Skip to content
Home » நெஞ்சை கொய்த வதுகை -17

நெஞ்சை கொய்த வதுகை -17

அத்தியாயம்-17

  பின்னியில் இனிமையான இசை மெல்லிசையாக கசிந்துக் கொண்டிருந்தது. விகர்த்தனன் சம்ருதி ஒரு உணவகத்தில் வீற்றிருந்தார்கள். அங்கிருந்து சாலையை பார்க்கும் விதமாக கண்ணாடி தடுப்பு சுவர்கள் சுற்றிலும் இருந்தது. 

மழை பொழிந்திருக்க சாலையெங்கும் துளிகள் விழுவதை ரசித்து இருந்தாள் சம்ருதி.

விகர்ததனன் முகம் விளையாட்டை துடைத்து எடுத்த விதமாக தென்பட, சம்ருதி மனதில் குறித்து கொண்டாள். 

"வீட்ல நம்மளை பத்தி ஏதாவது பேசினாங்களா?" என்று தூண்டில் போட்டான். 

சம்ருதி வெட்கப்பட்டு, “உங்களை அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம். உடனே சம்ருதிக்கு இவரோட கல்யாணம் செய்யணும்னு தீயா வேலை செய்யறார்.

சத்யமூர்த்தி மாமாவிடம் மண்டபம் எது பிடிக்கலாம்னு கேட்க அவர் ஏனோ தானோனு சொல்லவும், அதிருப்தி அடைந்து, அப்பாவே மண்டபம் பார்த்தார்.

அம்பலவாணன் மாமாவிடம் கூட அந்த மண்டபம் ஓகேவா இல்லை இன்னும் பெரிசா பிடிக்கலாமானு கேட்டார்.‌ மாமா இதே போதுங்கனு சொன்னார்.
அம்மாவும் இப்பவே எனக்கு நகையை ஆர்டர் தந்துட்டாங்க. எங்க கடையிலேயே லேட்டஸ்ட் டிசைன் யாரும் போடாத நகை மாடலா பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.” என்று மகிழ்ச்சியாக கூறினாள்.

“நான் உன்னிடம் பேசணும்னு சொன்னேன். தனியா கூப்பிட்டிருக்கேன்.‌ எதுக்குன்னு ஏதாவது யோசித்தியா?” என்று கேட்டதற்கு, தோளை குலுக்கி சிறு புன்னகை உதிர்த்து, “எதுனாலும் நீங்க என்னிடம் சொல்லப்போறிங்க. நான் கேட்க போறேன்.” என்று காதலில் திளைத்தவளால் உரைத்தாள்.

  ஆர்டர் செய்த பழச்சாறுகள் மெதுமெதுவாக இதழில் சுவைத்திருக்க, "இப்ப சொல்லப்போறது நம்ம எதிர்கால வாழ்க்கையில உனக்கு தெரிந்து நீ அப்ப பீல் பண்ணக் கூடாதுன்ற ஒரே காரணத்துக்காக தான்." என்று பீடிகை போடவும் பாதி குடித்த பழச்சாற்றின் கோப்பையோடு, கன்னத்தில் கையூன்றி "சொல்லுங்க." என்று அவனை ரசித்தபடி கூறினாள். 

”நான் உன் எக்ஸ் லவ்வர் கிருஷ்ணாவோட பிரெண்ட்.

நீ கிருஷ்ணா கல்யாணத்துக்கு வந்தப்ப உன்னிடம் பூ கொடுத்தேன். நினைவிருக்கா… நீ இருந்த கோபத்தில அதை கசக்கி எறிந்துட்டு போன” என்று கூறவும் சம்ருதி அதிர்ந்து போனாள். கிருஷ்ணா திருமணத்தில் கிருஷ்ணாவை அடித்து ஆவேசமாய் நடந்த வெளியேறிய நேரம் தன்னை நிறுத்தி பூவை நீட்டியது ஒரு கை. நிமிர்ந்து பார்க்க திரணின்றி பூவை கசக்கி தூரயெறிந்தாள்.

நினைவுகள் சுழற்றியடிக்க, ‘கிருஷ்ணாவை காதலித்ததை தான் விகர்த்தனனுக்கு முனானாடியே தெரிவித்தாயிற்றே. இதனால் அவன் தோழன் என்றாலும் தான் ஒன்றும் மறைக்கவில்லையே.‌’ என்று நிம்மதியானாள்‌.

ஆனால் அடுத்த நொடி, ‘ஒருவேளை கிருஷ்ணா பிரெண்ட் என்று இப்ப விகர்த்தனன் கிருஷ்ணாவிடம் என்னை பற்றி கூற, கிருஷ்ணா என்னை பற்றி தப்பாய் ஏதாவது விகர்த்தனனிடம் உரைத்து திருமணத்தை தவிர்த்திட கூறியிருப்பானா?’ என்ற அச்சம் பிறந்தது. கிருஷ்ணாவை போல விகர்த்தனனை மறக்க முடியாது. அந்தளவு அவன் மீதான காதல். இனியொரு தோல்வி தாங்க இயலாது.

”விகர் நான் உங்களிடம் கிருஷ்ணாவை விரும்பியதை முன்னவே சொன்னேன். உங்க பிரெண்ட் என்று தெரிந்து என்னை விரும்பினிங்க. ஆமா கிருஷ்ணா ஏதாவது என்னை தப்பா சொன்னாரா?” என்று கோபமானாள்‌.

முன்னால் காதலி என்று தப்பும் தவறுமாய் உரைத்து காதலை பிரிக்கும் மாயை நடக்கின்றதே.

”கிருஷ்ணா உன்னை பத்தி எதுவும் சொல்லலை.
வசந்த் சத்யமூர்த்தியை பத்தி தான்‌ சொன்னான்.” என்று வசந்த் கிருஷ்ணாவை கொலை மிரட்டல் மிரட்டியது, கிருஷ்ணா அதை செவிமடுக்காமல் இருக்க, ஜனனி மூலமாக அவளுக்கே தெரியாமல் சம்ருதி உணவில் சில மாத்திரையை கலக்க, புட்பாய்ஷன் ஆனதையும், அந்த கூட்டில், சந்திரசேகருக்கும் பங்குண்டு என்று கதைகட்டி, தன் மகளாக இருந்தாலுமே காதலித்து அவள் தன் சொல் பேச்சை கேட்காமல் போனால் கொல்வதாக கூறி கிருஷ்ணாவை அவன் வாயால உன்னை ரிஜெக்ட் பண்ணுவதா சொல்ல வச்சாங்க.

ஆக்சுவலி கிருஷ்ணா வரதட்சனை வாங்காம, அவனா சொந்தக்கார பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான். இத்தனைக்கும் நவ்யாவிடம் உன்னை பத்தி உயர்வா சொல்லிருக்கான்.” என்றதும் சம்ருதி குழம்பினாள். தந்தை தன் ஆசைக்கு தடையிடமாட்டாரே.

“சொல்ல மறந்துட்டேன். உங்கப்பா உன் காதலை தடை செய்யலை. வசந்த் சத்யமூர்த்தி ஜனனி உங்கத்தை சியாமளா” என்று கூறவும், சம்ருதியிடம் நிசப்தம். தந்தை அன்பு உண்மையானது என்ற நிம்மதி.

“வசந்த் பற்றி… கிருஷ்ணா என்னிடம் சொல்லிருக்கலாமே” என்று கேட்டாள்.

அவனுக்கு உங்கப்பா தான் எல்லாத்துக்கும் காரணம்னு பயந்து ஒதுங்கிட்டானா.‌ ரீசன்டா தான் அவனை பிடிச்சி திட்டினேன். சந்திரசேகர் அவரோட பொண்ணு விரும்பினா, மாப்பிள்ளை யாராயிருந்தாலும் மனதார ஏற்கற ஆளுன்னு‌” என்று கூற சம்ருதி தந்தை மீது வைத்த பாசம் உண்மையானதில் நிம்மதியடைந்தாள்.

வசந்தை மாமாவை துவைக்க வேண்டுமென்ற எண்ணம் விதைத்தது.

வசந்த் விகர்த்தனனையும் மிரட்டினால்… அதை அவனிடம் கேட்டாள்.

“என்னை மிரட்டவும் வந்தானுங்க. மூன்று நாளுக்கு முன்ன ஜிம்ல. வசந்த் சத்யமூர்த்தி இரண்டு பேரும்.

பச்.. சந்திப்பு எதார்த்தமா இருக்க அங்க வந்தாங்க‌. உன்னை பத்தி தப்பா பேசவும், சம்ருதியோட முன்னால் காதலனை ஓடவிட்ட மாதிரி என்னை பண்ண முடியாதுன்னு ஓபன்னாவே சொல்லிட்டேன். உள்ளுக்குள்ள உன்னை வேற எவனுக்கும் கல்யாணம் செய்ய அவனுக்கு விருப்பமில்லை.

உங்கப்பாவிடம் நல்லவன் வேஷம் போடறான்.” என்று எடுத்து சொன்னான்.‌

சம்ருதி எல்லாம் கேட்டப்பின்னும் தன்னை வசந்த் வீட்டில் ஹாஸ்பிடல் வரை இழுத்து சென்றதெல்லாம் தள்ளி வைத்தாள்.

“உங்களுக்கு கிருஷ்ணா ரொம்ப க்ளோஸா?” என்று கேட்டாள்.‌

“ஆமா… நட்பையும் இழக்க முடியாது. காதலையும் விட முடியாது.” என்று தன்னிலையை விளக்கினான்.‌

சம்ருதி சம்மதமாய் தலையாட்டி, “ஓகே… அது உங்க இஷ்டம். நான் தலையிடலை.” என்றதும் அப்பாடா என்று உணர்வுடன் மீதி பழச்சாற்றை பருக ஊக்குவித்தான்.

அதனை பருகியவள், “நீங்க கிருஷ்ணாவோட ரிசப்ஷன்ல என்னை பார்த்திருந்தா, பிளைட்ல அப்ப என்னை தெரிந்திருக்கும் தானே?” என்று சந்தேகமாய் கேட்டாள்.

“ம்ம்ம் உன்னை பார்த்ததும் கிருஷ்ணாவோட முன்னால் காதலி என்று சட்டுனு கண்டுபிடிச்சிட்டேன். அதுக்கு பிறகு வசந்த் கூட நீ வந்ததை கவனிச்சதும் செம கடுப்பு.
இதுல நமக்குள் ஒரு அழகான பாண்டிங் உருவாச்சு.

நாம பேசியது எதர்ச்சையமான சந்திப்பு பேச்சு.

அடுத்து ஒரே ஹோட்டல் பக்கத்து பக்கத்து அறை என்றதும் தான் எனக்குள் அந்த எண்ணம் உருவாச்சு.

உன்னிடம் கிருஷ்ணாவை பத்தி சொல்லணும்னு. என் பிரெண்ட் நல்லவன் என்று சுட்டிக்காட்டணும்னு.

அதனால் தான் நீங்க போன இடத்துல, வசந்தை நல்லா குடிக்க வைக்க, நினைச்சேன். இலக்கியனை வச்சி பேரரிடம் பணத்தை வீசி வசந்தை அளவில்லாம ட்ரிங்க்ஸ் பண்ண வச்சது.

உங்களுக்கு உதவி தேவைப்பட நானா அந்தயிடத்தில் உதவியது.

ஜனனி நீயும் என்னை அந்த சூழ்நிலையில் ரொம்ப நம்பனிங்க.

எனக்கு அதுதான் தேவைப்பட்டது.
ஜனனி நம்பினா போதுமா? வசந்த் நம்பணும். இல்லைன்னா என்னை உன்னோட ஜனனியோட பழக விடமாட்டான்.

அதனால் தான் ப்ரியா நானே ஊர் சுத்திகாட்ட அழைச்சது. ஒரு விதத்தில் வசந்த் சில்லரை தனமா பணத்தை சேர்க்க நினைச்சிட்டான். இட்ஸ் பேட். அவனுக்கு பேக்பயர் ஆகிடுச்சு.” என்று பேச சம்ருதிக்கு மனதில் கலவையான கலவர எண்ணங்கள் மோதியது.

விகர்த்தனன் சம்ருதியிடம் உண்மையை கூறும் வேகத்தில், “அந்த சீ அக்வாரியம்ல ஜனனியை இலக்கியன் மூலமாக ஸ்லிப் ஆக வச்சேன்.‌ ஜனனி தண்ணில விழுந்தா. நான் காப்பாத்தினேன். ஆனாலும் இலக்கியனால விழவும் அவளுக்கு அவன் மேல் கோபம்.

ஹோட்டல் ரூமுக்கு வந்ததும் என்னிடம் இலக்கியன் என்னை வேண்டுமென்றே தள்ளினார் அண்ணா. அவர் பார்வை சரியில்லைன்னு சொன்னா. அவ சொன்னதுக்காக அவனை அவாய்ட் பண்ணுவதா காட்டினேன்.
ஜனனிக்கு சந்தோஷம். அவளோட பேச்சை முதல் முறை ஒருத்தங்க செவிமடுத்ததால் ஏற்பட்ட ஆனந்தம். என்னை ரொம்ப நம்பி மனசார அண்ணானு அழைச்சா. நானும் உனக்கு புட்பாய்ஸனுக்கு இவளும் ஒரு காரணம் என்பதால் தான் தள்ளி விட சொன்னது.
அடுத்தடுத்து உங்களை என் மேற்பார்வையில் அழைத்து போனதெல்லாம் என்னோட திட்டமிட்ட பிளான். உனக்கு என்னை பிடிக்க ஆரம்பிச்சதை கண்ணுல பார்த்தேன்.

ஆனாலும் நீ கிருஷ்ணாவை விரும்பிட்டு உடனே என்னை காதலிக்க யோசித்த. உன்னை அப்படி யோசிக்க வைக்க கூடாதுன்னு தான் என்னை சுத்தியே வட்டமிட வச்சது.

என் யூகம் பொய்க்கலை. நீ என்னை தேடி, மிட்நைட்ல போன் பண்ணி, என் ரூமுக்கு பால்கனி ஏறி வந்த.
அந்த மௌமென்ட்… இந்த உலகத்தையே வென்ற கர்வத்தை தந்துச்சு.
ஒரு பொண்ணு அவ கேரக்டரை கூட இக்னோர் பண்ணிட்டு என் ரூமுக்கு வந்திருக்கா. தட்ஸ் ஆவ்சம் இல்லை.” என்று கூறவும் சம்ருதிக்கு அன்று தான் செய்த செய்கை இன்று அசிங்கமாக மாறியது.

தன்னை திட்டமிட்டு வீழ்த்தி, அவன் திட்டத்திற்கு உகந்தது போல தன்னை மாற்றி தன்னை வைத்தே அவன் அறைக்கு தானாக வரவழைத்து இருப்பதில் அதிருப்தியடைந்தாள்.

இதில் ஜனனியை கடலில் தள்ளியது எந்த வகையில் சேர்ப்பது. மூச்சு திணறி இறந்திருந்தால்?

வசந்த் குடிக்காமல் இருந்தால் அவன் ஒழுங்காக தன்னை வழிநடத்தியிருக்க வாய்ப்புண்டு. ஏன் விகர்த்தனன் வசந்தை ஜனனியை இவ்வாறு செய்து என்னை கவர வேண்டும். இதில் தன்னை வேறு எப்படி எடுத்திருப்பார் என்ற கோபம் உருவானது.

“என்ன சொல்றிங்க.. அப்ப வசந்தை குடிக்க வச்சது, ஜனனியை தண்ணில தள்ளிவிட்டு அப்பறம் காப்பாத்தியது, திட்டமிட்ட பிளான்.
இதுல என்னை ஏன் அசிங்கப்படுத்தறிங்க?” என்றாள்.‌

‌‌”நான் எங்க அசிங்கப்படுத்தினேன்” என்று தெனாவட்டான வினாவில் பேசினான்.

“அசிங்கம் தானே… ஏதோ சென்னிங்களே ‘என் ரூமுக்கு பால்கனி ஏறி வந்த.
அந்த மௌமென்ட்… இந்த உலகத்தையே வென்ற கர்வத்தை தந்துச்சு.
ஒரு பொண்ணு அவ கேரக்டரை கூட இக்னோர் பண்ணிட்டு என் ரூமுக்கு வந்திருக்கா.’னு.‌

அவ கேரக்டரை மீன்ஸ்… என்ன சொல்ல வர்றிங்க.” என்று கேட்டாள். அவள் குரலே அதிர்ச்சியையும் வலியையும் பிரதிபலித்தது.

விகர்த்தனன் இருந்த மனநிலையில் “கேரக்டர் மீன்ஸ்… தப்பா சொல்லலை‌.

எந்த பொண்ணும் கொஞ்ச நாள் தெரிந்தவனோட ரூமுக்கு பால்கனி ஏறி வந்து பேச மாட்டா. ரூம்ல மூவி பார்க்க மாட்டா. முக்கியமா ரூம்ல தூங்கியிருக்க மாட்ட. பட் நமக்குள் அப்படி நடந்தது வித்தியாசமானது தானே‌.” என்று கூறவும், “ஸ்டாப்பிட். அந்த நிமிஷத்துக்கு முன்னவே உங்களை விரும்பினேன். உங்க மேலயும் நம்பிக்கை இருந்தது. அதனால் தான் பால்கனி ஏறி, உங்க ரூமுக்கு வந்ததே. ஆனா நீங்க என்னை என் கேரக்டர் பத்தி பேசறிங்க?
உங்க திட்டத்துக்கு எல்லாம் தலையாட்டி என்னை வளைச்சியிருக்கிங்க. ஷிட்… உங்களை நம்பி வந்ததுக்கு நல்ல மரியாதை தந்துட்டிங்க” என்று எழுந்து வேகமாய் சென்றாள்.

“Sam தப்பு தப்பா யோசிக்காத. ஒரு நிமிஷம் நில்லு” என்று கத்தினான்.

அவன் குரல் எட்டாத வகையில் சம்ருதி சென்றிருந்தாள்.‌

பில் வந்ததும் பே செய்து சம்ருதியை தேடி அவள் வீட்டுக்கு காரை செலுத்தினான்.

ஒரு களோபரம் வரலாமென்றது விகர்த்தனன் யூகம். ஆனால் கிருஷ்ணா நண்பன் என்பதால் அவன் நட்பை இழக்க கூறுவாளென்று எண்ணியிருக்க, அவள் பால்கனி ஏறி வந்ததை தான் கூறியது அவள் தவறாக எண்ணி விட்டாளே என்று தலையிலடித்து சம்ருதி வீட்டு வாசலை வந்தடைந்தான்‌.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

15 thoughts on “நெஞ்சை கொய்த வதுகை -17”

  1. Kalidevi

    VIKAR NEE ETHO PLAN PANNI VANTHA MARITHA IRUNTHUCHI APPADI THA PANNI IRUKA BUT KRISHNAKAGA PATHA ATHA VACHI IPADI LA PLAN PANNI PANI IRUKIYE ITHEELAMA SAMRU KITTA SOLLAMA IRUNTHU IRUKALAME KRISHNA PATHI MATTUM SOLITU. ROOM VANTHA MOMENT NE RASICHI SOLRA AANA ORU PONNUKU ATHU VERA MEANING LA THA EDUTHUPA IPO SAMADHANAM PANNU PO

  2. Avatar

    எப்பொ நாம் நினைக்கிறது நடக்குது.அது பாட்டுக்கு ஒன்று நடக்குது…விதி…நாம் என்ன செய்ய…அடுத்த பதிவிற்காக காத்து கொண்டிருக்கிறேன். ..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  3. M. Sarathi Rio

    நெஞ்சை கொய்த வதுகை …!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 17)

    இதுக்குத்தான்… ஓவர் ஆக்ட் வாழ்க்கைக்கு ஆகாது.
    நுணலும் தன் வாயால் கெடும்.
    இப்ப இந்த வெட்டி பந்தா எல்லாம் தேவையா…? செல்ஃப் டப்பா மாதிரி, இவன் செஞ்ச அட்வான்ச்சர் எல்லாம் சொல்லப் போய்த்தானே, இவனுக்கு இவனே ஆப்பு வைச்சுக்கிட்டான். இப்ப இந்த லாங் லென்த் கதையெல்லாம் தேவையா…? அவளை வேணுமின்னே மடக்கி புடிச்சு மாதிரித்தானே காட்டுது. தான் கிருஷணாவோட ஃப்ரெண்ட்ங்கறதோட விட வேண்டியது தானே…?

    அதை விட்டு, வசந்த்தை குடிக்க வைச்சது, ஜனனியை கடலுக்குள்ள தள்ளி விட்டது, இதுல சம்மு வேற பால்கனி சுவரேறி வந்ததை, தனக்காக தன் கேரக்டரைப்பத்திக் கூட யோசிக்காம வந்ததைப் பத்தி கர்வமா ஃபீல் பண்றதுன்னு..
    இதையெல்லாம் இவனை இப்ப யாரு உளறச் சொன்னது. ஒரு பொண்ணு தான் நேசிக்கிறவனுக்காக, எந்தளவுக்கும் போவாத்தான்….
    அதையே அவ நேசிக்கிறவன் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி காட்டுறச்ச… தப்பான பொருள்படும்படித்தான் வார்த்தைகள் வெளியேறுது.
    அவ அத்தனை தூரம் அவனை நம்பினதாலத்தானே, அவனோட ரூம்லயே தூங்கினா.
    இப்ப இவன் சொல்றதையெல்லாம் பார்த்தா..
    ரிசப்சன்ல அவ கையில பூ கொடுக்கிறப்பவே அவளை தெரிஞ்சிருக்குன்னா,… அப்ப ப்ளைட் டிக்கெட் கூட பக்கத்து பக்கத்துல எடுத்தது கூட இவனோட வேலையோன்னு எனக்கே தோணுதுப்பா…!

    வேற வழியே இல்லை, இப்ப சம்முவோட காலை பிடிச்சாவது
    அப்படியெல்லாம் கிடையாது,
    எல்லாமே உன்னை எனக்கு நெருக்கமா கொண்டு வர, நான் எடுத்த பகீரதப் பிரயத்தனங்கள் இதலெல்லாம்..வை திஸ்ன்னா.?
    அந்தளவுக்கு உன்னை நான் பார்த்தவுடனே, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டுங்கிற மாதிரி, காதல் குளத்துல (உள்ளத்துல) தொபுக்கடீர்ன்னு விழுந்துட்டேன்னு.. ஏதாவது இப்படி சொன்னாத்தான், அவ கொஞ்சமாச்சும் அவனை நம்பச் செய்வா..!

    வேற வழியில்லை ராசா..! இதையாவது ஈகோ பார்க்காம உருப்படியா போய் செய் ராசா… போ, ராசா போ..!
    😆😆😆
    CRVS (or) CRVS 2797

  4. Avatar

    அடப்பாவி கிருஷ்ணா நண்பன் . வசந்த் சத்யமூர்த்தி பற்றி மட்டும் சொல்லி இருக்கலாமே …. அக்கா ஏன் இந்த கொலவெறி இப்படி சண்டையை மூட்டி விட்டுடிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *