Skip to content
Home » நிழல் தேடும் நிலவே..3

நிழல் தேடும் நிலவே..3

என்ன சொல்ற கார்த்தி கல்யாணம் நெருங்கிட்டு இருக்கு இப்ப போய் வேலை போயிடுச்சுன்னு சொல்ற என்ற சங்கரனிடம் என்னப்பா பண்றது கார்ப்பரேட் கம்பெனி அவன் வெளியில போக சொன்னா நான் போய் தான் ஆகணும் என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு அமர்ந்தான் கார்த்திகேயன்.

இப்ப பொண்ணு வீட்ல என்ன பதில் சொல்றது என்ற சங்கரனிடம் என்ன பதில் சொல்லப் போறீங்க கல்யாணத்தை நிறுத்துங்க அதை சொல்ல தான் நானே வந்தேன் என்றார் மோகன் . என்ன சமந்தி இதெல்லாம் என்ற சங்கரனிடம் உங்க மகனுக்கு வேலை போயிருச்சு திரும்ப கிடைக்காது இனிமேல் இவர் வேலைக்கு போய் சம்பளம் வாங்கட்டும் அப்புறமா கல்யாணம் பேச்சு பேசலாம் என்றார் மோகன் . ஊரைக் கூட்டி நிச்சயம் பண்ணி கல்யாணத்துக்கு நாலு குறிச்சாச்சு பத்திரிக்கை வேற கொடுத்துட்டு இருக்கோம் இப்ப போய் இப்படி சொன்னா என்ன அர்த்தம் சம்பந்தி என்றார் சங்கரன். இதோ பாருங்க சார் இது என்னோட முடிவு இல்ல என் பொண்ணோட முடிவு அவளோட முடிவு இதுதான் திரும்ப உங்க மகனுக்கு வேலை கிடைச்சதுக்கு அப்புறம் கல்யாண பேச்சு பேசலாம் என்று கூறிவிட்டு சென்றார் மோகன்.

என்ன கார்த்தி இதெல்லாம் என்ற சந்திரனிடம் எனக்கே ஒன்னும் புரியலப்பா. ரஞ்சனி ஆபீஸ்ல என்கிட்ட கோவமா பேசினா ஆனால் அவள் இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என்று நான் யோசிக்கவே இல்ல எனக்கு ஒன்றும் புரியல என்றான் கார்த்திகேயன். நீ அந்த பொண்ணு கிட்ட போய் பேசி பாரு கார்த்தி என்றார் சந்திரன் .‌ சரிங்கப்பா என்றவன் தன் காதலி ரஞ்சனியை தேடிச் சென்றான்.

என்கிட்ட என்ன பேச போற என்று அலட்சியமாக கேட்டால் ரஞ்சனி . என்ன ரஞ்சனி இப்படி பேசுற என்ற கார்த்திகேயனிடம் ஆமா உன் கிட்ட வேற எப்படி பேசுவாங்க உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா வேலைய தொலைச்சிட்டு நிக்கிற காரணம் என்ன உன்னோட முட்டாள்தனம் அடுத்தவர்களுக்கு இரக்கம் பார்த்து இன்னைக்கு உன் வேலை போச்சு. இப்படி உன்ன மாதிரி பிழைக்கத் தெரியாதவனை கல்யாணம் பண்ணி நானும் தெருவுல நிக்கணுமா என்றாள் ரஞ்சனி.

ரஞ்சனி இந்த வேலை இல்லைனா என்ன வேற வேலை எனக்கு கிடைக்காதா என்ற கார்த்திகேயனிடம் உனக்கு அவ்வளவு நம்பிக்கையா கார்த்தி நிச்சயமா சொல்றேன் உனக்கு எங்கேயுமே வேலை கிடைக்காது நீ இந்த ஆபீஸ்ல என்ன பண்ணின யார்ரா அந்த பொண்ணு பிரியா அவளை மேனேஜர் என்னவோ சொல்றான் உனக்கு என்ன . தேவை இல்லாம மேனேஜர் சட்டையை புடிச்சு இப்ப பாரு உன் வேலை தான் போய் இருக்கு அந்த ஆபீஸ்ல அவன் பல வருஷமா வேலை பார்க்கிறான். நீ ஜஸ்ட் மூன்று வருஷமா வேலை பார்க்கிறவன் யார் பேச்சு அங்கே எடுபடும். உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா அடுத்தவங்க பிரச்சனைல தலையிடாதே தலையிடாதே என்று தலையில் அடிச்சுக்கிட்டேன் ஆனா நீ கேட்கவே‌ இல்லை உன்னை மாதிரி பொது சேவை செய்ற ஒருத்தனை கல்யாணம் பண்ணா நிம்மதியே இருக்காது வேலை போச்சு அடுத்து உனக்கு எப்ப வேலை கிடைக்கும் . சரி போனா போகுது உன்னை காதலிச்சதுக்காக ரெண்டு வாரம் டைம் கொடுக்கிறேன் அதுக்குள்ள உனக்கு வேலை கிடைச்சிருச்சுனா இந்த கல்யாணம் நடக்கும் இல்லையா என்னை மறந்துரு உனக்கு எப்பவுமே இந்த ரஞ்சனி கிடைக்க மாட்டாள் என்று சொல்லிவிட்டு அவனை திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டாள் ரஞ்சனி.

என்ன காரியம் பண்ணி இருக்கிற ரஞ்சனி என்ற சங்கீதாவிடம் நான் ஒன்னும் தப்பு பண்ணலையே என்றாள் ரஞ்சனி. அப்பாவும் ,பொண்ணும் என்ன வேலை பார்த்து இருக்கீங்க என்ற சங்கீதாவிடம் இதோ பாரு சங்கீதா வேலை இல்லாத வெட்டிப் பயலுக்கு என் பொண்ணு கட்டி கொடுக்க நான் ஒன்னும் கோடீஸ்வரன் கிடையாது. நம்மளும் நடுத்தர வர்க்கம்தான் அதை மறந்துடாத.

நம்மளால முடிஞ்ச அளவுக்கு சிர், சீராட்டு பண்ணி நம்ம பொண்ண கட்டி கொடுக்க முடியும் ஆனா அதுக்கு அப்புறம் அவளை காலம் முழுக்க நம்ம வச்சு பாத்துட்டு இருக்க முடியாது அவளோட புருஷன்தான் அவளை பாத்துக்கணும் அப்ப அவன் வந்து ஒரு நல்ல ஸ்டாண்டர்ட்டான ஒரு ஆளாக இருக்கணும். என் பொண்ணுக்கு கவர்மெண்ட் மாப்பிள்ளை எத்தனையோ வந்துச்சு காதலிச்சிட்டேன்னு சொல்லி இவனை கூட்டிட்டு வந்ததுனால தான் சரி பையனும் பார்க்க நல்லா இருக்கான்னு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவனுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது வேலையை காப்பாத்திக்க முடியாமல் பொது சேவை பண்ணிட்டு இருக்கிறான். எவன் எவளை கிண்டல் பண்ணா இவனுக்கு எங்கே வலிச்சது இவன் வேலைய மட்டும் பார்த்து இருந்தால் இந்த பிரச்சனையே வந்து இருக்காதே. இப்ப அவனுக்கு வேலை போச்சு இப்ப என்ன பண்ண போகிறான். அடுத்து எங்கேயுமே வேலை கிடைக்காது இந்த கம்பெனில அவன் மேல பெரிய பிளாக் மார்க் இருக்கு அவனுக்கு இனி எவனும் வேலை கொடுக்க மாட்டான். வேலை விட்டு விட்டு வந்து வேலைக்கே போகாமல் கடைசி முழுக்க என் பொண்ணோட கை சம்பாத்தியத்தை நம்பி மட்டும் இருக்கிற ஒருத்தனுக்கு எப்படி என் பொண்ணு கட்டி கொடுக்க முடியும் அதனாலதான் நானே இப்ப இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன் என்றார் மோகன். தப்புங்க நீங்க அவளோட அப்பா அவ பண்ற தப்புக்கு அவளுக்கு புத்திமதி சொல்லி எடுத்து சொல்லி திருத்தணும் ஆனா நீங்களே இப்படி இருக்கும் போது என்ற சங்கீதாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்த மோகன், எனக்கு நீ புத்திமதி சொல்லாத எனக்கு தெரியும் நான் செய்ற எதுவும் தப்பு கிடையாது இவன் இல்லைனா என்ன ஊர் உலகத்துல வேற மாப்பிள்ளையே இல்லையா என் அக்கா பையன் கவர்மெண்ட் ஆபீஸ்ல ஒர்க் பண்றான் அவனுக்கு என் பொண்ண கட்டி குடுத்துட்டு போறேனே என்றார் மோகன்.

அப்படி சித்தாரத்துக்கு தான் நீங்க ரஞ்சனியை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு முன்னமே நெனச்சிருந்தா அப்புறம் எதுக்காக தேவை இல்லாம இந்த நிச்சயதார்த்தம் உங்க அக்கா உங்க காரி துப்ப மாட்டாங்களா இன்னொருத்தனுக்கு நிச்சயம் பண்ணின பொண்ணை என் மகனுக்கு கட்டி கொடுக்க நினைக்கிறியேடான்னு என்ற சங்கீதாவிடம் என் அக்கா தான் சொன்னாங்க இந்த கல்யாணம் நின்னு போச்சுன்னு நான் சொன்ன உடனே நம்ம சித்தார்த்துக்கோ கல்யாணம் பண்ணி வச்சிரலாமே என்று எங்க அக்கா தான் சொன்னாங்க அதனால நீ ஒன்னும் கவலைப்படாத உன் வேலையை மட்டும் பாரு என் பொண்ணு சொன்னது மாதிரி என் பொண்ணு என்கிட்ட ரெண்டு வாரம் டைம் கேட்டு இருக்கா அந்த ரெண்டு வாரத்துல அந்த கார்த்தி பயலுக்கு வேலை கிடைச்சுச்சா பாக்கலாம் அப்படி இல்லையா என் மகளை என் அக்கா பையன் சித்தார்த்துக்கு தான் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என்றார் மோகன் உறுதியாக. ரஞ்சனி உனக்கு சித்தார்த்தை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்ற சங்கீதாவிடம் அம்மா நான் சித்தார்த்தை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உங்ககிட்ட சொல்லவில்லை ஆனால் ஒரு விஷயம் கார்த்திக்கை என்னால இனிமேல் கல்யாணம் பண்ணிக்க முடியாது அவன மாதிரி ஒரு பொறுப்பில்லாத ஒரு முட்டாள சத்தியமான கல்யாணம் பண்ணிக்க முடியாது. அவன் யாரோ ஒரு பொண்ணு கிண்டல் பண்ணான்னு சொல்லி அந்த மேனேஜர் சட்டையும் பிடிச்சு இன்னைக்கு வேலை இழந்து நிற்கிறான் . இந்த மாதிரி இவன் வந்து நாளைக்கு திரும்பவும் ஏதாவது ஒரு வேலைக்கு போவான. அங்கேயும் இதே மாதிரி எவனாவது எவள் கிட்டயாவது வம்பு பண்ணுவான் இவன் போய் அந்த பொண்ண காப்பாத்துறேன்னு சொல்லிட்டு போய் திரும்பவும் வேலையை விட்டுட்டு வருவான் இவனை நம்பி எப்படிமா என்னால வாழ முடியும் இவன் என்ன அடுத்த வீட்டு பொண்ணுங்களை பாதுகாக்கிறதுக்காகவே ஆர்டர் குடுத்து செஞ்ச பாடிகார்டா இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் நீ என்ன வேலைக்கு போனாயோ அதை மட்டும் பார்க்கணும் இப்போ உன் வேலை தானே போச்சு இவனை கல்யாணம் பண்ணி நான் என்ன பண்றது விடுங்க என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள் ரஞ்சனி.

அம்மா என்ற சித்தார்த்திடம் சொல்லு சித்து என்றார் அன்பரசி. நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன் என்ற சித்தார்த்திடம் யாருப்பா அந்த பொண்ணு என்றார் அன்பரசி . என்கூட வேலை பாக்குற பொண்ணு ஆனா அவள் பெர்மனண்ட் ஸ்டாப் இல்லை டெம்பரவரி ஸ்டாப் என்ற சித்தார்த்திடம் அவளுக்கு சம்பளம் எவ்வளவு என்றார் அன்பரசி .

15000 என்ற சித்தார்த்தை முறைத்த அன்பரசி அவ என்ன கவர்மெண்ட் ஸ்டாப்பா இல்லை ,காண்ட்ராக்ட் ஸ்டாப்பா என்ற அன்பரசியிடம் காண்ட்ராக்ட் தான் என்றான் சித்தார்த் . அசிஸ்டன்ட் இஞ்சினியராக வேலை பாக்குற நீ ஒரு காண்ட்ராக்ட் வேலையில் இருக்கிற அவளை போய் எப்படி கல்யாணம் பண்ணிப்ப . சரி பொண்ணு எப்படி வசதியான வீடா என்ற அன்பரசியிடம் இல்லமாம் மிடில் கிளாஸ் தான் என்றான் சித்தார்த் . அவங்க அப்பா எங்க வேலை பார்க்கிறார் என்ற அன்பரசியிடம் அப்பா எங்கேயும் வேலைக்கு போக வில்லை இவளோட சம்பளம் தான் என்று கூறிட உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா சித்தார்த் அவளோட சம்பளத்தை வைத்து தான் அவ குடும்பமே உட்கார்ந்து திங்கிறாங்க அவளை கல்யாணம் பண்ணி நீ நாளைக்கு சம்பாதிக்கிறது எல்லாம் உன் மாமியார் வீட்ல குடுக்கணும்னு நினைக்கிறியா. இதுக்காகத்தான் உன்ன பெத்து , வளர்த்து கஷ்டப்பட்டு படிக்க வச்சேனா அதெல்லாம் ஒன்னும் முடியாது அந்த பொண்ணை மறந்துவிடு என்றார் அன்பரசி. இல்லம்மா என்னால மறக்க முடியாது நான் கல்யாணம் பண்ணா மகாலட்சுமி தான் கல்யாணம் பண்ணுவேன் என்று உறுதியாக கூறினான் சித்தார்த் . உன்ன என்ற பற்களை கடித்த அன்பரசியிடம் விடு அன்பரசி போய் பொண்ணு கேட்டு பாப்போம் என்றார் அன்பரசியின் கணவன் அன்பழகன். பொறுமையாக இரு நான் சொல்றேன் என்று அன்பழகன் கூறவும் அன்பரசி அமைதியாகினார்.

…தொடரும்…

6 thoughts on “நிழல் தேடும் நிலவே..3”

  1. Avatar

    சில நேரங்கள மிடில் கிளாஸ் அப்பா அம்மாவோட நிலைமை இதான்💯💯அதை ரொம்ப யதார்த்தம் குறையாம அழகா சொல்லி இருக்கீங்க.. ஆனா உண்மை காதலுக்கு ஒரு வலிமை உண்டு….மைனஸ் ல இருந்தால் கூட உயரத்திற்கு வர தூண்டும்..
    இனிமே வர எபி ய படிக்க ஆவலா இருக்கு

  2. Avatar

    இப்புதிய ஒருத்தியை கல்யாணம் பண்ணாதன்னு உனக்கு அடையாளம் காட்ட தான் உனக்கு வேலை போயிட்டு போல கார்த்தி.. இவளை விட்டுரு உனக்கு நல்ல பொண்ணு கிடைப்பா.. super da ♥️♥️

  3. Kalidevi

    Intha ponnungala pethavanga nilamai ippadi tha athuvum appa udambu mudiyama irukum pothu ponnu sambalam vachi tha kudumbatha oturanga padu sollave mudiyathu athula kalayanam pannitu pona ponnukum nimmathi irukathu salary koduka viduvangala nu appa amma kalayanam pani koduthuta salary vanga avlo yosipanga . Ithula antha ponnu manasula iruka aasaiya kuda veliya kamika mudiyama irukanum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *