அத்தியாயம்-19
கர்ம சிரத்தையாக மணமகளுக்குரிய இடத்தில் சம்ருதி அமர்ந்திருந்தாள்.
தாய் தந்தை மகிழ்ச்சி ஒருபக்கம் ஆனந்தத்தை கொடுத்தாலும், விரும்பியவனே மணமுடிக்கும் சந்தோஷமும் சம்ருதிக்குள் இருந்தது. அதுவும் விகர்த்தனன் இத்தனை பேசி திட்டமிட்டு செய்த போதிலும்.
என்ன கோபத்தை இன்று ஒரு நாள் பூட்டி வைத்திருந்தாள். திருமண நாள் மீண்டும் வராது அல்லவா!
தாலி கட்டியதிலிருந்து அவள் கையை விடாமல் பிடித்த விகர்த்தனனுமே போட்டியையோ சாவலையோ மறந்துவிட்டான்.
சொல்லப்போனால் அவனுக்கு சம்ருதி மீது காதல் என்ற உணர்வு மட்டுமே. மற்றபடி வேறெந்த கோபம் கூட இல்லை.
விகர்த்தனன் சம்ருதி திருமணத்தை தடுக்க முடியாத கையாலாகாத தனத்தோடு சத்யமூர்த்தி இருந்தார்.
வசந்த் மட்டும் தந்தை போல இல்லாமல் அடுத்து கடையிலிருந்து துரத்திவிட்டால் என்ற பயத்தில் சற்று நகை பணத்தை ஆட்டை போட்டிருந்தான்.
அது லட்சங்களை விழுங்கிக் கொண்டிருந்தது.
இனியும் நகை கடையை தனக்கு தந்து முதலாளியாக அமர வைப்பாரென்று அவன் கனவு காணவில்லை. அதனால் பணத்தை பதுக்கி கவரிங் நகைக்கடையை துவங்கினான். யாருக்கும் தெரியாமல் கடையை நடத்தினான்.
சத்யமூர்த்தி மட்டும் ‘ஆறு மாசம் அவனோட வாழ்ந்துட்டு டிவோர்ஸ்னு வந்து நிற்பாடா. அப்ப அவளை கல்யாணம் பண்ணினா, நீ கிழிக்கிற கோட்டை சம்ருதி தாண்ட முடியாது. அடிபணிந்து போவா’ என்று சொல்லி பார்த்தார்.
இப்பொழுது எல்லாம் திருமணம் ஆன சில மாதத்தில் விவாகரத்தும் வந்துவிட்டு ஆளாளுக்கு மறுமணம் செய்து கொள்வதை டிவியிலும் உறவினர்கள் மத்தியிலும் சர்வசாதாரணமாய் நடப்பதை எண்ணி பேசினார்.
வசந்திற்கு விகர்த்தனனோட பழகியதால் அவன் கோபமும் பழக்கவழக்கமும் தெரிய சம்ருதி மீது ஆசையை துறந்தான். அதோடு அடுத்தவனோடு வாழ்ந்தவளை நான் ஏன் கல்யாணம் பண்ணணும். எனக்கு அப்படியொன்றும் பணம் காசு வேண்டாம் என்று தந்தையிடமே சொல்லிவிட்டான்.
இந்தளவாது வசந்திற்கு மூளை வேலை செய்தது.
சியாமளா தன் தம்பி சந்திரசேகரன் மீது அதிருப்தி அடைந்தவராகவும், கணவர் தன் மீது கோபம் காட்டுவதிலும் சம்ருதியை மனதில் சபித்தார். அவரால் அதை தான் செய்ய முடிந்தது.
சந்திரசேகர் ஜானகிக்கு சம்ருதியை மணக்கோலத்தில் பார்த்து ரசிக்கவும் வந்தவரை கவனிக்கவும் நேரம் சரியாக இருந்தது.
“ஹாய் மிஸஸ் விகர்த்தனன் கால் வலிச்சா உட்காருங்க” என்று கூறி இருக்கையில் அமர, சம்ருதியோ “நீங்க நிதானமா உட்காருங்க. உங்களுக்கு தான் கல்யாணம் முடியறவரை பயந்து தவிச்சியிருப்பிங்க” என்று நக்கலை ஆரம்பித்தாள்.
“இப்ப கல்யாணம் தானே ஆகியிருக்கு. பஸ்ட்நைட் செலிபிரேட் பண்ணிட்டு நிதானமா உட்கார்ந்து கொள்வேன்.” என்று சலிக்காமல் பதில் தந்தான் விகர்த்தனன்.
”நான் அதுக்கு எல்லாம் தயாராயில்லை” என்று வார்த்தையில் மறுத்து பேசினாள் சம்ருதி.
இந்த நேரத்தில் இந்த பேச்சு தேவையில்லை என்றாலும் கைப்பிடித்து மேடையில் எதுவும் பேசாமல் தள்ளி நிற்பது விகர்த்தனனுக்கு பிடிக்கவில்லை.
“பரவாயில்லை Sam தயாராகலாமா வேண்டாமா என்ற லெவலுக்கு திங்க் பண்ணிருக்க.
என்னை பத்தி கன்சிடெர் பண்ணு. பாவம் இல்லை நானு. சமத்து பையன் தானே” என்று கண்கள் சுருக்கி கேட்டவனை, ரசித்தது சம்ருதி கண்கள். மூளையை விட இதயம் அவனிடம் மண்டியிட்டுவிட்டதே.
அதன் பின் ஜானகி தான் அன்னையாக இதை செய்ய வேண்டும் சம்பிரதாயம் என்று சம்ருதியை விகர்த்தனன் பருகிய பால் பழமெல்லாம் குடிக்க வைத்தார்.
மதியம் சற்று இடைவெளி கிடைக்க ஓய்வு எடுத்தனர்.
சம்ருதிக்கு அப்பொழுது தான் கிருஷ்ணா கல்யாணத்துக்கு வராதது உதித்தது.
ஒரு வேளை நமக்காக அவனை அவாய்ட் பண்ணிட்டாரா? என்று தோன்றியது.
விகர்த்தனன் கிருஷ்ணாவிடம் நட்பு பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும், தனக்கு அந்த விஷயம் தேவையற்றதே என்று எண்ணிக்கொண்டாள். அதன் பின் நான்கு மணியிலிருந்து சம்ருதியை அலங்கரிக்க ஆரம்பித்தனர்.
மாலையில் நடைப்பெறும் ரிஷப்ஸனிற்கு தயாரானாள்.
நகைக்கடைக்காரர் மகள் அல்லவா உடலெங்கும் நகையை அணிவித்து கழுத்திலிருந்து இடைக்கு கீழே வரை அடுக்கடுக்கான நகைகள்.
சம்ருதி சேலை மீது நகை அணிந்து பொம்மையாக வீற்றிருக்க சியாமளாவுக்கு வயிறு எரிந்தது. சத்யமூர்த்திக்கு கூட இத்தனையும் தங்கள் உடைமையாக வரவேண்டியதே என்ற புலம்பல்.
சத்யமூர்த்தியால் புலம்ப மட்டுமே முடிந்தது. கிருஷ்ணாவை போல விகர்த்தனனை மிரட்டவே முடியாதென்ற உண்மை புரிந்தது.
வசந்திற்கு விகர்த்தன் சம்ருதி பேசி தொலைக்கும் போது மட்டும், ‘சை இவனை முன்னவே கட் பண்ணிருந்தா எனக்கு இந்த நிலைமை இருந்திருக்காது’ என்று பொறுமினான்.
இப்பொழுது புலம்பியோ பொறுமியோ ஒன்றுமாகாது.
மாலை ரிஷப்ஸனுக்கு கூட்டம் அதிகமானது.
சில பிசினஸ்மேன் வந்தவண்ணம் இருந்தார்கள்.
அழகான இதமான மியூசிக் பட்டமும் பின்னனியில் ஒலித்தது.
அப்பொழுது கிருஷ்ணா நவ்யா இருவரும் வந்தார்கள்.
முதலில் வசந்த் கிருஷ்ணாவை தடுத்து அனுப்ப நினைத்தான் வசந்த்.
ஆனால் கிருஷ்ணா வந்ததால் விகர்த்தனன் அதை வைத்து சம்ருதி வாழ்க்கை பிரச்சனை வருமென்று சத்யமூர்த்தியும் அவனை போக விட்டு ஒளிந்து பார்த்தார்கள்.
கிருஷ்ணாவை கண்ட விகர்த்தனனோ கையை விரித்து அழைக்க, நேராக வந்தவன், “நினைச்சதை அடைந்து பழகிட்டல்ல, வாழ்த்துகள் டா.” என்று கூறினான் கினுஷ்ணா.
சம்ருதி கிருஷ்ணா வரவும் விகர்த்தனன் கையை விரித்து அழைக்கவும் கடுகடுப்போடு முகத்தை வைத்தாளே தவிர அங்கிருந்து நழுவவில்லை. ஏன் கத்தி கூச்சலும் போடவில்லை.
வசந்த் இந்த அமைதியை பார்த்து மாமா சந்திரசேகரிடம், கிருஷ்ணாவை பத்தி கூறினான்.
“மாமா அங்க இருக்கிறது சம்ருதி முன்ன விரும்பின பையன். அவன் இப்ப விகர்த்தனனிடம் என்ன சொல்லி உசுப்பேத்தறானோ” என்று கூற சந்திரசேகர் பதட்டமாய் மணமக்கள் அருகே வந்தார்.
விகர்த்தனனோ “மாமா இவன் கிருஷ்ணா என் பிரெண்ட்.” என்று அறிமுகப்படுத்த, மகளை கண்டார்.
சம்ருதி வெகுயியல்பாய் நிற்க, விகர்த்தனனே “அன்னிக்கு வீட்டுக்கு வந்து இந்த உண்மையை தான் சென்னேன். சம்ருதிக்கு ஏற்கனவே தெரியும் மாமா. நீங்க பயப்பட வேண்டாம். கல்யாண வேலையை பாருங்க” என்று அனுப்பி வைத்தான்.
செவியை கூர்த்தீட்டிய ஒட்டு கேட்ட கும்பலோ ‘என்னது நண்பனா?’ என்று வாயை பிளந்தது.
இதனால் தான் கிருஷ்ணா விஷயம் அவனுக்கு தெரிந்துள்ளது. காதலி ஏற்கனவே ஒருவனை காதலித்தும் சுத்தமானவளென்ற நம்பிக்கை.
விகர்த்தனன் “Sam உனக்கு கிருஷ்ணா நவ்யா தெரியும். அதோட நான் உன்னையும் கட்டாயப்படுத்தி பேச சொல்லமாட்டேன்.” என்றவன் நவ்யாவை பார்த்து, “என்னம்மா டேட் பார் ஆனதுனு சொன்னான். இப்ப உடம்பு எப்படியிருக்கு?” என்று கேட்க, “ஊர்ஜிதமாகிடுச்சு அண்ணா.” என்று கூறவும், “டேய் கிருஷ்… அப்பாவானதை முதல்ல சொல்லணும்டா?” என்று முறைத்தான்.
“நேர்ல சொல்லுவோம்னு வந்துட்டேன்டா.” என்று பேசி கொள்ள, சம்ருதி என்ன நினைத்தாளோ “கங்கிராட்ஸ் நவ்யா” என்று வாழ்த்தினாள்.
”வாவ் தேங்க்யூ. நீங்க விஷ் பண்ணுவிங்கன்னு நான் எதிர்பார்க்கலை. உங்களுக்கும் திருமண வாழ்த்துகள்” என்று கைகுலுக்க, சம்ருதியும் குலுக்கினாள்.
கிருஷ்ணா மட்டும், ‘ஓகேடா நான் கீழே அங்கிளோட பேசிட்டு இருக்கேன். வர்றேன். வர்றேன் சம்ருதி” என்று நடந்தான்.
சம்ருதி விகர்த்தனனை பார்த்து, இவனால் இன்னும் என்னவென்ன பார்க்கணுமோ’ என்ற ரீதியில் முறைத்தாள்.
‘கூல் பேபி உங்க அப்பா நம்மளையே அடிக்கடி வாட்ச் பண்ணறார். கொஞ்சம் சிரி” என்று சிரிக்க கடந்திட வைத்தான்.
தந்தை மனம் வாடிட கூடாதென்று சிரித்தாள். உண்மையில் அழுவதோ, கோபம் கொள்ளவோ இனி எதுவுமில்லை.
கைப்பிடித்த விகர்த்தனனோடு வாழ்க்கை. எல்லாம் இனி அவன் தான்.
சத்யமூர்த்தியிடம் கிருஷ்ணா வந்து, “என்ன சார்.. என்னை ஓடவச்சிங்க. என் பிரெண்டை ஓடவைக்க முடியலையா? ரொம்ப பேசிட்டானா? உங்களை கொஞ்சமாவது பேச வச்சானா? பாவம் சார் நீங்க.
இனி சுத்தமா சம்ருதி வீட்லயிருந்து மொத்தமா விலகுங்க. அதான் உங்களுக்கு நல்லது. இல்லை.. நீங்க ஆதிமுதல் அந்தம் வரை செய்த விஷயம் எல்லாம் குறும்படம் போட்டு காட்டுவான்.
ஜாக்கிரதையா இருங்க சார்.” என்று கூற அம்பலவாணன் வந்துவிட்டார்.
“கிருஷ்ணா இங்க என்ன பண்ணிட்டு இருக்க? விகர்த்தனனோட காலேஜ் பிரெண்ட் வந்துட்டாங்க. போய் அவங்களை கவனி” என்று இடத்தை விட்டு விரட்டினார்.
பணப்பலத்தால் விகர்த்தனன் சம்ருதியின் பழைய காதலனை ப்றறி அறிந்து வைத்திருப்பான் எறதற்கு பதிலாக நண்பர்கள் என்றதும் பயம் வந்தது.
சந்திரசேகரிடம் என்றாவது ஒரு நாள் கோபத்தில் பேசினால், அன்று போட்டு கொடுத்துடுவானோ என்ற பயம். ஏற்கனவே சம்ருதிக்கும் இந்த விஷயம் அறிந்து தந்தையிடம் கூறினாலும் தங்களுக்கு தான் ஆபத்து. உறவுக்கு உறவும் சென்று, நகைக்கடையில் லாப நஷ்டத்தை கேட்டால்?
இனி இவனிடம் பேச்செடுக்க கூட பயந்தாரெனலாம். அது அவரது முகத்தில் பிரதிபலித்தது.
கல்யாணம் ரிஷப்ஸன் என்றதை தாண்டி இரவு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு நடந்தேறியது.
சம்ருதி வீட்டில் மலர் மெத்தைகள் விகர்த்தனனுக்காக காத்திருந்தது.
ஜானகி நிறைய பேசி அனுப்பிவைக்க, அறைக்குள் வந்தவள், முதல் வேலையாக பூக்களால் அலங்கரித்த மேஜையை ஆவேசமாய் களைத்து வைத்தாள்.
விகர்த்தனனோ “பச்… அழகான அலங்காரம் எல்லாம் ஒரு நொடியில் போச்சு.” என்று உச்சுக்கொட்டினான்.
இத்தனை மணி நேரம் பொறுமை காத்த கிளி, இந்த மெத்தை அலங்காரத்தில் கோபம் பன்மடங்கானது.
உண்மையில் சம்ருதிக்கு விகர்த்தனனை ரொம்பவே பிடிக்கும். அவனோடு இந்த இரவெல்லாம் நினைத்து பார்த்து வெட்கம் கொண்ட நினைவுகள் அவளை துரத்தியது.
அப்படியிருக்க, அந்த இரவு மீதே கோபத்தை பூச வைத்ததும் இவன் தானே.
“உன் கோபம் தேவையில்லாதது சம். அன்னைக்கு பேசியதை வச்சி நீ விலகறது நல்லாவேயில்லை.
எவ்ளோ அலங்காரம் செய்தாலும் நாம ஆசைப்பட்டு இணக்கமான தான் இந்த இரவுக்கு அழகு. அந்த மாதிரி தான் நீ உன்னை அலங்காரம் செய்து வச்சியிருப்பதும்.
நான் நீ நேசத்தை புதைச்சிட்டு முகம் திருப்பினா இந்த அலங்காரமும் வேஸ்ட் தான்” என்று அவளது உடையும் நகையும், அதோட முகத்தில் இருக்கும் ப்யூட்டிஸன் பெண்ணால் ஏற்பட்ட ஒப்பனையும் சுட்டிக்காட்டி பேசினான்.
அது சம்ருதிக்கு கூடுதல் கோபத்தை தந்ததே தவிர குறையவில்லை.
என்னவோ இவனுக்காக அலங்கரித்து ஏங்குவது போல பேசுகின்றானே.
“வாழ்க்கையையே வீணா போனாலும் பரவாயில்லைன்னு வாழ முடிவடுத்தா இந்த அலங்காரம் பத்தி நான் ஏன் யோசிக்கணும்?” என்று சம்ருதி திமிராய் கேட்டாள்.
விகர்த்தனனுக்கு அவள் உதடு துடிக்க பேசவும், அருகே வந்தவன், “நீ பிறக்கும் போதே பணக்காரி சம்ருதி. அதனால் உனக்கு செலவுகளும் வரவுகளும் சப்பை மேட்டர்.
ஆனா உழைப்பை மட்டும் கண்ணெதிரில் பார்த்து வளர்ந்தவன் நான். அதனால….” என்றவன் துடிக்கும் அவள் செவ்விதழை முத்தமிட்டு அடக்க போராடினான்.
சம்ருதி நொடியில் அருகே வந்து முத்தத்தால் ஆளும் விகர்த்தனனை தடுக்க முடியாது திணறினாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Super….moving……♥️♥️♥️♥️♥️♥️♥️
Super….moving……♥️♥️♥️♥️♥️♥️♥️
WOW ! SUPER EPI. samru vikar mrg over ipo ivanga ippadi sanda tha poduvangala no athula kadhal sandai iukanume yen sam purinjika matra love iruku atha kamika kudathu ninaikura sikram puriyanum unaku
Super sis nice epi 👍👌😍 evanga renduperum eppdi tom and jerry mathiri sanda pottutu erukangaley🤔
Super. … சம்ருதி சீக்கிரம் புரிஞ்சுக்கனும்
Spr going waiting for nxt epi😍💕💕💕💕💕💕💕
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 19)
அட.. கல்யாண பந்தல்லயே உட்கார்ந்துட்டாங்களா..சூப்பர்.
இனி சத்தியமூர்த்தி, சியாமளா & வசந்த் கேங் அடங்குமா…?
இல்லை, இன்னும் அழிச்சாட்டியம் தான் பண்ணுவாங்களா..?
ஆனா, இந்த விகர்த்தனன் இப்பக் கூட இவன் வாயை வைச்சிட்டு சும்மா இருக்கானா
பாருங்க. சும்மா அவளை சீண்டி விட்டுட்டே இருக்கான். இவன் வாய் தான் அவனுக்கு ஏழரைன்னு நினைக்கிறேன்.
அட ராமா…! இவன் என்ன இப்படி அதிரடிக்கு இறங்கிட்டான்…? ஒருவேளை, சம்முவை இப்படி ஹாண்டில் பண்ணாத்தான் தன்னோட கன்ட்ரோலுக்கே கொண்டு வர முடியும்ன்னு நுனைச்சிட்டானோ..?
😄😄😄
CRVS (or) CRVS 2797
Interesting😍😍😍😍😍😍
Intresting
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vikarthanan unnaku amaithi ah enna nu yae theriyuthu ah ne already aval ah samadhanam paduthula nu kobathula irundha ippo innum aval ah seendi viduran
Nice episode. Waiting for next. 🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷
Nice update 👍👍👍👍
💜💜💜💜💜💜
தான் நினைத்தபடி சம்முவோடு திருமணத்தையும் வெற்றிகரமாக முடித்தவன் அவளின் கோபத்தையும் நீர்த்து போகச் செய்வான்.. வசந்தின் சுரண்டலை கண்டறிந்து மாமானாரின் கடையை எவ்வாறு பாதுகாப்பான்.. வசந்த் கூட வேறொருவனின் மனைவி தனக்கு வேண்டாம் என்று முடிவெடுத்திட்டான்..இப்போ சந்திரசேகர் நிலை தான் பரிதாபமாக இருக்கிறது.. விகரின் அடுத்த அதிரடி என்னவாக இருக்கும்?
Super super super super