அத்தியாயம்-5
அதிகாலை காபி மக்கை வைத்து விகர்த்தனன் பக்கத்து பால்கனியை தவிப்பாய் பார்த்தான்.
அவன் மனமெல்லாம் சம்ருதி எழுந்து வந்து 'குட்மார்னிங்' சொல்லுவாளென்று காத்திருந்தான்.
ஆனால் சம்ருதி விழிந்தெழுந்தாளா என்றதே சந்தேகமாய் இருந்தது. அந்தளவு பக்கத்து பால்கனி நிசப்தமாய் இருந்தது.
அதிகமாய் ஒரு பெண்ணை தேடுகின்றதா இந்த இதயம்? என்று எண்ணிக்கொண்டு இதயமிருக்கும் பக்கம் தன் நெஞ்சை தடவினான்.
பழக்கமற்ற தேடுதலில் சலிப்பு தோன்றிட, தனது உடற்பயிற்சி செய்வதில் கவனம் செலுத்தினான்.
மனிதனின் மனமானது ஏதேனும் தனக்கு பிடித்தமான விஷயத்தில் கவனத்தை செலுத்தினால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பிறந்து, மற்ற எண்ணங்கள் புறக்கணிக்கப்படலாம்.
அதனால் அவ்வழியை பின்பற்றினான்.
இரண்டு மணி நேரம் கடந்திட, வேர்வை முத்துகள் சுரந்தன.
“பேசாதிங்க… பேசாதிங்க… பேசாதிங்க… கொஞ்சமாவது அறிவிருக்கா? இரண்டு பொண்ணுங்க உங்களை நம்பி பெத்தவங்க வெளிநாட்டுக்கு அனுப்பிவச்சா இப்படியா கழனி தண்ணியை மாடு குடிக்கிற மாதிரி குடிச்சிட்டு விழுந்து கிடப்பிங்க?
ஜனனி அப்பவே வார்ன் பண்ணுன்னு சொன்னா. நான் தான் நீங்க பொறுப்பா நடந்தும்பிங்க, உங்க அளவு தெரிந்து குடிப்பிங்கன்னு கண்மூடித்தனமா நினைச்சிட்டேன்.
அங்கிருந்த கூட்டத்தில் எவனாவது எங்களிடம் அத்துமீறினா என்ன நடந்திருக்கும். ஹோட்டல் ரூமுக்கு எப்படி வந்திங்கன்னாவது தெரியுமா?” என்று சம்ருதி எரிமலை போல வெடித்து கத்துவதில் செவியை கூர்த்தீட்டினான்.
சம்ருதி எழுந்துவிட்டால் என்றும், வசந்த் அவள் அறைக்கு வந்து மன்னிப்பு கேட்க சம்ருதி கத்துவதையும் யூகித்து கொண்டான்.
அங்கிருந்து பூந்தூவலையால் முத்து போன்ற வேர்வை துளிகளை முகத்திலிருந்து துடைத்தான்.
எப்படியும் சம்ரு அவனை மன்னிக்காமல், இனி கிடைக்கும் நேரமெல்லாம் வைத்து செய்வாளென்று யூகித்தவனாக அறையிலிருந்த அலைப்பேசி வாயிலாக வயிற்றுக்கு தேவையான உணவின் மெனுவை கூறிவிட்டு குளிக்க சென்றான்.
பாத்டப்பில் நீரில் தியானம் செய்ய பிறந்தவனாய், 'காதல் தோல்வியடைந்தவள் சம்ருதி. அந்த காதலை மறக்க நினைத்து இங்க வந்திருக்கா, இப்ப இந்த மாதிரி சிட்டுவேஷன் அவளுக்கான மனசுல ஆண்களை தவறா எடைப்போட வைக்கும். என்னையும் நேத்து கையில் மது கிண்ணம் வைத்திருந்தப்ப, நக்கலா ஒரு பார்வை பார்த்தாளே. அவளுக்கு என்னை பற்றியும் தவறான கருத்து தோன்றலாம். பட் லிட்டில் டிபரண்ட் அவ என்னை பார்க்கறப்ப தோன்றுது. அவளுக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இருப்பது போல, என்னை ஆர்வமா தழுவிய அவளது விழிகள்.' என்றவன் மனமோ, 'நானுமே அவளை இன்ட்ரஸ்டான கேரக்டரா தானே பார்த்தேன். அதை மறுக்க முடியாது.
வித்தியாசமான அனுபவத்தை என்மனசு தேடுதா? அவளோட பழக ஆசைப்படுதா? என்றவன் உணவை முடித்து டிசு பேப்பரால் வாயை துடைத்து எழுந்தான்.
ரூம் பாய் வந்து அங்கிருந்தவையை எடுத்து செல்லவும், தன் உடையலங்காரத்தில் ஆர்வமானான்.
