Disclaimer: hi readers இது உங்களுக்கான disclaimer இல்லை. திருடும் நோக்கத்தோடு வரும் திருடர்களுக்கு.
கதை படிக்கறிங்களா கதை மட்டும் படிங்க. படித்ததில் பிடித்தது என்ற போர்வையில் என் அனுமதியில்லாம எங்கேயும் ஆடியோ நாவலாகவோ, பிடிஎப் ஆகவோ மாற்றி பணம் சம்பாதிக்காதிங்க. அப்படி பணம் சம்பாதித்தா அது உங்களுக்கு உடம்பில் ஒட்டாது. அதை விட கஷ்டம் அனுபவிப்பிங்க. அடுத்தவங்க மனதை காயப்படுத்தினா நிச்சயம் தண்டனை உண்டு.
அன்பான ரீடர்ஸ்…..
எதுக்கு டிஸ்கிளைமர்னு புரியாம தவிப்பிங்க. காரணம் சொல்லறேன். என்னோட நாவல் என் அனுமதியின்றி நவீனா என்ற பொண்ணு ஆடியோ நாவலாக போட்டிருக்கு. Copyright strike கொடுத்து வீடியோவை எடுக்க வஞ்சிட்டேன். ஆனா இப்படி வந்து கதையை திருடுவது தப்பில்லையா.?! அந்த கோபம்.
அடுத்தடுத்து கதைகள் உங்களுக்காக எழுதறது உங்கள் அன்பை வெல்வதற்கும், எனக்கான அடையாளத்தை அங்கீகரித்து நிலைநாட்டவும் மட்டுமே. சொல்லப்போனா எனக்கான அச்சீவ்மெண்ட்.
உங்க ஆதரவு கமெண்ட்ஸை சைட்ல கொடுங்க. ஆடியோ நாவல்ல தாங்க. என் சார்பில் உங்களின் மைண்ட் ரிலாக்ஸுக்கு நான் வித்தியாசமான கதையை கொடுப்பேன். அதுவும் முகசுழிப்பின்றி எழுத்தில் கண்ணியத்தோடு. இது என்றைக்கும் மாறாது.
நெஞ்சை❤️ கொய்த🫴🏻 வதுகை💃🏻
அத்தியாயம்-1
ஆடம்பரமான வீட்டின் நடுநாயகமாக இருந்த கண்ணாடி டீப்பாயின் மீது அந்த கல்யாண பத்திரிக்கை பளபளத்தது. அதில் கிருஷ்ணா வெட்ஸ் நவ்யா என்ற பெயரை பார்த்து பார்த்து அனலை விழுங்கினாள் நம் நாயகி சம்ருதி.
சம்ருதி பக்கத்தில் அவள் அப்பா சந்திரசேகர் அம்மா ஜானகி, வீற்றிருந்தனர். மகளின் மனதை குளிர்விக்க முயன்றனர்.
அதற்கு எதிர்பதமாய் சம்ருதி ஆவேசமாய் “அவன் ரிஸப்ஷனுக்கு போகணும் அப்பா. என்னவோ நான் அழுவேன், கவலைப்படுவேன்னு நினைச்சிட்டு இருக்கறவனுக்கு, இந்த சம்ருதி யாரை நினைச்சம் உருக மாட்டா, காதலிச்சு தோற்றாலும் கவலைப்பட மாட்டான்னு காட்டணும். கண்டிப்பா இந்த ரிஸப்ஷனுக்கு நான் போயே ஆகணும் அப்பா. ப்ளீஸ் என்னை அனுப்புங்க” என்று பெற்றவர்களிடம் கோரிக்கை வைத்தாள்.
பெற்ற மகள் காதலித்து இருக்கின்றாள். அவள் காதலை புறம் தள்ளி ஒருவன் வேறு பெண்ணை இன்று காலையில் மணந்து விட்டான். ஆனாலும் தன் உயிரில் உதித்த சம்ருதியோ அந்த காதலனின் ரிஸப்ஷனிற்கு போவேன் என்று அடம் பிடிக்கின்றாள்.
சந்திரசேகருக்கு மனதில் மகளை அனுப்ப பயம். சம்ருதியை கண்டிக்கும் வழியும் இதுவரை செய்ததில்லை. ஒரே மகள் செல்லம் அளவுக்கதிகமாக கொடுத்து, எல்லாம் அவள் முடிவு மட்டுமே’ என்று இந்த வீட்டில் எழுதப்படாத சட்டமாக மாற்றியிருந்தார்.
அவளுக்காக யாரையும் அழவைப்பார். ஆனால் மகளின் முகம் துளியும் சுணங்க விடமாட்டார். அப்படியிருக்க இன்று நடைபெற்ற திருமணத்திற்கு மாலையில் நடக்கவிருக்கும் ரிஸப்ஷனிற்கு வேறுவழியின்றி மகளின் பிடிவாத குணத்தால் அனுப்ப முடிவெடுத்தார்.
“சரிம்மா… உன் முன்னால் காதலனோட ரிஸப்ஷனுக்கு நீ போ. ஆனா தனியா போகாத. இதோ என் அக்கா பையன் வசந்த் இருக்கான், பொண்ணு ஜனனி கூட போ. எங்களுக்கும் நீ துணையோடு போறது நல்லது இல்லையா?!” என்றார்.
சம்ருதியின் அத்தை ஷியாமளாவின் பையன் வசந்தையும், ஜனனியையும் ஏறிட்டாள்.
“வசந்த் அத்தானுக்கும் ஜனனிக்கும் சிரமமா இருக்கும். நான் தனியா போறேன்.” என்றாள் சம்ருதி.
“எனக்கு எந்த சிரமமும் இல்லை சம்ருதி. மாமா பயப்படும் போது துணைக்கு உன்னோட வருவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.” என்றான் வசந்த்.
வசந்தின் தந்தை சத்யமூர்த்தியோ, “அத்தானோட போயிட்டு வாடா. அந்த கிருஷ்ணன் நீ குடிக்கிற தண்ணில மருந்து கலந்து கொடுத்து ஏதாவது ஆபத்தை விளைவிக்கலாம். இப்ப இருக்கற சூழ்நிலையில் பெண் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. டிவி நியூஸ் பார்த்தியா. எங்க பார்த்தாலும் கற்பழிப்பு கொலைனு இருக்கு” என்றார்.
சியாமளா அத்தையோ, “வசந்த் கூட இருப்பது உன் நல்லதுக்கு தான் சம்மு. ஜனனிக்கு ஏதோ வேலையிருக்கு. வசந்திற்கு அப்படி இருக்காது” என்று கொஞ்சினார்.
மகனை மட்டும் அனுப்பி மகளை காரியமாக விலகிடும் முடிவில் பேசினார். மகனும் சம்ருதியும் ஜோடியாக போகட்டுமென்று.
“இத்தனை பேர் சொல்லறப்ப காது கொடுத்து கேளு சம்மு” என்றார் சம்ருதியின் அன்னை ஜானகி.
“ஓகே ஓகே ஓகே. வசந்த் அத்தான் கூட வரட்டும்” என்றவள் வரவேற்புக்கு ஆடம்பரமான ஆடை அணிகலனோடு தயாராக சென்றாள் சம்ருதி.
திருமணம் செய்யும் மணப்பெண்ணை விட தான் அதிகமான அழகும், தகுதியும் உடையவளாக காட்டிக்க மெனக்கெட்டாள்.
மற்ற நாளில் இப்படி உடுத்தவோ, தன்னை மிகைப்படுத்தி காட்ட நினைக்காத பெண் என்று பெயர் வாங்கியவளே.
பணம் உள்ளதென்று ஆடமாட்டாள். ஆனால் இந்த காதல் தோல்வி அவளை ஆட்டுவிக்க காதலனுக்கும், காதலன் கரம் பற்றியவளுக்கும் வைர மோதிரத்தை பரிசாக வாங்கினாள்.
தன் அத்தை மகன் வசந்த் அத்தானை அழைத்து காரில் ஏறி, மண்டபத்திற்கு வர, வசந்த் கையை பற்றி ஒயிலாக நடந்து வந்தாள்.
உண்மையில் வசந்த் கையை சம்ருதி பற்றியதற்கு முதல் காரணம் லேசான நடுக்கம். இத்தனை பேர் தன்னையே விழுங்குவது போல பார்வையிட்டால் அவளுக்குண்டான நடுக்கம்.
இது போல ஆடம்பர அணிகலனும் இதுவரை வெளியே அணிந்ததில்லையே. பணம் இருந்தாலும் எளிமையாக தான் நகைகள் அணிந்திருப்பாள்.
மணமகன் கிருஷ்ணாவும் சம்ருதியை காண, பரிசு பொருளை கொடுக்க மேடைக்கு நடந்தாள். அங்கிருந்த கூட்டம் பாதிக்கு மேலாக சம்ருதியை ஏறிட்டனர் என்றால் அது மிகையாகாது .
“ஹாப்பி மேரீட் லைஃப் கிருஷ்” என்று கை குலுக்கினாள் சம்ருதி.
“தேங்க்யூ சோ மச் சம்ருதி. நீ வருவேன்னு எதிர்பார்க்கலை. நவ்யா, இது என் முன்னாள் காதலி” என்று கரம் பற்றியவளிடம் கூறி சம்ருதியிடம் கைகுலுக்கியபடி அறிமுகப்படுத்தினான்.
நவ்யா கணவர் கிருஷ்ணாவை திகிலாய் பார்த்து தயக்கமாய் புன்னகையை வரவழைத்து சம்ருதியை கண்டு வணக்கம் வைக்க, கிருஷ்ணாவிடம் வந்தவள், “என்னை வேண்டாம்னு இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்தல்ல, இப்ப நான் எப்பேற்பட்ட பணக்காரின்னு தெரியுதா? மிஸ் பண்ணிட்டேன்னு தோணுதா கிருஷ்? ஆப்ட்ரால் பொண்ணு கொடுத்து மாமனார் கம்பெனியை ரன் பண்ண சொல்லிட்டாங்கன்னு என்னை வேண்டாம்னு சொன்ன. பட் உன் மேரேஜிக்கு காஸ்லியான கிஃப்ட் என்னோடது தான்” என்று முகசுழிப்போடு கேட்டு பரிசை நீட்டினாள்.
கிருஷ்ணனின் முகம் கடினமானது.
“நீ எப்பவாவது பணக்காரின்னு உன்னை காட்டியிருந்தா இந்த நிலைமை நேர்ந்திருக்காதே சம்ருதி. இப்பவும் ஓகேன்னா சொல்லு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறேன்” என்று அவனும் வசந்தை பார்த்து புகைச்சலாக பேசி பார்வையிட, அவனை மண்டபம், மேடையென்றுமா கூட பாராது அறைந்தாள் நாயகி.
“யூ ஸ்டுபிட்” என்று சம்ருதி கத்த, வசந்தோ, மாமன் மகளை பிடித்து, “வாட் இஸ் திஸ் சம்ருதி? இப்படி எல்லாரும் பார்க்கவா பிஹேவ் பண்ணுவ? பாரு எல்லார் பார்வையும் ஸ்டேஜ்ல இருக்கு. நீ கல்யாணத்துக்கு வரணும்னு சொன்ன, கூட்டிட்டு வந்தாச்சு. கிளம்பு வீட்டுக்கு போவோம்” என்று அதட்டினான்.
சம்ருதியை வசந்த் அழைத்து செல்ல, சம்ருதி பிடிவாதம் பிடித்த நடையோடு பின் தொடர்ந்தாள்.
அடிவாங்கிய மணமகன் கிருஷ்ணாவோ சம்ருதியை சென்ற திக்கில் பார்வையை வெறித்தான்.
அங்கு குட்டி குட்டி குழந்தைக்கு பூவை தந்தவொருவன் அவளிடமும் நீட்ட, சம்ருதி அதை கோபத்தில் கசக்கி எறிந்தாள்.
வசந்த் சம்ருதி செல்வதையே நோட்டமிட்ட கிருஷ்ணா “பார்க்ல உட்கார்ந்து பேசறப்ப, பூவை பறிச்சி அவளிடம் கொடுக்க ட்ரை பண்ணுவேன். பூவையெல்லாம் பறிக்காத கிருஷ். செடி கூடவே பூயிருப்பதை பார்த்து ரசிப்போம்னு சொல்வா. இப்ப பூவையே கசக்கி எறிந்துட்டு போறா” என்றான்.
நவ்யாவோ “அவ உங்களை அடிச்சிருக்கா” என்றதும் கன்னத்தை தடவியவன், “அவ என்னை முதல் முறை தொட்டுட்டு போறா. இட்ஸ் அவர் பஸ்ட் டச்” என்றான் ரசனையாக.
நவ்யா இருந்த கடுப்பில் அங்கிருந்த கேக்கை அவன் முகத்தில் அப்பினாள்.
ஏற்கனவே மணமகன் ஒரு பெண்ணை காதலித்த கதை ஓரளவு கல்யாண வீட்டாள்களுக்கு தெரியும் என்பதால் பெரிதாக கண்டுக்கவில்லை.
இங்கு ஒரு ரணகளம் ஆரம்பித்து வைத்து வந்ததை அறியாமல் சம்ருதி காரில் கல்லை போல வீற்றிருந்தாள்.
என்ன இந்த கல் மூச்சு விடுகிறது.
வசந்த் காரை ஓட்டியபடி கடற்கரைக்கு அழைத்து வர, இமை மூடியவள் “அத்தான்… இந்த டிரஸ் போட்டு என்னால் கடலை ரசிக்க முடியாது. வீட்டுக்கு போங்க.” என்று அவன் நிறுத்தும் முன் கூற, வசந்த் சம்மதமாய் வண்டியை எடுத்தான்.
சம்ருதிக்கு அழவேண்டும் போல தோன்றியது. ஆனால் அழ முடியவில்லை. ஏனோ கோபம் மட்டும் இமயமலை அளவிற்கு இருந்தது. அது அவளை சுற்றியிருந்தவர்களிடம் காட்டினாள். கண்ணீர் சொட்டும் உகுக்கவில்லை.
வசந்த் என்பதால் மாமன் மகளை பெரிதாக உதாசினம் செய்யவில்லை.
அவளே காதல் தோல்வியில் துவண்டிருப்பதால் அவளை குளிர்விக்க முயன்றான்.
அவளை இயல்பாய் மாற்ற அவனுக்கு என்ன வழியென்று சிந்திக்க ஆரம்பித்தான்.
வீட்டுக்கு வந்த சம்ருதி அவளது அறைக்குள் முடங்கினாள்.
அவள் அறையில் முடங்கியிருப்பதை ஊர்ஜிதப்படுத்தி கொண்டு, “இரண்டு டைமண்ட் மோதிரம் வாங்கினா மாமா. அந்த கிருஷ்ணாவுக்கு பிரசெண்ட் பண்ண.. அவன் சம்ருவை புறக்கணிக்கறான். இவ தான் லைட்டா பீல் பண்ணறா. போக போக காதல் வலியை மறந்துடுவா.” என்றான் ஆறுதலாய்.
சந்திரசேகர் அங்கும் இங்கும் நடந்து “அவயிஷ்டப்படி இருக்கட்டும். ஜானகி என் பொண்ணை தொந்தரவு பண்ணாத” என்று கட்டளையிட்டார்.
“ஆமா ஏற்கனவே அவயிஷ்டபடி தான் எல்லாம் நடக்கும். இப்ப மட்டும் புதுசா?” என்று அங்கலாய்த்து சென்றார். இப்படியா வைரத்தை வாங்கி வேண்டாமென்று கூறியவனுக்கு காசை வாறியிறைப்பாள்.
அக்கா சியாமளாவோ, “கொஞ்சம் இந்த பிரச்சனையிலிருந்து சம்மு மீண்டு வரட்டும். நம்ம ஆசையை அவளிடம் சொல்வோம்” என்று கூற, சத்யமூர்த்தியும் “ஆமா… இப்பவே சொன்னா அவளை கட்டாயப்படுத்தற மாதிரி இருக்க கூடாது” என்று நியாயப்படுத்தினார்.
அவர்கள் பேச வரும் அர்த்தம் புரிந்த வசந்தோ வெட்கம் கொண்டான்.
அவனுக்குள் சம்ருதியை மணக்க ஆசையுண்டு.
அழகான பெண், அறிவான குணம், இந்த வீட்டின் ராணி, இதெல்லாம் தாண்டி பல கோடிகளுக்கு சொந்தக்காரி அவனின் மாமன் மகள்.
இயல்பான நேசமும் உண்டு. இந்த காதல் மட்டும் அவளை மனவுளைச்சலுக்கு ஆளாக்காமல் இருந்தால் இந்நேரம் இருவருக்குள் கல்யாணம் பேசப்பட்டிருக்கும்.
எல்லாம் அந்த கிருஷ்ணாவை நடுவில் காதலிப்பதாக கூற, மாமா சந்திரசேகர் பார்க்க வர சொல்லும் நேரம், அவன் தந்தை பார்த்த பெண்ணை மணந்துக்கொள்வதாக பணக்கார இடமென அவனாக சம்ருதியை கழட்டி விட்டான்.
சம்ருதி பணக்காரி என்று அவனிடம் காட்டிக்கொள்ளாது பழக, கிருஷ்ணாவின் உண்மை குணம் புரிந்ததாக அவளுமே ‘யாரை வேண்டுமென்றாலும் மணந்துக்கொள். உன்னை போல ஆளை மறப்பது சுலபம்’ என்றாள்.
இப்பொழுதும் சிக்கல் இல்லை. சம்ருதியை மட்டும் மாற்றிட வேண்டும்.
சம்ருதியை கொஞ்ச நாள் விட்டு பிடித்து தனக்கு திருமணம் செய்து வைக்க அன்னை சியாமளா கோட்டை கட்டிக்கொண்டு இருக்கின்றார்.
அதில் வெற்றிகனி நிச்சயமென்பதால் வசந்த் சம்ருதியுடன் நிழலாய் துணை வருகின்றான்.
சம்ருதி நாளெல்லாம் அறைக்குள் அடைந்து கிடந்தாள். சாப்பாடு மட்டும் அறைக்கே வந்து விட்டது.
தாயும் தந்தையும் அடிக்கடி வந்து ‘என்னடி ராஜாத்தி சாப்பிட்டியா? குளிச்சியா? வெளியே எங்கயாவது போயிட்டு வா. மைண்ட் சேஞ்ச் ஆகும்” என்றனர்.
அத்தை மகளான ஜனனியை அழைத்து, பக்கத்தில் மாலுக்கு சென்றாலும் தியேட்டர் சென்றாலும் சுவரசியமோ, மனமோ நிம்மதி கொள்ளவில்லை.
மாறாக ‘என்னையே ஒருவன் மறுத்துவிட்டான்.’ என்ற கவலை விடாமல் துரத்தியது.
ஒரு கட்டத்தில் சென்னையே வேண்டாமென்று தோன்ற, “நான் எங்கயாவது போகலாம்னு இருக்கேன்” என்று நடுக்கூடத்தில் வந்து கூறினாள்.
“எங்க?” என்று தந்தை சந்திரசேகர் கேட்க, “தெரியலைப்பா… ஆனா இங்க இருக்க பிடிக்கலை. யாரோடவும் பேச பிடிக்கலை.” என்றாள்.
“நான் தனியா ஏதாவது ஒரு நாட்டுல கொஞ்ச நாள் தங்கலாம்னு இருக்கேன்” என்றாள்.
“லண்டன், அமேரிக்கா எங்க டிக்கெட் போடம்மா” என்று தந்தை கேட்க, “இரண்டும் வேண்டாம். சிங்கப்பூர் போலாம்னு இருக்கேன்” என்றாள்.
ஜானகியோ “சரி குடும்பமா போகலாம்” என்றதற்கு, “நான் மட்டும் தனியா போகணும்” என்றாள்.
“இப்ப தான் காதல் தோல்வி. இந்த நேரத்துல உன்னை தனியா அனுப்ப எங்களுக்கு இஷ்டமில்லைடா சம்மு. அதனால் ஜனனியையும் வசந்தையும் அழைச்சிட்டு போ.
எங்கப் போனாலும் நீ சந்தோஷமான இருக்கணும். எங்கப் பொண்ணு எப்பவும் முகம் வாடக்கூடாது.” என்று கூறினார் சந்திரசேகர்.
தன்னை போக வேண்டாமென்று முட்டுக்கட்டையிடாமல் அத்தை பசங்களையும் அழைத்து செல் என்றதில் சம்மு மனம் இறங்கினாள்.
“சரிம்மா அத்தான் ஜனனி கூடவே வரட்டும்” என்றாள் சம்ருதி.
ஜனனிக்கோ பத்து பைசா செலவின்றி சிங்கப்பூர் செல்ல கசக்குமா? குதுகலமாய் தயாரானாள்.
மகன் வசந்திடும் மட்டும் சத்யமூர்த்தி தனியாக அழைத்து, “ஏன்டா மாமன் மகளை காதலிக்க வைக்க தெரியாதா? அட்லீஸ்ட் இரண்டாவது சான்ஸையாவது சரியா உபயோகப்படுத்து. எப்படியும் இங்க உங்கம்மா அவளோட தம்பியிடம் சம்பந்தம் பேசினாலும், சம்மு உன்னை பிடிக்கலை கல்யாணம் வேண்டாம்னா எல்லாம் முடிஞ்சது. இதே அவ வாயால உன்னை பிடிச்ச இருக்குன்னு சொன்னா வேற வழியேயில்லை. ஊர்லயிருந்து வந்ததும் கல்யாணம் தான்” என்று அறிவுரையை வழங்கினார்.
“கண்டிப்பா அப்பா… சம்மு வாயால காதலிக்கறதை சொல்ல வைக்கிறேன்” என்று சபதம் போட்டான்.
சம்ருதி சிங்கப்பூர் பயணத்தில் தான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்ற முடிவோடு கிளம்பினாள்.
காதல் தோல்வியை மறந்து தன் பெற்றவர்களுக்காக மனம் மாறி வரும் முடிவோடு புறப்பட்டாள். அதனால் சிங்கப்பூர் பயணத்தை அதிகமாக விரும்பினாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Superb starting story avlo vasathiyanava nu theriyama palagi iruka vera pana karanga la parthathum avan love paravala vitu mrg panikittana . Ipp avana maraka kasta padura papom namma sisy ethana twist vachi irupanga ithuku next epi la
Sandi rani ya erukkaaley samroo….adakkura veeran Singapore la thaan erukkaano 🤔🤔🤔🤔
அதிரடி நாயகி, நாயகன் எப்படியோ?? எனக்குத் தெரிந்து வசந்த் கண்டிப்பாக கிடையாது
Very good start.. Singapore la vera yaaravathu pidikapoguthu sammuvuku
Nice start 👌
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 1)
அடப்பாவி கிருஷ்ணா..! சொத்துக்காகவா நவ்யாவை கட்டிக்கிட்ட…? இதே சம்ருதி, நவ்யாவை விட அதிகமா சொத்துள்ளவன்னு தெரிஞ்சிருந்தா நவ்யாவுக்கு பை சொல்லிட்டு சம்ருதியை கட்டிப்பேன்ங்கறான்.
இப்படிப்பட்ட காதல் சம்ருதிக்கு தேவையா…? இதெல்லாம் ஒரு காதலா…?
என்னடா சோதனை..? சம்ருதிக்கு வந்த வேதனை…? இதோ இந்த மாமன் பையன் வசந்த் கூட இதே எண்ணத்தோடத்தான்
அவளையே சுத்தி, சுத்தி வரான்
தேவையா இது…? இவளுக்குன்னு ஒருத்தன், இவளை மட்டுமே நேசிக்கிற ஒருத்தன் வருவானா…?
வர வரமாட்டானா…?
😆😆😆
CRVS (or) CRVS 2797
Good start sis. Interesting
Super sis amazing start 👍👌😍 heroine romba adament polaye hero eppdiyo Avan entry kaga eagerly waiting sis 🙏😊
Good start😍….. Singapore payanm epdi iruka pogutho….. Disclaimer super ka…. Copyright pottum thirudura kumbal iruka tha seiraga…. Ivangala epo tha maruvangalo….
Super
good start……….waiting for next……………………….❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Spr starting👌👌👌 💕💕💕💕💕💕💕💕💕💕
Samu really escape agita nu than sollanum andha krishna panathukaga than navya ah va marriage panni irukan indha singapore trip avalukku santhosham tharattum
Nalla aarambam akka…. Super ah vithyasama irukku❤️akka….
Nalla aarambam akka❤️…. Super ah irukku… Hero intro kudunga akka❤️
சூப்பர். ..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💜💜💜💜💜🫰