அத்தியாயம்-18
சம்ருதி வீட்டில் புயலாய் வந்தான் விகர்த்தனன். அவள் வந்த வேகத்தில் அவள் தந்தையிடம் ‘எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்’ என்று கூறி சந்திரசேகரிடம் அழுது துடிப்பாள் ஆர்ப்பாட்டம் செம்திருப்பாளென்று பதட்டமாய் தான் வந்தான்.
ஆனால் அவன் சம்ருதி வீட்டில் காலடி எடுத்து வைக்க, “என்னங்க மாப்பிள்ளை வந்திருக்கார்” என்ற ஜானகி குரலும், “அட வாங்க மாப்பிள்ளை. இப்ப தான் சம்ரு வீட்டுக்கு வந்தா. உங்களை வரவேற்க தான் வந்திட்டாளோ” என்று வரவேற்றார்.
“ஜானகி பொண்ணை கூப்பிடு” என்று சந்திரசேகர் கூற, ஜானகி பணியாட்களிடம் கூறி மகளை கூப்பிட கூற, பணியாளும் சிட்டாய் பறந்து சம்ருதி அறைக்கு வந்தார்.
“அம்மா… மாப்பிள்ளை தம்பி வந்ததால் ஐயா உங்களை கூப்பிட்டார்.” என்று கூற, விகர் இங்கேயே வந்துட்டாரா? என்று அவசரமாய் கண்ணீரை துடைத்து வந்தாள்.
நல்லவேளை அவள் அப்பாவிடம் எதுவும் இன்னமும் கூறவில்லை என்ற நிம்மதி விகர்த்தனனுக்கு.
அப்பாவிடம் எதையும் பேசிட போகின்றான் என்று சம்ருதியும் பயந்து வந்தாள். தந்தைக்கு சிலது தெரியாமலே செல்லட்டும் என்ற தவிப்பான பயம்.
சம்பிரதாயமாக போலி புன்னகை கொண்டு வரவேற்றாள்.
அவள் அழைப்பது போலியானது என்று புரிந்தாலும், “இந்த பக்கம் வந்தேன் Sam உன்னையும் பார்த்ததுட்டு போக வந்தேன்.” என்று கூற ‘ஓ அப்படியா’ என்பது போல நின்றாள்.
சந்திரசேகருக்கு லேசாய் ஐயம் துளிர்க்க, “மாமா நான் சம்ரு கூட தனியா போகணும். இஃப்யூ டோண்ட் மைண்ட் பேசிட்டு வரட்டுமா?” என்று கேட்டான் மாப்பிள்ளையாக போகும் விகர்.
“இதுக்கெல்லாம் பர்மிஷனா? தாராளமா பேசுங்க மாப்பிள்ளை” என்று அனுமதி வழங்கினார் சந்திரசேகர்.
சம்ருதிக்கு தந்தை முன் விக்ராந்த் கூட வாதம் செய்ய பிடிக்காமல், அறைக்கு அழைத்து வந்தாள்.
கதவை சாற்றிய மறுநொடி”இங்க ஏன் வந்திங்க?” என்று சூடாக கேட்டாள்.
“பேசிட்டே இருக்கும் போது பாதில நீ . போனதால, நான் இங்க வந்தேன்.” என்றான்.
“அதான் எல்லாம் பேசிட்டிங்களே… என்னை சந்திச்சது, பேசியது பழகியது, எல்லாமே பொய்… நாடகம்னு உங்க வாயால சொன்னிங்க. இப்ப எதுக்கு இங்க வந்திங்க? கொஞ்சநாள் பேசி பழகியவனோட ரூம் வரை வந்துட்டாள்னு கர்வமா பேசினிங்க. இன்னும் என்ன பாக்கியிருக்கு?” என்று கேவினாள்.
குலுங்கி குலுங்கி அழுதவளுக்கு கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து, “இந்த கண்ணீர் கிருஷ்ணா என்னை வேண்டாம்னு சொன்னப்ப வரலை. அடப்போடானு அலட்சியமா இருந்தேன். ஆனா இப்ப.. திட்டம் போட்டு, என்னை ஏமாற்றி உன் பின்னால் வரவச்சி என் கேரக்டரையும் தப்பா பேசின உனக்காக அழறேன்.” என்று அழுவதை நிறுத்தாமல் பேசினாள்.
விகர்த்தனனுக்கு அவள் அழுகை அந்த நேரத்திலும் சந்தோஷத்தை தான் தந்தது. உண்மையில் சிரித்தபடி அவளை ரசித்தான்.
“உங்க மேல கோபம் வருது. கல்யாணத்தை நிறுத்திடலாம்னு கூட வந்தேன். ஆனா எங்கப்பா சந்திரசேகர்… ஆசை ஆசையா என்னை பெத்து வளர்த்து ஆளாக்கியவர், நான் முன்ன ஒருத்தனை விரும்பறேனு சொன்னப்ப கூட்டிட்டு வாம்மான்னு சொன்னார். கிருஷ்ணாவை வசந்த் துரத்திட்டான்.
இப்பவும் நான் ஒருத்தரை விரும்பறேனு சொல்லி உங்களை அவர் முன்ன நிறுத்தினேன்.
அப்பவும் அவரோட அக்காவையோ அக்கா பையனோட என் கல்யாணத்தை பிக்ஸ் பண்ணாம, அவங்களை அவாய்ட் பண்ணிட்டு எனக்கு பிடிச்ச மாதிரி என் வாழ்க்கை அமையணும்னு உங்களை ஏற்றுகிட்டார்.
மகளோட கல்யாணம்னு ஆசை ஆசையா மண்டபத்துக்கு வாடகை கொடுத்து, நகை செய்ய சொல்லி, என் ஆசையை நிறைவேற்ற நினைக்கறவருக்கு, கல்யாணத்தை நிறுத்தி களங்கத்தை தர விருப்பமில்லை.
அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே இந்த கல்யாணத்தை நிறுத்தாம உள்ளுக்குள்ள மறிச்சவளா நிற்கறேன்.” என்று கூறியவளை தன் பக்கம் திருப்பினான்.
அப்பொழுதும் அவனை பாராது வேறு திசைக்கு தலையை திருப்பினாள்.
“லுக்… நான் உன்னை தப்பா பேசலை. ஆக்சுவலி நீ என்னை தேடி வந்ததுக்கு நான் சந்தோஷப்படறேன்.
உன் கவனத்தை என் பக்கம் திருப்ப திட்டம் போட்டேனே தவிர, உன் மனதை திட்டம் போட்டு கவுக்கலை. நீயும் என்னை விரும்பியது போல நானும் உன்னை விரும்பினேன்.
நீயா வந்தப்ப கூட நானும் கண்ணியமான தான் இருந்தேன். என் அளவு மீறி நான் நடந்ததேயில்லை.
கல்யாணத்தை நிறுத்ததாதுக்கு சந்தோஷம்.” என்று கூறினான்.
ஏனோ முன்பு தனக்காக பார்த்து பார்த்து பேசியவன். இன்று இப்படி பேச அதிருப்தி அடைந்தால் என்பதே சரி.
“ஓகே… வசந்த் பத்தி உங்க வீட்ல சொல்ல போறியா? அப்படி சொன்னா கிருஷ்ணாவை பத்தி சொல்லவேண்டியதா இருக்கும். கிருஷ்ணாவை பத்தி நான் சொல்லி தெரியும்னா, அடுத்து அவன் நட்பை சொல்லணும். நம்ம பழகியதை கூறணும். இப்ப இப்படி பேசுவதையும் வெளியே சொல்ல நேரலாம். நான் உங்கப்பாவிடமோ உன்னிடமோ மன்னிப்பு கேட்க மாட்டேன்.
நான் உன்னை தப்பா நினைக்கலை தப்பா சொல்லலை. அப்படியிருக்க மன்னிப்பும் கேட்க எனக்கு அவசியமில்லை.” என்று வேறு கூற, ஈகோவின் ஒட்டுண்ணியாக வளர்த்து வரும் சம்ருதியும் “நீங்க மன்னிப்பு கேட்டாலும் மன்னிப்பு தர்ற நிலையில் நானுமா இல்லை.” என்றாள்.
“ஓ… ரியலி… நல்லது” என்று கூறியவன், “அப்ப கல்யாணம்” என்று புருவம் உயர்த்தி கேட்க, சம்ருதி கையை பிசைந்தாள்.
அவள் மௌனம் விகர்த்தனனின் கோபத்தை கிளறியது.
“எந்த சிட்டுவேஷன் வந்தாலும் உன்னை தூக்கிட்டு போவேன். ராமாயணத்தில் அந்த ராவணன் சீதையை தூக்கிட்டு போனது போல. கல்யாணம் நடந்தாலும் நடக்காட்டியும் கிருஷ்ணா மாதிரி விட்டு தந்து கைகட்டி வேடிக்கை பார்க்குற கேரக்டர் நான் இல்லை.
எனக்குன்னு முடிவானதை சொடக்கிடும் முன்ன தூக்கிட்டு போறவன் நான்” என்று விகர்த்தனன் பேசினான்.
சம்ருதி நக்கலாய் சிரித்து, ராவணனால் தூக்கிட்டு போக மட்டும் தான் முடியும். சீதையை ஆளமுடியாது.” என்று வைகுண்டு பேசினாள்.
ராவணனும் ராமனனும் ஒரே ரோல்ல இருக்கறப்ப நிச்சயம் சீதையை ஆளமுடியும். பார்க்கறியா?” என்று சவாலிடும் தோரணையில் கேட்டான்.
சம்ருதி நக்கலாய் அவனை நோக்கி, “காதலிச்சதுக்கே பால்கனி ஏறி நம்ம ரூமுக்கு வந்தவ என்ற இளக்காரம் தானே, இப்ப இப்படி பேசற? நமக்குள் கல்யாணமே ஆனாலும் நான் இதே சந்திரசேகர் மகளாவே இருப்பேன்.” என்று அவளும் கூறினாள்.
“நைஸ்… கல்யாணத்துல மீட் பண்ணலாம்” என்றவன் ஒய்யாரமாய் கண்ணாடி அணிந்து வெளியே வந்தான்.
சம்ருதியோ அழுகையை துடைத்து திமிராய் நடந்து வந்தாள்.
“தேங்க்ஸ் மாமா. ஒரு சின்ன விஷயம் பேசணும்னு வந்தேன். சம்ருதி நான் சொன்ன விஷயத்திலா ரொம்ப ஸ்போட்டிவா எடுத்துக்கிட்டா. தேங்க்யூ சோ மச் சம்ரு” என்று பேச பேச, சம்ருதி போலி புன்னகை தழுவ விட்டாள்.
விகர்த்தனன் செல்வதாக கூற சந்திரசேகர் மாப்பிள்ளையை வழியனுப்ப கூறினார்.
சம்ருதியும் வேண்டாவெறுப்பாக வந்தாள்.
காரில் ஏறியவனோ, மாமனார் சற்று நகர்ந்ததும் தனிமை கிடைக்க “நகை கடை இருக்குன்னு கல்யாணத்துக்கு நகை நகையா செய்ய சொல்லாத. உன் முகத்துல புன்னகை மட்டும் போலியில்லாம இருக்கட்டும். எனக்கு அந்த நகை மட்டும் வேண்டும்.” என்று கண் சிமிட்டி சென்றான்.
அவன் காரை பார்த்து, ‘இவரு என்னவேண்டுமென்றாலும் பேசுவாரு, செய்வாரு, என்னை நக்கல் பண்ணறார். இவர் மட்டும் நடிக்கலை?’ என்று முனங்க, வசந்த் சத்யமூர்த்தி சியாமளா ஜனனி என நால்வரும் காரில் வந்தனர்.
அவர்கள் வரவும் சியாமளா “என்ன இங்க நிற்கற?’ என்று கேட்க “விகர்த்தனன் வந்துட்டு போறார் அத்தை.” என்றவள் வசந்தை சத்யமூர்த்தியை எரிக்கும் விதமாக கடந்து சென்றாள்.
“அந்த படுபாவி எல்லாத்தையும் சொல்லிட்டு போயிட்டானா?” என்று சத்யமூர்த்தி யோசனையாக நுழைந்தார்.
“கொஞ்ச நேரம் முன்ன வந்திருக்க கூடாது? மாப்பிள்ளை வந்துட்டு போனார்” என்று சந்திரசேகர் கூறி வரவேற்றார்.
சத்யமூர்த்தி சங்கடமாய் நம்மை பற்றி தெரிந்துவிட்டதா? இல்லையா? என்ற குழப்பத்திலிருந்தார்.
சந்திரசேகரோ ஜானகியியுடன் மச்சான் அக்காவிற்கு உடையும் நகையும் தட்டில் எடுத்துவர சென்றார்கள்.
சம்ருதியோ, “என்ன மாமா அப்பாவை பார்த்து பார்த்து யோசிக்கறிங்க? கவலைப்படாதிங்க விகர்த்தனன் அம்மா அப்பாவிடம் உங்களை பத்தி சொல்லலை.
என்னிடம் மட்டும் நீங்க செய்ததை சொன்னார்.
இப்படியொருத்தன் உங்களை நோண்டுவான்னு தெரிந்திருந்தா கிருஷ்ணாவையே எனக்கு கல்யாணம் பண்ண விட்டிருப்பிங்க தானே?
பாவம் மாமா நீங்க இந்த விகர்த்தனன் ரொம்ப மோசம். உங்களை பத்தி ஏன் அப்பாவிடம் சொல்லாம போனார்னு தெரியலை. எதுக்கும் விகர்த்தனனிடம் ஜாக்கிரதையா இருங்க. பேரே விவகாரம் பிடிச்சி வச்சியிருக்கான்.
அப்பறம் இருப்பதும் போச்சுனு தலையில துண்டை போடாதிங்க.
எங்கப்பாவுக்கு ஆண் வாரிசு இல்லை. அதனால் வசந்த் அத்தான் பார்த்திருக்கற நகைகடையை கூட கேட்டா தருவார். ஆனா என் சந்தோஷத்தை தடையா நினைக்கிறவங்களுக்கு இந்த வீட்ல நிற்க கூட இடம் தரமாட்டார்.
சொந்தக்காரங்க என்ற முறையில வந்தம்மா போனம்மா சாப்பிட்டிங்களா அவ்ளோ தான். இனி எனக்கு புட்பாய்ஸன் வச்சி எது செய்தாலும் அவன் உங்க குரல் வளையை கடிச்சிடுவான்.
ஏற்கனவே ஜனனி தான் ஜூஸ்ல மாத்திரை கலந்தானு அவளை சீ அக்வாரியம்ல கடல்ல தள்ளினான்.
மாத்திரை கலந்தவளுக்கே உயிர் பயம் காட்டி காப்பாத்தினான்.
இதுல திட்டம் போட்ட வெட்டியாட்கள் நீங்க. எதுக்கும் இனியாவது நல்லவங்களா மாறிடுங்க. மச் பெட்டர்” என்று பேசி கடந்தாள்.
அவள் அவளது அறைக்கு செல்லவும், “எல்லாம் போச்சு.” என்றான் வசந்த்.
“இவன் ஒருத்தன்” என்று சத்யமூர்த்தி அடுத்த திட்டம் போட நகம் கடித்தார்.
சம்ருதிக்கு ‘என்னை எப்படி பேசிட்டு போனான். ஆனா இந்த விகர்த்தனனை நான் இவங்களிடம் புகழறேன்.
ஏன் இப்படி? அவனை கண்டு அந்தளவு காதலா?
இந்த இளக்காரம் தானே அவன் பேசியது.” என்று துவண்டாள்.
எந்தபக்கம் சென்றாலும் விகர்த்தனன் பேசியது வலித்தது.
கிருஷ்ணாவோடு காதல் தோல்வி அடைந்து அவன் வேறு பொண்ணை கல்யாணம் செய்ய சென்ற நேரம் கூட இந்தளவு வலியில்லை.
இந்த விகர்த்தனனோடு கல்யாணமே நடைப்பெற போகின்றது. ஆனாலும் அவன் பேசியது வலிமை கூட்டியது.
என்ன தான் தெரியாமல் பேசினாலும் கடத்திட முடியவில்லை.
பேசி விட்டானே…. என்ற ஒன்றே உள்ளத்தை உலுக்கியது.
நிச்சயம் இவனுடன் வாழும் வாழ்க்கை எளிதாகுமா? இராவணன் கைப்படாத சீதையா, அல்லது ராமனின் பாதம் பணிந்த ஜானகியா?
விகர்த்தனன் இந்த இரண்டு கதாபாத்திரமும் வேறு வேறு என்றாலும் இரண்டும் நானே என்பதாக கூறிவிட்டான்.
ஆனால் சீதையும் ஜானகியும் ஒருத்தியே என்றாலும் ராவணன் ராமன் இருவரில் யார் அருகே சென்று நிற்பாளென்றதில் வித்தியாசம் உள்ளதே.
சம்ருதி மனதளவில் போராட்டத்தை அடைந்தவளாக அசதியில் கழித்தாள்.
-தொடரும்.
- பிரவீணா தங்கராஜ்
Intresting waiting for nxt epi👌👌👌👌
Interesting.
அச்சோ பாவம் … கிருஷ்ணா பண்ணதும் தவறு
Super. Intresting
Super sis nice epi 👌👍😍 endha vikarthanan eppdi pesiyiruka vendam pa 🙄 endha vasanth family enimelavidhu angi erupangala parpom 🤔
Interesting epi. Vikar thappa pesala atha thapa purinjikitta samru . Ava edathula athu thappu nu ipo rendu perum ippadi kova pattu neeya naana pakalam irunthalum nalla iruku yenna rendu perkum love iruku athu win panna vaikum. Evlo pattalum vasanth avan appavum thiruntha matanga
Nice episode sagi
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 18)
இதோ வந்துட்டான்ல… வந்துட்டான்ல, பின்னாடியே ஓடி வந்துட்டான்ல…! இதற்கப்புறமும் ஏன் ராசா கட்டபொம்மன் கணக்கா மீசையை முறுக்கி, முறுக்கி பேசற விகர்த்தனா…?
சரியான வில்லங்கம் புடிச்சு
விவகாரனா இருப்பான் போலவே..??
இங்கே பாரு… நீ ராமனனா இரு, ராவணனனா இரு, இல்லை ரெட்டையனா கூட இருந்துக்க, அதைப்பத்தி சம்முவுக்கு கவலை கிடையாது.
ஏன்னா, பொம்பளைங்க சீதையா மட்டும் இருக்கவே கூடாதுன்னு நான் சொல்லுவேன். எதுக்குன்னா… ஒருத்தன் அழகா இருக்கான்னு தூக்கிட்டுப் போய் சிறை வைச்சு
ஒதுதுக்க, ஒத்துக்கன்னு டார்ச்சர் பண்ணுவானாம் அது அந்த ராவணனானாம்…? இன்னொருத்தன் சண்டை போட்டு, சிறை மீட்டினதோட மட்டும் இல்லாம, சந்தேகத்தை நிவர்த்தி செய்யறேன்னு கட்டின
பொண்டாட்டியை தீக்குளிக்க வைப்பானாம். முதல்ல இவனுக்கு அவ மேலே முழு நம்பிக்கை இருக்கிற பட்சத்துல, எதுக்குடா ஃபையர் பாத் எடுக்க சொல்லணும். சரி போனா போகட்டும் புருசனாயிட்டானேன்னு ஒழுங்கா சொன்ன பேச்சை கேட்போம்ன்னு அவன் சொன்ன மாதிரியே செஞ்சு தொலைச்சா, அடுத்து எவனோ ஒருத்தன் பொண்டாட்டிக்கிட்ட
உளறிட்டிருந்ததை கேட்டுட்டு
தன்னோட புள்ளைங்களை உண்டாகியிருக்கிறவன்னு கூட தயவு தாட்சண்யம் பார்க்காம, அவன் பேச்சை கேட்டு தம்பிக்காரனோட நாடு கடத்தினவன் தானே அந்த ராமனன்…? அதான் அவ அந்த புள்ளைங்களை பெத்து அவன் கிட்டயே திரும்ப ஒப்படைச்சுட்டு, டாட்டா, பைபைன்னு குட்பை சொல்லிட்டு ஆத்தா வீட்டுக்கே போய சேர்ந்துட்டா அந்த சீதை. ஒருத்தியை ஒருத்தடவை சந்தேகப்படலாம், ஆனா எடுத்துக்கெல்லாம் சந்தேகப்பட்டா… இதான் நடக்கும். அப்படி பார்த்தா…
ராவணனோட தங்கச்சி சூர்ப்பனகை கூடத்தான் ராமனை பார்த்து ஆசைப்பட்டா, மனசை சிதற விட்டா… லட்சுமணன் தானே கோபப்பட்டு மூக்கறுத்து அனுப்பிச்சான். ராமன் கை கட்டி வேடிக்கை மட்டும்தானே பார்த்தான். ஒருவேளை, அவளை தொட்டா கற்பு பறிபோயிடும்ன்னு நினைச்சானோ, என்னவோ…?அப்படிப் பார்த்தா, சூர்ப்பனகை ராமனனை கண்ணால பார்த்து ஆசைப்பட்டதுலேயும், மனசை சிதற விட்டதுலேயும் தானே ராமனோட கற்பு போயிடுச்சுன்னு தானே அர்த்தமாகுது. அப்ப, ஏன் எந்த சீதையும் ராமனை தீக்குளிக்க சொல்லலை,..? அது ஏன் ராமனை மட்டும் ஏகப்பத்தினி விரதன்னு சொல்லணும்…?
ராவணன் ஆசைப்பட்டதுல
சீதா தேவியோட தப்பு எங்க இருக்கு..? இதுல சீதா தேவியை குறை சொல்ல என்ன ரைட்ஸ் இருக்கு…? இதுல, சீதாதேவி எப்படி ஏகப்பத்தினன் விரதன் ஆகாம போயிட்டா..? அழகா இருந்தது சீதை குத்தம்ன்னா.., அப்ப ராமன் அழகா இருந்ததும் அவன் குத்தம் தானே..? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான்
பொம்பிளைங்களை இதை சொல்லியே ப்ரைன் வாஷ் பண்ணுவாங்களோ தெரியலையே..??? இன்னும் எத்தனை காலத்துக்கு ராமன் ராவணன் பேரை சொல்லி யே ஏமாத்துவாங்களோ தெரியலையே…?
எப்பா ராசா விகர்த்தனா..! நீயாவது நான் சொல்ல வரதை புரிஞ்சுக்கிட்டு முழிச்சுக்கோ.
நீ ராமனனாவும் மாற வேண்டாம், ராவணனனாவும் மாற வேண்டாம்… பிருத்வியா வேணுமின்னா மாறு. ஏன்னா, அவன்தான், தான் நேசிச்ச பெண் சம்யுக்தைக்கு வேறொருத்தனோட திருமணம் நடக்கவிருந்த நேரத்துல, காதலிச்ச பெண் சம்யுக்தையை குதிரை மேல ஏறிச் சென்று மீட்டு அவளை தன்னுடனே அழைச்சிட்டு போனானாம்.
ஸோ… இனிமே உதாரணம் சொல்றேன்னு தப்பான உதாரணத்தை கை காட்டினா…
அதுவே உனக்கு பேக்ஃபையர்
ஆகிடும்ன்னு புரிஞ்சுக்க.
ஸோ.. நீ ராவணன் & ராமனன் ரெட்டையனா இருக்கிற வரைக்கும் சம்மு உனக்கு கிடையாது. நீ.. ப்ருத்வியா மாறி உண்மையான நேசத்தோட
சம்யுக்தையான சம்மு மனசை டச் பண்ணாத்தான் அவ உனக்கு கிடைப்பா… அதுவரைக்கும் உனக்கு கல்யாணமே ஆனாலும் நீ பிரம்மச்சாரி தான்..!
பொண்ணுங்கன்னா…. உனக்கு அவ்வளவு இளப்பமா போச்சா…
இந்தா பிடி…இதான்
எங்க சாபம்..,! எங்க சபதம்…!
😄😄😄
CRVS (or) CRVS 2797
Intresting update dear 👍👍🥳🥳
Nice episode. Waiting 4 next…❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vikarthanan oda pechu ah ava vera vitham ah purinchikita ah aana Vikarthanan um athuku endha samadhanam um sollala athu vera aval ah innum kadupu aagiduthu
சம்முவின் கோபம் நியாயமே..விகர் திமிராக பேசினாலும் அவன் சம்மு மீது கொண்ட காதல் உண்மையே.. தங்களை நியாயப்படுத்தி சவால் விடும் இருவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்குமோ?
சித்துஶ்ரீ crt point
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super😍😍 interesting ❤❤
💜💜💜💜💜💜