Skip to content
Home » நெஞ்சை கொய்த வதுகை -11

நெஞ்சை கொய்த வதுகை -11

அத்தியாயம்-11

சம்ருதி இருக்கும் அறையை தட்டி தட்டி பார்த்து திறக்கவில்லை என்றதும், தன்னிடம் இருக்கும் மாற்று சாவியை கொண்டு கதவை திறந்தான்.

குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்தாள் அவனின் தேவதை சம்ரு.

சம்ருதி… சம்ருதி டைம் ஆச்சு. எந்திரி” என்று கன்னம் தட்ட, “டூ மினிட்ஸ் விகர்” என்றாள்.

சொன்ன பிறகே ‘விகர்த்தனன் எங்கே இங்கே?’ என்று எழவும், உடற்பயிற்சி செய்து வேர்வை மழையால் நனைந்தவன் முகத்தை துடைத்தபடி, “டைம் அப் பேபி” என்றான்.

“உப்ஸ்.. சாரி சாரி.” என்று சிரித்தவள் எழுந்து தன் நிலையை காண, அவனாக சீப்பை நீட்டினான்.

“ரொம்ப பேய் மாதிரி இருக்கேனோ?’ என்று வாங்கி பாத்ரூம் கண்ணாடி பக்கம் சென்று, அங்கிருந்த மவுத் வாஷ் செய்தப்பின் தலையை லேசாக வாறினாள்.

“பேயா இருந்தாலும் அழகா இருக்கணுமே” என்று கூறியவனின் புஜத்தில் குத்தினாள்.

உடற்பயிற்சி செய்து வந்ததால் அவன் புஜம் கூடுதலாக கல் போல இருக்க, அவனை தீண்டியவளுக்கு தான் வலித்தது.

“மறுபடியும் பால்கனி வழியா போகணுமா?” என்று விழித்தாள்.

”நீ வாசல் பக்கம் போனாலும் எனக்கு கவலையில்லை” என்றான்‌ விகர்த்தனன்.

“இல்லை… வசந்த் பார்த்துட்டான் அவ்ளோ தான். நான் பால்கனியே ட்ரை பண்ணறேன்.” என்று கூறிவளிடம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாக பின் தொடர்ந்தான்.

ஓரளவு பயம் விட்டிருக்க கால் பதித்தாள். அந்த வழிபாதைக்கு போட்டிருந்த ஐந்து அடி ஆன்டிக் சட்டகத்தில் கால் பதித்து நடக்க, அவன் கையை விடாமல் நடந்ததால் விகர்த்தனனும் சம்ருதி பால்கனி பக்கம் வந்து சோர்ந்தான்.

“நீங்க என்ன?” என்றவள் கேள்வி கேட்கும் முன், அவள் பிடித்த விரல்களை சுட்டி காட்டி சிரித்தான்.

“சாரிப்பா. ஒரு கம்பர்டபிளுக்கு பிடிச்சேன்.” என்றவள் அவன் இரு விழிகளை சந்தித்து, “ஸ்வீட் மெம்மரிஸ்… சிங்கப்பூர் டூர்ல, சிங்கப்பூரை மறந்தாலும் என் வாழ் நாள்ல உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணின நேரங்கள் என்னைக்கும் மறக்காது.” என்று பேசினாள்.

“அதெப்படியும் மறந்துடும்.” என்று கொக்கி போட்டு பார்த்தான்.

“நெவர் மறக்கவே மறக்காது” என்று அழுத்தமாய் கூறினாள்.

விகர்த்தனன் சம்ருதியை காதலோடு கனிந்த பார்வை வீசிட, அவளுமே நாணத்துடன் கனிந்த இதயத்தில் சிம்மாசனமிட்டவனை உயிர் வரை நேசித்தவளாக கலந்தாள்.

இருவரின் மோன நிலையை ஜனனி கதவு தட்டும் சப்தத்தில் கலைந்தது.

“அச்சோ ஜனனி. நீங்க கிளம்புங்க. அவ நம்மளை தனியா பார்த்தா தப்பா எடுத்துப்பா” என்று களவாணியாக பாவித்து துரத்த பார்த்தாள்.

நாயகனுக்கு அந்த செய்கை பிடிக்காமல் “ஏன் நேத்து நாம தனியா தான் இருந்தோம்‌. அதுவும் நைட். இப்ப மட்டும் என்ன?” என்றான். அவன் கோபம் வெளிப்படையாக தோன்றியது.

சம்ருதியோ அதை அறிந்தவளாக, “நேத்து உங்களோட நான் தனியா இருந்தேன். காரணம் எனக்கு உங்க மேல இருந்த நம்பிக்கை. என்‌மேல எனக்கு இருந்த நம்பிக்கை.

ஆனா நாம சேர்ந்து இருந்தோம்னு தெரிந்து மத்தவங்களும் அதே நம்பிக்கையை நம்ம மேல வைக்க மாட்டாங்க. அந்த ரீஸனுக்காக தான் துரத்தறேன்.

என்னால உங்களுக்கு எந்த கெட்ட பெயரும், களங்கமும் வரக்கூடாது.” என்றவளை அப்படியே அள்ளிக் கொண்டு நெஞ்சோடு சேர்த்து முத்தங்களை வாறி இறைக்க நினைத்தான்.

ஆனால் காதல் என்ற அடிப்படை இல்லாமல் மற்றவை செய்வது தவறென்றதாலும், ஜனனி கதவை தட்டிக் கொண்டிருந்த காரணத்தினாலும் பால்கனி மூலமாக திரும்ப சென்றான்.‌

“விகர் பார்த்து மெதுவா” என்று கூற அவனோ மறுபக்கம் அவன் இருப்பிடம் சென்று “ஜனனியை போய் பாரு” என்றதும் சம்ருதி தான் தங்கிருந்த கதவை திறக்க ஓடினாள்.

கதவை திறந்த அடுத்த நொடி, “என்ன சம்மு எவ்ளோ நேரம் கதவை தட்டறது?” என்று வந்தாள். கூடவே வசந்தும்.

“ஆமா பேச்சு குரல் கேட்ட மாதிரி இருந்தது.” என்று கேட்டான்.

“ஆஹ்?” என்று வினோதமாக சம்ருதி வசந்தை பார்க்க, “இல்லை பேச்சு கேட்ட மாதிரி” என்று இழுத்தான்.

“செம தூக்கம் ஜனனி. இன்னும் கூட தூங்கியிருப்பேன். என்ன பண்ண எழுந்துட்டேன்” என்று கூறினாள்.

“சரி வா காபி வந்துடுச்சு” என்று ஜனனி அழைத்தாள்.

“பல் விலகிட்டு வர்றேன். நீங்க போ” என்று சம்ருதி துரத்த முயன்றாள்.

“இன்னுமா பல் விலக்கலை. ஆனா தலை எல்லாம் வாறிட்ட அதெப்படி?” என்று வசந்த் இத்தனை நாள் கோமாவில் கிடந்த மூளையை தூசுதட்டி விவரமாய் பேசினான்.

“வசந்த் அத்தான் ஒவ்வொன்னும் விளக்க முடியாது. போங்க வர்றேன்” என்று மிடுக்காய் உரைத்தாள்.

ஜனனி வசந்த் செல்லவும், வசந்த் அத்தான் என்ன ஓவரா அட்வான்டேஜ் எடுக்கறார். என்ன காரணம்?" என்று நகம் கடித்தவள் பல் விலக்க குளிக்க சென்றாள்.

ஹாலுக்கு வந்ததும் தந்தைக்கு அழைத்து பேசினாள். நீண்ட நேரம் தாய் தந்தையோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மனமார பேசினாள்‌‌. அவள் அப்படி பேசி முடித்து திரும்ப வசந்த் ஏதோ போரில் வென்ற மாவீரனை போல திளைத்தான். 

அவன் தோரணைக்கு காரணம் இருந்தது.‌ மாமா சந்திரசேகரிடம் “சம்ருதியை சந்தோஷமா பார்த்துக்கிட்டேன் மாமா. நீங்க வேணுமின்னா அவளுக்கு போன்‌ பண்ணி பேசி பாருங்க. அவ பேசற விதமே அவ சந்தோஷத்தை பிரதிபலிக்கும்’ என்று பெருமை பேசினான்.‌ பக்கத்தில அவன் தாய் சியாமளாவோ “பாரு தம்பி என் மகன் உன்‌ மகளை மாத்திட்டான். அவனுக்கு சம்ருதியை கல்யாணம் பண்ணி கொடு. இதே போல அன்பா அக்கறையா சந்தோஷமா பார்த்துப்பான்.’ என்று கூறவும், சந்திரசேகர், “சம்ரு இங்க வரட்டும் அக்கா. அவளிடம் கேட்டுட்டு அடுத்து கல்யாண விவகாரம் பேசலாம்.” என்று நிறைவாக பேசிவிட்டாரே.

வசந்த் தன் மாமா விஷயத்தில் சரியாக தான் காய் நகர்த்தினான்.

என்ன விகர்த்தனன் என்றவனை போட்டியாக எண்ணவில்லை. அவன் போட்டியில் நடுநாயகமாக விளையாடுவதும் அறிவில்லை.

விகர்த்தனனோ இறுதியான உறுதி முடிவாக சம்ருதியை விரும்புவதை அறிந்து விட்டான். அவள் கண்ணில் காதலும் உள்ளதை நன்றாக தெரிந்தவன் அடுத்த இலக்கை குறிவைத்தான்.‌

அது தான் காதலை அவளிடம் பகிர்ந்திடும் முடிவு. 

இந்த இரண்டு நாள் வசந்த் விகர்த்தனனை தவிர்க்க எண்ணினான். ஆனால் விகர்ததனன் அதற்கு முன் தவிர்க்கும் முடிவோடு, “ஹாய் கைஸ், அவுட்டிங்கா? எனக்கு வேற வேலை வந்துடுச்சு. அப்பறம் சந்திப்போம்” என்று முந்திக் கொண்டான்.‌

வசந்திற்கு ‘அப்பாடி’ என்ற நிம்மதி.

ஜனனி கூட “அந்த அண்ணா கூட போனா ஒரு பாதுகாப்பு இருந்தது.” என்று வார்த்தையை விட்டாள். வசந்த் தங்கையை பார்த்து “ஏய் முதல் நாள் குடிச்சிட்டேன்‌ இப்ப ஒழுங்கா தானே பார்த்துக்கறேன். யானைக்கும் அடி சறுக்கும். சும்மா கண்டவனை புகழ்ந்து அண்ணானு பேசற‌. உனக்கு நான் தான் அண்ணா.” என்று திட்டி விட்டான். எல்லாம் சம்ருதி இல்லாத சமயம் பார்த்து‌.

ஜனனியோ, "தண்ணில தங்கை விழுந்தப்ப காப்பாத்த வரலை. நீ என்ன அண்ணன்" என்று எதிர்வாதம் புரிந்தாள்.‌

“இங்க பாரு… எனக்கு புதுயிடம் காப்பாத்த வரலை. கொஞ்சம் எனக்கும் என் உயிர் பயம் இருந்துச்சு. இப்ப என்ன? நீ தான் சாகலையே. அப்படியே செத்திருந்தா நிம்மதியா இருந்திருப்பேன். சும்மா பேசாத. எனக்கும் சம்ருதிக்கும் அங்க நம்ம வீட்ல கல்யாணம் பேசுறாங்க. அதனால் சும்மா விடறேன். சம்ரு கூட கல்யாணம் முடியட்டும்.” என்று பத்திரம் காட்டி சென்றான்.‌

ஜனனியோ ‘பாவம் சம்ரு. இப்ப காதல்ல தோல்வி. அடுத்து இவனை கல்யாணம் செய்தா கல்யாணத்துலயும் பெரிய தோல்வியை சந்திப்பா’ என்று முனங்கினாள்.

அவளுக்கும் தெரியுமே‌. அன்னை சியாமளா இவளிடம் அண்ணன் சம்ரு கூட பேச விரும்பினா நீயா ஒதுங்கணும். அவன் கல்யாணம் பண்ணறவன். மனசு விட்டு பேச விரும்பலாம். என்ன புரியுதா?” என்று ஏத்தி விட்டு தானே அனுப்பினார்.

ஆளாளுக்கு ஒரு முடிவோடு திரிய சம்ருதியோ, ‘நம்ம அவர் ரூமுக்கு பால்கனி வழியா போனது அப்ப ஜாலியா எடுத்துட்டு‌, பிறகு என்ன பொண்ணு இவனு இப்ப விலகுறாரா?’ என்ற இதயகாயத்தோடு இருந்தாள்.‌

 அதே மனவருத்தம் ஊருக்கு திரும்பி செல்வதா? என்ற வாட்டத்தை தந்தது. 

‘இங்கேயே இருக்க முடியாதே.’ என்ற கவலை. அவள் இருந்தாலுமே அவன் இருக்க வேண்டுமே. விகர்த்தனனும் கிளம்பி விடுவதாக அல்லவா உரைத்தான்.

அவனின் அலைப்பேசி எண் உள்ளது.‌ அது போதுமா? ஊருக்கு சென்றதும் பர்ஸனல் நம்பர் நிராகரித்து அலுவலக பிஸியில் தன்னை மறப்பானோ? இந்த இரண்டு நாளும், ஏன் இதோ லக்கேஜ் எடுத்து வைக்கும் நேரமும் சம்ருதிக்கு இதே யோசனை.

“வர்றப்ப மூன்று லக்கேஜ். இப்ப ஐந்து லக்கேஜ்.” என்று ஜனனி பெட்டியை பூட்டி விட்டு பார்த்தாள்.

“சம்ரு இதே பிளைட்ல தான் விகர்த்தனன் அண்ணா வர்றார்?” என்று கேட்டாள்.

“ஆமா” என்று சம்ருதி உரைக்க, “ஓ… அப்ப அவரோடவே போகலாமா?” என்று இதற்கு மட்டும் கேட்டு நின்றான் வசந்த்.‌

“அவர் வேறொருத்தரை சந்திச்சிட்டு அப்படியே வருவேன்னு சொன்னார். ஆல்ரெடி அவர் ரூமை வெக்கேட் பண்ணிட்டார்.” என்று சம்ருதி வருத்தம் நிறைந்த குரலில் கூறவும், வசந்த் “அப்ப டாக்ஸி தான் பிடிக்கணும். எக்ஸ்ட்ரா சார்ஜ்” என்று முனங்கினான்.

சம்ருதிக்கு அந்த நேரம் ‘உனக்கு விகர்ந்தனன் கார் மட்டும் வேணுமா? எக்ஸ்ட்ரா சார்ஜ் சை.. என்ன ஜந்துவோ’ என்று பார்த்ததை அவன் கவனித்திடவில்லை.

அவன் டாக்ஸி புக் செய்து விட்டான். பேக்கிங் செய்தவை கீழே வந்திறங்க சம்ருதிக்கு உதவினான். பின்னர் ரிசப்ஷனில் காத்திருந்தனர்.

இதே இடத்தில் விகர்த்தனன் ரூம் கீயை வாங்கி சன்னமான சிரிப்பில் தன்னை கடந்து சென்ற முதல் நாள் தித்திப்பாய் நினைவுப்படுத்தியது சம்ருதிக்கு.

அவன் இல்லாத சமயமும் அவன் நினைவுகளோடு உலாவினாள் நாயகி.

ஹோட்டலில் தங்கிருந்த இடத்திலிருந்து சிங்கப்பூர் விமான நிலையம்‌ வந்ததும் கண்கள் அலைபாய்ந்தது. விகர்த்தனன் இல்லை.

மாறாக இலக்கியன் தான் சம்ருதி பின்னால் நின்றிருந்தான். 

“அவர் வரலையா?” என்று கேட்டவளிடம், “சார் வந்துட்டு இருக்கார் மேம்.” என்ற பதில் மட்டும் இலக்கியனிடம் கிடைத்தது.

ஜனனியோ இலக்கியன் நின்றிருந்ததால் அந்த பக்கமே வரவில்லை. வசந்த் மற்றும் சம்ருதி நின்றிருந்தார்கள். 

இலக்கியனை நடுவில் காணாமல் போனதற்கு ஒருவிதத்தில் ஜனனி காரணம். ‘இவள் கடலில் விழும் போது இலக்கியன் சிரித்து விட்டான். அவளுக்கு அவமானமான உணர்வு, அதே தான் நினைவு வந்தது. அதனால் தான் இலக்கியனை அடுத்தடுத்த நாள் வரக்கூடாதென்று விகர்த்தனனிடம் சொல்லியிருந்தாள் ஜனனி. அவன் வந்தா நான் வரலை அண்ணா. அவனை பார்க்கறப்ப கீழே விழுந்ததே நினைவு வருது. என்றதற்காகவே விகர்த்தனன் இலக்கியனை தவிர்த்து விட்டான்.
இன்று கடைசி நாள் வேறு வழியில்லை விகர்த்தனனை வழியனுப்ப வந்தான் இலக்கியன்.

ஆளாளுக்கு விமானத்தில் ஏறும் நேரத்திற்கு நெருங்கிக் கொண்டிருக்க, தன் பின்னால் நின்றவன் நெருங்கி வந்து கழுத்தோரத்தில் பேச முற்படுவதை அறிந்து சம்ருதி விழிகள் பிரகாசித்தது. ஏனெனில் பின்னால் நிற்பது இலக்கியனாக தெரியவில்லை. அது விகர்த்தனன் என்று அவன் வாசனை திரவியம் கூறிவிட்டதே.‌

“ஹாய்” என்றதும், “ஏன் இவ்வளோ லேட் எங்க போனிங்க?” என்று திரும்பினாள்.

கையில் மலர் கொத்து வைத்து, “ஒரு அழகான பொண்ணுக்கு என்‌ நினைவை தர்ற பூங்கொத்து” என்று நீட்டினான்.

ஏற்கனவே ஜனனி ஒன்று வைத்திருந்தாள். அதனாலும் வாங்குவதில் தவிர்க்கவில்லை. வசந்திற்கு பாகுபாடு தோன்றவில்லை. ஆனால் சம்ருதியிடம் கொடுக்கும் போது, “இன்னிக்கு தங்கை உறவை குறிப்பதா ஜனனியிடம் பூங்கொத்து தந்தேன். அவ நன்றி சொல்லி வாங்கிட்டா.

ஆனா உனக்கு நான் தர ரீஸன் ‘காதலுக்கு விதையா’ இந்த மலர். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த இடைப்பட்ட நாள், பேசியது பழகியதை தாண்டி, பல ஜென்மம் உன்னோட வாழ்ந்த பீல். ஏதோ இப்ப லவ் சொல்லிடலாம்னு வந்துட்டேன். எனக்கு உன்னோட பாஸ்ட் தேவையில்லை.

உனக்கும் சேம் ஃபீலிங் இருக்குன்னா மெஸேஜ் பண்ணு. அப்பறம் சுத்தமா என்னை பிடிக்கலைன்னா பூவை டஸ்பின்ல போட்டுடு. தட்ஸ் இட்” என்று கனிவாய் கூறி, முன்னே செல்ல கை காட்டினான் விகர்த்தனன்.

சம்ருதி பேயறைந்தது போல திகைத்து நின்று முன்னே நகர்ந்தாள். வசந்த் இலக்கியனோடு பேசிக் கொண்டிருந்தான். அதன் காரணம் இந்த தனிமை அமைந்தது. இல்லை இல்லை சம்ருதியோடு பேச தனிமையை அமைத்து கொண்டான் விகர்த்தனன் என்றால் சரியாக இருக்கும்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

15 thoughts on “நெஞ்சை கொய்த வதுகை -11”

  1. Kalidevi

    vikar love propose panitan crt time la but sam accept pananume ena pathil solla poralo shock agi nikura vera . samru avan thappa ninachitu avoid panrano ninacha but ipo intha proposal ethir pathu iruka mata thane . super epi next ena pakanum

  2. M. Sarathi Rio

    நெஞ்சை கொய்த வதுகை …!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 11)

    ” காதல் வந்ததும்…
    கன்னியின் உள்ளம்…
    காதலை யாருக்கும்
    சொல்வதில்லை…

    புத்தகம் மூடிய மயிலிறகாக…
    புத்தியில் மறைப்பாள்
    தெரிவதில்லை…

    நெஞ்சே என் நெஞ்சே…
    செல்லாயோ அவனோடு…
    சென்றாள் வரமாட்டாய்…
    அது தானே பெரும்பாடு…!”

    இந்த காதல் வந்துட்டாலே, கள்ளத்தனமும், பொய்யும் வந்திடும்போல…!

    எப்படியோ… ஏர்போர்ட்ல வைச்சு
    விகர்த்தனன் ப்ரபோஸ் பண்ணியாச்சு….!

    இங்க இன்னொருத்தன்… கமுக்கமா போன்கால் போட்டு
    மாமனுக்கு தன்னோட கல்யாண ஆசையை
    தெரிவிச்சாச்சு..!

    இப்ப டைரக்ட் ப்ரபோஸல் சக்ஸஸ் ஆகுமா…?

    இல்லை, இன்டைரக்ட் போன் கால் சக்ஸஸ் ஆகுமா…?
    😆😆😆
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *