நீயின்றி வாழ்வேது-35
பத்து மணியளவில் வீட்டுக்கு வந்த விஷாகனுக்கு இரவு உணவை விருஷாலியே வைத்தாள்.
விஷாகன் சாப்பிட மட்டும் வாயை திறந்தான். விருஷாலி எப்பொழுதும் அவனைக் கண்டு உருகி உருகி பரிமாறுவாள். இன்றோ கடனேயென்று பரிமாறவும், “நான் வச்சிக்கறேன் நீ போ” என்றான்.
அவளோ அங்கேயே நிற்கவும் லேசாய் முறுவல் வந்தது. விருஷாலி சண்டையைச் சமாதான உடன்படிக்கையில் மாற்ற விழைவதை அறிந்து உவகைத்தான்.
எப்படியோ புரிந்து கொண்டாளென்ற மகிழ்ச்சியில் உணவை வயிறார சாப்பிட்டான்.
அபர்ணா அவளது அறையில் உறங்குவதும் சுகன்யா அவரது அறையில் உறங்கவும், எல்லாம் சரிபார்த்து விட்டு தங்களது அறைக்குள் அடியெடுத்து வைத்தான்.
விருஷாலி கட்டிலில் மறுபக்கம் படுத்திருக்க, அவளருகே வந்து தோளை தொட்டான்.
லேசாய் முறுக்கி கொண்டு விலகினாள்.
“ஷாலிம்மாவுக்கு என்ன கோபம், அதான் வெயிட்டான பாக்ஸ் விழவும் உதவிக்குப் போய் மேல விழுந்துட்டேன்னு சொன்னேனே” என்றான்.
அவளைத் தன் புறம் திருப்பி, “ஷாலி..” என்று கெஞ்சலாய் மொழிந்தான்.
அவன் புறம் திரும்பியவள் மௌவுனமாய் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
“ஷாலி… ஷாலிம்மா…” என்று தாடை நிமிர்த்தி முத்தம் வைத்தே கொல்ல முடிவெடுத்தான்.
“கற்பனைக்குக் கூட வேறொருத்தியோட வாழ தயாராயில்லை. இந்த நெஞ்சுலயிருந்து சத்தம் கேட்குதா. அது ஷாலிம்மானு மட்டும் தான் ஜெபிக்கும்.” என்றதும் அவனை அணைத்து அழுதாள்.
சண்டையின் முடிவாகக் கூடலில் கலந்தார்கள். அனைத்தும் முடிந்தது என்று காலையில் அவளது பற்தடம் கொண்ட சுவடு விஷாகனின் கன்னத்தில் இருந்தது. கோபத்தில் கடித்தாளோ தனக்கானவன் என்ற உரிமையில் கடித்தாளோ, அவன் அறிவான்.
சுகன்யாவோ மகன் தெளிவாக இருக்க, நிம்மதியாக இருந்தார்.
அபர்ணாவை அழைத்துப் பள்ளிக்கூடம் விட்டுவிட்டு வந்தான்.
சுகன்யாவோ “யார் கண்ணு பட்டதோ. ஒருமுறை கோவிலுக்குப் போயிட்டு வாங்க” என்று கூறவும் சரியென்று கிளம்பினார்கள்.
விருஷாலியும் காலையிலிருந்து அமைதியாக இருக்கின்றாள் தவிர இன்னமும் நார்மலாகப் பேசாமல் இருக்க, கோவிலுக்கு அழைத்துச் சென்று பேச வைக்கும் முடிவோடு பைக்கில் புறப்பட்டனர்.
கோவில் என்றதால் சேலையணிந்து வந்தாள்.
நிறையப் படத்தில் தரிசித்த கோவிலை நேரில் காணவேண்டும் என்று விஷாகனிடம் முன்பு இங்கு வந்தப்பொழுது ஆர்வமாய்ப் பேசியவள். இன்று அந்தக் கோவிலுக்கு வந்தும் எதையும் ரசித்துப் பார்க்கவில்லை. சிவனேயென்று வழிபட்டு, அர்ச்சனை செய்து, கோவிலில் தனியாக அமர்ந்தாள்.
விஷாகன் அவளாகப் பேசுவாளென்று காத்திருந்தான். பேசவில்லையென்றதும் லேசாய் ஏமாற்றம் தாக்கியது.
நீண்ட நேரம் சேலை முந்தானையை முடிச்சிட்டுக் கையில் பிசைந்தபடி இருந்தாள்.
“ஷாலி வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டான்.
“அவளை வேலைவிட்டு எடுத்துடுங்க” என்றாள் விருஷாலி.
“ஏன் ஷாலி?” என்றான் விஷாகன்.
“ஏன்னா… அவ அங்கயிருக்கறது பிடிக்கலை. வேற ஆளேயில்லையா.” என்று கூறவும், “ஆள் இல்லை ஷாலி… ஏற்கனவே தண்ணி கேன் கடையில ஒருத்தனை வேலை விட்டு எடுத்துட்டேன். இங்கயும் எடுத்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது. வேலை டென்ஷன் மனழுத்தம் வரும். மகேஸ்வரி இருக்கறது எனக்கு உதவியா இருக்கு” என்று நிதானமாய்ப் பதில்தந்தான்.
“என்ன பெரிய உதவி.” என்று சீறவும், “ஷாலி..” என்றவன் அக்கம் பக்கம் இருப்பவர் பார்க்கவும் அமைதியானான்.
“நேத்துப் பிரச்சனை நேத்தே முடிஞ்சுதுனு நினைச்சேன். ஏன் ஷாலி திரும்ப வம்பு பண்ணற” என்றான்.
“அவ தான் வம்பு பண்ணறா. உங்களிடம்… என் வாழ்க்கையை அழிக்க” என்று லேசாய் கண்ணிலிருந்து அருவி கொட்ட அவசரமாய்க் கைக்குட்டையால் துடைத்தாள்.
“சரி அவ அழிக்கறா, நான் அதுக்கு மசிந்து போயிடுவேனா.” என்று நிதானமாய்க் கேட்டான்.
“எனக்குப் பதில் சொல்ல தெரியலை. பயமா இருக்கு. ப்ளிஸ்… வேலை விட்டு எடுத்துடுங்களேன். என்னால நிம்மதியா வீட்ல இருக்க முடியாது.” என்று சிடுசிடுத்தாள்.
“கோபப்படறப்ப கூட அழகாயிருக்க விருஷாலி.” என்றவன் மெதுவாய் அவள் கையைப் பிடித்து ”உன் பயம் தேவையில்லாதது ஷாலி. கோவில்ல வச்சி சொல்லறேன். சத்தியமா உன்னைத் தவிர யாரையும் தப்பான எண்ணத்துல தொடமாட்டேன். ஏன் மனசாரக் கூட” என்று பேசினான்.
“எந்தச் சாமியும் சாட்சிக்கு வராதுனு இழுக்காதிங்க.” என்றாள்.
“ஷாலி… அப்ப இன்னமும் என்ன தப்பா நினைக்கிறயா?” என்று கேட்டான்.
விருஷாலியிடமிருந்து பதில் இல்லை என்றதும் “வா வீட்டுக்குப் போகலாம்” என்றான்.
விருஷாலியும் மெதுவாய் அவன் பின்னால் வந்தாள்.
கோபமாய் இருந்தால் மனம் மாறுவானென அதே முகத்தோடும், சொன்ன சொல்லில் மாற்று கருத்துமின்றி வந்தாள்.
வீட்டுக்கு வந்ததும், வாசலில் இறங்கிவிட்டு “நான் மகேஸ்வரியை வேலை விட்டு எடுக்க மாட்டேன். உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா என்னோட வாழு. இல்லை உன் ஊருக்கு போ.” என்றவன் கொரியர் அலுவலகம் செல்ல முடிவெடுத்துச் சென்றான்.
விருஷாலிக்கு விஷாகன் சொன்னதைக் கேட்டு கவலையானது.
இங்கேயிருந்தால் தன்னைத் தூசாகக் கருதுவானென்று சின்னக் கைப்பையில் அன்னை கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு புறப்பட்டாள்.
வழியில் கேட்டுகேட்டுத் தங்கள் ஊருக்குப் போகக் கோயம்பேடு வந்தாள். அங்கிருந்து பேருந்தில் டிக்கெட் எடுத்து ஜன்னல் புறம் சாய்ந்தாள்.
‘நான் முக்கியமில்லையா… அவ தான் முக்கியமா’. இது தான் விருஷாலி மனதில் எழுந்த முதல் வருத்தம். ‘தனக்காக அவளை வேலைவிட்டு எடுக்க வேண்டியது தானே? ஏன் மறுத்தான்’ இது இரண்டாவது வருத்தம். அவனை விட்டு பிரிந்து வந்துவிட்டாயா? என்று மனசாட்சி கேட்க அதற்குத் தான் பேருந்து ஏறியதிலிருந்து கண்ணீர் வடித்தாள்.
அவளை அறியாது அழுதழுது உறங்கினாள். பசியென்பதை மறந்தே போனாள்.
விஷாகன் அவளை வீட்டில் விட்டுவிட்டதால் அதோடு இரவு தான் வந்தான்.
நடுவில் போன் போடவில்லை. இருவரும் அதிருப்தியான கோபத்தில் இருக்க, போன் போட்டு பேசவில்லையென்று முடிவு எடுத்தான்.
வீட்டுக்கு வந்ததும் சுகன்யாவோ, “அவ எங்கடா?” என்று வாசலை ஏறிட்டார்கள்.
“விருஷாலியை காலையிலயே விட்டுட்டேனே.” என்றவன் அன்னையிடம் “அம்மா.. அவ இங்கயில்லை?” என்று கேட்டான்.
“இல்லையேடா. நீ கோவிலுக்குப் போயிட்டு, அப்படியே சினிமா ஹோட்டல் பீச் போவிங்கனு நினைச்சேன். அபர்ணாவை கூட நானே அழைச்சிட்டு வந்துட்டேன். அவ உங்கூட இல்லையா?” என்று கேட்டதும்? விஷாகன் உலகம் அப்படியே ஸ்தம்பித்தது.
“என்னம்மா சொல்லற அவளைக் காலையிலேயே கொண்டு வந்து விட்டுட்டேன்” என்று இடிந்து போய் அமர்ந்தான்.
“போ…போன் போடுடா.” என்று அவனை உலுக்கவும் விருஷாலிக்கு அழைத்தான். சுவிட்ச் ஆப் என்று தகவல் வரவும் பயந்து விட்டான்.
“எங்கம்மா போயிருப்பா. இங்க அவளுக்குப் பெருசா எந்த இடமும் தெரியாதே.” என்று விடாமல் அவள் போனுக்கு அழைத்தான். அந்த அழைப்புகள் எல்லாம் தோல்வியைத் தரவும், பயந்து போனான்.
விவேக்கிற்கு அழைக்கவும் பயந்தான். அங்கும் ஏதும் போன் செய்யாமல் இருந்தால்…. காலையில் போன் போட்டாலாவது விவரம் தெரியும்
அங்குச் செல்லாமல் இங்கேயே ஏதேனும் கடலில்…. அடுத்த நொடி விஷாகன் பைக்கை எடுத்துத் தங்கள் ஏரியாவிலிருக்கும் கடற்பகுதிக்குச் சென்றான்.
மணி பதினொன்று ஆனாலும் மக்கள் சந்தோஷமாக அங்குத் திரண்டு தான் இருந்தார்கள்.
அருகேயிருப்பவர்கள் நேரம் கழித்துக் கூட வீட்டுக்குச் செல்வார்கள். என்பதால் விளக்கொளியும், ஒன்றிரெண்டு கடைகளும், ஐஸ்வண்டிகளும் ஆங்காங்கே இருந்தது.
கடற்கரையைச் சுற்றி வட்டமிட்டு ஷாலி…. ஷாலி என்று பைத்தியம் போலத் துடித்தான். இரவெல்லாம் கோவில் கடற்கரை என்று மாற்றி மாற்றித் தேடி களைத்துச் சிமெண்ட் பெஞ்சில் கலங்கிய விழிகளோடு உறங்கியிருந்தான்.
அடுத்த நாள் காலை விழிப்பு தட்டவும், எழுந்து முதல் வேலையாக விவேக்கிற்கு அழைத்தான்.
“வி..விவேக்… அங்க உன் தங்கச்சி வந்தா கொஞ்சம் சொல்லறியா.” என்று கேட்டான்.
“என்னமச்சான் ஆச்சு. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு” என்று கேட்டான் விவேக்.
எதையும் மறைக்காமல் விவரித்தான். விவேக்கோ, “பயப்படாதிங்க மச்சான். ஷாலி தற்கொலை பண்ணிக்க மாட்டா. நீங்க சொன்ன மாதிரி இங்க தான் வந்துட்டு இருப்பா” என்று ஆதரவாய்ப் பேசினான்.
“என் மேல கோபமில்லையா விவேக்.” என்று விஷாகன் கேட்டான்.
“ஏன் மச்சான்… கோபப்படணுமா? எங்க விருஷாலி கல்லு மாதிரி வருவா. இதோ இப்ப விலாவரியா சொன்னதும் கோபப்படணும்னு எதிர்பார்க்கறிங்களே. அது மாதிரி அவ உடனே எதிர்வினை காட்டறா. நிதானமா இங்க வந்து யோசிச்சா. நல்லமுடிவா எடுப்பா.” என்று பேசவும் விஷாகன் நிதர்சனத்தை ஏற்றான்.
“சரி விவேக். அவ வந்ததும் சொல்லு. இல்லைனா போலிஸ் கம்பிளைன் பண்ணணும். வேற எங்க போனானு தேடணும்.” என்று குரல் கமற வருத்தமாய்க் கூறினான்
விவேக் எதிர்பார்த்து போல விருஷாலி வீட்டுக்கு வந்து சேரவும் முதல் வேலையாக விஷாகனுக்குத் தகவல் தெரிவித்தான்.
அன்னமோ கண்ணைச் சுருக்கி சுருக்கி பார்த்து, “விருஷாலி” என்று ஓடிவந்து அணைத்தார்.
“என்னடி கோலம் இது. தனியாவா வந்த.” என்று வாசலை ஏறிட்டு பார்த்தார்.
“ஆமா அவர் வரலை தனியா தான் வந்தேன். ஏன் இப்படிப் பண்ணற. அம்மாச்சி கிழவி எங்க.” என்று கேட்டு அப்பத்தாவை தேடினாள்.
ஏனென்றால் இப்படித் தனியாக வந்தால் கேள்வி கேட்பது அவர் தானே. அவருக்குத் தானே மூச்சுப் பிடித்துப் பதில் கூறவேண்டும்.
“அம்மாச்சி… அம்மாச்சி..” என்று குரல் கொடுத்து வீட்டில் நுழைய, வீட்டின் மூலையில் பாய் விரித்துக் கிழிந்த நாராகச் செம்பருத்தி அம்மாச்சி படுத்திருந்தார்.
“அம்மா… என்னம்மா.. அம்மாச்சிக்கு என்னாச்சு.?” என்று பதறி அருகே சென்றாள்.
“உனக்குச் சொன்னா இப்படித் தான் பதறுவனு இவனிடம் எதுவும் சொல்லாதனு சொன்னேன். பாவி மகன். உன்னிடம் சொல்லி நீ இப்ப ஒத்தையா வந்துயிருக்க” என்று மகள் வருகை அம்மாச்சிக்கென்று முடிவு கட்டினார் அன்னம்.
விருஷாலி அங்குச் சென்று இருக்கின்றாளென்றதும் விஷாகன் நிம்மதியடைந்து கடலில் உப்புநீரில் முகம் அலம்பினான்.
ஒரே நாளில் யாசகனாய் மாறிய நிலையோடு வீட்டுக்குத் திரும்பினான்.
அபர்ணா உறங்க சுகன்யாவோ ஹாலில் வாசலை பார்த்துக் கண் மூடியிருந்தார்.
விஷாகன் உள்ளே வரவும் “அவயெங்கடா” என்றார்.
“அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா மா. உடனே போன் போட்டு எதுவும் பேசாதே. அவ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும். நானே போய்க் கூட்டிட்டு வருவேன்” என்று கூறினான்.
இதற்கு மேல் சுகன்யா போன் போடுவாரா. அப்படியே போட்டால் அன்னம் கேட்கும் கேள்விக்கு யார் பதில் தருவது. ‘என் மகளைத் தனியா அனுப்பிட்டியே’ என்று திட்டுவார் தானே.
இங்கு விருஷாலியோ செம்பருந்தி அம்மாச்சியோடு “அம்மாச்சி நான் விருஷாலி வந்திருக்கேன். என்னைத் தெரியுதா?.” என்று இரண்டு மூன்று முறை கேட்டும் ஒரு முன்னேற்றமும் இல்லை.
விவேக் விருஷாலியை அழைத்து “ஏன் சொல்லாம கொல்லாம வந்த. மச்சான் பயந்துட்டார் தெரியுமா? அப்படியென்…” என்று பேச ஆரம்பிக்கவும், “அவரைப் பத்தி ஆரம்பிக்காத.” என்று அவன் பேச வருவதையே ஒதுக்கினாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Super super super super super super super super super super super super ivangaluku innum purithal venum athuku intha piruvu mukkiyam
Interesting👍
Sema sema interesting epi
Shali try to understand vishakan. What happened to ammachi? Intresting
Super ka❤️…. Waiting for next ud….
Super sis nice epi 👍👌😍 endha ponnu udaney kochikitu poitaley🙄 koodave erundhu prechanaiya solve pannanum enna pannapogudho😤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீயின்றி வாழ்வேது…!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 35)
அட.. அவன் தான் அத்தனை தூரம் விளக்கம் கொடுத்தான் தானே..? அதற்கப்புறமும் அவனை நம்பலைன்னா என்ன அர்த்தம்..? இன்னைக்கு இவளை வேலையை விட்டு தூக்குனா, நாளைக்கே வேறொருத்தி வந்தார் அவளையும் சந்தேகப்படுவாத்
தானே. அப்புறம் இதுக்கொரு எல்லையே இல்லாம போயிடும் தானே…?
ஐ திங்க்…. இந்த விஷாலி சரியான எடுத்தேன் , கவிழ்த்தேன் பேர்வழியோ..???
😃😃😃
CRVS (or) CRVS 2797
Vishagan sonnathu pola aval yae yosichi thelivu aagatum
Nice epi… Waiting for next…. 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
புருஷன் மேல நம்பிக்கை இல்ல யாரோ சொன்னாங்கன்னு சந்தேகம் பட ஆரம்பிச்சிட்டா…. அவனின் உண்மை சுயரூபம் தெரியும் போது குற்ற உணர்ச்சி தவிக்கனும்
Spr going 💕💕💕💕💕💕
antha paiyan sonnathula yosichi nee sandhegaadura aana vishakan un kitta ellathaium eduthu puriya vachitan athuvum illama unna thavira yaraium ninaika maten thoda maten maten apovum namibikai varalaya shali unaku avan sonnathum ippadi kelambi vanthuta
அப்பா மாதிரி தான் பிள்ளையும் இருப்பான் ன்னு விருஷாலியும் நம்பிட்டா போல
Visaga உன் நிலைமை இப்படி மோசமாகி விட்டது