அத்தியாயம்-4
சம்ருதி ஒருமுறைக்கு இருமுறை இடத்தை ஆராய்ந்து தலையில் அடித்துக்கொண்டாள். சுற்றிலும் மதுப்ரியர்கள் ஆனால் அப்படியொன்றும் மோசமில்லை என்றாலும், வசந்த் உட்கார்ந்த இடத்தில் தலை சாய்ந்து படுத்திருக்க, அவனை எழுப்பி அழைத்து செல்ல முடியாது நின்றனர் சம்ருதி மற்றும் ஜனனி.
வசந்தோ ‘இந்த பக்கம் போனா கால் டாக்ஸி.. இரண்டாவது தெருவுல.?’ என்று வளவள கொழகொழவென ஏதோ கூறவும், “அத்தான் எதுவும் பேசாதிங்க. ஒரு இடத்துக்கு எப்படி வரணும் போகணும்னு தெரியாம அழைச்சிட்டு வந்துட்டிங்க? இதுல கழுத்து வரை குடிச்சிருக்கிங்க” என்று பொரிந்து தள்ளினாள்.
ஜனனி சும்மாமில்லாமல், “அப்பவே சொன்னேன். இந்த அண்ணனை கேட்க யாருமில்லைனு இஷ்டத்துக்கு குடிக்கும்னு, நீ தான் கேட்கலை சம்ருதி. இப்ப பாரு, நாம தங்கியிருக்கற ரூமுக்கு எப்படி போகறதாம்.” என்று ஜனனி கிடைத்த கேப்பில் திட்டினாள்.
“இப்ப அது பிரச்சனையில்லை. ஹோட்டலோட நேம் சொன்னா டாக்ஸில கொண்டு போவாங்க. இவன் முதல்ல நிற்கணும்ல. நல்லா குடிச்சிட்டு தலையை தொங்கவிட்டு இருக்கான். பாரு நல்லா தலைசாய்த்து விழுந்து கிடக்கான்.” என்று தமிழில் அர்ச்சித்தனர்.
“மே ஐ ஹெல்ப் யூ?” என்ற குரல் இந்த இடத்தில் குடித்து விழுந்தால் உதவுவார்களோ? என்று ஜனனி திரும்ப, ‘இது விகர்த்தனன் குரல்.’ என்று சம்ருதி இதயம் தாளம் தப்பியது.
“ஹாய்” என்று ஜனனியிடம் வர, தமிழ் மொழி பேசுபவர் என்றது பார்த்ததும் தெரிய, “ஹலோ” என்று ஜனனி கூறிவிட்டு சம்ருதியை கவனித்தாள்.
சம்ருதியோ “விகர்த்தனன்… உங்களால உதவ முடியுமா?” என்று தவிப்பாய் கேட்டாள்.
வசந்தை ஏறயிறங்க பார்த்து, “கண்டிப்பா நம்ம நாட்டு பொண்ணு, நம்ம தமிழ் மொழி பேசற பொண்ணு. அதோட இரண்டு முறை முறையா அறிமுகம் ஆகியிருக்கோம். உதவாமலா?” என்றவன் தன் போனை எடுத்து நம்பரை அழுத்தி, “ஆஹ் இலக்கியன் காரை எடுத்துட்டு என்ட்ரன்ஸுக்கு வந்துடுங்க” என்று பேசி அணைத்தான்.
வசந்தை கை தாங்கலாக எழுப்பி, விகர்த்தனன் தோளில் சாய்த்து அணைத்து நடத்தி வந்தான். லேசான தள்ளாட்டம் போதையில் எடை கூடியதாக தோன்றி அங்கும் இங்கும் விழுவது போல் இருந்தான்.
விகர்ந்தனன் கொஞ்சம் கஷ்டப்பட்டு அழைத்து வர, இரு பெண்கள் அவனை பின் தொடர்ந்தார்கள்.
சம்ருதிக்கு விகர்த்தனன் முன் வசந்த் செய்கை அசிங்கமாக தோன்றியது. பச் இப்படி தண்ணி வண்டியா இருக்கானே. இவரும் தானே குடிச்சார். ஆனா இப்படியா? ஒரு சென்ஸ் இல்லாம இருக்கான் இந்த வசந்த். நார்மல் ஆகட்டும் அப்பறம் இருக்கு’ என்று எரிமலையை விழுங்கியவளாக வரவும் என்ட்ரன்ஸில் விகர்த்தனன் கையசைக்க, காரிலிருந்து டிரைவர் இருக்கையில் இருந்தவன் கதவை திறந்து ஓடிவந்து வசந்தை தன்னிடம் தாங்க முயன்றான்.
ஆனால் விகர்த்தனன் போல திடகாத்திரமாக இல்லை. பிடியும் வலிமையாக இல்லாமல் போக கீழே விழும் அளவிற்கு சென்றான்.
ஜனனி பதற, விகர்த்தனன் “ஒன்னுமில்லை ஒன்னுமில்லை. இலக்கியன் ஸ்டடியா பிடிக்கலை. உங்க அண்ணாவும் ஸ்டடியா இல்லை” என்றான் விகர்த்தனன்.
சம்ருதிக்கு வசந்த் மீது கோபம் அதிகமானது. விகர்த்தனன் காரில் வசந்தை சாய்த்துவிட்டு, “நீங்க உள்ள ஏறுங்க?” என்று கூறினான்.
ஜனனி தயங்க, சம்ருதியோ, “நம்ம ரூமுக்கு பக்கத்து ரூம் தான் விகர்த்தனன். எனக்கு இவரை தெரியும் வண்டில ஏறு. அவர் நல்லவர் தான்” என்றாள் மெதுவாக.
விகர்த்தனன் செவிக்கு கேட்டிடாமல் மெதுவாக கூறினாலும் அவன் செவியில் விழுந்துவிட்டது.
ஜனனி ஏறிவிட்டு சம்ருதியும் அமர, விகர்த்தனன் முன்னிருக்கையில் அமர, கார் புறப்பட்டது.
சற்று தூரம் சென்றதும் சம்ருதி காரை கவனித்தாள். விமான நிலையத்தில் இருந்து இந்த காரில் தான் விகர்த்தனன் பயணித்தது. அப்படியென்றால் சொந்தக்காரா? என்று பார்வையிட, அப்படி தான் தெரிந்தது.
அதே நேரம் வசந்த் வாந்தி எடுக்க, தங்கை ஜனனி உடையிலும் காரிலும் அசுத்தமானது.
“ஓ மை காட்.” என்று சம்ருதி, தலையில் கைவைத்து அவஸ்தைப்பட்டாள்.
உதவி செய்தவன் காரில் இப்படியா வாந்தி எடுத்து வைப்பது.
தனக்கே அருவருப்பை தர, ஜன்னலை திறந்து வைத்திட ஜனனி உரைத்தாள்.
“சார் எங்கயாவது நிறுத்தவா?” என்று இலக்கியன் கேட்க, “வித் இன் டென் பிப்டின் மினிட்ஸ் ரூமுக்கு போயிடலாம் இலக்கியன். லேடிஸை முதல்ல அவங்க தங்கியிருக்கற இடத்துல விட்டுடுவோம். அவரையும் அங்க படுக்க வச்சிடுவோம். தென் காரை வாட்டர் வாஷுக்கு விட்டுடலாம்” என்று பின்னால் திரும்பாமல் உரைத்தான்.
சம்ருதியோ வாட்டர் வாஷ் விடற அளவுக்கு வசந்த் செய்துட்டான் என்று கடுப்பாய் இருந்தாள்.
“சாரி விகர்த்தனன். ஜனனி அப்பவே சொன்னா. பட் வசந்த் இந்தளவு குடிச்சி சொதப்பி எங்களை அசிங்கப்படுத்துவான்னு தெரியாது.
உங்க காரை வேற அசுத்தப்படுத்திட்டான்.
வாட்டர் வாஷ் கொடுங்க. அதுக்கான ஃபில் செலவை என்னிடம் தாங்க. நான் பே பண்ணிடறேன்.” என்றாள் சம்ருதி. அவளுக்கு இன்று அறிமுகமானவனிடம் இன்றே அவமதிப்பான நடவெடிக்கையாக வசந்த் செய்கையால் சங்கடமே உருவானது.
“பணம் பெரிய விஷயமேயில்லை சம்ருதி. உனக்கும் எனக்கும்.
ஜஸ்ட் ரிலாக்ஸ்… எனக்கு இந்த ட்ரிப் வித்தியாசமா இருக்கு. புது மனிதர்கள், புதுவித அனுபவம், இதெல்லாம் எனக்கு ஸ்டெரஸ் கொடுக்காது. சொல்லப்போனா இந்த இக்கட்டுல இரண்டு பொண்ணுங்களுக்கு உதவ முடிந்ததேன்னு பாஸிட்டிவா எடுத்துப்பேன். சில்(chill).” என்றான்.
சம்ருதிக்கு விகர்த்தனன் மீது நல்ல அபிப்ராயம் விழுந்தது.
அவனை சந்தித்தது முதல் அழகால் ஈர்த்தான். இந்த நொடி செய்கையால் ஈர்க்கின்றான்.
“ரியலி தேங்க்ஸ்… வேறென்ன சொல்ல தெரியலை” என்று சம்ருதி கூறவும், “ஆமா அண்ணா ரியலி தேங்க்ஸ். வசந்த் அண்ணாவை நம்பி நாட்டை விட்டு வந்தது எவ்ளோ தப்பு.
அப்பாவிடம் முதல்ல இதை சொல்லணும்” என்று ஜனனி துர்நாற்றம் தாளாமல் உரைத்தாள்.
”பச் ஜனனி… இப்ப சொன்னிங்கன்னா அவங்க மனசு கஷ்டப்படும். யோசித்து பாருங்க… ஏதோ ஒரு ரீசனுக்கு நீங்க இங்க சுத்தி பார்க்க வந்திருக்கிங்க. இப்ப இந்த சிட்டுவேஷன் சொன்னா, உங்களை தனியா அனுப்பவே கூடாதுன்ற முடிவுக்கு வந்துடுவாங்க. அப்பறம் வீட்டு கேட்டை கூட தாண்ட விட மாட்டாங்க.
இப்ப இதை சொல்லாதிங்க. வசந்த் தெளிந்ததும் அவனை வேண்டுமென்றால் திட்டுங்க. இங்கயிருக்கற வரை கேர்ள்ஸ் நீங்களே தைரியமா சுத்தி பார்க்கலாம். பிரச்சனைன்னு பார்த்தா லாங்வேஜ் தான். பட் இங்க தமிழ் எல்லாருக்கும் ஓரளவு புரியும். தனியா நாடு விட்டு நாடு பறக்க கத்துக்கோங்க ஜனனி சிஸ்டர்” என்றான் விகர்த்தனன்.
“உண்மை தான் அண்ணா. என்னையெல்லாம் எங்கேயும் போக விடமாட்டாங்க. இப்படி நடந்ததை சொன்னா. உடனே அடுத்த பிளைட் பிடிச்சி வாங்கன்னு சொன்னாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை. ஆனா வசந்தை ஒரு நாள் மாட்டிவிடுவேன். ஊருக்கு போனதும் இல்லையா, காலையில் கண்ணு திறக்கட்டும்” என்று ஜனனி கோபத்தை அடக்கினாள்.
சம்ருதியோ முன்னிருந்த விகர்த்தனனை பார்வையிட்டு முடிக்க, தங்கியிருந்த ஹோட்டல் முன் நின்றது கார்.
“இலக்கியன் நாங்க இறங்கிடறோம். நீ என்ன பண்ணற, காரை வாட்டர் வாஷ் விட்டுட்டு, ரிட்டர்ன் டேக்ஸி பிடிச்சி உங்க ரூமுக்கு போங்க.” என்றான் விகர்த்தனன்.
அந்த டிரைவரோ, “சார்… நீங்க இவரை கூட்டிட்டு போறிங்களா? நான் உதவறேன் சார்” என்று முன்வர, “நோ தேங்க்ஸ்” என்றுரைத்தான். இமை மூடி நான் பார்த்துக்கறேன் என்பது போல உரைத்தான்.
அதற்குள் ஹோட்டலில் முதியவர்களுக்கு உபயோகிக்கும் தள்ளும் சேரை வரவழைத்து இருந்தான்.
அதில் வசந்தை அமரவைத்து, “இப்ப சிம்பிளா உங்க ரூமுக்கு லிப்டில் கூட்டிட்டு போயிடலாம்.” என்று கூற ஜனனி அண்ணனை அமர்ந்த விசை சேரை பிடித்து கொண்டாள்.
இலக்கியனோ நிறைவுடன் அவ்விடம் விட்டு காரை வாட்டர் வாஷ் செய்ய கிளம்பினான்.
ஜனனி முன்னே தள்ளி செல்ல, “ரொம்ப தேங்க்ஸ். நன்றி என்ற வார்த்தையில் அடங்காது, இந்த புதிய இடத்துல எனக்கு இந்த உதவி பெருசு.
காலையில் சந்திச்ச பொண்ணு நான். பக்கத்து ரூம் அவ்ளோ தான். இப்ப இந்த உதவி. பட் என்னவோ உங்களிடம் என் காதல் தோல்வியை பகிர்ந்து இருக்கேன்.
நீங்க இந்த உதவி செய்திருக்கிங்க. இந்த நட்பு என்னைக்கும் மறக்க முடியாது” என்றாள் சம்ருதி.
அவள் ‘நட்பு’ என்ற அடைமொழிக்குள் தன் உதவியை திணிக்க, லிப்டில் ஏறுவதற்கு கை காட்டினான்.
“ஜனனி ரூம் பாயை ஒருத்தரை வரச்சொல்லியிருக்கேன். வசந்த் டிரஸ் சேஞ்ச் பண்ண, நீ கஷ்டப்பட வேண்டாம். அப்பறம் ஏதாவது தேவைப்பட்ட, ‘விகர்த்தனன் அண்ணா’னு இந்த ரூமை தட்டிகூப்பிடு வந்துடறேன். கஷ்டம்னு நினைக்காத” என்று கூறவும் ஜனனி உள்ளார்ந்த அன்புடன் ”சரிங்க அண்ணா. அண்ணா தேங்க்யூ சோ மச்” என்று ஆத்மார்த்தமாய் உரைத்தாள்.
நெஞ்சில் கைவைத்து சன்னமான சிரிப்பை உதிர்த்தவன், “நீயும் ரெப்ரஷ் பண்ணிடும்மா.” என்று கூற ரூம் பாய் வந்து வசந்தை சுத்தம் செய்ய ஆயத்தமானான்.
ஜனனியும் சம்ருதி இருக்க, “சரிங்கண்ணா… முதல்ல க்ளீன் செய்யணும். குளிச்சிட்டா மச் பெட்டர்” என்று அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றாள்.
வராண்டாவில் சம்ருதி விகர்த்தனன் மட்டும் இருந்தனர்.
“காலையில் பார்த்த நீ நட்போட பழகறது ஒரு ஆச்சரியம்னா, இப்ப ஜனனி மனசார அண்ணான்னு சொல்லிட்டு போறது ஒரு ஆச்சரியம்ல? இன்னிக்கு நிஜமாவே டிப்பரண்ட் அனுபவம்” என்று வாட்ச்சை கழட்டினான்.
ரூம் பாய் வசந்தை சுத்தம் செய்து படுக்க வைத்து போர்வை போர்த்தி வரவும், சம்ருதி அவசரமாய் அந்நாட்டு பணத்தை வழங்கினாள்.
ரூம் பாய் அவனோ விகர்த்தனனை ஏறிட, “வாங்கிக்கோங்க.” என்றான்.
விகர்த்தனன் கூறிய பின்னரே வாங்கி கொண்டு நன்றி நவில்ந்து புறப்பட, “போன் பண்ணி கூப்பிட்டது நான். நீ பணத்தை நீட்டவும் வாங்க தயங்கினான்.
நீ கொடுப்பதை தடுத்துட்டு நானே பணத்தை தந்திருப்பேன். ஆனா உன்னோட கஸினுக்காக நீ பார்த்து பார்த்து செய்யும் பொழுது நான் தந்தா சரியா இருக்காது. பை தி வே. மிட்நைட் ஆகிடுச்சு. குட் நைட் சம்ருதி” என்று அவனது அறைக்கதவை திறந்து செல்ல, சம்ருதி இல்லையென்று வாதாடவில்லை.
அவளுக்குமே வந்த முதல் நாளே வெளியே சென்று வந்ததில் லேசான தலைவலி. விகர்த்தனன் கூறியது போல லேட் நைட் என்பதால் உறங்குவதற்கு சென்றாள்.
ஜனனி குளித்து முடித்து இரவாடையுடன் வந்தவள், “அந்தண்ணா கிளம்பிட்டாரா? ரொம்ப நல்ல அண்ணா. நல்ல மனுஷன்.” என்று சிலாகித்து நடந்தாள்.
சம்ருதியோ ஜனனியால் எப்படி அவ்வளவு எளிதில் விகர்த்தனனை அண்ணா என்கின்றாள். என்னால் அப்படி கூப்பிட முடியவில்லையே. விமான நிலையத்தில் நல்லா சைட் அடிச்சிட்டேன். நிச்சயமா இனி அண்ணான்னு கூப்பிட முடியாது. கூப்பிட்டா அது அசிங்கம்.
ஜனனி மனசுல விகர்த்தனன் மீது ரசனையான பார்வை இல்லை. அதனால அவளால் சட்டுனு அண்ணான்னு கூப்பிட முடித்தது. எனக்கு விகர்த்தனன் மீது ரசனையான பார்வை இருக்கு. என்னால் நிச்சயமா அண்ணான்னு கூப்பிட முடியாது.
விகர்த்தனன் கூட பழகறது ஒரு விதத்துல பயமாயிருக்கு.
அது ஏன்????
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
Super. Hero sema. Excellent narration. Intresting sis.
செம… விகர்த்தனன் சம்ருதி ஜோடி செம
Very entrastink super super super super
Super akka❤️…. Indha vasanth ipaditan pannuvan nu ethirpaarthen…. Woww.. Janani vigarthanan annan ah kita…. Ne apadilan solla mudiyadhu sammu yenna ne tan heroine enga akka fix pannitanga adhanala ne avana anna nu kupita varalaru thappa pesum😂….
Waiting for next ud akka❤️….
Vasanth ne kalai la ezhundhuko unna vachi motha poraga epudi kudichi flat agitan janani vikarthanan ah brother ah accept pannikita but samru ku yen indha bayam na ra feelings varuthu
👌👌👌💕💕💕💕💕💕💕
wow super epi interesting . konjam yosichalum oruthar palagura vithathula taknu urimaiyoda anna nu kuptuta janani but samru nalla sight adichitu vanthale ava eppadi kupduva vasanth rendu girls kutitu vanthu irukomnu porupa irukama ippadi kudichitu viluthu irukan ithe vera yarathuna kandipa help kedachi irukathu and ethana problem pani irupanga nee elunthuru da apram iruku paru unaku
Amazing episode..
interesting……………waiting for next………………………
Vika kita edho iruku edho maikuran or he is planning something nu thonudhu enaku
Good story sos
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 4)
அடப்பாவி வசந்தா…! வீட்டு பொண்ணுங்களோட வந்திருக்கிறச்ச, வெளியே இப்படி நிதானம் தவறி குடிக்க கூடாதுன்னு உன் புத்திக்கு எட்டலையா..? உன் வீட்டு பெரியவங்க சொல்லி கொடுக்கலையா…? பாதுகாப்புக்குன்னு வந்தவனே இப்படி பாதுகாக்க முடியாத அளவுக்கு மட்டையாகிட்டா…
இவன் துணையை நம்பி வெளிநாட்டுக்கு வந்த அந்த ரெண்டு பொண்ணுங்க நிலைமை என்னவாகிறது..?
அதைப்பத்தி கொஞ்சம் கூடவா யோசிக்க மாட்டான் இந்த வசந்த். ஜனனி சொன்ன மாதிரி இவனை போட்டு கொடுக்கிறதோட, போட்டும் தள்ளணும் போலவே..!
நல்ல வேளை, விகர்த்தனன் வந்திருந்ததால நிலைமையை சீர் பண்ணிட்டான். இல்லைன்னா இந்த குடிகாரனை வச்சிக்கிட்டு ரொம்பவே தடுமாறித்தான் போயிருப்பாங்க.
ஜனனி பரவாயில்லை, சட்டுன்னு பழகிடறா… பழகுறதோட விகர்த்தனனோட நல்லாவே ஒட்டிட்டா… ஒட்டினதும் இல்லாம, அண்ணான்னு வேற உரிமையாவும் கூப்பிடச் செய்யுறா. ஆனா, சம்ருதி மனசுல கள்ளத்தனம் இருக்கிறதால அவளால அப்படி கூப்பிட முடியலையோ…?
அது சரி, இந்த விகர்த்தனன் நல்லவனா..? கெட்டவனா…? இவனோட பேக் க்ரவுண்ட் என்ன..?
😆😆😆
CRVS (or) CRVS 2797
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💜💜💜💜🫰