அத்தியாயம்-2
விமான நிலையத்திற்கு தாங்களாகவே செல்வோமென்று, பெற்றோரை வரவேண்டாமென தவிர்த்து, வசந்த் ஜனனியோடு புறப்பட்டாள் சம்ருதி.
மூவருக்கும் தனி தனி இருக்கைகள் தான் கிடைத்தது.
ஜனனி அருகே ஒரு பெண் அமர்ந்திருந்தாள், வசந்த் அருகே ஒரு ஆண் வீற்றிருக்க, சம்ருதி பக்கத்திலும் ஒரு ஆண் உட்கார்ந்திருந்தான்.
வசந்திற்கு தங்கை பக்கத்தில் ஆண் இருந்தால் இடம் மாற்றி விட்டிருப்பான். இல்லையேல் தன் பக்கம் ஒரு பெண் இருந்தால் கூட சம்ருதியை இடம் மாற்றி அமர வைத்திருப்பான். இப்பொழுது அப்படி மாற்றவும் முடியாது.
ஒரு ஆண் பக்கத்தில் நான் அமர மாட்டேன் என்று கட்டுப்பட்டியாக கூறவும் மாட்டாள் சம்ருதி.
சரி நான்கு மணி நேர விமானபயணம் வெகு விரைவில் கடந்து விடும் என்று வசந்த் நினைத்தான்.
சம்ருதியும் அவ்வாறு நினைத்து தான் சீட் பெல்டை அணிந்தாள்.
நெடு நேரமாக தன்னருகே யாரோ அமர்வதை சுகந்த மணத்தால் அறிந்தான் நாயகன் விகர்த்தனன்.
சட்டென பெண் என்றதும் பார்வையை திருப்ப அவனொன்றும் பெண்ணின் மீது ஆர்வம் கொண்டவன் அல்ல.
அதனால் பெண் என்றதும் திரும்பவில்லை. சம்ருதிக்கு அதுவே திருப்தியாக, நிம்மதியாக வீற்றுக்கொண்டாள்.
விமானம் பறக்க தயாராகுவதை ஒலிப்பெருக்கியில் உரைக்க, உடனடியாக, தன்னிருக்கையில் கைகளை வைக்க உதவும் இடத்தை கெட்டியாக பிடித்தாள்.
“பச்” என்ற சலிப்போடு நாயகன் விகர்த்தனன் திரும்பினான். அவன் கை மீது ஒரு பெண்ணின் கைகளா? என்ற சலிப்பு. அவன் அவளை எரிச்சலோடு திரும்பி பார்த்தான்.
கண்களை மூடி இறைவனை வேண்டினாள் சம்ருதி.
பெண்ணவள் இறைவனை வேண்டும் ஆர்வத்தில் விகர்த்தனனின் கையை பற்றிக் கொண்டாள்.
தன் கூலரை கழட்டாமல் சம்ருதியை கவனித்தான்.
நல்ல நிறம், படபடக்கும் இமைகள், கூர்நாசி, ஆரேஞ்சு சுளையை நறுக்கி வைத்த உதடுகள்.
அவள் சிகை காற்றில் அலைப்பாய, காண்போர் மனமும் அலைபாயும்.
ஜீனும் இறுக்கி பிடித்த டீஷர்டும், அவளது அங்க வளைவை அழகாய் காட்சிப்படுத்த, அவள் கையை விடுவிக்கும் நேரத்திற்கு காத்திருந்தான். அவனாக உதற வந்தவன் அவளது இறுக்கத்திலும், அவளை கண்டப்பின் உதறும் எண்ணத்தையும் கைவிட்டான்.
மெல்ல மெல்ல இமை திறந்தவள் ஜன்னல் பக்கம் எட்டி பார்த்து, “பிளைட் டேக் ஆஃப் ஆகிடுச்சா?” என்றாள்.
“பிளைட் டேக் ஆஃப் ஆகி பத்து நிமிஷத்துக்கு மேல ஆகுது. நீங்க தான் விடாம என் கையை அழுத்திட்டு இருக்கிங்க” என்றான் குத்தலாய்.
அவன் குரலே காந்தத்தை வீசி ஈர்த்தது. சம்ருதி சட்டென கையை கவனித்து தன் கரத்தை எடுத்தபடி, “சாரி… சாரி… நிறைய தடவை பிளைட்ல போனாலும் இந்த பிளைட் டேக் ஆஃப் ஆகறப்ப, லேண்ட் ஆகறப்ப இதயம் படபடன்னு பயம் காட்டும்” என்று புதியவனிடம் பேசி சமாளித்தாள்.
“ஓ.. ஓகே” என்று திரும்பி கொண்டான்.
‘தேவையில்லாம பேசி தொலைக்காத சம்ரு’ என்று தன்னையே கடிந்திட, அடிக்கடி ஜனனி, வசந்த் இருப்பிடத்தை எட்டி பார்த்தாள்.
“ஜன்னல் சீட் ஏதாவது வேண்டுமா? இல்லை அங்க உட்காரவும் பயமா?” என்று கேட்டான் விகர்த்தனன்.
வசந்தை கண்டவள் திடீரென பக்கத்தில் பேச்சு என்றதும், ‘ஆஹ்.’ என்று பயந்தாள்.
“அதுசரி இதுக்கே இந்த பயமா?” என்றவன் ”விண்டோ சீட்ல உட்கார ஆசைப்படறிங்களான்னு கேட்டேன். நீங்க பயப்படறத பார்த்தா, பிளைட் லேண்டாகற வரை கண்ணை திறக்க மாட்டிங்க போல” என்று திரும்பி கொண்டான்.
அதன் பின் பத்து நிமிடம் பேசவில்லை. ‘அப்படியெல்லாம் இல்லை விண்டோ சீட் எனக்கு பிடிக்கும்’ என்று கூற சம்ருதி தயங்கினாள்.
இயல்பாக ஆண்களிடம் பேசும் சுபாவமே. ஆனால் பிளைட் டேக் ஆஃப் ஆகும் நேரம் இமை மூடியவளின் சிந்தனையில், ‘இந்நேரம் கிருஷ்ணா ஹனிமூனுக்கு கிளம்பியிருப்பான். அந்த நவ்யாவோட பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து கை கோர்த்து சந்தோஷமா இருப்பான்.
என்னை கழட்டி விட்டவனையே நினைக்கறேன். என் மனசாட்சிக்கு அறிவேயில்லை. கிருஷ்ணா அப்படி போனா என்ன? நானும் கொஞ்ச நாள்ல ஹனிமூனுக்கு பறப்பேன். அப்ப என் பக்கத்துல எனக்கே எனக்காக பாசத்தை வீசுற அன்பான அழகானவன் என் கூட இருப்பான்.’ என்று எண்ணியவளுக்கு இமை திறந்து வெளியே பார் ‘டேக் ஆஃப்’ முடிந்து வானத்தில் இருப்பாய் என்று ஜன்னலை கவனித்து பேச, அதே போல அழகானவன் அருகே இருக்க சற்று ஸ்தம்பித்து விட்டாள்.
இதில் அருகேயிருந்தவன் பேசவும், அவன் குரலை போலவே உதடும் ஈர்த்தது.
வெகு அருகில் பார்ப்பதால் அழகான உதடு அவளை இம்சித்திருக்கலாமென திரும்பி வசந்தை கவனித்தாள்.
வசந்தின் பார்வை ஜன்னல் பக்கமிருக்க வேடிக்கை பார்க்க, அருகிலிருந்தவன் விண்டோ சீட் வேண்டுமா என்றதும் பதில் அளிக்க நேரமெடுத்தாள்.
விமானத்தில் ஏர்ஹோஸ்டஸ் தள்ளும் உபகரணத்தில் குளிர் பானத்தை எடுத்து வந்து கொடுக்க விகர்த்தனன் எடுத்தான்.
சம்ருதியும் புதியவன் அருகே உணர்வை கட்டுப்படுத்த எடுத்து கொண்டாள்.
“ஹாய்… ஐ அம் விகர்த்தனன். மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்” என்றான் ஆங்கிலத்தில்.
“சம்ருதி” என்றாள்.
விகர்த்தனனோ “சம்ருதி… நைஸ் நேம்… எதுக்கு நெர்வஸா இருக்கிங்க?” என்றான் எடுத்த எடுப்பிலேயே.
சம்ருதி விழிக்க, “இல்லைங்க நீங்க நெர்வஸா இருப்பது அப்பட்டமா உங்க முகத்துல தெரியுது. அதனால் கேட்டேன்” என்று கூலிங் கிளாஸை கழட்டவும், அவன் கண்கள் இவள் மனதில் குறுகுறுப்பை உண்டாக்கியது. அத்தனை வசீகரம் அக்கண்ணில். மன்மதனின் மறு அவதாரம் என்று கூறிடலாம்.
இதென்ன, காதலனுக்கு திருமணம் நடந்ததால் அதிகமாக சொதப்புகின்றேனோ? என்னை அறியாமல் படபடப்பு கூடுதலாக வெளியே தெரிகிறதா?
அப்படியிருந்தாலும் இங்கே அருகே அமர்ந்தவனின் பேச்சும் கண்ணும், காதும், வாய் என்று ஏன் என் கவனம் அடுத்த ஆண்மகன் மீது செல்கின்றது.
நான் காதல் தோல்வியில் அழுது கரைந்து இருக்க வேண்டும். ஆனால் இன்னொரு ஆணை ரசிக்கின்றேன்.
ஆம் ரசிக்கின்றேனா? என்று தனக்குள் வினாக்களை கேட்டு விடை தெரியாது குழம்பினாள்.
“நெர்வஸா.. மேபீ” என்று மிடறு மிடறாய் பானத்தை பருகினாள்.
அதன் பின் அவன் புறம் திரும்பவில்லை. அவனை பார்த்தால் மனம் சஞ்சலம் அடைந்திடும் என்ற பயம்.
விமானத்தில் கொடுக்கப்படும் ஐ மாஸ்கை அணிந்து கொண்டு உறங்குவதாக நடித்தாள்.
விகர்த்தனன் தோளைக் குலுக்கி விட்டு ஜன்னல் புறம் பார்வை பதித்தான்.
மனசாட்சி ‘ஏன் அவனை அப்படி பார்த்தாய்?’ என்று கேட்க, மூளையோ அதிவேகமாக ‘என் பக்கத்துல எனக்கே எனக்காக பாசத்தை வீசுற அன்பான அழகானவன் என் கூட இருப்பான்.’ என்று கற்பனையில் இருக்கறப்ப சட்டுனு பக்கத்துல இருந்தவனும் அழகா வசீகரமாக இருக்கவும் லைட்டா வாயை திறந்து ஆன்னு பார்த்திருப்பேன்.
மத்தபடி நான் இப்படி, எந்த ஆணையும் பார்த்ததில்லை.
ஏன் காதலிச்ச கிருஷ்ணாவை கூட இப்படி பார்த்தில்லை. இவனை ஜஸ்ட் பார்த்ததுட்டேன் அவ்ளோ தான்.
அழகா இருந்தா ஆயிரம் பேர் பார்க்க தான் செய்வாங்க’ என்று தான் பார்த்ததிற்கும் ஒரு காரணத்தை உரைத்து கொண்டாள்.
“சம்ரு… சம்ரு…” என்று உலுக்க, ஐ மாஸ்கை கழட்டி விழித்தாள். “சம்ரு… பிளைட் லேண்ட் ஆகப்போகுது. இறுக்கமா பிடிச்சிக்கோங்க. சப்போஸ் லேண்டாகும் போது உருண்டு முன்ன போய் கண்ணாடி உடைச்சி விழுந்துடப் போறிங்க” என்றதும் இருக்கையை பிடித்தவள் அதன் பின்னரே அவன் தன்னை கிண்டல் மொழிந்திட, செல்லமாய் முறைத்தாள்.
“இப்படியா ஒருத்தங்க பயத்தை கேலி செய்யறது?” என்று இறுக பிடித்து கேட்டாள் சம்ருதி.
“ஜஸ்ட் ஃபோர் ஹவர்ஸ் ட்ராவல்ங்க. இதுல அழகான பொண்ணு பக்கத்துல இருந்தும் இந்தளவு கூட பேசலைன்னா என் மனசாட்சி குத்தாது.
அதான்… சின்னதா… என் நினைவை மறக்காத அளவுக்கு…” என்று கூறவும் அவன் கண்கள் அவளுக்குள் மாயங்களை நிகழ்த்தியது.
“அவ்வளவு குயிக்கா உங்களை மறக்க முடியாது. உங்க கண்கள் ரொம்ப ஈர்க்குது.” என்று உண்மை கூறியவள் ஜன்னல் புறம் எட்டி பார்த்தாள்.
விமானம் தரையிறங்குவதை கண்டாள்.
“பஸ்ட் டைம் இறங்கறப்ப கண்ணை மூடாம இருக்கேன். தேங்க்ஸ்.. பை தி வே.. என்ன பெயர் சொன்னிங்க?” என்றாள்.
”விகர்த்தனன்…. சம்ரு” என்றான்.
தன் பெயரை சம்ரு என்கின்றான் என்று அதிசயமாக அவனை காண, சீட் பெல்ட்டை விடுவித்து எழுந்தான்.
அதன் பின்னரே சம்ருதியும் மெதுவாக சீட்பெல்டை கழட்டினாள்.
“எனிவே… நைஸ் டூ மீட்யூ” என்றவன் மந்தகாசமாய் புன்னகைத்து கைக்குலுக்கி, மின்னல் வேகத்தில் புறப்பட்டான்.
சம்ருதிக்கு அந்த புதியவன் விகர்த்தனன் கைகுலுக்கவும், மொத்த சரீரமும் மின்சாரம் பாய்ந்து, வித்தியாசமாய் தெரிய, அவன் செல்லும் திசையில் தலையை தலையை எட்டியெட்டி பார்த்தாள்.
வசந்த் வந்து “யாரை தேடுற” என்றான்.
“தேடறேனா… இல்லையே..” என்று பொய்யுரைக்க, ஜனனியோ “இங்க எங்க தங்கப்போறோம் சம்ரு” என்று கேட்டாள்.
“அவளை ஏன் தொல்லை செய்யற? அவளே காதல் தோல்வியில் சோகமா இருக்கா. எல்லாம் நான் அரேஜ் பண்ணிடுவேன். அதுக்கு தான் மாமாவும் அத்தையும் உங்க கூட என்னை அனுப்பியிருக்காங்க” என்றான் வசந்த்.
‘காதல் தோல்வி என்று நீங்களா சொல்லிக்கறிங்க, நான் எங்க சோகமா இருக்கேன். ஜுஸ் குடிச்சி லைட்டா கண் மூடி இருந்ததில், இப்ப தெம்பாக இருக்கேன். கூடுதலா என் பக்கத்துல ஒரு அழகான ஆப்பிள் பையன் இருந்தான். ஜாலியா சைட் அடிச்சேன்’ என்றவள் மனசுக்குள்ளே கவுண்டர் கொடுத்தாள்.
வசந்த் தான் டேக்ஸியில் இங்கு வந்து தங்குமிடமான ஹோட்டலின் பெயரை கூறி அங்கு செல்ல கூறினான்.
டிரைவர் அவ்வாறே செல்ல, சம்ருதிக்கு முன்னால் சென்ற காரில் விகர்த்தனன் என்ற ஆங்கிலப் பெயரை தாங்கியா கார் சென்றது. சற்று முன் பார்த்தவனின் பெயர் என்றதும் ‘இது அவன் காரா?.’ என்று கண்களை கூர்த்தீட்ட, அவர்கள் செல்லும் ஹோட்டலுக்கு விகர்த்தனன் கார் முன்னே சென்று நின்றது.
இதில் காரிலிருந்து இறங்கி, கார் நிறுத்தும் இடத்தில் கீயை தந்துவிட்டு ரிசப்ஷன் சென்றான் விகர்த்தனன்.
‘இது அவனே தான்’ என்றவள் காரிலிருந்து இறங்கினாள் சம்ருதி.
வசந்த் சம்ருதி காரிலிருந்து இறங்க, “வசந்த் நான் ரூமை புக் பண்ணறேன்” என்று நழுவினாள். நாயகி
விகர்த்தனன் பின்னால் தான் வருவதை கண்டு ஏதேனும் தவறாய் நினைத்தால்? அதனால் சற்று விகர்த்தனன் பாராமல் இருப்பது போல பாவித்து ரிசப்ஷன் வந்து ரூம் புக் செய்ய ரிசப்ஷன் பெண்ணிடம் கேட்டாள்.
விகர்த்தனன் லேசான புன்னகையை வீசி, ”நீங்களும் இங்க தான் ஸ்டே பண்ணறிங்களா?” என்று அவன் ரூம் கீயை வாங்கி பார்வையிட, இதற்கு மேல் பாராது போல நடிக்க இயலாதே.
சம்ருதியும் “ம்ம்.. வசந்த் இங்க தான் தங்க பார்த்து வச்சான்.” என்று கூறினாள்.
சந்தடி சாக்கில் விகர்த்தனன் ரூம் எண்ணை கவனித்தாள்.
“ஓ.. ஓகே. சம்ரு திரும்ப சந்திப்போம்” என்றவன் சம்ருதியிடம் உதடு விரித்து முறுவல் புரிந்து கடந்தான்.
“சிங்கிள் ரூமா மேம்?” என்று ரிசப்ஷன் பெண் கேட்க, ”நோ நோ டபுள் ரூம்” என்று ஜனனி கூறவும் தான் சம்ருதி அவன் சென்ற திசையில் விழியை செலுத்துவது புரிந்து நினைவுக்கு வந்தாள்.
உடனடியாக ரூம் நம்பரின் கீயை தரவும், பெற்றுக்கொண்டு இடத்தை பார்வையிட்டாள்.
வசந்த் வரவும் லிப்டில் சென்றவள், விகர்த்தனனின் அறை எண்ணை தற்செயலாக பார்வையிடுவது போல பார்க்க, அவன் கதவை திறந்து வைத்தபடி போனில், “யா மேன்.. ஹோட்டல்ல ரீச் பண்ணிட்டேன். ஜெர்னி எல்லாம் கம்பர்டபிளா இருந்தது.” என்று யாரிடமோ பேசினான்.
விகர்த்தனனுக்கு அடுத்த அறை ஒன்றும், தங்கள் அறைக்கு நேர் அறையென்று இரண்டும் அறை எண்கள் இருக்க, விகர்த்தனனின் பக்கத்து ரூமிற்கு செல்ல முற்பட்டாள்.
மற்றொரு கீயை வசந்திடம் தந்தாள். பிரயாணம் செய்து வந்த களைப்பில் வசந்த் விகர்த்தனனை கவனிக்கவில்லை. விகர்த்தனன் வாசல் வந்தவன் சம்ருதி அவள் அறை எண்ணிற்கு செல்ல, தன் அறையை தாழிட்டான்.
ஜனனி அறையை சுற்றி பார்க்க, பெரிய அறை பாத்டப் என்றிருந்ததை பார்வையிட்டாள்.
சம்ருதி ஒவ்வொரு அறையாக கண்டவள் பால்கனியோடு இருந்த அறையை தேர்ந்தெடுத்து நின்றாள்.
“நான் இந்த ரூம்ல ஸ்டே பண்ணிக்கறேன் ஜனனி.” என்றுரைக்க, “ஏ… அந்த ரூம் பெருசா இருக்கு. நீ அங்க ஸ்டே பண்ணுவன்னு நினைச்சேனே” என்று ஜனனி கேட்க, “இல்லை.. இது பெர்பெக்டா இருக்கு. அந்த ரூம்ல நீயே இரு” என்றவள் மெத்தையில் விழுந்திட அந்த பஞ்சு அவளை உள்ளே அமிழ்த்தி இதமாய் கட்டிப்போட்டது.
“ஆர் யூ சூர்” என்றாள் ஜனனி.
“சூர்… நான் ரெஸ்ட் எடுக்கணும். நீயும் ரெஸ்ட் எடு.” என்று ஜனனியை அனுப்பி வைத்து அறைக்கதவை தாழிட்டவள், நேராக பால்கனிக்கு வந்து நின்றாள்.
“இல்லை… இந்த முறை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு நம்பறேன்.” என்று பக்கத்து பால்கனியில் இருந்த விகர்த்தனனின் கண்கள் இடது பக்கம் இருந்த இவளது பால்கனியில் ஜன்னல் புறம் சம்ருதி இருப்பதை கவனித்தாலும் கண்டுக்காதவனாக போனில் மூழ்கினான்.
சம்ருதியும் அவனையே பாராமல், அங்கிருந்த பூக்களை காண்பது போல் அவன் பேச்சை தற்செயலாய் கேட்க நேர்ந்தது.
“சேச்சே.. சிங்கப்பூரை சுற்றி பார்க்கணும் அடுத்து மலேசியா, மலேசியாவுல கூட குட்டி தாய்லாந்து ஒன்னு இருக்காம். மசாஜ் போய் ஆயில் பாத் எடுக்கணும்.” என்றவன் சோம்பல் முறிப்பது போல உடலை முறுக்கினான்.
சம்ருதியோ பூவை பார்த்தவள் சூறாவளியாக அறைக்குள்ளே சுருண்டிட சென்றாள்.
விகர்த்தனன் போன் பேசியபடி அவள் செல்வதை பார்த்து, போனை ஒர்கணம் தள்ளி நிறுத்தி, மீண்டும் செவிக்கு வைத்து, “நான் அப்பறம் பேசறேன்டா” என்றான்.
விகர்த்தனன் பக்கத்து பால்கனியை வெறித்து, பார்த்து அறைக்குள் சென்றான்.
‘முட்டாள்… உனக்கு என்னாச்சு? அவன் அழகா இருந்தா ஆளா பறந்து போவீயா? அசிங்கமா போயிருக்கும் அவன் உன்னை நோட் பண்ணி தொலைச்சிருந்தா.
பிளைட் டேக் ஆஃப் ஆனதுலயிருந்து இப்ப வரை ஆன்னு வாயை பிளந்து அவரை பார்க்கறேன்.
காதலிச்ச கிருஷ்ணாவை கூட இப்படி சைட் அடிச்சதில்லை.
நான் இவரை பார்த்ததை கிருஷ்ணா பார்த்திருந்தா அவனை உண்மையா காதலிக்கலைன்னு பேசுவான். நான் காதல் தோல்வியில வந்தவ மாதிரியா இருக்கேன்.’ என்று தன்னையே கடிந்து அவஸ்தைபட்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
True … Krishna nee love panala that’s just infatuation than
ungaluku irunthathu love illa samru just crush than athan avanum vitu poitan unakum feel agala ipo nee ninacha paru oruthan varuvan pasatha kotanu athu ivan than pola . hero thaniya intro illanalum first introlaye rendu perum meet pani pesikirathu alaga iruku .
Payapulla samroo va watch pannraano…..ava kekkanummney pesuraappla erukku….
😂😂😂😂super ah iruku sis samru pantrathulam…. Name la epdi tha yosikiringalo….. Aaga hero vum oor suthi pakka tha vanthurukaru pola aana car la name potruku…. Onnu purilaye…..
Super super akka❤️…. Vigarthanan samruthi name nalla irukku…iva panradhellam indha vasanth um janani kum paartha nenju vali vandhrum pola….
Alaga rasikarathula thappe illa😉👌👌👌👌👌
interesting…….waiting for next……………………..
Yen ma samru love failure ah na atha thookitae irukanum nu avasiyam illa ma indha vikarthanan um samru ah va note panran polayae
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 2)
அப்டின்னா… இந்த கால காதல் எல்லாம் அழகா ஆப்பிள் பையன் மாதிரி ஒருத்தன் கண்ணுக்கு லட்சணமா வந்தா
உடனே ஊத்திக்குமோ…?
ஹீரோயின் இமேஜை ரொம்ப டேமேஜ் பண்றிங்க…இட்ஸ்
வெரி பேட்.
இவ கண்ணும் சரி, மனசும் சரி கண்டபடி அலை பாயுது.
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டுன்னு தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனா, இந்த சம்ருதி…. அழகா இருக்கிற எல்லாரையும் காதலிச்சிடுவாளோ…?
என்னடா இது லவ்வுக்கு வந்த சோதனை,… இதனால் நமக்கு ஏற்படுது வேதனை..?
விகர்த்தனன்…. பேரு அவனைப்போலவே அழகாவும் அம்சமாவும் இருக்குது. ஆனா, இவன் பேரோட அர்த்தமே வில்லங்கமா இருக்கும் போலவே…?
வித்தைக்காரன், தந்திரக்காரன்.
அது சரி, இந்த விகர்த்தனன் நல்லவனா…? கெட்டவனா…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super
Nice samru. Interesting
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💜💜💜💜🫰