல தான் இருக்கேன் என்றாள் ரஞ்சனி. சரி அங்கேயே வெயிட் பண்ணுங்க ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன் என்றான் கார்த்திகேயன்.

என்னடி சொன்னான் என்ற காவியாவிடம் பத்து நிமிஷத்துல இங்க வரேன்னு சொல்லி இருக்கான் என்றாள் ரஞ்சனி.  நல்லது உன் ஹஸ்பண்ட்டை டைவர்ஸ் பண்ணிட்டு சீக்கிரமே நீயும் கார்த்திக்கும் கல்யாணம் பண்ணி உங்களோட லைப் ஸ்டார்ட் பண்ணனும் என்ற காவியாவிடம் நீ சொல்றது நடக்கிறது ரொம்ப கஷ்டம் காவியா.

நான் கார்த்திக்கை ரொம்ப காயப்படுத்தி இருக்கேன் அவ்வளவு சீக்கிரத்துல அவனால அதெல்லாம் மறக்க முடியாது என்ற ரஞ்சனியிடம் கார்த்திக் உன் மேல உண்மையான காதல் வச்சிருக்கான். கண்டிப்பா உன்ன மன்னிச்சு ஏத்துக்குவான் என்றாள் காவியா நம்பிக்கையுடன்.

ஹாய் என்ற குரலில் இருவரும் திரும்பினார்கள். கார்த்திகேயன் நின்றிருந்தான். எப்படி இருக்கீங்க ரஞ்சனி என்ற கார்த்திகேயனிடம் நல்லா இருக்கேன் கார்த்திக் நீ நல்லா இருக்கியா என்றாள் ரஞ்சனி.

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன் என்றவன் ரஞ்சனி எனக்கு வேலை கிடைச்சிருச்சு கவர்மெண்ட் ஜாப் என்றான் கார்த்திகேயன். சந்தோஷம் என்றவளிடம் அப்புறம் இன்னொரு விஷயம் உங்கள நான் மீட் பண்ணதுக்கு ஒரு காரணம் இருக்கு என் பிரண்டு ஒருத்தவங்களையும் கூட்டிட்டு வந்து இருக்கேன் என்றான் கார்த்திகேயன்.

யாரு என்ற ரஞ்சனியிடம்  மகா என்று அழைத்திட மகாலட்சுமி வந்திருந்தாள். ரஞ்சனி இவங்க மகாலட்சுமி என்ற கார்த்திகேயன் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போகிறோம் அதனால உனக்கு சாரி உங்களுக்கு இன்விடேஷன் கொடுப்பதற்காக வந்தோம் .உங்க வீட்டுக்கே வந்து கொடுக்கிறது தான் முறை ஆனால் உங்க வீட்டுக்கு வந்து உங்க ஹஸ்பன்ட் கிட்ட என்ன யாருன்னு சொல்லி நீங்க அறிமுகப்படுத்துவீங்க உங்களுக்கும் சங்கடம் தானே அதனால தான் நீங்க இருக்கிற இந்த இடத்துக்கே வந்து கொடுக்கிறோம் என்றவன் தனது கல்யாண பத்திரிகையை ரஞ்சனி இடம் நீட்டினான். காவியாவிற்கு தான் ஒரு மாதிரியாகிவிட்டது கார்த்திக் என்று காவியா ஏதோ சொல்ல வரேன் ரஞ்சனி அவளது கையை பிடித்து தடுத்தாள்.

என்ன என்னமோ சொல்ல வந்தாங்க என்ற கார்த்திகேயனிடம் ஒன்றும் இல்ல கங்கிராஜுலேசன் என்றாள் ரஞ்சனி. தேங்க்ஸ்ங்க என்றவனதூ மொபைல் போன் ஒலித்தது .மகா பேசிட்டு நான் இதோ வந்துடுறேன் என்று எழுந்து சென்றான் கார்த்திக்.


கார்த்திக்கும் , உங்களுக்கும் லவ் மேரேஜா என்ற காவியாவிடம் இல்லைங்க அரேஞ்ச்டு மேரேஜ் தான் எங்க அப்பா அம்மா அவரை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணாங்க அவர் கூட பேசிப் பார்த்தேன் .எனக்கு அவரை ரொம்ப புடிச்சி இருந்துச்சு எனக்கும் அவருக்கும் இடையில் எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லை அப்புறம் ரஞ்சனி ரொம்ப தேங்க்ஸ் நீங்க மட்டும் அவரை வேணான்னு சொல்லலை என்றால் அவரை நான் இழந்திருப்பேன்.

அவரு என் லைஃப்ல கிடைச்ச பொக்கிஷம் என்றாள் மகாலட்சுமி. ரஞ்சனி எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை  உண்மையிலேயே சாய்றத்துக்கு ஆறுதலா ஒரு தோள் இல்லை என ரொம்ப நாளா ஏங்கிட்டு இருந்தேன். அவர் எனக்கு கிடைச்ச தேவன்.  நிழல் மாதிரி என் வாழ்க்கையில கடைசி வரைக்கும் அவர் என் கூடவே கூடவே வரணும்னு ஆசைப்படுறேன் இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான் ரஞ்சனி அவருடைய மனசுல நீங்க எந்த அளவுக்கு இருந்தீங்கன்னு அவரு என்கிட்ட சொல்லி இருக்காரு ஆனால் ஒரே ஒரு விஷயம் என்ன காரணத்துக்காக நீங்க அவரை வேண்டாம் என்று சொன்னிங்களோ ஆனால் கண்டிப்பா ஒரு நாள் அவரை தூக்கி எறிஞ்சதுக்காக நீங்க வருத்தப்படுவீங்க ஆனால் அப்ப அவரு உங்களுக்கு சொந்தமானவர் இல்லை என்னுடைய கணவர் என்று கூறினாள் மகாலட்சுமி.

ரஞ்சனிக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது மகாவின் பேச்சுக்கள் அனைத்தும். பதில் ஏதும் சொல்ல முடியாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள் .

என்ன மகா போகலாமா என்ற கார்த்திக் ரஞ்சனி உங்க குடும்பத்தோட எங்க கல்யாணத்துக்கு வந்துருங்க காவ்யா நீங்களும் வந்துருங்க என்று கூறிவிட்டு சென்றுவிட்டான் கார்த்திகேயன்.

…. தொடரும்…

4 thoughts on “நிழல் தேடும் நிலவே 16”

  1. Kalidevi

    Super pathiladi maha ranjani ku ipo friend solratha kekurava aniku evlo kenji irupan karthick apo la epo oru ithu pola avana avoid panitu pona la ipo paru venum unaku nalla . Avanga rendu perum seratuu tha crt oruthar ku oruthar support ah irukanga life la seranum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *