நீயின்றி வாழ்வேது-37
அன்னம் கருப்பட்டி எடுத்து அம்மியில் நுணுக்கி, பாசி பருப்புப் பாயசத்திற்குத் தயார் செய்தார்.
வனஜாவோ கையைப் பிடித்து “அண்ணாவுக்குப் போன் பண்ணி சொல்லு டி” என்று ஊக்குவித்தாள்.
விருஷாலியோ அன்னை அவ்விடம் இல்லாததால், “மாட்டேன்” என்று கூறினாள்.
“கூறுயிருக்காடி… என்ன மாதிரியான விஷயம். இப்பவும் அண்ணாவோட பேசமாட்டேன்னா என்ன அர்த்தம்” என்று தோழியைக் கடிந்தாள்.
“மாட்டேன்னா மாட்டேன்.” என்று கண்ணைத் துடைத்து அறைக்குள் சென்றாள்.
வனஜா அதற்குள் ”அவளா போன் போடமாட்டாளாம்” என்று கூறவும் விவேக் தலையைப் பிடித்து, ”மற்றதை சொல்லலாம். இதையும் நானே எப்படிச் சொல்ல. நீயெல்லாம் அவளுக்கு என்ன பிரெண்டோ. கொஞ்சமாவது புரியவை” என்று கடுகடுத்தான்.
“ஏன் என்மேல கத்தறிங்க. உங்க தங்கச்சி அப்படியே சரிடினு கேட்டுப்பாளாக்கும். உங்க வார்த்தைக்கே மரியாதை தரமாட்டேங்குது. நான் அதோட பிரெண்ட் என்னை எப்படி மதிக்கும். நீங்களே அவளிடம் அண்ணாகூடப் பேச சொல்லுங்க. நான் வீட்டுக்கு போறேன்.” என்று திண்ணையிலிருந்த பையை எடுத்தாள்.
“ஏ ஆரேஞ்சு மிட்டாய்… அம்மா பாயசம் பண்ணுது குடிச்சட்டு போ” என்று கூறினான் விவேக்.
“இப்ப தானே நுணுக்கிட்டு போனாங்க. நான் மூஞ்சி கைகால் கழுவிட்டு வந்துடுவேன்” என்று கூறி பார்வையால் வர்றேன் என்று அகன்றாள்.
விருஷாலிக்கு வனஜா விவேக் பேச்சு கேட்க சிரித்தாள்.
‘உனக்கிருக்கற லட்சணத்துக்குச் சிரிக்கறியா?’ என்ற மனசாட்சி கேள்விக்கு, ‘நான் இப்ப சந்தோஷமா தானே இருக்கணும். என்னோட விஷாகன் மச்சானோட குழந்தை என் வயிற்றுல உதிச்சிருக்கே.’ என்று பூரித்தாள். அந்த மகிழ்ச்சியை அம்மாச்சி காதில் ரகசியமாய்க் கூறினாள்.
“அம்மாச்சி… எனக்கு நாள் தள்ளியிருக்கு. என் வயித்துல உன் கொள்ளு பேரனோ பேத்தியோ இருக்கு” என்றதும் அம்மாச்சி கண்ணில் லேசாய் கண்ணீர் துளிர்த்து வழிந்து காதுமடல் வரை சென்றது.
” அம்மாச்சி உனக்கு நான் பேசறது கேட்குதா? அம்மா எது சொன்னாலும் நீ எந்த அசைவு கொடுக்கலையே. என் பேச்சு கேட்டு ஆனந்த கண்ணீர் விடற. உனக்கு என் மேல அம்புட்டு பாசமா அம்மாச்சி.” என்று குலுங்கினாள்.
“விருஷாலி மச்சானுக்கு விஷயம் சொன்னியா” என்று அன்னம் இருக்கும் சமயம் பார்த்து கேட்டான்.
“சொல்லணும் அண்ணா.” என்று கூறினாள். போனை எடுத்து நீட்டியபடி “சொல்லு” என்றான் விவேக்.
“ஏன்டா… வளர்ந்திருக்கியே கூறுயிருக்கா? உன்னையும் என்னையும் வச்சிட்டு அவயென்ன பேசுவா. விருஷாலி… வெளியே போய்ப் பேசு” என்று உந்தினார்.
விவேக்கிடமிருந்து போனை வாங்கினாள். விவேக்கோ போனில் விஷாகன் எண்ணை அழுத்தி விட்டு நீட்டினான்.
விருஷாலி அதனை வாங்கி அண்ணனை முறைத்துக் கொண்டு வெளியேறினாள்.
விஷாகன் விருஷாலி எண்ணிலிருந்து அழைப்பு என்றதும், “ஷா…ஷாலி… ஷாலிம்மா. பேசுடி… ஷாலி..” என்று கூப்பிட்டுக் கொண்டேயிருந்தான்.
இந்தப் பக்கம் வாயை பொத்தி அழுதாளே தவிரத் துளி சத்தமும் விடவில்லை. நீண்ட நேரம் அழைத்துவிட்டு, “என்ன நம்பலைல… ஏன்டி. நான் அப்படிப்பட்டவன்னு முடிவே பண்ணிட்டு சொல்லாம போயிட்டியே டி. இங்க வருவியா மாட்டியா” என்றதும் “விருஷாலி பாயாசம் ரெடி வா சூடா குடி” என்று அன்னம் கூப்பிடுவது கேட்கவும்? “வர்றேன் மா” என்று குரல் கொடுத்தவள் போனை அணைத்து வேகயெட்டு எடுத்து வைத்தாள்.
“மெதுவாடி மெதுவா. மாப்பிள்ளை எப்ப வர்றாறாம்” என்று அன்னம் கேட்க, “வருவாரும்மா” என்று பாயாசத்தை மட்டும் பிடுங்கி கொண்டு சென்றாள்.
“அவ்ளோ சொல்லியும் பேசாம வந்துட்டல” என்று விவேக் கூற, “உன் அதட்டல் எல்லாம் வனஜாவோட வச்சிக்கோ அண்ணா. என் வாழ்க்கையை நான் பார்த்துப்பேன்” என்று கூறினாள்.
வனஜாவை விவேக்கை முறைத்து பார்க்க, “அய்யோ சாமி சத்தியமா நான் சொல்லலை” என்று தலையில் கைவைத்து கூறினாள்.
“அவ சொல்லலை. உன் மச்சானோட நான் சண்டை போட்டது, இங்க உன்னை என்னைத் தவிர யாருக்கும் தெரியாது ஆனா வனஜா என்னிடம் கேட்டா” என்றதும் விவேக் அமைதியானான்.
வனஜா மெதுவாய் நழுவ பார்க்க, “எங்க ஓடற. இங்க தானே வரணும். புடி… எங்கம்மா பாயாசம் போட்டதைக் கொடுக்கச் சொல்லிட்டு எங்கப்பாவை கூப்பிட போயிருக்கு.
உங்க விஷயம் வீட்ல தெரிந்தா உனக்குத் தான்டி பாயாசம்.” என்று அண்ணனையும் வனஜாவையும் பார்த்துவிட்டுப் பாயாசத்தை ருசிக்க ஆரம்பித்தாள்.
விவேக்கோ அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டு மச்சானை அழைத்துப் பேச தனியாக வந்தான்.
விவேக் எண்ணிலிருந்து ரிங் வந்ததும் எடுத்தான் விஷாகன். “என்ன விவேக்… பாயாசம் எல்லாம் பலமா இருக்கு. அவ போன் போட்டா ஆனா பேசலையே ஏன்” என்று விஷாகன் கேட்டான்.
“மச்சான் இந்த விஷயம் எப்படிச் சொல்லறது” என்று தவித்தான்.
“அப்பத்தாவுக்கு என்னாச்சு? உடம்பு சரியில்லைனு சொன்ன. பேத்தி வந்ததும் எழுந்து உட்கார்ந்து பாயாசம் கேட்டாங்களா?” என்று கேட்டான்.
“இல்லை மச்சான்… அம்மாச்சி அப்படியே தான் படுத்தபடுக்கையா இருக்காங்க.
பாயசாம்…. விருஷாலிக்காக அம்மா செய்தாங்க. அது வந்து மச்சான்.
இந்த விஷயத்தை அவ தான் சொல்லிருக்கணும். திமிர் பிடிச்சவ… பேசாம கமுக்கமா வாயை பொத்தி அழுதுட்டுப் போனை வச்சிட்டா.” என்று கூறினான்.
“ஏய்.. ஷாலி அழுதாளா. ஏன்.. என்னோட பேசணும்னு யோசித்துப் பேச முடியாம இருக்காளா. நான் வேண்டுமின்னா வரட்டுமா?” என்றான்.
“நீங்க வரணும் மச்சான். நேர்ல வந்தாவாது அந்த நல்ல விஷயத்தை உங்களிடம் சொல்வா.” என்றான்.
“விவேக்… விருஷாலி… விருஷாலி.. கர்ப்பமா இருக்காளா?” என்று கேட்டுவிட்டான்.
“ஆமா மச்சான். இப்ப தான் காலேஜ் முடிச்சி வந்து டீ குடிச்சா வாந்தி எடுத்துட்டா. நாள் தள்ளி போயிருக்கானு அம்மா கேட்க ஆமானு சொன்னா.” என்றதும் விஷாகன் மறுபக்கம் சிரித்துக் கொண்டே அழுதிருந்தான்.
“அண்ணா ஏன்னா சிரிச்சிட்டே அழுவறிங்க” என்று மகேஸ்வரி குரல் கேட்டது.
“ஒன்னுமில்லைம்மா.. நான் அப்பாவா ஆகிட்டேன்.” என்று மகிழ்ச்சியைச் சட்டெனக் கூறிவிட, “வாவ் சூப்பர் அண்ணா. கொடுங்க உங்க மனைவியிடம் வாழ்த்து சொல்லறேன்.” என்று மகேஷ்வரி கேட்க, “இல்லைம்மா.. இது மச்சான் விவேக். இன்னொரு நாள் பேச கொடுக்கறேன்.” என்றான் விஷாகன்.
“போங்கண்ணா அன்னைக்கு அவங்க சட்டுனு போனதுலயிருந்து இதையே சொல்லறிங்க. அவங்களிடம் பேசவிட மாட்டேங்கறிங்க. கூடிய சீக்கிரம் பேச சொல்லுங்க.” என்றதும் கொரியர் அலுவலகத்தில் ஆட்கள் வர மகேஸ்வரி பணியைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
“என்ன மச்சான் இது. வார்த்தைக்கு வார்த்தை அந்தப் புள்ள அண்ணா சொல்லுது. இந்த விருஷாலி தப்பா நினைச்சிட்டு இங்க உட்கார்ந்துட்டு இருக்கு. இங்க வந்து இரண்டடி அடிச்சி சொல்லி புரிய வச்சி கூட்டிட்டு போங்க மச்சான்.” என்றான்.
“இருக்கட்டும் விவேக். அவயிப்ப அங்கயே இருக்கட்டும். அதான் நல்லது. படிப்பும் இருக்கு. இந்த நேரத்துல அம்மா வீடு தான் நல்லது இங்க வந்தா அபர்ணா அவளிடம் சண்டை பிடிப்பா.
நான் இந்த வாரத்துல வர்றேன். ” என்று கூறினான்.
“சரிங்க மச்சான்” என்று அணைத்தான்.
விருஷாலிக்கு போன் போட்டுக் காத்திருந்தான் இத்தனை நாள் எடுக்கவில்லை. இன்று எடுப்பாளா என்று நப்பாசையில் போட்டான்.
அவள் எடுத்ததும், பேசவில்லை காதில் வைத்து மரம் போல நின்றாள். வனஜாவோ பாயாசம் குடித்து ஓடிவிட்டாள். விவேக்கும் சென்றிருந்தான்.
அம்மாவும் அப்பாவை அழைத்து வர டவுன் பக்கம் சென்றார். தனக்குப் பழங்கள் காய்கறி வாங்க இன்றே படையெடுத்திருந்தார்.
வீட்டில் பொம்மையாகச் செம்பருத்தி அம்மாச்சி மட்டும் ஒரமாய் இருந்தார்.
விஷாகன் அழைப்பு என்றதும் கத்தரிக்கத் துடித்தாள். ஆனால் அவனுக்கு விவேக் மூலமாகத் தான் கர்ப்பம்உண்டானது தெரிந்து அழைத்திருந்தால் வாடிவிடுவானோ என்று தொடர்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“உன்னோடு இருந்த ஒவ்வொரு நாளும் மோகத்துல தான் இருந்தேனா ஷாலி?. காதலோட இல்லையா…? குழந்தை உருவானதல சொல்ல போன் போட்டு சொல்லாம துண்டிச்சிட்ட. நான் வேண்டாம்னா அதையும் துண்டிச்சிடு” என்றான்.
லேசாய் விசும்பும் சத்தம் கேட்டது. ‘ஓ… அது என் குழந்தை மட்டும்னா அழிச்சிருப்ப. உன் குழந்தையும் சேர்த்தினு யோசிக்கறியா.” என்றான்.
விருஷாலி மூக்குறியும் சத்தமும் விசும்பலும் கேட்டது.
“இந்த மாதிரி நேரத்துல எமோஷனல் ஆகக்கூடாது. சந்தோஷமா இருக்கணும். உனக்குத் தான் நான் இல்லாத இடம்னா சந்தோஷம் தானே. எமோஷனல் ஆகாம காலேஜ் போயிட்டு வா.
உனக்குக் கோபம் எல்லாம் என் மேல தானே. குழந்தை மேல இல்லைனா. நல்லா சாப்பிட்டு தூங்கு.” என்றான்.
விருஷாலி அவன் பேசியதை கேட்டாளே தவிரப் பேசவில்லை.
நெடுநேரம் மௌவுனமாகப் போனை கையில் வைத்து “நீயா பேச மாட்டியாடி?
நான் வீட்டுக்கு போறேன். அம்மாவிடம் விஷயம் சொல்லறேன். வைக்கிறேன்.” என்று அணைத்து விட்டு வீட்டுக்குச் சென்றான்.
இங்கே விருஷாலி முட்டிகட்டி அழத்துவங்கினாள்.
அங்கே உயர்தர ஸ்வீட் ஸ்டாலில் இனிப்பை வாங்கிக்கொண்டு விஷாகன் வண்டியை நெருங்கும் நேரம் அதே சாலையில் சுகிர்தன் தன் முதுகுப்பையை மாட்டிக்கொண்டு உணர்வற்று நடந்து வந்தான்.
வேகமாய்ப் பஸ்வரவும், தம்பியை இழுத்து ஓரமாய் நிறுத்தினான்.
“அறிவிருக்காடா… பஸ் எவ்ளோ வேகமா வருது. ஹாரன் அடிச்சும் கண்டுக்காம வர்ற. நீயும் அப்பா மாதிரியே சாகவா” என்றதும் சுகிர்தன் அண்ணன் என்றதும் கண்ணீர் உடைப்பெடைக்க, “ஏதோவொரு யோசனை அண்ணா.” என்றவன்.
“என்ன சொன்ன.? அப்பா மாதிரியா. ஆமா அண்ணா. அப்பாவும் நான் திட்டியதுக்கு இப்படித் தான் கலங்கி போய் ரோட்ல நடந்திருப்பார்ல. என்னால தான் அப்பா இறந்திருப்பாரோ.
நீ சொன்ன மாதிரி அப்பா அபர்ணா விஷயத்தைத் தவிர நமக்கு எந்தக் குறையும் வைக்கலை. ஆனா அதுக்கு நான் அதிகப்படியா பேசிட்டேன்.” என்று ரோடென்று பாராது முகத்திலறைந்து அழுதான்.
அண்ணனிடம் தான் ஐஸ்க்ரீம் பார்லரில் தந்தையைப் பேசியதை விவரித்து அன்றே தந்தை இறந்ததைக் கூறினான்.
“அவர் இறந்தப்ப கூட அழலைண்ணா.” என்று பேசி வேதனைப்பட்டவனை அழைத்து, அங்கிருக்கும் ஒரு ஹோட்டலில் அமரவைத்து காபி ஆர்டர் கொடுத்துவிட்டு, “லூசு தனமா பேசாதே. நீ பேசியது தப்பில்லை. அவர் தப்பை உணர்ந்து பீல் பண்ணியதும் சரிதான். ஆனா ரோட்ல பீல் பண்ணினா அப்படித் தான் இறப்பு நிகழும்.” என்று நிதர்சனத்தை விவரிக்கவும் சுகிர்தன் சற்று அமைதியானன்.
“உனக்கென்ன பிரச்சனை நீ ஏன் இப்படி இருக்க?” என்றான் விஷாகன்.
“எல்லாம் அவளே எல்லா செலவும் பண்ணறாளாம். நான் ஒரு வேஸ்டாம். இன்னிக்கு ஜெனிபர் அப்பா ஆபிஸுக்கு வந்து அவளிடம் பேசினார். நான் மாமனார் ஆபிஸுக்கு வந்தாரேனு போய்ப் பேச வந்தேன். அவர் என்னடானா வீட்டு வாடகையிலருந்து நீயே கொடுக்குற, அவனென்ன சம்பாரிக்கறான். பேடிப்பயல்… நீ இப்படிக் கஷ்டப்படணுமா. அப்படியிப்படி பேசவும் ஜெனிபரோ, “கொஞ்சம் யோசிச்சிருக்கணும்பா. என்னை மன்னிச்சுடுங்கனு சொன்னா.
அவர் ‘விவாகரத்து வாங்கிடுமா. நம்ம சமூகத்துல வேற மாப்பிள்ளையா பார்ப்போம்’னு சொல்ல, அதுக்கு ஜெனிபர் ‘பாருங்கப்பா பாருங்க’னு கையைக் கட்டிட்டு சொல்லறா. அங்க இருக்க முடியலை அப்படியே வந்துட்டேன்.” என்று அழுதான்.
“ஒருத்தர் பேசறதை அரையும் குறையும் கேட்டுட்டு வந்து நிற்காத. அந்தப் பொண்ணு அப்படிச் சட்டுனு உன்னை விட்டு போகாது” என்று கூறவும், “அண்ணியே உன்னை நம்பாம தனியா போனதா அம்மா சொல்லறாங்க. இவ வேலை பார்த்து சம்பாதிக்கறவ. என்னை விட்டு போயிடுவா.” என்று புலம்பினான்.
“யாரும் யாருயும் விட்டுப் போகக் கல்யாணம் பண்ணலை டா. வருவா.. எங்க வராம போவா. என் விருஷாலி என்னை அப்பானு என் குழந்தைக்கு அறிமுகப்படுத்த, என்னைத் தேடி வருவா.” என்றான் நம்பிக்கையாய்.
“அண்ணி…?” என்று கேள்வியாய் கேட்க, “ம்ம்.. கன்சீவா இருக்கா” என்றான்.
“இதை இப்ப சொல்லற, கங்கிராட்ஸ் அண்ணா” என்று கூற தம்பியை அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு வந்தான்.
சுகன்யாவிடம் கூறிவிட்டு அபர்ணாவிடம் மொத்தமாய் இனிப்பு பெட்டியை தந்து மகிழ, சுகன்யாவோ ஆனந்தம் கொண்டார்.
அபர்ணாவோ சோபாவில் குதித்துக் குதித்து மகிழ்ந்தாள்.
சுகிர்தன் போன் அலறியது ஜெனிபர் தான் அழைத்திருந்தாள்.
விஷாகனோ “முகம் காட்டாம இதமா பேசு. முடிஞ்சா இங்க ஒரு நாள் தங்கிட்டு போக வரச்சொல்லு.” என்று தோளைத் தட்டினான்.
சுகிர் தலையாட்டி, போன் பேச சென்றான்.
விஷாகனோ வேகமாய்ப் பெட்டியில் துணியை அள்ளி வைத்தான். நாளைக்கே விருஷாலியை பார்க்க செல்ல வேண்டும் என்று.
ஆனால்…..
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Super super😍😍
சூப்பர். … வீணா அக்கா திருப்பி விருஷாலி விசாகனை பிரிக்காதிங்க பீளிஸ்
Super sis semma epi romba interesting ah pogudhu story 👌👍😍 vrushali ya parka poga thadukka plan potuteenga sis en eppdi🤧 renduperaium serthu vechidunga pa😢🥺
நீயின்றி வாழ்வேது…!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 37)
அய்யய்யோ..! ஆனா….ன்னு இப்ப எதுக்கு கொக்கி போடறாங்களோ தெரியலையே..? ஏங்க, காதல் ஈஸியா தகைஞ்சு கல்யாணத்துல முடிஞ்சிடுச்சுன்னு விஷாகனை வேணுமின்னே வைச்சு செய்யுறிங்களா என்ன…?
அவனும் எவ்வளவு தான் நடிப்பான்… வலிக்காத மாதிரியே…? ஆனாலும் இது
டூ மச் தான்ங்க..? அவங்க ரெண்டு பேரையும் சீக்கிரம் சேர்த்து வைங்க… இல்லைன்னா கொலை காண்டாகிடுவோம்…
யார் மேலயா…?
அட உங்க மேலத்தான்….!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super. Sema twist. If shali meets vishakan. She will break and understand him. Waiting for that wonderful moment. Intresting
👌👌👌
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super unamaiyila intha sugirthan Avan Kasai ennathan panran end la aanal? Paarpom
Vishagan ippo than ooruku polam nu nenachan aana athukula enna aagi irukum
super epi . yen virushali ippadi phone panitu pesama irukura vishakan ketathuku pathil sollu nee pesalanalum avan intha vishayathuku santhosa paduran avana patha nee thanga mata pesuva . una paka kelamburan aana sisy etho twist kodukuranga pola
Ena aanal nu ilukurenga sis oruvela shali inga kilampi varala?
Spr going 👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
மூத்த பிள்ளையாய் பிறந்தாலும் பொறந்தான். அவன் படும் பாட்டு கொஞ்ச நஞ்சமல்ல