வண்டியின் ஹார்ன் சப்தம் ஒலிக்க, கேட் திறக்க, அங்கு அடியாட்களாய் நிற்க ஆனந்தியின் வயிற்றில் ஏதோ உணர்வு ஏற்பட்டது.
‘ அடியேய்…. நீ தனியா சிக்கிட்டன்னு தான் நினைச்சேன். ஆனா இப்போ சிங்கத்தோட குகைக்குள்ளேயே தனியா சிக்கிட்டியேடி. இப்ப என்ன பண்ண போற’ என நினைத்துக் கொண்டிருக்கும்போதே வண்டி போர்டிகோவில் நிற்க,
மயிலம்மா ஓடிவந்து அவள் கதவின் அருகே நின்றாள்.
” அம்மாடி…. எவ்வளோ அழகா செப்பு சிலையாட்டம் இருக்க தாயி…” மயில் அம்மா சொல்ல,
ஆனந்திக்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.
அரவிந்த் மட்டும் யாரும் அறியாவண்ணம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு வண்டியிலிருந்து இறங்கினான்.
” ஏலே … இந்த கதவ திறந்து விடு. தாய் வெளியே வரட்டும். நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வரேன்.” என மயிலம்மா உள்ளே ஓட,
குணா ஆனந்தியின் பக்க கதவை திறந்தான்.
‘ என்ன ஆரத்தியா…? விட்டா ஃபர்ஸ்ட் நைட்க்கு கூட ஏற்பாடு பண்ணிருவாங்க போல.’
” என்ன யோசிச்சிட்டிருக்க. இறங்கு.” என அரவிந்த் சொல்ல,
‘ எப்படியாவது பேசிருடி. இது உன் வாழ்க்கைப் பிரச்சனை. தைரியத்தை வெளியே கொண்டு வா.’ என தன்னை தைரியப்படுத்திக் கொண்டாலும் தயங்கியே இறங்கினாள்.
அவள் இறங்கியதும் அவன் திரும்ப ஆனந்தின் குரல் அவனை தடுத்தது.
” ஒரு நிமிஷம்”
” என்ன…?”
” நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
” சரி உள்ள போய் பேசிக்கலாம்.” என நகர,
” இல்ல . இங்கேயே இப்பவே பேசணும்.”
” அவள் என்ன சொல்லப் போகிறாளோ…” என அவன் இதயம் படபடக்க,
” இங்க பாருங்க. நடந்தது எல்லாம் ஒரு ஆக்சிடெண்ட். இப்படியெல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல. நான் ஒத்துக்குறேன். நீங்க என்னை காப்பாத்த தான் என் கழுத்துல தாலி கட்டுனீங்க.” என அவனை பார்க்க எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவன் நிற்க,
‘நான் பேசுறது இவனுக்கு புரியுதா இல்லையா . எந்த ரியாக்ஷனும் இல்லாம நிக்கிறான். சரி கேட்கிறானே அதுவரைக்கும் சந்தோசம்.’ என தொடர்ந்தாள்.
” நீங்க திடீர்னு தாலி கட்டுவேங்கன்னு நீங்களும் எதிர்பார்க்கல. நானும் எதிர்பார்க்கல.
எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை. உங்களுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.”
‘ எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு உனக்கு யாரு சொன்னா’ என அவன் கண்கள் அவள் கண்களிடம் உரையாட, அவள் அதை உணராமல் தொடர்ந்தாள்.
” இப்படி ரெண்டுபேருக்கும் விருப்பமில்லாமல் நடந்த இந்த கல்யாணத்தை நாம பெரிசா எடுத்துக்க வேண்டாம். நம்ம ரெண்டு பேருக்கும் ஏற்கனவே ஆகாது. நான் இதுக்கு முன்னாடி உங்ககிட்ட நடந்துகிட்டதுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுக்கறேன்.
இதை இதோடு விட்டுவிடலாம். நான் உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீங்களும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.
நீங்க என்னை என் வீட்ல மட்டும் ட்ராப் பண்ணுருங்க.
டைம் இல்லேனா கூட பரவாயில்லை நான் எப்படியாவது மேனேஜ் பண்ணி போயிடுவேன்.” என சொல்ல,
இதை எதையும் அறியாமல் பெரிய புன்னகையை தவழ விட்ட படி ஆரத்தியோடு வந்தாள், மயிலம்மா.
” தாயி, தம்பியோட சேர்ந்து நில்லுத்தா.” மயிலம்மா சொன்னதுதான் தாமதம்,
” நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.” என ஆரத்தி தட்டை தட்டிவிட, நடுங்கி விழுந்தது ஆரத்தி தட்டு மட்டுமல்ல. அரவிந்தின் இதயமும் தான்.
” இதுக்கு மேல என்னால இங்கே இருக்க முடியாது.” என திரும்பி நடக்க,
” நில்லு” என்ற அரவிந்தின் கத்தலைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் திடுக்கிட, முதலில் சுதாரித்தவன் வாயிற்காவலன்.
ஓடி சென்று கேட்டை மூட, அதை புரிந்துகொண்டு அடியாட்கள் அவள் வெளியே செல்லாவண்ணம் வழியை மறக்க,
அரவிந்தின் கத்தலும் அடியாட்களின் செயலும் அவளை பீதி அடையச்செய்ய, திரும்பி அரவிந்தை ஏறிட்டாள்.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் என்ன நடக்கிறது என்று அறிய முடியாமல் சிலையென நின்ற மயில் அம்மாவை அரவிந்தின் குரல் கலைத்தது.
“மயிலம்மா… நீங்க போய் வேற ஆரத்தியை எடுத்துட்டு வாங்க.” என சொல்லியதும் உள்ளே ஓடினாள் மயிலம்மா.
” நீங்க……” என ஆனந்தி ஆரம்பிக்கும் முன்பே,
” போதும் நீ நிறைய பேசிட்ட.” என்றவன், அவள் கை வளைவினை அழுத்தமாக பற்றி தன் அருகில் இழுத்தான்.
” உனக்கு வேணா நடந்தது பொம்மை கல்யாணமா இருக்கலாம். எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருந்ததோ இல்லையோ.
உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருந்தது இல்லையோ
கல்யாணம் நடந்தது எந்த சூழ்நிலையும் வேணாம் இருக்கலாம்.
ஆனால் நான் உன் கழுத்துல தாலி கட்டுனது நிஜம்.
உன் கழுத்துல எந்த நிமிஷமும் தாலி கட்டுனேனோ அந்த நிமிஷத்திலிருந்து நீதான் என் பொண்டாட்டி. நான்தான் உன் புருஷன்.
இது தான் நிஜம்.
நீ இதை ஏத்துகிட்டு தான் ஆகணும். உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லைனாலும்.
இனிமே இதுதான் உன் வீடு. நீ இங்க தான் இருந்து ஆகணும்.
நான் விருப்பப்பட்டா, எனக்கு தோணுச்சுனா மட்டும் தான், உன் அப்பா அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போவேன்.
அதனால இங்க இருந்து போயிறலாம்னு மட்டும் நினைக்காத. அது உன்னால முடியாது.
இதையெல்லாம் எவ்வளவு சீக்கிரம் நீ புரிஞ்சுக்குரியோ அவ்வளவு உனக்கு நல்லது.
அப்புறம் வர்ற வழியில கேட்டியே. என் பேரை சொல்லி கூப்பிடறதுக்கு என்ன உரிமை இருக்குன்னு.
இப்ப சொல்லுரேன் உன் புருஷங்குற உரிமை இருக்கு. இன்னும் புருஷனுக்கு என்னென்னெல்லாம் உரிமை இருக்குன்னு உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்.
இன்னொரு தடவ என்கிட்ட என்ன உரிமை இருக்குன்னு கேட்டா என்னென்ன உரிமை இருக்குன்னு எல்லாத்தையும் செஞ்சு காட்ட வேண்டியது இருக்கும். புரிஞ்சுதா ஆனந்தி…”
என தன் பெயரை உரிமையுடன் அவன் அழுத்தி கூற அவள் கண்களில் இருந்து நீர் துளி எட்டி பார்த்தது.
எங்கே தன்னைவிட்டு போய் விடுவாளோ என்ற பயத்தில் அவன் சற்று கோபமாக அவளுக்கு புரிய வைக்க, அவள் கண்களிலிருந்து எட்டிப்பார்த்த நீர்த்துளி அவனை வதைக்க, அவள் கையை அவனிடம் இருந்து விடுவித்தான்.
மயிலம்மா ஆரத்தி கரைத்து எடுத்து வர, இருவரும் தனித்தனியாக நிற்க ‘இப்ப எப்படி சேர்ந்து நிற்க சொல்ல’ என யோசித்தவள், சற்றுமுன் ஆனந்தி ஆரத்தி தட்டு விட்டதை எண்ணி முகத்தை சிலிர்ப்ப, அதைப் புரிந்து கொண்ட அரவிந்த் ஆனந்தியின் அருகில் நெருங்கி நின்றான்.
அரவிந்தின் செயல்களில் இருந்து மீளாதவள், தன்னை யாரோ உரசுவது அறிந்து சற்றுத் தள்ளி நின்று நடந்ததை அசை போட்டாள்.
ஆனந்தி தள்ளி நிற்க பெருமூச்சொன்றை விட்ட அரவிந்த், அவளது இடையில் கை வைத்தவன் அவனோடு சேர்த்து இறுக்கினான்.
