நீயின்றி வாழ்வேது-13
விவேக்கிடமிருந்து நாலாவது முறை அழைப்பு வரவும் விஷாகன் எடுக்க யோசித்தான்.
இங்க கோபமாய்ப் பேசிவிட்டு மனம் கேளாது தவித்த சில நொடிகளில் விஷாகனுக்கு அவள் என்ன நினைத்து பயப்படுவாளோ? தந்தைக்காக என்றாலும் திருமணம் நிறுத்திட்டேன் என்றால் அவள் அடையும் பதபதப்பு இவன் எண்ணி பார்த்து வருந்தினான், பிரச்சனையைத் தவிர்க்க விவேக்கின் போன் அழைப்பை எடுத்தான்.
அலைப்பேசி தொடர்பை ஏற்றுக் காதில் வைத்து மௌவுனத்தை வாசிக்க, அங்கே விருஷாலி அழுது விம்மும் சப்தம் கேட்டது.
“மச்சான் என்ன பேசினிங்க.. விருஷாலி அழுவுது. எதுனாலும் பேசி தீர்க்கலாம் மச்சான். கல்யாணம் எல்லாம் நிறுத்த வேண்டாம்” என்று கெஞ்சவும் விஷாகனுக்குத் தன் மேலேயே சினம் துளிர்த்தது.
இத்தனை சின்னப் பிள்ளையா அவள். உடனே அழுது வடித்து ஊரை கூட்டணுமா?’ என்று தோன்றினாலும் நிலைமையைக் கைமீறி மற்றவர்களுக்குக் கடத்தாமல், “விவேக்… பேசவே மாட்டேங்கறானு ஜஸ்ட் விளையாடினேன். கல்யாணம் எல்லாம் நிறுத்த மாட்டேன். சாரிடா.” என்று கூறி அவன் நெஞ்சில் பாலை வார்த்தான்.
“விளையாட்டுக்கு தானே மச்சான். இருங்க நான் விருஷாலியிடம் கொடுக்கறேன்.” என்று தங்கையின் கையில் போனை திணித்து “மச்சான் கோபம் மட்டுப்பட்டிருக்கு. போனை எடுத்துத் தனியா பேசிட்டு வா. அம்மாச்சி சொல்லு” என்று பேச கூறி அம்மாச்சியிடமே அனுமதி கொடுக்க வேண்டினான்.
செம்பருத்தியோ “போ.. எவ்ளோ நேரமானாலும் பேசு தாயீ.” என்று மேடாக இருக்கும் குன்றை சுட்டிக்காட்டி போகக் கூறவும் எல்லோரையும் பார்த்து விவேக்கிடம் போனை வாங்கி அன்னநடையிட்டாள்.
“கொஞ்சம் விரசா போய்ப் பேசலாம்ல” என்று விவேக் திட்டவும் விருஷாலி நின்று திரும்ப, “போய்ப் பேசும்மா” என்று அடுத்த நொடி நயமாய் விவேக் கூறி தங்கையை அனுப்பினான்.
மேடாக இருந்த குன்று வந்து நின்றாள். பாதிக்கு மேலாக இங்கே நிழலோடு குன்றும் அமைந்திருக்க அதிலேயே அமர்ந்து பேச நன்றாகத் தான் இருக்கும்.
“ஹ..ஹலோ..? இருக்கிங்களா.? மச்சான்.?” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிக்குமோ என்று இடைவெளியிட்டு பேசிட, அவள் எதிரேயிருந்தால் அள்ளி அணைத்திருப்பான் நாயகன்.
“விஷாகா மச்சான்” என்றதும் மனமும் மூளையும் ஒரு சேர அவனைக் குளிர்வித்தது. இதற்கு மேல் பேசாவிட்டால் அழுவாளெனக் குரலே காட்டிக்கொடுத்தது.
தன் உணர்வை கட்டுப்படுத்தி அடக்கி கொண்டு “ம்ம்.. இருக்கேன்.” என்றான் அவளைப் போலவே.
“நீங்க அழகன் தான்… பேரழகன் தான்… அதனால தான் ஒரு வருஷம் வீட்ல இருந்துட்டு, படிக்க ஆசைப்பட்டுப் போனாலும், இப்ப மறுபடியும் கல்யாணம் என்ற தடை வரவும், படிப்பை கூட ஏறக்கட்டிட்டு கல்யாணமே பண்ணிக்கறேன்னு சொன்னேன்.” என்று பேசியதும் விஷாகன் ‘என்ன பேசறா?’ என்று புரியாது “ஏய்… நான் அழகனா பேரழகனா என்று உன்னிடம் ஒப்பீனியன் கேட்டேனா?” என்றான். என்ன தான் கோபமாகக் கேட்க வேண்டும் என்று எண்ணி பேசினாலும் அவளிடம் பேசும் போது வெண்ணெயில் நடப்பது போல வழுங்கி விடுகின்றான்.
“நீங்க தானே ஏதோ கேட்டிங்க. அதுக்குப் பதில் சொல்ல போய்த் தானே கல்யாணத்தை நிறுத்தறேன்னு விளையாடினிங்க” என்றதும் தான் ‘அடிப்பாவி… நான் என்ன பேசினேன். இவ அதுக்கு முன்ன முக்கியமானதை விட்டுட்டு நான் அழகில்லைனு நினைச்சிட்டுப் பேசறதா பதில் தர்றா.’ என்று மனதில் ‘தன் சிறு பெண்ணை மணக்கின்றோமோ’ என்று மீண்டும் உந்தியது.
முதலில் தனக்கான கேள்விக்குப் பதில் தெரியட்டும் என்று “இங்க பாரு நான் அதுக்குக் கோபப்படலை.
உனக்கு நான் மாமா பையன் என்றதால ஓகே சொன்னியா. இல்லை விஷாகன் என்ற தனி மனிதனான என்னைப் பிடிச்சிருக்கானு கேட்டேன். நீ மாமா பையன் என்றதால சொன்னியா கோபம் வந்துச்சு.
இப்ப சொல்லு” என்று தெளிவாய் கேட்டான். தனக்கு இந்தப் பதில் வேண்டும் என்று ஏற்கனவே அச்சுறுத்திவிட்டு மீண்டும் அதே கேள்வி தாளை கொடுத்தால் பாவம் சின்னப் பெண்ணவள் என்ன கூறுவாள்?!
“உங்களை உங்களுக்காகத் தான் பிடிச்சிருக்கு.” என்று கூறினாள்.
“ஆர் யூ சூர்?” என்றான். கோடீஸ்வரன் தொகுப்பாளியாகச் செல்ல வேண்டியவன் இங்கு வந்து மீண்டும் பச்சை பட்டானா? சிவப்பு பட்டானா? என்று கேட்பது போல நடந்து கொண்டான்.
“சூர் மச்சான்” என்றாள்.
“சும்மா மச்சான் மச்சான்னு கூப்பிடாதே. உங்க அண்ணன்காரன் கூப்பிடற மாதிரியே இருக்கு. வேற ஏதாவது கூப்பிடு” என்றான்.
“வேறனா?” என்று கேட்டு விழித்தாள். அவளுக்கு அவன் பேசும் சாரம்சமே புரிப்பட நேரமெடுத்தது.
“வேறனா.” என்றவன் இதயமிருக்கும் இடத்தில் கை விரலால் தாளமிட்டபடி, “இப்ப நான் உன்னை ‘ஷாலி’னு தான் மனசுக்குள்ள கூப்பிடறேன். அதுமாதிரி.” என்றதும் வெட்கம் கொண்டவளாய் சிவந்தாள்.
அக்கம் பக்கம் பார்த்து யாருமில்லையென்றாலும் நாணம் கொண்டாள்.
“உங்களைப் போல யோசிக்கலை. பெயர் வச்சதும் சொல்லறேன். கல்யாணத்தைத் தடை பண்ண மாட்டிங்க தானே?” என்று சாமர்த்தியமாக இதைக் கேட்டாள்.
“என் நினைப்புல கலந்துட்டு இம்சை பண்ணற, கல்யாணத்தை நிறுத்த முடியுமா?” எதிர்க்கேள்வி கேட்டான்.
“பாவம் எங்க அம்மாச்சி… இத்தனை நாளு ஏன் பேசினனு கரிச்சி கொட்டிட்டே இருந்துச்சு. இப்ப நீங்க கல்யாணம் நிறுத்தவானு கேட்டதும் பதறிட்டு பேசு பேசுனு உசிரை வாங்கிடுச்சு.” என்று கூறினாள்.
அதன் பின்னே அன்று வலிய சென்று பேசியதற்கு அவள் வாங்கிய திட்டை நினைத்து பார்த்து மன்னிப்பு கேட்டான்.
“சாரி ஷாலி… இந்தப் பழக்க வழக்கம் எனக்குப் புதுசு. இங்கயெல்லாம் பொண்ணு பார்த்த அடுத்தச் செகண்ட் போன் நம்பர் சேஞ்சு பண்ணிப்பாங்க. நேரம் காலம் தெரியாம போன்ல பேசலாம்.
உன்னைப் பார்க்க போட்டோ கேட்டாலே ஸ்மார்ட்போன் இல்லைனு சொன்னாங்க. சரி அட்லிஸ்ட் நேர்ல வந்தப்பிறகு இன்னமும் நெருக்கமா போய்ப் பார்த்து இரண்டு வார்த்தை பேசவாது செய்யலாம்னு வந்தேன். சின்னப்பத்தா இப்படி உன்னையே நோட் பண்ணும்னு எனக்கென்ன ஜோசியமா தெரியும்?
உங்கப்பா தான் உன்னை என் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட சொன்னார்.
எனக்கெல்லாம் சாப்பிடும் போது பேசிட்டே சாப்பிடணும். அப்படியொரு பழக்கம்.” என்றதும் விருஷாலி சிரித்தாள்.
அவளின் சிரிப்பை கேட்டு மெய்மறந்திருக்க, “நீங்க என்ன பார்க்க முதல் நாளே வந்திங்களா. வனஜா சொல்லுச்சு. அவ வேடிக்கை பார்த்திட்டே பேசிட்டு உங்களைப் பார்த்திருக்கா.
பொண்ணு பார்க்கவும் நீங்க கார்ல இருந்து இறங்கி வரவும் என்னிடம் ‘இந்தண்ணா நேத்து நாம பஸ்வுட்டு போறப்ப வந்தாரே. நான் பார்த்தேன் அப்பவே உன்னை உத்து உத்து பார்த்தாரு.
இப்ப தான் தெரியுது. அவர் உன்னைத் தனியா பார்க்க வந்தாருனு. கேலி பண்ணினா தெரியுமா?” என்று சினுங்கினாள்.
விஷாகன் எண்ணமெல்லாம் அவளின் முகம் சிரிக்கவும், சினுங்கவும் காட்டும் முகபாவணையைக் கற்பனை செய்து முறுவளித்தான்.
“ஸ்ஆ” என்று விருஷாலி அலறவும் தான் இமையைத் திறந்து “என்னாச்சு?” என்றான்.
“கல்லு குத்திடுச்சு. மேட்டுல இருந்து பேசறேன். அச்சோ… ரொம்ப நேரமா பேசிட்டோம். சூரியன் இங்க கிழக்குப் பக்கம் இருந்துச்சு. இப்ப மேற்கு பக்கம் போயிடுச்சு.” என்று குறைப்பட்டாள்.
“சரி எனக்கு நீ இப்ப பேசியதே சாட்டிஸ்பெக்ஷனா இருக்கு. உங்க அண்ணாவிடம் போன் வாங்கித் தர சொல்லி பணத்தைக் கொடுத்தா. அம்மாச்சி திட்டும், அம்மா திட்டும் விருஷாலியும் வாங்கலைனு புலம்பறான். ஒரு போனை வாங்கி இப்படி இரண்டு நிமிஷம் பேசலாம்ல நாலு செல்பீ போட்டோ அனுப்பலாம்ல” என்றான்.
“பணம் இல்லைனு தான் ஒரு வருஷம் படிக்காம வீட்ல இருந்தேன். இப்ப தான் விவேக் அண்ணா வேலைக்குப் போகுது. அதுவே சின்னப் போனை தான் வாங்கிப் பேசுது. வீட்ல இருக்கற எனக்குப் போன் எதுக்குனு வாங்கலை. இப்ப நீங்க கொடுத்த காசுல வாங்கினா சரிபட்டு வராது.
எங்கப்பா அம்மாவை விட எங்கண்ணா மனசு கஷ்டப்படும். தங்கச்சிக்கு நாம வாங்கித் தரமுடியலையேனு. கல்யாணம் முடிஞ்சி நீங்க வாங்கித் தாங்க. வேலை விஷயமா அடிக்கடி தேவைப்படுதுனு வாங்கிக் கொடுத்ததா வீட்ல சொல்லிப்பேன்.” என்று வீட்டு நிலையைத் தயக்கமின்றி அதே நேரத்தில் சுணக்கமின்றி அண்ணனின் மனம் காயப்படக்கூடாதெனப் பேசியவளை மேலும் பிடித்தது.
“சரி என்னைக் கல்யாணம் பண்ணினப் பிறகே வாங்கித் தர்றேன்.” என்று போனை அணைத்திடும் மனமின்றி அணைத்தான்.
மேட்டிலிருந்து மெதுவாகக் கீழே வந்ததும் விவேக் போனை வாங்கிப் பாக்கெட்டில் வைத்துப் போனான்.
அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு அரை மணி முன் சென்றிருக்க வேண்டும். போன் பேச கொடுத்ததால் காத்திருந்தான்.
பத்து பதினைந்து நிமிடம் பேசிவிட்டு வாங்கிச் சென்றிட நினைந்தவனுக்கு நாற்பத்தி ஐந்து நிமிட உரையாடலாக மாறவும் அமைதிக்காத்திட மட்டுமே இயன்றது.
செம்பருத்தி அம்மாச்சியோ “இம்புட்டு நேரமாடி. எதுவும் உரண்டையை இழுத்துட்டு திரியலையே. நல்லபடியா கல்யாணம் நடக்கும் தானே?” என்று பேத்தியிடம் கேட்டார்.
“நடக்கும் அம்மாச்சி… கல்யாணத்தைப் பார்த்தமா கண்ணை மூடினமானு இருக்கணும்” என்று அம்மாச்சியை வம்பிழுத்து சென்றாள்.
“உனக்குக் கல்யாணம் ஆனா எனக்கென்ன இந்தப் பூமில வேலை” என்று நொடித்துக் கொண்டார் செம்பருத்தி அம்மாச்சி.
அன்னமோ மகளை வேடிக்கை பார்த்தபடி பாத்திரத்தை கழுவி கவுத்தியிருந்தார்.
“என்னம்மா நீயே கழுவிட்ட?” என்று வந்தவளை, “ஆமாடி நீ வருவ வருவனு ஆலம் கரைத்துக் காத்திருந்தேன். மகாராணி போன்ல இவ்ளோ நேரம் பேசவும் நானே சாம்பலை கொண்டு பாத்திரத்தை விளக்கி கழுவி கவுத்திட்டேன்.” என்றார்.
விருஷாலியோ “ஐ எனக்கு வேலை மிச்சம்” என்று துள்ளி ஓடினாள்.
விஷாகனோ கடையில் பேசிவிட்டு வரவு செலவை கணினியில் ஏற்றிவிட்டு, தண்ணி கேனை எண்ணினான்.
“ராஜன்… பத்து கேன் குறையுது.” என்று கடைப் பையனிடம் கேட்டான்.
“புதுசா முக்கு தெருவுல ஒரு கடை திறந்திருக்கு அண்ண. அதுக்குப் பத்து கேன் கேட்டாங்க” என்று ராஜன் கூறவும் “என்ன கடை?” எனக் கேட்டான்.
“மகேஸ்வரி மெஸ்’ அண்ணா… கடை திறந்து இரண்டு நாள் ஆகுது. நல்லா வியாபாரம்.” என்று கூறிடவும் அதை மண்டையில் ஏற்றிக்கொண்டான்.
“சரிடா.. ஐந்தரை ஆகுது வீட்டுக்கு போறேன். ஏதாவதுனா போன் பண்ணு” என்று பணத்தை மட்டும் கணக்கிட்டு முடித்து எடுத்து சென்றவன். எப்பவும் கடையில் சில தொகையை வைப்பான் அந்தப் பணத்தை மட்டும் வைத்துக் கிளம்பினான்.
வீட்டுக்கு சென்று அன்னை கையினால் காபி பருகினான்.
சுகன்யா சூடாக முறுக்கு செய்யவும் அதை எடுத்து விழுங்கினான்.
“எதுக்குமா இவ்ளோ முறுக்கு?” என்றான் விஷாகன்.
” அடுத்த வாரம் கல்யாணம். நாம பையன் வீடு, ஊர்ல என்ன வேலை.. எல்லாம் உங்க தாத்தா பார்த்துக்கறார்.
வேலை குறைவா தானே இருக்கு. அதனால முறுக்கு சுட்டு வச்சிட்டா. கல்யாணமாகி இங்க பொண்ணை விட வந்தவங்களுக்குக் கொடுக்கலாம்ல. அதான் கொஞ்சம் கொஞ்சமா சுட்டுப் பேக்கெட் பண்ணி வச்சிடறேன். வெளியே வாங்கறதை விட வீட்ல சுடறது தானே நம்ம வழக்கம். இன்னும் லட்டு, பூந்தி, மைசூர்பாகு எல்லாம் செய்யணுமே.” என்று அடுக்கினார்.
“வீட்ல செய்யறேன்னு உடம்பை கெடுத்துக்காதிங்க அம்மா. வெளியே ஆர்டர் தந்து பேக் பண்ணி கொடுக்கச் சொல்லிடறேன். நீங்க இந்த முறுக்கு மட்டும் சுடுங்க.” என்று கூறவும் அன்னை உடல்நிலையை அறிந்தவனாய் பேசி முடித்துத் திரும்பக் கடைப் பையன் ராஜன் ஓடோடி வந்து மூச்சிரைக்க நின்றான்.
விஷாகனோ அவனை நிறுத்தி “என்னடா இது. மூச்சு வாங்குது.” என்று தண்ணீரை தர, வாங்கியவன் “முக்கியமான விஷயம்னா” என்றான் அவன்.
“போன்ல சொல்லிருக்கலாமே டா. முதல்ல தண்ணியைக் குடி” என்று கூறவும், குடித்தவன் “தனியா பேசணும்னா என்று அழைக்க முறுக்கை நீட்டி “எடுத்துக்கோ” என்று தனியாக வந்தான்.
முறுக்கை வேண்டாமென மறுத்தான் ராஜன். “அண்ண… அண்ண… அந்தப் பொம்பள செத்துடுச்சு அண்ண.” என்றான்.
“எந்தப் பொம்பள?” என்று பேசும் போதே அந்தப் பெண்ணாக இருக்காது என்று நினைக்க, “அதான் அண்ண… அப்பாவோட இரண்டாவது குடும்பம். பக்கத்து வீட்ல தண்ணி போட போனேன். அந்தத் தெருவுல டெத்து என்றதும் எட்டி பார்த்தேன். அவங்களே தான்” என்று கூற அதிர்ந்து போனான்.
தந்தை வாழ்விலிருந்து அந்தப் பெண் விலகி செல்ல வேண்டுமென்று எண்ணியவன் தான் ஆனால் ஒரேடியாக உலகத்தை விட்டு எதிர்பார்க்கவில்லை.
அன்னை காதில் விழவில்லை என்பதால் என்ன முடிவெடுப்பது என்று தவித்தான்.
ஒரு இறப்பு நிகழ்ந்தால் அந்த வீட்டில் சுபக்காரியம் தடைப்பெற்று அந்தச் சுபகாரியம் ஒத்திவைக்கப்படும்.
இந்தப் பெண் யாரோ ஒருத்தி தான். அதனால் தன் திருமணம் தடைப்பெறாது. ஆனால் தந்தைக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரிந்தால் என்ன நேரும்?
அடுத்து எப்படிச் சூழ்நிலையைச் சமாளிப்பதெனச் சிந்தித்தான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Super sis nice epi 👌👍😍 acho eppo enna nadakumo pa avnoda sister appo enimey evanga veetuku kootitu Vara nelamai agumo🤔 enna nadaka pogudho kadavuley 🙄
ஊர்மக்கள் அபர்ணாவ இவன் பொண்ணு மட்டும் சொல்ல விட்டுறாதீங்க …
எனக்கு சின்ன மனசு தாங்காது….
Hahahaa athan nadakum
👌
குடும்ப கதை அதிலும் விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் அருமையாக கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் பிரவீணாமா 💕💕💕💕💕
Super super ka🥰🥰…. Waiting for next ud….
Sema sema interesting epi.. Achocho enna aachu.. Ipo antha ponnu nelama epadiyo therilaye🤔🤔🤔🤔
UNEXPECTED TWIST……….
Achooo😱 spr going waiting for nxt epi👌👌👌👌
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 13)
அம்மாடியோ…! இவனுக்கு இம்புட்டு கோபம் வந்தா, அந்த விஷாலி புள்ளை எப்படி தாங்கிக்கும்…? இவன் கோபக்காரன் தானா..? இல்லை அப்பன் மேல இருக்கிற கோபத்தை இப்படி காட்டுறானான்னு கூட தெரியலையே…? எப்படியோ சமாதானமாகியாச்சு. வந்த வேகத்துலயே குறைஞ்சும் போச்சு.
அச்சச்சோ..! என்ன இப்படியாகிடுச்சு…? கல்யாணம் முடிஞ்ச பிறகு, அவங்கப்பனை ஒரேயடியா துரத்தி விட்டுடலாம்ன்னு ப்ளான் பண்ணா, இப்ப முதலுக்கே மோசமாகி அபர்ணாவை விஷாகன் வீட்டோட கூட்டிக்கணும் போலயிருக்கே..?
கூட்டிப்பானா…? இல்லை, ஹோம் மாதிரி எங்கயாச்சும் சேர்த்து விட்டுடுவானோ…?
அதுக்கு உதயகுமார் ஒத்துப்பாரா..? இல்லை, மல்லு கட்டி நிப்பாரா…? அவருக்கே சொந்த வீட்ல இடமில்லாதபோது, அவரோட தொடுப்போட புள்ளையை கூட்டிட்டு வந்து இந்த வீட்டு சேர்த்துக்கன்னு உடந்தையை கிளப்பினா, விஷாகன் ஒத்துப்பானா என்ன..?
அதுசரி, முதல்ல இந்த கல்யாணம் நடக்குமா…? இல்லை தள்ளிப் போயிடுமா..? என்ன தான் அந்த பொம்பளை, சொந்தமில்லைன்னு சொன்னாலும்,…ஆயிரம் தான் இருந்தாலும், சங்கீதா அவங்கப்பனோட தொடுப்புங்கறது உண்மை தானே…? அப்ப எழவு விழுந்த வீட்ல கல்யாணம் தள்ளிப் போகும் தானே…? அய்யய்யோ..!
விஷாகனும், பிரவீணாவும் முறைக்கிறாங்களே..?
விட்டா, கடிச்சு வைச்சிடுவான்ங்க போல.. நமக்கெதுக்கு வம்பு..?
மீ எஸ்கேப்ட்…!
😃😃😃
CRVS (or) CRVS 2797
Super super super super super super super super super super super super waiting for next ud
Vishagan unnaku prachanai line katti varuthu avanga sethu yae poitagala ippo enna pannarathu nu theriyama muzhichikitu irukan
Super epi😍 But this turning point unexpected 🙁
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ethuku ippadi eranthutanga therilaye ipo antha aparna ponnu ena panum yar pathupanga vishakan appa ku inum theriyatha eranthathu vishakan ena mudivu eduka poran papom
அச்சோ
விஷாகன் ஒண்ணு நெனச்சா கடவுள் வேற எதையோ நெனக்குறாரே