வாசணை திரவியம் அடித்து, தன் சிகையை வாறி கண்ணாடியில் தன் தோற்றத்தை அதிகப்படியாக பார்த்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் சம்ருதியின் அறை எண்ணிற்கு செல்லும் முடிவோடு நடந்தான்.
அழைப்பு மணியோசை அடித்து விட்டு காத்திருக்க, ஜனனி தான் கதவை திறந்தாள்.
முகமலர்ச்சியோடு, “வாங்கண்ணா…” என்று வரவேற்க, “நேத்து இந்தண்ணா மட்டும் இல்லைன்னா நீ இன்னமும் அந்த இடத்திலயே இருந்திருப்ப” என்று வசந்திடம் அறிமுகப்படுத்தினாள்.
இத்தனை மணி நேரமாக யாரோ ஒரு தமிழ் ஆள் தன்னை இங்கு கொண்டு வர இரு பெண்களுக்கும் உதவியதை வாய் வார்த்தையால் அறிந்தவன், “ரொம்ப தேங்க்ஸ்… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்.
ஆக்சுவலி எப்பவும் கண்ட்ரோல் இல்லாம இருக்க மாட்டேன். நேத்து தான் இப்படி ஆகிடுச்சு. ஏன்னு தெரியலை. ஐ அம் சாரி சார். அண்ட் தேங்க்யூ சோ மச்.” என்று நன்றியுரைத்தான் வசந்த்.
இத்தனை நேரமாய் சம்ருதியிடம் பேச்சு வாங்கியவன், விகர்த்தனனிடம் நன்றியுரைக்க, “சில் மேன். சம்டைம் ட்ரிங்க்ஸோட லிமிட் கூட குறைய மாறலாம். புது இடம் நீங்க எந்தளவு குடிச்சோம்னு, ஏதுன்னு கவனிக்காம வேடிக்கை பார்த்திருப்பிங்க.
என்ன ஜனனி உங்க அண்ணாவை ரொம்ப திட்டிட்டிங்க போல?” என்று பேசியவன் வசந்த் ஜனனி மீது விழுந்த பார்வையில் கடைசியாக சம்ருதியை தழுவியது.
“நான் திட்டுவதை பெரிசா பீல் பண்ண மாட்டார். ஆனா சம்ருதி விலாசி தள்ளிட்டா அண்ணா” என்றதும், “ஏன் சம்ருதி நேத்து ஜாலியா ஊர் சுத்த நினைச்சிங்க. இன்னிக்கு முகம் தூக்கிட்டு நிற்கணுமா?” என்று விகர்த்தனன் கேட்டதும், “நல்லா சொல்லுங்க சார். இனி அப்படி நடக்காதுன்னு சத்தியம் பண்ணிட்டேன். இங்கிருக்கறவரை தண்ணீ பக்கமே போகலை. அப்படி சொல்லியும் மன்னிக்காம சிலை மாதிரி நிற்கறா” என்றான் வசந்த்.
விகர்த்தனன் சம்ருதி பக்கம் வந்து, “சிலை புசுபுசுனு மூச்சு விடும் போது ரொம்ப அழகாயிருக்கு.” என்று மென் குரலில் கூறியதும் சம்ருதியின் தாமரை கண்கள் விரிந்தது.
“மறப்போம் மன்னிப்போம் சம்ருதி. ஆமா இன்னிக்கு எங்கேயும் போகலை?” என்று கேட்டான்.
ஜனனி முகம் வாடி, “சம்ருதி எங்கேயும் வரலை தனியா விடுங்கன்னு சொல்லிட்டா அண்ணா.” என்றதும் வசந்தும் “என்கிட்ட பேசவும் மாட்டேங்குறா பாஸ் கொஞ்சம் சொல்லுங்க” என்று கூறவும் வசந்தை வினோதமாக பார்வையிட்டான்.
முன்ன பின்ன தெரியாத தன்னை பாஸ் என்கின்றான். விகர்த்தனனுக்கு இப்படி பேசுபவரை சுத்தமாய் பிடிக்காது. ‘பாஸ்’ என்றதும் தன்னை தாழ்த்தி எதிராளியை உயர்த்தும் சொற்களாய் விகர்த்தனுக்கு தோன்றியது. விகர்த்தனன் எல்லாம் இப்படி யாரையும் அழைக்க மாட்டான். அழைக்கும் நிலையிலும் அவனில்லை. அவன் அந்தஸ்து அப்படி.
“நான் sea அக்வாரியம் பார்க்க போகலாம்னு இருக்கேன். அப்படியே வசந்த் நார்மலாகிட்டாரான்னு ஒரெட்டு பார்க்க வந்தேன்.” என்று பேசவும், சம்ருதி ‘ஓவரா நல்லவனா இருக்கானே. அக்கறைப்படாதடா’ என்று மனதில் திண்டாடினாள்.
விகர்த்தனன் எது பேசினாலும் மனதோடு ஒரு போராட்டம் அதை சம்ருதியால் தடுக்க முடியவில்லை.
“பச் நான் போகலாம்னு பட்டியல் போட்ட இடத்துல அதுவும் ஒன்னு. இப்ப நான் ஓகே பிரதர்.
இப்ப சம்ருதி தான் உம்முன்னு இருக்கா. சம்ரு, மன்னிச்சிட்டு ஓகே சொல்லு இப்ப கூட கேப் புக் பண்ணி போகலாம்” என்று வசந்த் மனதை மாற்ற முயன்றான்.
ஜனனியோ “அதான் வெளுத்து வாங்கி திட்டிட்டியே சம்ருதி. வெளியே சுத்தி பார்க்க போகலாம். ப்ளீஸ். அண்ணா சொல்லுங்க” என்று ஊர் சுற்றும் ஆசையோடு அவளுமே கெஞ்சினாள்.
“இவனோட(வச்ந்தோடு) இனி போனா நான் முட்டாள்.” என்று கையை கட்டி திரும்பினாள் சம்ருதி.
விகர்த்தனன் எந்த கருத்தும் கூறாது நின்றான்.
வசந்த் தான் தவளை போல தானாக வாயை கொடுத்தான்.
”ஓகே என்னை நம்பி வராத. பிரதர் அங்க தானே போறார். அவரை நம்பி வா. அவர் காரை பாலோவ் பண்ணுவோம்.” என்று கேட்டான்.
இதற்கு மேல் விகர்த்தனன் சம்ருதியை அழைக்காமல் இருக்க முடியாது.
“காரை இலக்கியன் கொண்டு வருவான். அவன் வந்ததும் கிளம்புவேன். உங்க முடிவை சொல்லுங்க. நீங்க வர்றதா இருந்தா என் கார்லயே போயிடலாம். கேப் தேவைப்படாது.
எனக்கு தனியா போவதை காட்டிலும், ஒரே மொழிக்காரங்க கூட வருவது ‘நட்பை’ பலப்படுத்தும்.” என்றான். அவன் நட்பை’ என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்டினான்.
சம்ருதியும் நேற்று ‘நட்பு’ என்று தானே கூறினாள்.
சம்ருதி விகர்த்தனனை ஏறயிறங்க பார்வையிட, ஜனனியோ, “சம்மு சம்மு அண்ணா கூடவே போறது பெஸ்ட் ஐடியா. கொஞ்சம் யோசி சம்மு” என்று நச்சரித்தாள்.
வசந்தோ ‘இந்த விகர்த்தனோட சுற்றாலாவுக்கு ஒன்னா சுத்தினா கேப் செலவு மிச்சம், மாமா செலவுக்குன்னு கொடுத்ததுல கொஞ்சம் பணத்தை சுட்டுடலாம். எப்படியும் சம்முகிட்ட மாமா கணக்கு வழக்கு கேட்கமாட்டார். நாம சொல்லறது தான் செலவு தொகை. இந்த சம்ருதி மனசை மாத்தணுமே.’ என்றவன் மாமன் மகளிடம் வந்து, “என்னை நம்பாத. என் கூட வந்ததா நினைக்காத. உங்க இரண்டு பேரை நேத்து பிரதர் எவ்ளோ சேப்பா இங்க கூட்டிட்டு வந்து விட்டார். அவரை நம்பி வா சம்மு.
நமக்கும் இந்த ஊர்ல எங்க எப்படின்னு தேடி போறதுக்கு பகரதர் கூட போனா ஈஸியாக இருக்கும். அவர் தான் அடிக்கடி வந்தவரா துல்லியமா தெரிந்து வச்சியிருக்கார். நம்ம செலவு நாம பார்க்கலாம்” என்றதும் சம்ருதிக்கு கார் வாட்டர் வாஷிற்கு சென்றது நினைவு வந்தது.
‘கார் வாஷ் பண்ணி வந்துடுச்சா? எவ்ளோ செலவாச்சு?” என்று கேட்டாள்.
விகர்த்தனுக்கு உச்சபட்ச கோபம் உண்டானது.
இவளை காண தன் நிலையை மறந்து இங்கு வந்தால் கார் வாட்டர் வாஷிற்கு பணம் எவ்ளோ செலவாச்சுன்னு கேட்கின்றாளே என்ற ஏககடுப்பு.
“ஏன் தரப்போறியா?” என்று இகழ்ந்தான்.
”ஆமா’ என்றாள்.
விகர்த்தனன் நெற்றி சுருக்கி புருவம் உயர்த்தி நின்ற தோரணையில், “நீங்க கார் வாட்டர் வாஷிற்கு எவ்ளோ செலவாச்சுன்னு செல்லுங்க. நான் அதுக்கு பே பண்ணிடுவேன். அதுக்கு பிறகு உங்களோட வர நான் தயார்.” என்று மொழிந்தாள்.
அதேநேரம் இலக்கியன் போன் அழைப்பு வரவும், எடுத்து பேசினான். சம்ருதி தங்கியிருக்கும் அறையின் எண்ணை கூறி அங்கு வர உரைத்தான்.
விகர்த்தனன் அந்நாட்டின் டாலர் மதிப்பில் உரைத்திட, மடமடவென பணத்தை எடுக்க அறைக்கு சென்றாள். இடைப்பட்ட நேரத்தில் இலக்கியன் வரவும் சம்ருதி பணத்தை கொடுக்க நீட்டவும் விகர்த்தனன் இலக்கியனை வாங்கிக்கொள்ள கண் காட்டினான்.
சம்ருதியிடம் பணத்தை பெறாமல் இல்க்கியன் வாங்கவும் சம்ருதியும் கொடுத்தாள்.
“இப்ப போகலாமா? இல்லை எப்படி? எனக்கு கடலுக்குள்ள விளையாட பிடிக்கும்.” என்றதும் சம்ரு கிளம்ப தயாரானார்கள்.
அவள் கிளம்பும் ஜனனி மற்றும் வசந்த் மகிழ்ச்சியாக கிளம்பினார்கள். அவர்கள் தங்களுக்கு தேவையானதை எடுத்து வைக்க விகர்த்தனன் அங்கு குஷன் சோபாவில் அமர்ந்துகொண்டான்.
இலக்கியனோ விகர்த்தனனின் லக்கேஜை எடுத்து வைத்தவனாக இருக்க, போனில் மூழ்கினான் நாயகன்.
சம்ருதி காதிற்கு பொருத்தமான அணிகலன் அணிந்த நொடி, 'நேற்று அறிமுகமானவரோடு இன்று பயணமா? விகர்த்தனனை பற்றி என்ன தெரியும்? முதலில் அவனை பற்றி அறிய வேண்டும்.' என்ற முடிவோடு வந்தாள்.
“கார்ஜீயஸ்’ என்ற லேசாக இமை மூடி குழவாய் ரசித்து கூறவும், சம்ருதி, “தேங்க்யூ எல்லாவிதமான உதவிக்கும்” என்றாள்.
விகர்த்தனன் சம்ருதி இவர்களுக்குள் ஒரு தனி பாதை அமைத்து கொண்டிருப்பதை அறியாத வசந்த் ஜனனி இருவரும் விகர்த்தனனை வெகுவாக நம்பி பழகினார்கள். தன் திட்டத்திற்கு பெரிதாக விகர்த்தனனால் அடிவிழுமென்று நினைத்தால் வசந்த் இந்நேரமே விகர்த்தனனை தவிர்த்திருப்பான். அந்தோ பரிதாபம் பின்னால் நடப்பதை முன்னால் அறிந்திடும் வல்லமை வசந்திற்கு இல்லை.
ஆனால் விகர்த்தனனுக்கு பின்னால் நடக்க போவதை கொஞ்சம் கணிக்க முடிந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
👌👌👌👌👌👌👌👌
Vithi yara ah vittuthu Vasanth mattum ah vidum ah enna samruthi ku mattum vikarthanan kum samru oru piditham na ra feelings iruku
super
kandipa vasanthuku illa than antha thiramai irunthu iruntha ippadi kudichitu vila matan. but vikarthanan and samru manasula ninaikiratha pesikiranga manasoda pesikiranga velipadaiya theriyalanalum rendu perkum ullunarvu iruku etho azhaga move story intha couples cute
நெஞ்சை கொய்த வதுகை …!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 5)
சரியான லூசர் இவன். தன் சொந்த செலவுல தனக்குத் தானே சூனியம் வைச்சுக்கிட்டவங்களை பார்த்திங்களா…? அது வேற யாருமில்லை நம்ம வசந்த் தான்.
வேலியில போற ஓணானை இழுத்து வேட்டியில இட்டுகிட்டாச்சு… இனி என்ன
நிச்சயமா சம்ருதி விகர்த்தனனுக்குத்தான்.
மாமன் பணத்தை ஆட்டைய போட ஓசி சவாரிக்கு ஆசைப்பட்டு சொந்த மாமன் மகளையே கோர்த்து விட்டுட்டான்.
அட… ஏமாந்த கொக்கே…!
😆😆😆
CRVS (or) CRVS 2797
What will happen? Quiet interesting
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍
Vasanth avlo brilliant na drink panirkave maatane
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💜💜💜💜💜🫰
இந்த வசந்த் எதுக்குமே யூஸ் இல்லை டம்மி பீஸ்…சம்ருதி விகர்தனன் ஜோடி நைஸ்