அத்தியாயம்-10
சிங்கப்பூர் வந்து இரவு சஃபாரி வனவிலங்கு பூங்கா, கிளார்க்குவே, யூனிவேர்சல் ஸ்டூடியோ, நீர்த்தேக்கம், உயரமான ராட்டினத்திற்கு, பாலம், சிங்கப்பூர் கேபிள் கார், உயிரியல் பூங்கா, சிங்கப்பூர் ஃபிளேயர், செந்தோசா இப்படி தினம் தினம் கண்ணுக்கும் விருந்தாக, விகர்த்தனனோடு தயாராகி சென்று திரும்பி வந்தார்கள்.
இலக்கியனை முற்றிலும் தவிர்த்துவிட்டு விகர்த்தனன் மட்டும் காரோட்டி சாரதி வேலையோடு கையிடாக, நெஞ்சை பறித்தவளுக்காக துணையிருந்தான்.
சம்ருதியிடம் நட்பு பலப்பட்டது என்றால் மிகையல்ல. ‘இதோ உன் டிரஸ் கலர் பார்த்தா நாம பார்த்த அனிமல் எல்லாம் அதோட கூட்டுக்குள் ஓடிடும்’ என்று கூறினால் அவன் புஜத்தை கிள்ளி செல்லமாய் அடித்து விளையாடும் அளவிற்கு வந்திருந்தாள்.
வசந்த் அதன் பின் தான் தன்னிடம் பழகும் தன்மையும் விகர்த்தனனோடு பழகும் விதமும் உணர துவங்கினான். பாவம் ‘டூ லேட்’ என்ற விஷயம் தாமதமாக மண்டையில் உரைத்தது. அப்பொழுது கூட ஊர்சுற்றி திரும்பும் பொழுது சம்ருதி பக்கம் அவன் திரும்ப மாட்டான். அவன் அவனது தொழிலை கவனிக்க செல்வான்.
கிருஷ்ணா நினைப்பு இல்லையென்றால் அந்த இடத்தில் தன்னை மாமா நிற்க வைத்தால், அப்பாவிற்காக மகள் சம்மதிப்பாளென்று எண்ணினான்.
அப்படி நினைத்தவன் ஒரு முறை விகர்த்தனனோடு பழகிய சமயம், “சம்ருதி சார் கூட என்ன போட்டோ. நான் எடுக்கறேன்” என்று முன் வந்தான்.
சம்ருதி அன்று முழுவதும் விகர்த்தனனை தவிர்க்கும் படியாக வசந்த் முன் வந்து இடையில் நின்றான்.
ஏனோ விகர்த்தனனோடு இத்தனை நாள் பக்கத்தில் நின்று பேசி பழகியது பழக்கமாகிட, அன்றைய நேரத்தை மிகவும் நெட்டி தள்ளினாள். உறக்கம் முற்றிலும் வராத சமயம், பக்கத்தில் மெல்லிய திரைப்படம் ஓடுவது செவிக்கு கேட்டது.
நேரம் காலம் எல்லாம் பாராது விகர்த்தனனுக்கு அழைத்தாள்.
‘ஹ..லோ..” என்று கத்த, அவன் பேசுவதை விட ஒலிப்பெருக்கி சப்தம் நாலாப்பக்கம் கேட்டது.
”அய்யோ ஒன்னுமே கேட்கலை. நீங்க தூங்கலையா?” என்று கத்தினாள்.
”Sam ஒன்னுமே கேட்கலை.” என்று இரண்டு மூன்று முறை கத்தி அதன்பின் படத்தை நிறுத்திவிட்டு, “ஹலோ விகர்த்தனன் என்ன பண்ணறிங்க? என்ன சத்தம்?” என்று சம்ருதி குரல் அறையில் அலைப்பேசி மூலமாக எதிரொலித்தது.
“உப்ஸ்.. மூவி பார்க்கறேன் Sam. நீ தூங்கலையா? என்ன கால் பண்ணிருக்க” என்று விசாரித்தான்.
”தூக்கமே வரலை பால்கனி வந்து வெளியே எட்டி பார்த்தேன். உங்க ரூம்ல பக்கம் லைட்டா சத்தம். அதான் தூங்கலையான்னு கேட்டேன். நீங்க இப்படி சத்தத்தோடு படம் பார்க்கறிங்க” என்று கூறவும், “ஏ… பால்கனி பக்கம் இருக்கியா” என்று டோர் திறந்து வெளிவரும் சப்தம் அதை ஒட்டி பால்கனி வந்து முறுவலை உதிர்த்தான். இந்த நேரம் சம்ருதி அங்கிருந்தால் எட்டி பார்த்திட வந்த ஆவல்.
“ஏன் தூங்கலை?” என்று விசாரித்தான். போனை கீழே இறக்கி நேரிலேயே பேசினான்.
“தெரியலை… நீங்க என்ன படம் பார்க்கறிங்க? நீங்க தூங்கலையா?” என்று ஏக்கமாய் கேட்டாள். அவர்கள் ஏக்கத்திற்கு தூபாமிட்டது தென்றல் காற்று.
“மூன்று நாள்ல இந்தியா கிளம்பணும் சம், அப்பா வந்திருப்பார். அவரிடம் நிறைய பேசணும். பிறகு வேலை கம்பெனி தினசரி லைஃப் அப்படியே போயிடும். என்னவோ எப்பவும் இல்லாம இன்னிக்கு தூக்கமே வரலை.” என்றான்.
“ஏ மூவி பார்க்க வர்றியா?’ என்றான். விகர்த்தனனுக்கு நன்றாக தெரியும். இன்று சம்ருதி அருகாமை தடைப்பட்டதில் தூக்கம் மறந்து திரிவதை.
அதனால் அவ்வாறு கேட்டான். அவளுக்கும் அதே உணர்வு ஓடுகின்றதே.
“அட கதவை திறந்து வந்தா வசந்த் முழிச்சிடுவான். அப்படியென்ன மூவி. ஒன்னும் தேவயில்லைன்னு பக்கம் பக்கமா பேசுவான். ஜனனியும் தூங்கறா எழுப்ப முடியாது” என்றாள் முகம் சிறுத்து.
“ஓ… அப்ப நீ மட்டும் வா” என்று கூப்பிட்டதும் சம்ருதி பட்டாம்பூச்சியாக மகிழ்ந்து கதவை திறந்து வந்துட்டு, படம் முடிய திரும்பினா வசந்த் பார்ப்பான். அவன் இரண்டு நாளா ஓவரா கன்ட்ரோல் பண்ணறான்.” என்று மறுத்தாள்.
‘பால்கனி டூ பால்கனி ஜம்ப் பண்ணி வா. நடுவுல கொஞ்சம் தான் ஸ்பேஸ்.” என்று கூற, கீழே குனிந்து பார்த்தாள்.
”கால் சிலிப் ஆச்சு நான் கீழே விழுந்து செத்துடுவேன்.” என்றாளே தவிர வரமறுத்து பேசுவதாக வார்த்தை விடவில்லை.
“வெயிட்” என்றவன் தன்னுடைய இடத்தில் சுவரில் நீண்ட செவ்வகம் வடிவத்தில் இருந்த புகைப்பட சட்டகத்தை எடுத்தான்.
உயர்ந்த மரகட்டையால் மிக வலிமையான முறையில் ப்ரேம் செய்யப்பட்டு உள்ளே ஓவியம் இருந்தது. அதன் எடையோ நிச்சயம் ஐம்பது கிலோ வரை இருக்கும். அதனை எடுத்து அவள் பால்கனிக்கும் தன் பால்கனிக்கும் பாதை அமைத்தான்.
மூன்று அடி இடைவெளியுடையது இரண்டு பால்கனிக்கும். இந்த புகைப்பட சட்ட பலகை ஐந்தடியில் இருக்க அதனை போட்டுவிட்டு கையை தட்டிவிட்டு “இப்ப வா” என்று கூறினான்.
அப்பொழுதும் மறுத்து பயந்தவளை கண்டு, “நான் வந்து காட்டறேன்” என்று ஏறினான்.
”விகர் ப்ளீஸ் வேண்டாம். சேப் கிடையாது. கீழே விழுந்தா என்னால் தாங்க முடியாது” என்று மூச்சு வாங்க கூற, அவனோ மடமடவென வந்து சிரித்தான்.
விகர்த்தனன்…. அவளது அறையில் அவளது பால்கனியில்… எச்சிலை விழுங்கி ஜனனி வந்து விட்டாளாயென்று எட்டி பார்த்துவிட்டு, அறைக்கதவு தான் பூட்டி உள்ளதே என்று, அவனை ஏறிட்டாள்.
அருகே காண முடியாத கவலை. அருகே அவன் வந்ததும் பயமும் மிஞ்சியது. ‘விகர் பயமுறுத்தாம கிளம்புங்க.” என்று குரல் எழும்பாது கூறினாள்.
“படம் பார்க்க வர்றிங்க தானே? உங்களுக்கு பிடிச்ச ஜேம்ஸ்பாண்ட் மூவி தான். தனியா பார்க்க எனக்குமே போரடிக்கு” என்று வரமாட்டேனென்று கூறியவளை கைப்பிடித்து அழைத்தான்.
அவன் கைப்பற்றவும் ‘அவனுடன் செல்’ என்ற ஆசை உதித்தது.
அவன் பாதுகை வைத்த இடமெல்லாம் தன் பாதுகை வைத்து அன்னநடையிட்டு அவனை ஆர்வமாய் பார்வையிட்டவாறு பின் தொடர்ந்து வந்தாள். கீழே விழுந்தால் நிச்சயம் இறப்பு உறுதி செய்யப்படலாம். ஆனால் அதை உணரும் உயிராக சம்ருதி இல்லை.
விகர்த்தனன் பால்கனி வரவும், குதித்து இறங்கி அவன் முன்னே நடக்க பின்னால் தன் பால்கனியை ஒருமுறை பார்த்து விட்டு வந்தாள்.
ஹோம் தியேட்டர் அறையில் படத்தை இயக்கினான். சத்தம் காதை கிழிக்க, கொஞ்சம் பேசுவதற்கு தோதாக குறைத்து விட்டான்.
தனி தனி சோஃபாவில் படம் பார்க்க அமர்ந்தார்கள்.
கல்லூரி காலத்தில் தாய் தந்தையிடம் படத்திற்கு சொல்லிவிட்டு சென்றதால் இந்த மாதிரி அட்வென்ஞர் அவள் வாழ்வில் கிடைத்ததில்லை. இன்று அதை தாண்டிய புது அனுபவம். விகர்த்தனனுடன் படம் பார்க்க, அடிக்கடி இயல்பான பேச்சு. நடுநடுவே முத்தக்காட்சிகள் வரும் நேரம் சம்ருதி கைகள் நடுங்கியதென்றால், விகர்த்தனன் ஆர்வமாய் கன்னத்தில் தாங்கி பார்வையிட்டான்.
‘இதெல்லாம் மட்டும் ரொம்ப உன்னிப்பா கவனிடா’ என்று மனதிற்கு கருவினாள்.
ஏனோ அடுத்த முறை இதே போல சீன் வரும் நேரம் “எக்ஸ்கியூஸ்மீ” என்று எழுந்து சென்றான்.
வரும் பொழுது குக்கீஸ், ஆப்பீள் டேட்ஸ், நட்ஸ், டின் கூல் ட்ரிக்ஸ் என்று தட்டில் வைத்து நீட்டினான்.
அதெல்லாம் வயிற்றில் நிறைத்து குடித்து படத்தை பார்த்து முடிக்க, “இந்த படம் மறக்கவே மறக்காது” என்று சிலாகித்தாள்.
“மீ டூ” என்று அவளை ஈர்க்கும் காந்த சிரிப்பை உதிர்த்தான்.
என்ன நினைத்தானோ தங்கள் வந்ததிலிருந்து எடுத்த புகைப்படம் வீடியோவை ஓடிவிட்டான்.
தனது அறைக்கு கிளம்ப எழுந்தவள் மீண்டும் அமர்ந்து பார்வையிட்டாள்.
“ஏ.. Sam பிளைட் லேண்டானப்ப நான் செல்ஃபி எடுத்திருக்கேன். அதுலயும் நீ இருக்க, ம்ம்ம் விமானத்துல ஏறினதுலயிருந்து என்னையே பாலோவ் பண்ணறியா ‘Sam” என்று சும்மா கேட்டான்.
அவன் காரை பாலோவ் செய்து, அவன் தங்கும் விடுதியின் எண்ணை காண தொடர்ந்து, பார்வையிட்ட அவள் மனதோ, பயத்தில் “அ அ..அப்படியெல்லாம் இல்லை. இது கோஇன்சிடெண்ட்’ என்று மொழிந்தாள்.
”Nima product’வோட ஒரே பையன். சோ… நீ என்னை பாலோவ் பண்ணற?” என்று அபாண்டமான குற்றச்சாட்டை சிரித்து கொண்டே கூறினான்.
“ப்ளீஸ் நான் அப்படி அந்த அர்த்தத்தில் பாலோவ் பண்ணலை. பணத்தை வைத்து என்னை மதிப்பிடாதிங்க. நானும் பணக்காரி. அதுக்காக அப்படி காட்டிக்கணும்னு நினைச்சதில்லை. சொல்லப்போனா பணக்காரின்னு காட்டிக்கிட்டு இருந்தா இந்நேரம் நான் கிருஷ்ணா கூட இருந்திருப்பேன்.
உங்களை எதுக்கு நான் பாலோவ் பண்ணணும்?” என்று கண்ணீரை விழவிடாது கேட்டாள்.
“நான் விளையாட்டுக்கு சொன்னேன். ஏன் இவ்ளோ சீரியஸ். இன்னும் உன் காதலன் மனசுல இருக்கானா என்ன?” என்று கேட்டான்.
டின் கூல்டிரிக்ஸை பருகி, “என் காதலன் கிருஷ்ணானு எங்கயாவது சொன்னேனா? ஜஸ்ட் கிருஷ்ணா. எக்ஸ் லவ்வர். அவ்ளோ தான். சொல்லப்போனா இங்க வந்ததிலிருந்து நான் கிருஷ்ணாவை கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலை. காரணம் நீ..நீங்க நல்லா சுத்தி பார்க்க அழைச்சிட்டு போய், அவனை நினைக்கற அளவுக்கு சோர்ந்து போக விடலை” என்று தடுமாறினாள்.
‘காரணம் நீ தான் விகர்ந்தனன். என் மனசு உன்னை விரும்புது’ என்று நுணி நாக்கு வரை வந்துவிட்டது. ஆனால் காதல் தோல்வி அடைந்த கொஞ்ச நாளிலேயே மீண்டும் காதலில் விழுந்தேன் என்று கூற அவள் மனம் தடுத்தது.
நிசப்தமான பொழுதாக செல்ல, மெதுவாக வீடியோ காட்சிகள் ஒவ்வொன்றாய் வந்தது. ‘மீன் மேட்டிங்’ சீனை சம்ருதி விளக்கும் விகர்த்தனனை இலக்கியன் வீடியோவாக படம் பிடித்தான். என்ன பேச்சு மற்றவர்களின் சத்தத்தையும் சேர்த்தே உள்வாங்கியிருக்க, அவன் அன்று பேசிய பேச்சு கேட்கவில்லை.
இருவரும் இணைந்து கானொலி செல்ல ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.
”சாரி அன்னைக்கு அப்படி பேசியிருக்க கூடாது. பட் மீன் சண்டை போடலைன்னும் அதுங்க என்ன பண்ணுதுங்கன்னும் சொல்லணும்னு இருந்தேன்.” என்றான்.
அவ்ளோ அவனை பாராது அவன் பக்கம் கையெடுத்து கும்பிட்டு நகைத்தாள்.
‘இந்த பேச்சே வேண்டாம்.’ என்பது போல.
ஸ்பா செல்லும் போதும் திரும்பிய நாட்களும், அவனை ஒரு முறைப்புடன் பார்த்தாள்.
நமுட்டு சிரிப்புடன் அவனும் கடந்தான்.
சஃபாரி பார்கில் விலங்குகள் உலாவ, கூண்டில் மக்கள் பார்வையாளராக செல்வார்கள். அந்த நேரம் சிங்கம் இவர்கள் அமர்ந்த கூண்டில் தாவியதில் விகர்த்தனன் நெஞ்சில் முகம் புதைத்து டீஷர்ட்டை பற்றியிருந்தாள்.
‘இதை எப்படி கவனிக்காம விட்டேன்’ என்று விகர்த்தனனும், ‘கடவுளே இதை தான் வசந்த் பார்த்ததுட்டு அன்னைக்கு சொன்னானோ. ஓவரா விகர்த்தனனை இழைஞ்சிட்டு இருக்க’ என்று.
மீண்டும் மௌனம் எட்டி பார்த்திட, அதன் பின் இரவுகள் கழிந்தது.
லேசாக கண்கள் சொருக, தூக்கமா வருது” என்று கூறி நான் வந்த மாதிரியே போறேன்.” என்று எழுந்தாள்.
“Sam போக வேண்டாம். தூக்க கலக்கததுல சரியா கால் வைக்காம விழுந்துடுவ. காலையில் எக்ஸசைஸ் பண்ணும் போது எழுப்பறேன். அப்ப போ” என்றான்.
ஒரு ஆண் தங்கிருக்கும் இடத்தில், இரவில் தங்குவதா? என்ற பெரிய வினா பிறந்தது. இப்ப மட்டும் ஒரு ஆண் தனியா இருக்கறப்ப பால்கனில இருந்து இங்க தாவி வந்திருக்க சம்ரு.’ என்றது மனசாட்சி.
“உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா ஸ்டே பண்ணு.” என்று சாந்தமாய் உரைக்க, மந்திரத்தில் தலைக்கொடுத்தவளாக தலையாட்டினாள்.
”ஆங்… அந்த ரூம் ப்ரி. போய் தூங்கு.” என்று கூற திரும்பி பார்த்து அறைக்குள் நடந்தாள்.
கதவை தாழிட்டதும் ஒரு இனம் புரியாத உணர்வு. ‘நீ அவனை காதலிக்கின்றாய். அவன் சொல்லுக்கு கட்டுப்படுகின்றாய். உன் காதலை எப்பொழுது சொல்ல போகின்றாய்?’ இப்படி வரிசையாக கேட்டது அவள் மனசாட்சி.
‘தெரியலை ஆனா இந்த ஃபீல் பிடிச்சிருக்கு.’ என்று தலையணையை மார்புடன் அணைத்து கொண்டு நித்திரைக்கு சென்றாள்.
விகர்த்தனனுக்கு தன் மீது ஒரு பெண் இந்தளவு நம்பிக்கை வைத்ததில் மலைப்பு. அவள் தன்னை விரும்புவது அவள் கண்களில் தெறிக்கின்றது. கிருஷ்ணாவை விரும்பியவள் தற்போது அவன் வேறு பெண்ணை மணந்ததால் என்னை விரும்புவது தவறில்லை. ஆனால் நான் மறைக்கும் சில விஷயம்.
அவளுக்கு தெரிய வந்தால்…. அடுத்த நொடி, நான் மட்டுமா? அவள் வாழ்வில் பலரும் மறைத்து தான் பழகுகின்றார்கள். அவள் அதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லையென்று உறங்கினான்.
எது என்னவோ அவன் தங்கியிருக்கும் இடத்தில் அவள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
சூப்பர். . கதையின் நகர்வு அருமை
wow vikar and samru love nice moving . kandipa samru kanla love theriuthu tha vikar . aana nee ena maraikura ava kitta etho iruku polaye ava love failure nala un kitta solla thayangura nee ethana pani vachi avala thirupi kasta paduthida kudathu
Spe going waiting for next epi😍😍😍👌👌👌👌💕💕💕
Wow. Super. Vigar Sema romance. Interesting.
Intersting sis super super
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 10)
ஆஹா… ! திருட்டுத்தனமா பால்கனி குதிச்சேறி போறாங்கப்பா…! அது சரி, ரெண்டு பேர் மனசுலேயும் காதல் பூ பூத்திடுச்சு. ஆனா, விகர்த்தனன் எதையோ மறைக்கிறாப்லயே இருக்குதே.
ஒருவேளை, விகர்த்தனன் சம்ருதியோட பெற்றவர்களின் நெருங்கிய உறவோ…???
😇😇😇
CRVS (or) CRVS 2797
Maraikira vishyatha oda list mattum illa aalunga la lum.athigam than athula Vikarthanan um oruthan aana ivan enna maraikiran
Interesting episode.. amazing moves
Super sis nice epi 👌👍😍 appdi enna maraikuran parpom 🤔🧐
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice. Waiting for next. 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
💜💜💜💜💜
Super super😍😍💓💓