Skip to content
Home » நீயென் காதலாயிரு-24(pre-final)

நீயென் காதலாயிரு-24(pre-final)

அத்தியாயம்-24 

   இந்திரஜித் ப்ரியாவிடம் பேசிவிட்டு எழ, அவளோ “ப்ளீஸ் இந்தர் புரிஞ்சுக்கோ” என்று கூற, “எப்ப பேசினாலும் விதண்டாவாதமா டி. சரின்னு ஒரு வார்த்தை சொல்ல என்னவாம்?” என்றான்.

    கவிதா அத்தையிடம் இந்திரஜித் அமர்ந்து பேச நினைக்கும் நேரம், அவர்களாகவே இந்தரை தேடி வந்தார்கள். 

   “வாங்க தம்பி, ஆபிஸ்கு லீவு போட்டுட்டு வந்ததா அண்ணி சொன்னாங்க.” என்று கவிதா பேசவும், “ஆமா அத்தை. சந்தோஷ் என்னோட பெஸ்ட் பிரெண்ட் அவன் கல்யாணமாச்சே. அதோட தர்ஷினியை பார்க்காம இருக்க முடியலை‌. ஓடி வந்தாச்சு” என்றான். ஒளிவுமறைவின்றி.
  
     ‘கேட்டா கேட்டதுக்கு பதில் சொல்லணும். இவன் ஏன்‌ தான் முடிக்கிறப்ப என்னை கோர்த்து பேசறானோ’ என்று ப்ரியா முறைத்தாள்.

   கவிதா மகளை பார்த்து சன்னமாய் புன்னகைத்து, “அப்பறம் தம்பி, கொஞ்ச நாள் நேரம் கேட்டிருந்திங்க. நானும் யமுனா பிரசவம் குழந்தைக்கு பெயர் வைக்கிறதுன்னு முடியவும் பேசறது இருந்தேன்.” என்று ஆரம்பிக்கவும், ப்ரியதர்ஷினி போல திருமணத்தை தள்ளி வைக்க கேட்கின்றாறோ என்று வாடினான்.

   ப்ரியதர்ஷினியை அதட்டி உருட்டி பேசிடலாம். தாய் தந்தையிடம் இறுதியாக தன்‌முடிவை உரைத்தாலும் அவர்கள் தலையிடமாட்டார்கள். ஆனால் கவிதா அத்தையிடம் மறுக்க முடியாதே என எண்ணினான்.
 
   கவிதாவோ “சொன்ன மாதிரி கல்யாணத்தை சென்னையில வச்சிடலாம் தம்பி‌. நீங்க நாள் கிழமை என்னனு சொன்னா, என்னால முடிஞ்சதை என் மகளுக்கு செய்ய முடியும்” என்று பேசவும், “ம்மா… சும்மாயிருக்கியா? யமுனாவுக்கு ஆப்ரேஷன் செலவு, ஈஸ்வரனுக்கு பெயர் சூட்டு விழானு செலவு ஏறியிருக்கு. அதெல்லாம் முடியட்டும்‌ பிறகு கல்யாணத்தை பார்க்கலாம்” என்று குரல் உயர்த்தினாள்.‌

   கவிதாவோ மகளின் வார்த்தையை செவிமடுக்காமல், “அவ பேசறதை கேட்க முடியாது தம்பி. செலவு ஒன்னு மாத்தி ஒன்னு வந்துட்டு தான் இருக்கும்‌. அதுக்காக வயசு பிள்ளையை வீட்லயே வச்சிட்டு இருக்க முடியுமா?

  கல்யாணம் ஒரு மாசத்துல, உங்களுக்கு தோதுவான மண்டபத்துல, தோதுவான ஏரியாவுல வையுங்க. என்னால் முடிஞ்சதை செய்துடறேன்.

   ஏற்கனவே வீட்டுக்கு பின்னாடி கொஞ்சம் இடமிருக்கு. கிணறு இருப்பதால, இத்தனை நாளா செடி கொடி மரம்னு செழிப்பா இருக்கும். அதை வித்துட்டு அந்த பணத்துல ப்ரியா கல்யாணத்துக்கு செலவுக்கு சரியாக இருக்கும். ஏதோ எங்களாலல முடிஞ்சது.” என்று பேசினார்.‌

‌ “அய்யோ அத்தை எதையும் விற்க வேண்டாம்” என்று இந்திரஜித் மறுக்கும் நேரம், “இல்லைங்க தம்பி… பெரியவளுக்கு இருபது சவரன் பேசினோம். பேசியபடி நகைப்போட்டு கட்டி கொடுத்தோம்.

   பெரிய மாப்பிள்ளை மாத வருமானம் உங்களை விட குறைச்சல் தான். ஆனாலும் இருபது பவுன் போட்டு முடிச்சது.
   நீங்க ஐடீயில் வேலை பார்க்கறவரு. எப்படியும் ஐம்பது அறுபது நகை போட்டு, ஏன் அதை விட கூடுதலாக கூட பெரிய இடமா சென்னையில பொண்ணு கிடைக்கும்.

  எங்க ப்ரியாவை பிடிச்சிருக்குன்னு நீங்க நகை பணத்தை பார்க்காம இருக்கலாம். ஏதோ இப்ப பதினைந்து அவளுக்குன்னு வாங்கியது இருக்கு. என்னோட இந்த தோட்டத்து வீட்டு பக்கம் வித்து வர்றதுல கல்யாண செலவு போக மீதி அப்படியே ப்ரியாவுக்கு தான். இரண்டு பொண்ணுக்கும் ஒரே மாதிரி முடிச்சி, கடன் எல்லாம் அடைஞ்சிடுவேன்‌.” என்று பேச பேச “அதெல்லாம் வேண்டாம் அத்தை. எனக்கு ப்ரியா மட்டும் போதும்” என்றவனின்‌ கூற்றை கவிதா செவிமடுக்கவில்லை.

   “ஊரும் உலகமும் என் மகளை எதுவும் சொல்லிடக்கூடாது. இதுக்கு சம்மதம்னா கல்யாணம் ஒரு‌ மாசத்துல முடிங்க தம்பி. பக்கத்து வீட்டுல இருப்பவர்களே அந்த இடத்தை வாங்கிக்கறதா சொல்லிருக்காங்க. நான் அவங்களிடம் அதெல்லாம் பேசிட்டேன்‌. எத்தனை நாளைக்கு தான் ப்ரியா வுமன்ஸ் ஹாஸ்டல்ல இருந்து உங்க வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருப்பா. அவளும் மொத்தமா உங்களோடவே இருக்கட்டும்.” என்று கவிதா முடித்தார்.

   இந்திரஜித்தோ ப்ரியாதர்ஷினியை பார்த்து, கவிதா அத்தையின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, “சரிங்க அத்தை. நீங்க சொல்லறப்படி பண்ணிடலாம்” என்று கூறினான்.

  ப்ரியதர்ஷினியோ “எல்லாத்தையும் கொடுத்துட்டு மத்த செலவுக்கு என்ன பண்ணுவிங்க. எல்லாம் உன்னாலடா. நீ என் லைப்ல வந்திருக்கவே கூடாது” என்று இந்தரை திட்டி அழுதாள்‌‌.

   ஏதோ திருமண விவகாரம் பேசும் முன்னரே இந்திரஜித்-ப்ரியா தனியாக பேச என்று, ஓரமாய் நகர்ந்த இடமென்பதாலும், கல்யாணத்திற்கு வந்தவர்களில் பாதிப்பேர் பந்திக்கு சென்றதாலும், அருகே குட்டி குட்டி பிள்ளைகள் மட்டுமே சாக்லேட் திண்று பூவை பிய்த்து விளையாடியபடி இருந்தார்கள்.

   “ப்ரியா என்ன இது. மட்டு மரியாதை இல்லாம ‘டா’ போட்டு பேசற வழக்கம்? யார் சொல்லி கொடுத்தா? மன்னிப்பு கேளு.

   இன்னிக்கு இல்லைனாலும் என்னைக்காவது எல்லாம் வித்து தான் ஆகணும். எதையும் விற்காம எதுவும் செய்ய முடியாது.

   இதெல்லாம் முன்னவே யோசித்தது தான். நீ சந்தோஷை கல்யாணம் செய்வ, உங்க அக்காவுக்கு கிணற்று பக்கம் இருந்த இடத்தை வித்து பைசல் பண்ணிட்டு உனக்கு வீடு எழுதி வைக்கணும் இருந்தேன்‌.

   துரைசிங்கம் அண்ணா உன் மேல இருந்த கோபத்திலும், ஆறுமுகம் அத்தானுக்கு எங்க வீட்ல யமுனா கல்யாணம் முடிந்தது. இப்ப சந்திரா கல்யாணம் முடிந்தது. அதனால அவங்க வீட்ல விலாசினியை கல்யாணம் நடத்த ஆசைப்பட்டாங்க.
  பொண்ணு எடுத்து பொண்ணு‌ கொடுக்க முடிவு செய்யவும் பானுமதி அண்ணி உடனே கல்யாணமா, இப்ப தானே சந்திராவுக்கு முடிச்சதுனு யோசித்தாங்க. ஆனா அவங்க வீட்ல ஒருத்தருக்கு ஒருத்தர் நகை நட்டு பத்தி பொறுமையா பார்த்துக்கலாம், மண்டபம் பிடிச்சி ஒன்னா முடிப்போம்னு இந்த குறிப்பிட்ட மாசத்துல முடிச்சாங்க.

   அவங்களுக்கு இரண்டு பக்கமும் ஆம்பள பசங்க இருக்காங்க. இங்க அப்படியில்லை. ஆனாலும் ப்ரியாவை நான் ஆம்பள பிள்ளைக்கு நிகரா தான் வளர்த்து விட்டேன்.‌

இப்ப யமுனாவுக்கு வளைகாப்பு பிரசவ செலவு, அவ பிள்ளைக்கு பெயர் வைக்கிற விழா, இதுல ஏற்கனவே பேலன்ஸ் ஐந்து சவரன்.  எல்லாம் இவ சம்பாரிச்சு காசு. யமுனா தான் தங்கச்சிக்கு இனியாவது நல்லது பண்ணி கல்யாணம் செய்து கொடுங்கம்மா‌. இன்னும் என்னையே பார்ப்பிங்களானு கேட்டது‌.

   அது மட்டுமில்லை சந்தோஷ் வேற என்னிடம் சொல்லிட்டான். ப்ரியா  இனி வேலைக்கு போனாலும் அந்த பணத்துல கொஞ்சம் எனக்கு தரணும்னு உங்களிடம் சொல்ல நீங்களும் உன்‌ இஷ்டம்னு சொன்னிங்களாம்.” என்றதும் “அது வந்து அத்தை… நான் என்‌ அப்பா அம்மாவுக்கு கொடுப்பது போல உங்களுக்கு அவ கொடுப்பா.‌ இதுல தப்பில்லை. அவ உழைப்பு அவ அம்மாவுக்கு கொடுக்கறதுல பிற்காலத்துல கணவனாக நான் தடுக்கறதுல நியாயம் இல்லையே‌.” என்று இந்தர் மொழிந்தான்.

    மகளை பார்த்து கவிதாவோ, “இப்படி பேசற மாப்பிள்ளையை, இன்னமும் அவரை கட்டிக்காம ஏன் கெஞ்ச விடற? பொம்பளை பிள்ளைங்களை பெத்தா பெத்தவங்க கூடவே வச்சிக்க முடியாது‌. ஏன் ஆம்பளை பிள்ளைங்களே இப்ப எல்லாம் தனிக்குடித்தனம் தான் போறாங்க. பெரும்பாலும் அப்பா அம்மா தனியா தான் இருக்காங்க. என் வாழ்க்கையை பத்தி யோசிக்காத. நான் தனியா இருந்தாலும் என்னை பார்த்துப்பேன்.

   திருச்சி விட்டு நீ சென்னைக்கு போனப்பவும் நான் தனியா தான் இருந்தேன். அப்ப எல்லாம் யோசிச்சியா?” என்று கூறவும் ப்ரியதர்ஷினி அன்னையை கண்டு மூக்குறிந்தாள்.
  
   “இப்பவும் அப்படியே நினைச்சிக்கோ.

   மாப்பிள்ளை நல்லவரா இருக்கார். காதலிச்ச பொண்ணை தாலி கட்டி கூட வச்சிக்க ஆசைப்படறவரை முறைக்கற, டா போட்டு பேசற, எல்லா மாத்திக்கோ. இன்னும் ஒரு‌மாசத்துல உங்களுக்கு கல்யாணம்.

  இவ்ளோ நேரமா சம்பந்தியிடம் நாளெல்லாம் பேசி முடிச்சாச்சு.” என்றதும் ப்ரியதர்ஷினி அன்னையை ஏறிட்டாள்.

   இந்திரஜித் தன் மாமியார் பேசுவதை கேட்டு அமைதியாக வேடிக்கை பார்த்தான். அவர்கள் மனதிற்கு எப்படி ப்ரியதர்ஷினியை தன்னிடம் ஒப்படைக்க விருப்பமோ அப்படியே செய்யட்டுமென்று இருந்தான். அதனால் அவர்கள் பேசுவதில் உள்ளே நுழையவில்லை. இந்த சினிமா பாணியில் எனக்கு உங்க பொண்ணு‌ மட்டும் வேண்டும் என்றோ, வீட்டை விற்காதீர்கள் என்றோ, எதுவும் மறுக்கவில்லை.

அவனுக்கு கவிதா அத்தையை பற்றி புரிந்ததால் அவர்கள் மனதிருப்திக்கு செய்வதை செய்யட்டும் என்று நின்றான்.

   இதற்கு மேல் மறுத்து விட்டால், கவிதாவிற்கு வெறும் கையோடு மகளை அனுப்பியதாக அவர்கள் மனம் எண்ணும். எதற்கு அவர்கள் ஆசை கெடுப்பானேன்.

  மாப்பிள்ளை ஆனப்பின் மற்றதை பார்ப்போமென இருந்து கொண்டான்.

     “சம்பந்தி…. நேரமாகுது சின்ன சம்பந்தி(கற்பகம்) சாப்பிட போங்கன்னு இரண்டு மூன்று முறை சொல்லிட்டாங்க. இன்னும் தாமதிச்சா தட்டுல இலை போட்டு இங்கயே கொண்டு வந்துடுவாங்க” என்றதும், “பேசிட்டே இருந்துட்டேன் அண்ணி. வாங்க சாப்பிடலாம்” என்று பந்தி பரிமாறும் இடத்திற்கு நடந்தார்கள்.‌

     படிக்கட்டில் மெதுவாக செல்ல, இந்திரஜித் ப்ரியதர்ஷினியை பார்த்து ஒவ்வொரு படியில் அடியெடுத்து வைத்தான்.‌‌

     அவளது கண்மை கலைந்து இருக்க, தன் கைக்குட்டையால் எடுத்து அவளது கருமையை களைந்தான்.

   ப்ரியதர்ஷினியோ அவனது செய்கையில் பொசுக்கென்று அருவியை பொழிய, “அழுதா கிஸ் பண்ணிடுவேன்” என்று சத்தமின்றி உரைத்தான் இந்தர்.

   ப்ரியதர்ஷினியோ சுற்றி முற்றி பார்த்து, அவன் நெருங்கி நிற்க தள்ளிவிட்டு, ‘ஆளை பாரு ஆளை’ என்று முனங்கி ஓடினாள்.

  லேசான குறும்பு சிரிப்போடு அவள் பக்கத்தில் அமர்ந்து, ‘அந்த பயமிருக்கட்டும்’ என்று இலையில் பிரட் அல்வாவை விழுங்கினான்.

   யமுனா வீட்டில் அவளது மாமியார் மாமனார், கணவரென உணவு உண்டு முடித்து, கையில் ஈஸ்வரனை ஏந்தி வந்தார்கள். அவர்கள் கீழே செல்வதாக கூறி நடந்தார்கள்.

   அதன் பின் உணவுண்ணும் போது ‘எனக்கு இந்த உணவு பிடிக்காது என்று இந்தர் அவள் இலைக்கும், அவளுக்கு பிடிக்காத உணவுகள் இந்தரின் இலைக்கும் மாறியது.

   சித்ரா-மோகனை போல கவிதாவும் இவர்களின் சேட்டை பிடித்த காதலை கண்டும் காணாதது போல பார்த்து மகிழ்ந்தார்.

   கீழே இறங்கும் போது “ஒரு கிஸ், ஒரு ஹக் கிடைக்கும்னு ஆசையா வந்தேன் டி. இப்படி கல்நெஞ்சக்காரியா இருக்கியே” என்று பெற்றவர்களை முன்னே அனுப்பிவிட்டு அவள் செவிமடலருகே கிசுகிசுத்தான்.‌

“அதான் ஆசைப்பட்டபடி ஒரு மாசத்துல கல்யாணத்தை பண்ணிக்க போறியே. இன்னும் ஏன்டா நல்லவனா நடிக்கிற. எங்கம்மா வாயால கட்டி கொடுக்க வச்சிட்ட, உன் காட்டுல மழை” என்று நடந்தாள்.

   பீடாவை மென்றபடி வந்த ப்ரியாவை, இந்தர் நின்று நிதானமாக பார்வையிட்டு, அவளது சேலையணிந்த உடலில் வெளிச்சமிட்டு காட்டிய இடையில் நன்றாக கிள்ளி திருகினான்.

   “ஆஹ்.. அவுச் அம்மா.” என்று அலறிய அடுத்த கணம் படிகளில் திபுதிபுவென இறங்கியிருந்தான் இந்திரஜித்.

   சிசிடிவி இல்லையென்றதும் தன் இடையை தேய்த்தபடி அவனை கொலைவெறியில் திட்டிக்கொண்டு வந்தாள் ப்ரியதர்ஷினி.

கீழே யமுனாவின் உடல்நிலையாலும், அவளது அத்தை மாமாவிற்கும் மொய் கொடுத்து கிளம்புவதில் இருக்க, இந்திரஜித்திடம் ராஜா குடும்பத்தினர் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அதனால் இந்திரஜித்-ப்ரியா குடும்பமும் புகைப்படம் எடுத்து தாங்களும் செல்வதாக சந்தோஷிடம் தெரிவித்தார்கள். சந்தோஷம் இந்திரஜித், ப்ரியாவை கட்டாயப்படுத்தவில்லை.

  அங்கே மிகவும் நல்லவனாக வழியனுப்பும் செயலை செவ்வென செய்தவனை கண்டு முகத்தில் புரண்ட சிகையை செவிமடலருகே ஒதுக்கி, வந்து அக்கா குடும்பத்தை வழியனுப்பி, அவர்களும் கிளம்புவதாக கற்பகம்-ஆறுமுகத்திடம் நின்றார்கள்.

    பானுமதி-துரைசிங்கமோ “சாப்பிட்டாச்சா?” என்று திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை போல கேட்கும் நிலைக்கு ஆளாகியதில் லேசான வருத்தம்.
  “கிளம்பறோம் அத்தை” என்றாள் ப்ரியா.
‘இருந்து போகலாமே’ என்று கூறுவதற்கு அருகதையின்றி நின்றார்கள் துரைசிங்கம் பானுமதி.

கடந்த முறை ப்ரியா அழுதவாறு திருமண மண்டபத்திலிருந்து அனுப்பியதற்கு இந்த முறை இருக்க கூறவும் முடியாத வருத்தத்தில் இருந்தார்.

   உறவுகளில் உடைந்ததாலும்‌ ஒட்டுதல் உண்டாகும். ஆனால் முன்பு போல விரிசலோடு பிம்பத்தை காட்டும் கண்ணாடியாக. அதனால் மனதில் வலியை மறைத்து கொண்டு‌, ரிட்டர்ன் கிப்ட் தாம்பூலம் பை இரண்டும் பெற்று கொண்டு கிளம்பினார்கள்.‌
 
   “சந்தோஷிடம் சொன்னிங்களா?” என்று‌ ப்ரியா அதட்ட, அதெல்லாம் மேடையிலயே சொல்லிட்டேன்.” என்று இந்திரஜித் ப்ரியா கையை பிடித்து நடந்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

6 thoughts on “நீயென் காதலாயிரு-24(pre-final)”

  1. Avatar

    இந்தர்க்கு….ஒரே சந்தோசம் பா…சந்தோஷ் கல்யாணத்துக்கு வந்திட்டு….அவனோட கல்யாணம் முடிவு ஆகிடுச்சே….😆😆…
    மாமியார் …. இந்தர்க்கு ஏத்த மாதிரியே பேசுறாங்க….🤭
    இந்தர்க்கு செம்ம ஜாலி தான் போங்க….
    கல்யாணம் பண்ணிட்டு அவளை இன்னும் என்னென்ன அலப்பறை எல்லாம் பண்ண போறானோ….🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ பாவம் பிரியா….🤠🤠🤠

  2. Avatar

    Super sis nice epi 👌👍😍 Priya Amma soldradhu correct dhan pa avanga manasa purinji nadakanum indhar un kaatula mazhai dhan da kalkku 🥰😘

  3. Avatar

    இந்தர் உன் காட்டுல மழை தான் போ ம்ம் என்ஜாய் கல்யாணம் செய்து என்ன பண்ண போகின்றயோ இப்போதே உன் அலம்பல் தாங்க முடியாமல் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *