Skip to content
Home » நிழல் தேடும் நிலவே..4

நிழல் தேடும் நிலவே..4

அப்பா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்ற மகாலட்சுமியிடம் என்ன லட்சுமி என்றார் சந்திரன் . அப்பா எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்கு அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன் . அவரும் என்னை விரும்புறாரு அவங்க வீட்டிலும் பேசிட்டாரு நம்ம வீட்டுக்கு வந்து உங்க கிட்ட பேசலாமா என்று என்கிட்ட கேட்டாரு என்றாள் மகாலட்சுமி.

சரி மா வர சொல்லு என்ற சந்திரனிடம் இல்லப்பா இப்போ நம்ம வீடு இருக்கிற சூழ்நிலை என்று தயங்கினாள் மகாலட்சுமி.  அம்மாடி உனக்கும் வயசு கூடிக்கிட்டே போகுதும்மா  அப்பா இப்ப வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன் இனிமேல் குடும்பத்தை நானே பொறுப்பா பார்த்துக்கிறேன்டா என்றார் சந்திரன்.

இல்லப்பா தங்கச்சியும் படிப்ப முடிச்சுட்டால என்றால் உங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் என்று இழுத்த மகாலட்சுமியிடம் பரவா இல்லடா அப்பா பாத்துக்குவேன் அப்பா எல்லாத்தையும் சமாளிச்சுருவேன் என்ற சந்திரன் அவரை வரச் சொல்லு என்றார்.

என்னங்க இது அவள் யாரையோ விரும்புறேன்னு சொல்றா நீங்களும் நாளைக்கே பேச வர சொல்லுங்க என்ன ஏது அவங்க என்ன ஜாதி எதுனாலும் விசாரிக்க வேணாமா? என்றார் சந்தியா . இத பாரு சந்தியா என் பொண்ணு மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு அவ ஒருத்தர தேர்ந்தெடுத்து இருக்காள் அப்படின்னா அவர் கண்டிப்பா நல்லவரா தான் இருப்பாரு எந்த காலத்துல இருக்க இப்ப போய் ஜாதி, மதம்னு என்ற சந்திரன் அமாடி உன் விருப்பம் தான் அப்பாவோட விருப்பம் நீ தாராளமா அவரை வரச்சொல்லு பேசி பார்ப்போம் என்றார் சந்திரன் .

இதெல்லாம் எனக்கு சரியா படல என்ற சந்தியாவிடம் எல்லாம் சரியா வரும் நீ அமைதியா இரு என்றார் சந்திரன்.

என்னம்மா உனக்கு அக்கா, அப்பா இரண்டு பேரும் பல்பு கொடுத்துட்டாங்களா என்ற அர்ச்சனாவிடம் வாய் மூடுடி குரங்கு என்றார் சந்தியா. என்னை மட்டும் திட்டுங்க என்ற அர்ச்சனா சரி ரெண்டு தோசை எக்ஸ்ட்ரா போடுமா பசி தாங்க முடியல என்றாள் அர்ச்சனா .

கொஞ்சமாவது வீட்டு வேலைகளையும் பார்த்து எனக்கு ஒத்தாசையா இருக்கலாம் இல்ல.  உன் அக்காவ பாத்தியா வேலைக்கு போயிட்டு வந்துட்டு வீட்டு வேலையே எனக்கு உதவியா இருக்கா என்றார் சந்தியா.  நான் படிக்கிற பொண்ணுமா நானும் வேலைக்கு போனதுக்கு அப்புறம் அக்கா மாதிரி உனக்கு ஒத்தாசையா இருக்கேன் என்றால் அர்ச்சனா.

என்ன சித்தார்த் கிளம்பலாமா என்ற அன்பரசியிடம் கிளம்பலாம் அம்மா என்றான் சித்தார்த் . அப்பா எங்கே என்றவனிடம் இதோ வந்துட்டே சித்தார்த் என்ற படி வந்தார் அன்பழகன். மூவரும் மகாலட்சுமியின் வீட்டிற்கு சென்றனர்.

வீட்டை பார்த்ததுமே அன்பரசியின் முகம் அஷ்ட கோணலானது என்னடா இது சொந்த வீடா , இல்ல வாடகையா என்று கேட்டார் .இல்லமா வாடகை வீடுதான் என்றான் சித்தார்த் . வாடகைக்கு தான் இருக்காங்க நல்ல வீட்டில் குடியிருக்க வேண்டாம் இது ஒரு வீடு இதுல இருக்குற பொண்ணு எனக்கு மருமகள் வேற  என்று சொல்லிக் கொண்டே தான் உள்ளே நுழைந்தார் அன்பரசி .

அன்பரசி அன்பழகன் சித்தார்த் மூவரையும் வரவேற்ற மகாலட்சுமி அப்பா என்று அழைத்திட சந்திரனும், சந்தியாவும் வந்தனர். அப்பா இவர் தான் சித்தார்த் என்று தன் தந்தையிடம் கூறினாள் . சித்தார்த்தும் தன் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினான்.

பொண்ணு பாக்குறதுக்கு நல்லாத்தான் இருக்காள் என்ற அன்பரசி அப்புறம் இவள் ஒருத்தி தானா உங்களுக்கு பொண்ணு என்றார். இலங்கை சின்ன பொண்ணு காலேஜ் போய் இருக்கு என்றார் சந்தியா அவங்களுக்கு காபி  எடுத்துட்டு வா என்று  கூறவும் மகாலட்சுமி  சமையலறைக்குள் நுழைந்தவள் அவர்கள் மூவருக்கும் காபி, பலகாரம் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை வாங்கி ஓரமாக வைத்த அன்பரசி இதெல்லாம் வேண்டாம் என்றார் .இல்ல சும்மா எடுத்துக்கோங்க ஆன்ட்டி என்றவரிடம் அதான் வேணாம்னு சொல்றேன்ல என்றார் அன்பரசி. அவரது அந்த பேச்சு சந்தியாவின் மனதில் ஒருவித கலக்கத்தை உண்டு செய்தது.

எனக்கு சுத்தி வழிச்சு பேச தெரியாது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான் என்ற அன்பரசி என் பையன் கவர்மெண்ட் ஆபீஸ்ல அசிஸ்டன்ட் இன்ஜினியரா இருக்கான் .அவனுக்கு வரதட்சணையாகவே நூறு பவுனுக்கு மேல போடுறதுக்கு ஆட்கள் ரெடியா இருக்காங்க உங்க பொண்ணுக்கு நீங்க எத்தனை பவுன் நகை போடுவீங்க என்றார் .அம்மா என்ற சித்தாத்திடம் நீ சும்மா இருடா என்றார் அன்பரசி.

நூறு பவுன் போடுற அளவு எல்லாம் எங்களுக்கு வசதி இல்லம்மா என்ற சந்திரனிடம் அதெல்லாம் உங்க வீட்ட பார்த்த உடனே தெரிஞ்சுக்கிட்டேன். உங்க பொண்ணுக்கு ஒரு 25 பவுனாவது போட முடியுமா இல்ல அதுக்கு வக்கில்லையா என்றார் அன்பரசி ஏளனமாக. ஆன்ட்டி என்று மகாலட்சுமி ஏதோ சொல்ல வர அவளது கையைப் பிடித்த சந்தியா அமைதியா இரு அப்பா பேசிக்குவாரு என்றார். சரிங்கமா போட்டுருவோம் என்ற சந்திரனிடம் 25 வேண்டாம் 35 போடுங்க என்றார் அன்பரசி. போட முடியுமா என்று மீண்டும் இளக்காரமாக கேட்க , முடியும்மா என்றார் சந்திரன்.

சரி 35 பவுன் நகை மூன்று லட்சம் ரொக்கம் கைல கொடுத்துடுங்க அப்புறம் வீட்டுக்கு தேவையான சாமான்  எல்லாம் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி  லொட்டு, லொசுக்கு எல்லாம் செஞ்சிருங்க என் பையனுக்கு நகை தான் நீங்க கம்மியா போடுறீங்களே அதனால் கல்யாண செலவு மொத்தத்தையும் நீங்க தான் ஏத்துக்கணும் என்றார் அன்பரசி.

மகாலட்சுமி ஆற்றாமையுடன் சித்தார்த்தை பார்க்க அவனும் தவிப்புடன் அவளை பார்த்தான்.

சரி நான் கேட்ட சீர்வரிசை எல்லாம் எப்ப செய்ய முடியும் எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று அன்பரசியிடம் அம்மா கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றார் சந்திரன்.  அவகாசமா ஒரு பத்து வருஷம் அவகாசம் கொடுத்தா நான் சொன்ன சீர்வரிசை எல்லாம் செஞ்சிருவீங்களா என்றார் ஏளனமாக.

ஆண்ட்டி போதும் என்றாள் மகாலட்சுமி. மகா கொஞ்சம் அமைதியா இரு என்ற சந்தியாவிடம் இல்லமா போதும் ஆன்ட்டி தப்பா எடுத்துக்காதீங்க உங்க மகனை நான் விரும்பினது உண்மைதான் அவரும் என்னை விரும்பினார் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு உங்களை கூட்டிட்டு வந்திருக்கிறார் என்று நினைத்தேன் என்னோட கணிப்பு தப்பா ஆயிடுச்சு மன்னிச்சுக்கோங்க நீங்க கேட்ட சீர்வரிசை எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ற அளவுக்கு எங்களுக்கு வசதி கிடையாது . அதனால உங்க மகனுக்கு நீங்க 100 பவுன் நகை போடுற பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி கொடுத்திருங்க . எங்களால அவ்வளவு செய்ய முடியாது மன்னிச்சிருங்க என்றாள் மகாலட்சுமி.

ரொம்ப சந்தோசம் என்ற அன்பரசி கணவன் மற்றும் மகனை பார்க்க  அன்பழகன் எழுந்து நின்றார் . சித்தார்த்தும் வேறு வழியில்லாமல் எழுந்து அவர்களுடன் சென்றான்.

என்ன மகா இப்படி அவசரப்பட்டுட்டியே என்ற சந்தியாவிடம் என்னம்மா நீங்க அந்த அம்மா வந்ததும் , வராததுமா 35 பவுன் நகை போடுங்க சிரு சீராட்டு எல்லாம் செஞ்சு கல்யாண செலவு மொத்தத்தையும் நீங்க எடுத்துக்கோங்கன்னு சொல்லுறாங்க. நம்ம வீடு இருக்கிற நிலைமையில இதெல்லாம் நம்மளால செய்ய முடியுமா? அப்பா இப்போதம்மா வேலைக்கு போக ஆரம்பிச்சு இருக்காங்க அப்பாவோட சம்பளம் மட்டுமே இந்த  குடும்பத்தை நடத்தவே பத்தாதுன்னு  நான் யோசிச்சிட்டு இருக்கேன் . என்னோட சம்பளமே பத்தாது அப்பாவும் வேலைக்கு போறாங்க அதனால் கொஞ்சம் சமாளிக்கிறோம். தங்கச்சி படிப்பு முடிகிற வரைக்குமாவது நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும் .அந்த அம்மா கேக்குறது எல்லாம் செய்யணும்னா அப்பா கடனாளி ஆகணும் எப்படி அம்மா சமாளிக்க முடியும் அப்பாவும்  பாவம் உடம்பு சரியில்லாதவருமா என்றாள் மகாலட்சுமி.

இல்லை  லட்சுமி என்ற சந்திரனிடம் இல்லை அப்பா பரவால்ல விட்டுடுங்க என்றவள் தன் அறைக்கு சென்றாள். அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது எத்தனை ஆசையுடன் சித்தார்த் வருவதை தன் தந்தையிடம் கூறினாள். ஆனால் சித்தார்த்தின் அன்னையோ அவர்களது காதலுக்கு எமனாக இருப்பார் என்பதை அவள் அறிய மறந்து விட்டாள் பாவம்.

என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்க என்று சித்தார்த்திடம் எப்படிப்பா பண்ணினேன்.  அவள் பொண்ணாடா கொஞ்சமாவது மட்டு மரியாத இருக்கா பெரிய இவளாட்டம் சொல்கிறாள் எனக்கு உங்க மகன் வேண்டாம்னு அவ உனக்கு வேண்டாம் சித்தார்த் .

அவள் யாரு உன்னை தூக்கி எறிய அவளும் அவள் வீடும் . வீடா அது  குருவிக்கூடு . இந்த வீட்ல போய் பொண்ணு எடுத்தேன்னா என்ன பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க என் தம்பி பொண்டாட்டி கூட என்னை மதிக்க மாட்டாள்.

சொல்றதை கேளு நம்ம ரஞ்சனியவே பேசாம உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவோம் என்றார் அன்பரசி .அம்மா என்னம்மா நீங்க எனக்கு மகாலட்சுமி தான் புடிச்சிருக்கு அவளை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்றான் சித்தார்த் . நான் ஒன்னும் அவளை வேண்டாம்னு சொல்லலப்பா அவதான் உன்னை வேண்டான்னு சொல்லிட்டாள். எனக்கு வரப்போற மருமகள் ஒரு 50 பவுன் நகை போட்டுட்டு , ஒரு அஞ்சு லட்ச ரூபா ரொக்கம்மா கொண்டுட்டு,  முடிஞ்சா ஒரு காரோட வீட்டுக்கு வந்தாள் தான் நான் சந்தோஷமா ஏத்துப்பேன் ஒன்னும் இல்லாம வரவேளை ஏத்துக்கிற அளவுக்கு எனக்கு பெரிய மனசு கிடையாது . என்னோட கண்டிஷன் எல்லாம் ஒத்து வந்தான்னா நீ அந்த மகாலட்சுமியை தாராளமா கல்யாணம் பண்ணிக்கோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார் அன்பரசி. என்னம்மா நீங்க என்று சித்தார்த்திடம் இது தான்ப்பா என்னோட முடிவு என்று கூறிய அன்பரசி என்னங்க நான் சொல்றது சரிதானே என்று கணவனை பார்த்து கேட்டார்.  சரிதான் அன்பரசி என்ற அன்பழகன் மனைவிக்கு ஒத்து ஊதினார். சித்தார்த்தன் பாகம் நொந்து போனான் எப்படி இனி  மகாவின் முகத்தில் விழிப்பது என்று.

என்னங்க இது மழை பெய்து ஓய்ந்தது போல  ஆயிடுச்சு அந்த அம்மா வந்துச்சு அது வேணும், இது வேணும்னு சரசரன்னு கேட்டுச்சு இவளும் கோவத்துல கொட்டி கவுத்துட்டாள். இப்ப என்ன பண்றது என்று சந்தியாவிடம் எனக்கு ஒன்றும் புரியல மகாவோட முடிவு ஏத்துக்கிறதா இல்ல திரும்ப அந்த அம்மாகிட்ட போய் பேசுறதாம் எனக்கு ஒன்றும் புரியல என்றார் சந்திரன் .அந்த அம்மாகிட்ட போய் எப்படிங்க பேச முடியும் 35 பவன் நகை கேட்கிறார்கள் நம்ம கிட்ட இருக்கிறதே நம்ம பொண்ணுங்க காதுலையும் , கழுத்திலும் போட்டிருக்கிறது சேர்த்து மொத்தமே ஒரு அஞ்சு ,ஆறு பவன் கிட்ட தான் வரும்  இன்னும் 30 பவுனுக்கு எங்கே போறது. அவ வாங்குற சம்பளம் வீட்டு வாடகைக்கு , மாச செலவுக்குமே பத்த மாட்டேங்குது இப்பதான் நீங்களே வேலைக்கு போக ஆரம்பிச்சு இருக்கீங்க.

நம்ம குடும்பம் இருக்கிற நிலைமையில இப்போ உடனடியா அவளுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறது எனக்கு ஒன்றும் புரியலங்க என்றார் சந்தியா. அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட மகாலட்சுமி அறையை விட்டு வெளியே வந்தவள் அம்மா உங்களுக்கு சொன்னா புரியாதா இந்த பேச்சு இனிமேல் பேசாதீங்க சித்தார்த்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டு மீண்டும் தன் அறைக்குள் அடைந்து கொண்டாள் .  மகளின் தோற்றத்தை கண்ட தாயின் மனம் கதறியது அவளது கலங்கிய கண்களை கண்டவரின் மனம் வலித்தது .என்ன கொடுமை ஆண்டவா பெத்த பொண்ணு அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை கூட அமைச்சு கொடுக்க முடியாத பாவிகளா எங்கள வச்சிருக்கியே என்று நொந்து கொண்டார் சந்தியா.

…. தொடரும்….

2 thoughts on “நிழல் தேடும் நிலவே..4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *