புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நெஞ்சை கொய்த வதுகை -21

அத்தியாயம்-21

  விகர்த்தனனை கட்டியணைத்து துயில் கொண்ட மாது சம்ருதி காலை ஆறு முப்பதுக்கு இமை திறந்தாள்.
 
    விகர்த்தனன் கைகளுக்குள் சிறைப்பட்டிருந்தவள், அவன் கன்னத்தில் முத்தம் வைக்க, இமை திறந்து அவளை பார்த்து புன்னகைத்தான்.‌

  “குட் மார்னிங்” என்று எழ முயல, அவளிடையில் கரம் பதித்து போர்வையை இருவருக்கும் சேர்த்து போர்த்தி முடித்தான்.
  
மீண்டும் ஓர் இன்ப சுற்றுலா அழைத்து சொன்றான். ‘விகர்’ என்றவளின் சிணுங்கல் வெவ்வேறு சப்தம் முனங்கலோடு அவ்வறையில் மௌனமாய் உதிக்க நேரமெடுத்தது.

இருவரின் நடுவே இருந்த சண்டைகள் சீனச்சுவராக நீளும் என்று எண்ணியிருக்க, சம்ருதி தன் முன்னால் காதலன் கிருஷ்ணாவுக்கு மணமான அடுத்த நொடி அவன் இன்னொருவனின் புருஷன் என்ற கோணத்தில் காதல் தோல்வியை கடக்க பழகியவள், நம் நாயகனும் தன் நண்பன் காதலித்த பெண் என்றதை தாண்டி, தனக்கு அவளை பிடித்து, நண்பன் மற்றும் மனைவி என்ற இரண்டு கூர் கத்தியையும் கூடுதல் சிக்கலாக்காமல் கையாளும் திறமை கொண்டவன்.‌
இந்த இருவரின் மனநிலை திருமணத்திற்கு முன், விவாதம் வேண்டாமென்று சண்டையை பனிப்போராக காட்டியிருக்கலாம்.
ஆனால் மணமான பின் இருக்கும் உரிமையில் நின்று நிதானமாக சீரிய வைத்திடும் ஞானம் கொண்டவர்களே.

அதனால் விகர்த்தனன் காட்டில் இன்று மழை.‌ சம்ருதியை சரிக்கட்டி மெத்தையில் வித்தைகள் நீட்டித்த, விகர்த்தனனாக மாறினான். அவளுமே பிடிவாதம் கொண்டவள் அல்ல. சரியென்று தவறெது என்ற விளக்கம் கூறி கணவன் மன்னிப்பு கேட்டும் ஈகோவை பிடித்து தவறாய் புரிந்து கொள்ள. ஆக… அமோகமாகவே தித்திக்கும் தாம்பத்தியத்தில் திளைத்தார்கள்.

     ”கம்பெனிக்கு போகலையா?” என்று சோம்பல் முறித்து எழுந்தாள். அவனிடம் என்ன பேசுவதென்ற நானத்தோடு.

   “புது பொண்டாட்டியை விட்டுட்டு ஆபிஸுக்கு போனா உலகம் என்னை தப்பா நினைக்காது. ஒன் வீக் போகப் போறதில்லை.
  சரி சொல்லு… ஹனிமூனுக்கு எங்க போகலாம்?” என்று சம்ருதியிடம் அபிப்ராயம் கேட்டான். அவன் மஞ்சத்தில் அவளை கோலமிட்டபடி கைகளில்…

“சிங்கப்பூரே போகலாமா? ஆனா இப்ப அம்மா வீட்டுக்கு போகணும்” என்று ஆசையாக கேட்டாள். அவள் சிங்கப்பூரை தான் சொல்ல வாய்ப்புண்டு என்று அறிந்த விகர்த்தனன் மனையாளை புரிந்து வைத்துக்கொண்ட மிதப்பில் சிரித்தான்.

”உங்க வீட்டுக்கு போயிட்டு வந்து பிளைட் புக் பண்ணிடறேன்” என்றான்.

  “அதே ரூம் கிடைக்குமா?” என்று ஆவலாய் கேட்டாள்.‌ சிங்கப்பூரில் அவன் அறையில் காதலை உள்ளுக்குள் வைத்த மங்கை, கணவன் மனைவியாக காதலுடன் கழிக்க விரும்பினாள்.

  “அதே ரூமை கிடைக்கும்படி வச்சிடலாம்” என்று கூறினான். இருவரும் தங்கள் உலகத்திலிருந்து, குளித்து முடித்து கீழே வர, அம்பலவாணன் சாப்பிட்டு தண்ணீரை பருகியிருந்தார்.

“விகர் பத்து மணிக்கு சம்பந்தி வீட்டுக்கு போகணும்னு சொன்ன.” என்றவர் மகனை சாப்பிடும்படி செய்கையில் உரைத்தார்.

“கிளம்பிட்டே இருக்கேன் அப்பா.” என்றவனுக்கு பணியாட்கள் பரிமாற, சம்ருதி விகர்த்தனனை அடிக்கடி ரசித்தாள்.

“என்ன ஏன் சம்ருதி சைட் அடிக்க. சாப்பிடு” என்று சிரிக்க, “இந்த சிரிப்பு… இந்த பார்வை என்னை இழுக்குது விகர்” என்றாள்.

“எனக்கும் தான் உன் லிப்ஸ் இழுக்கு” என்று கண் சிமிட்ட, “யூ நாட்டி” என்று உணவை ருசிக்க, மகன் வாழ்வு மலர்ச்சியாக செல்ல அம்பலவாணன் தூரத்தில் இருந்து பேசுவது கேட்காவிடினும் முகபாவனயில் நிறைவானார்.

அதன் பின் மாமியார் வீட்டுக்கு விகரத்தனன் செல்ல, சம்ருதி அவனோடு கைகோர்த்து நடமாடினாள்.

   இதில் சந்திரசேகருக்கு அத்தனை திருப்தி. சம்ருதி நல்லவனோடு கரம் பற்றிவிட்டாள், இதில் ஜானகிக்கு விகர்த்தனன் மகளிடம் சிறுசிறு கருத்து கேட்டு பேசுவது மகிழ்ச்சியை தந்தது.

   சதயமூர்த்தி சியாமளா மட்டும் முகம் தூக்கி திரிந்தனர்.‌ வசந்த் அவன் பாட்டிற்கு மாமன் வீட்டில் அலைந்தான். ஆச்சரியம் என்னவென்றால் இப்பொழுதும் விகர்த்தனனிடம் ‘இல்லை பாஸ் ஆமா பாஸ்’ என்று தலைசொறிந்து பேசுவதே.

   சந்திரசேகர் மாப்பிள்ளையிடம் தனிமை கிடைத்த நேரத்தில், கிருஷ்ணா பற்றி கேட்க, “அவன் என் பிரெண்ட் மாமா. மத்தபடி சம்ருதி நினைச்சி நீங்க பயப்படும்படி கிருஷ்ணா கெட்டவன் இல்லை. நேரம் வந்தா அவனை பத்தியும் புரியும்.” என்று முடித்துவிட்டான்.

அங்கிருந்த வரை அம்மா கையால் சாப்பிட்ட உணவினை மீண்டும் நினைவூட்டும் விதமாக அத்தை ஜானகி மருமகனை கவனித்தார்.

ஒரு வாரம் நான் தான் இனி இங்கே ராஜா என்பது போல சொல்லாமல் செய்கையில் நடந்தான்.

ஜனனி மட்டும் ஓரளவு விகர்த்தனனோடு பேசினாள். சத்யமூர்த்தி அதற்கு மகளை தான் திட்டி தீர்ததார். ஜனனி அதன்பின் விகர்த்தனனோடு பேச்சை துண்டித்தாள்.

நான்கு நாட்கள் முடிய, விகர்த்தனன் தனது வீட்டுக்கு செல்லும் நாளும் வந்தது.

  தந்தை அம்பலவாணன் கம்பெனிக்கு சென்றதாக பணியாட்கள் கூறவும், வீட்டின்‌ அறைக்குள்ளே மனைவியை அழைத்து சென்றான். சம்ருதியை சீண்டுவதும் அவளை கைக்குள் வைத்திருக்கும் நிமிடமாகவே கழித்தான்.
 
    இரண்டு நாட்கள் இவ்வாறு கழிய, மூன்றாம் நாள் “பேக்டரிக்கு வர்றியா?” என்று கேட்டு அழைத்து சென்றான். சம்ருதியும் தொழிலையும் அறியும் ஆவலோடு விகர்த்தனனோடு சென்றாள்.

   ‘எல்லாமே சோப்பு ஷாம்பு, வாசனை ஏற்படுத்தும் டியோ, இத்யாதியை கொண்டது. அதோடு அவள் உபயோகப்படுத்தும் காஸ்மடிக் வேறு. நேரில் செய்வதை காண ஆவலுடன் அவனுடன் வந்தாள்.

    மாமனார் அம்பலவாணன் கூட, “என்ன விகர்த்தனன் இங்க கூட்டிட்டு வந்துட்ட?” என்று வினவியதற்கு”வீடு  கம்பெனி இதானப்பா முதல்ல தெரியணும். இந்த இடத்துக்கு வர நாம உழைச்சதை அவளும் தெரிஞ்சுக்கணும் இல்லையா?” என்று வாயடைத்திடும் பதிலை தந்தான்.

  அதன் பின் அம்பலவாணன் அவர் மகனை மருமகளை தனித்து விட்டு சென்றார்.

ஒவ்வொன்றையும் சுட்டி காட்டி விளக்கினான்.‌

அடிக்கடி “நம்ம சோப்பு வாசம் தான் உன் மேல வீசுது. இனி இந்த இடம் வந்தா உன் நினைவு வராம போகாது” என்று குறும்பாய் கூறவும் சம்ருதி “இந்த இடம் என்றில்லை எந்த இடம் என்றாலும் என் ஞாபகம் வரணும்” என்று கண்டிப்பாய் கட்டளையிட்டாள்.

“ம்ம்ம் அது சரி” என்று‌ வீட்டுக்கு அழைத்து வந்தான். வழிநெடுக சம்ருதி அவனது புராடெக்ட் பற்றி எல்லாம் நிறைவாய் கூறினாள்.

வீட்டுக்கு வந்து பெட்டியில் தன் உடைமையை அடுக்கினார்கள்.

இதோ விமானத்தில் தேன் நிலவுக்கு செல்லும் தம்பதியர் பக்கத்து பக்கத்தில் அமர்ந்தனர்.‌ 

பிளைட் டேக்காஃப் ஆகும் பொழுது சம்ருதி விகர்தனன் கையை பிடித்து கொண்டாள்.‌

“முதல் முறை உங்களை இங்க சந்திக்கும் முன்ன, இந்த மௌமெண்ட்ஸ் மாதிரி நினைத்து பார்த்தேன். அதாவது நமக்கும் ஒரு அழகான கணவன் வருவான். அவனோடவும் கல்யாணம் முடித்து தேன்நிலவுக்கு வருவோம். அப்ப பழைய காதல் சுத்தமா மறந்துடும்னு நினைக்கிறப்ப தான் உங்களை சந்திச்சது.

அப்ப என்னை மீறி உங்களை என் கண்கள் சந்தித்து. அட அழகான கணவன் என்று சிந்தித்தோம் பக்கத்துல அழகானவர் இருக்காரேனு திகைச்சேன்.
அதென்னவோ உங்களை பார்த்துட்டே இருக்கணும்னு அப்பவே ஒரு பரவசம். இப்ப கணவன் மனைவியா இப்படி உங்களை இப்படி பிடிச்சிட்டு வருவேன்னு அந்த நேரம் நினைக்கலை.” என்றாள் கொஞ்சலாய்.

“எப்படி பிடிச்சிட்டு?” என்று காதல் ததும்ப கேட்டான். ‘இப்படி” என்று கையை இறுக்கமாய் மாற்ற, பிளைட் டேக்காஃப் ஆனது சம்ருதி அறியாமல் வானத்தில் பறந்தாள்.

உண்மையிலும் அவள் வானத்தில் தான் மிதக்கின்றாள்.

சிங்கப்பூர் விமான நிலைத்தில் இறங்கி வரவும், இலக்கியன் காரை கொண்டு வந்தான். சம்ருதியிடம் பூங்கொத்தை கொடுத்து திருமண வாழ்த்து கூறினான்.

நன்றி கூறி சம்ருதி பெற்றதும் விகர்த்தனன் இலக்கியனோட பேசினான்.

அதே ஹோட்டல் அதே ரூம் வரவும் இலக்கியன் லக்கேஜை அறையில் சேர்த்து விட்டு சென்றான்.‌

சம்ருதி இரு கையை விரித்து அவ்வறையை சுற்றி மகிழ, விகர்த்தன் அறை கதவை மூடி ஓடிவந்து, அவளை தூக்கி சுற்றினான்.

“விகர்” என்று கூக்குரலில், “அவள் சிகையை ஒதுக்கி கழுத்தில் இதழால் ஊர்வலம் நடத்தியவன் தன் இதழை கட்டுப்பாட்டுயின்றி அவளுடலில் பயணித்தான்.‌

“லாஸ்ட் டைம் என் ரூம்ல நீ தேவதையா நடமாடின்னப்ப நான் செல்ஃப் கன்ட்ரோல்ல இருந்தேன் தெரியுமா?
சலிப்பு தட்டுற வரை இந்த ரூம் தான்” என்று அவளை அறைக்கு கடத்தி சென்றான்.‌

இங்கு நாயகன் நாயகி இனிய இல்லறத்தில் மூழ்கியிருக்க, அங்கே சந்திரசேகரின் கடையில் போலியான தங்க நகையை விற்றதாக கூறி ஒருவர் புகார் தந்தனர். அதன் பொருட்டு போலீஸ் சந்திரசேகரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.‌

சந்திரசேகரின் ‘சம்ருதி ஜிவல்லரி’ மூன்று கிளைகள் இருக்கும். அதில் வசந்த் மேற்பார்வையில் இருந்த கிளையில் இவ்வாறான புகார் வந்திருந்தது.

வசந்த் தங்க நகையை போல கவரிங் செய்து இவ்வாறு மாற்றியிருந்தான்.‌

தற்போது அகப்பட்டப்போது கடையின் ஓனர் சந்திரசேகரே மாட்டினார்.‌

ஜானகி சியாமளாவிடமும் சத்யமூர்த்தியிடம் உதவிக்கு நாடினார். 

சம்ருதியை மருமகளாக கைநழுவிய கோபத்தில், எதுவும் செய்ய முடியாதென உரைத்தார்.‌

ஏற்கனவே ஜானகிக்கு இவர்கள் உண்மை முகம் அறிந்தவராயிற்றே. இனி இங்கே பேசி எதுவும் மாறாதென்று அம்பலவாணனிடம் சென்று உதவி கேட்டார்.‌

ஏற்கனவே வசந்த் சத்யமூர்த்தி பற்றி விகர்தனன் தெரிவித்திருக்க, வசந்த் மேற்பார்வையால் வந்த குளறுபடி என்று புரிந்து, சம்பந்தி சந்திரசேகரை வெளியே எடுக்கும் முயற்சியில் பார்க்க வேண்டியவர்களை பார்த்து, புகாரை வாபஸ் வாங்க மேற்படி வேலைகளை கவனித்தார்.

மகன் விகர்தனனுக்கு மட்டும் விஷயம் தெரியாமல் பார்த்துக்கொண்டார். 

ஆனால் அதற்குள் டிவியில் கடைப்பெயரை போட்டு போலி தங்க நகையை விற்றதால் கைதாகியது வெளிவந்தது. அம்பலவாணன் அதன் பின் அவசரமாக டிவி நியூஸ் வெளியிட்ட வீடியோவை முடக்க பாடுபட்டார்.

மகன் இங்கே இருந்தால் அதை தானே செய்வான்.

விகர்தனனுக்கு தெரிந்தால் ஹனிமூன் சென்றவன் மனமும் மருமகள் சம்ருதி மனமும் துவளுமென்று நிதானித்தார்.

அம்பலவாணன் ஓரளவு சம்பந்திக்கு உதவினார். 

  சந்திரசேகர் மட்டும் பெண் கொடுத்த இடம் தன்னை தவறாக எண்ணிடவாரோ என்று நாணினார்.

   தன் மானம் மரியாதை சென்றதாக புலம்ப, அம்பலவாணன் சந்திரசேகரையும் ஜானகியும் தன் வீட்டுக்கே அழைத்து வந்தார். 

சந்திரசேகர் புலம்பலால், “இங்க பாருங்க சம்பந்தி, இது உங்க தவறாக இருக்காது. வேலையாட்களோட கவன குறைவும் இல்லை. எல்லாம் உங்க அக்கா பையன் வசந்த், அக்கா புருஷன் சத்யாமூர்த்தியோட வேலை” என்று கிருஷ்ணா விஷயம் முதல் நகை கடை வரை கூறவும் சந்திரசேகருக்கு தன் அக்கா, அக்கா புருஷன், அக்கா மகன் வசந்த் என்று மூன்று பேர் மீதும் கோபம் உண்டானது. அதுவும் தன் மகளுக்கு உடல்நிலையை மோசமாக்கிய தருணத்தை நினைத்து பார்த்து கூடுதலாக கோபம் பன்மடங்கானது.

தன் நற்பெயரால் உண்டான கடை பெயரின்‌ மதிப்பு, மானம் மரியாதை, எல்லாம் யோசித்ததவர் மகளின் நிலையை எண்ணி கோபம் உண்டானது. இதில் மன்னிக்கும் மனதை ஒதுக்கி வைத்தார்.‌

கிருஷ்ணா பற்றி விகர்தனன் அறிந்து சம்ருதியிடம் கூட அதை தெரிவித்ததை கூறினார். 

இதில் உங்களுக்கு தெரிந்தால் அக்கா குடும்பத்தால் வருத்தப்படுவீர்களென்று தான் விகர்தனன் கூறாமல் தவிர்த்தது.

இன்று இப்படி சந்திரசேகர் மாட்டிவிட்டு வசந்த் நழுவுவான் என்று அறிந்தால் முன்கூட்டியே சூதாரித்து உண்மை முகத்தை துகிலுரித்திருப்பான் என்று அம்பலவாணன் தெரிவித்தார்.

சந்திரசேகரோ “யார் செய்த புண்ணியமோ இப்ப சம்ருதி விகர்தனனை மணந்திருக்கின்றாள் என்று கடவுளுக்கு நன்றி கூறினார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

14 thoughts on “நெஞ்சை கொய்த வதுகை -21”

  1. Super epi. Intha vasanth pani iruka velaiya paru inum thirunthala ipo ella unmaium therinjiduchi mama ku aduthu avar panrathula athu thirunthanum ellarum

  2. நெஞ்சை கொய்த வதுகை …!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 21)

    விகர் & சம்மு எந்த பிரச்சினையையும் வளர்த்தாம புத்திசாலித்தனமா, அரங்க லைஃப்பை வாழ ஆரம்பிச்சிட்டாங்க.

    பட்.. இந்த சத்யமூர்த்தி குடும்பம் மட்டும் இன்னும் திருந்தாம,
    இடத்தை கொடுத்தா மடத்தையே பிடிக்கிற மாதிரி தங்களோட அண்ணன் குடும்பத்தை ஓர்வழியாக்காம
    விடமாட்டோம்ன்னு கங்கணம் கட்டிட்டு திரியுறாங்களே அவங்களே எதுவுமே செய்ய மாட்டாரா சம்முவோட அப்பா.
    பேசாம கழுத்தைப் பிடிச்சு
    வெளியே தள்ளுறதை விட்டு,
    ஏன் தான் சகிச்சிட்டு இருக்கிறாரோ தெரியலை..?
    😇😇😇
    CRVS (or) CRVS 2797

  3. சூப்பர் வீணா அக்கா. .. ஓரு வழியா தன்னோட அக்கா குடும்பத்தின் உண்மை மூகம் தெரியவந்தது சூப்பர். .. பாவம் சந்திரசேகர். . இந்த துரோகிகளுக்கு தண்டனை தரனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!