அவன் திடீர் தீண்டுதலில் திமிர்ந்தவளை அலட்சியம் செய்தவன் நொடியும் தாமதிக்காமல் அவளை தன் கைகளில் ஏந்தினான்.
” இப்போ ஆரத்தி எடுங்க மயிலம்மா.”
‘ அவன் எப்படி என்னை கைகளில் ஏந்தலாம்.’ என திமிர்ந்தவளை அவனுடைய ஒற்றை முறைப்பில் அமைதிப்படுத்தினான்.
மயிலம்மா பல வேண்டுதல்களோடும் சிரிப்போடும் ஆரத்தி எடுக்க,தன்னவளை உரிமையோடு கையில் ஏந்தியவனின் கடந்த காலம் அவன் முன் நிழலாடியது.
மயிலம்மா பொட்டு வைக்க அவனை தீண்ட சுயநினைவிற்கு வந்தவன், தன்னவளை பார்க்க, அவள் பாவமாக முகத்தை வைத்திருக்க,
‘ என் குழந்தை டி நீ ‘ என செல்லமாக மனதிற்குள் கொஞ்சிவிட்டு, வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தான்.
அவளை பூ போல இறக்கிவிட, அவள் கண்கள் குளமாவதை உணர்ந்தான்.
‘ சாரிமா. நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்துறேனா. நீ காதலோட என்னை பார்க்கும்போது உன் கழுத்துல மூன்று முடிச்சு போடணும்.
நீ என் கையை பிடிச்சு வலது காலை எடுத்து வச்சு என்னோட மனைவியா உள்ளே நுழையும் போது உன் கண்ணுல இருந்து வர ஆனந்தக் கண்ணீர துடைச்சு விட்டு , உன் நெத்தியில முத்தம் கொடுக்கணும்னு எவ்வளவு கனவு கண்டுருப்பேன்னு தெரியுமா.
இப்படி எல்லாமே தலைகீழா நடக்கும்னு நான் எதிர்பார்க்கல.
உங்க கண்ணுல இருந்து வர கண்ணீருக்கு நானே காரணம் ஆயிட்டேனே.
இதெல்லாம் நான் உனக்காக தான் பண்றேன்னே நீ எப்போ புரிஞ்சுக்கப் போற.’ என்று எண்ணிய அவனை, ஆனந்தியின் குரல் கலைத்தது.
ஆனந்தி அவன் முகத்தை பார்க்க, “வெளியே ரவுடித்தனம் பண்ற மாதிரி, என்கிட்டயும்ரவுடி தனம் பண்ணி எவ்வளவு நாள் என்ன கட்டி வைக்க முடியும்னு நீங்க நினைக்கிறீங்க.
என் அனுமதி இல்லாமல் உங்களால் நெருங்கக்கூட முடியாது. அப்புறம் ஏன் இதெல்லாம்.’ என பொறுமையாக பேசிய அனந்தியை ரசித்தவன், பொறுமையாகவே பதில் கூறினான்.
இதுவரைக்கும் ஆனந்தி அவனிடம் பொறுமையாக பேசி அவன் பார்த்ததில்லை.அதனால்தான்.
“நான் ரவுடிதான். இதுதான் என் தொழில். இத என்னால மாத்த முடியாது.
அப்புறம் உன்கிட்ட ஏன் ரவுடி தனத்த காட்டுறேன்னா, நீ என் மனைவி. முறைக்காத. நீ முறைச்சாலும் அதுதான் உண்மை. நீ இன்னும் என்னை புரிஞ்சுக்கல.
நீ புரிஞ்சுக்க வர நான் இப்படித்தான் இருப்பேன்.
நீ என்கிட்ட கோவமா பேசுணா நானும் உன்கிட்ட கோவமா தான் பேசுவேன்.
நீ என்கிட்ட பொறுமையா பேசினால் நானும் பொறுமையா பேசுவேன்.” என சொல்ல மயிலம்மா ஆரத்தியை முச்சந்தியில் கழித்து விட்டு உள்ளே வர ,
” மயிலம்மா , ஆனந்திய உள்ள கூட்டிட்டு போங்க.” என சொல்ல,
“வாம்மா. தம்பி ரூமுக்கு கூட்டிட்டு போறேன்.” என அருகில் வர,
” இல்ல மயிலம்மா . அவள கெஸ்ட் ரூம் ல விட்டுடுங்க.” என கூற ,
‘நீ சொன்னாலும் நான் உன் கூட ஒரே ரூம்ல தங்க மாட்டேன்.’ என மனதில் எண்ணியவள் மயிலம்மாவின் பின் சென்றாள்.
Super and interesting 😍😍😍
Super😍
NICCE INTERESTING EPI