Skip to content
Home » நெஞ்சை கொய்த வதுகை -13

நெஞ்சை கொய்த வதுகை -13

அத்தியாயம்-13

விகர்த்தனன் கதவை தட்டிய பணியாள், “சார் உங்க பிரெண்ட் கிருஷ்ணாவும் அவங்க ஓய்ப் வந்திருக்காங்க. ஐயா உங்களை கீழே வரச்சொன்னார்.” என்றதும் விகர்த்தனன் நீங்க போங்க வர்றேன்” என்று அனுப்பி வைத்தான்.‌

‌ ‘நேத்து தான் வீட்டுக்கு வந்தேன். அதுக்குள்ள கேள்வி கேட்க வந்துட்டான்.’ என்று முனங்கியபடி பின்னங்கழுத்தை தடவி வந்து சேர்ந்தான்.‌

அதற்குள் பணியாட்கள் புதுமண தம்பதியருக்கு பழச்சாற்றை கொடுத்து விருந்து உபசரித்தனர்.

“ஏன்மா இவனை கண்டிக்க மாட்டியா? ஹனிமூன்ல பாதில வந்துட்டானா? நாலு மிதி போட்டு முன்னால் காதலி விஷயத்தை கிளற வேண்டாம்னு செல்லலாம்ல” என்று கிருஷ்ணா பக்கத்தில் அமர்ந்தான் விகர்த்தனன்.‌

நவ்யாவோ அளவனா புன்னகையோடு “போங்கண்ணா… கல்யாண மேடையில் அடி வாங்கியும் இளிச்சிட்டு இருந்தார் பார்த்திங்க தானே?

பஸ்ட் டச் அதுயிதுன்னு ஓவரா பேசி என்னிடம் திட்டு வாங்கினார் அண்ணா.” என்று கூறினாள்.

“என்னடா என்னிடம் உதை வேணுமா? பஸ்ட் டச்சும் அதான். லாஸ்ட் டச்சும் அதான். இனி சம்ருதி என்னுடையவள்” என்று அதிகார தோணியில் விகர்த்தனன் உரைத்தான்.

  அம்பலவாணன் மகனை பார்த்து, "நான் சொன்னேன் கேட்டிங்களா?" என்றார். சற்று முன் விகர்த்தனன் சம்ருதி விஷயத்தில் ரொம்ப பிடிவாதமா இருப்பதா தெரியுது என்று கூறினார். அதெல்லாம் இல்லை அங்கிள்" என்று கிருஷ்ணா பேசினான்.‌

இதோ விகர்த்தனன் பேச்சு அப்படியில்லை என்று அவன் காதல் தீவிரத்தை சொல்லாமல் சொல்லியது.

“மச்சான்… நான் வந்ததே சம்ரு விஷயத்தை பேச தான்.” என்று கிருஷ்ணா கூற, “Sam பத்தி நீ என்ன சொல்ல போற. அதான் எல்லாம் சொல்லிட்டியே” என்று விகர்த்தனன் அவனை பேச விடாது தடுத்தான்.

“அண்ணா… அவர் சொல்வதை கேளுங்க.” என்று நவ்யா கூறவும், “சொல்லுடா புதுமாப்பிள்ளை.” என்று நக்கலாய் சீண்டினான்.‌

 ''என்னடா சொல்லணும். நீ என்ன  அர்த்தத்துல சம்ருவை காதலிக்கற? எனக்கு புரியலை.‌ அவ என்னை காதலிச்சவ, இப்ப உன்னை ஏற்றுக்க முடியுமா? நாளைப்பின்ன நான் இப்படி உரிமையா உன் வீட்டுக்கு வரமுடியுமா? அதோட என்னையே மடக்கி, என் வாயால சம்ரு வேண்டாம்னு சொல்ல வச்சாங்க. இந்த மாதிரி சூழ்நிலையில் எப்படி காதலிக்கிற" என்று புரியாது கேட்டான். 

விகர்த்தனனோ மிக இயல்பாய் "முதல்ல சம்ருவை காதலிச்சதை நீ மறந்துடு. உனக்கு நவ்யாவோட கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன்லாம் முடிஞ்சது. நீ இப்ப சிங்கிள் இல்லை. எக்ஸ்பெயரான ஆள்.

சம்ருதி இப்ப என்னை விரும்பறா. என்னை மட்டும் விரும்பறா? பார்த்தல்ல… ஒவ்வொரு‌ ஸ்டேடஸிலும் பக்கத்துல இருந்தான்னு.‌ அவ என்னை பார்த்த பார்வைக்கு உனக்கு அர்த்தம் தெரியுதா?

ஏன் சம்ருதியை காதலிச்சு நீ நவ்யாவை மணந்துக்கிட்டது போல சம்ருதியும் என்னை மணந்துப்பா.

அவ மணந்தாலும் மணக்காவிட்டாலும் நீ என் நண்பன்டா. அப்படியிருக்க நீ இந்த வீட்ல எப்ப வேண்டுமென்றாலும் வரலாம். அவ ஏன்‌ தடுக்க போறா?

அதோட உன்னை மடக்கி உன் வாயால சம்ருதி வேண்டாம்னு சொல்ல வச்சவங்களால் என்னை மடக்கி அதட்ட சொல்லு. முடிஞ்சா செய்யட்டும். என் பக்கத்துல கூட நெருங்க விடமாட்டேன். சம்ருதி பக்கமும் நெருங்க விடமாட்டேன்.

சம்ருதி காதலிச்சாலும் காதலிக்காவிட்டாலும் அவ எனக்குரியவள். இது மாறாது.

சேலஞ்ச் பண்ணட்டுமா? என்னை வேண்டாம்னு சொன்னா கூட அவ வேற யாரையும் காதலிக்க மாட்டா, கல்யாணம் பண்ணவும் மாட்டா.

ஏன்னா அந்தளவு நான் அவ மனசுல ஆழமா இருக்கேன்.‌” என்று ஆணித்தரமாக பேசினான்.‌

கிருஷ்ணாவுக்கு சங்கடமான உணர்வு வந்து, “விகர்த்தனன் அவ என்னையும் ஆழமா தான் விரும்பினா. நானும் மனசார நேசிச்சேன்டா‌. ஆனா இப்ப மறந்துட்டா. நானுமே..” என்று தயங்கி தயங்கி நண்பன் பழகிய நிலை தெரிந்தால் அவனையும் மறக்க நேரலாமென்ற ரீதியில் எடுத்து சொன்னான்.‌

“நிறுத்து டா…. அவளை விட்டுட்டு போக முடிவெடுத்தவன் நீ. அப்ப அவ உன்னை மனசுலயிருந்து தூக்கி தான் போடுவா. நான் அவளை என்னைக்கு விட்டுட்டு போக மாட்டேன்.” என்று சற்று கோபமாய் கூறினான்.

காதல் இருந்தால் இந்த உணர்வு வருமோ. அவள் எனக்கு மட்டும் தான். பிரிவு என்ற வார்த்தையே அகராதியில் சேர்க்காதே என்பது போல.

“மச்சான் நான் என்ன வேண்டுமின்னே அவளை கழட்டி விட்டேன். என்னை லாரி ஏத்தி கொள்ள முயன்றான்.‌ நான் அதை பத்தி கவலைப்படமா லவ் பண்ணறேன்னு நிலையா இருந்தேன் தானே?! சம்ருதி சாப்பாட்டில் விஷம் கலந்து புட்பாய்ஷன் ஏற்படுத்தி, இரண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருந்து உயிர் போய்‌ உயிர் திரும்ப வந்தாடா. இன்னமும் காதலிக்கறேன்னு அவ பின்னால சுத்தினா வீட்ல வச்சி அவளுக்கே தெரியாம கொன்னுடுவாங்கன்னு பயந்தேன்.

அந்தளவு பயமுறுத்திட்டாங்கடா. நீயே சொல்லு. சம்ருதியை அந்த இரண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருந்தப்ப எப்படியெல்லாம் மிரட்டினாங்க தெரியுமா? நான் மனசை கல்லாக்கிட்டு தான் சம்ருதியை பிரிந்தேன்.

எங்க உனக்கும் ஏதாவது செய்து நீயும் பாதிக்கப்படக்கூடாது, சம்ருதியும் பாதிக்க கூடாதுன்னு பேசறேன்.” என்று நண்பனையும் தன் முன்னால் காதலியின் நலனையும் விவரித்தான் கிருஷ்ணா.

விகர்த்தனன் “இந்தமுறை எவனாவது வந்து மிரட்டட்டும்‌. அவனை ஹாஸ்பிடலுக்கு அனுப்புவேன். தவிர விட்டு கொடுத்து போற பிஸ்னஸ் எனக்கில்லை.

நீ விலகி போயிருந்த.. ஏன்னா அது நீ... 

இப்ப நான்… சாதாரணமாகவே ‘நான்’ என்றாலே அகம்பாவம், தலைக்கனம், செருக்கு எல்லாம் இருக்கும்.

அதிலும் விகர்த்தனன் என்ற நான் ரொம்ப செருக்கு கொண்டவன். 

நீ என்பதை விட நான்… யாருன்னு இந்த முறை தெரிந்துச்சுப்பாங்க. தெரிய வைப்பேன்.

சம்ருதி எனக்கானவ” என்ற அழுத்தம் அவனுக்குள் வேருன்றியது.

கிருஷ்ணாவோ “சரிடா… இனி இதை பத்தி நான் பேச மாட்டேன். உன் லவ்வரிடம் பிரப்போஸ் பண்ணியதா அங்கிள் இங்க வந்ததும் சொன்னார். உன் சம்ருதி பதில் சொல்லிட்டாங்களா இல்லையா?” என்று ஆர்வமாய் கேட்டான்.

"சொல்வா... குயிக்கா... கண்டிப்பா சொல்வா" என்றவனுக்குள் சட்டென பெய்த மாமழையை போல ஒரு புன்னகை ஒட்டிக்கொண்டது. 

  "பேசியாச்சா... உங்க இரண்டு பேர்ல யார் லக்கி பிரெண்ட்னு சத்தியமா தெரியலை" என்று வியந்தாள் நவ்யா. 

“அட இதுல ஆச்சரியம் என்ன? என் நண்பன் தான். பாரு… ஸ்கூல் பிரெண்ட் நான் எந்த காலேஜ் படிக்கறேன்னு என்னோடவே நான் படிச்ச காலேஜ்ல வந்து படிச்சான்.

என் கல்யாணத்துக்கு என் கூட மாப்பிள்ளை தோழனா இருந்ததை விட, வந்தவர்களை வரவேற்று கவனிச்சான்.

நான் தான் காதலை உதறினேன். ஆனா அவன் விடாப்படியா இருக்கான். ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை கொடுத்து மோசம் பண்ணலை” என்று வாடினான் கிருஷ்ணா.

விகர்த்தனன் நவ்யாவிடம் வந்தது நின்று “அட காதலிச்சவ நல்லாயிருக்கணும்னு விட்டு கொடுத்து ஒதுங்கினான்.

ஏன்‌ உன்கிட்ட உண்மையை சொல்லி தான் கல்யாணம் செய்தான். நேர்மையானவன் மா. என்ன கொஞ்சம் பயந்துட்டான்.” என்றான்.

“இப்படியே மாறி மாறி சொல்லாம மருமக மனசுல என்னயிருக்குன்னு பாருடா” என்று அம்பலவாணன் அலுத்துக் கொண்டார்.

அவருக்கு மகன் திருமணம் நல்லபடியாக முடியும் வரை சில பயம் உள்ளதே.

"முதல்ல புதுமண தம்பதியருக்கு விருந்து சாப்பிடட்டும்." என்று அழைத்து சென்றான். 

சம்ருதி அவள் வீட்டில் நகம் கடித்தபடி, விகர்த்தனன் கொடுத்த பூங்கொத்தில் மனதை பறிக்கொடுத்தவளாக இருந்தாள். சில்லென்ற ஏசிகாற்றில் ஒற்றை பூவிலிருந்து ஓரிதழ் தனித்து வந்து தரையில் சரிய தள்ளாட, சம்ருதி வேகமாக வந்து தன் கரத்தால் ஏந்தினாள்.

ஏந்திய அடுத்த நிமிஷம், உனக்கு என்னை பிடிக்கலைன்னா இந்த பூவை டஸ்பீன்ல போட்டுடு’ என்ற விகர்த்தனன் வார்த்தை செவியில் ஒலிக்க, காதலை சொல்ல தாமதப்படுத்தினா இந்த பூக்கள் உதிர துவங்குமா?’ என்றதும் மனம் வாடியது.

பூக்கள் எப்படியும் வாடும். வாடினா குப்பையில் தான் போகும் சம்ருதி’ என்று மனசாட்சி கூறியது.

கூடுதலாக குப்பையில் போனப்பிறகு காதலை சொல்லுவியா என்ன?’ என்று நகைத்தது.

விகர்த்தனனிடம் தன் ஏற்றுக்கொண்ட காதலை முதலில் சொல்வதா? அல்லது தாய் தந்தையிடம் உரைப்பதா? என்று பட்டிமன்றம் ஓடியது.

விகர்த்தனனிடம் சொல்லிவிட்டு தான் தந்தையிடம் உரைக்க வேண்டும். தன் காதல் முதலில் விகர்த்தனன் மட்டுமே அறிய வேண்டும் என்று வெட்கப்பட்டாள்‌.

பூங்கொத்தை எடுத்து முத்தம் வைத்து நெஞ்சோடு இறுக்கி கொண்டாள். 

ஆனாலும் உடனடியாக போனில் தொடர்பு செய்து பேசவில்லை.

இப்படியாக ஒரு வாரத்தை ஓட்டினாள்.

வீட்டில் மகள் சந்தோஷமாக நடமாடுவதை சந்திரசேகர் கண்கூடாக பார்த்தப் பின் நிம்மதி அடைந்தவராக, வசந்த் திருமணத்தை பேச நினைத்தார்.

எப்படியும் நல்ல நாளில் உரைப்பதற்காக காத்திருந்தார்கள்.

மறுபக்கம் ‘Nima product’ விஷயமாக தினசரி அலுவலகம் அலுவலுகத்தை சார்ந்த தொழிலில் கவனம் செலுத்தினான் விகர்த்தனன்.

காதல் தெரிவித்தப்பின் ஒரு வாரத்திற்கும் மேலாக சம்ருதி போனிலிருந்து 'ஜனனி உங்களை பத்தியே பேசினா. உங்களை மீட் பண்ணலாமானு கேட்டா. நாம சந்திக்கலாமா?' என்ற குறுஞ்செய்தி வந்தடைந்தது. 

விகர்த்தனன் சிரித்து, “நேரிடையா சந்திக்கலாமானு கேட்குதா பாரு.” என்று உரிமையானவளை கடிந்தான்.

"யா.. ஜனனியை மீட் பண்ண நான் ரெடி. நாம சந்திக்கலாம்." என்று அனுப்பினான்.‌

இருவரும் தங்கள் சந்திப்பையோ, காதலை பற்றியோ பேசவில்லை

அதன் பின் சந்திக்கும் இடத்தை, நேரத்தை அனுப்பி வைத்து அவன் வேலையை கவனிப்பதில் தீவிரமானான்.

விகர்த்தனனிடம் பேசி முடித்தப் பின் அத்தை வீட்டுக்கு சென்றாள் சம்ருதி. அதாவது ஜனனி வீட்டுக்கு.

ஆனால் மற்றவர் பார்வைக்கு, வசந்தை தேடி வந்ததாக பாவித்து கொண்டனர்.

ஜனனியை வெளியே அழைத்து செல்ல கூப்பிட, வசந்த் வருவதாக உரைத்தான். எப்படியும் விகர்த்தனனிடம் காதலை தெரிவித்தப்பின் தந்தையிடம் தன் மனதை திறந்திடும் முடிவில் இருப்பதால் வசந்த் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? என்ற ரீதியில் இருந்தாள்.

வசந்த் அப்பா அம்மாவிடம் ‘பாருங்க முன்ன நம்ம வீட்டுக்கே வரமாட்டா. நாம தான் அவளை பார்க்க போகணும். இப்ப என்னை தேடி வீட்டுக்கு வர வச்சிட்டேன்.’ என்று கெத்து காட்டி பேசினான்.‌

அவனறியாதது சம்ருதி விகர்த்தனனுக்காக இருபது அடுக்கு கட்டிடத்தில் எட்டாவது தளத்திலிருந்த ரூமில், பால்கனி விட்டு பால்கனி தாண்டி சென்றவளை.

மூவரும் சிற்றுண்டி முடித்து திரும்புவதாக தெரிவித்து அவள் காரிலேயே அழைத்து சென்றாள். கார் முன்னோ டிரைவர் சீட்டிற்கு அருகே வசந்த் வேடிக்கை பார்த்து வந்தான்.

பின்னிருக்கையில் ஜனனி சம்ருதி வீற்றிருக்க, சம்ருதி அமர்ந்திருந்த பக்கத்தில் ஒரு பரிசு கவர் இருந்தது.

ஒரு பெரிய மாலின் கார் பர்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, காபி ஷாப் முன் வந்து சேர, “ஹாய் வசந்த்” என்ற பழகிய குரல்.

வசந்த் யாரென திரும்பி நிற்க, பேயறைந்தது போல நின்றான்.‌
விகர்த்தனனை இங்கே வசந்த் எதிர்பார்க்கவில்லை. ஜனனியோ “ஏ..விகர்த்தனன் அண்ணா” என்று மகிழ்ந்தாள்.

சம்ருதியோ ஜீன் வித் பேபி பிங்க் நிற ஃபுல் ஹாண்ட் பட்டன் ஷர்ட் என்று அணிந்து வந்தாள்.

‘இவன் எங்க இங்க? இவன் பிளைட் லேண்ட் ஆகி முடிஞ்சதும் போகலையா? அச்சோ போன்‌ நம்பர்ல நட்பு தொடருதோ?’ என்று இஞ்சி திண்றவனாக வந்தான் வசந்த்.‌

தொடரும்

  • பிரவீணா தங்கராஜ்

11 thoughts on “நெஞ்சை கொய்த வதுகை -13”

  1. Kalidevi

    Super ipovathu samru meet pannanumnu ninachale ena pathil solla poralo. Intha vasanth ah illa avan amma appa tha etho pesi mirati vachitangala illa samru appave ava love panranu pidikama ava kitta kamichikama intha mari vela seirara nu papom . Aana ena panalum vikar vida matan samru va

  2. M. Sarathi Rio

    நெஞ்சை கொய்த வதுகை …!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 13)

    அப்படின்னா… ரெண்டு பேரோட காதலையும் மிரட்டித்தான் ப்ரேக்கப் பண்ணியிருக்காங்க. அதுவும் கிருஷ்ணாவர டைரட்டாவும், சம்ருதியை அவளுக்கேத் தெரியாமயும்.
    யாராயிருக்கும்…? சம்ருதியோட அத்தையும் மாமாவுமா….?

    ஆனா, விகர்த்தனன் கிருஷ்ணா மாதிரி கோழையா இருக்க மாட்டான். காரணம் அந்தஸ்துலேயும் சரி, கெத்துலேயும் சரி.. சம்ருதி குடும்பத்தை விட ஹைடெக் ஃபேமிலின்னு தோணுது.
    ஸோ.. விகர் கிட்ட யாரோட பாட்சாவும் பலிக்காது.
    நல்ல வேளை, சம்ருதி முதல்ல தன்னோட காதலை விகர் கிட்ட சொல்ல வந்துட்டா… இதான் நல்லது. இல்லைன்னா எதிரிங்க உஷார் ஆகியிருப்பாங்க.
    இப்ப விகர், முந்திக்கிட்டு அவளை உஷார் படுத்திட்டா நல்லதுன்னு தோணுது.
    😆😆😆
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *