Skip to content
Home » நெஞ்சை கொய்த வதுகை -16

நெஞ்சை கொய்த வதுகை -16

அத்தியாயம்-16
   
      கிருஷ்ணா முன் அமர்ந்த விகர்ந்தனனோ “மடையனாடா நீ… அவன் சந்திரசேகர் ஆணவபடுகொலையா மகளுக்கு அவரே பாய்ஸன் தந்தார் இது சாம்பிள். நீ விட்டு ஒதுங்கலைன்னா கொண்ணுடுவார்னு அந்த வீணா போன வசந்த் சொன்னா நம்பிடுவியா? சந்திரசேகர் சம்ருதிக்காக யாருக்கு வேண்டுமென்றாலும் சம்ருதி விரும்பினா கட்டி கொடுத்திருப்பார். அவர் பேச்சு, பார்வையில் அது தெரியுது. நீ முட்டாள்…” என்று ஆங்காரமாய் கத்தினான்.

  கிருஷ்ணாவோ “சரிடா நான் வைரத்தை தொலைச்சிட்டு தங்கத்தை கட்டியிருக்கேன். நீயாவது வைரத்தை மிஸ் பண்ணிடாத.” என்றப்பின் விகர்த்தனன் தலைகோதி ஐஸ் வாட்டார் குடித்தான்.

      “என்னத்த மிஸ் பண்ணாம… அவளுக்கு நான் உன் பிரெண்ட் என்றால் என்ன‌ ரியாக்ஷன் தருவாளோ? அதை நினைச்சா பகீர்னு இருக்கு. ஆனா என்னை வேண்டாம்னு சொல்லட்டும். இராவணன் சீதையை தூக்கிட்டு போன மாதிரி தூக்கிட்டு வந்துடுவேன்.

   அவ என்னை விரும்பறா. இங்க பாரு… நான் கொடுத்த பூ. காதலை ஏற்றுக்க வேண்டாம்னா குப்பையில் போடுனு சொன்னேன். வாடி போனாலும் ரீசைகிள் பண்ணிட்டா. அழகா எபாக்ஸில, இன்டோர்ல ஹால்ல அலங்கரிச்ச ஃப்ரேம் போட்ட பிக்சரா.” என்று காட்டினான்.

   கிருஷ்ணாவோ அதை பார்த்து, “வர்ற சண்டே சம்ருதியிடம் சொல்ல போறியா?” என்றதும், “ம்ம்” என்றான் விகர்த்தனன்.‌

   “ஆல்திபெஸ்ட்… கோபம் வந்தா அவளுக்கு கை நீளும். அன்னைக்கு ஸ்டேஜ்ல பார்த்தியே. பளீருனு ஒரு அறை. அப்படியொரு அறைக்கிடைச்சிட வாழ்த்துகள்.” என்று சொல்லிக்கொண்டு புறப்பட ஆரம்பிக்க, “ஆமா நவ்யாவை கூட்டிட்டு வரலை.” என்று கேட்டான்.
 
   “அதையேன் கேட்கற, அவளுக்கு டேட் பார் ஆகிடுச்சு. ஒருவேளை பேபியா இருக்குமோன்னு டவுட். அதனால அலைச்சல் வேண்டாம்னு அவ இந்த வீக் எங்கேயும் வரலை.” என்றதும், விகர்த்தனனோ “டேய் கேடி. நீ லவ் பெயிலியராச்சே… ஸ்பேஸ் விடுவன்னு நினைச்சேன்.” என்று நொடியில் பனி மழையாய் பேசினான்.‌

“என் லவ்வை கேட்டு என்னை கல்யாணம் செய்தவ நவ்யா. இதுல ஸ்பேஸ் விட்டு பழகி என்னத்த சாதிக்க போறேன்.‌ நான் ஒரு சராசரி மனுஷன்டா. ஆசை துறக்காத மனுஷன். நவ்யாவை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. பேக்ட் என்னனு பார்த்து மாறிட்டேன். அதோட நீ சம்ருதி காதலிக்கற. நியாயப்படி இனி தங்கை முறை வேற” என்று சோகமானான்.

“ரியலி சந்தோஷமா இருக்கு. காதல் என்ற அதே இடத்துல தங்கிடாம மூவ் ஆன் பண்ணியதுக்கு, சொல்லப்போனா நான் சம்ருதியை தைரியமா பேஸ் பண்ணி லவ் சொன்னதுக்கு ஒரு விதத்துல நீ தான் காரணம். இப்ப சொன்ன பார்த்தியா. இது போதும்டா. ஆனா தங்கைனு சொல்லி அதுக்கு வேற அவளிடம் அடி வாங்காதே. பிரெண்ட் என்ற கோடே போதும்.

அப்பறம் பேபின்னு கண்பார்ம் பண்ணிட்டா சொல்லு. ” என்று கட்டி பிடித்து வழியனுப்பினான்.

விகர்ததனனுக்குள் லேசான பயம் இருந்தது. சம்ருதி கிருஷ்ணா நண்பன் நான் என்று அறிந்தால் என்ன செயவாள்? அப்படி தெரிந்தப்பின் கிருஷ்ணா நட்பை துண்டிக்க கூறினால்? பள்ளி கல்லூரி நட்பு‌‌. இடையில் பிஸினஸ் என்ற மையபுள்ளிக்குள் விழந்ததால் அவன் காதல் விவகாரம் எதுவும் அறியாது போயிற்று. இப்பொழுது நட்பை முறிக்கவும் முடியாது. அதே சமயம் என்னால் என் காதலை விடவும் முடியாது‌. இதில் வசந்தை வேறு. ஏதேனும் சம்ருதிக்கு ஆபத்து விளைவிப்பானா? அங்குமிங்கும் உலாத்தினான்.

இப்படி இரண்டு நாட்கள் கழிய, சத்யமூர்த்தியிடம் திருமண வேலை பற்றி சந்திரசேகரிடம் தீவிரமாய் பேச, இனியும் விகர்த்தனனை சநதித்து பேசாவிட்டால் சரிவராது. நிச்சயத்துக்கு பதில் நேராக திருமணம் நடந்தி முடித்தாலும் ஆச்சரியபில்லை‌.

அதனால் சத்யமூர்த்தி வசந்த் இருவரும் இணைந்து ஒரு பொதுயிடத்தில் விகர்த்தனனை எதச்சையமான சந்திப்பதாக காட்டி பேச திட்டம் தீட்டினார்கள். அப்பொழுது தானே நாளைபின் விகர்த்தனன் மணக்க மாட்டேன் என்று கூறினாலும் அதில் தங்கள் தலையீடு இல்லை என்றும். இந்த சந்திப்பு எதச்சையமானது என்று சந்திரசேகரிடம் உரைத்து வசந்தை சம்ருதி மணக்க வைக்கலாம்.

இப்படி நினைத்து தான் இங்கே வந்தது. 

ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரை விகர்த்தனன் இங்கு இருந்து உடற்பயிற்சி செய்வதாக கூறியிருந்தானே.

நேற்று மண்டையை போட்டு குடைய இங்கு வந்து ஜாயின் செய்து உடலை மெருக்கேற்ற வந்ததாக கூறி அப்படியே சம்ருதி பற்றி விஷத்தை விதைக்கும் முயற்சி. விகர்த்தனன் அதற்கு மசியவில்லை என்றால் உயிர் பயம் காட்டும் முடிவில் இருந்தார்‌ சத்யமூர்த்தி.

“ஏன்டா அவன் வருவானா மாட்டானா? ஜிம்ல சேர காசு கொடுத்து வேஸ்ட் ஆகப்போகுது. அதென்ன டா இங்க ஆறு மாசத்துக்கு சேர்த்து முன் பணமா கேட்டுட்டான்‌.” என்று சலித்து கொண்டு ட்ரேட்மில்லில் நடைபயின்றார்.‌

“ஜிம்ல சேர்ந்து சிலர் பாதில ஓடிப்போவாங்க. அப்படி போகாம வொர்க்வுட் செய்ய தான் இந்த டெக்னிக்.” என்றவன் விகர்த்தனனை எதிர்பார்த்து விழிகள் அலைமோதியது.

ஜிம் டிரையினர் வேறு இதை செய்யுணும், அதை செய்யணும் இப்படி செய்யணும் என்று பாடம் நடத்த, முதல்ல அப்பாவை கவனிச்சுட்டு வாங்க சார்.” என்று கூறி விகர்த்தனனுக்காக தவமிருந்தான்‌.

ஐந்து பத்துக்கு வந்து சேர்ந்தான் நாயகன். வரும் போதே பனியன் ஷார்ட்ஸ் என்று வந்தவன் வசந்தை கவனிக்காமல் தான் எப்பொழுதும் பளு தூக்குமிடம் வந்து பனியனை கழட்டி பளு தூக்க ஆரம்பித்தான். 

செதுக்கி வைத்த சிக்ஸ் பேக் உடல், வசந்திற்கு திகிலை தந்திருக்க வேண்டும்‌. அதோடு பளுவை அசால்டாக தூக்கவும் கண்கள் விரிந்தது.

இருபது நிமிட பயிற்சி முடிந்து டர்க்கி டவலை எடுக்க, வசந்தை கவனித்தான். 

“ஹாய் வசந்த்.‌‌… நீங்க எங்க இங்க? இது உங்க தூங்கற டைம் ஆச்சே?” என்று தெரிந்தவரென்ற ரீதியில் பேச, “அப்பாவும் நானும் வந்தோம் பாஸ். அவருக்கு சுகர் ஏறிடுச்சு. அதான். நானும் ஜிம் போகணும்னு அன்னைக்கு சொன்னேனே. ஆனா உங்க ஜிம்னு தெரியாது.” என்று பழைய தோரணை பேச்சே வந்தது.

“இது என்னுடைய ஜிம் இல்லை வசந்த். நான் ஜாயின் பண்ணிருக்கற ஜிம். என்னதான் தனியா ரூம்ல பண்ணினாலும் இங்க பலரோடு செய்யறப்ப ஒரு நட்பும் எனர்ஜியும் கிடைக்கும்.” என்றவன் மூச்சு வாங்க வந்த சத்யமூர்த்தியை கண்டார்.

அவர் வயதுக்கு இந்த விஷப்பரீட்சை வயதை சுட்டிக்காட்டி விட்டது.

“என்ன அங்கிள் இதுக்கே மூச்சு வாங்குவதா? வசந்த் மட்டும் வந்திருக்கலாம்.” என்று நகைத்தான் விகர்த்தனன்.

அவரும் என்ன கோபத்தில் இருந்தாரோ, “ஆளு வாட்ட சாட்டமா இருந்தா தானே வலையில் விழுறாளுங்க. இல்லைன்னா எவ பார்க்குறா? எல்லாம் படிக்கட்டு உடம்பும் பணமும் இருக்கிறவங்ககிட்ட இல்லை பொண்ணுங்க வெக்கம் கெட்டு போகுதுங்க. இப்பவாது வசந்த் உடற்பயிற்சி செய்ய வந்தான்” என்று விகர்த்தனன் பார்வையில் பேச்சை மாற்ற வந்தார்.

அவர் சம்ருதியை தான் அசிங்கமாக ஜாடை பேசியது. அதை விகர்த்தனன் புரிந்து சங்கடமாய் பேச அச்சப்படுவானென்று நினைத்திருக்க, சூட்டோடு சூட்டாக அவன் முறைப்பு, ‘யாரைடா சொல்லற?’ என்னும் விதமாக தாக்கிவிட்டது.

தன் உடலை துடைத்த டவலால் முகத்தின் வேர்வை துடைத்தவன்.

”மிஸ்டர் சத்யமூர்த்தி நாம இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்தை கலைச்சிட்டு, சதுரங்கம் விளையாடுவோம். ஐ மீன் நேருக்கு நேரா. ஏன்னா எனக்கு நேரிடையா விளையாடி தான் பழக்கம்.

உங்களை மாதிரி ஒளிஞ்சு நின்னு செய்ய தெரியாது.” என்று பேசவும் வசந்த் சத்யமூர்த்தி திகைத்தனர்.

“வாங்க இடைஞ்சல் இல்லாம பேசுவோம்” என்று அழைக்க, சற்று தள்ளி ரிசப்ஷன் அறையில் இருக்கைகள் இருக்க சென்று விகர்த்தனன் அமர, கடிவாளம் கட்டிய குதிரையாக விகர்த்தனனை பின் தொடர்ந்தார்கள் அப்பனும் மகனும்.

“ஆமா… இந்த முறை கல்யாணத்தை நிறுத்த என்ன பிளான் வச்சியிருக்கிங்க. இல்லை உங்க முகறகட்டையே சொல்லுது. சம்ருதியை வெளியே கட்டிக்கொடுக்க உங்களுக்கு பிடிக்கலைன்னு.” என்று அசால்டாய் கேட்டான்.

வசந்த் திகைக்க, சத்யமூர்த்தியோ ‘ஓ இவனுக்கு தெரியுமா? என்ற ரீதியில் பார்த்தார்.

சத்யமூர்த்தி பொங்கியவாறு “எல்லாம் தெரிந்து வந்த காரியவாதி தானா? ஆமாடா சம்ருதியை வெளியே கட்டிக்கொடுக்க எங்களுக்கு பிடிக்கலை. சந்திரசேகரிடம் செல்ல போறியா சொல்லு. நம்ம குடும்பத்தை பிரிக்க பேசறார்னு பிளேட்டை திருப்பி போடுவேன். வசந்த் கூட தனியா இருந்தாளான்னு நீ இவனிடம் கேட்டதா சொல்லி சம்ருதியை குழப்பி விடுவேன். சம்ருதியை நீ சந்தேகப்பட்டனு சொன்னா அவளே உன்னை கை கழுவி விடுவா. ஏற்கனவே ஒருத்தனோட பழகியதை காதலிச்சதை அசிங்கமா பேசறான்னு சம்ருதியிடம் சொல்வேன். யாருடா நீ… வானத்துலருந்து குதிச்சு” என்ற எரிச்சலில் பேசினார்.

“யோவ் சத்யமூர்த்தி நிஜமாவே வானத்துலயிருந்து தான் குதிச்சேன். என்ன புரியலையா? உன் பையனுக்கு ஆப்பு வைக்க விமானத்துல சம்ருதியை மீட் பண்ணியதை சொன்னேன்.‌

அப்பறம் நீ என்ன கதை விட்டாலும் சம்ரு நம்பணும். அவங்க அப்பா நம்பணும்.” என்று சிரித்தான். சொல்லப்போனால் நீங்களாம் எனக்கு போட்டியா என்ற ஏளன நகைப்பு. அதில் நிறைந்திருந்தது.

“டேய்… என்ன நக்கலா? இதுக்கு முன்ன சம்ருதியை விரும்பின பையன் கிருஷ்ணா தெரியுமா? உன்னை மாதிரி தான் உண்மை காதல், சம்ருதி என்னை மறக்கவே மாட்டா. அதுயிதுன்னு‌ வசனம் பேசினான்.
இப்ப அவனை ஓடவிட்டு அனுப்பினோம். எங்களிடம் வச்சிக்காத. சம்ருதி உங்க அந்தஸ்துக்கு ஒத்துவரலைனு எவளாவது பிஸினஸ்ல, தொழில்முறையிலிருக்கற பொண்ணை கட்டிக்கோ‌ பணத்துக்கு பணமும் சேரும்‌. அந்தஸ்தும் உயரும். எங்க பொண்ணு எங்களோட இருப்பா” என்று‌ பேசினார். வசந்த் ஆமோதிப்பாக தலையாட்டினான்.

“அட கிருஷ்ணாவை மிரட்டி லாரி ஏத்தி, பிறகு அது வொர்க்வுட் ஆகலைன்னு ஜனனியிடம் சொல்லி சம்ருதி குடிச்ச கூல் டிரிங்க்ஸ்ல மருந்து கலந்து புட்பாய்ஸன் உண்டாக்கி இரண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருக்க வச்சி, கிருஷ்ணாவிடம் மாமா சந்திரசேகர் தான் ஆணவபடுகொலை செய்ய கூட தயங்கமாட்டார்னு திரிச்சு விட்டு அவனை ஓடவச்சிங்க. என்னை அப்படியெல்லாம் மிரட்ட முடியாது.

அதோட சம்ருதியை இழிவா பேசற. அடுத்து எங்க பொண்ணு எங்களோட இருப்பான்னு மாத்தி பேசற. உன் வார்த்தையில் நகைக்கடை மட்டும் தான் மின்னுது. சம்ருதி மேல் அக்கறை இருக்கறாப்ல தெரியலையே.” என்று புட்டு புட்டு வைக்க வசந்தோடு சேர்த்து சத்யமூர்த்தியும் வாயடைத்து நின்றார்.

 விகர்த்தனனோ ''என்னடா எல்லாம் தெரியுதுன்னு பார்க்கறிங்களா? அதான் விகர்த்தனன்‌. அப்பறம் என்னை துரத்த முடியாது. நீங்க தான் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடணும். 

கவலைப்படாதிங்க‌ இப்ப சம்ருதியிடம் உங்களை பத்தி சொல்லமாட்டேன்.

அப்பறம்… என்னை அடிச்சி தூக்க லாரி ஏற்பாடு பண்ணுங்க இல்லை கண்டெயினர் கூட ஏற்பாடு பண்ணுங்க. ஐ டோண்ட் மைண்ட். பட் சம்ருதி விஷயத்துல தலையிட்டிங்க‌ பின் விளைவுகளை சந்திப்பிங்க. இது வார்னிங்.‌” என்று சத்யமூர்த்தியிடம் தெளிவாக உரைத்து வசந்த் கன்னம் தட்டி, “வசந்த் இங்க ஆறு மாசம் பணம் கட்டியிருப்ப அட்லீஸ்ட் வொர்க்கவுட் பண்ணி உடம்பை தேற்ற பாரு.” என்று கூற அனிச்சையாக ‘ஓகே பாஸ்” என்றான் வசந்த்.

அவன் பாஸ் என்பதில் விகர்த்தனன் நகைத்துவிட்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தான். ‘சத்யமூர்த்தி தான் மெயினா? வசந்த் எல்லாம் சின்னபுள்ளயா இருக்கானே. பச் பாவம்’ என்றது விகர்த்தனன் உள்ளம்.

சத்யமூர்த்தி மகனை உதைத்து “என்னடா ஓகே பாஸ். அவன் பேசினா வாயை பிளந்து பார்ப்பியா? அவனுக்கு எப்படி கிருஷ்ணா விஷயம் தெரியும்‌. எந்த தைரியத்துல இப்படி பேசறான்.” என்று சத்யமூர்த்தி வீட்டுக்கு வந்தப்பின்னரும் புலம்பினார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

15 thoughts on “நெஞ்சை கொய்த வதுகை -16”

  1. Avatar

    சரியான அடி… கிருஷ்ணா நண்பன் சொல்லனும் விகர்தனன் இவங்களுக்கு தெரிஞ்சா அதையே வேற மாதிரி மாத்துவாங்க

  2. Kalidevi

    super vikar . super ah pesita avanga kitta neradiyave ethuku avangala pesa vitu suthi valachi kondu poganum ipo adithu ena panranga pakalam ivangala samalikurathu konjam easy tha unaku samru kitta krishna pathi sollanum athu tha kastam papom apo nadaka pothu unaku nu

  3. Avatar

    Super sis semma epi 👌👍😍 Krishna Evan frnd nu evangaluku first therinji yedhuvum game play pannida koodadhu kadavuley 🙄

  4. M. Sarathi Rio

    நெஞ்சை கொய்த வதுகை …!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 16)

    நிச்சயமா சம்ருதி விகரோட லவ்வை ரிஜக்ட் பண்ண மாட்டா… ஆல்ரெடி அதுக்கு ஒத்துக்கிட்டதாலத்தான் அந்த கிஃப்ட் அண்ட் கல்யாணத்துக்கு நாள் குறிக்கறதா சொன்னது.

    ஆனா, கிருஷ்ணாவோட நண்பன்னு தெரிஞ்சா கழுதையா, மாறுவாளோ, இல்லை குதிரையை மாறுவாளோ… அது தெரியலை.

    ஆனா, அப்படி அவ குண்டக்க மண்டக்க சொல்லிட்டா… விகர் இராவணன் சீதையை தூக்கிட்டு வந்த மாதிரி, தூக்கிட்டு வந்திடுவேன்னு சொன்னானே…..அது உண்மையா…? ஏன்னா, ராவணனால சீதையை வெறுமனே தூக்கிட்டு வர மட்டும் முடிஞ்சது, அவ மனசுல கடைசி வரைக்கும் குத்தகை போட முடியவேயில்லை.
    அப்படின்னா, விகர் ராவணன்னா…. அவனாலேயும்
    சம்ருதி மனசுல இடத்தை புடிக்க முடியாதுங்கற எண்ணத்துல
    சொல்றிங்களா…? இல்லை, தப்பான உதாரணத்தை சொல்லிட்டாங்களா…?
    புரியலையே…????
    😆😆😆
    CRVS (or) CRVS 2797

  5. Avatar

    சத்யமூர்த்தி கிருணாவைப் போல விகர்த்தனனையும் சாதாரணமாக எடை போட்டிருக்க அவனோ தந்தையையும் மகனையும் மிரள வைக்கிறான். வசந்த் காமெடி வில்லனாகிப் போனான்..இவர்களைப் பற்றி பயப்பட தேவையில்லை போல… சம்ருதி எடுக்க போகும் முடிவு எப்படி இருக்குமோ.. 👌👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *