அத்தியாயம்-15
சத்யமூர்த்தி சந்திரசேகரிடம் சம்ருதி வசந்த் திருமணத்தை பற்றி பேச, “நானே சொல்லணும்னு நினைச்சேன். சம்ருதி இப்ப கொஞ்சம் பரவாயில்லை. கல்யாணம் பத்தி பேசறேன்.” என்று மகிழ்ந்து கூறினார்.
சம்ருதியிடம் “உனக்கு கல்யாணம் பற்றி பேசறோம். ஹால்ல வந்து உட்கார்.” என்று அழைத்தார்.
தந்தையிடம் விகர்த்தனனை பார்த்து பேசிவிட்டு வந்ததும் வராததும் தன் காதலை தந்தையிடம் கூறினாள். முதலில் ”என்னம்மா இது? இப்ப தான் கிருஷ்ணாவை பத்தி சொன்ன நாங்க உன் காதலுக்கு சம்மதிச்சோம். ஆனா அவன் வேற பொண்ணை கட்டிக்க போறதா வந்து ‘ஓ’ன்னு அழுத. அப்பறம் நீயாவே ‘என்னை வேண்டாம்னு போனவன் எனக்கு வேண்டாம் அப்பா’ன்னு சொன்ன. ஆனா கல்யாணத்துக்கு விடாப்பிடியா போயிட்டு வந்த.
சரி நீ மனசு சங்கடப்படாம ஏதாவது செய்’ அப்படின்னு நாங்களும் இருந்தோம்.
எங்கயாவது வெளிநாடு போக விரும்பி சிங்கப்பூர் போன. இப்ப அங்க விகர்த்தனன் என்பவரை சந்திச்சேன். அவர் என்னை விரும்பறார். நானும் விரும்பறேனு சொல்லற.
நீ நிதானமா முடிவெடுக்க மாட்டேங்கறியோன்னு அப்பாவுக்கு தோணுது.” என்று மறுத்து பேசினார்.
“அப்பா… கிருஷ்ணா வேறொரு பொண்ணை தாலி கட்டின பிறகு அவனை மனசுல நினைச்சா அது கேவலம் இல்லையா? அதனால் அடுத்த செகண்டே அவனை காதலன் என்ற இடத்திலிருந்து தூக்கி போட்டேன். முடிவு வேகமா எடுத்தேனா, இல்லை நிதானமா எடுத்தேனா என்பது இல்லை. சரியான முடிவு எடுத்தேனா அதான் முக்கியம்” என்று வார்த்தையால் மடக்கிய பெண்ணை வியக்காமல் இருக்க முடியவில்லை.
“சரிடா… அப்படின்னா கூட அதுக்குள்ள விகர்த்தனனு யாரையோ விரும்பி கல்யாணம் செய்ய கேட்பது யோசிக்க வேண்டியதா இருக்கே. அவர் நல்ல கம்பெனில பிசினஸ் மேனாக இருக்கட்டும். குணம் எப்படின்னு தெரிய வேண்டாமா?” என்று வாதம் துவங்கினார்.
எல்லா அப்பாவும் மாப்பிள்ளையாக வரப் போகின்றவன் நல்லவனாக தேர்ந்தெடுப்பார்களே. டேடி லிட்டில் பிரின்சஸ் என்று வார்த்தை மட்டுமா? சம்ருதி அப்படி தானே வளர்ந்து இருக்கின்றாள்.
“உங்களுக்கு அவர் குணம் தானே தெரியணும்” என்று விமானத்தில் ஏறியதில் இருந்து வசந்த் குடித்து விழுந்திருந்த நிலை, விகர்த்தனன் உதவியது என்பதை உரைத்தாள்.
“நீங்க நினைக்கிற மாதிரி வசந்த் எங்களை கவனிக்கலை. அவனுக்கு ஒழுங்கா ஒரு வேலையை செய்ய தெரியலை.
என் சந்தோஷத்துக்கு காரணம் வசந்த் இல்லை விகர்த்தனன்.” என்றுஅழுத்தமாய் கூறி முடித்தாள்.
தந்தை வசந்த் குடித்து மட்டையான விஷயத்திலேயே அமைதியாகிவிட்டார்.
‘சரிம்மா அந்த பையனை பார்த்ததும் காதல் கல்யாணம் என்றதில் தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு.” என்று தந்தையாக அதிலும் தெளிவாகாத இடத்தில் நின்றார்.
“அப்பா… உங்க பொண்ணை இளவரசியா வளர்க்கறிங்கனு சொல்றிங்க. என் தோரணை, பேச்சு, அழகு இளவரசியாக உங்களுக்கு தெரியலை. விகர்த்தனனுக்கு என்னை அந்தளவு பிடிச்சிருக்கு” என்று அவனோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் காட்டினாள்.
ஏற்கனவே பார்த்த புகைப்படம் வசந்த் அனுப்பியது தான். ஆனால் வசந்த் தந்திரமாக விகர்த்தனனை கத்தரித்து(க்ராப்) செய்து மாமாவிடம் அனுப்பியிருந்தான்.
தந்தை எங்கே ஒரு ஆணோடு சென்றால் திட்டுவாரே என்று சம்ருதியும் நினைத்து தவிர்த்தாள். போதாத குறைக்கு விகர்த்தனன் பற்றி பேச வேண்டாம் என்று வசந்தும் கூறியிருந்தான்.
வசந்த் செய்தவை நடந்துக் கொண்டவை இரண்டும் சந்திரசேகருக்கு லேசாக அதிருப்தி தந்தது.
கூடுதலாக விகர்த்தனன் முகவடிவமைப்பு அவன் கள்ளமில்லா சிரிப்பு, அந்த அடர்த்தியான புருவம், மகளருகே சேர்ந்து பார்க்க மனம் நிறைந்தது.
வசதியிலும் தன்னை விட உயர்ந்தவர் அதுவொன்று தான். மகளை தட்டிக்கொடுத்து நாளை பின் கஷ்டப்படுத்தினால்…
அதற்கும் சம்ருதி அடுத்த பதிலாக, “விகர்த்தனனுக்கு அம்மா இல்லைப்பா. அவங்க அப்பா மட்டும் தான். விகர்த்தனுக்கு கல்யாணம் செய்ய ஆர்வமா இருக்காங்க. அதனால் தான் அவருக்கு என்னை பிடிச்சதும் கல்யாணம் பேச வரட்டுமான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லிட்டு வந்தேன். அவர் எப்ப வேண்டுமென்றாலும் வரலாம் அப்பா. நீங்க அவமரியாதை செய்துட கூடாது. அவர் வர்றதுக்குள் உங்க முடிவை சொல்லுங்கப்பா” என்று பேசிக்கொண்டிருக்க, ஜானகியோ “பொண்ணு ஆசைப்படறா. நீங்க உங்க பொண்ணு மனசை சங்கடப்படுத்தி எந்த காரியமும் செய்ததில்லை. பையன் நல்ல லட்சணமா இருக்கான். வசந்துக்கு கட்டிக்கொடுக்க நமக்கு ஆசையிருக்கலாம். ஆனா நெருங்கின சொந்தத்துல கல்யாணம் செய்து வைக்கிறது நல்லதில்லை இல்லையா?
நமக்கு எதுன்னாலும் ஓடி வர்றது சியாமளா மதினி தான். ஆனா சொந்தம்னு நாலு பேர் இருக்கட்டுமே. புது சொந்தம் இன்னமும் உறவுகள் விரிவடையும்” என்று வாய் திறந்தார்.
பொதுவாக ஜனனியை எப்படி அவள் வீட்டில் அவள் பேச்சை கேட்காமல் நசுக்கி விடுவார்களோ அது போல ஜானகி பேசினால் சியாமளா நாசூக்காய் தவிர்க்கும் விதமாக தம்பிக்கு சாம்பிராணி போட்டு விடுவார்.
‘அவளுக்கு என்ன தெரியும் தம்பி வீட்டுக்குள்ளயே இருக்கறவ. நமக்கு தெரியாத நல்லது பொல்லதா?!’ என்று கூறி கூறியே சந்திரசேகரை ஜானகி பேச்சை கேட்க முடியாதவராய் மாற்றி விட்டார்.
சந்திரசேகர் அதற்கெல்லாம் சேர்த்து தான் மகள் பேச்சில் செவி மடுப்பார் அது தான் வசந்த் குடும்பத்திற்கு பெரிய அடி.
பெண் காதலிப்பதாக கூறியதும் வசந்தை வைத்து தான் கிருஷ்ணாவை பற்றி விசாரிக்க கூறினார் சந்திரசேகர்.
வசந்த் அவன் தந்தையோடு சேர்ந்து கிருஷ்ணாவை பற்றி அறிந்த போது, அவனுக்கு பெரிதாக மிரட்டல் விடுத்தால் ஆதரவுக்கு யாரும் வரமாட்டாறென்ற மமதை.
கிருஷ்ணாவை மிரட்டவும் அவன் மிரளவில்லை. ஆனால் வசந்த் மிக நாசூக்காய் ஜனனி மூலமாக சம்ருதி குடிக்கும் பானத்தில் மருந்தை கலக்க கூற, இரண்டு நாளாக புட் பாய்ஸன் என்று மருத்துவமனையில் கிடந்தாள். அந்த நேரம் அதிகப்படியாக வசந்த் கிருஷ்ணாவை மிரட்டி உடனடியாக வேற யாரையாவது மணந்து மொத்தமாய் செல்.’ என்றான்.
கிருஷ்ணாவிடம் சந்திரசேகரே செய்ய சொன்னதாக வேறு கூறியிருந்தார்கள். அதனால் தான் தந்தையே ஆணவ படுகொலையை சத்தமின்றி செய்து சம்ருதியை இல்லாமல் செய்துவிடுவார்களோ என்று பயந்து தன் சொந்தத்தில் நவ்யாவை மணந்தான். நவ்யாவை மணந்தால் கம்பெனி தருவதாக கூறியது கிருஷ்ணா சம்ருதியிடம் அடித்து விட்டு பொய்.
கிருஷ்ணா அப்படி விலைமாதுவாக மாறவில்லை.
இதெல்லாம் நடந்து முடிந்த கதை. இப்பொழுது மகளையும் வசந்த் குடும்பத்தையும் வரவழைத்து, “சம்ருதி கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லறா அக்கா. ஆனா அவ ஒரு பையனை விரும்பறா. பெயர் விகர்த்தனன்.” என்றதும் வாசல் பக்கம் ‘Nima product’ ஓனர் அப்பா அம்பலவாணன். ஒரே பையன்” என்று விகர்த்தனனே குரல் கொடுத்தபடி வந்தான்.
வசந்த் விகர்த்தனனின் வருகையை எதிர்பார்க்கவேயில்லை. சத்யமூர்த்தி விகர்த்தனனை நேரில் கண்டு அவனை பார்த்து வாயடைத்து நின்றார். இம்மியும் குறை சொல்லாத தோற்றம்.
“சாரி அங்கிள் அப்பாயின்மெண்ட் கேட்டு வந்திருக்கணும். ஆனா அப்பா எதார்த்தமான சூழ்நிலையில் சம்ருதியை சந்திக்க கேட்டார். அதனால சொல்லாம வந்துட்டோம். சம்ருதி எப்படியும் உங்களிடம் என்னை பத்தி சொல்லியிருக்கலாம். சொல்லலைன்னாலுமா அறிமுகப்படுத்தி நானே எங்க காதலை உங்களிடம் பேச வந்துட்டேன்” என்றவனை சந்திரசேகர் வரவேற்று அமர வைத்தார்.
அம்பலவாணனை வணக்கம் வைத்து, “இப்ப தான் குழந்தை சொன்னா. வீட்ல கலந்து பேசி சம்மதிச்சு வர சொல்ல இருந்தேன். ஜானகி குடிக்க” என்று கண்காட்ட வேலையாட்களிடம் ஸ்வீட் பழம் பழச்சாறு என்று தட்டில் அலங்கரித்து கொண்டு வர ஏவி கூறினார்.
சம்ருதியோ விகர்த்தனனை கண்டு ‘எங்கப்பா எப்படி?” என்பது போல கேட்டாள்.
“பாஸ்… நீங்க சம்ருவை காதலிச்சிங்களா?” என்று வசந்த் தெரியாதது போல கேட்டான்.
“ஆமா வசந்த்… அவ லவ் பெயிலியர் என்றதும், கடவுள் அவளை எனக்காக துணையாக மாத்த தான் அந்த காதல் தோல்வியை அவளுக்கு கொடுத்திருப்பார்.” என்று பகிரங்கமாக கூறினான்.
மகள் காதலித்தது கூட அறிந்து தான் பேசுகின்றார். முகத்தில் அத்தனை நற்குணம். இதற்கு மேல் என்ன?
சத்யமூர்த்தியிடம் கூட கலந்து ஆலோசிக்காமல், ”என் மக சந்தோஷம் எனக்கு முக்கியம். அவ உங்களை விரும்பறா. எனக்கு இந்த ஏற்றத்தாழ்வு இல்லை. இதுக்கு முன்ன விரும்பியவன் அந்தளவு வசதி வாய்ப்பு இல்லைன்னாலும் திருமணம் செய்து வைக்க நினைத்தவன் நான். ஆனா அந்த பையன் தான்.. என் மகளை…. அதை விடுங்க. நீங்க சொன்ன மாதிரி உங்களோட சம்ரு வாழணும்னு கடவுள் எழுதி வச்சிருக்கார்.” என்று பேச விகர்த்தனனுக்கு வித்தியாசமாய் இருந்தது.
இதுவரை கிருஷ்ணாவை மிரட்டியதில் சந்திரசேகரின் சதியும் உண்டு என்று எண்ணியிருந்தான். தான் வசதியானவன் அதனால் தன்னை ஏற்கின்றார் என்று. ஆனால் சந்திரசேகரின் முகவாட்டம் அப்படியல்ல என்று சொல்லாமல் உணர்த்தியது.
அப்ப இது வசந்த் குடும்பத்து சதி மட்டுமென்று யூகித்து கொண்டான்.
அதனால் சாந்தமான விகர்த்தனன் “நிச்சயம் தேதி முடிவெடுங்க அங்கிள்.
இந்த வருடம் சிறந்த காஸ்மெடிக் புராடெக்ட் செய்யறதில் நம்ம கம்பெனி பெயர் அடிப்படுது. அதுக்கான தென்னிந்திய விழாவில் மேடையில் அப்படியே என் மேரேஜ் பத்தி பேசிடுவேன். ஏன்னா நிறைய கம்பெனி சிஇஓ பொண்ணு பேச வருவதாகவும். அந்த நிகழ்ச்சியில் இதை சொன்னா அந்த பேச்சுகே முற்றுப்புள்ளி வந்துடும்.” என்று கூறினான்.
அம்பலவாணனும் பையன் சொல்வது சரிங்க. நான் நீன்னு பொண்ணு கொடுக்க கேட்டு குடைச்சல் தர்றாங்க. பிஸினஸ்ல மறுக்க முடியாது. ஆனா இந்த அனவுன்ஸ் பண்ணிட்டா பிஸினஸ்ல யார் மனசையும் காயப்படுத்தாம கடந்துடுவேன்” என்று பேசினார்.
அதன் பின் என்ன தாமதம். நல்ல நாள் பார்த்து கூற ஜானகி காலண்டரை தர, சந்திரசேகரோ “மச்சான் எந்த தேதி நெருக்கமா வருதுன்னு பாருங்க” என்று சத்யமூர்த்தியிடமே காலண்டரை நீட்டும் விதமாக அமைந்தது.
சியாமளாவை முறைத்தபடி சத்யமூர்த்தி தேதி காட்டினார்.
விகர்த்தனன் அனைவரது முகபாவத்தை பார்த்து கிளம்புவதாக உரைத்தான்.
சாப்பிட கூறியதற்கு மற்றொரு நாள் வருவதாக தவிர்த்து விட்டான். சம்ருதி சந்தோஷமாய் வழியனுப்ப வாசலுக்கு வந்தாள்.
“உன்கிட்ட நான் தனியா பேசணும். இந்த வாரம் கொஞ்சம் பிஸி. வர்ற சண்டே மீட் பண்ணி பேசலாம்” என்று கூற சம்ருதி சம்மதமாய் தலையாட்டினாள்.
கிருஷ்ணா நண்பன் நான் என்றால் என்ன செய்வாள்? என்று மனதில் எண்ணியவன் காரில் ஏறி அவன் வீட்டுக்கு சென்றான்.
சத்யமூர்த்தி அவர்கள் சென்றதும் சம்ருதி அவளது அறைக்கு செல்ல, ”வசந்துக்கு சம்ருவை கட்டி வைப்பிங்கன்னு எதிர்பார்த்தேன். இப்படி ஏமாத்திட்டிங்க” என்று கூற, சந்திரசேகரோ “நானும் அப்படி தான் நினைச்சேனா. என்னயிருந்தாலும் அக்கா பாசத்தை விட எனக்கு என் மக மனசு முக்கியம் இல்லையா” என்று கூறியவர், “வசந்த் எப்பவும் போல நகைக்கடையில் மேனேஜரா இருப்பான். அதுல மாற்றமேயில்லை” என்று பேசி கடந்தார்.
வசந்த் ஏதோ பேச செல்ல, சத்யமூர்த்தி நிதானம் என்பது போல அவருமே அவர் வீட்டுக்கு புறப்பட்டார்கள்.
ஜானகிக்கு அப்பொழுது தான் நிம்மதி. எங்கள் மகள் வாழ்க்கை இவர்கள் கையில் சிக்கி சீரழியும் என்று எண்ணியதை கடவுள் மாற்றி விட்டாரே.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
wow super samru appa udane sammathichitaru ithula avanga amma ku inum santhosam than . vasanth avan rendu perum inga ethum pesa mudila aduthu ena plan poduranga vikar ethirpa nu pakanum vikar ellathaium thatti vitu poite irupan . aduthu vikar krishna friend sonnathum samru reaction pakanum eppadium therinji tha aganum krishna nallavanu ava athai mama vasanth pathi therinjikanum
💕💕💕💕💕💕👌👌👌👌👌
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 15)
அட.. பேச ஆரம்பிச்சவுடனே வந்து நின்னுட்டான்ப்பா… டைமிங் சென்ஸ் ஜாஸ்தி போலயிருக்கு. சந்திரசேகர் மகளோட ஆசைக்கு மட்டும் முக்கியத்துவம் தராம, மாப்பிள்ளையையும் நல்லாவே
எடை போடுகிறார்.
ஆனா, கிருஷ்ணாவோட நண்பன் தான் விகர்த்தனன்னு தெரிஞ்சா சம்மூ ஒருவேளை, துவண்டுடுவாளோ…? இல்லை, விகர்த்தனன் கூறும் விளக்கத்தில் சமாதானம் ஆகிடுவாளோ…?
இனி இந்த சத்யமூர்த்தி குடும்பம், இந்த கல்யாணத்தை
தடை செய்வதற்காக, இனி என்னென்ன வில்லங்கத்தை கொண்டு வரப்போறாங்களோ ?
அது சரி, இந்து கூட்டு களவாணித்தனத்தில்
ஜனனிக்கும் பங்கு இருக்கும் போலவே..! அதனால் தான் குடிக்கும் பானத்தில் மருந்தை கலந்து சம்முவிடம் கொடுத்து
புட் பாய்சனில் தர்க்க வைத்தாளோ..?
😆😆😆
CRVS (or) CRVS 2797
Entha vasanth &co amairgiya porathu onnum sariyaa padaliye…..
Interesting
Vikarthanan oda marriage fix pannalam nu decide pannitaga aana ivan ah sollura thuku munnadi krishna oda friend ivan nu andha vasanth family potu kuduthu ta ivan sollura unmai ah samu kepala ah
Super sis nice epi 👌👍😍 kandipa vasanth veetla yetho sadhi seyya poranga enna nadakumo parpom 🧐
கிருஷ்ணாவோட நண்பன் தான் நிகர்னு சம்முக்கு தெரியும் போது அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாளோ! வசந்த் குடும்பத்தின் முகமூடியை நிகர் எப்படி வெளிச்சத்திற்கு கொண்டு வருவான்? சிறப்பான கதை நகர்வு வீணா சிஸ்..
சூப்பர். .. வசந்த் குடும்பத்தின் சதியை வெளில கொண்டு வரனும் அப்போ தான் கிருஷ்ணா மேல இருக்கற கலங்கம் விளகும் அப்போ தான் சம்ருதி சந்தோசமா இருப்பா
Waiting 4 next…❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💜💜💜💜💜
Interesting😍😍😍😍😍😍