Skip to content
Home » நீயென் காதலாயிரு-25

நீயென் காதலாயிரு-25

அத்தியாயம்-25   இந்திரஜித் ப்ரியதர்ஷினி திருமணம் என்று சந்தோஷ் திருச்சியிலிருந்து வேன் ஏற்பாடு செய்திருந்தான்.‌   திருமணத்திற்கு கற்பகம் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை வைக்க, அங்கேயிருந்த சந்தியாவிடமும் பொதுவாய் “கல்யாணத்துக்கு வந்திடும்மா” என்று கூறினார் கவிதா.     ‘அதெல்லாம் மாப்பிள்ளை சந்தோஷ் வண்டி அரேஜ் பண்ணிருக்கார் வந்துடுவோம்’ என்று ஆறுமுகம் வாக்கெல்லாம் தந்தார். திருமணத்திற்கு கிளம்பும் நேரம் கண்ணனிடம் ‘நம்ம நாளைக்கு போகலாம். இந்த கும்பல்ல போகணுமா?” என்று கொஞ்சினாள். கண்ணனோ “இன்னிக்கு கும்பல்னு சொல்லி தப்பிப்ப, நாளைக்கு வயிற்று வலினு சொல்லி கல்யாணத்துக்கு போகாம இருப்ப. அப்படிதானே சந்தியா?” என்றதும் சந்தியா திடுக்கிட்டாள்.‌   சந்தியா அவளது தோழியிடம் ப்ரியா கல்யாணத்துக்கு எல்லாம் நான் போக மாட்டேன்.‌’ என்று கூறியதை கண்ணன் கேட்டிருந்தான். ‌ “என் தங்கச்சி‌ விலாசினியிடம் ‘என்ன சந்தோஷ் மச்சான் முன்ன எல்லாம் சந்தியாவிடம் பாசமா பேசுவார். இப்ப எல்லாம் அவளிடம் பேச மாட்டேங்கிறார்னு’ கேட்டேன் விலாசினி நடந்ததை என்னிடம் சொல்லிட்டா.    ப்ரியா மேல பழிசுமத்தி நீ பண்ணின தில்லாலங்கடி எல்லாம் தெரிந்துடுச்சு.” என்றான்.‌ சந்தியாவோ பயந்து கையை பிசைந்து நின்றாள்.   வீட்டில் தான் செய்த காரியத்தால் அண்ணன் அடியோடு முகம் திருப்பி விட்டான். அம்மா அப்பா ஓரளவு தன்னை மன்னித்து ஏற்று பழகுகின்றார்கள். காரணம் அவர்களும் தவறு செய்தனர் அதனை ப்ரியா மன்னித்துவிட்டாளாம். ‘மன்னிப்பது தவறல்ல’ என்று அதற்கும் ப்ரியாவை தான் முன்னிருத்தினார்கள்.  இன்று தான் விரும்பிய கண்ணன் வெறுத்தால்? சந்தியா பயந்தாள்.    அவனோ ‘உனக்கு அவளை இன்னமும் பிடிக்கலைனா கல்யாணத்துக்கு நீ வரவேண்டாம்.   நான் உன்னை கோச்சிக்க மாட்டேன்.‌ தலைவலியும் வயிற்று வலியும் அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியும். நீ என்ன உளைச்சலில் இருந்தியோ.‌ ஆனா நீ எல்லாத்தையும் மறந்து வந்தா, இலையுதிர் காலத்துல இலைகள் சிதைந்து, திரும்ப துளிர்க்கிற மாதிரி உறவுகளும் நல்லபடியா அமையும். ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ இது ப்ரியாவுக்கு தெரியும். நீயும் தெரிந்துக்கோ தப்பில்லை‌.    இப்பவும் ப்ரியாவை வச்சி முன்னுதாரணமாக பேசினாலும். எனக்கு என் சந்தியா மனசு தான் முக்கியம். நீ எப்பவும் ஸ்பெஷல்” என்று கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டு பேசி அகன்றான். அதன் பிறகும் மாறாமல் இருக்க சந்தியா என்ன படையப்பா நீலாம்பரியா?, ப்ரியதர்ஷினி திருமணத்திற்கு கண்ணனோடு கை கோர்த்து வந்துவிட்டாள்   ப்ரியா அவளது அக்கா யமுனா எல்லாம் ஏற்கனவே மண்டப ஹாலிற்கு பக்கத்தில் ரூம் புக் செய்து இருந்துக் கொண்டனர்.    விசாலாட்சி மண்டப வாடகை எவ்வளவு? இந்த ரூம் வாடகை என்ன என்று குடைந்தெடுக்கவில்லை..‌‌‌”அதெல்லாம் வரவு செலவு சின்ன மாப்பிள்ளை சொல்லலை சம்பந்தி. உங்க குடும்பம் நல்லபடியா வந்து கலந்துக்கணும்னு பார்த்து பார்த்து செய்யறார்.‌” என்றார் கவிதா.‌    தங்களுக்கு குறைவாக செய்து மற்றவருக்கு அதிகம் என்றால் மல்லுக்கு நின்றிருப்பார். இன்றோ ப்ரியா அனைத்தும் நல்லவிதமாக செய்முறை செய்தப்பின் எதுவும் கூறமுடியுமா? சின்ன பொண்ணு என்னவோ அதிர்ஷ்டம் செய்திருக்கா. உங்களுக்கு செலவு இல்லாம பண்ணிட்டா” என்று ஆரம்பித்தார்.   “அப்படியெல்லாம் இல்லைங்க சம்பந்தி‌. என் இரண்டு பொண்ணுமே கொடுத்து வச்சவங்க தான்.‌ பெரியவளுக்கு என்ன செய்தேனோ அதை தான்‌ சின்னவளுக்கும் செய்யறேன்.” என்று பதில் தந்தார்.‌‌‌ விசாலாட்சி ரத்னவேலு சென்னையில் திருமணம் என்றதற்கு ‘பொண்ணு வீடு இங்க வச்சிட்டு அங்க கல்யாணம் செய்யறது நம்ம முறையில்லையே’. என்று முதலில் கேட்டதற்கு, ‘அதெல்லாம் யமுனா திருமணத்தை எனக்கு வேலை வைக்காம உங்க இஷ்டப்படி, நல்லபடியா செய்தது போல இப்ப இந்த சம்பந்தியும் எனக்கு சின்ன கஷ்டமும் கொடுக்கலை. எனக்கு கிடைத்த இரண்டு சம்பந்திங்களும் ரொம்ப பெருந்தன்மையானவர்கள்” என்று கவிதா கூறவும் விசாலாட்சி ரத்னவேலு பெருந்தன்மையை பாதுகாத்துக்க முடிவு செய்திருக்க வேண்டும்.    ரிஷப்ஷன் திருமணம் என்று இந்திரஜித் தன்னவளை கண்ணுக்குள் தாங்கினான் என்று கூறலாம். இதோ அவள் கண்ணில் குங்குமம் பட்டு கலங்க, தன் கைக்குட்டையால் மெல்லமாய் துடைத்து எடுத்தான். எப்பவும் போல செவிமடலருகே, “முதல் தடவை உன்னை நேர்ல பார்த்தது கல்யாண மண்டபத்துல, அப்ப நம்ம திருமண நாள் எப்ப வரும் ஏங்கினேன். ஏங்கின நல்ல நாள் இப்ப வந்துடுச்சு.   ஐ ஆம் சோ ஹாப்பி தர்ஷினி.என்ன ஒரு குறை. இந்த கிறிஸ்டியன் மேரேஜ்ல, சர்ச்ல மேரேஜ் முடியவும் கப்பீள்ஸ் ஒரு‌ கிஸ் கொடுத்துப்பாங்க. அந்த மாதிரி நம்ம வழக்கத்தில இல்லை.   நாம வேண்ணா புதுசா‌ உருவாக்கலாமா? கிஸ் பண்ணவா?” என்றவன் பார்வை ப்ரியதர்ஷினி உதட்டில் நிலை பெறவும், சடுதியில் அவனிடமிருந்து தள்ளி பின்‌நகர்ந்தாள்.   “என்னாச்சு என்னாச்சு?” என்று மற்றவரின் குரலில் “கண்ணுல கர்ச்சீப் படவும் பின்னாடி வந்துட்டன்” என்று சமாளித்தாள்.   இந்திரஜித்தோ குறும்பாய் புன்னகையோடு ‘நல்லா சமாளிக்கற’ என்றான் பார்வையும் தலையாட்டலுமாய்.    ‘இவனை… தனியா கவனிச்சுக்கறேன்.’ என்றவள், ‘இப்பவே இப்படி இருக்கானே, இன்னிக்கு நைட் என்னன்ன ரகளையை இழுப்பானோ.’ என்றவளின் எண்ண ஊர்வலத்தில், வெட்கமும் குடிக்கொண்டது.   மோகனோ ‘அம்மா ப்ரியா அன்வர் பாய் வந்திருக்கார்.’ என்று சுட்டிக்காட்ட, “வாங்க சார்” என்று மனதார வரவேற்றாள்.   “அல்லா உன் மனசுக்கு பிடிச்ச‌ வாழ்க்கையை கொடுத்திருக்கார். நீ நல்லா வாழ்வமா. மாஷா அல்லா” என்று வாழ்த்தினார்.‌   கவிதாவிற்கு மகளின் வாழ்வில் நல்ல மனிதர்களை பெற்றிருப்பதை எண்ணி பூரித்தார்.   அதன் பின் வேலை பார்த்த இடத்திலிருந்து மதுவும் வந்திருந்தாள். இந்த பக்கம் சுதா வந்திருந்தாள். சொந்த பந்தங்களை கண்டு ஒதுங்காமல் சித்ராவோடு மலர்ந்த முகமாய் வந்தவரை வரவேற்று உபசரித்தார்.    திருமணம் என்பது பணத்தை செலவழித்து, சொந்த பந்தகளை திரட்டி, கலாச்சாரம் பண்பாட்டின் முறையை பாதுகாத்து அவரவர் சடங்கை மனதார ஏற்று சந்தோஷமாய் சில சங்கடங்களும் கலந்து ஏற்பட்டாலும் நிறைவில் அந்த மஞ்சள் அரிசி, பூக்கள் தூவலும் ஆசீர்வாதமாக பெற்று, பொன் தாலி அணிவித்து இன்னாருக்கு இன்னாரென கடவுள் போட்ட முடிச்சில் கைகளை பிணைத்து, அந்த வாழ்வில் இன்பம், துன்பம், சண்டை சச்சரவு, ஈகோவை விட்டுக்கொடுத்தல், இறுதியில் ‘உனக்கென நான் எனக்கென நீ’ என்று வாழ்வதெல்லாம் வரம்.    எல்லோருக்கும் வரத்தை தக்க வைத்து கொள்வதில் தான்‌ சிக்கல்.  ஏனெனில் காதல் திருமணமோ, பெற்றவர் பார்த்து நடத்தி முடிக்கும் திருமணமோ இரண்டுமே, நேசத்தோடு ஆரம்பிக்கும். சில நாளில் நேசம் உயிரற்று கடமையாக மாறிவிடும். ஆனால் நேசம் கலந்த காதல் இறுதிவரை உறுதியாக இருந்தால், வரம் கொண்ட வாழ்வு வானவில்லாய் அமையும்.    நிச்சயம் இந்த காதல் தம்பதியர்கள், ‘நீயென் காதலாயிரு’ என்ற கொள்கையில் விலக மாட்டார்கள். அதன் காரணமாக இந்திரஜித்-ப்ரியதர்ஷினி வாழ்வு இன்று போல் என்றும் நேசம் கொண்டவராக, உதாரண தம்பதியராக இருப்பார்கள்.‌           💝சுபம்💝    ‌‌       -பிரவீணா தங்கராஜ் கதைக்களுகாகான கருத்துக்களை காண ஆவலாக இருக்கின்றேன். வாசகர்களே உங்க ரிவ்யுவை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரவீணா தங்கராஜ்.‌பை…பை‌…..😘😘 உங்க ஆதரவும் அன்பும் மட்டுமே தொடர்ந்து எழுத உத்வேகம் கொடுக்கின்றது. நன்றி. 

அத்தியாயம்-25

   இந்திரஜித் ப்ரியதர்ஷினி திருமணம் என்று சந்தோஷ் திருச்சியிலிருந்து வேன் ஏற்பாடு செய்திருந்தான்.‌

   திருமணத்திற்கு கற்பகம் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை வைக்க, அங்கேயிருந்த சந்தியாவிடமும் பொதுவாய் “கல்யாணத்துக்கு வந்திடும்மா” என்று கூறினார் கவிதா.

    ‘அதெல்லாம் மாப்பிள்ளை சந்தோஷ் வண்டி அரேஜ் பண்ணிருக்கார் வந்துடுவோம்’ என்று ஆறுமுகம் வாக்கெல்லாம் தந்தார். திருமணத்திற்கு கிளம்பும் நேரம் கண்ணனிடம் ‘நம்ம நாளைக்கு போகலாம். இந்த கும்பல்ல போகணுமா?” என்று கொஞ்சினாள்.

கண்ணனோ “இன்னிக்கு கும்பல்னு சொல்லி தப்பிப்ப, நாளைக்கு வயிற்று வலினு சொல்லி கல்யாணத்துக்கு போகாம இருப்ப. அப்படிதானே சந்தியா?” என்றதும் சந்தியா திடுக்கிட்டாள்.‌

   சந்தியா அவளது தோழியிடம் ப்ரியா கல்யாணத்துக்கு எல்லாம் நான் போக மாட்டேன்.‌’ என்று கூறியதை கண்ணன் கேட்டிருந்தான்.

‌ “என் தங்கச்சி‌ விலாசினியிடம் ‘என்ன சந்தோஷ் மச்சான் முன்ன எல்லாம் சந்தியாவிடம் பாசமா பேசுவார். இப்ப எல்லாம் அவளிடம் பேச மாட்டேங்கிறார்னு’ கேட்டேன் விலாசினி நடந்ததை என்னிடம் சொல்லிட்டா.

   ப்ரியா மேல பழிசுமத்தி நீ பண்ணின தில்லாலங்கடி எல்லாம் தெரிந்துடுச்சு.” என்றான்.‌ சந்தியாவோ பயந்து கையை பிசைந்து நின்றாள்.
  வீட்டில் தான் செய்த காரியத்தால் அண்ணன் அடியோடு முகம் திருப்பி விட்டான். அம்மா அப்பா ஓரளவு தன்னை மன்னித்து ஏற்று பழகுகின்றார்கள். காரணம் அவர்களும் தவறு செய்தனர் அதனை ப்ரியா மன்னித்துவிட்டாளாம். ‘மன்னிப்பது தவறல்ல’ என்று அதற்கும் ப்ரியாவை தான் முன்னிருத்தினார்கள்.
  இன்று தான் விரும்பிய கண்ணன் வெறுத்தால்? சந்தியா பயந்தாள்.
   அவனோ ‘உனக்கு அவளை இன்னமும் பிடிக்கலைனா கல்யாணத்துக்கு நீ வரவேண்டாம்.

   நான் உன்னை கோச்சிக்க மாட்டேன்.‌ தலைவலியும் வயிற்று வலியும் அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியும். நீ என்ன உளைச்சலில் இருந்தியோ.‌ ஆனா நீ எல்லாத்தையும் மறந்து வந்தா, இலையுதிர் காலத்துல இலைகள் சிதைந்து, திரும்ப துளிர்க்கிற மாதிரி உறவுகளும் நல்லபடியா அமையும். ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ இது ப்ரியாவுக்கு தெரியும். நீயும் தெரிந்துக்கோ தப்பில்லை‌.

   இப்பவும் ப்ரியாவை வச்சி முன்னுதாரணமாக பேசினாலும். எனக்கு என் சந்தியா மனசு தான் முக்கியம். நீ எப்பவும் ஸ்பெஷல்” என்று கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டு பேசி அகன்றான். அதன் பிறகும் மாறாமல் இருக்க சந்தியா என்ன படையப்பா நீலாம்பரியா?, ப்ரியதர்ஷினி திருமணத்திற்கு கண்ணனோடு கை கோர்த்து வந்துவிட்டாள்

   ப்ரியா அவளது அக்கா யமுனா எல்லாம் ஏற்கனவே மண்டப ஹாலிற்கு பக்கத்தில் ரூம் புக் செய்து இருந்துக் கொண்டனர்.

   விசாலாட்சி மண்டப வாடகை எவ்வளவு? இந்த ரூம் வாடகை என்ன என்று குடைந்தெடுக்கவில்லை..‌

‌‌”அதெல்லாம் வரவு செலவு சின்ன மாப்பிள்ளை சொல்லலை சம்பந்தி. உங்க குடும்பம் நல்லபடியா வந்து கலந்துக்கணும்னு பார்த்து பார்த்து செய்யறார்.‌” என்றார் கவிதா.‌

    தங்களுக்கு குறைவாக செய்து மற்றவருக்கு அதிகம் என்றால் மல்லுக்கு நின்றிருப்பார். இன்றோ ப்ரியா அனைத்தும் நல்லவிதமாக செய்முறை செய்தப்பின் எதுவும் கூறமுடியுமா? சின்ன பொண்ணு என்னவோ அதிர்ஷ்டம் செய்திருக்கா. உங்களுக்கு செலவு இல்லாம பண்ணிட்டா” என்று ஆரம்பித்தார்.

  “அப்படியெல்லாம் இல்லைங்க சம்பந்தி‌. என் இரண்டு பொண்ணுமே கொடுத்து வச்சவங்க தான்.‌ பெரியவளுக்கு என்ன செய்தேனோ அதை தான்‌ சின்னவளுக்கும் செய்யறேன்.” என்று பதில் தந்தார்.‌

‌‌ விசாலாட்சி ரத்னவேலு சென்னையில் திருமணம் என்றதற்கு ‘பொண்ணு வீடு இங்க வச்சிட்டு அங்க கல்யாணம் செய்யறது நம்ம முறையில்லையே’. என்று முதலில் கேட்டதற்கு, ‘அதெல்லாம் யமுனா திருமணத்தை எனக்கு வேலை வைக்காம உங்க இஷ்டப்படி, நல்லபடியா செய்தது போல இப்ப இந்த சம்பந்தியும் எனக்கு சின்ன கஷ்டமும் கொடுக்கலை. எனக்கு கிடைத்த இரண்டு சம்பந்திங்களும் ரொம்ப பெருந்தன்மையானவர்கள்” என்று கவிதா கூறவும் விசாலாட்சி ரத்னவேலு பெருந்தன்மையை பாதுகாத்துக்க முடிவு செய்திருக்க வேண்டும்.

   ரிஷப்ஷன் திருமணம் என்று இந்திரஜித் தன்னவளை கண்ணுக்குள் தாங்கினான் என்று கூறலாம்.

இதோ அவள் கண்ணில் குங்குமம் பட்டு கலங்க, தன் கைக்குட்டையால் மெல்லமாய் துடைத்து எடுத்தான். எப்பவும் போல செவிமடலருகே, “முதல் தடவை உன்னை நேர்ல பார்த்தது கல்யாண மண்டபத்துல, அப்ப நம்ம திருமண நாள் எப்ப வரும் ஏங்கினேன். ஏங்கின நல்ல நாள் இப்ப வந்துடுச்சு.

  ஐ ஆம் சோ ஹாப்பி தர்ஷினி.

என்ன ஒரு குறை. இந்த கிறிஸ்டியன் மேரேஜ்ல, சர்ச்ல மேரேஜ் முடியவும் கப்பீள்ஸ் ஒரு‌ கிஸ் கொடுத்துப்பாங்க. அந்த மாதிரி நம்ம வழக்கத்தில இல்லை.

  நாம வேண்ணா புதுசா‌ உருவாக்கலாமா? கிஸ் பண்ணவா?” என்றவன் பார்வை ப்ரியதர்ஷினி உதட்டில் நிலை பெறவும், சடுதியில் அவனிடமிருந்து தள்ளி பின்‌நகர்ந்தாள்.

  “என்னாச்சு என்னாச்சு?” என்று மற்றவரின் குரலில் “கண்ணுல கர்ச்சீப் படவும் பின்னாடி வந்துட்டன்” என்று சமாளித்தாள்.

  இந்திரஜித்தோ குறும்பாய் புன்னகையோடு ‘நல்லா சமாளிக்கற’ என்றான் பார்வையும் தலையாட்டலுமாய்.

   ‘இவனை… தனியா கவனிச்சுக்கறேன்.’ என்றவள், ‘இப்பவே இப்படி இருக்கானே, இன்னிக்கு நைட் என்னன்ன ரகளையை இழுப்பானோ.’ என்றவளின் எண்ண ஊர்வலத்தில், வெட்கமும் குடிக்கொண்டது.

  மோகனோ ‘அம்மா ப்ரியா அன்வர் பாய் வந்திருக்கார்.’ என்று சுட்டிக்காட்ட, “வாங்க சார்” என்று மனதார வரவேற்றாள்.

  “அல்லா உன் மனசுக்கு பிடிச்ச‌ வாழ்க்கையை கொடுத்திருக்கார். நீ நல்லா வாழ்வமா. மாஷா அல்லா” என்று வாழ்த்தினார்.‌

   கவிதாவிற்கு மகளின் வாழ்வில் நல்ல மனிதர்களை பெற்றிருப்பதை எண்ணி பூரித்தார்.

  அதன் பின் வேலை பார்த்த இடத்திலிருந்து மதுவும் வந்திருந்தாள். இந்த பக்கம் சுதா வந்திருந்தாள். சொந்த பந்தங்களை கண்டு ஒதுங்காமல் சித்ராவோடு மலர்ந்த முகமாய் வந்தவரை வரவேற்று உபசரித்தார்.

   திருமணம் என்பது பணத்தை செலவழித்து, சொந்த பந்தகளை திரட்டி, கலாச்சாரம் பண்பாட்டின் முறையை பாதுகாத்து அவரவர் சடங்கை மனதார ஏற்று சந்தோஷமாய் சில சங்கடங்களும் கலந்து ஏற்பட்டாலும் நிறைவில் அந்த மஞ்சள் அரிசி, பூக்கள் தூவலும் ஆசீர்வாதமாக பெற்று, பொன் தாலி அணிவித்து இன்னாருக்கு இன்னாரென கடவுள் போட்ட முடிச்சில் கைகளை பிணைத்து, அந்த வாழ்வில் இன்பம், துன்பம், சண்டை சச்சரவு, ஈகோவை விட்டுக்கொடுத்தல், இறுதியில் ‘உனக்கென நான் எனக்கென நீ’ என்று வாழ்வதெல்லாம் வரம்.

   எல்லோருக்கும் வரத்தை தக்க வைத்து கொள்வதில் தான்‌ சிக்கல்.  ஏனெனில் காதல் திருமணமோ, பெற்றவர் பார்த்து நடத்தி முடிக்கும் திருமணமோ இரண்டுமே, நேசத்தோடு ஆரம்பிக்கும். சில நாளில் நேசம் உயிரற்று கடமையாக மாறிவிடும். ஆனால் நேசம் கலந்த காதல் இறுதிவரை உறுதியாக இருந்தால், வரம் கொண்ட வாழ்வு வானவில்லாய் அமையும்.

    நிச்சயம் இந்த காதல் தம்பதியர்கள், ‘நீயென் காதலாயிரு’ என்ற கொள்கையில் விலக மாட்டார்கள். அதன் காரணமாக இந்திரஜித்-ப்ரியதர்ஷினி வாழ்வு இன்று போல் என்றும் நேசம் கொண்டவராக, உதாரண தம்பதியராக இருப்பார்கள்.‌

           💝சுபம்💝

    ‌‌       -பிரவீணா தங்கராஜ்

கதைக்களுகாகான கருத்துக்களை காண ஆவலாக இருக்கின்றேன். வாசகர்களே உங்க ரிவ்யுவை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரவீணா தங்கராஜ்.

‌பை…பை‌…..😘😘 உங்க ஆதரவும் அன்பும் மட்டுமே தொடர்ந்து எழுத உத்வேகம் கொடுக்கின்றது. நன்றி.
 

12 thoughts on “நீயென் காதலாயிரு-25”

  1. M. Sarathi Rio

    நீயென் காதலாயிரு…!
    (அத்தியாயம் – 25)

    உண்மை தான்..! இந்திரிஜித் “காதலி அவளையே கரம் பிடித்து அவள் காரியம் யாவிலும் கை கொடுத்து”ன்னு சொன்னதை சாதிச்சிட்டான்ப்பா. அதே மாதிரி ப்ரியாவும் வீண் பழி போட்டு ஒதுக்கி வைச்ச உறவே ஆனாலும், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைங்கற பதத்தை புரிஞ்சுக்கிட்டு அவங்களையும்
    கூடவே அரவணைச்சுக்கிட்டு
    அழகா உறவு சங்கிலியை விட்டுப்போகாம மெயின்டெய்ன்
    பண்றா.

    நிசம் தான்…! உனக்கென நான், எனக்கென நீன்னு வாழ்வதெல்லாம் ஒரு வரம் தாஙக..! எல்லாருக்கும் அந்த வரம் அமையறதில்லை.
    அதற்கு ரொம்பவே பொறுமையும், அனுசரணையும்
    ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிற தன்மை, விட்டுக்கொடுத்தல்ன்னு இத்தனை விஷயங்கள் இருந்தாத்தான் எல்லா உறவுகளையும் காப்பாத்திக்க
    முடியும். முக்கியமா கணவன் மனைவி உறவை. அப்படிப்பட்ட நேசத்தைத்தான் கடைசி வரைக்கும் எனக்கு கொடுன்னு தன் இணைகிட்ட வரமா கேட்குறதை தான்” நீயென் காதலாயிரு”ன்னு அழகா எடுத்து சொல்லியிருக்காங்க கதையின் நாயகனும் நாயகியும் மற்றும் கதாசிரியரும். வாழ்த்துக்கள்..!
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Avatar

    Super super super super super super super super super super super super super super super super super nalla feel good family story sis 👍👍👍👍👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍inthar priya iptiye happy when irukattum namma next story epo varumnu sollitu poonga sister

  3. Kalidevi

    Superb superb superb story superb ending 👌 👍. Arumaiyana etharthamana kathai romba alaga irunthuchi. Nijama intha mari aana kadhal varam thana ellarukum kedaikathu .apadi tha priya inthar oda kadhal. Kudumbathula eppadi irukanum athula prachani varum atha eppadi sari panalam sila per evlo pasam kamichalum tak nu oru pechu vantha athu namala evlo kasta paduthum apadi patavanga kitta konjam othunganum ippadi ellame intha kathai la sonnathu lam super sisy.

  4. Avatar

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை nice ending sagi super இந்திரஜித் பிரியா ஜோடி super
    Mohan charector also super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *