Skip to content
Home » நெஞ்சை கொய்த வதுகை-7

நெஞ்சை கொய்த வதுகை-7

அத்தியாயம்-7

நேரங்கள் முயல் வேகத்தில் நகர்ந்ததால் உணவருந்தும் வேளையில் இருந்தனர்.

அங்கிருந்த உணவுப் பகுதியில் சாப்பிட வாங்கினார்கள்.

‘நெக்ஸ்ட் ஸ்விம் பண்ணலாம். அதனால லிமிட்டடா சாப்பிடுங்க” என்று அறிவுறுத்தினான் விகர்த்தனன்.

கடலுக்கடியில் என்றதும் வேகமாக ஆர்வமாக உணவை சாப்பிட்டார்கள். சாப்பிட்டவுடன் எப்படியும் செல்ல முடியாது. அந்தந்த உடையை அணிந்து அதற்கான நேரம் சேய்ய வேண்டியவை செய்ய கூடாதவை, என்று அரை மணி நேரம் பாடம் எடுத்தப் படி யாருக்கு நீந்த தைரியம் உண்டோ அவர்களே செல்ல முடியும்.

ஃபிஷ் அக்குவாரியமில் ஒரு குறிப்பிட்ட பகுதியில், கடலோடு இணைந்திருக்கும். அங்கே கப்பலில் தனியாக மீன்களோடு விருப்பப்பட்டால் அடியே சென்று நீந்தலாம். அவ்வாறு சில வித்தியாசமான மீன்களையும் சுறாக்கலும் உள்ளே நீந்தவிட்டிருப்பார்கள்.

விகர்த்தனன் எப்பொழுதும் விளையாட விரும்புவான்.‌

காற்றில் பறவையாக பறப்பது போல மனிதனுக்கும் சிறகு விரித்து பறக்க உல்லாசமாக இருக்கும். அதற்காக தான் பாராகிளைடிங், பாராமோட்டரிங், பாராசைக்கிளிங் போன்ற வகைகளில் பறப்பார்கள். இதற்காக தனி அமைப்புகள் உள்ளது

அது போல தான் தண்ணீரில் மீன்களை போல மிதந்து நீந்தவும் முடியும். அதற்கு டைவிங் ஷூட் அணிந்து கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து உடலில் சில உபகரணங்களை பொருத்தி, கண்களில் நீர் உள்ளே வராத அளவுக்கு கண்ணுக்கும் டிராஸ்பரென்ட் மாஸ்க் என்று அதற்கான தொகையை அங்கே வாடகைக்கு வாங்கி அணித்துக்கொண்டு தேர்ந்தெடுத்தவர்களின் உதவியோடு தான் கடலுக்குள் செல்வார்கள். கடல் என்றாலும் ஒரு குறிப்பிட்ட இடம் வரை சுறாக்களும் மீன்களும் வந்து செல்லும் விதமாக வசதி அமைக்கப்பட்டிருக்கும்.‌

பார்க்க வரும் மனிதரின் அதிர்ஷ்டம் பொருத்து மீன்களை காணலாம்.

பெரும்பாலும் பெரிய பெரிய மீன்களை எதிர்பார்த்து செல்வது மனித மனதின் எதிர்பார்ப்பு.

அங்கு செல்ல தைரியசாலிகள் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர்.

சிலருக்கு டைவிங் ஷூட் போட பயமாக இருந்தால் ஒரு இரும்பு செவ்வகப்பெட்டியில் அவர்களை மேற்பார்வையாளார் ஒருவர் இறக்கி நீரில் பாதுகாப்பாய் அழைத்து செல்வார். ஏதெனும் பயமென்றால் உடனடியாக மேலே இருக்கும் கப்பலில் இழுக்கப்பட்டு விடுவார்கள்.

ஜனனி முதலிலேயே நான் கரும்பு பெட்டிக்குள்ள டைவிங் ஷூட் போட்டு வர்றேன். ‘ என்றாள்.

விகர்த்தனோ “எனக்கு எப்ப வந்தாலும் தனியா மீனை போல நீந்தனும். சோ நான் தனியா போவேன். இந்த கிரில் பாக்ஸ் வேண்டாம்’ என்று மறுத்தான்.

விகர்த்தனன் மறுக்கவும் வசந்த் தன்னுடைய கெத்தை காட்டும் முடிவோடு, எனக்கும் ஆக்ஸிஜன் மாஸ்க் ஐ மாஸ்க் போதும். கிரில் பாக்ஸ் வேண்டாம். சம்ரு நீ ஜனனி கூட போ” என்று கூறவும் சம்ருதிக்கு நீ என்ன சொல்லறது நான் என்ன கேட்கறது?’ என்று அவளும் இவர்களை போல மட்டும் உடை போதுமென்று நிறுத்திக்கொண்டாள்.

ஏதாவது உதவின்னா இந்த பட்டனை பிரஸ் பண்ணு. எக்காரணத்து ஆக்ஸிஜன் மாஸ்க்கை உருவி விட்டுடாத” என்று அறிவுறுத்தினான்.

ஸ்விம்மிங் தெரியும் என்பதால் அலட்சியமாக தலையாட்டி கொண்டான் வசந்த். சம்ருதியும் தலையசைத்து புரியுது என்றாள்.

மூவரும் கப்பலின் மேற்பரப்பிலிருந்து குதிக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் குதித்து ஓரளவு சைகையில் தங்களுக்கு கம்பர்டெபிளாக உள்ளதென்று கையை வெற்றி குறிக்காட்டி நீட்டவும்,
ஜனனியை தண்ணீரில் அழைத்து சென்றனர்.

மற்ற மீன்கள் நெருங்காது வகையில் பாதுகாப்பாய் அவள் கம்பி பிடித்தப்படி தண்ணீரில் வந்தாலும் லேசான பயம். அதை மீறி ஆர்வமும் ஆச்சரியமும்.

கடவுள் மனிதனை எப்படி வெவ்வேறு வடிவமும் குணமும் முக அமைப்பு நிறம் என்று பிரியாது உலகத்தில் நடக்க விட்டது போல, கடலில் வண்ண மீன்களை தட்டையாக, குண்டாக, ஒல்லியாக, நீளமாக, வண்ணகளாக, வடிவுடன், வித்தியாசமான நிறத்தில் கூட்டம் கூட்டமாய் சுற்றியது.

வாயை திறந்து பேசாததை கண்கள் விரிந்து தான் பேச முடிந்தது.

ஜனனி சிறு குழந்தையாக குதுகலிக்க, சம்ருதி நீந்திய படி விகர்த்தனனுக்கு போட்டியாக நீந்தினாள்.

வசந்த் சற்று தூரம் வேடிக்கை பார்த்தவன் அருகே உரசி செல்லும் மீன்களை தொட்டு ரசிக்க அதனை ஓடவிட்டு அழகு பார்த்தான்.‌

எல்லாம் இனிமையாக போனால் கடலில் என்னை காண வந்தவருக்கு புது அனுபவத்தை யார் புகட்டுவதென்னும் விதமாக சுறா ஒன்று வந்தது.

வசந்த் பயந்து கற்பாறையோடு பாறையாக உறைந்தான்.‌

சம்ருதியும் லேசாக பயந்து போக, “இது குட்டி சுறா. பயந்து சாகாத. ஜஸ்ட் என்ஜாய்” என்று நீந்த, மறுத்தவாய் மேலே செல்ல நினைத்தாள்.

விகர்த்தனன் கையை பற்றி, ஸ்விம் செய்ய, உருவயியலாது அவனோடு பயணித்தாள்.

‘நீ அழைத்து சென்றால் நகரத்திற்கும் வருவேன்’ என்பது போல தான் வந்தாள். இரண்டு மூன்று சுறா உரசும் விதமாக வரவும், போதாத குறைக்கு ஒரு சுறா, அதன் வால் துடுப்பால் பெண்ணவளை தட்டிவிட, தண்ணீர் ஓட்டத்தில் வீசியெறியப்பட்டாள்.

விகர்த்தனன் மட்டும் நீச்சலடித்து அவள் கையை பிடிக்க சென்றான்.

அவளை பிடித்து பயந்து ஓடாத .’ என்பது போலவே கூற, அவ்ளோ மறுத்து மேலே செல்ல ஆரம்பித்தாள் வசந்தும் சம்ருதியுடன் சென்றான்.

 ஜனனி சம்ருதி வெளியேற தானும் மேலே போவதாக கூறினாள். ஆனால் விவகாரம் பிடித்த விகர்த்தனன் வரவில்லை. மேலே கப்பலுக்கு வந்தப்பின் விகர்த்தனை தான் எட்டி எட்டி பார்த்தாள். இவளுக்காக உடனே வந்துவிடுவானென்ற எண்ணத்தில் மண்ணை கொட்டி அரைமணி நேரம் கழித்தே வந்தான். 

அவனுக்கு கடலில் விளையாட அலாதியான விருப்பமிருக்க நேரம் கழித்து வந்தான்.

அதற்குள் உடையை மாற்றி சம்ருதி காபி அருந்தினாள்‌.

தலைக்கவசத்தை அவிழ்த்து “இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம். இரண்டு சுறாவுமே குட்டிங்க. பயந்துட்டு வந்திட்டிங்க” என்று திட்டினான்.

“பாஸ்… அந்த சுறா குட்டியா?” என்று வாய் பிளந்தான் வசந்த். தங்கள் வீட்டின் கேட்டில் இருந்து பின் வாசல் வரை இருக்கும் சுறாவின் அளவு. அது குட்டியா? என்ற ஆச்சரியம்‌.

“இல்லை… பயமாயிருந்தது. உங்களுக்கு மீன்களோட ஆக்டிவிட்டிஸ் ஏற்கனவே தெரியும் அதனால் மேபீ பயமில்லாம இருக்கிங்க. எனக்கு அப்படியில்ல. அது உரசவும் என்னை தள்ளிவிட்டதில் அங்கிருந்த ஒரு கோரல் ரீப்ல கையை வச்சிட்டேன்‌. கையில குத்திடுச்சு. என்ன தான் க்ளவுஸ் போட்டிருந்தாலும் அது மேல் மோதின வேகம் பதட்டமாகிடுச்சு” என்றாள்‌.

விகர்த்தனன் அடுத்த நொடி அவள் கையை பற்றி ஆராய, அவன் அக்கறை அவள் மனதை கரைத்தது.

அவன் கையில் தன் கரமிருக்க, மோன நிலையில் மிதந்தாள்.‌

“இதெல்லாம் ஒரு அடியா சம்(sham)” என்றான்.‌

சம்ருதி அவனை கண்டு “எனக்கு பெரிய அடி” என்று நழுவினாள்‌.

 ஒவ்வொருத்தரும் உடையை கழட்டி, மாற்றி தங்கள் ஆடைக்கு மாறினார்கள். 

கடல் மேல் மட்டம் நீல வண்ணமாக மாறி தங்களை வேறு உலகத்தில் அழைத்து செல்ல, ஜனனி வசந்த் இருவரும் வந்திருந்த உணவை கொறித்தனர்.

விகர்த்தனன் தலை துவட்டி இடது கரத்தால் சிகையை கோதியவன், சம்ருதியை தான் கவனித்தான்.

 இதில் இலக்கியன் வேறு "அம்பலவாணன் சார் போன் பண்ணினார். உங்க போன்ல ஸ்டேட்ஸ் வச்சியிருந்திங்களாம்‌. யார் அந்த பொண்ணு? என்னனு கேட்டார் சார். இத்தனை தடவை சுற்றுலா போனப்ப இப்படி கூட யாரும் இருக்க மாட்டாங்க. இவங்க எல்லாம் யார்? பிரெண்ட்ஸானு கேட்டுட்டே இருக்கார். பிரெண்ட்ஸ்னு சொல்லியும் விடலை சார்." என்று தலை சொரிந்தானா. 

“டோண்ட் வொர்ரி இலக்கியன். நான் அப்பாவிடம் அப்பறம் பேசிக்கறேன்” என்று முடித்துக் கொண்டான்.

“சார் இன்னொரு நம்பரிவும் கால் வந்தது‌. எடுக்கலை.” என்றதும் போனை எடுத்து பார்த்து, “இந்தியன் நம்பர்? ஓகே இதுவும் அப்பறமா பார்த்துக்கறேன்.” என்றான்.‌

தீவிரமாக கடல் கன்னியை காண ஓடினான்.

உண்மை தானே அவனை பொறுத்தவரை சம்ருதி கடல்கன்னியே. இவன் அவளை தேடி ரசிக்க வந்துவிட்டான். கூடவே சுற்றிய வசந்த் தங்கையிடம் மிகவும் கெஞ்சிய படி, “நேற்று நடந்ததை தந்தையிடம் ஊர் போய் கூட சொல்லாதே” என்று வேண்டினான்.

ஜனனியோ நீ நடப்பதை பொறுத்து சொல்லாம இருப்பேன்.‌ என்னை ஓவரா மிரட்டின மாமாவிடம் சொல்லியே தீருவேன்” என்றாள்.

விகர்த்தனுக்கு சிரிக்க தோன்றியது. சம்ருதியை கட்டி தர யோசிப்பார்கள் என்று எப்படியெல்லாம் குட்டிக்கரணம் போடுகின்றான் என்று எண்ணினான். ஆனாலும் இவனுக்கு வேண்டியது தான். இவனெல்லாம் இன்னும் மாட்டி விடற மாதிரி கடவுள் சம்பவம் செய்யணும்” என்று சபித்தான்‌.

 அவன் எண்ணங்களுக்கு வலிமை வந்ததா? அல்லது வசந்த் மீண்டும் திகிலடைய கடவுளின் ஆசையா? ஜனனி முனையில் நின்று கடலில் வேடிக்கை பார்த்தவள் கால் தவறி இடறி விழுந்தாள். 

“வசந்த் ஜனனி விழுந்துட்டா” என்றாள் சம்ருதி.
வசந்த்தும் “ஏய்.. எனக்கு அப்படியே குதிக்க பயம். யாராவது காப்பாத்துங்க” என்று பின்வாங்கி பயந்தவனாய் பேசினான்.

“டேய்… அறிவுக்கெட்டவனே” என்று சம்ருதி திட்ட, மறுபக்கம் விகர்த்தனன் கடலில் குதித்திருந்தான்.
“அந்த ஷூட் எங்க அதை கொடுங்க ட்ரை பண்ணறேன்.” என்று வாதம் புரிவதற்குள் அங்கிருந்த பாதுகாவலர் மற்றும் விகர்த்தனன்‌ ஜனனியை இழுத்து வந்திருந்தனர்.

ஜனனி அதற்குள் தண்ணீரை குடித்நதிருக்க, அதற்கு வேறு முதலுதவி செய்தனர்.

விகர்த்தனன் கைகட்டி ஜனனி மூச்சு விடும் நேரத்திற்கு காத்திருந்தான்.

இருமலோடு ஜனனி எழவும், உப்பு தண்ணியை எச்சியாக வடியவிட்டாள்.

வசந்தோ ‘தேங்க்காட்’ என்று வேடிக்கை பார்க்க, சம்ருதி வசந்தை வஞ்சனையின்றி திட்ட ஆரம்பித்தாள்.

விகர்த்தனை வேறு உதாரணம் காட்டி பேசி உயர்த்த வசந்த் மீண்டும் இவரை புகழ்வதா? அய்யோ என்று மௌவுனமானான். இந்த நிலையில் வசந்த் என்ன பேசினாலும் சம்ருதி திட்டுவதை நிறுத்த மாட்டாள் என்பதை அறிவான்.‌

ஒருவழியாக திரும்பும் நேரத்தில் ஜனனி உடல்நடுங்க, வசந்த் “பாருங்க சார் விபத்து தானே. நான் காப்பாற்றலைன்னாலும் என்னை திட்டறா. கடல் சார் கடல். நீங்க பழகிய இடம் யோசிக்காம குதிச்சிட்டிங்க. பாதுகாப்புக்கு ஆட்கள் இருந்ததால தானே நான் குதிக்கலை. என்னை குற்றம் சொன்னா எப்படி சார். சம்ருதிக்கு கூட தான் நீச்சல் தெரியும் அவளுமே குதிக்கலை. திட்டு மட்டும் எனக்கா? ஜனனி ஐ ரியலி சாரி” என்று அவள் திருப்ப, ஜனனியோ “தொடாத” என்று கத்தினாள்.

“இனி நீ எனக்கு அண்ணனும் இல்லை. நான் உனக்கு தங்கச்சியும் இல்லை.” என்று கொதித்தாள்.

சம்ருதி காதல் தோல்வியில் தவிக்க, தன் பக்கம் அவளை திருப்ப நேரமெடுக்குமென்று விட்டு விட்டதில், தங்கையிடம் அவப்பெயரை எடுத்துவிட்டது தாமதமாய் உணர்ந்தான்.

தங்கை இருக்கும் கடுப்பில் மாமாவிடம் ஏதேனும் உலறுவாளா என்றும், இப்படிப்பட்ட நடவடிக்கையில் சம்ருதி தன்னை நிராகரிக்கும் முடிவு எடுப்பாளோ என்று அஞ்சினான்.

ஆனால் சம்ருதியுமே நீச்சல் தெரிந்து குதிக்கவில்லை என்றதை சுட்டி காட்டிடலாம். ஆனாலும்… ஏதோவொரு நெருடல் வசந்த் உள்ளத்தை பயபந்தாக கவ்வியது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

10 thoughts on “நெஞ்சை கொய்த வதுகை-7”

  1. Kalidevi

    Vasanth ne kandipa matika than pora un mama kitta paru . Samru unaku kedaiyathu. Ava vikarthanan ku tha . Oru thangachi thanni la viluntha udane poi kapathanum athu Panama enaku theriyathu aalunga irukanganu kathai sollitu iruka

  2. Avatar

    Dei vasanth unnai ansha sura ku eraiya potrukalam pola ne ipadi panradhuku….
    Epadiyum vigarthanan um sammu um tan jodi nu mudivu panniyachu naduvula endha panaga mandaiyan vandhalum not allowed 😂…

  3. M. Sarathi Rio

    நெஞ்சை கொய்த வதுகை …!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 7)

    இந்த வசந்த் இங்கேயிருந்து கிளம்பறதுக்குள்ள, பல குட்டிக்கரணத்தோட அந்தர்பல்டியும் அடிக்கணும் போல. ஆனா, ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது. இங்கேயிருந்து போறதுக்குள்ள வசந்தோட கல்யாண ஆசைக்கு ஒட்டு மொத்த சமாதியும், விகர்த்தனோட காதலுக்கு முதல் (முத்த) அச்சாரத்தையும் ரிஜீஸ்தர் பண்ணிட்டுத்தான் போவாங்க போல.
    😆😆😆
    CRVS (or) CRVS 2797

  4. Avatar

    அருமையான வர்ணனை கடலைப்பற்றியும் அதன் அழகைப்பற்றியும்… இந்த வசந்த் முட்டாள் மட்டுமில்லை சுயநலவாதி. . இவனுக்கு சம்ருதியா வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *