அத்தியாயம்-3
‘சம்ருதி.’ விமானத்தில் தன்னருகே வீற்றிருந்த பெண். தன் பின்னால் எதச்சையாக அவளது காரில் பின் தொடர வந்து, தானிருக்கும் இடத்தில் பக்கத்து அறையில் இப்பொழுது இருக்கின்றாள்.
‘அழகான பெண்… அள்ளிக்கொள்ளும் அழகு… பேச்சிலும் புத்திசாலி. இவளை ஏன் தன்னை தொடர்வது போல கடவுள் சித்து விளையாடுகின்றார் என்றவனுக்குள் அவளிடம் பழகும் ஆசை கூடியது என்பது உண்மையே. அதற்காக உடனடியாக சென்று வழியும் ஆளும் விகர்த்தனன் இல்லை. இவன் இப்படியிருக்க, மறுபக்கம் இருந்த ஹோட்டல் அறையில் சம்ருதி நகத்தை கடித்தபடி மெத்தையில் வீற்றிருந்தாள்.
‘நான் இங்க வந்தது கிருஷை மறந்து அடுத்துக்கட்ட வாழ்வுக்கு மனதை மாற்றிட, அப்படியிருக்க… அழகான ஒருத்தனை பார்த்து சைட் அடிப்பது எல்லாம் தப்பில்லை.
என்மனசு தான் இப்ப காலியா இருக்கே. சொல்லப்போனா கிருஷ்ணா இப்ப இன்னொருத்தியோட புருஷன். அவனை நினைச்சா தான் தப்பு. மனசை மாத்தணும்னு முடிவு பண்ணியதும் காலத்தை கடத்தாம மாத்தியிருக்கேன். சொல்லப்போனா என் மனசு இப்ப திரும்பவும் எம்டி கிரவுண்ட். அழகாயிருந்தா சைட் அடிக்கலாம்.’ என்று எண்ணவும் மீண்டும் பால்கனி பக்கம் பார்வை திரும்பியது.
அவளாக சென்று அங்கு பேச மனமில்லை. வீம்பும், ‘நான்’ என்ற அகம்பாவம் சற்று கூடுதலாக இருக்க, ‘நானா யாரிடமும் வலிய சென்று பேசக்கூடாது. தோல்வியுற்ற காதலில் கூட நானா போய் கிருஷிற்கு காதல் ப்ரப்போஸ் செய்யலை. அவனா வந்து காதலிப்பதாக சொல்லவும் அவன் நல்லவன் குணமானவன்னு காதலிச்சேன். ஆனால் இப்ப என்ன காரணமோ ஒரு கம்பெனி கூடவே பொண்ணு கட்டி தரவும் என்னை உதறிட்டான்.
இனி நானா யாரையும் நெருங்கி போய் நட்பாக கூட பேசக்கூடாது. ஆமா நட்பாக கூட, அவங்களா வந்து பேசினா பார்ப்போம். இப்படியெல்லாம் பேசி மனதை கட்டுப்படுத்தினாள்.
சம்ருதிக்கு கிருஷின் கல்யாணம் கூட பெரிதாக வலியை தரவில்லை. தன்னை நிராகரித்தது தான் வலித்தது.
‘நிராகரிப்பு’ என்பது அனுபவிப்பவருக்கு தானே தெரியும். பணம் தான் ஒருத்தரை எடைப்போடுமா? பணக்காரி என்றதை நடத்தையில் காட்ட வேண்டுமா? அப்படி பணத்தை நேசித்தால் உண்மையான காதலுக்கு அர்த்தம் எங்கே? என்று இதே சிந்தனையில் உழன்றாள்.
அப்படியே உறங்கிவிட்டவளை ஜனனி வந்து எழுப்பினாள்.
“சம்ருதி… சம்ருதி…” என்றதும் விழி திறந்து கண்ணை கசக்கினாள்.
“வசந்த் அண்ணா சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டார். ரூம்ல புட் எடுத்துட்டு வந்துட்டாங்க. வா சாப்பிடலாம்” என்றதும் முகமலம்ப வாஷ்பேஷனுக்கு சென்றாள்.
அப்படி முகமலம்பி வந்ததும் வசந்த் பார்வைக்கு சம்ரு முகம் காதல் தோல்வியாக வருந்தியதாகவே தோற்றுவித்தது.
“அழுதியா சம்ரு” என்றான் வசந்த்.
சம்ருதி இல்லையென்று தலையாட்ட, “எனக்கு தெரியாதா? உன்னை விட்டு போனவனை நினைச்சி அழுதுயிருப்ப, இங்க பாரு இங்க வந்தது நம்ம எல்லாத்தையும் மறக்க தான். முதல்ல சாப்பிடு” என்று பரிமாற, ‘இவனுக்கு இதே நினைப்பு, கடவுளே… நான் கூட மாறிடுவேன். என்னை சுத்தியிருக்கறவங்களை மாத்து. அதென்ன காதல் தோல்வின்னா வருடக்கணக்கா சோகமா சுத்தணுமா? அப்படி சோகத்துல வெதும்பினா தான் உண்மையா காதலிச்சதா அர்த்தமாகுமா? நான் அப்படி இல்லை. எனக்கானவன் கிருஷ்ணா இல்லையென்றதும் உடனடியாக என்மனசை மாத்த முயற்சி பண்ணறேன். என்ன மனசுக்குள்ள புலம்பிட்டே இருக்கேன். எனக்கே அது பிடிக்கலை. கடவுளே இந்த புலம்பலை நிறுத்தணும்’ என்று வேண்டினாள் காரிகை.
மூவரும் சாப்பிட்டு முடித்ததும், மாலையில் வெளியே ஒரெட்டு உலாத்திவிட்டு வருவோமென கூறியிருக்க, மூவரும் தயாரானார்கள்.
சிங்கப்பூர் இந்திய மொழி, மலாய் மொழி மற்றும் சீன மொழிகளால் பேசப்படும் நாடு.
சுற்றுப்புற சூழல் எல்லாம் தூய்மையாக காட்சியளித்தது. அதிலும் வண்ண விளக்குகளால் ஊரே மிளிரும் வண்ணம் இருந்தது.
சிறந்த கட்டிடகலையால் கட்டிடம் அமைந்திருக்க, பெரும்பாலும் வெளிப்புற சாலை உணவுகளும், பார்களும், கபேக்கள் என்று திரும்பும் இடமெல்லாம் இருந்தது.
அது கண்ணுக்கு விருந்தளிக்க, ஆன்மாவை நிதானப்படுத்தியது. ‘தஞ்சோங் கடற்கரை’ என்ற கடற்கரைக்கு தான் வந்திருந்தார்கள்.
ஜனனியும் வசந்தும், கடற்கரை வந்ததும் சம்ருதியிடம் ”கடற்கரை ரொம்ப அழகாயிருக்கு. நீ அந்த கிருஷ்ணாவை மறந்து ரசித்து பாரு” என்றான்.
சம்ருதியோ, ‘இவன் என்ன குரங்கை நினைக்காமல் மருந்தை குடி’ என்று அடிக்கடி குரங்கை நினைவுப்படுத்தும் விதமாக பேசுகின்றான்.’ என்று நினைத்தாள்.
சம்ருதியும் கையை கட்டி இதமான காற்று சுவாசித்தாள். அவளை போல நிறைய பேர் அந்த கடற்கரையை ஆக்கிரமித்து இருந்தார்கள்.
கடற்கரையும் அதன் பக்கத்தில் மதுவின் பயன்பாடும் கொண்டிருக்க உல்லாசமாய் பலரும் மது அருந்தினர்.
மூவரும் நடந்து பேசவும் வசந்த் கண்கள் மதுவை நாடியது.
‘சம்ருதி நீயும் ஜனனியும் பேசிட்டு நடங்க. ரூமுக்கு போகறப்ப நான் ஜாயின் பண்ணிடறேன்’ என்று நழுவினான்.
ஊரில் அன்னை தந்தை முன் மதுவை குடிப்பதெல்லாம் செய்ய இயலாது. இங்கே மது அருந்தினால் சம்ருதி இருக்கும் மனநிலையில் கண்டுக்கொள்ளமாட்டாள். ஜனனி எல்லாம் அதட்டினாலே அரண்டு விடுபவள். அண்ணன் என்ற விதத்தில் அதட்டியே அடக்கிடும் ஆள். அதனால் மதுவை சுவைக்க ஓடினான்.
”இங்க பாரு சம்ருதி. விதவிதமான மதுவை பார்க்கவும் ஓடிட்டான். அண்ணா குடிக்க தான் ஓடுறான். நான் ஏதாவது கேட்டேன் என் வாயை அடைச்சிடுவான். இந்த அப்பா அம்மா என் பேச்சுக்கு மரியாதை தரமாட்டாங்க நீயாவது அண்ணாவை அப்பாவிடம் மாட்டி விடு” என்றாள் ஜனனி.
“அட… இங்க வந்ததே ஜாலியா நமக்கு பிடிச்சதை செய்யறதுக்கு. இங்கேயும் வந்து அவனை தடுக்க வேண்டாம் ஜனனி. லிமிட்டடா தானே பண்ணுவான். அவனுக்கு தெரியாதா? இரண்டு பொண்ணுங்க அவனை நம்பி இங்கயிருக்கோம். அப்படியிருக்க அளவுக்கு அதிகமா குடிக்க மாட்டான்.” என்று சம்ருதி உரைக்கவும் நான் சொல்றதை யாரும் கேட்காதிங்க’ என்று முகம் தூக்கி வைத்தாள் ஜனனி.
கொஞ்ச தூரம் நடந்தனர், ஓரிடத்தில் டிஜே இசையை ஒலித்திருக்க, அங்கே அமர வசதியாக குடைகளும் இருந்தது. “நான் இங்க உட்கார்ந்துகறேன் நீ போ” என்று இசையில் லயிக்க ஜனனி அமர்ந்தாள்.
“தனியா எப்படி இருப்ப, என்னோட வா… இன்னும் கொஞ்சம் நடந்து பார்க்கலாம். பாரு எவ்ளோ கூட்டம். அழகான கலர் லைட்ஸ், மியூசிக் எங்க வேண்டுமென்றாலும் ரிலாக்ஸ் பண்ண குடைகளுக்கு கீழே சேர்ஸ் இருக்கு ஜனனி.” என்றாள் சம்ருதி.
சம்ருதிக்கு இன்னும் கொஞ்சம் தூரம் நடக்க ஆசை பிறந்தது. குட்டி குட்டி மணற்பரப்புகள் பார்க்க சர்க்கரையை சிதற வைத்து, அதில் கால்களை உள்ளே இழுப்பது போல மெதுவாய் நடக்க தோன்றியது.
ஜனனிக்கோ அண்ணன் மது அருந்துவதை அப்பாவிடம் கூறமாட்டேன் என்பவளிடம் வேண்டுமென்றே செல்ல பிடிக்காதவளாக பதில் தந்தாள்.
சம்ருதி ஒருமுறைக்கு மேல் கெஞ்சும் ரகமும் இல்லை அதனால் தோளைக்குலுக்கி முன்னே நடந்தாள்.
மற்ற மனிதர்களின் கொண்டாட்டத்தை பார்த்தாலே தங்களுக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும் வகையில் தான் அவ்விடம் இருந்தது.
கால் போன திசையில் சென்றவளின் செவியருகே, “ஹலோ சம்ருதி” என்ற குரல் திரும்பியவளுக்குள் கண்கள் விரிந்தது.
‘விகர்த்தனன்’ என்று பெயர் மூளையில் மின்னலாய் வெட்ட, அதை மறைத்து, “நீ..நீங்க… பிளைட்ல பார்த்தவர் தானே? பெயர்… என்னவோ” என்று யோசிப்பது போல நடித்தாள்.
உடனடியாக பெயரை கூறாமல் தவிர்த்தாள். உன் பெயர் அந்தளவு மனதில் பதியவில்லை என்பது போல காட்டிக்க நினைத்தாள்.
“பிளைட்ல மட்டுமா? ஹோட்டல்ல பக்கத்து பக்கத்து ரூமும் தான்” என்றவன் “பெயரை மறந்துட்டிங்க எனிவே என் பெயர் விகர்த்தனன்” என்று கையில் வைத்திருந்த விலையுயர்ந்த மது பானத்தை ஒரு மிடறு இதழில் வைத்து எடுத்து சுவைத்தான்.
சம்ருதி கவனம் அந்த மதுபாட்டிலை தழுவியது.
அடுத்த நிமிடம் பார்வையில் உஷ்ணம் கூட்டினாள்.
அவள் பார்வை தன் மது கோப்பையில் மீது படிந்து அனலை கக்கவும், “பிளைட்ல ஜெர்னி செய்த உங்களை இங்கயும் பக்கத்து ரூமுலையும் எதிர்பார்க்கவேயில்லை.” என்று முடித்தாள்.
“அங்க உட்கார்ந்து பேசலாமா?” என்று சுட்டிக்காட்டினான் விகர்த்தனன்.
பெரிய குடை அதற்கு கீழ், இரண்டு பேர் அமர்ந்து கடலை நோக்கி பேசுவதற்கு வசதியாக இருந்தது. கூடவே மேஜையும் இணைந்திருக்க, “உங்களுக்கு சாஃப்ட் ட்ரிங்க்ஸ் ஆர்டர் பண்ணலாமே?” என்று கேட்டான்.
“ஏன்… எனக்கும் ஹாட் ட்ரிங்க்ஸே ஆர்டர் பண்ணுங்களேன்.” என்றால் நக்கல் தெறித்த குரலில்.
“நீங்க ஓகே சொன்னா ஆர்டர் பண்ணிடுவேன் சம்ருதி. இந்த பழக்கம் ஆண்களுக்கு, அந்த பழக்கம் பெண்களுக்குன்னு ஒதுக்க மாட்டேன்.
நீங்க என் கையில் இருந்ததை பார்தது முகம் சுழிக்கவும் அப்படி கேட்டேன். பை தி வே, ஹாட் ட்ரிங்க்ஸே ஓகேவா” என்று ஆர்டர் தர கழுத்தை திருப்பினான்.
“எனக்கு குடிக்கிற பழக்கம் இல்லை. மது உடல்நலத்திற்கும் வீட்டுக்கும் கேடு. எனக்கு ஜூஸ் போதும்” என்றுரைத்தாள்.
அவள் டிஸ்க்ளைமர் போல கூறியதில் சன்னமாய் சிரித்து “சூர்?” என்று வினாவுடன் கேட்டான்.
“சூர்” என்று முடித்தாள்.
விகர்த்தனன் அவளுக்காக பருகுவதற்கு மொஜிட்டோவில் ஸ்டாபெர்ரி பிளேவரை கூறிவிட்டு மேஜை நோக்கி நடக்க அவனை தொடர்ந்து வந்தாள் சம்ருதி.
‘இவனை பார்த்தா மனசு துள்ளுது’ என்று அவனை கூர்ந்து ஆராய, அடர்த்தியான புருவத்தின் கீழ் அழுத்தமான பார்வையால் லேசான இளஞ்சிவப்பு உதட்டு நகைப்பை உதிர்க்க, அவளை ஏறிடுவதை கண்டு சுதாரித்தாள்.
விகர்த்தனன் “அப்பறம்… என்ன பர்பஸ்காக சிங்கப்பூர் வந்திருக்கிங்க? கூட யாரும் வரலையா?” என்று அவளுக்கு பக்கத்தில் யாரேனும் வருகின்றாரா என்று தலையை திருப்பி அங்குமிங்கும் தேடினான்.
விமானத்தில் வசந்தை ஜனனியை காணாமல் இருக்கலாம். ஆனால் ஹோட்டல் ரிசப்ஷன் ஏரியாவில் ரூம் நம்பரை வாங்கும் போது ஜனனி இருந்தாளே அப்பொழுது இவன் பார்க்கவில்லையா? என்பது போல நினைத்தாலும் “கஸின் கூட வந்தேன். அவனும் உங்களை போல தண்ணீல மிதக்கறான். அதான் தவிர்த்துவிட்டு வந்தேன். ஜனனியால நடக்க முடியலைன்னு ஒரு இடமா உட்கார்ந்துட்டா. எனக்கு சுத்தி பார்க்க ஆசை” என்று பதில் தந்தாள்.
விகர்த்தனன் மது கோப்பையை மெதுவாக இறக்கிவிட்டு மீண்டும் பருகினான்.
மனமோ, ‘கஸின் தண்ணீ அடிச்சப்ப அங்கிருந்து வந்துட்டா. இங்க நானும் தானே தண்ணீ அடிக்கறேன்.
ஜனனி ஒருயிடமா உட்கார்ந்துட்டான்னு கவலைப்பட்டா, இங்க என் கூட இப்ப இவளும் தான் உட்கார்ந்தாச்சு. நான் மட்டும் என்ன ஸ்பெஷலா?’ என்று கேட்காமல் மதுவை சரித்தான். அவளை கூர்த்தீட்டும் ஆராய்ச்சியோடு.
அதற்குள் அவள் பருகுவதற்கு மொஜிட்டோ ஸ்டாபெர்ரி பிளேவர் வரவும், ‘இவ்ளோ சொல்லறேன் அந்த மதுகிண்ணத்தை ஓரமா வைக்கிறானா’ என்று கடுகடுப்பாய் பழச்சாற்றை வாங்கி பருகினாள்.
”என்னோட கம்பெனி ரீடசண்டா லாபம் அடைந்தது. அதுக்கு முன்ன நிறைய ஸ்ட்ரெஸ். இப்ப லாபம் அடைந்ததும் ஜஸ்ட் ரிலாக்ஸாக சிங்கப்பூர் வந்தேன். அதனால் என் மைண்ட் பீஸ்புல்லா மாற, எனக்கு தெரிந்தவரை ட்ரிங்க்ஸ் எடுக்கறேன். பிரெண்ட்ஸ் இருந்தா இன்னும் ஜாமாய்ச்சி இருக்கலாம். பட் சிங்கப்பூர்ல எனக்கு பிரெண்ட்ஸ் இல்லை. சோலோ பெர்பாமன்ஸ்ல என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். மேபீ இங்க நல்ல பிரெண்ட் கிடைச்சா டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்” என்று அவளை பார்த்து கூறினான்.
“நானும் ரிலாக்ஸ் பண்ண வந்தேன். பட் நீங்க கம்பெனி ஸ்ட்ரெஸ், லாபம் இதெல்லாம் சொல்றிங்க. நா…நான் லவ் பெயிலியர். வீட்ல தனியா உட்கார்ந்தா கஷ்டமா இருக்கு. பச்… அப்பாவிடம் சொல்லி தனியா எங்கயாவது போகணும்னு சிங்கப்பூருக்கு போறேன்னு சொன்னேன்.
அப்பா தனியா அனுப்ப மனசில்லாம, கஸின் இரண்டு பேரை கூட துணைக்கு அனுப்பிட்டாங்க.” என்று இன்று காலையில் பார்த்தவனிடம், தன் காதல் தோல்வியை உரைத்திருந்தாள்.
அவளே சில நொடியில் வார்த்தை விட்டதை புரிந்து, “சாரி… புது மனிதர் நீங்க, இப்படி என் பெர்சனலை எப்படி ஷேர் பண்ணினேன்னு தெரியலை. ஆனா மனசுல அழுத்திட்டு இருந்தது ஆட்டோமெடிக்கா உங்களிடம் பேசிட்டேன். சிலரை பார்த்தா பேச தோணாது. சிலரிடம் ரொம்ப நாள் பழகிய பீல் தோணும். அந்த மாதிரி உங்க பேஸ்கட்.” என்று கூறியதும், “தேங்க்யூ” என்று நன்றி நவில்ந்தவன் முறுவலிட்டான்.
“ஆக்சுவலி உங்க முகம் காதல் தோல்வியில் வருத்தப்படுவதா தெரியலையே.” என்று கேட்டான் விகர்த்தனன். சில்லென்ற காற்று உடலை சிலிர்க்க வைக்கவும், பேச்சும் சுவாரசியம் கூட்டியது.
மறுபக்கம் சம்ருதியிடம் பலத்த மௌவுனம்.
“சொல்ல வேண்டாம்னா வேண்டாம்.” என்று மதுபானத்தை ருசித்தான்.
“பச்… கிருஷ்ணா… நான் லவ் பண்ணின பையன் பேரு. ஜிம்ல சந்திச்சேன். அவனா வந்து பேசுவான் பழகுவான்.
நம்பரை பகிர்ந்து விருப்பு வெறுப்பை பேசுவோம். ஒரு ஆணுக்கு நம்பரை கொடுத்தது தப்பா விகர்த்தனன்?
இதே அந்த ஜிம்ல ஒரு லேடி இன்ட்ரோ கிடைச்சிருந்து நம்பரை கேட்டு பேசினா கொடுத்திருப்போம்ல அப்படி தான் கிருஷ்ணாவுக்கும் கொடுத்தேன்.
ஆனா நாள் பழக அவன் நல்ல குணம் தெரிந்தது. ஒரு கட்டத்துல எனக்கு பிரப்போஸ் செய்தான். மறுக்க எனக்கு காரணம் இல்லை. அதனால காதலை அக்சப்ட் பண்ணினேன்.
ஜிம்குக்கு போகுற வழில ஒரு பார்க் இருக்கும் அடிக்கடி அங்க தான் சந்திச்சியிருக்கேன். மென்மையான வார்த்தையை அழகா கோர்த்து பேசுவான்.
என்ன நடந்துச்சுன்னு தெரியலை. அவன் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
உன்னால் எப்படிடா என்னை காதலிச்சு அவளை கட்டிக்க முடியுதுன்னு கேட்டதுக்கு, பொண்ணு வீட்ல கம்பெனியை என் பெயருக்கு எழுதி கொடுத்துட்டாங்க. பொண்ணும் கம்பெனியும் கிடைக்கிறப்ப நீ எதுக்குன்னு சொல்லிட்டான்.
எனக்கு அவன் என்னை அவாய்ட் பண்ணியது தான் கவலையாயிருக்கு. மத்தபடி இந்த காதல் என்னை காயப்படுத்தியதான்னு கேட்டா தெரியலை.
ஒருத்தன் வேண்டாம்னு என்னை விட்டுட்டு போயிருக்கான். அதான் திரும்ப திரும்ப மைண்டை டிஸ்டர்ப் பண்ணுது.
அவன் கல்யாணத்துக்கு நான் போகணும்னு அப்பாவிடம் பர்மிஷன் வாங்கி டைமண்ட் ரிங் பிரசண்ட் பண்ணினேன். அவன் காதலிச்சப்ப நான் சிம்பிளா டிரஸ் போட்டு நடமாடியிருக்கேன். என் அந்தஸ்து அவனுக்கு தெரியலை. டைமண்ட் பிரசண்ட் பண்ணினப்ப தெரிந்திருக்கும்.
யூ நோ கல்யாண மேடையில் அவன் கன்னத்துல அறைந்துட்டு வந்தேன்.
வீட்டுக்கு வந்ததும் கிருஷ்ணா மேல இருந்த காதல் போயிடுச்சு. பிகாஸ் இன்னொருத்தி புருஷனை இன்னமும் மனசுல வச்சிட்டு உருகற அளவுக்கு என் தரம் கிடையாது. மேபீ இந்த கேரக்டரால தான் எனக்கு காதல் தோல்வியை ஈஸியா கடந்திட முடித்தது.
பட் ஒரே பாயிண்ட் ஏன் என்னை அவாய்ட் பண்ணுற அளவுக்கு என்மனம்,என் குணம், என்அழகு இது என்ன குறைச்சல்? பணத்தை தாண்டி அவனுக்கு என்னை பிடிக்கலையா?” என்று மனம் வெதும்பி கூறினாள்.
விகர்த்தனன் மதுவை காலி செய்து, சம்ருதியை ஏறயிறங்க பார்வையிட்டு, “உனக்கானவன் அவன் இல்லைன்னு கடவுளுக்கு தெரிந்திருக்கு. அதனால பிரிச்சி வேடிக்கை பார்த்திருக்கார். மற்றபடி உன் லவ்வருக்கு உன் மனம் அழகு, குணம் உயர்வானதுனு தெரிந்தும் போயிருக்கான்னா விதி எங்கயோ விளையாடியிருக்கு.
அந்த விதி நீ உனக்கானவனை இனி தான் சந்திப்பேன்னு முடிவுக்கட்டியிருக்கும்” என்று வெகுயியல்பாய் உதிர்த்து எழுந்தான்.
சம்ருதி திகைத்து அதிர்ந்தவளாய், விகர்த்தனனை காண அவனோ சன்னமான குறுநகை பூத்தான்.
இதயம் தடதடவென அடிக்க சம்ருதி “ஜனனி என்னை தேடுவா. நான் புறப்படறேன்.” எழுந்து பதிலை கேளாது நடந்தாள்.
வழவழப்பான கால்கள் மணற்பரப்பில் அவசரமாய் நடந்து செல்ல, லேசாக தடுக்கியது.
சுதாரித்து ஜனனியிடம் வந்து சேர்ந்தாள்.
‘விகர்த்தனனோட கண்கள் என்னை இழுக்குது. அவன் குறுஞ்சிரிப்பு என் இதயத்தை பாதிக்குது.
காலையில் பார்த்தவனிடம் என் காதல் தோல்வியை பகிர்ந்துட்டு வந்திருக்கேன். இது சரியில்லை.’ என்றவளுக்குள் கிருஷ்ணா காதலிப்பதாக கூறிய அந்தகணம் கூட இந்தளவு பதட்டமில்லை. வேறு ஆணிடம் பேசும் போது, முதல் முளையாக பதட்டம் கூடியது சம்ருதிக்கு.
விகர்த்தனன் தமிழ்படத்தின் சமீபத்தில் வந்த பாடலின் வரியை விசிலடித்து தன் இடது கைகளை பேண்டில் நுழைத்து வலது கையை சிகையை கோதி உதட்டில் சம்ருதியை மயக்கிய மாய புன்னகையோடு நடந்தான்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
Super akka❤️….romba interesting ah pogudhu akka…. Superb…. Waiting fir next ud….
Akka oru doubt yadhunandhan um vigarthanan um ore name ah akka….
Very interesting
Interisting
Samu ipadi therichi odi vandhuta ah indha vikarthanan vera pattu ah visil ellam adichiti poran
Intresting
nice epi.waiting for next………………………
vikarthanan nallavana kettavana ? kekura mari iruke sisy. namma heroine ku etha hero ivarthana . VERY INTERESTNG
venmegamai kalainthathe epi konjam podunga sisy
Super. Excellent narration.intresting.
Lovely update 🥰🥰🥰🥰
அச்சச்சோ இது நம்ம ஹீரோவோட பிளானா நாயகனுக்கு நாயகி முன்பே தெரியுமோ
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 3)
அவனவன் எத்தனையோ காதல் தோல்வியை அடைஞ்சிட்டு சர்வ சாதாரணமா சுத்திட்டிருக்கான். ஆனா, இவ ஒரேயொரு காதல் தோல்வி தானே அடைஞ்சிருக்கா…
அதுக்கு ஏன் இம்புட்டு ஒப்பாரி..?
ஓ மை காட்… பச்சாஹூ மீ..ன்னு யாராவது சொல்றதுக்குள்ளே இவளுக்கு நல்ல பாய் ஃப்ரண்ட் ஒருத்தன் சீக்கிரமே ப்ராப்பிரஸ்து…!
😆😆😆
CRVS (or) CRVS 2797
It’s a good episode.. yedharthamana ponnu
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💜💜💜💜🫰