அத்தியாயம்-12
சம்ருதியிடம் விமான நிலையத்தில் காதலை சொல்லிவிட்டு, சாதாரணமாய் விகர்த்தனன் அவன் இருக்கைக்கு சென்று அமர்ந்து சீட்பெல்ட் அணிந்துக் கொண்டான்.
சம்ருதி அவளுக்கான இடத்தில் அமர்ந்து அவனையே வெறித்தாள்.
விகர்த்தனனுக்கு அருகே இருந்த ஆண் பயணியிடம் அவன் பேச்சு சீராக போனது. இங்கே ஒருத்திக்கு தான் சீரான மூச்சும் விடமுடியாது துடித்தாள்.
சற்று முன் வரை விகர்த்தனன் ‘அவனது பால்கனி ஏறி சென்று அறைக்குள் உறங்கியதால் தன்னை தவறாக நினைத்ததாகவே எண்ணி, மூன்று நாட்கள் நிராகரித்து சென்றான் அல்லவா அவள் வாடியது, துடித்தது.
இன்று மூன்று நாள் வாட்டத்தை ஈடுகட்டும் விதமாக காதலை பறைசாற்றி விட்டான். ஆனாலும் ஏதோ ஆணி அடித்தது போல இருப்பது ஏன் என்பது அவளுக்கே தெரியவில்லை.
காதல் தோல்வி என்று ஊர்சுற்றி பார்க்க தந்தையிடம் அடம்பிடித்து அனுமதி வாங்கி வந்தவள்.
இங்கே மீண்டும் ஒரு காதல். இதை எப்படி தந்தையிடம் உரைப்பது.
தன்னை தாய் தந்தை அசிங்கமாக எண்ணுவார்களா? முதலில் விகர்த்தனனிடம் எவ்வாறு காதலை ஏற்பதாக கூறுவது?
முன்பு தான் கிருஷ்ணா விஷயத்தில் சட்டென முடிவு செய்து முழித்தோம். இந்த முறையும் அவசரம் வேண்டுமா?' என்று விகர்த்தனனை இமைக்க மறந்து பார்வையிட்டாள்.
அவனும் இவளை தான் பார்த்தான். கூடுதலாக மயக்கும் மாய புன்னகை, அதோடு என்னவோ உதட்டசைத்து கூறுகின்றான்.
என்ன என்று புரியாது தவிக்க, கையை பிளைட் டேக்ஆஃப் ஆவது போல செய்கை செய்தான்.
சம்ருதிக்கு அதன் பின்னே விமானம் புறப்பட்டால் பயம் வருமே இன்று என்ன பயப்படாமல் அவனையே வெறித்து பார்க்கின்றேன் என்று ஆச்சரியப்பட்டாள்.
அவனை தவிர வேறெங்கும் கண்கள் செல்லவில்லை.
பக்கத்தில் ஜனனி ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்க்க, வசந்த் ஏர்ஹோஸ்டர் பெண்களை தான் விழுங்கினான்.
தொடை வரை ஏறிய உடை, நன்றாக கச்சிதமாக கவ்வியிருக்க அவன் ஆண்மனம் அலைப்பாய்ந்தது.
சம்ருதி குழம்பி தவிக்க, விகர்த்தனன் கண்கள் வேறு காதல் இம்சை கூட்ட, ஐ மாஸ்க் பொருத்தி கொண்டு மூடிவிட்டாள்.
மூடிய விழியில் அவன் முகமே.
நான்கு மணி நேரமாக விகர்த்தனனுக்கு என்ன பதில் தருவதென்று யோசித்தாள்.
அலைப்பேசி எண் உள்ளதால் பதிலை அப்பறம் பார்ப்போம். தந்தை எப்படியும் இன்னும் கொஞ்ச காலம் தன்னிடம் திருமண விஷயம் குறித்து பேச மாட்டார். அதற்குள் கிருஷ்ணாவை பற்றிய செய்தி மடிந்துவிடும்.
இவ்வாறு நினைக்க, "சம்மு" என்ற சுரண்டல் ஜனனி தான்,
“பிளைட் லேண்ட் ஆகிடுச்சு. இறங்குவோம்” என்றதும் “லேண்ட் ஆகிடுச்சா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள்.
“ம்ம் விகர்த்தனன் அண்ணா இறங்கிட்டார்.” என்று சுட்டி காட்ட, தலையை விசுக்கென திருப்பினாள்.
அவன் இறங்கும் சமயம் பார்க்க நேரிட்டது. ஒர் வினாடி மட்டுமே.
பதட்டமாய் எழுந்து நகர முயன்றால், அவளுக்கு முன் நின்றவர் மெதுவாக நடக்க, ஏதோ உயிர் பிரிந்து தனித்து செல்வது போல இருந்தது.
ஏர்போர்ட் வளாகத்தில் தன் உடமையை எடுத்து நின்றிருந்த விகர்த்தனனை மீண்டும் பார்த்தப்பின்னே உயிர் பெற்றாள்.
வசந்த் விகர்த்தனன் நண்பர்கள் போல பேச, ஜனனியோ "அண்ணா ஒருநாள் வீட்டுக்கு வாங்க." என்றாள்.
வசந்தோ ‘லூசு, ரயில் பிரெண்ட் எல்லாம் ஸ்டேஷன் நடைப்பாதையிலேயே போயிடும். இந்த விமான பயணம் மட்டும் வீட்டுக்கு வருமா?’ என்று எகத்தாளமாய் நினைத்தான்.
“முயற்சி பண்ணுறேன் மா.” என்று கூறிவிட்டு, வசந்த் கார் புக் பண்ணறியா” என்று கேட்டான்.
“பாஸ் மாமா கார் வரும். இது சென்னை சிங்கப்பூர்ல தான் கார் தேவைப்படும் டாக்ஸி புக் பண்ணணும். இங்க மாமா கார் மூனு இருக்கு” என்று பெருமை பேசினான்.
“ஓகே வசந்த் ஜாக்கிரதையா கூட்டிட்டு போ” என்று வசந்த் தோளில் தட்டி, “பை Sam” என்று ஓட்டம் பிடித்தான்.
வசந்த் மெதுவாக பின்தொடர, விகர்த்தனை அழைத்து செல்ல பி.எம்.டபிள்யூ கார் வந்திருந்தது.
வசந்த் வாயை பிளந்தவனாக, மாமாவை அடுத்து ஆடி கார் வாங்க சொல்லு சம்மு” என்று கூறினான்.
“நம்ம கார் எங்க நிற்குது” என்று கடுகடுத்து கேட்க ‘இங்க தான் டெர்மினல்ல பக்கத்துல..” என்று ஆஹ் அதோ’ என்று கைகாட்ட அந்த பக்கம் விறுவிறுவென நடந்தாள்.
சம்ருதி காரில் ஏறி அமர, மாம்பலம் ஏரியாவுக்கு கார் விரைந்தது. ஜனனி தொந்தரவு செய்யவில்லை. வசந்த் மட்டும் கெத்தாக திரிந்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் தாய் ஜானகி தந்தை சந்திரசேகரை கட்டி அணைத்து பாசத்தை பொழிந்தாள்.
மாமா சத்யமூர்த்தி அத்தை சியாமாள இருவரையும் கூட நலம் விசாரித்தாள்.
“சம்மு குட்டி, ஊர் எப்படி இருந்துச்சு. வசந்த் பத்திரமா பார்த்துக்கிட்டானா?” என்று பரிவாய் விசாரித்தார்.
நலத்தை உரைத்துவிட்டு பயணம் செய்த களைப்பில் ஓய்வு எடுப்பதாக நழுவிவிட்டாள்.
விகர்த்தனன் கார் அவன் வீட்டுக்குள் நுழைந்தது.
கேட் செக்கியூரிட்டி ஓடிவந்தான்.
லக்கேஜை எடுக்க ஆட்கள் வரவும் தந்தையை தேடி ஓடினான்.
அவன் வருகைக்காகவே அம்பலவாணன் ஹாலில் இருந்தார்.
“அப்பா.” என்றதும், “என்னடா தனியா வந்திருக்க? மருமக எங்க?” என்று அவனை தாண்டி சம்ருதியை தேடினார்.
பையனுக்கு திருமணம் முடிந்தால் அடுத்து பெரிய கடை முடியும் என்று நினைத்தார்.
“அடப்போங்கப்பா.. அவளிடம் இன்று தான் பிரப்போஸ் பண்ணிருக்கேன். அவ பதில் சொல்லட்டும். அப்பறம் கல்யாணத்தை பத்தி பேசலாம். மருமகள் அதுயிதுன்னு கோட்டை கட்டாதிங்க” என்று சிரித்து தனது அறைக்கு செல்ல, கூடவே நடந்தவர், “ஏன்டா ஒரு விஷயத்தை செய்யறதுக்கு முன்ன நாலு பக்கமும் இருந்து யோசிக்கறவன் நீ.
காதலை சொல்லிட்டு மருமகள் இல்லைன்னு சொல்லற. உன்னை காதலிக்கறதை தெரிந்து தானே விருப்பத்தை தெரிவிச்சியிருப்ப” என்று கேட்டார்.
விகர்த்தனன் நெற்றி சுருக்கி, அவனது அறைக்குள் வந்ததும், லக்கேஜ் அவனது அறைக்கு வந்து சேர, பணியாட்கள் சென்றதும்.
“சம்ருதி என்னை விரும்பறா. அது நூறு சதம் எனக்கு தெரியும். ஆனா… அவளுக்கு சிலது தெரிய வந்தா மறுக்கவும் வாய்ப்பிருக்கு” என்று முடித்தான்.
‘”சம்ருதி?’ இந்த பெயர் இதுக்கு முன்ன கேட்ட மாதிரி இருக்கு? ஆனா நினைவில் இல்லை.” என்று அவர் சிந்திக்க, “அப்பா… கிருஷ்ணாவோட லவ்வர் தான் சம்ருதி.” என்றான் மெதுவாக.
மெத்தையில் அமர போனவர், “விகர்த்தனன்… கிருஷ்ணாவோட லவ்வரா?” என்று திகைத்து அவ உன் பிரெண்ட் விரும்பின பொண்ணு? அவளா?” என்று வார்த்தையை மாற்றி மாற்றி கேட்டார்.
அவருக்கே கேள்வி ஒழுங்காக வரவில்லை.
“அப்பா… கிருஷ்ணா மேரேஜ்ல சம்ருதியை பார்த்தேன். அவளே தான் இந்த சம்ருதி. அன்னைக்கு பூவை கசக்கி போட்டு என்னை ஒழுங்கா கவனிக்கலை. மேபீ அந்த வினாடி… காதலனுக்கு கல்யாணம். அவனை மணக்கோலத்தில் பார்த்ததுட்டு கலங்கியவளா மத்தவங்களை பார்க்காம கடந்து போனா.
அப்ப நான் சம்ருதியை விரும்புவேன்னு நினைக்கவேயில்லை.
கிரீஷ்ணா அவன் அனுபவிச்சதை சொன்னதும் ஏன்டா அந்த பொண்ணை மிஸ் பண்ணின. உன்மேல தான் தப்புன்னு திட்டினவன் நான்.
சம்ருதி பாஸிங் க்ளவுட் என்று அதுக்கு பிறகு அவளை பார்க்க மாட்டேன்னு இருந்தேன்.
ஆனா சிங்கப்பூர் பயணத்துல என் பக்கத்துல உட்கார்ந்தா. அவளிடம் பேச பழக வாய்ப்பு கிடைச்சது.
அப்ப கூட அவளிடம் பழகிட்டு நல்ல சந்தர்ப்பத்துல அவளை சுத்தி நடந்த விஷயத்தை தெரிவித்து கிருஷ்ணா நல்லவன்னு சொல்ல நினைச்சேன்.
அவன் நல்லவன்னு சொல்லி என்ன மாறப்போகுது. அதோட எனக்குள்ள சம்ருதி பதிய ஆரம்பிச்சிட்டா அப்பா.
அவளை அடி ஆழம் வரை நேசிக்கறேன். அவ முன்ன கிருஷ்ணாவை விரும்பிய பொண்ணு. இப்ப என்னை மட்டும் விரும்பற பொண்ணு. அவ காதலை சம்மதிக்கட்டும். கிருஷ்ணா என் பிரெண்ட் என்றதை சொல்லிடுவேன். அதோட அவளை சுத்தியிருக்கற சிலந்தி வலையை கத்தரிச்சிடுவேன்.
அப்படி நடக்காம அவ என்னை விரும்பாம நிராகரிச்சா… நிராகரிச்சா.. நானும் காதல் தோல்விக்கு வெளிநாட்டுக்கு போறேன். காதல் தோல்வியை மறக்க முடியுமான்னு முயற்சி பண்ணுறேன்.” என்று வலி தேய்ந்த குரலில் கூறினான்.
இது சாத்தியமா என்று எண்ணும் போதே வலிக்கின்றதே. சம்ருதி தன்னை நிராகரிப்பாளா? என்ற கேள்வி ஆட்டத்தை கொடுத்தது.
அதே எண்ணம் அம்பலவாணனுக்கும் தோன்ற, “விகர்த்தனன்… நான் படாத கஷ்டமில்லை. அதெல்லாம் நினைச்சு பார்த்தா என்னை செதுக்க மட்டும்னீ நினைச்சிப்பேன். ஆனா நீ என் பையன். காதல் தோல்வி, அவளை மறக்க முடியலைன்னு ஏதாவது வலியோட வாழாத. என்னால தாங்க முடியாது. என்னோட உடலும் உயிரும் நீ தான்பா” என்று இன்றே கோரிக்கை வைத்தார்.
காதலை ஏற்பது ஏற்காதது ஒவ்வொருத்தரின் முடிவு. ஆனால் பாதிப்பு ஒரு குடும்பத்தை ஆட்டுவிக்கும் என்பது உண்மை.
அந்த அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாதென்ற வேண்டுதலோடு, “கிருஷ்ணாவுக்கு தெரியுமா டா. அவன் விரும்பிய பொண்ணை இப்ப நீ விரும்பறது” என்று கடுப்பாய் கேட்டார்.
“போன்ல ஸ்டேடஸ் பார்த்ததுட்டு போன் பண்ணினான் அப்பா. பக்கம் பக்கமா அறிவுரை, அவ வேண்டாம்னு.
அப்பறம் அவ நல்லவடா. உன்னை மாதிரி ஒருத்தன் அவ லைஃப்ல வந்தா நான் சந்தோஷப்படுவேன். ஆனா விடமாட்டாங்கன்னு போசினான்.
அதை நான் பார்த்துப்பேன்னு வாயடைச்சிட்டேன்.
அப்பா டிராவல் பண்ணி வந்தேன். கொஞ்சம் ரெப்ரெஷ் பண்ணிட்டு வர்றேன். முதல்ல சோகமா நினைக்காதிங்க. நீ பாஸிட்டிவ் டேட்.” என்றான்.
மகனுக்கு தனிமை தந்து அகலும் விதமாக அவரும் சென்றார்.
அவர் சென்றதும், ‘நிராகரிக்கற சீனே என் லைஃப்ல வரக்கூடாது. சம்ருதி என்னை விரும்பறா. கிருஷ்ணா பிரெண்ட் என்றது ஒரு காரணமா இருக்க கூடாது.’ என்ற பிடிவாதமான எண்ணம் உள்ளுக்குள் வேரூன்றியது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 appo Krishna va sam oda family dhan meratiyirupangalo parpom 🤔🧐
அப்போ கிருஷ்ணா சம்ருதி பிரிவுக்கு அவங்க அத்தை மாமா காரணமாக இருப்பாங்களோ
Wow it’s going intresting👌👌👌👌 eagarly waiting for nxt epi
Krishna samru pirinjathuku nadula etho onnu iruku . Samru va mrg la pathutu thirupi flight la pathu palaginathula tha vikar love vanthu iruku . Sam love accept pannanume epo pathil solluva . Unami therinja athuku ena react panuva therilaye
Nice update
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sema twist. Interesting
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 12)
ஓ மை காட்..! இது வேற இருக்கா…? அப்ப இந்த விகர்த்தனனோட ப்ரெண்ட் தான் அந்த கிருஷ்ணாவா..?
அய்யய்யோ..! இப்ப நமக்கே கொஞ்சம் டவுட் வருதே. சம்ருதி உண்மை தெரிஞ்சா, விகர்த்தனனை ஏத்துக்குவாளான்னு..?
கொஞ்சம் சந்தேகம் தான்..?
அதென்ன…? முதல்ல அவ தன்னோட காதலை ஏத்துக்கட்டும்… அதற்கப்புறம் அவளை சுத்தியிருக்கிற எல்லா தளைகளையும் எடுத்துச் சொல்லி சரி பண்ணிடலாம்ன்னு … அடிக்கடி வேற சொல்றானே அதென்ன..? வேறெதாவது வில்லங்கம் இருக்குதோ..? புரியலையே.. ???
😆😆😆
CRVS (or) CRVS 2797
Krishna oda friend than Vikarthanan athu confirm aagiduthu avan kalyanathula than samru ah va first time parthu iruken
Krishna ah thappa na van nu portrait pannathu indha vasanth oda appa ah va iruku ah neraiya chances iru ku epadiyum unmai veliya than ah varum athuvum Vikarthanan yarukaga vum avan love ah vittu kuduka ready ah la
Super sago Semma interesting sagi
Nice episode. Waiting 4 next. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💜💜💜💜
Super epi😍😍😍